Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுதான் கனடா .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சமூகவியல் ஆய்வை தங்கள் பாதுகாப்பைப் பணயம் வைத்துச் செய்திருக்கிறார்கள். கனடா கனடா தான்! 9/11 இற்குப் பிறகு அமெரிக்கர்கள் இப்படி நடந்திருந்தால் "உள்வீட்டில் வளர்ந்த" இஸ்லாமியக் கடும்போக்கு வாதத்தைக் குறைத்திருக்கலாம் என நினைக்கிறேன், டென்சல் வாஷிங்ரனின் "முற்றுகை" (The siege) படம் பாருங்கள்! இதே கருத்தை அருமையாகச் சொல்லும் படம்!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான காணொளி.. இணைப்பிற்கு நன்றி அர்ஜுன் அண்ணா..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெகிழவைத்த அன்புப் பரிமாற்றம்

11_2162774g.jpg

12_2162773g.jpg

உலகம் முழுக்க முஸ்லிம்கள் தியாகத் திருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் சில ஆஸ்திரேலிய சகோதரிகள் சத்தமில்லாமல் ஒரு நல்ல செயலில் இறங்கினார்கள். பூரண ‘ஹிஜாப்’ தரித்து (உடல், தலையை மறைக்கும் ஆடை) அவர்கள், முஸ்லிம் பெண்களுக்கு மலர்ச் செண்டுகளை வழங்கி தங்கள் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
 
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? முஸ்லிம்களுக்கு எதிராகத் தங்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் கசப்புணர்வைக் களையவும், சக முஸ்லிம் பெண்களுடன் நல்லிணக்கம் பேணவும் இந்தச் செயலில் இறங்கியவர்கள் பெண்கள்.
 
அனைவரும் முஸ்லிம் அல்லாத ஆஸ்திரேலியப் பெண்கள்! மலர்ச் செண்டுகளை அளித்து பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தவறான பிரச்சாரத்துக்கும் கசப்புணர்வுக்கும் அவர்கள் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். “நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். வெறுப்புக்கு பதிலாக நாம் அன்பை பறிமாறிக் கொள்வோம்” என்று ஆறுதலும் சொல்லியிருக்கிறார்கள்.
 
ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களுடனான நல்லிணக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் 26 வயதாகும் அன்னாபெல்லி லீ. “அன்பையும், ஒற்றுமையையும் தோற்றுவிப்பதே இதன் நோக்கம்” என்கிறார் அன்னாபெல்லி.
 
ஆஸ்திரேலியாவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வசித்துவருகிறார்கள். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடி. இதில் முஸ்லிம்களின் பங்கு 1.7 சதவீதம். செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று கேள்விக்குறியானது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய காவல்துறையினர் வடமேற்கு சிட்னியில் 15 பேரை கைது செய்தது இன்னும் பிரச்சினையை மோசமாக்கியது.
 
இதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்ததோடு குயின்ஸ்லாந்தின் வழிப்பாட்டுத்தலம் ஒன்றும் தாக்கப்பட்டது. அந்நாட்டின் தலைமை இமாமும் அச்சுறுத்தலுக்கு ஆளானார்.
 
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. மூன்று வாரத்தில் பெண்கள் மீதான 30 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து செல்லும் பெண்கள் தாக்கப்படுகின்றனர் அல்லது பொது இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். பெண்கள் வெளியில் தனியே செல்ல முடியாமல் பாதுகாவலர்களுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இப்படியொரு சூழ்நிலையில் அன்பையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்விதமாக முஸ்லிம் அல்லாத பெண்கள் ஹிஜாப் அணிந்து பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டது தங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது என்கிறார்கள் ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள். நல்லதொரு மாற்றத்துக்கு வழி வகுத்திருக்கும் இந்தப் பெண்கள் பாராட்டுக்குரியவர்களே.
 
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி அருமை. ஆனால் எனக்கொரு கேள்வி, அப்பாவி முஸ்லீமுக்கும் மத அடிப்படைவாதத்தால் தூண்டப்பட்டு மற்றயவர்களைக் கொல்லத் துடிக்கும் மிருகங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் கண்டறிவது எப்படி ? ஏனென்றால், அண்மையில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென்று சென்ற 18 வயதுடைய ஆப்கானியன் மறைத்து வைத்திருந்த கத்தியொன்றை எடுத்து பொலிச்சர் இருவரை கடுமையாகத் தாக்கியிருக்கிறான். ஒருவர் கீழே விழ, மற்றையவர் துப்பாக்கியல் அவனைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்த முஸ்லீம் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவன். இவனைப் போலவே இங்கே பிறந்த இன்னொரு 17 வயது முஸ்லீம் இன்று ஐஸிஸ் பிரச்சார வீடியோவில் மேற்கு நாடுகளை அழித்து இஸ்லாமியக் கலிபேட்டாக மாற்றுவோம், மேற்குலகத் தலைவர்களின் தலைகளைத் துண்டாடுவோம் என்று கூக்குரலிடுகிறான். இவன் கூட சாதாரண அவுஸ்த்திரேலியர்களைப்போல இங்கே வாழ்ந்தவன் தானே??

அமெரிக்காவில் ரெட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து, ஸ்பெயின் புகைவண்டிக் குண்டுவெடிப்பு, லண்டன் நிலக்கீழ்ச் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு, லண்டன் பஸ் குண்டுவெடிப்பு...இவை எல்லாவற்றையும் செய்தது அந்த நாடுகளில் சாதாரண மக்களைப்போல வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தானே?? 

மனிதாபிமானமும், சக மனிதனை மனிதனாக மதிக்கும் போக்கும் மேற்கு நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இவை தெரியாது,

முஸ்லீம்கள் மேல் மனிதாபிமானத்தின்பேரில் இரக்கப்படுவது சரிதான், ஆனால் எச்சரிக்கையாக இருப்பது தவறில்லை. ஏனென்றால், மதம் என்ன சொல்கின்றதோ அதை அப்படியே செய்யும் வெறி கொண்டவர்கள் அவர்கள்.

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான முஸ்லீம்கள் மத  அடிப்படைவாதிகள். வெளியே சொல்ல முடியாவிட்டாலும்கூட உள்ளூர தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள். மேற்குலகின் சனநாயக, சமூக, பொருளாதார வசதிகளை அனுபவித்துக்கொண்டே அந்த நாடுகளை அழிக்க நினைப்பவர்கள். தங்கள் நாடுகளின் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மிருகத்தனமான அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குநாடுகளுக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டு இன்று தங்களுக்கு அடைக்கலமும், பாதுகாப்பும், மனிதர்களாக வாழும் உரிமையும் , கனவிலும் நினைத்திராத வசதிகளையும் கொடுத்திருக்கும் மேற்குலகின் நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக தமது மிருகத்தனத்தைக் காட்டுவதுடன், அந்த நாடுகளிலும் தமது மிருகத்தனாமன இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விதைத்து, இறுதியில் அந்த நாடுகளையும் தமது ஆளுகைக்குள் கொனண்டுவர நினைப்பவர்கள். இவர்கள் மேல் இரக்கப்படுவது இன்னும் அழிவுகளுக்கே வழிவகுக்கும்.

சரியான பார்வை  ரகு..

நாமே இதற்கு ஒரு சாட்சி..

கனடா கனவுலகில் வாழப்புறப்படுகிறது என்பதற்கு இது சாட்சி... :(

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ரகு

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்.. உங்கள் வாதம் விளங்குகிறது. ஆனால் ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது என்பதுதான் அந்தக் காணொளி சொல்லும் செய்தி. இதை அனுமதித்தீர்கள் என்றால் நாளை உங்களை யாராவது கப்பலில் வந்தியா என்று திட்டினாலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

என்ன தான் சொன்னாலும் கனடா கனடாதான் !!!!  நல்லதொரு காணொளி இணைப்பிற்கு நன்றி அர்யுன் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தான் மற்றவா்கள் சொன்னாலும் தமிழ் சமூகம் முஸ்லீம்களை ”முனா” என்று விழிப்பதையும் சீனா்கள ”சப்பட்டை” என்று விழிப்பதையும்  பாக்கிஸ்தானியா்களை ” பாக்கி” (வெள்ளையளுக்கு நாமும் பாக்கி தான்) என்னறழைப்பதையும் இந்தியா்களை ”வடக்கு” என்று அழைப்பதையும் மாற்ற மாட்டம்...

இன்னும் 

வடை - இந்தியா்கள்
சோறு - இலங்கையா்கள்

என்றும் சொல்லுறாங்க

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அர்ஜூன்...! சுமார் 45 / 50 வயதுக்கு மேற்பட்ட வர்கள் மிகவும் நல்லவர்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் கொஞ்சம் வித்தியாசம். தற்போது ஹலால் உணவுகளையும் அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் புறக்கணிக்கிறார்கள். அவுஸ்களுக்கு பிடித்த வெஜிமைட் தற்போது ஹலால் சான்றிதழோடு வருகிறது. அதையே புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காட்பரி சொக்கிலேட் நிறுவனமும் இந்த ஹலால் சான்றிதலால் கஷ்டப்பட்டார்கள். இரு நாட்களுக்கு முன்னர் அவுஸ் பாராளுமன்றத்துக்கு ஹிஜாப் அணிந்து வந்து போராத்தில் ஈடுபட்டிருந்தார்கள். குயீன்சஸ்லாந்திலும் நிலைமை கஷ்டம்.    

  • தொடங்கியவர்

இந்த வீடியோ என்ன சொல்லி நிற்கின்றது என்று புரிதல் தான் முக்கியம் .

எமது பார்வை வேறாக இருக்கலாம் ஆனால் அதுவல்ல வீடியோ சொல்வது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தான் மற்றவா்கள் சொன்னாலும் தமிழ் சமூகம் முஸ்லீம்களை ”முனா” என்று விழிப்பதையும் சீனா்கள ”சப்பட்டை” என்று விழிப்பதையும்  பாக்கிஸ்தானியா்களை ” பாக்கி” (வெள்ளையளுக்கு நாமும் பாக்கி தான்) என்னறழைப்பதையும் இந்தியா்களை ”வடக்கு” என்று அழைப்பதையும் மாற்ற மாட்டம்...

இன்னும் 

வடை - இந்தியா்கள்

சோறு - இலங்கையா்கள்

என்றும் சொல்லுறாங்க

ஏதோ நமக்குள் மட்டும்தான் எல்லாம் நடக்கின்றது என நினைத்து விடாதீர்கள். நவநாகரீக நாடுகளிலும் பட்டப்பெயர் வைத்து அழைப்பது சர்வசாதாரணம். திரியின் நலன்கருதி மேலதிகமாக எழுத விரும்பவில்லை.

காணொளி அருமை. ஆனால் எனக்கொரு கேள்வி, அப்பாவி முஸ்லீமுக்கும் மத அடிப்படைவாதத்தால் தூண்டப்பட்டு மற்றயவர்களைக் கொல்லத் துடிக்கும் மிருகங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் கண்டறிவது எப்படி ? ஏனென்றால், அண்மையில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென்று சென்ற 18 வயதுடைய ஆப்கானியன் மறைத்து வைத்திருந்த கத்தியொன்றை எடுத்து பொலிச்சர் இருவரை கடுமையாகத் தாக்கியிருக்கிறான். ஒருவர் கீழே விழ, மற்றையவர் துப்பாக்கியல் அவனைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்த முஸ்லீம் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவன். இவனைப் போலவே இங்கே பிறந்த இன்னொரு 17 வயது முஸ்லீம் இன்று ஐஸிஸ் பிரச்சார வீடியோவில் மேற்கு நாடுகளை அழித்து இஸ்லாமியக் கலிபேட்டாக மாற்றுவோம், மேற்குலகத் தலைவர்களின் தலைகளைத் துண்டாடுவோம் என்று கூக்குரலிடுகிறான். இவன் கூட சாதாரண அவுஸ்த்திரேலியர்களைப்போல இங்கே வாழ்ந்தவன் தானே??

அமெரிக்காவில் ரெட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து, ஸ்பெயின் புகைவண்டிக் குண்டுவெடிப்பு, லண்டன் நிலக்கீழ்ச் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு, லண்டன் பஸ் குண்டுவெடிப்பு...இவை எல்லாவற்றையும் செய்தது அந்த நாடுகளில் சாதாரண மக்களைப்போல வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தானே?? 

மனிதாபிமானமும், சக மனிதனை மனிதனாக மதிக்கும் போக்கும் மேற்கு நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இவை தெரியாது,

முஸ்லீம்கள் மேல் மனிதாபிமானத்தின்பேரில் இரக்கப்படுவது சரிதான், ஆனால் எச்சரிக்கையாக இருப்பது தவறில்லை. ஏனென்றால், மதம் என்ன சொல்கின்றதோ அதை அப்படியே செய்யும் வெறி கொண்டவர்கள் அவர்கள்.

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான முஸ்லீம்கள் மத  அடிப்படைவாதிகள். வெளியே சொல்ல முடியாவிட்டாலும்கூட உள்ளூர தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள். மேற்குலகின் சனநாயக, சமூக, பொருளாதார வசதிகளை அனுபவித்துக்கொண்டே அந்த நாடுகளை அழிக்க நினைப்பவர்கள். தங்கள் நாடுகளின் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மிருகத்தனமான அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குநாடுகளுக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டு இன்று தங்களுக்கு அடைக்கலமும், பாதுகாப்பும், மனிதர்களாக வாழும் உரிமையும் , கனவிலும் நினைத்திராத வசதிகளையும் கொடுத்திருக்கும் மேற்குலகின் நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக தமது மிருகத்தனத்தைக் காட்டுவதுடன், அந்த நாடுகளிலும் தமது மிருகத்தனாமன இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விதைத்து, இறுதியில் அந்த நாடுகளையும் தமது ஆளுகைக்குள் கொனண்டுவர நினைப்பவர்கள். இவர்கள் மேல் இரக்கப்படுவது இன்னும் அழிவுகளுக்கே வழிவகுக்கும்.

தமிழர்கள் தமிழர்களை அழிக்கும் சிங்களப் பகுதிகளில் வாழும் போது அவர்கள் நிலை என்னவோ அதுபோல்தான் இஸ்லாமியர்கள் மீது போர் தொடுத்திருக்கும் மேற்கு நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களும்.

கதிர்காமர் போன்றவர்களும் அவ்வாறான போக்குள்ள தமிழர்களும் சிங்களத்துடன் குலாவி வாழ்வது போல் பல இஸ்லாமியர்களும் மேற்கு நாடுகளுடன் இணைந்து வாழ்கின்றனர்.

தமிழர்கள் ஆயிரம் வருடம் சாதியை காவித்திரிகின்றார் புலம்பெயர் நாட்டிலும் கொண்டு திரிகின்றனர் அதுபோல் மதத்தை அவர்கள் கொண்டு திரின்றனர். இரண்டினது வீரியமும் அக புற சூழலும் வேறாகினும் இரண்டும் அறிவுக்கு முரணானதுதான்.

கனடா இந்தப் பிரச்சனையை முடிந்தவரை புத்திக் கூர்மையுடன் அணுக முற்படுகின்றது. இரவோடு இரவாக இஸ்லாமியச் சமூகத்தையே வெளியேற்றிய நிகழ்வை அனுபவமாக கொண்ட எமது அணுகுமுறைக்கும் கனடாவின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள இடைவெளி கடலளவு.

தமிழர் எல்லோரும் புலி அல்லது பயங்கரவாதி என்ற அணுகுமுறை சிங்களத்திடம் இருந்திருந்தால் தமிழர் இன்று ஈழத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இந்தப் பிரச்சனையை முடிந்தவரை புத்திக் கூர்மையுடன் அணுக முற்படுகின்றது. இரவோடு இரவாக இஸ்லாமியச் சமூகத்தையே வெளியேற்றிய நிகழ்வை அனுபவமாக கொண்ட எமது அணுகுமுறைக்கும் கனடாவின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள இடைவெளி கடலளவு.

இரண்டாவது உலகப்போர் சமயத்தில் கனடாவில் வாழ்ந்து வந்த ஜப்பானியர்களை அள்ளிக்கொண்டுபோய் மெனிக் ஃபார்ம் மாதிரியான முகாம்களில் போட்டு அடைத்து வைத்த நாடு கனடா. அது ஏன் சண்டமாருதன்?? :rolleyes:

அன்று சின்னாபின்னமாக்கப்பட்ட அந்த ஜப்பானியக் குடும்பங்கள் இன்றும் மேற்கு கனடாவில் உள்ளார்கள். ஒரு சுதந்திரமடைந்த நாடே இவ்வாறான வேலயை செய்துள்ளது. இதை ஒப்பிடும்போது ஒடுக்கப்பட்ட தமிழர் விடுதலை வரலாறு எவ்வளவோ பரவாயில்லை.

உலகப்போரையும்  தமிழர் விடுதலைப்போராட்டதையும் ஒப்பிட முடியாது.

கனடா அமரிக்கா போன்றன சில நூறாண்டுகள் வரலாற்றைக் கொண்ட நாடுகள். செவ்விந்தியர்களின் பூர்வீகமான வட அமரிக்காவில் குடியேறியபோது செவ்விந்தியர்களையும் அழித்து எஞ்சியவர்களை ரிசேர்வில் கொண்டுபோய் தள்ளினார்கள். இது நீங்கள் சொன்ன ஜப்பானிய உதாரணத்தை விட மோசமானது. ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளை கப்பல்களில் ஏற்றிவந்து அவர்கள் விதைகளை கசக்கிப்பார்த்து விலைக்கு விற்றனர் வாங்கினர். வரலாற்றில் இன்னும் ஏராளம். ஆனால் இவ்வாறான அணுகுமுறைகளை எல்லாம் அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். என்னும் மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு கறுப்பினத்தவரை அமரிக்கர்கள் தம்நாட்டுத் தலைவராக ஏற்கும் அளவுக்கு மாற்றிக்கொண்டார்கள். நிற இன மத பேதங்களை உணர்சிவசப்பட்டு அணுகுவதில் இருந்து அறிவு பூர்வமாக அணுக பழகிக்கொண்டார்கள். உணர்சிவசமான அணுகுமுறையின் பின்விழைவுகள் என்ன என்பதை அறிவுபூர்வமாகப் பாரக்கின்றார்கள்.

ஆனால் வரலாறு தெரிந்த காலங்கள் தொட்டு சாதி மத பிரசேவாத அணுகுறைகளில் அறிவுபூர்வமாக எந்த மாற்றமும் எமக்குள் நிகழவில்லை. போத்துக்கேயே ஒல்லாந்த அங்கிலேய சிங்கள ஆக்கிரமிப்புகள் என அனைத்தையும் கண்டபின்னர் கூட எந்த மாற்றமும் வரவில்லை. ஒல்லாந்த ஆங்கிலேயர்கள் எமது மண்ணை ஆக்கிரமித்தபோதும் இந்த பேதங்கள் எம்முடன் இருந்தது அவர்கள் நாடுகளில் பின்னர் வந்த போதும் இந்த பேதங்களை காவிக்கொண்டுவந்தோம். எந்த மாற்றமும் கிடையாது. பேதங்களை கடந்து ஐக்கியப்படவே போராடுவார்கள் ஆனால் புறச் சூழல் அழுத்தத்தால் அதிஸ்டவசமாக மத பிரதேசவாதங்களை கடந்து ஐக்கியப்பட்ட போராட்ட சூழலைக் கூட அறிவுகெட்டதனத்தால் குலைத்தவர்கள் தமிழர்கள். இந்த அறிவுகெட்டதனத்தை யூத மூளைக்கு அவ்வப்போது ஓப்பிட்டுக்கொள்வது வேறு.

எமது அணுகுமுறையில் உள்ள அறிவுக்குறைபாட்டிற்கும் மாற்றங்களை காண முடியாத மனநோய்கும் உணரச்சிவசத்திற்கும் கடந்தகால ஆயுதப்பாவனையும் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதும் சமூகத்தை இருப்பில் இருந்ததை விட ஆழமாக சிதைத்தம் என பல  உதாரணங்கள் கண்முன்னே வரலாறாக விரிந்து கிடக்கின்றது.

பிழைகள் திருத்தப்படவேணும் தவிர நியாயப்படுத்தவேண்டியதில்லை. திருத்தப்படுவதற்கே உலகில் உள்ள உதாரணங்கள் அனுபவமாக அமைய முடியும். இங்கே நியாயப்படுத்துவதற்கே ஒவ்வொன்றையும் இழுத்துவருகின்றார்கள். உள்ளுர மாற்றத்தை விரும்பாதவர்கள்  நியாயப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் தமிழர் போராட்டத் தவறுகள் பரவாயில்லை என்ற நியாயப்படுத்தல்களும் அதற்கு ஆமாம் ஆமாம் என்ற ஆதரவுகளும் தவறுகளை தக்கவைக்கவைப்பதற்கே. இது தான் வரலாறு நீளவும் தொடர்கின்றது. கனடாவும் ஜப்பானும் இருக்கும் அரபு தேசங்களும் கனடாவும் இருக்கும். பல நூறு பிரச்சனைகள் கடந்து செல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் எமக்கென்று ஒரு தேசம் இருக்காது அதற்குப் பதலாக சாதி மதம் பிரதேசவாதங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்.

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்ல வாறார் என்றால்... இசைக்கலைஞன் சொல்வது போன மாசம்... நான்(இவர்) சொல்வது இந்த மாசம்!!

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னர், கனடாவின் முதற்குடிகள் நிகழ்வு ஒன்றுக்குப் போய் இருந்தேன். அதில் ஒருவர் தங்களின் பிரச்சனைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தங்களின் சமூகத்திற்கு கனடா அரசால் உதவிகள் செய்யப்படுகின்றன. குறித்த பிரதேசத்தில் இலவசமாகவோ, அல்லது மிகக் குறைவான விலையில் பொருள் வாங்கமுடியும். ஆனால் அந்த வசதி என்பது அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறினால் அவர்களால் அனுபவிக்க முடியாது. இது கூட ஒருவகை அடக்குமுறை தான். இதனால் அவர்களுக்குப் படித்து முன்னேற வேண்டிய தேவை இல்லை. அவர்களின் இடத்தில் தாரளமான போதைவஸ்துக் கிடைக்கின்றது. தவிர, இப்படி வசதிகள் இருந்தபோதும், அவர்களால் முழப் பலனையும் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் இடத்தில் உதாரணத்துக்கு ஒரு ரிம் ஹட்டன் கூட இல்லை. இது எவ்வளவு மிகைப்படுத்தாலா இல்லை என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் இன்றைய வடக்குக் கிழக்குத் தமிழர்களின் நிலைமையும் இதுவாகத் தான் இருக்கின்றத. அரசுக்குப் பதிலாக வெளிநாட்டில் உள்ளவர்கள் பணம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மிகுதிப்படி எல்லா விடயங்களும் இதில் பொதுவானது....

சிறிய  காலத்துக்குப்பின் ஈழத்தமிழர்  நிலையும் இது தானா  தாயகத்தில்.. :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களை செட் பண்ணிப் போட்டு செய்தால் எல்லா நாடும் நல்ல நாடு தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வருடங்களுக்கு முன்னர், கனடாவின் முதற்குடிகள் நிகழ்வு ஒன்றுக்குப் போய் இருந்தேன். அதில் ஒருவர் தங்களின் பிரச்சனைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தங்களின் சமூகத்திற்கு கனடா அரசால் உதவிகள் செய்யப்படுகின்றன. குறித்த பிரதேசத்தில் இலவசமாகவோ, அல்லது மிகக் குறைவான விலையில் பொருள் வாங்கமுடியும். ஆனால் அந்த வசதி என்பது அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறினால் அவர்களால் அனுபவிக்க முடியாது. இது கூட ஒருவகை அடக்குமுறை தான். இதனால் அவர்களுக்குப் படித்து முன்னேற வேண்டிய தேவை இல்லை. அவர்களின் இடத்தில் தாரளமான போதைவஸ்துக் கிடைக்கின்றது. தவிர, இப்படி வசதிகள் இருந்தபோதும், அவர்களால் முழப் பலனையும் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் இடத்தில் உதாரணத்துக்கு ஒரு ரிம் ஹட்டன் கூட இல்லை. இது எவ்வளவு மிகைப்படுத்தாலா இல்லை என்பது எல்லாம் தெரியவில்லை.

உண்மையில் முதல் குடிமக்களுக்கு வாிச்சலுகை கனடா முழுவதும் கிடைகிறது. அவா்கள் Nunavut பகுதிக்குள் மட்டும் வாழ்ந்தால் மட்டுமே இந்த சலுகைகள் என்பது உண்மையில்லை. ஆனால் அவா்களுக்கென்று வழங்கப்பட்டுள்ள சிறப்புாிமைகள் ... போதைப்பொருளின் அளவீடு, வேட்டையாடுதல், போன்றன Nunavut மட்டுமே ஏற்புடையது என்று நினைக்கிறேன். அதை விட ஒன்ராாியோவிலே பல முதற்குடி மக்களது பகுதிகளுக்கு சிறப்புாிமை வழங்கப்பட்டுள்ளது. 

படிப்பு  தொடா்பாக அந்த மக்களே முடிவு செய்ய வேண்டும். அரசாங்க உதவி மற்றும் மிதமிஞ்சி போதைப்பொருள் பாவனையாலே அந்த சமூகம் கீழ்நோக்கிப் போகின்றது. அதை பற்றி சுய ஆட்சி (மற்றைய மாநிலங்களை விட அதிகாரமிக்க) அதிகாரத்தை கொண்ட Nunavut றில் இவற்றை அவா்களே மாற்ற முடியும்... 

நாடு முழுவதும் அவா்களுக்கான சிறப்புாிமையை எதிா்பாா்க்க முடியாது... நாளை மற்றைய இனங்களும் தமது இனங்களுக்கும் சிறப்புாிமை தேவை என்று வாதிட முடியும் ஏன் எனில் இது பாரம்பாிய நாடு அல்ல... புலம்பெயா்ந்தவா்களால் உருவாக்கப்பட்ட நாடு..!

Reserveகளில் விற்கப்படும் பொருட்களுக்கு சிலவேளை  வரி விதிக்கப்படாமல் இருக்கும்...ஏனென்றால் reserveகளில் சிகரெட், பீர் வாங்க எல்லோரும் திருட்டுத்தனமாக (கனடிய-மூத்த குடி கொண்டு) வாங்குபவர்கள் இருக்கிறார்கள்....

மூத்தகுடிகள் பணம் வெளியே இருந்தாலும் எடுக்கலாம்...ஆனால் மற்ற சலுகைகள் அவர்களது இடத்தில் மட்டும் தான் கிடைக்குமாக்கும்...ஆகவே தான் தாங்களே தங்களை ஆள அவர்கள் கேட்கிறார்கள்....

என்னோடு படித்த மூத்தகுடியிணன் ஒருவனும் எப்போதுமே அரசுமீது "கோபமாக" இருப்பான்....தனது எதிர்காலத்தை எப்போதுமே இருண்டதாகவே கதைத்துகொண்டிருப்பான்....இடையில் கல்லூரியை விட்டும் போய்விட்டான்... இவ்வளவுக்கும் கல்லூரி கட்டணம் கூட அவன் கட்ட வேண்டியிருக்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.