Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதுளையில் பாரிய நிலச்சரிவு! 12 சடலங்கள்! 200 பேரின் நிலை தெரியவில்லை!

Featured Replies

Landsilde3.jpg பதுளையில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் சுமார் 200 பேர் வரை சிக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர், மீட்புப் படையினர், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மண் சரிவில் அந்தப் பிரதேசத்தில் இருந்த சுமார் 80 லயன் அறைகள் முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ளதோடு, ஒரு கோவிலும் மூடப்பட்டள்ளது.

சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 12 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீட்புப் பணிகள் துரிதப்பட்டுள்ள போதிலும் ஒரு பகுதியில் தொடர்சியான மண்சரிவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்

 

http://www.tamil.srilankamirror.com/news/2740-200-12-200

Edited by Kashni

  • Replies 68
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Many missing after S Lanka landslip
_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd
 

At least 150 missing and three dead in landslide after monsoon rains in central Sri Lanka, officials say.

 

http://www.bbc.co.uk/news/world-asia-29813981

  • கருத்துக்கள உறவுகள்
Sri Lanka landslide: Three dead and 150 missing

(பதுளை மண்சரிவு: மூவர் பலி மற்றும் 150 பேரைக் காணவில்லை. 70 வீடுகள்... 10 கடைகள்.. 3 அரசாங்க அலுவலங்கள்.. பருவகால..கடும் மழைவீச்சியை அடுத்து ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு போயுள்ளது. சிறீலங்கா பாதுகாப்பு படை உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக.. சிறீலங்கா அமைச்சரை மேற்கோள் காட்டி.. செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.)

 

_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd
 

At least 150 people are missing and three people are dead following a landslide in central Sri Lanka, disaster officials say.

 

The landslide, which came after heavy monsoon rains, engulfed dozens of houses in Badulla district, officials said.

 

Security forces have been mobilised in search and rescue operations.

 

Much of Sri Lanka has been lashed by heavy rain in recent weeks, with mudslide warnings issued.

 

"About 70 houses, 10 shops and three official residences are hit by the landslide," Disaster Management Minister Mahinda Amaraweera told local media.

 

Sections of several national highways have been washed away by the rains, AFP news agency reported.

 

http://www.bbc.co.uk/news/world-asia-29813981

ஏழு லயன் அறைகளும், கோவில் ஒன்றும் மண் சரிவில் சிக்கியுள்ளன (படங்கள், வீடியோ இணைப்பு)

 

5863_content_badulla%20(1).jpg

 

5863_content_badulla%20(2).jpg

 

5863_content_badulla%20(12).jpg

 

 

5863_content_badulla%20(14).jpg

 

 

 

 

 

 http://www.thinakkural.lk/article.php?local/csfrypvxpc9382d9a5cf487c24627dczfg8317dba2cc8fafcf8a18a87ixpi#sthash.LREVOJss.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

1(147).jpg
-அழகன் கனகராஜ்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவு காரணமாக 6 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே  மண்ணில் புதையுண்டுள்ளன.

7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும் 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும் 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும் 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும் 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.

இவற்றில் தங்கியிருந்தவர்களும் மேலே குறிப்பிட்ட  66 குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மண்சரிவு இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கும் 7.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று  முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால், மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்தக் குடியிருப்புக்களில் வசித்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்று காலையிலேயே மீரியபெத்த பாடசாலைக்கு சென்றுவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த பலர் தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக இன்று காலை அங்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்கிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும் நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை , மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பணித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகெப்டர் மூலமாக ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரவிந்த குமாரும் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.
1%20(1).jpg
unnamed(3).jpg


1%20(3).JPG
1%20(4).JPG
unnamed%20(6).jpg
1%20(2).JPG
2(92).jpg
3(76).jpg
4(43).jpg
5(21).jpg

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/131246-2014-10-29-03-44-39.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு பளபளக்கும் வீதிகளையும், தண்டவாளங்களையும் கட்டுகிறார்கள். இவர்களுக்கு ஒழுங்கான கூரைகூட இல்லை. ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இத்தமிழர்களை இன்றுவரை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு பளபளக்கும் வீதிகளையும், தண்டவாளங்களையும் கட்டுகிறார்கள். இவர்களுக்கு ஒழுங்கான கூரைகூட இல்லை. ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

அதுவும் புலம்பெயர் தமிழர்களை தமிழீழத்தை கைவிடும் வரை தான். அதுக்குப் பிறகு யாழ்ப்பாணமும் இப்படித்தான் ஆகும்.

 

ஜூனில் இதே போன்ற நிகழ்வு சிங்களப் பகுதியில் நடந்த போது.. சிறீலங்கா விமானப்படை உலங்கு வானூர்திகள் மீட்பில் உபயோகிக்கப்பட்டன.

 

இங்கு இடர்கால மீட்பு நிலைமை அவ்வளவு தீவிரமாக இன்றி ஏனோ தானோ என்று இருக்கிறது.

 

இவை இன்னும் இன்னும் உயிரிழப்புக்களை அதிகரிக்கவே செய்யும்.

 

சிங்கள அரசில் அமைச்சுக் கட்டில் இருக்கும் தமிழர்கள்.. இதுவரை அனர்த்தம் பற்றி அக்கறை எடுத்துள்ளதாகத் தெரியவில்லை..!! :(:o

  • கருத்துக்கள உறவுகள்

மலையக அரசியல்வாதிகள் எப்படி இப்போதும் பரம்பரை அரசியல்வாதிகளாக இருக்கின்றார்களோ
அப்படியே தோட்டத்தொழிலாளர்களும் பரம்பரை பரம்பரையாக
இந்த அவல வாழ்க்கையைத் தொடர்கின்றார்கள்
சிங்கள அரசுக்கு வால்பிடிக்கும் மலையக அரசியல் வாதிகள்
குறைந்தது மலையக மக்களின் அன்றாட வாழ்க்கையிற்கு எதாவது செய்தார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.
மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்படுகின்றனர்.
உயிரிழப்பு எதுவுமில்லாமல் எல்லோரும் காப்பாற்றப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பு03- ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 300 பேரைக் காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 600 பேர் வரை புதையுண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 30க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணால் போன 300 பேரும் உயிழந்திருக்கலாம் எனவும் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  ; ஆனாலும் உயிரிழைந்தவர்களின் முழுமையான விபரங்களை வெளியிட அரசாங்கம் தயக்கம் காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்பு02- ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 14 பேரின் சடலங்கள் மீட்பு

29-10-2014- 02.05

பதுளை ஹல்துமுல்ல மீரியாபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 14 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், 100 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும், நூற்றுக் கணக்கான காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மண் சரிவில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகள் பல மண்ணில் புதையுண்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சுமார் 300 பேர் வரையில் மண் சரிவில் சிக்குண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக பெல்212 ரக ஹெலிகொப்டர் ஒன்றை ஈடுபடுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுமார் 120 வீடுகள் முற்று முழுதாக சேதமடைந்திருப்பதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக 2005ம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டு ஆகியவற்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், மக்கள் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது குறித்த இடத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மீரியபெத்த மலைப் பகுதியில் தொடர்ச்சியாக மண் சரிவு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் :

பதுளை ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற பாரியளவிலான மண் சரிவில் பெரும் எண்ணிக்கையிலான லயன் வீடுகள் முற்றுமுழுதாக மண்ணில் புதையுண்டுள்ளன.

மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாலை நேரம் என்பதனால் அதிகமானவர்கள் இந்த மண் சரிவினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் ஒரு சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் ஐந்து கிலோ மீற்றர் அளவிற்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் பத்து லயன் வீட்டுத் தொகுதிகள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. உயிர் மற்றும் உடமைச் சேத விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113022/language/ta-IN/article.aspx

ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

சிங்களவன் அவர்களது அரசியல் உரிமையை பறித்தான் மிச்சம் எல்லாம் நாங்கள் புடுங்கியதுதான்.

 

மலையக அரசியல்வாதிகளுக்கு வேறு தெரிவுகள்  இருந்ததாக  தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

'வித்தியாசமான சத்தத்துடன் மலை சரிந்தது; 128 லயன் அறைகளில் ஒன்றுகூட இல்லை' 

 

'இன்று காலை ஏழு மணியளவில் திடீரென பாரிய சத்தமொன்று கேட்டது. அதுவொரு வித்தியாசமான சத்தம். நான் ஓடினேன். எந்தப்பக்கம் என்று தெரியாமல் ஓடினேன். அப்படி ஓடும்போது மலை சரிந்து விழுந்தது. நான் அதில் புதையுண்டேன். என்னைக் காப்பாறிய சிலர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்' என்று கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் சிக்குண்டு உயிர்பிழைத்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்டத் தொழிலாளியான ராதா (34 வயது) கூறுகையில், 'திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் எனது இடுப்புப் பகுதி வரை மண் மூடிக்கொண்டது. எனது நான்கு பிள்ளைகளும் வேறு பக்கமொன்றில் இருந்தனர். தந்தையும் தாயும் கூட இருந்தனர். அவர்கள் தொடர்பில் தகவல் இல்லை. அவர்கள் புதையுண்டனரா என்பது பற்றி தெரியவில்லை' என அவர் குறிப்பிட்டார்.

புதையுண்டு மீட்கப்பட்டவர்களை லொறியொன்றில் வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த சாரதி இது தொடர்பில் கூறுகையில், 'வீதியொன்று தென்படவே இல்லை. மிகவும் கடினமான முறையில் மீட்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்தேன்.

சுமார் 128 லயன் அறைகளில் ஒன்றுகூட தற்போது தென்படுவதில்லை. கோயிலையும் காணவில்லை. அந்த லயன் அறைகளில் 300 அல்லது 400பேர் இருந்திருக்கக்கூடும்' என அவர் தெரிவித்தார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/131288--128-.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
பதுளை மண்சரிவு ; மீறியபெந்த தோட்டத்தைக் காணவில்லை (இரண்டாம் இணைப்பு) - 
 
 

 ஹப்புத்தளை,  ஹல்துமுல்ல  மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.  

 
எட்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் தற்போது மீட்கப்பட்டிருப்பதாகவும் 300 பேர் வரையில் காணாமற்போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 150 க்கு மேற்பட்ட வீடுகள்  நிர்மூலமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீறியபெந்த தோட்டம் முழுமையாக மண்சரிவில் சிக்கியுள்ளதால் அங்கு இருந்த மக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகின்றார்.  

 

(முதலாம் இணைப்பு)

மண்சரிவில் இருவர் சாவு ; 400 பேர் மாயம்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் இருவர் பலியானதுடன் 400 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
மண்சரிவு காரணமாக 7 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளது.
 
மீரியபெத்தையில் 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புகளே இவ்வாறு மண்ணில் புதையுண்டுள்ளன.
7 ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும், 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும், 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும், 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும், 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும், 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.
 
 
குறிப்பிட்ட பகுதி தொடர்ந்தும் மண்சரிவுக்குள்ளாகி வருவதாகவும் தற்போது 1 கிலோமீற்றர் பகுதி மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=615843590629235318#sthash.PT1r0Ogs.dpuf

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

"என் குடும்பத்தில் ஐந்து பேரை நிலச்சரிவு காவுகொண்டுவிட்டது"

 

BBC யில் ஒருவரது பேட்டி:

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/10/141029_landslidevictim

வரவு செலவுத் திட்டத்தில் அனைவரையும் கவர நடவடிக்கை எடுத்த மகிந்த தோட்டத் தொழிலாளர்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் ஆறுமுகம் தொண்டமானைத் தனிப்பட்ட முறையில் கவனித்தால் தோட்ட வாக்குகளை அள்ளிவிட முடியும் என்பதை அறிந்திருப்பதால் தான். சரியான தலைமைத்துவம் இன்றித் தவிக்கும் அந்த மக்களை நாங்களும் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே இதுவரை கருதி வந்துள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மலைய மக்களுக்கு இவற்றின் மூலம் உதவிகளை அளிக்க முடியுமா..??!

 

http://www.oxfam.org/en/countries/sri-lanka

 

https://www.icrc.org/en/resource-centre/result?t=sri+lanka+

 

https://twitter.com/SLRedCross

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.