Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்! இன்னும் விலகாத மர்மம்! – மணிவிழா கொண்டாட்டம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல… எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன.

சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு!’ இப்படிச் சொன்னவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்!

நவம்பர் 26ம் தேதி பிரபாகரனுக்கு 60வது பிறந்தநாள். அதாவது அவருக்கு இது மணிவிழா ஆண்டு. வழக்கமாகவே நவம்பர் மாதக் கடைசி என்பது ஈழத்தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் உணர்ச்சிபூர்வமாகக் கொண்டாடும் நாட்களாக அமையும். நவம்பர் 27ம் தேதி புலிகள் அமைப்பின் முதல் களப் போராளியான கேப்டன் சங்கர் மரணித்த நாள். அதற்கு முந்தைய நாள் நவம்பர் 26 பிரபாகரன் பிறந்தநாள். எனவே, 25,26,27 ஆகிய மூன்று நாட்களையும் மாவீரர் தினங்களாக விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டாடும். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரன், நவம்பர் 27ம் தேதிதான் வானொலியில் பேசுவார். அதற்காக உலகம் முழுவதும் தமிழர்கள் அந்த நாளுக்காகக் காத்திருப்பார்கள். 2009ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு, புலிகளின் வானொலி செயல்படவில்லை. அதனால் மாவீரர் தின உரைகளும் இடம்பெறவில்லை.

‘பிரபாகரன் போரில் கொல்லப்பட்டார்’ என்று இலங்கை அரசாங்கமும், ‘இல்லை, அவர் உயிர் வாழ்கிறார்’ என்று ஈழ ஆதரவாளர்களும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. 1954ம் ஆண்டு வேலுப்பிள்ளைபார்வதி தம்பதியருக்கு வல்வெட்டித் துறையில் பிறந்தவர் பிரபாகரன். அவருக்கு இது 60வது பிறந்த நாள். மணிவிழா பிறந்தநாளாக அதனைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

”வானவெளியில் வாணவேடிக்கைகள் நடக்கட்டும்… பட்டாசு வெடிகள் முழங்கட்டும்; சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும். பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்தாலே மானத் தமிழனின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாயுமல்லவா? பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் எழுப்பும் வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்குக் கட்டியம் கூறும் விதத்தில் தாய்த் தமிழகத்திலும், உலகம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குலத் தலைவனின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்’ என்று பகீரங்கமாகவே அழைப்பு விடுக்கிறார் வைகோ.

‘காலம் தந்த தலைவன் மேதகு பிரபாகரன் 60’ என்ற தலைப்பில் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 26, 27 ஆகிய இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார் பழ.நெடுமாறன். ஒருவார கால நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. இன்னும் பல தமிழர் இயக்கங்கள் விழாக்களைத் திட்டமிட்டு வருகின்றன. ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளார்கள். அவர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிறது. இப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி… பிரபாகரன் என்ன ஆனார்?

p51-348x450.jpg

2009ம் ஆண்டு மே மாதம் அது. இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதிகட்டப் போர் உச்சத்தில் இருந்தது. அந்தப் போரில் விடுதலைப்புலிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்று இலங்கை இராணுவம் அறிவித்தது.

அத்துடன் அவர்கள் பிணமாக இருக்கும் படங்களையும் வெளியிட்டனர். அந்த நேரத்தில் பிரபாகரனைப் பற்றி மட்டும் எந்தத் தகவலும் வெளிவரவில்லை. மறுநாள், பிரபாகரன், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல் புலிகள் தலைவர் சூசை ஆகியோரையும் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவிக்க… உலகத் தமிழர்கள் அனைவரும் செய்வதறியாது கலங்கி நின்றனர். பிரபாகரனின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வீடியோவையும், புகைப்படங்களையும் ராணுவம் வெளியிட்டது. அந்த வீடியோவிலும் புகைப்படத்திலும் இருந்தவரின் உடல் அமைப்பும், பிரபாகரனின் உடல் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தன. ஆனால், பல்வேறு தமிழ் அமைப்புகள் அது பிரபாகரன் இல்லை என்று மறுத்தன. ”போர்க்களத்தில் இருந்த ஒருவர் முகத்தை சுத்தமாக சேவ் செய்து இருக்க முடியுமா? அவரது சீருடையில் இருக்கும் படமும் உள்ளாடை மட்டும் அணிந்த படமும் உண்மையானதாக இல்லை” என்றும் அவர்கள் சந்தேகங்களைக் கிளப்பினார்கள்.

அன்றைய காங்கிரஸ் அரசு பிரபாகரனின் போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால் அதனை இலங்கை அரசு தரவில்லை. ‘பிரபாகரனை உடனடியாக எரித்து அவரது சாம்பலைக் கடலில் கலந்துவிட்டோம்’ என்று சொன்னார்கள்.

ஐந்து ஆண்டுகள் ஆகியும் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதுவரை இலங்கை அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை. கொல்லப்பட்டது பிரபாகரன் என்று பிரகடனம் செய்யும் ராஜபக்‌ஷே அரசு, ஏன் இதுவரை அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கொடுக்கவில்லை என்று கேட்கும் யாருக்கும் எந்தப் பதிலும் இல்லை.

‘தலைவர் இறந்தால்தானே அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கொடுக்க முடியும். அவர் இறக்கவில்லை… இருக்கிறார்!’ என்று பதிலடி கொடுக்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். ”பிரபாகரனின் அப்பா, அம்மா ஆகிய இருவரும் முகாமில்தான் இருந்தார்கள். அவர்களை வைத்து பிரபாகரனின் உடலை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்” என்று சொன்னதற்கும் இலங்கையிடம் இருந்து பதில் இல்லை.

இந்தியாவில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தடையை நீட்டித்துக் கொண்டே இருப்பார்கள். காங்கிரஸ் ஆட்சி முடியும் போது, ஐந்து ஆண்டுக்கு தடை செய்துவிட்டார்கள். இந்தத் தடைக்கான காரணங்களில் ஒன்றாக, ‘விடுதலைப்புலிகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தமிழீழத்தையும் தமிழகத்தையும் சேர்த்து ஒரே நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வந்தார்கள்’ என்று காரணம் சொல்லப்படுகிறது.

2009ல் அழிக்கப்பட்ட இயக்கத்துக்கு 2018 வரைக்கும் தடைவிதிக்கக் காரணமே பிரபாகரன், பொட்டு அம்மான் பற்றிய சந்தேகங்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது. ‘விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னும் செயல்பாட்டில் இருக்கிறது’ என்று ராஜபக்‌ஷே சமீபத்தில் விடுத்த அறிவிப்பும் இதனை வைத்துத்தான். இறுதிக்கட்ட போர் முடிவில் கைது செய்யப்பட்ட முக்கியப் போராளிகளை இன்னமும் விசாரணையே இல்லாமல் இலங்கை அரசு சிறையில் வைத்துள்ளதற்குக் காரணமாகவும் இது சொல்லப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சாவூரில் பழ.நெடுமாறன் முயற்சியால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைத்தனர். இந்த நினைவு முற்றத்தில் போரில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களைப் பற்றிய குறிப்புகளும் இங்கே உள்ளது. அதில் பிரபாகரன் படம் வைக்கப்படவில்லை. ”பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் கொல்லப்பட்டார் என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள். அதன் பிறகு நான் என் பதிலைச் சொல்வேன்” என்று நெடுமாறனும் சொல்லி வருகிறார்.

”பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எப்படிச் சொல்லி வருகிறீர்கள்?” என்று மத்திய உளவுத் துறை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து நெடுமாறனைக் கேட்டுவிட்டுச் செல்கிறார்கள். ”இது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது” என்று அவரும் அவர்களுக்குப் பதில் அளித்து வருகிறார்.

இப்படி இலங்கை அரசு, மத்திய அரசு, புலம்பெயர் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் இன்னும் விலகாத மர்மமாகவே இருக்கிறது. பிரபாகரன் தனது வழிகாட்டியாகச் சொன்னது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை. ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி. எல்லோருக்கும் பிறந்தநாள் என்று ஒன்று வந்தால், நிச்சயம் இறந்தநாளும் என்றாவது ஒருநாள் வரும். ஆனால், இறந்தநாள் என்பது மர்ம நாளாகவே இருப்பது நேதாஜிக்கு அடுத்து பிரபாகரனுக்குத்தான்!

http://tamil24news.com/news/?p=39640

இந்த உண்மை மஹிந்த & கோத்தா ஆட்களுக்கு எப்பவோ தெரியும் அதுதான் இன்னும் ராணுவபிடி அகலவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

 https://www.youtube.com/watch?v=2Y7tsFZzvlA

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கணும்

இருக்கிறார் என்பது கோடிக்கணக்கான  தமிழரின் கனவு

ஆசை

விருப்பம்.........

இதை மறுக்கும்

கேவலப்படுத்தும் 

உரிமை எவருக்கும் கிடையாது...

இதுவரை  நானறிய

இணையங்களில் தலைவருக்கு விளக்கேற்றியோர் நாலைந்து பேர்

நேரில் எவரையும் காணவில்லை

எந்த மக்களும் (தாயகம் புலம் தமிழகம் உட்பட)

இதுவரை விளக்கேற்றி  நான் பார்த்ததில்லை

கேட்டதில்லை....

பிரான்சில் விளக்கேற்றவோம் என சிலர் முயற்சித்தார்கள்

அவர்களாலேயே  முடியாமல் போனது என்பது தான் உண்மை..

மேலும் விளக்கேற்றுபவர்களும் ஒரு நம்பிக்கையில் மட்டுமே விளக்கேற்றுகிறார்கள்

அதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை அவர்கள் மக்கள் முன் சமர்ப்பித்ததில்லை.....

ஆறு வருடமாகிறது

இனியும் சமர்ப்பிப்பார்கள் என நம்பவில்லை.....

மற்றும்படி  என்னைப்பொறுத்தவரை

தலைவர் இருக்கிறார் இல்லை என்பது காலம் பதில் சொல்லட்டும்

தலைவர்

மாலைக்காகவோ

சோற்றுக்காகவோ கனவு கண்டவரில்லை

அவரது கனவை நனவாக்க உழைக்கணும்

செயலே அவருக்கு செய்யும் பெரும் உழைப்பாகும்

அதுவே அவரை சாந்தப்படுத்தும்

அமைதி  கொள்ளவைக்கும்...

என்னால் முடிந்தவரை

எவர் செய்கின்றார்  என  பார்க்காமல்

என்ன செய்கின்றார் எனப்பார்த்து

எல்லோரோடும் சேர்ந்து  செய்து வருகின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிரபாகரன் எனும் மனிதனது இறப்பென்பது வெறுமனே ஒரு தனி மனிதனது இறப்பென்று பார்க்கப்படாமல் ஒரு சமூகத்தினது வீழ்ச்சியாகப் பார்க்கப்பட்டு விடும் என்கிற அச்சத்தினாலேயே பலர் அவர் இன்னும் இருக்கிறார் என்று நம்புவதாக எனக்குப் படுகிறது. இப்படி நான் எழுதுவதால் அவர் இறந்துவிட்டார் என்று நான் நம்புவதாக நினைத்துவிட வேண்டாம். அவர் உயிருடன் இருந்தால் எல்லோரையும்போலவே நானும் நிச்சயம் மகிழ்வேன்.

எமது விருப்பங்களுக்கும், யதார்த்தங்களுக்குமிடையே எப்போதும் பாரிய இடைவெளி இருந்துகொண்டே வருகிறது. ஆனால், சிலவேளை நாம் நடக்கமுடியாதவை என்று நம்புபவை கூட நடந்துவிடுகின்றன. அதுபோலத்தான் பிரபாகரன் எனும் மனிதனது வாழ்வென்பதும் இருந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன். இது நடப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் பற்றியோ அல்லது நிகழ்தகவு பற்றியோ மனம் யோசிக்க இன்றுவரை மறுத்து வருகிறது.

எமது முழு நம்பிக்கையான போராட்டமும், போராளிச் செல்வங்களும், தளபதிகளும், மக்களும் அழிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தேடும்போதெல்லாம், அடிக்கடி மனம் இந்த மனிதன்மீது கோபப்படும். நடந்தவை எல்லாவற்றுக்கும் அந்த ஒரு மனிதனே காரணம் என்று வழக்காடும். ஆனால் சிறிது நேரத்திலேயே இவையெல்லாம் மறந்து அவர் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அங்கலாய்க்கும்.

எல்லாச் சாத்தியப்பாடுகளுக்கும் அப்பால் பாலாய்ப்போன எனது மனம் இப்படி யோசிக்கிறது, அவர் உண்மையாகவே உயிருடன் இருந்துவிட்டால்??? மீண்டும் தமிழீழத்திற்கான போர் அவரால் தொடங்கப்பட்டால்?? அவரின் மூலம் நாம் விடுதலை அடைந்தால் ???

மனம் ஒரு குரங்கென்று சும்மாவா சொன்னார்கள் ???

ஆனாலும் இவை எல்லாம் நடந்துவிட்டால் .............

ரகு

உங்கள் நிலையில் தான் அநேக  தமிழர்கள் உள்ளனர்...

எமது குடும்ப உறவு ஒருவர்

காணாமல் போய்விட்டால்

அவர் மரணமடைந்துவிட்டார் என எழுதவருமா???

அந்த நிலையில் தான் நாம் எல்லோரும்...

விருப்பம் அல்லது ஆசை  என்பதற்கும்

நியத்துக்கும்  பொருத்தமில்லாது இருக்கலாம்

ஆனால் இரண்டும் எம்முள் வாழ்பவை..

என்னைப்பொறுத்தவரை

தமிழரின்

யேசுவும் அவரே

முருகனும் அவரே...

இவர்களுக்கு எப்படி மரணம் வரும்.....

எம்முடன் வாழவில்லையா....?

தலைவரைப்பற்றி  அண்மையில் ஒரு கவிதை படித்தேன்

பிரபாகரன்

வழித்துணையல்ல

வழியே  அவர்தான் என்று

வழிக்கு எப்படி மரணம் வரும்...??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

நான் யோசிப்பதை எப்படி உங்களால் எழுத முடிந்தது?

உண்மை, தலைவர் அவர்கள் உயிருடன் இருப்பதினால்தான் என்னும் தடையை நீக்க பயப்படுகின்றார்கள் சிறிலங்காவும் அவர்களின் கூட்டாளிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பாடல் அதிகம் இல்லாத 60 வருடங்களுக்கு முன்னர் நடந்த மர்மமான நிகழ்வு போன்று இந்த நவீன காலத்திலும் மர்மத்தை நீட்டிக்க விரும்புவர்களினால் வரையப்பட்ட கட்டுரை.

அவர் இருக்கிறாரா ,இல்லையா  என்று நாம் ஆராய்ச்சி செய்து பக்கங்களாக எழுதி தொலைப்பதை விட  ,தேசியத்தலைவரை தேடுவதை விட , அவர் எமக்கு தந்த பாரிய பொறுப்பை ,வரலாற்றுகடமையை சிறப்புற செய்பவர்களாக  ,செயல்படுபவர்களாக ,எம்மை நாமே  அமைத்துகொள்ளனும் .......அதுவே  எம் தேசியத்தலைவரின் சிந்தனை வழியாக  தற்போதைய காலத்தில் ,யுகத்தில் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் வடிவம் மாறிய எம் போராட்டத்தின் மூலம் எம் உரிமையை நாம் பெற்றுக்கொள்ள வழி சமைக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிரபாகரன் எனும் மனிதனது இறப்பென்பது வெறுமனே ஒரு தனி மனிதனது இறப்பென்று பார்க்கப்படாமல் ஒரு சமூகத்தினது வீழ்ச்சியாகப் பார்க்கப்பட்டு விடும் என்கிற அச்சத்தினாலேயே பலர் அவர் இன்னும் இருக்கிறார் என்று நம்புவதாக எனக்குப் படுகிறது. இப்படி நான் எழுதுவதால் அவர் இறந்துவிட்டார் என்று நான் நம்புவதாக நினைத்துவிட வேண்டாம். அவர் உயிருடன் இருந்தால் எல்லோரையும்போலவே நானும் நிச்சயம் மகிழ்வேன்.

எமது விருப்பங்களுக்கும், யதார்த்தங்களுக்குமிடையே எப்போதும் பாரிய இடைவெளி இருந்துகொண்டே வருகிறது. ஆனால், சிலவேளை நாம் நடக்கமுடியாதவை என்று நம்புபவை கூட நடந்துவிடுகின்றன. அதுபோலத்தான் பிரபாகரன் எனும் மனிதனது வாழ்வென்பதும் இருந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன். இது நடப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் பற்றியோ அல்லது நிகழ்தகவு பற்றியோ மனம் யோசிக்க இன்றுவரை மறுத்து வருகிறது.

-----

அருமையான, யதார்த்தமான கருத்து... ரகுநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பாெறுத்தவரை, எதிரியானவன் அன்று நடந்து காெண்ட விதமும் இன்று நடந்து காெள்ளும் விதமும் தலைவரின் இருப்பு உறுதியென்கிறது. நான் சாெல்லவில்லை. எதிரியின் செயற்பாடுகள் அப்பிடி நம்ப வைக்குது. அவா் இருந்தால் எங்கிருந்தாலும் நல்லாயிருக்காேணும். ஆயனில்லா மந்தைகளாய் அலையிறாேம். கண்ட கண்ட ஓநாயெல்லாம் ஊளையிடுது எங்களைப்பாத்து.

  • கருத்துக்கள உறவுகள்

5 வருடம் கழிந்தும் இன்னும் இருக்கிறார் / இறந்துவிட்டார் எனும் நிலையை விட்டு நகரவில்லை.

நான் நம்புகின்றேன் தேசியத்தலைவர் உயிருடன்தான் இருக்கின்றார் என்று அதை ஐய்ந்து வருடங்கள் கடந்தும் உறுதிப்படுத்தும் வகையிலையே எதிரிகளும் அவர்களின் செயற்பாடும் மேலும் அமைந்துள்ளது  

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பாடல் அதிகம் இல்லாத 60 வருடங்களுக்கு முன்னர் நடந்த மர்மமான நிகழ்வு போன்று இந்த நவீன காலத்திலும் மர்மத்தை நீட்டிக்க விரும்புவர்களினால் வரையப்பட்ட கட்டுரை.

நாங்கள் நவீனம் ஆனவர்கள் என்றும் அவ்வப்போது சிலர் அறைகூவி வருவதால் மட்டும் மர்மங்கள் மறைந்து விட போவதில்லை.
எனது செல்போனில் ஒரு விமானத்தின் எண்ணை அழுத்தினால் அது உலகில் எந்த இடத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் பார்க்கமுடிகிறது.
இருந்தும் மலேசிய விமானம் 370 மாயமாகி  போய்விட்டது. 
 
நவீன தொழில் தொடர்பாடல் காலத்தில் வாழ்பவர்கள். முல்லைத்தீவு மூலைக்குள் நடந்த விடத்திற்கு விடுப்பு அவிழ்த்து மாஜிக் காட்டாமல்.
நவீன தொழில் நுட்பத்துடன் தான் எங்காவது கிடந்தால் இங்கே கிடக்கிறேன் என்று குறைந்தது 30 நாள்களுக்கு சிக்னல் அனுப்பி கொண்டிருக்கும் நாவீன விமானத்தின் மர்மத்தை...........
நவீன தொடர்பாடல் செய்து விட்டால் ... பலருக்கு உதவியாக இருக்கும். 

நான் கருத்தை எழுதும்போது இந்த மலேசிய விமானக் கதையை யாராவது ஒரு புத்திசாலி கொண்டுவருவார் என்று எதிர்பார்த்தேன். அது பலித்துவிட்டது!

தலைவருடன் எந்த தொடர்பும் இல்லையென்பதால் அவர் நம்ம துளசிப் பொண்ணு மாதிரி கடலுக்கடியில் இருக்கின்றார் என்று நினைத்துக்கொள்ளலாம் என்றும் வாதத்திற்குச் சொல்லலாம்.

கட்டுரை சொல்லவந்த விடயம் தலைவர் விடயத்தில் இன்னும் அவிழ்க்காத பல மர்மங்கள் உள்ளன என்பதுதான். அது உண்மை என்று ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் இருக்கின்றார் என்ற மர்மக்கதையை அல்ல.

அவர் இருந்த காலத்தில் அவரால் முடிந்ததை செய்தார், இன்று அவரில்லை நம்மால் முடிந்ததை செய்வோம். திரும்பவம் அவர் வந்துதான் செய்யவேண்டும் என்றிருந்தால் எங்களுக்கு விடுதலை ஒரு கேடா? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கருத்தை எழுதும்போது இந்த மலேசிய விமானக் கதையை யாராவது ஒரு புத்திசாலி கொண்டுவருவார் என்று எதிர்பார்த்தேன். அது பலித்துவிட்டது!

தலைவருடன் எந்த தொடர்பும் இல்லையென்பதால் அவர் நம்ம துளசிப் பொண்ணு மாதிரி கடலுக்கடியில் இருக்கின்றார் என்று நினைத்துக்கொள்ளலாம் என்றும் வாதத்திற்குச் சொல்லலாம்.

கட்டுரை சொல்லவந்த விடயம் தலைவர் விடயத்தில் இன்னும் அவிழ்க்காத பல மர்மங்கள் உள்ளன என்பதுதான். அது உண்மை என்று ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் இருக்கின்றார் என்ற மர்மக்கதையை அல்ல.

இதைவிடவும் நூறு மர்ம கதைகள் நாளும் நாளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன....
எல்லோருக்கும் தெரிந்த அண்மையில் நடந்து ஞாபகத்தில் இருக்க கூடியது என்பதால்தான் அதை எழுதினேன்.
 
தலைவரும் பொட்டம்மானும் அம்புலன்ஸ் வண்டியில் தப்ப முயன்றபோது தாம் அவர்களை கொலை செய்துவிட்டதாக இராணுவ இணையதளம் முதல் கொண்டு மே 17இல் செய்தி போட்டார்கள்.
தலைவர் இறந்து விட்டார் என்ற செய்தியை புலிகள்தான் (நடேசன் அண்ணா) அவர்கள்தான். துரோகிகள் ஆகிவிட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு செய்தி பரப்பினார். அந்த தகவலை ஆதாரமாக வைத்தே அந்த கட்டுகதையை இந்திய- சிங்கள கூலிகள் மேல்படி செய்தியை உலாவ விட்டார்கள். அன்று இரவு என்ன நடந்தது என்பது ஆதாரமாக யாருக்கும் தெரியாது.
இப்போ இருப்பது எல்லாம் வெறும் ஊகம்தான்.
மே 17  தலைவர் இருக்கும்போது .... தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை ஏன் புலிகள் கசியவிட்டார்கள்??
 
மே 19 கைது செய்யபட்ட பல தளபதிகள் தலைவர் எங்கே என்று கேட்டுதான் சித்திரவதை செய்தார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களை நானும் நீங்களும் சந்தித்தே இருக்கிறோம்.
முள்ளிவாய்க்காலில் தலைவரை கண்டவர்கள் யாருமே இல்லை ஆதாரமாக சொல்வதற்கு.
 
தலைவர் இப்போதும் உயிருடன் இருக்கிறார் என்று நான் சொல்லவரவில்லை.
ஆனால் நாங்கள் நவீனமானவர்கள் என்று கதை விடுபவர்களின் கதைகளும் வெறும் கட்டுகதைகள்தான் என்பதுதான் எனது சுட்டிக்காட்டல்.
குறிப்பாக நான் இலக்கு வைத்ததே உங்கள் கருத்துக்கு பச்சை குத்தியவர்களைதான்.
கற்பனை கதைகளுடன் உண்மை பேச வரட்டும் என்று எதிர்பார்த்தேன். 
 
(உண்மையை சொல்லபோனால் மலேசிய 370 விமானத்தில் எந்த மர்மமும் இல்லை.
 
அடுத்தடுத்த நாட்களில் இந்த கொம்பனியில் THE CARLYLE GROUPஎன்ன மாற்றம் நடக்கிறது என்பதை கூகிளில் தேடினாலே போதுமாக இருக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இன்னும் பல கதைகள் இருக்கின்றன... இங்கிருக்கும் கேபி கூட டம்மி தான்!! (இன்ரபோல் தோடி கொண்டிருக்கும் முக்கியமானவர், இந்தியாவும் தேடுது.)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இன்னும் பல கதைகள் இருக்கின்றன... இங்கிருக்கும் கேபி கூட டம்மி தான்!! (இன்ரபோல் தோடி கொண்டிருக்கும் முக்கியமானவர், இந்தியாவும் தேடுது.)

போலி கேபியா சூப்பர் :)வேறு என்ன கதை உலாவுது கொஞ்சம் எடுத்து விடுறது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவரை சந்தித்தபோது பல கடந்தகால நினைவு பகிர்வு......................

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

 https://www.youtube.com/watch?v=2Y7tsFZzvlA

என்ன... அற்புதமமான வரிகள்!!!!

"சோத்துக்காக, வாழ்கிறவன் சுருண்டு படுக்கிறான்.
சுரணை, கெட்டவன் எதிரிக்காக.... விழுந்து கிடக்கிறான்.
சீற்றம் மிக்க, தமிழன் தான்... புலியை, வளர்க்கிறான்.//

வருவாண்டா......
பிரபாகரன்,  மறுபடியும்................

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

5 வருடம் கழிந்தும் இன்னும் இருக்கிறார் / இறந்துவிட்டார் எனும் நிலையை விட்டு நகரவில்லை.

இன்னும் பத்து ஆண்டுகள் கடந்தும் இதே பல்லவிதான் தொடரப்போகுது என்பது மனவருத்தம் தரும் விடயம்.

தலைவருடன் எந்த தொடர்பும் இல்லையென்பதால் அவர் நம்ம துளசிப் பொண்ணு மாதிரி கடலுக்கடியில் இருக்கின்றார் என்று நினைத்துக்கொள்ளலாம் என்றும் வாதத்திற்குச் சொல்லலாம்.

அடப்பாவி கிருமி அண்ணா. எதை எதனுடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தையே இல்லையா? :o எனது location கடலுக்கடியில் என்று சும்மா தமாஷாகவே போட்டிருக்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இல்லை, முன்பும் ஒருதரம் நீங்கள் சண்டை முடிந்த பின் நாட்டை விட்டு வெளிகிட்ட ஆள் எண்டு சொல்லியிருக்கிறியள்.

நான் மேலே சொன்ன ராஜதந்த்ஹிர நகர்வில் உங்களுக்கும் ஒரு பங்கிருப்பதாயே படுகிறது. அநேகமாக அடுத்ததாய் ஹிருணிக்காவை தூக்கீட்டு அந்த இடத்தில் உங்களைப் போடுவதுதான் பிளானாயிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.