Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குநர் பாலச்சந்தர் காலமானார்

Featured Replies

அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது.
 
சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் தந்த அற்புதமான மேதை.
 
 
கொழும்பில் ஒரு முறை தொலைக்காட்சி நாடகம் எடுக்க வந்திருந்தார் என்று நினைக்கிறேன். அப்போது பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தார். அங்கு எம்மவர் பக்தியோடு கும்பிடும் அழகைப் பார்த்து  அவர் பின்னர் சொன்னது " உலகில் பக்திமான்கள் இலங்கைத் தமிழரே"
 
மனமார்ந்த அஞ்சலிகள்.
 
 
 
அவள் ஒரு தொடர் கதை, கையளவு மனசு என்பன மறக்கமுடியாது.
 
 
 
https://www.youtube.com/watch?v=RSICeyfMSO0
 
 
 
https://www.youtube.com/watch?v=-zbde_N8P_4
  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் சிகரம் திரு கே. பாலச்சந்தர் அவர்களின் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது. சினிமா மூலம் எல்லோராலும்  சாதிக்கமுடியாது.  இவர் சாதனையாளர். சமூகப்பிரச்சனைகளை அதிலும் சர்ச்சைக்குரிய கதைகளைக் கதாப்பாத்திரங்களை சினிமா என்னும் மொழியால் எல்லோரிடமும் இலகுவாக எடுத்துவந்தவர். இவருடைய தயாரிப்புகள் எதனையும் விட்டு வைத்ததில்லை தேடித்தேடி பார்ப்பேன் ஆரம்ப காலத்தில் இவருடைய பெயரை அறியாமலே இவருடைய தயாரிப்புகளில் மனம் லயித்து இனறு வரைக்கும் இவருடைய ஆக்கங்களைத் தேடித் தேடி பார்ப்பதில் அலாதி பிரியம்.

 

ஈடு இணையற்ற மாபெரும் கலைஞனின் ஆத்மா சாந்தியுற பிரார்த்திக்கிறேன்.

 

prayer114.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் சிகரம் k. பாலச்சந்தருக்கு சிரம் தாழ்ந்து கண்ணீர் அஞ்சலிகள் செலுத்தும் அதே வேலை
அவர் எம் முன் படைத்த அழியாத திரைக் காவியங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் ..

நேற்று இரவு நான் பார்த்த திரைப்படம் " தப்புத்தாளங்கள்" :(

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

"அவள் ஒரு தொடர் கதையிலிருந்து"... சில பாடல்கள்.

 

https://www.youtube.com/watch?v=AGuuEpdDpTY

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=cQ7tWwPwgto

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=gJQ-grJjRgU

 

 

பாலசந்தரின் படங்கள் நாடகங்கள் அனேகமாக எல்லாம் பார்த்தேன் என்றுதான் நம்புகின்றேன் .ஒரு சிலவற்றை தவிர மற்றவை எல்லாம் இன்றும் கண்ணில் நிழலாய் ஆடுகின்றன .முதல் தரம் தியேட்டரில் திரையிடும் போது பார்த்தவற்றை விட  இரண்டாம் மூன்றாம் தரம் திரையிடும் போது பார்த்த படங்கள் தான் அதிகம் .

நான்  பார்த்த முதல் பாலசந்தர் படம் பாமா விஜயம் .நகைச்சுவை படம் என்று பெற்றோர் கூட்டிச்சென்றார்கள் .நடிகை பாமாவின் விஜயத்தால் பாலையா குடும்பம் படும்பாடுதான் படம் .வரவு எட்டணா செலவு பத்தணா தான் செய்தி .

பின்னர் பட்டியல் எதிர்நீச்சல் ,இருகோடுகள் ,காவிய தலைவி ,நூற்றுக்கு நூறு ,புன்னகை ,வெள்ளிவிழா என்று தொடரும் .இவை அனைத்தும் நாடக தன்மையுடைய கதை வசனத்தால் மட்டும் பிடித்த படங்கள் .

அடுத்து வேறொரு பரிமாணத்தில் அரங்கேற்றம் வந்தது .மிகவும் உணர்சி வசப்பட்டு இந்த சமூகத்தை பார்த்து துப்பவேண்டும் என்று மனதில் ஒரு நினைப்பை ஏற்படுத்திய படம் அது .தொடர்ந்து எனக்கு மிகவும் பிடித்த சொல்லத்தான் நினைக்கின்றேன் ,அவள் ஒரு தொடர் கதை ,அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு , அவர்கள் ,நிழல் நிஜமாகின்றது  .இவற்றை பார்த்து நான் கனவில் மிதந்த காலம் அது .எனது உடுப்புகள் பல அதில்  நடித்த கமலை பார்த்து தைத்தவை . அந்த நேரம் தெய்வம் தந்த வீட்டையும் ,அதிசய ராகத்தையும் ,கம்பன் ஏமாந்தானையும் முணுமுணுக்காத வாய்களே உண்டோ .

மன்மதலீலை ஒவ்வொரு வரியும் எனக்கு பாடம் . "இடுப்பில ஒரு மச்சம்" ,"அது ரொம்ப முக்கியம்" அடிக்கடி சொல்லித்திரிந்த வரி .

தப்பு தாளங்கள் ,நூல்வேலி,அக்கினி சாட்சி ,தண்ணீர் தண்ணீர் ,அச்சமில்லை அச்சமில்லை ,வறுமையின் நிறம் சிவப்பு என்று சமூக அவலங்களை அப்படியே தனக்கே உரிய  அழகியலில் பாணியில் படைத்தார் .  இவரது பல படங்களில் நடித்த சரிதா என்ற நடிகை இன்று வரை கண்களில் கண்ணகியாக நிற்கின்றார் .

இடையில் நினைத்தாலே இனிக்கும் ,தில்லுமுல்லு இரண்டும் இளமையும்  புதுமையாகவும்  வந்தது.

ஏக் துஜே கேலியே ,புன்னகை மன்னன் ,உன்னால் முடியும் தம்பி ,அழகன் என்றும் இனியவை .

இளையராஜாவின் அற்புதத்தால்  செதுக்கப்பட்ட  சிந்துபைரவி பார்த்த அன்று அந்த கலைஞனை கண்டு கதைத்தது காலகாலம்  அவரது சினிமாக்கள் போல மறக்க முடியாத நினைவுகள் எனக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கியவர்.பெரும்பிரபலங்கள் இல்லாமலே வெற்றிப்படங்களாக இயக்கியவர்.நடிகர்களுக்காக கதை என்றில்லாமல்கதைக்காக நடிகர்களைத் தெரிவு செய்பவர்.இவருடைய சில படங்கள்இந்தியாவில் தோல்வி அடைந்தாலும் இலங்கையில் வெற்றி அமைந்திருக்கின்றன.படத்தில் வரும் பாடல்கள் கதையோடுஒட்ட்டிக்கொண்டுருக்கும்.ஆழ்ந்த இரங்கல்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை:  இயக்குனர் கே.பாலசந்தரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

kb%202.jpg

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் நேற்று மாலை காலமானார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

kbc1.jpg

பாலசந்தரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் திரைப்படத் துறையினரும் இரங்கல் தெரிவித்தனர்.

இறுதி ஊர்வலம்

மறைந்த இயக்குனர் பாலசந்தர் இறுதி ஊர்வலம் அவரின் இல்லத்திலிருந்து இன்று மதியம் 2.45 மணி அளவில் தொடங்கியது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான திரை உலகத்தினர்  கலந்துகொண்டனர்.

kbc2.jpg

பாலசந்தரின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்த அவரது உடல், மாலை 5.30 மணி அளவில் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அவரது உறவினர்கள் கலந்துகொண்டனர்.

kb%201.jpg

 இயக்குனர் பாலசந்தரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டன.

Untitled%207%28306%29.jpg

 

அஞ்சலி

முன்னதாக கே.பாலசந்தரின் மறைவைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் அவர் கூறுகையில், ''இயக்குநர் கே.பாலச்சந்தரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

Untitled%206%28324%29.jpg

கே.பி.யை இழந்ததால் என்னையே நான் இழந்ததாக வருந்துகிறேன். கே.பாலச்சந்தர் என்னை ஒரு நடிகராக பார்த்ததைவிட மகனாகவே பார்த்தார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.

Untitled%208%28261%29.jpg

மேலும் கவிஞர் வைரமுத்து, ஏ.வி.எம். சரவணன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன், ரவி ராகவேந்திரா, நடிகைகள் ஸ்ரீப்ரியா குஷ்பு, மனோரமா, ராதிகா, நடிகர்கள் விஜய், அர்ஜூன், மோகன்,பிரதாப் போத்தன், விவேக், இயக்குனர்கள் பி.வாசு, மவுலி, கே.எஸ். ரவிக்குமார், ஹரி, எஸ்.ஜே. சூர்யா, எஸ். பி. சரண், எஸ்.ஏ. சந்திர சேகர், மனோபாலா,

 

பத்திரிகையாளர்கள் சோ, மதன், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், எம்ஜிஆர் முன்னேற்றக் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்,  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,  உள்பட திரையுலகினர் ஏராளமானோர் இயக்குனர் கே.பாலச்சந்தரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=36531

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=JMTJEFBkRnY

 

பலர் வாழ்க்கையின் நிம்மதியை விளையாடிய கதையை சொல்லிய படப்பாடல் இது.....

நாளைய சந்ததியிலும் இப்படியான சம்பவங்கள் நடக்கும்.

உண்மையில் பாலச்சந்தர் சமூகத்தின் அட்டவதானி.

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கலைஞருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு கலைஞனை செதுக்குவதில் இவருக்கு நிகர் இவர் தான்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.