Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை - இரா.சம்பந்தன்

Featured Replies

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு, மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும், தாமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நேற்று தொலைபேசியில் கடுந்தொனியில் உரையாடியதையடுத்து, மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இன்று அனந்தி சசிதரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை பகிரங்கமாக விமர்சிக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தாம் மாவை சேனாதிராசாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவை சேனாதிராசாவை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அவர் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அவர் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுடன் பேசியிருப்பார் என்று நம்புகிறேன்.

நாம் வடக்கு மாகாணசபையில் 30 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம்.அவர்களில் இரண்டு மூன்று பேர் தான் இத்தகைய நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

ஆனால் அதற்கு அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/36579/57//d,article_full.aspx

  • Replies 74
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரையும் வேண்டாம் என்றால் பேசாமல் இருக்கலாம்

இவரை ஆதரிப்போம்

ஆதரித்து பிரச்சாரம் செய்வோம் என்றால் கேள்வியும் எதிர்நிலைகளும் வரும்

பதில் சொல்லணம் யயா

அதைவிடுத்து வெருட்டு எதற்கு..?? :(

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் செய்கைகள்...

கூட்டமைப்பை பலகீனப் படுத்த இந்தியா, ஸ்ரீலங்கா போன்றவற்றால்... பயிற்றுவிக்கப் பட்டவர் போல் தெரிகிறது.

இப்பத்தான் ஒரு தலைவராக தெரிகின்றார்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் ஒரு தலைவராக தெரிகின்றார்  :icon_mrgreen:

உங்களுக்கு.... தலைவராக தெரிந்தவர்களின் பட்டியல், எமக்கு தெரிந்தது தானே......

அவர்களால்..... கூரை ஏறி, கோழியும் பிடிக்க முடியாது. :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு.... தலைவராக தெரிந்தவர்களின் பட்டியல், எமக்கு தெரிந்தது தானே......

அவர்களால்..... கூரை ஏறி, கோழியும் பிடிக்க முடியாது. :D  :lol:

எந்த தலைவர்தான் கூரையில் கோழி பிடித்தார்? எல்லாரும் கூரையில் ஏறியதுடன் சரி. கூரையில் இருந்த காலம், மற்றும் கூரையில் இருந்து தள்ளி விடப்பட்டவர்களின் எண்ணிக்கையில்தான் வேறுபாடு. கோழி இன்னமும் கூரையில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க ஜனநாயகம்.

மூன்று பேர் சேர்ந்து யாரோ எடுத்த முடிவை அறிவிக்க 300 பேர் அதை ஆதரிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் ஒரு தலைவராக தெரிகின்றார்  :icon_mrgreen:

அப்படி தனது முடிவில் 100 மடங்கு வலுவாக இருந்த ஒருத்தரைத்தான் நாங்களும் தலைவர் என்கின்றோம்.. :icon_mrgreen:  :icon_mrgreen:

உங்களுக்கு.... தலைவராக தெரிந்தவர்களின் பட்டியல், எமக்கு தெரிந்தது தானே......

அவர்களால்..... கூரை ஏறி, கோழியும் பிடிக்க முடியாது. :D  :lol:

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாவிட்டாலும் பராவாயில்லை தான் தப்புவதற்கு மற்றவர்களை பலி கொடுக்கமாட்டார்கள் . :(

அப்படி தனது முடிவில் 100 மடங்கு வலுவாக இருந்த ஒருத்தரைத்தான் நாங்களும் தலைவர் என்கின்றோம்.. :icon_mrgreen:  :icon_mrgreen:

பிழையான முடிவுகளை எடுத்துவிட்டு அதில் 100 மடங்கு வலுவுடன் இருந்து என்ன பிரயோசனம் . :lol:

கட்சி அரசியல் என்றால் இருக்கும், வேடாமென்றால் விலகலாம் அல்லது எதிரணியோடு சேரலாம்

தகுதி தராதரம் அற்றவர்களை தம்மோடு சேர்க்கும் போது இப்படியான பிரச்சனைகள் வரும். ஆனந்தியை என்ன தகுதியில் சேர்த்தார்களோ தெரியவில்லை. அறிவில்லாத  "எழிலன்" (??) செய்த காரியங்களின் பலன் எல்லருக்கும் தெரியும். இப்ப இவவின் முறை போல் இருக்கிறது.
 
பொது மக்களுக்கு அழிவுக‌ளை ஏற்படுத்துவதன் மூலம் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் புலிகள் தலமையின் சிந்தனைப் போக்கு இவர்களிடமும் இருக்கிறது. 
 
சம்பந்தன், மாவை போன்றவர்கள் இவர்களை கூட்டமைப்பில் இருந்து விலத்த வேண்டும். தமிழர்களின் எதிர்காலத்தை தம் அறிவீனத்தாலும், குறுகிய மனப்பான்மையாலும், சுய சிந்தனையில்லாமல் பிற அறிவீலிகளின் தூண்டுதலாலாலும் சிதைக்கும் இவர்கள் இனத்தின் எதிரிகளே.
 
தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் இனப்படுகொலையாளனை வெல்ல வைப்பது எப்பேர்ப்பட்ட இனத்துரோகம். தேர்தல் புறக்கணிப்பு என்று சொல்லிக் கொண்டு மஹிந்தவை வெல்ல வைப்பதுதான் இவர்களின் நோக்கம். 
 
முள்ளிவாய்க்கால் படுகொலையில் புலிகள் தலமையின் பங்கும் கணிசமான அளவில் உள்ளது. புலிகள் தலமை நினத்திருந்தால் முள்ளிவாய்க்கலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளில் பெருந்தொகை உயிருடன் தப்பியிருக்கலாம். இதில் எழிலனின் பங்கும் உள்ளது. 
 
கூட்டமைப்பு இவர்களை அகற்ற வேண்டும். மக்களும் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், இவர்களால் ஒர் எல்லைக்கு அப்பால் சிந்திக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா பழையபடி முதல்ல இருந்தா

முடியல்ல :(:D

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் சம்பந்தன் பெரிய அறிவாளியோ? அவர் இதே பதவியில் இருக்க தானே இனப்படுகொலை நடந்தது. வென்றால்..மகிந்த போர்குற்ற அடிப்படையில் தண்டிப்படவே மாட்டார்.அதே போல் நிறைவேற்று அதிகார முறை இருந்தாலும் நமக்கு பலன் இல்லை.இல்லை என்றாலும் பயனில்லை.60 வருட சிங்கள அரசியலை பார்த்தால் இது புரியும். புலிகள் தலைமை செய்யாததை ஏன் செம்மணியில் சாகவிட்டீர்கள்.??????

  • கருத்துக்கள உறவுகள்

தகுதி தராதரம் அற்றவர்களை தம்மோடு சேர்க்கும் போது இப்படியான பிரச்சனைகள் வரும். ஆனந்தியை என்ன தகுதியில் சேர்த்தார்களோ தெரியவில்லை. அறிவில்லாத  "எழிலன்" (??) செய்த காரியங்களின் பலன் எல்லருக்கும் தெரியும். இப்ப இவவின் முறை போல் இருக்கிறது.
 
பொது மக்களுக்கு அழிவுக‌ளை ஏற்படுத்துவதன் மூலம் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் புலிகள் தலமையின் சிந்தனைப் போக்கு இவர்களிடமும் இருக்கிறது. 
 
சம்பந்தன், மாவை போன்றவர்கள் இவர்களை கூட்டமைப்பில் இருந்து விலத்த வேண்டும். தமிழர்களின் எதிர்காலத்தை தம் அறிவீனத்தாலும், குறுகிய மனப்பான்மையாலும், சுய சிந்தனையில்லாமல் பிற அறிவீலிகளின் தூண்டுதலாலாலும் சிதைக்கும் இவர்கள் இனத்தின் எதிரிகளே.
 
கூட்டமைப்பு இவர்களை அகற்ற வேண்டும். மக்களும் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

சம்பந்தர் 77ம் ஆண்டிலிருந்து  கிட்டத்தட்ட 40 வருசமாகப் பாராளுமன்றத்திற்குச் சென்று வருகின்றார்.அகிம்சைவாதியான அவர் தூர நோக்குடன்  செல்லும் பாதையின் முடிவு  இன்னும் அவர் கண்ணுக்கே தெரியவில்லை.

இதற்குள் நீங்கள் மற்றவர்களைக் குறுகிய சிந்தனையாளர்கள் என வர்ணிப்பதும் அறிவில்லாதவர்கள் என வர்ணிப்பதும் அசிங்கமாக இருக்கின்றது.

விடுதலைப்போராளிகளின் தொடர்ச்சியான போராட்டமாகவே இன்றைய நிலையில் தமிழர்களின் அரசியல் போராட்டம்  இருக்கவேண்டுமே தவிர, 77 வரை செய்த ஒப்பந்த அரசியலும்  அதை வைத்து மக்களின் முதுகுமேல் சவாரி செய்யும் அரசியலும் இனிமேலும் எடுபடாது.

ஈசன் சம்பந்தன் பெரிய அறிவாளியோ? அவர் இதே பதவியில் இருக்க தானே இனப்படுகொலை நடந்தது. வென்றால்..மகிந்த போர்குற்ற அடிப்படையில் தண்டிப்படவே மாட்டார்.அதே போல் நிறைவேற்று அதிகார முறை இருந்தாலும் நமக்கு பலன் இல்லை.இல்லை என்றாலும் பயனில்லை.60 வருட சிங்கள அரசியலை பார்த்தால் இது புரியும். புலிகள் தலைமை செய்யாததை ஏன் செம்மணியில் சாகவிட்டீர்கள்.??????

பழைய 60 வருட வரலாறு சொல்வது போல்தான் புதியவை நிகழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இப்ப உள்ள சூழ்நிலைகள் பல நம்பிக்கைகளைத் தந்திருக்கிறது. அதற்கேற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஒரு 60 வருசம் இலங்கை போர்க்குற்ற விசாரணை பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கலாம்.
 
செம்மணி பற்றி...
 
செம்மணி என்பது பாகம் இரண்டு. பாகம் ஒன்று முல்லைத்தீவு முகாமில் சரணடைந்த நூற்றுக் கணக்கான சிங்களச் சிப்பாய்களைக் கொன்றது.
 
இதுக்கும் சம்பந்தர் தான் காரணம் என்று சொல்ல மாட்டீங்கள் தானே !!

சம்பந்தர் 77ம் ஆண்டிலிருந்து  கிட்டத்தட்ட 40 வருசமாகப் பாராளுமன்றத்திற்குச் சென்று வருகின்றார்.அகிம்சைவாதியான அவர் தூர நோக்குடன்  செல்லும் பாதையின் முடிவு  இன்னும் அவர் கண்ணுக்கே தெரியவில்லை.

இதற்குள் நீங்கள் மற்றவர்களைக் குறுகிய சிந்தனையாளர்கள் என வர்ணிப்பதும் அறிவில்லாதவர்கள் என வர்ணிப்பதும் அசிங்கமாக இருக்கின்றது.

விடுதலைப்போராளிகளின் தொடர்ச்சியான போராட்டமாகவே இன்றைய நிலையில் தமிழர்களின் அரசியல் போராட்டம்  இருக்கவேண்டுமே தவிர, 77 வரை செய்த ஒப்பந்த அரசியலும்  அதை வைத்து மக்களின் முதுகுமேல் சவாரி செய்யும் அரசியலும் இனிமேலும் எடுபடாது.

வாத்தியார் ஐயா,
 
தமிழர்களின் அரசியல் போராட்டம் என்று இங்கே சொன்னீர்களே..
 
1. அது என்ன ?
2. அது எங்கே நடக்கிறது ?
3. எப்படி நடக்கிறது ?
 
என்று  சிறு விளக்கம் தரமுடியுமா ?   :D
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வந்தால் சர்வதேசம் எங்களுக்கு சார்பாக முடிவெடுக்கும் அது வரைக்கும் எல்லா அழுத்தங்களையும் களத்தில் உள்ளவர்கள் பொறுக்க வேணும் மற்றும் அது வரைக்கும் அழு மூஞ்சியாக மக்கள் இருக்க வேணும் என்று இங்கிருந்து கருதுவது மகா துரோகம்.மற்றது மைத்திரி வந்தாலும் சுகந்திரம்(நாம் எதிர் பாக்கும்)கிடைக்காது.கூட்டமைப்பு சொன்னால் என்ன சொல்லா விட்டாலும் மக்கள் ஆட்ச்சி மாற்றத்தை விரும்புது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் 50 வருடமாக அரசியலில் இருகடகிறார். தமிழீழப் பிரகடனம் செய்த போது தடுத்திருந்தால் இவ்வளவு அழிவும் வந்திருக்காதே ,பதவிக்காக தமிழீழந்தான் ஒரே துpர்வு என்று முழக்கமிட்டு இளைஞர்ககைளைக் கொம்பு சீவுp விட்டு குப்புறப் படுத்ததன் பலன்தான் இவ்வளவு அழிவுக்குக் காரணம். சம்பந்தரின் தiமை தமிழ் மக்களுக்கு எந்த விமோசனத்தையும் தராது. சம்பந்தர் அனந்தியையும்,ரவிகலனையும்,சிவாஜிலிங்கத்தையும்,மற்றும் முரண்படும் எல்லோரையும் வெளியேற்றிவிட்டு ஆனந்தசங்கரியையும்,டக்ளசையும்,கருணா,பிள்ளையானையும் தன்னோடு அரசியல் செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய 60 வருட வரலாறு சொல்வது போல்தான் புதியவை நிகழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இப்ப உள்ள சூழ்நிலைகள் பல நம்பிக்கைகளைத் தந்திருக்கிறது. அதற்கேற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஒரு 60 வருசம் இலங்கை போர்க்குற்ற விசாரணை பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கலாம்.

செம்மணி பற்றி...

செம்மணி என்பது பாகம் இரண்டு. பாகம் ஒன்று முல்லைத்தீவு முகாமில் சரணடைந்த நூற்றுக் கணக்கான சிங்களச் சிப்பாய்களைக் கொன்றது.

இதுக்கும் சம்பந்தர் தான் காரணம் என்று சொல்ல மாட்டீங்கள் தானே !!

முல்லைத்தீவு முகாமில் சரண்டைந்த இராணுவத்தினர் பற்றிய விபரங்களை இங்கே பதிந்து விடுங்கள் ஈசன் (செவி வழிக்கதை வேணாம்)
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஐயா,
 
தமிழர்களின் அரசியல் போராட்டம் என்று இங்கே சொன்னீர்களே..
 
1. அது என்ன ?
 
இது தெரியாமலா நீங்கள் விடுதலைப் புலிகளைப் பற்றி விமர்சனம் செய்கின்றீர்கள்.
ஆங் சான் சூ கீ மியான்மாரில் நடத்துப் போராட்டம்,

மண்டேலா தென்னாபிரிக்காவில் நடத்திய போராட்டம்,

மகாத்மா காந்தி இந்தியாவில் நடத்திய போராட்டம் என்பன அரசியல் போராட்டத்திற்கு உதாரணம். கூட்டமைப்பில் எத்தனை பேருக்கு இவர்களின் வாழ்க்கை வரலாறு தெரியுமோ தெரியாது
 
2. அது எங்கே நடக்கிறது ?
 
நடக்க வேண்டிய இடத்தில் நடக்காதபடியால்த்தான்

ஈழத் தமிழ் மக்கள் நாடுவிட்டு நாடு தேடும் நிலையில் இருக்கின்றார்கள்....

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்பு    இன்றும்  அகதிகளாக மக்கள்...

சொந்த நிலங்களை இன்றும் ராணுவத்திற்கு விற்கும் நிலை...

போர் முடிந்தது என்று சிங்கள இனவாதிகள் கூறும் அதேவேளை வட கிழக்கில்  முழத்திற்கொரு ராணுவப்பிரசன்னம்....  

சிங்களம் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தங்கள் இனப்பரம்பலை விரிவாக்குதல்....

போன்ற நிகழ்வுகள் ஈழத்தில் நடக்கின்றன.

நாங்கள் தான் மக்களின் பிரதி நிதிகள்  எனக்கூறும் கூட்டமைப்பினரால் இவற்றிற்கு எதிராக ஏதாவது ஒரு செயற்பாடு நிகழ்ந்திருக்கின்றதா?
 
3. எப்படி நடக்கிறது ?
 
ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம், கூட்டமைப்பு மக்களின் முதுகு மேல் சவாரி செய்யும் நிலையில் மீண்டும்  வந்திருக்கின்றது :icon_idea:
 
ஈசன், இவர்களால் ஒர் எல்லைக்கு அப்பால் சிந்திக்க முடியாது.

இதுதான் உண்மையான பதில் .

சம்பந்தரின் நடவைக்கைகள் சிலவற்றில் எனக்கு அதிருப்திகள் இருக்கின்றன எனினும் இந்தத் தேர்தலில் சம்பந்தர் மிகத் திறமையாக செயற்பட்டுள்ளார் . நிபந்தனையற்ற ஆதரவு என்பதனை நான் நம்பவில்லை ஆனால் அப்படித்தான் வெளியில் சொல்ல வேண்டும், 
இந்தத் தேர்தல் மகிந்தவை வெளியேற்றுவதற்கான தேர்தலாகத் தான் நான் பார்க்கிறேன் அதற்குள்ள ஒரே வழி மைத்திரியை ஆதரிப்பதுதான் , அதே சமயம் மைத்தியுடன்  உடன்பாடுகளை எட்டுவதன் மூலம் எமக்கான நண்மைகளை பெறமுடியும்.
மகிந்த இந்தத் தடவை வெற்றி பெற்றால் அவர் இன்னமும் 7 வருடங்களுக்கு ஆட்சி செலுத்தகூடிய நிலமை இருக்கிறது. அதன் பலாபலன்கள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
ஆனந்தி, ரவிகரன் , மற்றும் அவர்களை ஆதரித்து இங்கு கருத்து எழுதுபவர்களிடம் ஒரு கேள்வி,
நீங்கள் இந்தத் தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப் படவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிற்றீர்களா? அப்படியாயின் நாம் என்ன செய்ய வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாகாணசபை தேர்தலில் அனந்தி எழிலனின் மனைவி என்று தெரியாமலா வாக்களித்தார்கள்

முல்லைத்தீவு முகாமில் சரண்டைந்த இராணுவத்தினர் பற்றிய விபரங்களை இங்கே பதிந்து விடுங்கள் ஈசன் (செவி வழிக்கதை வேணாம்)

முல்லைத்தீவுத் தாக்குதலில் மொத்தமாகக் கொல்லப்பட்ட 1496 இராணுவத்தில் நூற்றுக் கணக்கானோர் பிடித்துச் செல்லப்பட்டதாக தப்பி வந்த இரண்டு இராணுவத்தினர் சொல்லிய தகவல்களை அப்பொது பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். 
 
தாக்குதலில் பங்கு பற்றியவர்கள் தான் இதை உறுதிப்படுத்த வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.