Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: ஆணையாளர் நாயகம்

Featured Replies

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: ஆணையாளர் நாயகம்
 
16-01-2015 03:51 AM
 
welik.jpg

-ஏ.பி.மதன்

விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்  சந்திரானந்த பல்லேகம, கூறினார்.

தமிழர் முன்னேற்றக்கழகத்தின் பிரதம அமைப்பாளர் வி.ஜனகனின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, மேற்கண்டவாறு கூறினார்.

அவர், தமிழ் அரசியல் கைதிகளின் முன்னால் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'உங்களின் ஏக்கம் எனக்கு நன்கு தெரியும். உங்கள் கண்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. நான் இந்தப் பதவியை ஏற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை காலமும் உங்கள் ஏக்;கங்களை சரியாக தீர்த்து வைக்க முடியவில்லை. காலமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை. ஆனால், இப்போது காலம் கனிந்திருக்கிறது.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். அந்த வழி நிச்சயம் உங்களுக்குப் பிறக்கும். புதிய மாற்றத்துக்காக அனைவரும் ஒத்துழைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஜனாதிபதியின் வெற்றியில் தமிழ் மக்களின் பங்கு அதிகமாகவிருக்கிறது. இதன்மூலம் அவர்கள் நல்லதொரு செய்தியையும் ஜனாதிபதிக்கு கூறியிருக்கிறார்கள். எமது உறவுகளை எங்களுடன் வாழ வழிசெய்யுங்கள் என்பதே அந்த செய்தி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவர்களின் ஆசையினை தீர்ப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறார். ஆகையினால், எதிர்காலத்தில் நிச்சயமாக நல்லது நடக்கும் என நம்புகிறேன்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் நீண்டகாலமாக இங்கிருக்கிறீர்கள். இவர்களின் நிலை தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன். அவர்களின் ஆலோசனைக்கமைய, உங்களின் விடுதலை துரிதப்படுத்தப்படும் என்ற உறுதியை இன்றைய தைத்திருநாள் பரிசாக உங்களுக்கு நான் வழங்குகிறேன்' என தெரிவித்தார்.

welik2.jpg

welik3.jpg

welik5.jpg

 

 

- See more at: http://www.tamilmirror.lk/137726#sthash.9OpbuE1a.dpuf

அப்பாடி எவ்வளவு நல்ல செய்தி .

  • கருத்துக்கள உறவுகள்

ஆணையாளர் நாயகம் கூறிய செய்தி தொடர்பில் புதிய அரசாங்கம் கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

Edited by வாலி

உடனடியாக செய்யுங்கள் அப்போதுதான் தமிழ் சிங்கள வேற்றுமையை களைய முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

TNA பகிரங்கமாக மைத்திரிக்கு ஆதரவு அளிக்காமல், மக்கள் மைத்திரிக்கு வாக்கு போடாமல் விட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

மிகவும் நல்ல செய்தி.வரவேற்க வேண்டிய செய்தி. இவர்களின் விடுதலை விரைவில் நடைபெறவேண்டும்.  ஆளும் வர்க்கத்தை என்றுமே பகைக்காமல் அவர்களுக்கு வாக்களித்து   நடப்பதே ஜனநாயகம். இதை 1950 ம் ஆண்டே எமது முன்னைய  தலைவர்கள் உணர்ந்து நடந்திருந்தால்  எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். எனினும் இந்த புதிய ஜனநாயகத்தை எமக்கு போதித்த சம்பந்தன் ஐயா அவர்களுக்கு  நாம் அனைவரும் கடமைபட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

TNA பகிரங்கமாக மைத்திரிக்கு ஆதரவு அளிக்காமல், மக்கள் மைத்திரிக்கு வாக்கு போடாமல் விட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

பொறுமை பொறுமை ஏன் அவசரம் நல்லது நடந்தால் எல்லோருக்கும் சந்தோசம் நடந்த பிற்பாடு கூவுறது உத்தமம்.முதலில் அந்த தியாகஜீவன்கள் வெளியில் வரட்டும் வரவேணும் அதன் பின் யாரான்ட்டாலும் உரிமை கோரி கொள்ளுபடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பெருமாள் உங்கட தோழர் அரசில் இருந்து வெளியேறியதும் ஒரே நல்ல செய்தியா வருகுது?

தமிழ் மக்களை பீடித்திருந்த 7 - 1/2 விட்டுட்டுது போல.

டக்கி கூட்டமைப்பை விட நல்லம் எண்டவைக்கும், மைத்திரியை விட மகிந்த வந்தால் நல்லம் எண்டவைக்கும் இந்த நல்ல செய்திகள் வயிற்றெரிச்சலை கொடுப்பது கண்கூடு.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் விடுதலையை கூட்டமைப்பு.. டக்கிளஸ்.. மகிந்த.. மைத்திரி அரசியலாக்கும் ஜென்மங்களை நினைக்க அருவருப்பாகவே இருக்கிறது. உந்த லோக்கல் அரசியலுக்கு அப்பால்.. இவர்கள் சர்வதேசம் முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் அளித்த பொதுமன்னிப்பு வாக்குறுதிக்கு அமைய விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை மகிந்த.. கூட்டமைப்பு.. டக்கிளஸ் எவரும் செய்ய முன்வரவில்லை. இன்றாவது இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற உணர்தல் எழுதிருப்பது.. அதுவும் சிங்களவர்கள் மத்தியில் எழுதிருப்பது வரவேற்கத்தக்கது. அதனை செயல்படுத்தினால் தான்.. இழந்தது போக.. மிச்ச வாழ்வையாவது அவர்கள் சந்தோசமாக கழிக்க வழி பிறக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்தி.வரவேற்க வேண்டிய செய்தி. இவர்களின் விடுதலை விரைவில் நடைபெறவேண்டும்

 

 

 


பொறுமை பொறுமை ஏன் அவசரம் நல்லது நடந்தால் எல்லோருக்கும் சந்தோசம் நடந்த பிற்பாடு கூவுறது உத்தமம்.முதலில் அந்த தியாகஜீவன்கள் வெளியில் வரட்டும் வரவேணும் அதன் பின் யாரான்ட்டாலும் உரிமை கோரி கொள்ளுபடுங்கோ.

 

 எனக்கு இதில் நம்பிக்கை இன்னும் பிறக்கவில்லை

 

காரணம்

மைத்திரி மிகவும் ஆணித்தரமாக பலமுறை சொல்லியுள்ளார்

மகிந்தவையோ

இராணுவத்தையோ

ஒரு போதும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்று..

அத்துடன் பொன்சேகா உள்ளுக்குள் அதிகாரத்துடன் இருக்கிறார்.

எனவே  சாட்சிகளையும்

வெளியே வராதோரின் தொகையால் வரப்போகும் போர்க்குற்றத்தையும் 

அவர்களே செய்வார்களா...???

  • கருத்துக்கள உறவுகள்
கோசன் நான்  எந்த திரியில் டக்கியை தோழர் என விளித்திருக்கிறன். யாழில் எல்லாருக்கும் விழுந்து விழுந்து சேறடித்துக்கொண்டு திரியும் உங்களுக்கு நானா இன்று கிடைத்தேன்.?
 
 மற்றும் படி மக்களுக்கு இந்த தேர்தலால் தீர்வு கிடைத்தால் சந்தோஷமே, ஆனால் ஆடறுக்கு முன் மற்றதற்கு துள்ளிக்குதிக்க வேண்டாம்.
 
 எல்லா ஆட்சி மாற்றம் நடக்கும் போதும் மக்களுக்கு விடிவு கிடைத்தது போன்று ஒரு தோற்றப்பாடு கிடைக்கும் அதை வைச்சு ஆகா ஓகோ என குதிக்க வேணாம் கடைசி வரை சம்பந்தன் வாயை மூடிக்கொண்டு கிடந்தவர் மக்கள் My 3 க்குத்தான் குத்த  போகுதுகள் என்றவுடன் டெல்லியின் அனுமதிஉடன் My 3 க்கு தலையாட்டி வைக்க அதுக்குத்தான் My3 நன்றியுரையில் ஏனன்டு   கணக்கெடுக்கவில்லை.
 
 நீங்க மாத்திரம் நித்திரையில் பிதற்றுபவர் போல் my 3 சிங்களத்தில் நன்றி சொன்னவர் என திரும்பி திருப்பி சொல்வதால் பொய் உண்மையாகாது.
 
-------------------
.
 இந்சை ஒண்டு கனவு காணுது.
சுமத்திரனுக்கு காணி அமைச்சு கிடைச்சு சிங்களவன் பிடிச்ச காணியெல்லாம் சுமந்திரன் மூலமாய்  தமிழர்களுக்கு திருப்பி எடுத்து தருவாராம்  என மனப்பால் குடிக்குது 2000 வருஷ சிங்களவனை  பற்றி வன்னியில் பிறந்த குழந்தைக்கும் தெரியும் 30 வருஷத்துக்கு  முதல் ஒடி வந்து அசேலம் அடிச்சவருக்கு விளங்கவில்லை.  இப்படியான நீங்கள் தான் எங்களை திருத்திரம் அரசியல் படிப்பிக்கிறம் எனும்   இலட்சனம்.
 
 கடைசியாக ஒன்று உங்களின்  கருத்துக்கள் குடுப்பைகுடுப்பைக்காரனின் நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என சொல்வதட்க்கு ஒப்பானது  சொல்கிறீர்களே ஒழிய நடை முறையில்  இல்லை எல்லாம் வழக்கமான அரசியல் வாதிகள் வார்த்தை ஜாலத்தை வைத்தே பிழைப்பு நடத்த பழகிவிட்டீர்கள் அடிக்கடி டெல்லி போய் வந்ததன் பலன் அதுதானாக்கும்.  கொஞ்சமாவது மக்களுக்கு வாய் ச்nவு டால் விடாமல் காரியத்தில் காட்டுங்க அது உங்களால் முடியாது எங்களை வம்பு சண்டைக்கு இலுப்பதிலேயே உங்களுக்கு காலம் போயிடும்  இதெல்லாம் ஒரு பிழைப்பு.
 
 
நியானி: ஒரு வரி தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by நியானி

அரசியல் கட்சிகளின் விடுதலையை அரசியலா பாக்காமல் எப்பிடி பார்ப்பது? 

 

சட்டப்படி என்றும் சொல்லமுடியாது காரணம் மகிந்தவிடமும் அதனூடே கொத்தாவிடமும் குவிந்திருந்த அதிகாரத்தால் நீதியை நாடியும் இதுவரை காலமும் எந்த விடிவும் இல்லை. 

 

நல்லவேளையாக கூட்டமைப்பு ஊரில இருந்து காரியமாற்றியதால் அப்பாவிகள் விடுவிக்க படவேண்டும் என்ற ஒரு பேச்சு அடிபடுகுது. 

இறுதியாக கூட்டமைப்பு மைத்திரியை சந்தித்து இதுபற்றி தெளிவாக பேசி இருந்தது. 

 

இந்த உழைப்பையும் அவரர் சுயநலத்துக்கு பாவிப்பது தகுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவைப் போர்க்குற்றவாளி ஆக்கினால்தான் அவனை விரட்டமுடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டு தமிழர் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். அந்த நம்பிக்கையின் பலனைக் காலம் வேறுவழியில் மாற்றித் தந்தது. எங்கள் சொந்தங்கள் விடுதலை பெறவேண்டும் என்பதையும் காலம் கணித்துள்ளதாகவே எண்ணவேண்டும். மைத்திரியின் அரசில் நம்பிக்கை கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.   

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை நேரடியாக மற்றும் மறைமுகமாக ஆதரிக்கும் கனபேருக்குத் தங்கள் பிழைப்புக்கு ஆப்பு வந்திடும் எண்டு பயம். அப்பதானே புலத்தில மக்களுக்கு தேசியம் பேசலாம். மகிந்த தோத்தது கஸ்டம் போலத்தான் இருக்கு! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.