Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் ஜெசிக்கா.............

Featured Replies

திறமை உள்ள அந்த ஈழத்து சிறுமிக்கு என் இதயம் கலந்த வாழ்த்துக்கள் ................
 
ஈலக்கலையையும், ஈழத்து கலைஞர்களையும் அவர்களது திறமைகளையும் ,படைப்புக்களையும் தட்டிக்கொடுத்து உற்சாகம் அழிப்பது ஒவ்வொரு ஈழமகனுக்கும் உரிய கடமையாகும் ..........ஆனால் குழந்தையாக தவழும் தருவாயில் ஆரம்பித்துள்ள எம்மவர்  கலைப்பயணமும் ,படைப்புக்களும் பார்க்க கேட்க ,யாருமற்று அநாதரவாய் தொலைந்து கொண்டிருக்கிறதே இன்றைய சரித்திரம் .எம் தமிழக உறவுகளின் படைப்புக்களுக்கு எம்மால் இணையாக பயணிக்க முடியாமல் இருப்பது உண்மையிலும் உண்மையே .அவர்களுக்கென்று ஒரு உறுதியான தளம் உள்ளது அந்த தளத்திலே இன்று அவர்கள் நிமிர்ந்து நிற்கிறார்கள் .ஆனால் அந்த இடத்தை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும் என்றால் கலைஞ்சர்கலாகிய எம் உழைப்பு மட்டும் போதாது .உங்கள் ஆதரவும் தட்டிக்கொடுப்பும் ,உற்சாகப்படுத்தலும் அவசியம் .
 
எமது தளத்தில் நிமிர முடியாத ,வளர முடியாத நிலையை அறிந்தே பல திறமை உள்ள கலைஞ்சர்கள் தென்னிந்தியா நோக்கி நகர முற்பட்டுள்ளனர் என்பது உண்மையிலும் உண்மையே ,ஆனால் இப்படியான திறமை உள்ளவர்கள் தென் இந்தியா நோக்கி நகரும்போது எம் கலை  பாதைக்கு  ஒரு வெறுமையை ,ஒரு வெற்றிடத்தை  தோற்றுவிக்கின்றது .
 
இறுதியாக திறமை கொண்ட என் ஈழத்து உறவான சிறுமியை வாழ்த்துவதுடன் ,இவர்களை போன்றவர்கள் தென்னிந்திய களம் நோக்கி போகாமல் இருக்க ஆரோக்கியமான ,சிறந்த ஈழத்து கலைத்தளத்தை எல்லோரும் இணைந்து உருவாக்குவோம் .நன்றி 
 
  • Replies 204
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தெனிந்தியா டிவியில் பாடினால் தென்னிந்திய படங்களில் நடித்தால் தான் இவர்கள் கைதட்டி ஊக்கமளிப்பார்கலாம் இதே ஜெசிக்கா வெளிநாட்டு தமிழ் தொலைகாட்சி ஒன்றில் பாடி தனது திறமையை வெளிக்கொண்டுவந்தால் எம்மவர்கள் கண்டுக்கவே மாட்டார்கள் இதான் ஜதார்த்தம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஆக்கள்.. விஜய் ரீவி உட்பட தமிழக தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளுக்கு வரும் போது யாழில்  அவற்றின் வரவை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். சுண்டலுக்கு நினைவிருக்கலாம். இன்று...????! 

நம்மவர்கள்... தொப்பி போடாமலே நல்லா நேரத்துக்கு ஏற்றமாதிரி புரண்டு எழுவார்கள். விடுங்கோ..!! ஒரு கொள்கை என்று ஒன்றிருந்தால் தானே.. திட்டமிடவும் செயல்படவும் முடியும். இல்லை என்றால் கண்டதே காட்சி.. கொண்டதே கோலம் தான். :icon_idea:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதே விஜய் டிவியில் நீயா நானா கோபிநாத் பிரபாகரன் பற்றி பெசவிடாததுக்கும் குத்தி முறிஞ்சவை...ஹா ஹா காமடி பசங்க.....:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஜெசிக்கா பாட வேண்டுமா , படி தாண்டி ஓட வேண்டுமா...! ஒன்டுமே புரியல்ல உலகத்தில...!! :D

இங்கையும் புடுங்குப்பாடா ??
சுண்டல் இதுக்குள்ள நிண்டு குத்தி முறியிறதப்பார்த்தா ஜெசிக்கா யாழை சேர்ந்தவர் இல்லை போல கிடக்கு   :D

இங்கையும் புடுங்குப்பாடா ??
சுண்டல் இதுக்குள்ள நிண்டு குத்தி முறியிறதப்பார்த்தா ஜெசிக்கா யாழை சேர்ந்தவர் இல்லை போல கிடக்கு   :D

அவுஸ்ரேலியா அல்லது யூகேயிலிருந்து போகாத ஆதங்கமாகவும் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிரார்களை விளம்பர பொம்மைகளாக்கி.. நடத்தப்படும்  இத்தகைய ரீவி வியாபார நோக்கிலான நிகழ்ச்சிகள்   எங்கு நிகழ்த்தப்பட்டாலும் எதிர்க்கவே செய்வோம். குழந்தைகள் மன அழுத்தமற்ற புற அழுத்தமற்ற சூழலில்.. இயல்பாக  அவற்றின்   திறமைகளை வளர்க்க அனுமதிப்பதை விட்டு.. குழந்தைகளிடையே  ஏற்றத்தாழ்வை வளர்த்து அதில் வேடிக்கை விநோதம் ரசிக்கும்  ஒரு வித மனோவியல் கடும்போக்கே இங்கு வளர்க்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்க ஒரு போக்கு.  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஜெசிக்கா பாட வேண்டுமா , படி தாண்டி ஓட வேண்டுமா...! ஒன்டுமே புரியல்ல உலகத்தில...!! :D

ஒன்றும் செய்யத்தேவையில்லை. யாழ் இணையம் பக்கம் தலைவைத்து படுக்காமல் இருந்தால் சரி. வாழ்க்கையில் ஆகோ ஓகோ என்று உயர்ந்துவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வசதியாக வாழக்கூடிய ஈழத்தமிழ் பொண்ணு ஜெசிகா முதல் பரிசு வெல்வதை விட தமிழகத்தில் வாழக்கூடிய ஒருவருக்கே அந்த முதல் பரிசு செல்வது பொருத்தமாகவும் அது அவர்களது வாழ்கையை படிப்பை எடுத்து செல்ல உதவியாகவும் இருக்கும்......ஜெசிகா நீங்க கனடா டிவியில் பாடி ஈழதமிழர்களுக்கு பெருமை சேர்க்கலாமே.....

அப்ப நான் வட்டா?

கனடாவில் ரி.வி.ஐ (tvi)நடாத்திய  சுப்பர் ஸ்ரார் போட்டியில் பங்கு பற்றியவர். ரி.வி.ஐ நடாத்திய கர்நாடக சங்கீத போட்டியிலும்(ராகசங்கமம்) பங்கு பற்றியவர். இப்போ விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் போட்டியில் பங்கு பற்றுகிறார்.

மற்றுமொரு போட்டி இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியால் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பங்கு கொள்ளும் நாடுகள் கனடா, ஐரோப்பா,சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை.இறுதிப்போட்டி இலங்கையில் நடைபெறும்.

சக்தி தொலைக்காட்சி நடாத்தும் போட்டியில் (Global Super Star) இலங்கை, கனடா, அவுஸ்திரெலியா ,மலேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றுகிறார்கள். அவுஸ்திரெலியா தொலைக்காட்சி அலைவரிசை 74 ல் இரவு 9 மணியில் இருந்து 10 மணிக்கு ஒளிபரப்பு செய்கிறார்கள். சிட்னியில் இருந்து பல முன்னணிப்பாடகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வசதியாக வாழக்கூடிய ஈழத்தமிழ் பொண்ணு ஜெசிகா முதல் பரிசு வெல்வதை விட தமிழகத்தில் வாழக்கூடிய ஒருவருக்கே அந்த முதல் பரிசு செல்வது பொருத்தமாகவும் அது அவர்களது வாழ்கையை படிப்பை எடுத்து செல்ல உதவியாகவும் இருக்கும்......ஜெசிகா நீங்க கனடா டிவியில் பாடி ஈழதமிழர்களுக்கு பெருமை சேர்க்கலாமே.....

அப்ப நான் வட்டா?

சுண்டல்  இந்த கருத்தில் எனக்கு சில கேள்விகள் உண்டு...

1 கனடாவில் இருக்கும் எல்லோரும் வசதியானவர்களா?

அவர்களும் அகதியாக வந்தோர் தானே...?

2- என்னதான் உலகப்பரப்பில் பரந்துவாழ்ந்தாலும் எமக்கான தமிழ் மற்றும் கலாச்சாரம் என்பது தமிழகத்தில் தான் வேரூன்றி உள்ளது. அங்கு தான் நாம் எம்மை நிரூபித்தாகணும். அந்த மண்ணில் தான் எமது திறமைகளை பரிசீலிக்கமுடியும்.

அங்குள்ளவர்களுடன் போட்டியிட்டு  நிரூபிக்கப்படும் எமது திறமைகள் தான் வலுவானவை.

(நானறிந்து புலம் பெயர் நாடுகளிலிருந்து பல இளம் சந்ததியினர் பாட்டு இசை நடனம் வயலின் தமிழ் பண்டித்தியம்...... என பலவற்றையும் அங்கு சென்று தான் கற்று தேர்வு பெற்று புலத்தில்அதை அடுத்த சந்ததிக்கு தருகிறார்கள்.)

3- இதுவும் ஈழத்தமிழருக்க பெருமை தானே...??

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்துள்ளேன். அத்துடன் எனது நண்பர்களிடமும் வாக்களிக்குமாறு கேட்டுவருகின்றேன் ....

சிறுமி ஜெசிக்காவின்    பிரச்னைக்கு இன்னும் ஒரு சுமூகமான தீர்வை உறவுகள் எட்டவில்லையா 
 
போட்டி முடிந்தாலும் இந்த திரி முடிவு பெறாது என்பது புரியுது  :D

சிறுமி ஜெசிக்காவின்    பிரச்னைக்கு இன்னும் ஒரு சுமூகமான தீர்வை உறவுகள் எட்டவில்லையா 
 
போட்டி முடிந்தாலும் இந்த திரி முடிவு பெறாது என்பது புரியுது  :D

இப்போதைக்கு முடியாது.. போட்டியும் முடிய நாள் இருக்கு.. வோட்டும் 500 வரை  போடலாமாம்.. என்ன சுத்துமாத்தோ தெரியல!!  :o  :icon_idea:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போட்டிக்கு ஜெசிக்கா தெரிவு செய்யப்பட்டால், அவருக்கு திறமையில்லை, புலம் பெயர்ந்த எங்கட சனம் வாக்குகள் போட்டதினால் தான் அவர் வெற்றி பெற்றார் என்று எம்மவர்களில் ஒரு சிலர் சொல்லுவார்கள். இறுதிப் போட்டிக்கு ஜெசிக்கா தெரிவு செய்யப்படாவிட்டால், விஜய் தொலைக்காட்சியின் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடு, விஜய் தொலைக்காட்சிக்கு தமிழர்களைப் பிடிக்காது என்று எம்மவர்களில் சிலர் சொல்லுவார்கள். அதாவது எம்மவர்களில் பலருக்கு எதுக்கெடுத்தாலும் குறை குற்றம் சொல்வது ஒரு பிழைப்பாய் போய்விட்டது. உடனே கந்தப்பு நீர் மட்டும் திறமா என்று பழைய பதிவுகளைத் தேடி என்னைக்குற்றம் சொல்லக்கூடாது. எனென்றால் நானும் முன்பு பிழைப்பிடித்தவன். இப்பொழுது யோசித்துப்பார்த்தால் இது தேவையா என்று தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
ஜெசிக்கா பாடுகின்றார்.இருந்தாலும் தனது மளுடன் சேர்ந்து இருக்கும் அவரது அம்மா! கனடாவில் பல பருடங்கள் வாழ்ந்தவர். இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்.அவர்கள் கிறிஸ்தவ மதத்தினர் என எண்னுகின்றேன்.எது எப்படியோ அவரின் அம்மாவுக்கு நான் செலுத்தும் வணக்கம்! அவரது எளிமையான சேலைக் கலாச்சாரத்துக்காகவே! 
 
சூப்பர் சிங்கர் யூனியருடன் ஓரமாய் ஏக காலத்தில் குழந்தைகளின் அம்மாவுக்களின் ரசிகர்களிற்காக இன்னோர் போட்டியும் வைக்கலாம் போல. பாடும் பிள்ளைகளின் திறமைகளை விட அவர்களின் அம்மாக்களை ரசிப்பதே பலருக்கு வேலையாய் போயிற்று.

Edited by கிழவி

ஸ்ரீசா, ஜெசிகா, அனுசுயா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீசா, ஜெசிகா, அனுசுயா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் 

வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீசா, ஜெசிகா, அனுசுயா

மூவருக்கும் வாழ்த்துக்கள்.

சுண்டலுக்கும் சந்தோசம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..!

கனடாவில் பிறந்து வளர்ந்து இன்று wild card ல் Super Singer Finalக்கு  தெரிவாகியிருக்கும் ஜெசிக்காவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!

  • தொடங்கியவர்

கனடாவில் பிறந்து வளர்ந்து இன்று wild card ல் Super Singer Finalக்கு  தெரிவாகியிருக்கும் ஜெசிக்காவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!

கிட்டத்தட்ட பதின் நான்கு லட்சம் வாக்குகள்

  • தொடங்கியவர்

சூப்பர் சிங்கர் யூனியருடன் ஓரமாய் ஏக காலத்தில் குழந்தைகளின் அம்மாவுக்களின் ரசிகர்களிற்காக இன்னோர் போட்டியும் வைக்கலாம் போல. பாடும் பிள்ளைகளின் திறமைகளை விட அவர்களின் அம்மாக்களை ரசிப்பதே பலருக்கு வேலையாய் போயிற்று.

 வயசுக்கு ஏற்றாற்போல கதைகின்றீர்கள். வாழ்த்துக்கள்.முன்பு எங்கள் பக்கத்து வீட்டிலும் ஒருவர் இருந்தவர்.அவரின் பேத்திக்கு பிள்ளை பிறந்து இருந்தது.அவரது கணவன் "டோகா" வில் இருந்தவர்.வந்த நேரம் கொடுத்துட்டு போட்டார்.குழந்தை பிறந்து அழகாய் இருந்தது.குழந்தையின் சித்தப்பா ஒரு விவசாயி "ஆணழகன்" இந்த கிழவிக்கு பொழுது போகாவிட்டால் அங்கு போய் குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு சித்தப்பாமாதிரியே இருக்கிறான் என்று சொல்லி சொல்லி கடைசி வரையும் தகப்பன் டோகாவிலிருந்து வரவேயில்லை.அதுதான்................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.