Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளை திருப்பி அனுப்பப் போகிறது இந்தியா?

Featured Replies

தமிழ்னாட்டில் இருக்கும் ஈழ தமிழ் அகதிகளை பற்றிய முடிவுகளை தமிழர்களுடன் பேசாமல் யார் யாரோ எல்லாம் பேசி முடிவெடுப்பதை ஏற்றுகொள்ள முடியாது.

ஈழத்தமிழ் அகதிகளின் ஒவ்வொரு குடும்பத்திலும் இப்போது ஒருவர் அல்லது இருவர் கல்லூரி கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அக்குழந்தைகளின் எதிர்காலம் என்ன அதற்க்கு என்ன தீர்வை இந்திய மத்திய அரசு வைத்திருக்கிறது அவர்கள் குடும்பம் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் கல்லூரி அல்லது பள்ளி கல்வி முடியும் வரை அவர்களின் பாதுகாப்பு மற்றும் உறைவிடம் ஆகியவற்றுக்கான செலவீனங்களுக்கு யார் பொறுப்பு என்பதை இந்திய மதிய அரசு அறிவித்தபின் இது பற்றி தமிழக  அரசு கருத்துரைக்கலாம்.

மண்டபம் முகாமில் கருத்துக்கேட்பு – 70 வீதமான அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம்

JAN 29, 2015 | 0:42by அ.எழிலரசன்in செய்திகள்

indian-parlimentary-standing-committe-30தமிழ்நாட்டில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக, அவர்களிடம் கருத்து அறியும் சந்திப்பை நடத்திய இந்திய நாடாளுமன்ற நிலையியல்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலையியல் குழு, நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பணியகத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் மற்றும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்து அறியும் கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

”தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளில் 70 வீதமானோர் தமது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிச் செல்லவே விரும்புகின்றனர்.

இதில் 20 வீதத்தினர் மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்புகின்றனர்.

மேலும் 10 வீதமானோர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்லத் தயார் என்கின்றனர்” என்று தெரிவித்தார்.

indian-parlimentary-standing-committe.jp

அகதிகளிடம் கருத்து அறியும் கூட்டம் நடத்திய இந்திய நாடாளுமன்ற நிலையியல் குழு உறுப்பினர்கள்

mandapam-camp.jpg

நாடாளுமன்ற நிலையியல் குழுவிடம் கருத்துக்களை கூற வந்த மண்டபம் முகாம் அகதிகள்

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற நிலையியல் குழு உறுப்பினர்களான கே.டி.எஸ்.துளசி, ரஜனி பட்டேல், கலாநிதி அன்சுல் வர்மா, கலாநிதி சம்பத், வரபிரசாத் ராவ், பி.வி.நாயக். கே.பி.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போது தமிழ்நாட்டில், 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.

அவர்களில் 64 ஆயிரத்து 924 பேர், 107 முகாம்களில் வசித்து வருகிறனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/01/29/news/3242

அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை – தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்பு

JAN 29, 2015 | 0:25by அ.எழிலரசன்in செய்திகள்

o-pannerselvam-300x200.jpgதமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்திய மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக, நாளை இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் நடக்கவிருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் அறிவித்துள்ள நிலையில், அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக சிறிலங்கா – இந்திய வெளிவிவகார அமைச்சுக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு, இந்திய மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்,

“அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்தத் தருணத்தில் மேற்கொள்வது சரியானதல்ல. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.

இத்தகைய சூழலில் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பு அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை ஒத்திவைப்பதே சரியானதாகும்.

சிறிலங்காவில் சமீபகாலமாக நிலவும் அரசியல் மாற்றம் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தமிழர் பகுதியில் இன்னும் சிறிலங்கா இராணுவத்தினர் இருப்பது தயக்கத்தை ஏற்படுத்துகிறது.

சிறிலங்காவில் முகாம்களில் வாழும் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற சிறிலங்காவின் புதிய அரசின் வாக்குறுதி செயற்பாட்டுக்கு வரும்போது இங்கிருக்கும் தமிழ் அகதிகளுக்கும் தாயகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும்” என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/01/29/news/3239

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் பல்வேறுபகுதிகளில் வாழுகின்ற எம்மவர்களை அதிகாரவர்க்கத்தினர்கள் குற்றப்பரம்பரையினராகவே பார்க்கின்றார்கள். அங்குவாழும் இளையோர் எவ்வளவுதான் படித்து முன்னேறினாலும் கௌரவமான எந்தவேலையிலும் சேரமுடியாது ஆகக்குறைந்த்தது ஒரு சாரதி அனுமதிப்பத்திரம்கூட எடுக்கமுடியாது.

அவர்கள் வாழும் கிராமத்திலோ அன்றேல் நகர்ப்புறத்திலோ எதாவது குற்றச்சம்பவங்கள் நடந்துவிட்டால், முதலில் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவது இவர்களைத்தான்.

வேலைவாய்ப்பின்மை, ஓரளவுக்குமேல் சிறந்த கல்வியறிவைப்பெறமுடியாத சூழல், குடும்பசூழல் இக்காரணங்களால் உள்ளூரில் தெருச்சண்டை திருட்டுத் தொழில் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரது கருவிகளாக இலகுவில் இவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் சட்டச்சிக்கல்களிலிருந்து வெளிவரமுடியாது பலர் நிரந்தரக்குற்றவாளிகளாகிவிட்டனர். தவிர எதாவது சம்பவத்தில் இவர்களில் யாராவது இறந்துவிட்டால் அந்தவழக்குக் கோப்பு மிகச்சாதாரணமாகவே மூடப்பட்டுவிடும் காரணம் இவர்களது மரணத்துடன் தொடர்புபட்டவர் அரசியல் செல்வாக்கைநாடிச்சென்றுவிடுவார்.

டெல்கியிலிந்தோ அன்றேல் அயல்நாடுகளிலிருந்தோ ஏன் சென்னையிலிருந்தோ அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் அப்பகுதிக்கு வந்தால் அங்கு காணப்படும் ஈழ அகதிகள் முகாம் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படும்.

கியூ பிரிவு எனப்படும் தமிழக அரசினது நக்சலைட்டுகள் மற்றும் பிற தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் புலனாய்வுப்பிரிவின் தீவிர கண்காணிப்பில் ஒவ்வொரு ஈழத்தமிழனும் உள்ளான். அவர்கள் விடையத்தில் கியூ பிரிவுக் கண்காணிப்பாளர் வைத்ததே சட்டம் சிலவேளை நல்லவர்களும் வாய்ப்பதுண்டு.

நான் அங்கு இருந்தவேளையில் இராமமூர்த்தி எனும் ஒரு கியூ பிரிவு புலனாய்வாளரது கண்காணிப்புக்குள் நான் இருந்தேன். மிகவும் அன்யோன்யமாக இவர்களுடன் பழகக்கூடாது சிலவிடையங்களில் எங்களையே கருவியாக்கிவிடுவார்கள். இப்படி மாட்டுப்பட்டவர்கள் ஏதிலிகள் முகாம்களில் அதிகம்.

இவைகள் எல்லாம் தவிர்த்து அங்கும் சந்தோசங்கள் உண்டு காதல் உண்டு கொண்டாட்டங்கள் உண்டு பண்டிகைகள் உண்டு சில்மிசங்கள் உண்டு அவர்களுக்கான உலகமும் உண்டு

ஈழத்தமிழர்களது ஏதிலிகள் முகாமில் ஒருநாளேனும் வாழ்ந்துபார்த்தால்தான் அவர்களது நிலை அவர்களது வாழ்வுமுறை அனைத்தும் புரியும் வாழ்நாளில் ஒருவேளையாவது தமிழக ஏதிலிகள் முகாம்களில் தன்னுடைய வாழ்வைக்கழிக்காதவன் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய எதையோ மிச்சம்விட்டுப்போனவனாக நான் கருதுவேன்.

இது எப்படியிருக்குமெனில் இருபுறமும் கரும்புலிகளது கட்டவுட் படுகுகள் இருக்குதோ இல்லையோ எனச் சரியாகத் தெரியாதெனிலும் இருக்குதென நினைத்து, ஒருபுறம் ஆனையிறவு படைமுகாமும் மறுபுறம் பூநகரி படைமுகாமும் பரந்து கிடக்கையில், கிளாலிக்கடல் பயணம்போல், கினிமினி துப்பாக்கி ரவைகள் தலைக்குமேல் பாய மேலே கெலி சுத்த சுப்பர்கப் நைன்ரி கொண்டாவை காட்டுத்தடிகளால் கோத்து தோழில்சுமந்தபடி கொம்படிப்பாதைப்பயணம்போல் யாழ்குடாநாட்டின் பாரிய இடம்பெயர்வுபோல் இந்திய இராணுவம் எமதுசூழலில் நிலையெடுத்ததை அருகில் நின்று அனுபவித்ததுபோல் நவாலிப்படுகொலைகளது பிணங்களுக்கு நடுவில் நடந்துதிரிந்து எமது உறவுகளைத் தேடியதுபோல் ஈழத்தமிழனாக, தமிழக முகாம் வாழ்வும் வாழ்வை ருசிக்கின்ற தருணங்களே.

அங்குள்ள எமது சொந்தங்களை மீழப்பெற்றுக்கொள்வதா? வேண்டாமா? இவைபோன்ற விவாதங்களை முன்வைப்பதற்கு நாம் யார்?

கைக்குஎட்டும் தொலைவில்  உள்ள தன் தாயகத் திசைவெளியையே பார்த்திருக்கும் அச்சொந்தங்களை, இனிமேல் எக்கணமும் நாம் திரும்பிப்போவதில்லை போவதாகில் கூவில் கள்ளுக்குடிக்கவே நான் போவேன் என ஒத்தக்காலில் நிற்கும் நாம் யார் அவர்களையிட்டுக் கருத்துச்சொல்ல?

அம்முகாம்களிலிருந்து தப்பிப்பிழைத்து உயிர் ஊசலாட்டத்துடன் வந்தவர்களை அவுஸ்ரேலியாவைவிட்டே அகற்றவேண்டும் எனும் அந்நாட்டின் மனிதநேயமே இல்லாத அதிகாரவர்க்கத்தின் கொள்கைகளுக்குக் கொடிபிடிக்கும் யாழ்கள உறவுகளில் சிலருக்கு என்ன யோகியதை இருக்கின்றது அவர்களைப்பற்றி கருத்திடுவதற்கு?

இவைகள் எல்லாம் தாண்டி அவர்கள் வாழ்விலும் ஒரு வசந்தகாலம் வரும். அப்போது அவர்களை கேவலப்படுத்திய இந்திய அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் தமிழ் சமூகமும் வெட்கித்தலைகுனிந்து நிற்கும் காலமும் வரும்.

அதுவரை எனை உயிருடனிருக்க விடு இயற்கையே.

Edited by Elugnajiru

இவைகள் எல்லாம் தாண்டி அவர்கள் வாழ்விலும் ஒரு வசந்தகாலம் வரும். அப்போது அவர்களை கேவலப்படுத்திய இந்திய அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் தமிழ் சமூகமும் வெட்கித்தலைகுனிந்து நிற்கும் காலமும் வரும்.

இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளை மீள்குடியேற்றம் செய்வது ஓர் இரவினுள் நடைபெறக்கூடியதல்ல. திரும்பி வர ஆசைப்படும் ஒவ்வொருவரும் தமது சொந்த மண்ணில் குடியேற்றப்பட வேண்டும். அதற்கு இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் இவர்களிற்கான வீடு, சுய வருமானத்திற்கான கட்டுமானங்கள் போன்றவற்றை அரசியல் தலையீடுகளின்றி செய்ய வேண்டும். ஏன் இந்தியா கூட உதவலாம். இவர்களது மீள்வருகைக்கு முன்னர் செய்ய வேண்டியவை எத்தனையோ. இந்தியாவில் கல்வி கற்கும் எமது இளம் சமுதாயத்திற்கு சரியான முறையில் இலங்கையில் கல்வி தொடர வசதிகள் செய்யப்பட வேண்டும். 80களில் இருந்து அங்கிருப்பவர்கள் தமது உடல் வலுவை வயது காரணமாக சிறிது இழந்திருப்பார்கள். இவர்களிற்கான புணர்வாழ்வு. இவ்வாறு ஓராயிரம் பிரச்சனைகளிற்கு தீர்வு காணவேண்டி உள்ளது. இதற்கு ஆரோக்கியமான திறந்த மனதுடனான பேச்சுவார்த்தை முக்கியம்.
 
விசேட முகாம்களில் முட்கம்பிகளின் பின்னால் கைதிகள் போன்று வாழ்வோருக்கும் வாழ்க்கையில் வெளிச்சம் வர வேண்டும். இப்பதிவிற்கு இவர்களது எதிர்கால நல்வாழ்வைத் தவிர வேறு காரணம் இல்லை.
 
இவற்றிற்கெல்லாம் ஒரு ஆரம்பப் புள்ளி தேவையில்லையா? அந்த ஆரம்பப் புள்ளியே வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை. அனைத்தும் நலமாக நடைபெற்று முடிய ஆதரவளிப்போம்.

நடந்து முடிந்துவிட்டது என்று முள்ளிவாய்காலை மறந்துவிடுவீர்களா ? மன்னித்து விட்டாலும் மறக்கமுடியாது .அது போலத்தான் இந்தியாவுடனான எமது உறவும் .

அர்ஜுன் நீங்கள் விடுதலைப் புலிகளின் தவறுகளை விமர்சிக்கின்றீர்கள். நான் அதற்கும் மேல் ஒரு படி போய் எமது ஆயுதப்போராட்டம் மொத்தமாகவே ஆரம்பத்திலிருந்து தவறு எனும் கருத்துடன் 25 வருடங்களிற்கு மேலாக வாழ்பவன். 
 
தற்போது சுயநிர்ணயித்திற்கான எமது போராட்டம் ராஜதந்திர ரீதியாக கத்தியின்றி ரத்தமின்றி சரியான பாதையில் போவது போன்ற தோற்றமே எனக்குத் தெரிகின்றது. எம்மால் நடந்தவைகளை மாற்ற முடியாது. மறக்கவும் கூடாது ஏனெனில் இவை படிப்பினைகள். படித்த பாடங்கள் எதிர்காலத்தில் பிழைகளை விடாது இருக்க உதவும். விட்ட பிழைகளையே மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டுவதனால் நாம் முன்னோக்கி நகரமுடியாது. காலில் காயம் வந்தால் அதை சொறியும் போது சிறிய சுகம் கிடைக்கும் ஆனால் அதுவே காயத்தை மாற்றப் போவதில்லை மாறாக குணமடைவதைப் பின்போடும்.
 
இதுவே உங்கள் கருத்துக்களுடன் சில நேரங்களில் முரண்படுவதற்கான காரணம். 

அறுபது வருடப் போராட்ட அனுபவங்களை வைத்து தமிழர்களுக்கான தீர்வு எந்தப்பாதையில் செல்லும்  எனக் கணிப்பதற்கும்  

இரண்டு வாரங்கள் புதிய அரசினால் அல்லது ஜனாதிபதியால்

வெளியிடப்படும் கருத்துக்களை மட்டும் (செயற்பாடுகள் இல்லாத நிலையில்)  வைத்துக் கணிப்பதற்கும் நிறய வித்தியாசங்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலுக்கான சூழலை சர்வதேச சக்திகள் ஏற்படுத்திக்கொடுத்தன, அதனுடன் புலி எதிர்ப்பாளர்களாகத் தங்களைக் கருதியவர்களும் அப்பன் எப்போ சாவான் எனக்காத்திருந்தவர்களும், தூபம் போட்டனர். அத்துடன் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் இதுபோன்றவிடையங்களின்றி வேறு எதையும் நாம் பேசப்போவதில்லை என கூறிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை களத்திலிருந்து அப்புறப்படுத்தியாயிற்று. அதன்மூலம் புலத்திலுள்ள மிகவும் பலமான பேசும் சக்தியை இல்லாதொழித்து ஒப்புக்குச் சப்பாணிகளான சுமந்திரன் வகையறாக்களை மேடியில் ஏற்ரியாயிற்று.

சர்வதேசத்தின் இரண்டாவது நகர்வு, மைத்திரியையும் ரணிலையும் ஒரு குழுவாக இணைத்தைலிருந்து ஆரம்பித்துவிட்டது.

இதனது இலக்கு புலம்பெயர் தமிழர்களது அரசியல் தலைமைகளான நாடுகடந்த தமிழீழ அரசு உலகத்தமிழர் பேரவை பிரிட்டிஸ் தமிழர் பேரவை ஆகியவற்றைக் காட்சியிலிருந்து அகற்றுவதே.

இலங்கைத்தீவின் வடகிழக்கில் சுமூகமான சூழல் எனப்பாவனை காடினாலே இவர்களை இலகுவில் அகற்றிவிடலாம் என்பதில் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.

அதன்பின்பு எந்தவிதமான அரசியல் கொள்கைப்பிடிப்பும் அன்றேல் அரசியல் இலக்குமின்றிய தமிழர்கள் தலைவர்கள் (?) என்றுசொல்லப்படும் ஒருசிலரது குடும்பியை வெறும் பதவி ஆசையைவைத்தே பணியவைத்திடலாம் என்பதே தற்போதைய தமிழின எதிரிகளது குறிக்கோள். இவர்களது நிகழ்ச்சித்திட்டம் சரியாக நிறைவேறுமாகவிருந்தால்  கூடியவிரைவில் ஒப்புக்குச் சப்பாணியான ஒரு அதிகாரத்தை தமிழர் முதுகு சுமந்துநிற்கும். இதனால் மேலும் மேலும் எமதினம் கூனிப்போகுமேதவிர எதுவித முன்னேற்றமும் இராது.

அறுபது வருடப் போராட்ட அனுபவங்களை வைத்து தமிழர்களுக்கான தீர்வு எந்தப்பாதையில் செல்லும்  எனக் கணிப்பதற்கும்  

இரண்டு வாரங்கள் புதிய அரசினால் அல்லது ஜனாதிபதியால்

வெளியிடப்படும் கருத்துக்களை மட்டும் (செயற்பாடுகள் இல்லாத நிலையில்)  வைத்துக் கணிப்பதற்கும் நிறய வித்தியாசங்கள் உள்ளன.

உண்மை.
 
நான் ஒன்றும் அரசியல் ஆய்வாளர் இல்லையே. இங்கு நான் பதியும் கருத்துக்கள் யாவும் எனது ஆசைகள், எதிர்பார்ப்புகள், அபிலாசைகள், நம்பிக்கைகள், கனவுகள் மேலும் எனது எண்ணோட்டங்களை பிரதிபலிப்பன மட்டுமே. நடந்தால் சந்தோசப்படுவேன் இல்லை என்றால் ஏமாற்றம்தான். ஆனால் நம்பிக்கையை மட்டும் விடமாட்டேன்.
  • கருத்துக்கள உறவுகள்

வங்காளிகள்  இந்தியாவிற்குள் ஊடுருவது சர்வசாதாரணமான நிகழ்வு. இவர்களை இந்திய அரசு கண்டும் காணாமல் விடுகிறது. ஆனால் ஈழ தமிழ் அகதிகள் தான் பாரமாக உள்ளார்கள்.

அகதிகளை மீள இலங்கையில் குடியமர்த்தும் வேலையில் மத்திய அரசு மிகத்துரிதமாகச் செயற்பட வேண்டும். அவர்களுக்குரிய வாழ்க்கைக்கும் வதிவிடத்தும் வேண்டிய ஏற்பாடுகளை இந்திய, இலங்கை, ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா வும் காலதாமதமின்றிச் செய்ய வேண்டும்.
 
முதல்வர் பன்னீர்ச்செல்வன் தமிழ்நாட்டில் மேற்படிப்பு படிக்கும் மாணவ‌ர்கள் தொடர்ந்து தமது கல்வியை கற்பதற்குரிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமாக  ஐரோப்பிய வட அமெரிக்க கண்டங்களில்  வாழும்    

இலங்கையர்களின் வதிவிட அனுமதியையும் / குடியுரிமையையும் மீளப்பெற்று திருப்பியனுப்ப வேண்டும்.

இலங்கையின் நல்லாட்சியை உலகிற்கு பறைசாற்ற வேண்டும். 

முக்கியமாக  ஐரோப்பிய வட அமெரிக்க கண்டங்களில்  வாழும்    

இலங்கையர்களின் வதிவிட அனுமதியையும் / குடியுரிமையையும் மீளப்பெற்று திருப்பியனுப்ப வேண்டும்.

இலங்கையின் நல்லாட்சியை உலகிற்கு பறைசாற்ற வேண்டும். 

இதைக் கனடா செய்யுமோ தெரியாது. ஏனென்றால் அந்த நாட்டுக்கு ஆட்கள் தேவை. ஆனால் ஐரோப்பா செய்யலாம் / செய்யக் கூடும்.
 
மனிதாபிமான ரீதியில் அகதி அந்தஸ்து கிடைக்காதவர்களுக்கு ஆளுக்கு 25,000 யூரோக்களையாவது கொடுத்து திருப்பி அனுப்பலாம். ஏனென்றால் அவர்களும் காசு செலவளித்துதான் வந்துள்ளார்கள்.

ஈசன்,

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் 40,000 யூரோ கொடுப்பதாக ஒரு வரைபு உள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆரம்ப நிலையில் உள்ள திட்டம் இது. இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். திடீரென அறிவிப்பு வந்தாலும் வரும்.

Edited by sabesan36

நல்ல விஷயம். அவர்களும் தங்கள் வாழ்க்கையை மீளக்கட்டி எழுப்பலாம்.

எங்கள் மண் வளமானது !!

அட செத்து துலைஞ்ச பிறவும் விடமாட்டன் என்டுரானுகள்... நாசமறுந்த தமிழ்நாட்டில எங்கட சனம் படும் பாடு சொல்லிமாழாது. கேக்க நாதியாத்த கூட்டம். இவர்களின் முக்கிய செலவு, தமிழ்நாடு போலீசுக்கும் இதர அரசாங்க அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுப்பதுதான். வெளிநாடுகளில் இருந்து உறவினர்களினல் அனுப்பப்பட்ட மொபைல்கல் மற்றும் டெக்னிகல் சாமான்கள். பொலிசாரினால் பறிக்கப்பட்டுவிடும்... கேக்க ஒரு நாயும் இல்லை. இவர்களின் நிலை தாச்சியில் இருந்து அடுப்புக்க விழுந்த நிலைதான் எண்டால் மிகையாகாது.

நிற்க.. இவர்கள் இலங்கைக்கு. திரும்பிபோக மனிதநேய ஆர்வலர்கள் எடுக்கும் முயற்ச்சிக்கு ஏன் தமில்நாட்டு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேணும்? அனுப்பப்படும் மக்கள். தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேணும். அதுக்கு சிங்கள இராணுவம் விலக வேணும். இதுக்கு சிங்கள அரசு பிரச்சினைகளை ஏற்படுத்தும்... பொதுவாக பாக்கப்போனா இந்திய அரசை விட தமிழ் நாட்டு அரசு சிங்கள அரசுக்கு அதிக விசுவாசம் காட்டுது போல தெரியுது.

அட செத்து துலைஞ்ச பிறவும் விடமாட்டன் என்டுரானுகள்...

  • கருத்துக்கள உறவுகள்

87க்கு முன்பு வரை முகாம்களில் இவ்வளவு கெடுபிடிகள் இல்லையென நினைக்கிறேன்.

பொதுவாக தமிழக அரசுத் துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகள் வலியோரை விட்டுவிட்டு, பின்புலமில்லா எளியோரை வறுத்தெடுப்பது கண்கூடு.

87ம் வருடம் வரை தமிழக மக்கள் அனைவரின் அனுதாபமும், வரவேற்பும் பெற்றுவந்தவர்கள், அதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் (சூடு கண்டதால்) தான் இப்போதுள்ள நிலை! மற்ற நாடுகளில் இப்படியில்லையே எனக் கேட்டால், அங்கெல்லாம் மனித உயிர்களுக்கு மதிப்பிருக்கிறது, ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்த டில்லிக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது

இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று இந்திய – இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு, இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தது.

இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில் இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உகந்த சூழ்நிலை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் உருவாகாத சூழ்நிலையில், இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே நாடு திரும்புவது குறித்து நடைபெற உள்ள இன்றைய ஆலோசனை கூட்டம் அவசியமற்றதாக தமிழக அரசு கருதுவதால் இந்த கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஆனாலும் இன்று டெல்லியில் இந்தியா – இலங்கை வெளியுறவு துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்க செல்லவில்லை.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116075/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வீடு, நிலம், வேலை வேண்டும்: நாடு திரும்ப இலங்கை அகதிகள் நிபந்தனை!
 
Posted Date : 16:00 (30/01/2015)Last updated : 16:31 (30/01/2015)

sutharsana%20Nachiayappan%20200(2).jpgராமேஸ்வரம்: இலங்கையில் தங்களுடைய வீடு, நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டால், தாயகம் திரும்பத் தயாராக இருப்பதாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இலங்கை அகதிகள் கூறுவதாக இந்திய நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு, நேற்று ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தது. அப்போது மண்டபம் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளிடமும் ,அந்த குழுவின் உறுப்பினர்கள் குறைகளைக் கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர்  சுதர்சன நாச்சியப்பன், "மீண்டும் தங்களுடைய நிலம், வீடுகளை அரசு திரும்ப அளிக்க வேண்டும்; எந்தப் பிரச்னையும் வராது என மாகாண அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; அப்படி இருந்தால் தாங்கள் திரும்பிச் செல்லத் தயார் என பெரும்பான்மையோர் எங்களிடம் கூறினர்.

மற்றொரு தரப்பினர், தங்கெளுக்கென அங்கே வீடு, நிலம் போன்றவை இல்லை; நாங்கள் திரும்பிச் சென்றால் வேலைவாய்ப்பு போன்றவற்றைச் செய்துதருவோம் என உத்தரவாதம் அளித்தால் திரும்பத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

tamil%20refugee%20.jpg

வேறு சிலர், தாங்கள் நீண்ட காலமாக இங்கேயே வசித்துவருவதால், தொடர்ந்து இங்கேயே வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் கூறினர்.

தங்களுக்கு வீடு, நிலம் திரும்பியளிக்கப்பட்டு பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டால், 60 முதல்70 சதவீதம் இலங்கை அகதிகள் நாடு திரும்பத் தயாராக இருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்திருப்பதாகவும் 10 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து இந்தியாவில் வசிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்" என்றார்.

தமிழகத்தில் தற்போது சுமார் 34 ஆயிரத்து 500 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 55 அகதிகள் வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 65 ஆயிரம் பேர் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 107 முகாம்களில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்கள், அரசிடம் பதிவுசெய்து கொண்டு, முகாம்களுக்கு வெளியில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

என்னையா இது படு மோசடியான அக்கிரமா இருக்குது..? va-taper.gif

நேற்றிரவு 'தந்தி' தொலைக்காட்சியிலும், 'புதிய தலைமுறை'யிலும்,  ஈழத்தமிழர்கள் "இலங்கையில் எமக்கு பாதுகாப்பு இல்லை, எங்கள் குழந்தைகள் இங்கேயே கல்வி கற்கிறார்கள் நாங்கள் இலங்கை செல்ல விரும்பவில்லை"யென 70 சதவீத மக்கள் கூறியதாக அம்மக்களின் பேட்டியோடு ஒளிபரப்பினார்களே?

அது பொய்யா? எது உண்மை? :o

  • கருத்துக்கள உறவுகள்
போவதற்கு விரும்புபவர்களை யார் தடுக்கிறார் ?
போக விரும்பாத காரணத்தால்தானே அங்கே இருக்கிறார்கள் ?
 
போக விரும்புவோர் வீதம் சம்மந்தன் ஐயா பேசினால் 90% தாண்டும்.
அங்கிருக்கும் அகதி பேசினால் -90% ஆகும்.
 
இதுதான் உண்மை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.