Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையில் படிப்பு முதல் வைத்தியம் வரை இலவசம். இதை இலவசமாகக் கொடுக்கக்கூடியளவிற்கு நாட்டின் பொருளாதாரம் இல்லை என்பதே யதார்த்தம்.
 
அதனால்தான் "இங்கு கடனினளவு முக்கியமில்லை கடன்முகாமைத்துவமே (debt management) முக்கியம்." என்று எழுதினேன். சிலவேளை debt managementஇன் மொழிபெயர்ப்பு பிழையாக இருக்கலாம்.
 
ஏன் நீங்கள்கூடத்தான் மேற்குலகில் வசிப்பவராயின் வீடு முதற்கொண்டு எவ்வளவோ விடயங்களிற்கு கடன் எடுத்திருப்பீரகள். கடனை எப்படி முகாமைப்படுத்திறீர்கள் (manage) என்பதுதான் இங்கு முக்கியமானதே தவிர எவ்வளவு கடன் உள்ளது என்பதல்ல. கடன் வாங்கிய காரணங்களை மறுபடியும் விவாதிப்போமானால் எங்கும் நகரமுடியாது.

 

ஒரு மூன்றந்தர நாடு இலங்கை, சிறுபான்மை தமிழ் இனத்தை என்ன விலை கொடுத்ததும் அழிப்பம் என சூளுரைத்தவர்கள்  சிங்கள அரசியல் வாதிகள் இன்றும் தமிழர் தாயகத்தில் அடாத்தாக சிங்களம் பரவி வீண் செலவு செய்தபடி இப்படியான கேவலத்தில் debt management என்பது கேலிகூத்து அதை தூக்கி குப்பையில் போடுங்க .

Edited by பெருமாள்

சில காரணங்களால் பல வருடங்களாக இலங்கைக்குப் போக முடியாதிருந்தது 1980களின் பிற்பகுதியில் (புரியாத வயது) சென்றதன் பின்னர் சில வருடங்களின் முன்னர்தான் போக முடிந்தது. அங்கு போனதும்தான் நாம் இழந்தவை தெரிந்தது. மனதை வருடும் மண்மணம், புழுதி, துவிச்சக்கரவண்டி, மினிபஸ்ஸில் வியர்க்க வியர்க்க பயணம், ஆகம முறைப்படி அமைந்த கோயில்கள், சிறு உதவிகளை பெற்ற அந்த பிஞ்சு முகங்களின் சந்தோசம் இப்படி எத்தனையோ சந்தோசங்கள். இப்போது ஒவ்வொரு வருடமும் செல்கின்றேன். இவ்வருடமும்தான். இளைப்பாறுவதற்கு வயது வரவில்லை இளைப்பாறினால் எனது நிரந்திர வதிவிடம் யாழ்தான்.

என்னைப் பொறுத்தவரை இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 5,6 கிழமைகள் நிற்பதுதான் எனக்கு மேற்குலகில் இன்னுமொரு வருடம் வாழும் ஊக்கசக்தியை தருகின்றது.

மண்ணை மக்களை நேசிப்பவர்கள், எதையோ இழந்ததுபோல் மேற்குலகில் வாழ்பவர்கள் எத்தனையோ லட்சம். இவர்களை பொதுப்படையாக நீங்கள் "அங்கு ஏழைமக்களுக்கு பந்தா காட்டி பண பவுசு காட்டி" என்று கருத்திடுவது நல்லதல்ல. பந்தா காட்டாமல் சென்று பாருங்கள் நிச்சயமாக உங்கள் கண்களும் விரியும் மனமும் விரியும்.

எப்பவுமே மனம் இழந்ததை மறுபடியும் பெற முயற்சிக்கும். அவ்வாறானதே இதுவும். சிலர் நடத்தும் பந்தாக்களிற்காக எல்லாரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவது அழகில்லை.

உங்களை போன்ற சமூக நோக்கும் தெளிவான அரசியல் பார்வையும் கொண்ட நல்ல கருத்தாளருக்காக எழுதபட்ட கருத்து அல்ல. நான் கூறிதை போன்ற நிலையிலேயே பலர் அங்கு இப்போதும் இருக்கிறார்கள். தெளிவான பார்வை இல்லாமல் அடிமைத்தனத்துடன் பேரினவாத அரசியல் வாதிகளுக்கு தொட்டதற்கெல்லாம் பூஜை செய்து கொண்டு இங்கு கருத்திடும் அன்பர்களுக்காக எழுதபட்ட கருத்து அது. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பக்கமும் கடன் பிச்சையை நம்பி இருக்கும் நாட்டுக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு இவ்வளவு காசு வேஸ்ட். :D

நீங்கள் பிறந்த நாடு உங்களுக்கு பிச்சைக்கார நாடா? பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அந்த பிச்சைக்கார நாட்டை பிரித்துச் தரச் சொல்லி கேட்கிறீங்கள்

உங்களை போன்ற ............அன்பர்களுக்காக எழுதபட்ட கருத்து அது. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

 

தயவு செய்து மன்னிக்கவும். நீங்கள் பொதுப்படையாக எழுதியதால் வந்த வேதனை.

ஒரு மூன்றந்தர நாடு இலங்கை, சிறுபான்மை தமிழ் இனத்தை என்ன விலை கொடுத்ததும் அழிப்பம் என சூளுரைத்தவர்கள்  சிங்கள அரசியல் வாதிகள் இன்றும் தமிழர் தாயகத்தில் அடாத்தாக சிங்களம் பரவி வீண் செலவு செய்தபடி இப்படியான கேவலத்தில் debt management என்பது கேலிகூத்து அதை தூக்கி குப்பையில் போடுங்க .

 

ஏன் 70களில் ஸ்ரீமாவோ தன்னிறைவை முன்னிறுத்தி லங்கா சமஜமாஜக் கட்சியின் உதவியுடன் செய்யவில்லையா?
 
இப்போதுள்ள சர்வதேசச் சூழல் அதற்கேற்றதல்ல. உலகமயமாக்கலின் விளைவு - இவ்வாறுதான் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு வரலாம். அதைவிடுத்து கடன் கடன் என்றால் கடல்தான் தஞ்சம்.
 
பிரித்தானியாவின் கடன் மொத்த சனத்தொகையின் சராசரி வருமானத்தின் 466%  (அதாவது ஒவ்வொரு பிரஜைக்கும் அவர்களது வருடவருமானத்தின் 466% - 4.5மடங்கு) இலங்கை 106%. புரிந்து கொள்ளுங்கள் -  பிரித்தானியாவின் debt managementஇன் திறமையை.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் இரட்டைக் குடியுரிமை உள்ளது. என்னைப் போல பலரிடமும் உள்ளது. எதற்காக எடுத்தோம் என்பது எடுத்தவருக்குத்தான் தெரியும்.

 

எடுக்காதவர்களுக்கு, அவரவர்  தராதரத்தை அல்லது, அறிவைப் பொறுத்து, அது பற்றிய புரிந்துணர்வு இருக்கும். (நமது இனிய நாடு என்பர் சிலர், பிச்சைக்கார நாடு என்பர் சிலர், ஊரில் பந்தா காட்ட என்பர் சிலர்)

 

என்னுடைய சொந்தக் காசை செலவு செய்து இரட்டை குடியுரிமை எடுத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பிச்சைகார நாடா? என்ன சார் கனடா காசை கொண்டு போய் கலர் காட்டி வாழ்வதற்கு இந்த நாட்டைவிட ஒரு நாடு  உலகத்தில்  உண்டா?  அதை போய் குறை சொல்லுறீங்களே. இதே காசை வைச்சு கனடாவில் வாழ்ந்தால் இப்படி பந்தா காட்டி நாங்கள் வாழ முடியுமா?   என்ன வாழ்க்கை சார் இங்க.  என்ன சார் பேசறீங்க. நாம காசை கொண்டு இங்க வந்ததே ஜாலியா மூன்று வேளை சாப்பிட்டுவிட்டு போற காலத்தில் தேச பக்தி கதைக்க  தானே. அதை ஏன் குறை சொல்லுறீங்க. நீங்களும் அதை செய்ய இங்க வருவீங்க  தானே. வாங்க இங்க உங்களை வைச்சுகிறன். இனி மேல் ஜாலியா போழுபோக்க ஏற்ற  சிறிலங்காவை குறை சொல்லகூடாது. சொல்லி புட்டன்.

 

ரிங்கோ...... உங்கள் பல பதிவுகள், நன்றாக உள்ளன. :) 

தொடர்ந்து, கலக்குங்கோ... :D

எதுக்கு இந்த அடிபாடு! யாராவது 2.5 மில்லியன் ஐந்து வருடத்துக்கு ( ஐந்து லட்சம் ரூபாய் வருடத்துக்கு)கொடுத்து இரண்டாவது குடியுரிமை எடுக்க ரெடியா?  இது ஒரு மாயை ஒரு சிலர் இதை ஏற்றுக்கொள்ளக்கூடும். இந்த அரசின் நூறு நாள் திட்டத்துடன் இருக்கும் இலவச இணைப்புத்தான் வெளி நாட்டிலிருப்பவர்களை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருதல்.இப்போ வெளி நாடுகளில் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும் அகதி கோரி முடிவெடுக்காத நிலையில் உள்ளவர்களும் திருப்பி இலங்கைக்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகின்றது.இப்படி வெளி நாட்டிலுள்ளவர்களை நாட்டுக்குள் திருப்பி அழைத்து கொண்டால் பல மில்லியன் உதவுத்தொகை இலங்கை அரசுக்கு கிடைக்கும். அதே போல உள் நாட்டிலும் மீள் குடியேற்றம் செய்யும் போதும் இப்படியான உதவிகள் வெளி நாடுகளிலிருந்து இலங்கை அரசுக்கு கிடைக்கும்  இப்போ கனடாவில் அன் நாட்டின் ஆதி குடிகளை எப்படி சலுகைகளை கொடுத்து அவர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளதோ இந்த நிலையின் ஆரம்பம் தான் தமிழருக்கு ஆரம்பித்துள்ளது.கனடாவில் உள்ளவர்கள் தயவு செய்து "இந்தியன் ரிசேர்வ்" பகுதிக்கு சென்று கனடிய அரசுகளால் காலம் காலமாக அவர்களின் வாழ்க்கை எப்படிச் சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு வந்து தெரியப்படுத்துங்கள்

 

 

10384028_930339970332654_337509348667888

 

விமானம் திடீரெனத்தான் விழும் சுனாமியும் அப்படித்தான் ஆனால் இங்கு துப்பாக்கிகளின் சன்னத்துக்காக ஏங்கும் கூட்டம்

 

 

10947333_930340926999225_875478450816334

 

இது ஜூலை1983

 

10392462_930341500332501_904545382291312

 

இது இப்போ வரும்படி அழைகிறார்கள் என்று வைத்தாலும் நம்பலாமா?

Edited by BLUE BIRD

ரிங்கோ...... உங்கள் பல பதிவுகள், நன்றாக உள்ளன. :)

தொடர்ந்து, கலக்குங்கோ... :D

நன்றி சிறீ

எமது தாய்நாடு தமிழ் ஈழம் சிங்களத்திடம் அடிமைப்பபடுவிட்ட ஒரே காரணத்தினால் அதை எப்போதும் நக்கல் அடித்தும் பிறந்த பொன்னாடை கேவலப்படுத்தியும் அதேவேளை சிறீலங்கா இனவெறி தேசபக்தி பேசும் ஒரு சில அறிவற்ற முட்டாள் மனிதர்களை நோக்கியே எனது பதிவுகளும் அவர்கள் பாணியில் இருக்கும். தான் பிறந்த பொன்னாடை தாங்களே நக்கல் பண்ணும் சில ஜென்மங்களுக்கு சிறீலங்காவை பிச்சைக்கார நாடு என்று யாராவது சொன்னால் ரோசம் வருகிறது.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பிறந்த நாடு உங்களுக்கு பிச்சைக்கார நாடா? பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அந்த பிச்சைக்கார நாட்டை பிரித்துச் தரச் சொல்லி கேட்கிறீங்கள்

எவளவு நாளுக்குத்தான் தொடர்ந்தும் பிச்சை எடுப்பது ?
பிரித்துவிட்டால் நாம் எமது வேலையை பார்ப்போம் இல்லையா ?
  • கருத்துக்கள உறவுகள்

 

தயவு செய்து மன்னிக்கவும். நீங்கள் பொதுப்படையாக எழுதியதால் வந்த வேதனை.

 

ஏன் 70களில் ஸ்ரீமாவோ தன்னிறைவை முன்னிறுத்தி லங்கா சமஜமாஜக் கட்சியின் உதவியுடன் செய்யவில்லையா?
 
இப்போதுள்ள சர்வதேசச் சூழல் அதற்கேற்றதல்ல. உலகமயமாக்கலின் விளைவு - இவ்வாறுதான் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு வரலாம். அதைவிடுத்து கடன் கடன் என்றால் கடல்தான் தஞ்சம்.
 
பிரித்தானியாவின் கடன் மொத்த சனத்தொகையின் சராசரி வருமானத்தின் 466%  (அதாவது ஒவ்வொரு பிரஜைக்கும் அவர்களது வருடவருமானத்தின் 466% - 4.5மடங்கு) இலங்கை 106%. புரிந்து கொள்ளுங்கள் -  பிரித்தானியாவின் debt managementஇன் திறமையை.

 

பிரித்தானியா யாரிடமாவது கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காது இருக்கிறதா?
உலக வங்கி எப்போதாவது பிரித்தானியாவின் கடனை ரத்து செய்து இருக்கிறதா?
 
இலங்கை   debt management  செய்து எந்த ஆண்டில் உலக வங்கிக்கு கடனை திருப்பி கொடுத்து என்று கூற முடியுமா?
 
இலவச மருத்துவம் ....
நீர்பாசனம்... 
கல்வி துறை ...
(இலவச கூப்பன் மா 1980 களில் அமெரிக்கா கொடுத்தது)
 
இதெல்லாம் இப்போதும் உலக ஆசிய மத்திய வங்கிகளின் ஆதரவில் நடப்பவை.
ஆபிரிக்க முழுக்க மருத்துவம் இலவசம்தான். மாற்றுக்கு பரிசோதனை கூட எலியாக ஆப்பிரிக்கா மக்கள். 
 
"மூன்றாம் உலக நாடுகள்" இதன் பொருள்ளையாவது மாற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் எதற்காக இரட்டை பிரஜா உரிமையும் இரண்டு பாஸ்போட்டுகளும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? எனக்கு புரியலை !!

 

மனித மனம் குரங்கு .......ஒன்று மனைவி மற்றது வைப்பாட்டி :D

 

பிரித்தானியா யாரிடமாவது கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காது இருக்கிறதா?
உலக வங்கி எப்போதாவது பிரித்தானியாவின் கடனை ரத்து செய்து இருக்கிறதா?
 
இலங்கை   debt management  செய்து எந்த ஆண்டில் உலக வங்கிக்கு கடனை திருப்பி கொடுத்து என்று கூற முடியுமா?
 
 

 

நானும் இதைத்தான் பிழை என்கின்றேன். இலங்கையின்   debt management பிழையான வழியில் செல்கின்றது என்பதுதான் எனது கருத்து. அதற்காக இலங்கையை மற்றய ஆபிரிக்க 3ம் உலகநாடுகளுடன் ஒப்பிட முடியாது.

 

இலங்கை மற்றய 3ம் உலகநாடுகளில் இருந்து பலவகைகளில் வேறுபடுகின்றது. என்னால் பலதரவுகளைத் தரமுடியும். வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் என்பதை சில அளவுகோல்களின் உதவியுடனேயே வரையறுக்கின்றார்கள். அவற்றுள் சில ஏழ்மை,சுத்தமான குடிநீர் வழங்கல், மின்சாரம், விவசாயம், மருத்துவம், போர், சூழல் மாசுபடுத்தல், பசி, கலாச்சார சமுதாய ரீதியான புறக்கணிப்பு, மனிதவள மேம்பாடு, கல்வி, சுகமகற்பேறு, வாழ்நாள் குறியீடு போன்று ஏராளம்.

 

இலங்கையானது மற்றய வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் தனித்துவமானது. உலகவங்கி, ஐநா போன்றவற்றின் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் நிலமை குறித்து வரும் அட்டவணைகளில் இலங்கையை காண்பது அரிது. உதாரணமாக மனிதவள மேம்பாடு, கல்விக் குறியீடு போன்றவை மற்றய 3ம் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒன்று.

 

எனது கருத்தானது : இனத்துவேசமற்ற தூரநோக்குப் பார்வையும்  திடமான பொருளாதாரக் கொள்கையுமுள்ள ஒரு அரசு இலங்கையில் நிறுவப்படுமாயின் சில பத்து வருடங்களில் தெற்காசியாவின் அடுத்த சிங்கப்பூராக மாற்றமுடியும். எல்லா வளங்களும் உள்ள இலங்கை இனவாதப் பூதத்தின் பிடியிலிருந்தது முதல் அதிகார துஸ்பிரயோகம் செய்த அரசியல் வாதிகளால் சுரண்டப்படதால் வந்த நிலை. மாற்ற முடியும் - மாற்றலாம் மனமிருந்தால்.

மனித மனம் குரங்கு .......ஒன்று மனைவி மற்றது வைப்பாட்டி :D

 

அப்ப நீங்க சொல்லுறதை பார்த்தால் சீர் கொண்டுவந்து லட்சுமி கடாட்சமாய் இவர்களை மனைவி  பணக்காரக்க அந்த பணத்தை கொடுத்து வைப்பட்டிற்ற பாஸ்போட்  வாங்கி வைச்சுகிறாங்க போல இருக்கு. வைப்பாட்டிக்கு கொடுக்க தேவையான பணமிருக்கும் வரை இவர்களது வாழ்க்கை ஓகோ என்று ஓடும். வைப்பாட்டியின் சுகத்தில் மயங்கி தாயை ஏளனம் செய்யும் இவர்களின்   பணம் முடிய வைப்பட்டியில் சுயரூபம் தெரிந்த பின் தன்   மனைவியை  அல்லது அடுத்தவனின் அடிமைபட்டு நொந்துகொண்டிருக்கும்  பெற்ற தாயை தாய் நாட்டை  நினைப்பர். அப்போது பெற்ற தாய் ஏற்கனவே மரிச்சு போயிருப்பார்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பாதையுங்கோ இப்ப யார் பெண்டாட்டி யார் வைப்பாட்டி.  :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பாதையுங்கோ இப்ப யார் பெண்டாட்டி யார் வைப்பாட்டி.  :rolleyes::lol:

 

vil-chapeau.gif:lol::D

 

குழப்பாதையுங்கோ இப்ப யார் பெண்டாட்டி யார் வைப்பாட்டி. :rolleyes::lol:

நல்ல கேள்வி. பலருக்கு வைப்பாட்டிக்கும் பெண்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியாம பெண்டாட்டிய ஏளனம் பண்ணுறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு இரட்டைக் குடியுரிமை கிடைத்தாலும் சிலபேருக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லை! :D

பொருத்தாமானவர்கள் குத்திமுறியலாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பாதையுங்கோ இப்ப யார் பெண்டாட்டி யார் வைப்பாட்டி.  :rolleyes::lol:

 

 

உங்களுக்கு வேலை வைப்பு வசதியான வாழ்வு எல்லாம் யார் தருகிறாரோ அவர் பொண்டாட்டி.

அவரிடம் சமையலை தின்று கொழுத்துவிட்டு ...

தினாவெட்டில்.

உங்கள் சொந்த தனிபட்ட சுகத்திற்கு முதலீடு என்று எங்கு சுகம்தேடி போகிறீர்களோ அவர் வைப்பாட்டி.

"உப்பிட்டோரை உள் அளவும் நினை"

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு இரட்டைக் குடியுரிமை கிடைத்தாலும் சிலபேருக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லை! :D

பொருத்தாமானவர்கள் குத்திமுறியலாம் :lol:

 

 

இப்படித்தான் நானும் முன்பு சில காலம் நினைத்துக்கொண்டிருந்தேன்.....

இந்திய

சிறீலங்கா 

தூதுவராலய முக்கிய அலுவலர்கள்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்துக்கு

ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களது கடவுச்சீட்டில்

விசாக்குத்தி கொண்டு வந்து அலுவலகத்தில் கொடுப்பதை நேரில் காணும்வரை....

யாருக்கு இரட்டைக் குடியுரிமை கிடைத்தாலும் சிலபேருக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லை! :D

பொருத்தாமானவர்கள் குத்திமுறியலாம் :lol:

 

 

பாதுகாப்பு அமைச்சினூடாகத்தான் போகவேண்டும் என்று சொல்கிறார்கள்...

 

ஆனால் சுழியர்கள்... வெளிநாடு வரும்போது இயக்கம் தன்னைச் சித்திரவதை செய்தது என்று கேஸ் போட்டவர்கள். தொப்பியை திருப்பிப்போட அவர்களுக்கு தெரியாத என்ன ??

குழப்பாதையுங்கோ இப்ப யார் பெண்டாட்டி யார் வைப்பாட்டி.  :rolleyes::lol:

 

பிறந்த தாய்நாடு - அம்மா
புகுந்த நாடு - பெண்டாட்டி
 
மறுபடியும் பிறந்த தாய்நாடு சென்றால்
எப்படி அம்மா வைப்பாட்டியாவாள் - தப்பு
அப்ப இந்த வைப்பாட்டிஎங்கிருந்து வந்தாள்.
 
எனக்கு எதுவுமே புரியல்லை - பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மாதிரி ஒரே குழப்பம் (அதுவும் சனிக்கிழமை பின்னேரம்). ஆளை விடு சாமி.
  • கருத்துக்கள உறவுகள்

 

பிறந்த தாய்நாடு - அம்மா
புகுந்த நாடு - பெண்டாட்டி
 
மறுபடியும் பிறந்த தாய்நாடு சென்றால்
எப்படி அம்மா வைப்பாட்டியாவாள் - தப்பு
அப்ப இந்த வைப்பாட்டிஎங்கிருந்து வந்தாள்.
 
எனக்கு எதுவுமே புரியல்லை - பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மாதிரி ஒரே குழப்பம் (அதுவும் சனிக்கிழமை பின்னேரம்). ஆளை விடு சாமி.

 

 

 

பிறந்த தாய்நாடு - அம்மா

புகுந்த நாடு - பெண்டாட்டி

மறுபடியும் பிறந்த தாய்நாடு சென்றால்

எப்படி அம்மா வைப்பாட்டியாவாள் - தப்பு

அப்ப இந்த வைப்பாட்டிஎங்கிருந்து வந்தாள்.

எனக்கு எதுவுமே புரியல்லை - பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மாதிரி ஒரே குழப்பம் (அதுவும் சனிக்கிழமை பின்னேரம்). ஆளை விடு சாமி.

அம்மா - பிறந்த நாடு தமிழீழம் ( இப்ப நிரந்தர அடிமையாகீற்றாங்க)

பொண்டாட்டி - புகுந்த வீடு - புகலிடநாடு உதாரணம் கனடா

வைப்பாட்டி - தாயை அடிமையாக்கி சீரழித்த நாடு - நீங்களே புரிந்சுக்குங்க -

புகுந்த வீட்டில சீர்வரிசையோட இருந்து வாழ்ந்து அந்த காசை வைப்பாட்டிட்ட கொடுத்து அவ வீட்டில இருக்க ஒரு பாஸ் வாங்கி சுகம் அனுபவிச்சு கொண்டு அதுவும் பரவாயில்ல அது அவரவர் இஷ்ரம் என்றால் வைப்பாட்டின்ற தினாவெட்டில தனது அம்மாவையே (தமிழீழம் அடிமையாகி சின்னாபின்னபட்டு போன நாடு) அடிக்கடி ஒவ்வொரு திரியிலும் கேலிபண்ணும் ஒரு சில ஜென்மங்கள். தாயை அடிக்கடி கேலி பண்ணும் இந்த ஜென்மங்களுக்கு தனது வைப்பாட்டியை இங்கு யாழ்களத்தில் யாராவது கேலி பண்ணினால் ரொம்ப ரோசம் பொத்துக்கொண்டு வருதுங்க.ஏனுங்க?

அபூர்வராகங்கள் கதை புரிந்சுதாங்க.

Edited by trinco

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.