Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்து பழைய மாணவர்களுடன் மைத்திரி .-லண்டன்

Featured Replies

11067480_10153080870271327_1160318648740

10313684_10153080869846327_6468866112026

  • Replies 89
  • Views 7.2k
  • Created
  • Last Reply

பார்க்க சந்தோசமாக இருக்கு

ஆனால் இவர் ஏன் யாழ் இந்து பழைய மாணவர்களுடன் மட்டும் நின்று படம் எடுக்கின்றார், பரியோவான் கல்லூரி பழைய மாணவர்கள் என்றால் கொஞ்சம் இழக்காரம் போல...ஹ்ம்ம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11067480_10153080870271327_1160318648740

10313684_10153080869846327_6468866112026

யாருடைய முகத்தையும் அடையாளம் தெரியவில்லையே.. நமக்கும் வயது போகுதோ...

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யாரும் GTF ல் அங்கத்தினராகவோ, லண்டன் ஆர்ப்பாட்டத்திலோ கலந்துகொள்ளவில்லைதானே? :o:(

'இணக்கமா(ண)னவர்கள்' போலிருக்கு! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பாடசாலையாக இருந்தாலென்ன?

ஊராக இருந்தாலென்ன?

தேசமாக இருந்தாலென்ன?

தத்தமது உரிமைகளை மதித்து

மற்றவர்களது சுதந்திரங்களையும் மனதில் கொண்டு

ஒருவரை ஒருவர் முதுகில் குத்தாமல் 

தத்தமது நிலைகளிலிருந்து 

சந்திப்பது

சரி பிழைகளை  பேசுவது

வரவேற்கத்தக்கது தானே.....

  • தொடங்கியவர்

அன்பின் யாழ் இந்து மைந்தர்களே..!

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளையினராகிய நாம், நேற்று மார்ச் 8ம் திகதி ஞாயிறுக்கிழமை, யாழ் உதயன் பத்திரிகையில், எமது சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை 10ம் திகதி லண்டனில்,சிறீலங்கா ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என்ற செய்தி மிகவும் தவறானது என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அப்பட்ட பொய் செய்தி, இதன் பின்னணி, மற்றும் இதன் சூத்திரதாரிகள் யார் தொடர்பான விசாரணைகளுடன், மேற்படி பத்திரிகை ஆசிரியரின் பதிலையும் எதிர்பார்து இருக்கின்றோம். இது தொடர்பான முழு விபரம் எமக்கு கிடைத்தவுடன் உறுப்பினர்களுக்கு அறியத்தருவோம், எமது சங்கமானது எப்பொழுதும் எம் கல்லூரி, மற்றும் தமிழ் சமூகத்தின் நலத்தினை முதன்மைப்படுத்தியே செயல்படும் என்பதை ஆணித்தரமாக இங்கு கூறிக்கொள்கின்றோம்.

"கலைபயில் கழகமும் இதுவே.. தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே"

சபா சுகந்தன்

தலைவர்

யா.இ.க.ப.மா.ச (ஜ.இ)

09 மார்ச் 2015

ஒரு சில யாழ் இந்து பழைய மாணவர்களால் தான் இந்த சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டது .உத்தியோகபூர்வ பழைய மாணவர்கள் அமைப்பால் அல்ல.

இருந்தாலும் நல்லவிடயம் .

இனி இவர்களுடன் பேசாமல் எதையும் சாதிக்கமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பாடசாலையாக இருந்தாலென்ன?

ஊராக இருந்தாலென்ன?

தேசமாக இருந்தாலென்ன?

தத்தமது உரிமைகளை மதித்து

மற்றவர்களது சுதந்திரங்களையும் மனதில் கொண்டு

ஒருவரை ஒருவர் முதுகில் குத்தாமல் 

தத்தமது நிலைகளிலிருந்து 

சந்திப்பது

சரி பிழைகளை  பேசுவது

வரவேற்கத்தக்கது தானே.....

விசு ஐயா, நீங்கள் சொல்லும் வழவழா ஒன்னுமே புரியலை! :):D

இவர்கள் உங்கள் 'சன அதிபதி'யை சந்தித்தது தமிழர்களுக்கு நன்மை பயக்குமா? இல்லையா? :o

நனமையென்றால் இவர்கள் ஏன் மகிந்தாவை அப்பொழுது சந்திக்கவில்லை? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

11067480_10153080870271327_1160318648740

10313684_10153080869846327_6468866112026

கண்கொள்ளாக்காட்சி புல்லரிக்கிது

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாங்கோப்பா, யாழில் சிலரின் சுருதி நிலைமாறுது ? :icon_mrgreen:

வேறு வழி? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாங்கோப்பா, யாழில் சிலரின் சுருதி நிலைமாறுது ? :icon_mrgreen:

வேறு வழி? :lol:

என்ன செய்வது எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாப்போயிட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாப்போயிட்டம்

That's வாத்தியார்..! :icon_mrgreen:

அப்படியே மேலாக்க கொஞ்சம் சிந்தித்து, சிங்களவனோடு ஒன்னுக்குள் ஒன்னாக அப்பவே போயிருந்தால் இத்தனை லட்ச இன்னுயிர்கள் வாழ்ந்திருக்கலாமில்லையா? :rolleyes::lol::icon_idea:

சம்மந்தமில்லாதவா்கள் படங்களை போட்டு விலாசம் எழுப்பாமல் சந்திப்பில் நடந்த காரசாரமான விவாதத்தை பற்றி போட்டால் வரவேற்கத்தக்கது

இந்துவில் உண்மையாகக படித்திருந்தால் இப்படி பீத்தமாட்டார்கள்

இந்துவின் மைந்தர்கள் யாரிடமூம் சோரம் போகவும் மாட்டார்கள்

மைத்திரிக்கு வாக்களித்துவிட்டு வேறு யாரிடம் பேசுவது

ஓய்வு பெற்ற ஏல்லா சநாய்திபதிகளுடனம் தலைவர் பேச்சுவார்த்தை செய்யவில்லையா?

ஈழத்தில் மக்களின் துன்ப நிலமையை போக்குவதே கல்விமான்களின் நோக்கமாக இருக்கின்றது

இதில் எம்மில் சிலர் சம்மதிக்கவி்ல்லை, இதற்காக நாம் ஓரு முடிவுக்கு வருவோம்

நானும் 1980 முதல் 1987 வரை  யாழ் இந்துவில் கல்விகற்றிருந்தேன், ஆனால் இதில் உள்ள முகங்கள் எவரையும் தெரியவில்லை???

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தமில்லாதவா்கள் படங்களை போட்டு விலாசம் எழுப்பாமல் சந்திப்பில் நடந்த காரசாரமான விவாதத்தை பற்றி போட்டால் வரவேற்கத்தக்கது

இந்துவில் உண்மையாகக படித்திருந்தால் இப்படி பீத்தமாட்டார்கள்

இந்துவின் மைந்தர்கள் யாரிடமூம் சோரம் போகவும் மாட்டார்கள்

மைத்திரிக்கு வாக்களித்துவிட்டு வேறு யாரிடம் பேசுவது

ஓய்வு பெற்ற ஏல்லா சநாய்திபதிகளுடனம் தலைவர் பேச்சுவார்த்தை செய்யவில்லையா?

ஈழத்தில் மக்களின் துன்ப நிலமையை போக்குவதே கல்விமான்களின் நோக்கமாக இருக்கின்றது

இதில் எம்மில் சிலர் சம்மதிக்கவி்ல்லை, இதற்காக நாம் ஓரு முடிவுக்கு வருவோம்

எதிரியை வழிக்குக் கொண்டு வர நான்கு வழிகள் உள்ளன:

1)சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,

50களில் சிங்களம் இதத்தான் தமிழர்களிடம் செய்தார்கள்

2)தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்

60களில் பதவிகளைக் கொடுத்து ஏமற்றினார்கள்

3)பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்

70 களில் தரப்படுத்தல், சிங்கள முன்னுரிமை எனத் தமிழர்களை ஓரங்கட்ட ஆரம்பித்தனர்

4)தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்

80 களில் நான்காவது தண்டம் இயல்பாகவே ஆரம்பித்தது.

இப்போது மீண்டும் முதலில் இருந்து சாமத்தைக் கையில் எடுத்துள்ளார்கள்  

அப்படிப்பார்த்தால் புத்திசீவிகள் தான் முன்னுக்கு நிற்பார்கள்.

அன்று ராமநாதன் அருணாசலம் என்று ஆரம்பமாகியதைப்போல மீண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது?

யாழ் இந்து உட்பட்ட எங்கட சனத்தின்ற ஓட்டில வெண்டு, லண்டன் வந்திட்டமில்லே என்று அந்தாள் நன்றி உணர்வோட நிக்குது.

உங்க கதை, யாழ் இந்து சோரம் போகாதாம்......

மகிந்தருக்கு, அங்கே உறுதியான எதிர்ப்பு இருந்த போது நாமும் இங்கே எதிர்ததில் அர்த்தம் இருந்தது.

எமது மக்களின் பேராதரவுடன் தெரிவான ஒருவரை எதிர்ப்பது, எமது மக்களை நக்கல் பண்ணுவது போல் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர் குசுவினால் மணக்காது. தூ........

ஒரு முறை தமிழ் நாட்டில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது, ஆசிரியர்கள் சம்பள உயர்வுவேண்டி வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர், அது தீவிரமடைந்து பாடசாலைகள் எல்லாம் முடக்கப்பட்டவேளைமுதல்வர் ஆசிரியர் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், சம்பள உயர்வுக்கான நிதிமூலங்களை அதிகரிப்பதற்காக மதுக்கடைகளை அதிகரித்து சத்துணவுக் கொடுப்பனவில் சிறிது விகிததைக் குறைத்தால் சம்பள உயர்வுக்கான நிதி ஆதாரத்தை அதிகரிக்கலாம் என எம்ஜிஆரிடம் கூறினர்.

அதற்கு எம்ஜிஆர் அவர்கள் 

"உங்களுக்கு பப்பிருக்கு பம்பில்லை"  என்றுகூறி எழும்பிச் சென்றுவிட்டார்.

அவர் கூறியது இந்தப் பயனைக்கூட்டத்துக்கும் பொருந்தும்.

Edited by Elugnajiru

  • தொடங்கியவர்

மைத்திரி இலங்கையின் ஜனாதிபதி .யாழ் இந்து இலங்கையில் தான் இருக்கு . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைத்திரி இலங்கையின் ஜனாதிபதி .யாழ் இந்து இலங்கையில் தான் இருக்கு . :lol:

அப்படியா?....சொல்லவேயில்ல.... :lol:

இன்னாங்கோப்பா, யாழில் சிலரின் சுருதி நிலைமாறுது ? :icon_mrgreen:

வேறு வழி? :lol:

எவ்வளவு காலம் ஒரே  மாவை அரைக்கிறது அண்ணே விடுங்கோ   :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாங்கோப்பா, யாழில் சிலரின் சுருதி நிலைமாறுது ? :icon_mrgreen:

வேறு வழி? :lol:

வன்னியன் கண்ட கேள்விகளை கேட்டு.... ஆக்களை, இக்கட்டில் மாட்டி விடுகிறார். :lol:  :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

தவறானவற்றைச் செய்வதற்குரிய துணிவைவிட, நான் தவறு செய்துவிட்டேன் அதற்கான சூழ்நிலை அல்லது எனது சுயநலம் என ஏற்றுக்கொள்வதற்கு அதை நெஞ்சைநிமிர்த்திப் பொதுவெளியில் கூறுவதற்கு நெஞ்சுரம் வேண்டும் துணிவு வேண்டும்.

இங்கு யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும்,

என்னவெண்ட்டாலும்.... , என்னதான் இருந்தாலும்......, இவையள் செய்தது அவ்வளவு ஒண்டும் தவறாகப்படவில்லை......., அவையளுக்கும் என்ன பிரச்சனையோ..... இப்படியான சல்யாப்புக்களைச் சொல்லி, தங்கள் பாடசாலையின் ஒருசில பழைய மாணவர்களது செயல்களை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்காக யாழ் இந்து அன்னையின் மாணவர்கள் அனைவரையும் இந்த மந்தைகளுடன் சேர்க்கக்கூடாது.

இவர்கள் யாரோவொருவருடைய தூண்டுதலின் காரணமாக யாழ்குடாநாட்டில் படித்தவர்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்(?) எனும் மனப்போக்கை நன்றாகப் பாவிக்கத்தெரிந்த அதே படித்த சமூகத்தை துண்டாடுவதற்கான நோக்கில் குழுக்களை அதிகரித்துக் குளிர்காய இவர்களை உசிப்பிவிட்டிருக்கலாம்.

காலப்போக்கில் யாழ் இந்துமாணவர்கள் ஒன்றியம் சங்கம் கூட்டமைப்பு என ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் புலத்திலும் புலம்பெயர்தேசத்திலும் உருவாகலாம்.

அதற்கு இசைவான தளமாக யாழ்களத்தை மாற்றிவிட கள உறவுகள் முயற்சிக்கவேண்டாம்.

வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கருத்துக்களை மழுப்பல் இல்லாது பதியவும். செல்லவேண்டிய தூரம் மிகவும் நெடிதாகவும் புதிய சிக்கல்களை தமிழினம் எதிர்நோக்கியதாகவும் இருக்கின்றது.

தவிர மைத்திரியைச் சந்திச்ச யாழ் இந்துவின் மைந்தர்களைக் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் பாடசாலை இல்லை, தமிழீழத்தின் ஒவ்வொரு பாடசாலைகளும் தங்களுக்கெனச் சிறந்த பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டு இன்றளவும் மனிதங்களை உருவாக்குகின்றன.

இதில் யாழ் இந்துவின் சிறப்பு யாதெனில் காந்தி தேசத்துக்கே காந்தியத்தைச் சொல்லிக்கொடுத்த திலீபனைத் தமிழ் அன்னையின் தவப்புதல்வனாக்கி எங்களுக்குத் தந்த பாடசாலை,

நீங்கள் செய்யும், செய்ய நினைக்கும் ஒவ்வொரு விடையமும் அவனது ஆத்மாவைக் காயப்படுத்திவிடாதவையாக இருந்திடல்வேண்டும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இலங்கையின் ஜனாதிபதி .யாழ் இந்து இலங்கையில் தான் இருக்கு . :lol:

இது இப்பதானா தெரிஞ்சுது ........
இப்ப ஆச்சும் தெரிஞ்சிருக்கு.
 
அப்ப தெரிந்திருப்பின் 
1980களில் புளொட்டுக்கு போகாமல்.
ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு போயிருப்பீர்கள்.
 
என்ன உலக அரசியல் புல்லரிக்குது............
உலகத்திற்கு ஐ நா இருக்கு இலங்கை உலகில் இருக்கு 
என்பதை 2050இல் கண்டுபிடிக்கலாம். 
வாழ்த்துக்கள் !!!
  • கருத்துக்கள உறவுகள்

தவறானவற்றைச் செய்வதற்குரிய துணிவைவிட, நான் தவறு செய்துவிட்டேன் அதற்கான சூழ்நிலை அல்லது எனது சுயநலம் என ஏற்றுக்கொள்வதற்கு அதை நெஞ்சைநிமிர்த்திப் பொதுவெளியில் கூறுவதற்கு நெஞ்சுரம் வேண்டும் துணிவு வேண்டும்.

இங்கு யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும்,

என்னவெண்ட்டாலும்.... , என்னதான் இருந்தாலும்......, இவையள் செய்தது அவ்வளவு ஒண்டும் தவறாகப்படவில்லை......., அவையளுக்கும் என்ன பிரச்சனையோ..... இப்படியான சல்யாப்புக்களைச் சொல்லி, தங்கள் பாடசாலையின் ஒருசில பழைய மாணவர்களது செயல்களை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்காக யாழ் இந்து அன்னையின் மாணவர்கள் அனைவரையும் இந்த மந்தைகளுடன் சேர்க்கக்கூடாது.

இவர்கள் யாரோவொருவருடைய தூண்டுதலின் காரணமாக யாழ்குடாநாட்டில் படித்தவர்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்(?) எனும் மனப்போக்கை நன்றாகப் பாவிக்கத்தெரிந்த அதே படித்த சமூகத்தை துண்டாடுவதற்கான நோக்கில் குழுக்களை அதிகரித்துக் குளிர்காய இவர்களை உசிப்பிவிட்டிருக்கலாம்.

காலப்போக்கில் யாழ் இந்துமாணவர்கள் ஒன்றியம் சங்கம் கூட்டமைப்பு என ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் புலத்திலும் புலம்பெயர்தேசத்திலும் உருவாகலாம்.

அதற்கு இசைவான தளமாக யாழ்களத்தை மாற்றிவிட கள உறவுகள் முயற்சிக்கவேண்டாம்.

வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கருத்துக்களை மழுப்பல் இல்லாது பதியவும். செல்லவேண்டிய தூரம் மிகவும் நெடிதாகவும் புதிய சிக்கல்களை தமிழினம் எதிர்நோக்கியதாகவும் இருக்கின்றது.

தவிர மைத்திரியைச் சந்திச்ச யாழ் இந்துவின் மைந்தர்களைக் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் பாடசாலை இல்லை, தமிழீழத்தின் ஒவ்வொரு பாடசாலைகளும் தங்களுக்கெனச் சிறந்த பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டு இன்றளவும் மனிதங்களை உருவாக்குகின்றன.

இதில் யாழ் இந்துவின் சிறப்பு யாதெனில் காந்தி தேசத்துக்கே காந்தியத்தைச் சொல்லிக்கொடுத்த திலீபனைத் தமிழ் அன்னையின் தவப்புதல்வனாக்கி எங்களுக்குத் தந்த பாடசாலை,

நீங்கள் செய்யும், செய்ய நினைக்கும் ஒவ்வொரு விடையமும் அவனது ஆத்மாவைக் காயப்படுத்திவிடாதவையாக இருந்திடல்வேண்டும்.

இதில் மூன்றுபேர்கள் இந்துவில் படித்தவர்கள் இருக்கலாம் ....
அந்த பெயரை  வைத்து அவிப்பதுதான் அவனது நோக்கம்.
அவன் அரை அவியல் அவிச்சாலே போதும்............
 
படிச்சனான் பேர்வழி தமிழன் .....
மீதம் அவிப்பான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
 
2009இல் சம்மந்தன் சிங்க கொடி ஆட்டி தமிழனுக்கு கிடைத்து என்ன????
சொகுசா சிங்களத்தின் முதுகில் சம்மந்தன் மட்டும் சவாரி செய்கிறார்.
விட்டாஅதனால்தான் யாழ்பாணத்தில் மழை பெய்தது என்று பினாத்த இங்கு ஒரு கூட்டம் எப்போதும் உண்டு. 
*************
 
நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்மான், ராதா அண்ணா போன்றோர் படித்த பாடசாலை இந்த படத்தில் இருப்பவர்களில் சிலர் அவர்களுடன் படித்திருக்கலாம் காலம் கடந்தால் எல்லாம் மறந்துபோகுமா ........?  :(

  • கருத்துக்கள உறவுகள்

விசு ஐயா, நீங்கள் சொல்லும் வழவழா ஒன்னுமே புரியலை! :):D

இவர்கள் உங்கள் 'சன அதிபதி'யை சந்தித்தது தமிழர்களுக்கு நன்மை பயக்குமா? இல்லையா? :o

நனமையென்றால் இவர்கள் ஏன் மகிந்தாவை அப்பொழுது சந்திக்கவில்லை? :huh:

வணக்கம் ராசவன்னியன்

உரிமையோடு ஒரு கேள்வி....

அதற்கொரு பச்சை.....

எல்லாத்திற்கும் சேர்த்து பதில்....

தலைவரின் வழி  நடந்தவர்கள் தமிழர்கள்

ஒவ்வொருமுறையும் சிறீலங்காவில் ஆட்சி மாறி புதிய அரசோ அல்லது புதிய ஐனாதிபதியோ வந்தால்

மாவீரர் நாள் பேச்சில் தலைவர் அவர்களை வரவேற்பார்

தமிழர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்

நம்புகிறார்கள்

தமக்கும் புதியவர் ஏதாவது செய்வார் என  எல்லா மக்களையும் போல வாழவழி வரும் என ஏங்கிக்காத்திருக்கிறார்கள்.... என சொல்லி

போரை நிறுத்தியோ

புதிய தாக்குதல்களைச்செய்யாமலோ

புதியவரது வருகைக்கு இடைஞ்சல் செய்யாதபடி

ஆகக்குறைந்தது

அவரது ஆதரவை தாமாக கெடுத்ததாக இல்லாதபடி நடந்து கொள்வார்

இது தான் காலம் காலமாக நடந்தது..

இப்போ அவர் தாயகத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்....??

தமிழரின் சயநிர்ணயப்போராட்டத்தை முழுமையாக அறிந்தவர்கள்

உணர்ந்தவர்கள் 

சிங்களத்துடன் பேச்ச நடாத்தித்தான் முடிவு கிடைக்கும் என்பதை உணர்வர்

(அது ஆயுதப்போராக இருந்தால் கூட)

எனக்கு இதில் பங்கு கொண்ட ஒருவரைத்தெரியும்

அவரது கடந்த கால வாழ்க்கை பற்றி தெரியும்

எனவே தான் இவ்வாறு எழுதினேன்.

எந்த பாடசாலையாக இருந்தாலென்ன?

ஊராக இருந்தாலென்ன?

தேசமாக இருந்தாலென்ன?

தத்தமது உரிமைகளை மதித்து

மற்றவர்களது சுதந்திரங்களையும் மனதில் கொண்டு

ஒருவரை ஒருவர் முதுகில் குத்தாமல் 

தத்தமது நிலைகளிலிருந்து 

சந்திப்பது

சரி பிழைகளை  பேசுவது

வரவேற்கத்தக்கது தானே.....

நன்றாக மீண்டும்  படியுங்கள்..

நாம் தெளிவாக இருந்தால்

நமது குறியில் உறுதியாக இருந்தால்

கொழும்பிலும் போய் ஆயுதங்களுடன் இறங்கி வரவேற்புப்பெறமுடியும்..

இது தான் வரலாறு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.