Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இருந்து 255 ஆக அதிகரிக்க இணக்கம் - விகிதாசார முறை இரத்து?

Featured Replies

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இருந்து 255 ஆக அதிகரிக்க இணக்கம் - விகிதா
சார முறை இரத்து?

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் விகிதாசார முறை இரத்துச் செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. தொகுதி வாரியாக 160 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 22 மாவட்டங்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 70 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலமாக 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

20 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பெண்களை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்த தேர்தல் முறை மாற்றத்தை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இது சம்பந்தமாக இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இறுதியாக 1977 ஆம் ஆண்டு தொகுதிவாரி தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் 154 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

147 தொகுதிகளில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் சங்கம் ஒரு தொகுதியில் வென்றது. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றிபெற்றிருந்தார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி என்பன போட்டியிட்ட எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlwzB.html

ஆகா என்னும் 30 கள்வர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
ஆகா என்னும் 30 கள்வர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது  :icon_idea:

அதுபோக.. 20 சுமந்திரன்கள்.. கருணாக்கள்.. நாடு தாங்குமா என்ன..?!  :rolleyes:  :lol:

உந்த தேசிய பட்டியல் அவசியம் இல்லை. இது ஜனநாயக விரோதமானது. மக்கள் தெரிவற்றோர் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடியும்.. மக்கள் அளித்த வாக்குகளின் வீதாசாரத்தை பற்றிப்பிடிச்சு.. மக்கள் விரோதிகள் நாடாளுமன்றம் செல்வது ஜனநாயகமா..??!  :icon_idea:

ஒட்டுமொத்த.. நாடாளுமன்ற பிரநிதித்துவம் கூடுது.. யாழ்ப்பாணத்தை ஒட்டிய வடக்கில்.. குறையுது..??!  :o  :(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஆம் சரியாக சொன்னீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால்.. இரண்டைக் குடியுரிமை பெற்று வாக்குப்போடுங்கள் என்று.. சொறிலங்கா மாதாவின் புதல்வர்கள் இங்கு வகுப்பெடுப்பார்கள்.

பிரிட்டனில்.. காமன்வெல்த் நாட்டு பிரஜைகள்.. பிரிட்டனில் வசித்தால் பிரிட்டன் தேர்தல்களில் பங்குபற்றி.. வாக்களிக்க முடியும். சொறிலங்காவில் மட்டும்.. அந்த நாட்டில் பிறந்த மக்கள்.. வெளிநாட்டில் வாழ்ந்தால்.. வாக்களிக்க முடியாமல்.. சொறித்தனமான காரணங்கள்.. கண்டுபிடிக்கினம்.. ம்ம்.. இதெல்லாம் ஜனநாயக நாடு.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஐயோ அண்ணை சொறிலங்கா எண்டு சொல்லிப்போடாதேங்கோ....

கந்தகத்தை கட்டிக்கொண்டு நிக்குறானுகள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் 2 எம்பிக்களைக் குறைக்கவும் போகிறார்களாம். தமிழ்பகுதியில் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து சிங்களப் பகுதிகளில் அதிகரிக்கப் போகிறார்கள். அது மட்டுமல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிலும் பார்க்க தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகும் உறுப்பினர்கள்.தங்களுக்கு விசுவாசமாக வாலாட்டுவார்கள் என்பதும் உண்மை. எதற்கு இந்த தேசியப் பட்டியல்?

குடு விப்பவர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அண்ணை சொறிலங்கா எண்டு சொல்லிப்போடாதேங்கோ....

கந்தகத்தை கட்டிக்கொண்டு நிக்குறானுகள்

அவை எல்லாம் கனடா பாஸ்போட் கையில இருக்கென்ற துணிவில.. சொறிலங்காவுக்கு முதுகு சொறியுறவை. அவைட நடப்பெல்லாம் எங்களுக்கெல்லோ தெரியும். 90 களில் யுத்தம் ஆரம்பித்த போது உப்படி கனடா பாஸ்போட்டில் ஊருக்கு வந்து நடப்புக்காட்டினவை.. செல்லடிக்கு.. பொம்பர் அடிக்கு பயந்து ஓட வெளிக்கிட.. பாதையைப் பூட்டிட்டானுகள். அப்புறம்.. ருகுண.. குமண கப்பல்களில் வெங்காய மூட்டையா தொத்திப் போனவை தான் உவை. இப்ப மீண்டும் வந்திருக்கினம்..! உவைட.. கதையில கந்தகத்தை என்ன.. அணுகுண்டையே கட்டி அடிப்பினம்.  :D  :lol:

குடு விப்பவர்களுக்கு

குடு விக்கிறவனை சாதாரணமாச் சொல்லிப்போடாதேங்க. கொழும்பில.. முழு அரசியல் மேடைகளும் அவங்கள் தான் போடுறாங்கள். அவங்கள நம்பித்தான்.. சிங்கள பெளத்த பெருந்தேசிய அரசியலே..! அதுக்கு இப்ப..முதுகு சொறியுறது தமிழ் தேசிய லோக்கள் கட்சிகள்.  :lol:  :icon_idea:

  • தொடங்கியவர்

மீண்டும் சொறிலங்காவுக்கு சுதந்திரமாக சென்றுவரும் இவர்கள்

என்னுமொரு பிரச்சினை வராது இருக்கவா இந்தமண்வாசனை

ஆகா...

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொறிலங்காவுக்கு சுதந்திரமாக சென்றுவரும் இவர்கள்

என்னுமொரு பிரச்சினை வராது இருக்கவா இந்தமண்வாசனை

ஆகா...

சேவையர் பார்த்து,பார்த்து உங்க கணசனம்.....

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில்

மக்களால் தெரியப்படாதவர்கள் எப்படி ஒரு ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம் செல்ல முடியும்?

நல்ல விடயம் அரசியல் தெரிந்தர்களுக்கு மட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் அரசியல் தெரிந்தர்களுக்கு மட்டும் .

டக்ளஸ் போன்றவர்களை உள்ளே நுழைய விட நல்ல அரசியல் தேவையாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவை எல்லாம் கனடா பாஸ்போட் கையில இருக்கென்ற துணிவில.. சொறிலங்காவுக்கு முதுகு சொறியுறவை. அவைட நடப்பெல்லாம் எங்களுக்கெல்லோ தெரியும். 90 களில் யுத்தம் ஆரம்பித்த போது உப்படி கனடா பாஸ்போட்டில் ஊருக்கு வந்து நடப்புக்காட்டினவை.. செல்லடிக்கு.. பொம்பர் அடிக்கு பயந்து ஓட வெளிக்கிட.. பாதையைப் பூட்டிட்டானுகள். அப்புறம்.. ருகுண.. குமண கப்பல்களில் வெங்காய மூட்டையா தொத்திப் போனவை தான் உவை. இப்ப மீண்டும் வந்திருக்கினம்..! உவைட.. கதையில கந்தகத்தை என்ன.. அணுகுண்டையே கட்டி அடிப்பினம்.  :D  :lol:

அப்ப பேராதனை பல்கலைக்கழகத்தின்

சிங்கள பேராசிரியர்களின்

சிபாரிசு கடதாசியைக் காட்டி

படிக்க வந்துட்டு ஸ்கொலர்சிப்பு அது இதுன்னு

பேய் காட்டுகின்றவர்கள்

யுத்தத்துக்கு பயந்து ஓடிப் போனவர்கள்

இல்லயோ அண்ணை?

(அந்த ஸ்கொலர்சிப் பெயர் என்ன?)

  • கருத்துக்கள உறவுகள்
இந்த கருத்தில் நான்கு   விடயம் இருக்கிறது.
 
1) ஒரு ஜனநாயக நாட்டில் ஜனனங்களின் ஒப்புதல் இன்றி ஒருவர் அரசியல் செய்வது நல்ல விடயம்.
 
2) எனக்கு அரசியல் நன்றாக தெரியும். 
 
3) எனக்கு அரசியல் என்றால் என்ன என்றுதெரியாது என்பது. 
 
4) எனக்கு  இலங்கை சாசனம் என்றால் என்ன என்றே தெரியாது. 

நல்ல விடயம் அரசியல் தெரிந்தர்களுக்கு மட்டும் .

ut

81.52%   120px-Maithripala_Sirisena_%28cropped%29 127px-Mahinda_Rajapaksa.jpg Nominee Maithripala Sirisena Mahinda Rajapaksa Party New Democratic Front Sri Lanka Freedom Party Alliance The Common Candidate[N 1]United People's Freedom Alliance Home state North Central Province Southern Province States carried 12[N 2] 10 Popular vote 6,217,162 5,768,090 Percentage 51.28% 47.58%

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழரின் சுதந்திரமான வாழ்வு மற்றும் நம் இனத்தின் சுபீட்ச்சத்தின் திறவுகோல் தமிழ் தலைவர்களின் கைகளில் தான் இருந்தது. அவர்கள் அதை பயன்படுத்த தவறியதன் பலாபலன்களை தான் இப்போது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.ஆயுத போராட்டம் பயனளிக்காதபோது பேச்சுவார்த்தைகளோ இணைக்க அரசியலோ குறிப்பிட்டு சொல்லும்படியான பலாபலன்களையும் கொடுப்பதாக தெரியவில்லை. இந்த நிலைமை தொடர்ந்து செல்லும் பட்சத்தில் உகந்த அரசியல் வியூகங்களை அமைக்கவும் எமது அரசியல் தலைவர்களுக்கு நாதியில்லை. நம் இளைய சமுகம் இனி வரும் காலங்களில் ஒரு முடிவை எடுக்கவேண்டிய அவசியம் நிச்சயம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

Mother of all Parliaments - எது தெரியும்தானே ?யூகே பாராளுமன்றம் . இங்கே இருக்கும் மேல்சபை House of Lords முற்று முழுதாக தேர்தலில் நிக்காத நியமன பிரபுக்களை கொண்டது. இந்தியாவில் ராஜ்ய சபாவும் இப்படியே.

யூகே யில் கொமென்வெல்த சிட்டிசன் வோட்டு போடலாம் ஏனென்றால் அது காலனித்துவ காலத்தில் இருந்து இருக்கும் நடைமுறை. ஆனால் 100 வருடம் வாழ்தாலும் பொது தேர்தலில் ஒரு ஈயூ பாஸ்போர்ட் காரர் வோட்டுப் போட இயலாது.

இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நடைமுறை இருக்கு. கத்துக்குட்டிதனமா விக்கிபீடியாவை மேஞ்சிட்ட்டு எழுதுற ஆக்களுக்கு தேசிய பட்டியலின் தாற்பரியம் புரியாதுதான்.

தேர்தல் அரசியலில் வெல்ல முடியாத துறைசார் வல்லுனர்களை பாரளுமன்றில் அமர்த்தும் ஒரு நல்ல முறையே இது.

Democracy is not the rule of majoritariism, it's the application of the will of the majority, whilst protecting the interests of the minority.

இதில் மெஜோரிட்டி, மைனோரிட்டி என்றால் இனத்தை குறிக்கவில்லை மாறாக மக்கள் கருத்தை குறிக்கிறது.

தேசிய பட்டியல் ஒரு கத்தி போல. பாவிக்கும் முறையில் இருக்கு நன்மை தீமை.

நல்ல பாவிப்பு - சுமந்த்ஹிரன், நீலன், ராஜீவ விஜயசிங்க தேர்வு

தீய பாவிப்பு - கருணா, அஸ்வர் இத்யாதிகள்

இதுதான் பிரச்சனையே ......
நீரைப்ற்றி தெரியாதவர் எப்படி நீர்பாசனத்திட்கு தேசிய பட்டியலால் வரமுடியும் ?

அமெரிக்காவில் ஜெனதிபதியே மக்களால் தேர்வு செய்யபடுவதில்லை.
பிரச்சனை அது அல்ல...
 
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பெரும்பாலாநாட்டில் இருக்கும் நடைமுறைதான் இது.

நீங்கள் சொல்பது போல் American electoral college முறையும் இந்த நடைமுறையின் திரிபே.

ஆனால் - இலங்கையின் சாபக்கேடு - எல்லா முறைகளையும் தப்பாகவே பயன்படுத்துவோம்.

தப்பு கத்தியில் இல்லை - வெட்டுபவன் மீது

பாராளுமன்றம் நீரை பற்றி தெரியாதவர்களால் நிரம்பி இருக்கும் போது - நீர்பாச இலகாவின் நன்மை கருதி - நீர்பாசனம் தெரிந்த ஒருவரை உள்ளே கொண்டு வரும் முறையே தேசியப் பட்டியல்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப்பட்டியலின் நன்மை தீமை பற்றி சிந்திக்கவேண்டியவன் பெரும்பான்மை இனத்தவன் மட்டுமே...

நமக்கெதற்கு.....??

சிறுபான்மையினருக்கு என்ன இருக்கு அதில்??

அதை வேண்டுமானால் பேசலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பெரும்பாலாநாட்டில் இருக்கும் நடைமுறைதான் இது.

நீங்கள் சொல்பது போல் American electoral college முறையும் இந்த நடைமுறையின் திரிபே.

ஆனால் - இலங்கையின் சாபக்கேடு - எல்லா முறைகளையும் தப்பாகவே பயன்படுத்துவோம்.

தப்பு கத்தியில் இல்லை - வெட்டுபவன் மீது

இதுதான் உண்மை .

வெட்டுரவங்களை உள்ளே விடுவிட்டு 
பின்பு வெட்டுகிறார்கள் என்று ஒப்பாரி வைப்பதில் என்ன பயன் ?
 
தேசிய பட்டியலை  துறைசார்ந்து (துறைசார் நிபுணர்) ஆதரித்தால் 
 
அவர்களுக்கு அடிப்படை தகுதி என்று ஒன்றை அறிவிக்க வேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்
அவை எல்லாம் கனடா பாஸ்போட் கையில இருக்கென்ற துணிவில.. சொறிலங்காவுக்கு முதுகு சொறியுறவை...
 
உங்கள் எழுத்துக்கள் ஒன்றும் பிரித்தானியாவில் புலமை பரிசில் கிடைத்து பட்டம் பெற்றதை போல தெரியவில்லையே...
 
எங்கள் ஊரில் ஒரு பாபர் ஷாப் கடை இருந்தது அவரும் இப்படிதான் ஆட்டுப் புளுக்கைக்கும் அமேரிக்கா அரசியல் கலந்து பேசுவார்... அப்படி ஒரு ஞானம்.. ஒரே தமாஸு  தான் போங்க ...

Mother of all Parliaments - எது தெரியும்தானே ?யூகே பாராளுமன்றம் . இங்கே இருக்கும் மேல்சபை House of Lords முற்று முழுதாக தேர்தலில் நிக்காத நியமன பிரபுக்களை கொண்டது. இந்தியாவில் ராஜ்ய சபாவும் இப்படியே.

யூகே யில் கொமென்வெல்த சிட்டிசன் வோட்டு போடலாம் ஏனென்றால் அது காலனித்துவ காலத்தில் இருந்து இருக்கும் நடைமுறை. ஆனால் 100 வருடம் வாழ்தாலும் பொது தேர்தலில் ஒரு ஈயூ பாஸ்போர்ட் காரர் வோட்டுப் போட இயலாது.

இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நடைமுறை இருக்கு. கத்துக்குட்டிதனமா விக்கிபீடியாவை மேஞ்சிட்ட்டு எழுதுற ஆக்களுக்கு தேசிய பட்டியலின் தாற்பரியம் புரியாதுதான்.

தேர்தல் அரசியலில் வெல்ல முடியாத துறைசார் வல்லுனர்களை பாரளுமன்றில் அமர்த்தும் ஒரு நல்ல முறையே இது.

Democracy is not the rule of majoritariism, it's the application of the will of the majority, whilst protecting the interests of the minority.

இதில் மெஜோரிட்டி, மைனோரிட்டி என்றால் இனத்தை குறிக்கவில்லை மாறாக மக்கள் கருத்தை குறிக்கிறது.

தேசிய பட்டியல் ஒரு கத்தி போல. பாவிக்கும் முறையில் இருக்கு நன்மை தீமை.

நல்ல பாவிப்பு - சுமந்த்ஹிரன், நீலன், ராஜீவ விஜயசிங்க தேர்வு

தீய பாவிப்பு - கருணா, அஸ்வர் இத்யாதிகள்

சொறிலங்காவின் எல்லாத்தையும் தூக்கி ஆதரிக்க இந்த பிரசங்கிக்கு கீ குடுத்தருக்கினம். அது சார்ஜ் முடியும் வரை நல்லாட்சி வாலாட்டி வருகுதுங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.