Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இந்துக்கல்லூரியில் 'சபாலிங்கம் அரங்கம்' திறந்துவைப்பு

Featured Replies

155th%20hindu%20ghggh878744.jpg

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்ததைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி முன்னாள் அதிபர்களில் ஒருவரான சபாலிங்கம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட சபாலிங்கம் அரங்கம் இன்று வெள்ளிக்கிழமை பகல் முன்னாள் அதிபர்களில் ஒருவரான க.பொன்னம்பலத்தினால் திறந்து வைகப்பட்டது.
 
முன்னதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் பொன்னம்பலம் தம்பதியரும், சிறப்பு விருந்தினர்களாக சபாலிங்கத்தின் புத்திரர்களான வைத்திய கலாநிதி ஜோதிலிங்கம், ஜெயலிங்கம், அபயலிங்கம் மற்றும் புதல்விகளான திருமதி கற்பகாம்பிகை புவனேந்திரராசா, திருமதி ஜெகதாம்பிகை ஆனந்த பாஸ்கரன், திருமதி கலைச்செல்வி நவேந்திரன் மற்றும் மருமக்கள் பேரப்பிள்ளைகளும் கலந்துகொண்டார்கள்.
 
நினைவுக்கல்லை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அதிபர் பொன்னம்பலம் திரை நீக்கம் செய்து வைக்க, மண்டபத்தை மகன் ஜோதிலிங்கம் திறந்து வைத்தார். விழா சிறப்பு மலரை பிரதம விருந்தினர் வெளியிட்டு வைக்க பழைய மாணவனும் யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபருமான கே.சண்முகநாதன் பெற்றுக் கொண்டார். அமரர் சபாலிங்கத்தின் திருவுருவுப் படத்திற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்லூரி பழைய மாணவனுமான ஈ.சரவணபவன் மலர் மாலை அணிவித்தார்.
 
155th%20hindu%20ghggh878746.jpg
 
155th%20hindu%20ghggh878747.jpg
 
155th%20hindu%20ghggh878742.jpg
 
155th%20hindu%20ghggh878741.jpg
 
155th%20hindu%20ghggh878745.jpg
 
155th%20hindu%20ghggh878743.jpg
 
sabalingam%20arangam%205586d.jpg
 
 
sabalingam%20arangam%205585d.jpg
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்..

நல்லவிடயம் .

நன்றி மாமா குடும்பத்திற்கு .

 

  • கருத்துக்கள உறவுகள்

சபை அடக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எல்லோருக்கும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
ஹேய், எங்கண்ட பொன்னர்.....
 
Long live and God bless you Sir!  :)
  • கருத்துக்கள உறவுகள்

மண்டபம் திறப்பு நல்ல விடயம். இதனை குடும்ப விவகாரங்களாக்காமல் இருப்பது நல்லது.

 

யாழ் இந்துக்கல்லூரி.. வடக்கில்.. முழுத் தமிழர்களின் சொத்து.

 

கல்லூரி வகுப்பறைகள்.. ஊத்தையா... அடிப்படை கரும்பலகைகள் கூட ஒழுங்கின்றி இருக்கின்றன.

 

normal_Jaffna_Hindu_College_May_2014_18.

 

normal_Jaffna_Hindu_March_2015_13.jpg

 

http://jaffnahindu.org/php/imggal/thumbnails.php?album=127

 

http://jaffnahindu.org/php/imggal/thumbnails.php?album=148

 

அவற்றை மேற்கு நாடுகளில் உள்ள தரத்துக்கு தரமுயர்த்துவதன் மூலம் எதிர்கால  மாணவ சமூகம்.. எதிர்கால சமூகத்திற்கும் உலகிற்கும் ஏற்ற வகையில் தன்னை வளர்க்க முடியும்.

 

அவற்றில் கவனம் செலுத்தலாமே...?!

 

பழையவர்களை கெளரவிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்.. காலாவதியானவர்களை சுற்றி குதிரை ஓட்டும் பழைய நடவடிக்கைகளில் இருந்து யாழ் இந்து கல்லூரி மாறுபட்டு.. அவற்றை அளவோடு வைத்துக் கொண்டு.. இன்றைய தலைமுறையைக் கொண்டு எதிர்கால தலைமுறையின் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுவது அவசியம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  இந்துக் கல்லூரியில் புளக்குக்கு ஒரு அனைத்து நவீன வசதிகளும் கொண்ட.. விரிவுரை மண்டம் அமைக்கப்பட்டு மாணவர்கள்.. அதில் பயில்விக்கப்படுவதும்.. பயிற்சிகள் பெறுவதும்.. அவசியம். அவை அவர்கள் பல்கலைக்கழகங்களில் தொழில்இடங்களில்.. உள்ள சூழலை இலகுவில் புரிந்து கொள்ள உதவும். திறமைகளை கூச்சம்.. தயக்கமின்றி வெளியிடவும் உதவும். :icon_idea:

Edited by nedukkalapoovan

10417471_820416681344824_713220329196183


11050823_820419251344567_862745469546342

  • கருத்துக்கள உறவுகள்

வாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்....!

 

என்றென்றும் வாழியவே...!

தயாளன் ,ஐங்கரநேசன் ,சந்தியாப்பிள்ளை மாஸ்டர் ,பரமானந்தம் மாஸ்டர் .


11133749_820419451344547_168902446304457

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் பொன்னம்பலம் மற்றும் சந்தியாப்பிள்ளை ஆசிரியர் இருவரும்
அன்று போல இன்றும் இளமையாக இருகின்றனர்.
பழைய ஆசிரியர்களை மீண்டும் பார்க்கும்போது மனதில் ஒரு சந்தோசம்.
இருந்தாலும் பொன்னரிடமும் சந்தியாப்பிள்ளை ஆசிரியரிடமும் வாங்கிய

அடிகளும் மனதில் வந்து போகின்றன :) .
இணைப்பிற்கு நன்றிகள் அர்ஜுன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு அரசியல் என்றால் அதில் தாங்கள் தான் மேதாவிகள்..

 

சிலருக்கு யாழ் இந்து என்றால் தங்கள் அப்பன் வீட்டு சொத்து.. தாங்கள் செய்வது மட்டும் தான் உதவி..

 

சிலருக்கு.. சுயதம்பட்டமே கல்லூரியின் உயர்வு.

 

ஆனால் கல்லூரி மாணவர்களுக்கான அடிப்படை விடயங்கள் பலவற்றில் 21ம் நூற்றாண்டின் தேவைக்கு இன்னும் தரமுயர பல்வேறு முயற்சிகள் தேவைப்படுகிறது. அண்மையில்.. (2014 இல்) பொறுப்பேற்ற புதிய அதிபரின் வேண்டுகோளும் இதே.

 

கட்டடங்களை அரங்குகளை அமைத்தால் மட்டும் போதாது.. அதனை திறந்து வைத்து படம் காட்டினால் மட்டும் போதாது.. மாணவர்களின் கற்கை வசதிகளை நவீன தொழில்நுட்ப உலகிற்கு அமைய மாற்றி அமைக்க வேண்டும்.

 

கல்லூரின் சுற்றுப்புறமும்..  மாணவர் வகுப்பறைகளும்.. அடிப்படை வசதிகள் இன்றி உள்ள நிலையில்...அரங்குகளை கட்டி என்ன பயன்..?! அங்கினை அரசியல்வாதிகளுக்கு பொய்களை.. நீட்டி முழக்க.. வாடகைக்குவிடவா..?! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

புதிய அதிபரின் வேண்டுகோள்... :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாட்டில உயர்ந்த நிலையில் உள்ள சகலரும் பாடசாலைக்கு உதவ முன்வருவதில்லை...என்பதை தாயக பாடசாலை அதிபர்கள் உணரவேண்டும் ....தாழ்ந்த நிலையில் உள்ள பலர் முடிந்தளவு உதவுகிறார்கள் என்பதை உணரவேண்டும்

சிலருக்கு அரசியல் என்றால் அதில் தாங்கள் தான் மேதாவிகள்..

 

சிலருக்கு யாழ் இந்து என்றால் தங்கள் அப்பன் வீட்டு சொத்து.. தாங்கள் செய்வது மட்டும் தான் உதவி..

 

சிலருக்கு.. சுயதம்பட்டமே கல்லூரியின் உயர்வு.

 

ஆனால் கல்லூரி மாணவர்களுக்கான அடிப்படை விடயங்கள் பலவற்றில் 21ம் நூற்றாண்டின் தேவைக்கு இன்னும் தரமுயர பல்வேறு முயற்சிகள் தேவைப்படுகிறது. அண்மையில்.. (2014 இல்) பொறுப்பேற்ற புதிய அதிபரின் வேண்டுகோளும் இதே.

 

கட்டடங்களை அரங்குகளை அமைத்தால் மட்டும் போதாது.. அதனை திறந்து வைத்து படம் காட்டினால் மட்டும் போதாது.. மாணவர்களின் கற்கை வசதிகளை நவீன தொழில்நுட்ப உலகிற்கு அமைய மாற்றி அமைக்க வேண்டும்.

 

கல்லூரின் சுற்றுப்புறமும்..  மாணவர் வகுப்பறைகளும்.. அடிப்படை வசதிகள் இன்றி உள்ள நிலையில்...அரங்குகளை கட்டி என்ன பயன்..?! அங்கினை அரசியல்வாதிகளுக்கு பொய்களை.. நீட்டி முழக்க.. வாடகைக்குவிடவா..?! :lol::icon_idea:

உண்மையான ஒரு இந்து மாணவனின் நிதர்சனமான வெளிப்பாடு.  :icon_idea: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான ஒரு இந்து மாணவனின் நிதர்சனமான வெளிப்பாடு.  :icon_idea: 

 

யாழ் இந்து பழைய மாணவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சுயதம்பட்டம் அடிப்பவர்கள் என்று எனக்கு இங்கே யாழ் இணையத்தில் அவர்களது கருத்துக்களை வாசிக்கும்போது விளங்குகின்றது. சுயதம்பட்டம் அடிப்பதில் ஒரு யாழ் இந்து பழைய மாணவன் மற்றைய யாழ் இந்து பழைய மாணவனுக்கு சளைத்தவன் அல்ல என்பதை நீங்கள் அவர்களது கருத்துக்களை உன்னிப்பாக வாசிக்கும்போது விளங்கிக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.  :D  :icon_idea:

 

 

இங்கே பாருங்கள், புதிய அதிபரின் வீடியோவில் (3:50) அவர் எப்படி தம்பட்டம் அடிக்கின்றார் என்று.

 

"இந்த கல்லூரியிலே படிக்கின்ற மாணவர்கள்தான் உண்மையிலே உலகம் முழுவதும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக கடந்த காலத்திலும் இருந்திருக்கின்றார்கள், இனியும் வரப்போகின்றார்கள். "

 

அதிபரே இப்படி தம்பட்டம் அடிக்கும்போது மாணவர்கள் எப்படி தம்பட்டம் அடிப்பார்கள்?  :D  :icon_idea:

 

இங்கே நான் தம்பட்டம் அடிப்பது பிழை என்று சொல்லவரவில்லை. எல்லாருமே அதைச்செய்கின்றார்கள் என்றுதான் சொல்லவருகின்றேன்.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவின் பழைய மாணவர் பெருமைப்படுவதில் தவறு என்ன இருக்கிறது? அது ஒரு பிறவிப் பயன்!

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச்சிங்கழவன் அப்பவே ஈழத்தை பிரிச்சு கொடுத்திருந்தால் இப்ப அவன் முழு இலங்கையையும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஆண்ன்டிருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தியடி கிழவி -hats off.

சிங்கமே போத்திக்கிட்டுப் போக எலி அம்மணமா டான்ஸ் ஆடிச்சாம்.

இலங்கையில் உள்ள பாடசாலைகளை தரவரிசைப் படுத்தினாலே யாழ் இந்து முதல் பத்துகுள்ள வராது.

உலகத்தில எத்தனை பெரிய பெரிய பாடசாலைகள் எல்லாம் இருக்கு.

இவங்க சுய தம்பட்டம் தாங்க முடியல.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் எரிச்சல்ல விடுற உல்ட்டா கதை! எப்பவும் எங்கேயும் இந்துதான் நம்பர் வண்! :D

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு.. சுயதம்பட்டமே கல்லூரியின் உயர்வு.

 

 

யாழில் தமிழ் விளக்கம் குறைந்த நிலையில்.. சிலர் கருத்தாளர்களை சீண்டும் வகையில் கருத்து வைப்பதையே அதிகம் விரும்புகின்றனர் போல் தெரிகிறது.

 

சுயதம்பட்டத்தை கல்லூரியின் உயர்வு என்று காட்டுவதையே தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளோம்.

 

யாழ் இந்துக் கல்லூரி உயர்தரப் பெறுபேற்று அடிப்படையில் அகில இலங்கையில் முதல் 5 க்குள் இருந்துள்ளது.

 

மேலும் சிறீலங்கா கல்வி நிறுவனங்கள் உலக தரத்தில் பிந்தங்கியே உள்ளன.

 

http://studentlanka.com/2014/08/05/world-ranking-of-sri-lanka-universities-2014-july-top-institutes/

word-ranking-universities-496x346.jpg

 

http://www.webometrics.info/en/Asia/Sri%20Lanka

 

 

Edited by nedukkalapoovan

கோ,

 

வாய் உளைந்தால் பபுல்கத்தை போட்டு சப்பு சப்பென்று சப்புங்கள் :icon_idea: 

யாழ் இந்துவை பற்றி கதைக்கவே தகுதி வேண்டும் :icon_mrgreen:

 

என்னவோ ஏதோ யாழ் இந்துவின் மைந்தன் என்று கூறும் போது வரும் பெருமையை கட்டுபடுத்தமுடிவதில்லை

Edited by Surveyor

நெத்தியடி கிழவி -hats off.

சிங்கமே போத்திக்கிட்டுப் போக எலி அம்மணமா டான்ஸ் ஆடிச்சாம்.

இலங்கையில் உள்ள பாடசாலைகளை தரவரிசைப் படுத்தினாலே யாழ் இந்து முதல் பத்துகுள்ள வராது.

உலகத்தில எத்தனை பெரிய பெரிய பாடசாலைகள் எல்லாம் இருக்கு.

இவங்க சுய தம்பட்டம் தாங்க முடியல.

உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை இப்படியான கருத்துக்கள் மனதிலிருந்து அழித்து விடுக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

வாலி - எரிச்சல் எல்லாம் இல்லை - யாழ் இந்துவிற்க்கு போகும் படி ஆகி இருந்தால் - நான் அதை ஒரு step down/ demotion ஆகவே கருத வேண்டியதாய் போயிருக்கும் :)

கடைசியா பாருங்கோ என்னையும் சுய தம்பட்டம் அடிக்க வைசிட்டியள் :)

இதென்ன தொத்து வியாதியோ தெரியேல்ல ?

சத்தியமா எனக்கு வாயுளையவில்லை.

கிழவி சொன்னதன் உண்மை நிலை பிடித்திருந்தது சொன்னேன்.

இந்துவின் மைந்தர்கள் உங்கள் "நீயா நானா" போட்டியை தொடருங்கள். நாங்கள் வெளியே இருந்து பார்த்து ரசிக்கிறோம் :)

அப்ப வட்டா ✋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.