Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம்

Featured Replies

sex-bribe.jpg
 
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம் பெறப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் நிர்வாகிகள் சிலர் பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்த அமைச்சு கூறியுள்ளது.
 
Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்காவில் எங்குதான் லஞ்சம் இல்லை.
ஒழுங்காற்று நடவடிக்கை என்பதே இன்னும் கறப்பதற்கே

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசாரணை குழுவிற்கு விளையாட்டை விளையாட்டாக பார்க்க தெரியவில்லை போலும் ...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்.. ஒரே பந்து விளையாடுத்தான் என்று நினைச்சிட்டினமோ என்னமோ..?! :lol:

இப்படியாப்பட்ட நாட்டில.. பெண்களுக்கு பாதுகாப்பு..?! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்புடித்தான் அய்ரோப்பிய பயணம் மேற்கொண்ட தமிழீழ பெண்கள் அணியோடு விளையாட்டுப் பொறுப்பாளர் பாப்பா விளையாடினவர். அவருக்குரிய தண்டனையாக செம்பருதியின் கீழ் யாழ் மாவட்ட துணை அரசியல் பொறுப்பாளரானார்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ பெண்கள்.. என்ன அணி..?! முடியல்ல. ஒரு குற்றச்சாட்டைக் கூட ஒழுங்கா பதிவு செய்ய முடியல்ல.. அதில பாப்பா.. பீப்பான்னு கொண்டு.

பாப்பா சம்பந்தட்ட விடயங்கள் வேறு. அதற்காக அவர் இயக்கத்தால் தண்டிக்கப்பட்டும் இருந்தார். சிலருக்கு மோசமான மொத்தச் சிங்களவனின் நடவடிக்கைகளையும்.. சமப்படுத்த.. இப்ப எல்லாம் இயக்கத்தில.. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சில மோசமான உதாரணங்கள் தேவைப்படுகிறது. :lol::icon_idea:

  • தொடங்கியவர்

இப்புடித்தான் அய்ரோப்பிய பயணம் மேற்கொண்ட தமிழீழ பெண்கள் அணியோடு விளையாட்டுப் பொறுப்பாளர் பாப்பா விளையாடினவர். அவருக்குரிய தண்டனையாக செம்பருதியின் கீழ் யாழ் மாவட்ட துணை அரசியல் பொறுப்பாளரானார்!

இப்படியான படு கீழ்த்தரமாக கருத்தெழுதும் உங்களுக்கும் , புங்குடுதீவில் மாணவியை சீரழித்துக் கொண்டவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்புடித்தான் அய்ரோப்பிய பயணம் மேற்கொண்ட தமிழீழ பெண்கள் அணியோடு விளையாட்டுப் பொறுப்பாளர் பாப்பா விளையாடினவர். அவருக்குரிய தண்டனையாக செம்பருதியின் கீழ் யாழ் மாவட்ட துணை அரசியல் பொறுப்பாளரானார்!

மிகவும் கீழ்த்தரமான கருத்து. உங்களுக்கு இலங்கை கிரிக்கட் அணி உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் அதற்காக இப்படி கீழ்த்தரமான கருத்துக்களை வைக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கப்பட்ட கருத்துக்கு எதிர்க்கருத்து வைக்காமல் தனிமனித தாக்குதல்கள் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டியும் நிர்வாகம் தொடர்ந்தும் அனுமதித்து வருகின்றது. நிர்வாகத்தின் ஆதரவு இத்தகைய தனிமனித தாக்குதல்களுக்கு இருப்பதாகவே படுகிறது! கருத்து வறட்சி ஏற்படும்போது ஒரு தமதா (தனி மனிதத் தாக்குதலாளி) உருவாகின்றான்! தமதாக்களுக்கும் நிர்வாகத்துக்கும் வாழ்த்துகள்!

சிங்களத்தின் தவறுகளை பற்றி குறிப்பிடும் திரியில் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல், புனைவாக நீங்கள் குறிப்பிட்ட தகவல் வெறுமனே சீண்டுவதற்காக குறிப்பிடப்பட்ட தகவல் என்றே கருதுகின்றேன். இவ்வாறான சீண்டல் கருத்துகள் எந்த விதமான ஆரோக்கியமான பதில் கருத்துகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதற்கான சூழலை உருவாக்கி விட்டு பின் நிர்வாகத்தின் மீதும் சக கருத்தாளர்கள் மீதும் குற்றம் சுமத்துவதை தவிர்க்கவும்

திருப்பி திருப்பி 10 தடவை வாசிச்சாச்சு .....
அந்த கடுகை சொறி கருத்தை மட்டும் காணோம். 
 
கருத்து என்றால் என்ன என்று யாரவது உற்றார் உறவினரிடம் தெரிந்து கொண்டால் நன்று என்று எண்ணுகிறேன். 
நாய் என்ற சொல் நிச்சயமாக பவிக்ககூடாது அதன் நாகரீகத்தன்மையை புரிந்து கொள்கிறேன் .நேரடியாக பாவிக்காவிட்டாலும் மறைமுகமாக பாவித்ததற்கு வருந்துகிறேன் .
 
ஆனால் அந்த நாய் என்ற சொல்லை விட மிக கேவலமான கருத்துப்பதிவை நிர்வாகம் அனுமதித்திருப்பதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கு ,நன்றீங்க .
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் தவறுகளை பற்றி குறிப்பிடும் திரியில் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல், புனைவாக நீங்கள் குறிப்பிட்ட தகவல் வெறுமனே சீண்டுவதற்காக குறிப்பிடப்பட்ட தகவல் என்றே கருதுகின்றேன். இவ்வாறான சீண்டல் கருத்துகள் எந்த விதமான ஆரோக்கியமான பதில் கருத்துகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதற்கான சூழலை உருவாக்கி விட்டு பின் நிர்வாகத்தின் மீதும் சக கருத்தாளர்கள் மீதும் குற்றம் சுமத்துவதை தவிர்க்கவும்

இது சீண்டல் கருத்து அல்ல. கனவுக் குழுக்களின் மனநிலை அறிந்தே எழுதினேன். இப்படியே விட்டால் புலிகள் ஆட்சியில் இப்படியான சம்பவங்கள் நடந்து இருக்காது என கனவில் வாழும் அன்பர்களை நினைந்து எழுதப்பட்டது. இல்லாவிட்டால் இப்ப ரவுண்டு கட்டிப் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நிச்சயம் தலைப்புடன் தொடர்புபட்ட கருத்துத் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பாப்பா தமிழீழ வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் முதன்மைச் சாலை கிளிநெச்சியில் புலிகளின் குரல் தலைமையகம் முன்பாக திரு பாப்பாவின் மனைவி மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி ரணகளமாடி பாப்பாவின் வண்டவாளங்களை எல்லாம் ஊரறியச் செய்ததும் சாதி அடையாளத்தை எடுத்துப்பேசியதும் மக்கள் அறிவார்கள். தவிர்க்க முடியாத நிலையில் பாப்பா விளையாட்டுப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு யாழ் அரசியல் துணைப் பொறுப்பபாளராக பதிவியிறக்கம் செய்யப்பட்டார். இவை எல்லாம் நான் கண்ணால் கண்ட சம்பவங்கள். இவற்றுக்கு ஆதாரம் தருவதென்றால் ஈழநாதத்தில் செய்தியாகப் பிரசுரிக்கப் பட்டிருக்கவேண்டும். அது அப்போது அங்கு சாத்தியம் இல்லை. புனைவு என்று கருதுவீர்களாயின் அது உங்களைப் பொறுத்தது. ஆனால் உண்மை உங்கள் காதுகளுக்கு ஒருநாள் தாமதமாகவேனும் வந்து சேரும்.

அது இருக்க சீண்டல் கருத்துக்கள் எழுதினால் தனி மனிதத் தாக்குதல் நடத்தலாம் எனச் சொல்லாமல் சொல்லிநிக்கிறீர்கள். நன்றி

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம்.

சீதனம் வாங்கிக் கொண்டு, பெண்பிள்ளைகளோடு குடும்பம் நடத்தும் தமிழ் கலாச்சாரத்தை பாலியல் லஞ்சம் எனும் வகைக்குள் அடக்கலாமா?

அப்படியாயின் ஆண் விபச்சாரர்களை (male escorts) உலகிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்ச்சாதி என்று ஏனையோர் எம்மை தூற்றினால் நாம் ஏற்றுக்கொள்வோமே?

புங்குடுதீவில் சில தமிழ் ஊத்தைகள் செய்ததை காட்டி முழுத்தமிழரும் இப்படித்தான் என்பது எவ்வகை அபத்தம்.

அதை நிகர்த்த அபத்தமே இலங்கையில் நிகழும் ஓவ்வொரு துர்செயலையும் காட்டி எல்லா சிங்களவர்களையும் அல்லது அவர்களின் நாட்டை கேலிபேசுவதும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பாவின் மனைவி ஆத்திரத்தில் பேசியதெல்லாம்.. ஆதாரம்...??! மார்க்கட்டில மீன் விக்கிற கிழவி.. மீன் விலையை குறைச்சுக் கேட்ட ஆத்திரத்தில்.. திட்டிற திட்டெல்லாம்.. ஆதாரம் என்று சொல்வார்கள் போலுள்ளது. :lol:

பாப்பா மீது பல்வேறு கட்டங்களில் பல்வேறு ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அவர் தென்மராட்சி பொறுப்பாளராக இருந்த போதும்.. இயக்கம் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு தமக்கு வேண்டியதை மட்டும் சிலர் சுய சோடிணைகளோடு.. முன்னிறுத்துகிறார்கள். இவை தவறான செயற்பாடுகளாகும்.

தமிழ் சமூகத்தில் குறைந்திருந்த குற்றங்களை பெருக்கி அதனை சாதாரண நிகழ்வாக்குவது சிங்களம் மத்தியில் அந்தக் குற்றங்கள் பெருகிக் கிடப்பதால் தான் அது முடிகிறது. அத்தோடு அது சிங்களம் எதிர்பார்க்கும் இன அழிப்பையும் செய்ய வல்லது. 

சிங்களத்தின் குற்ற முகம் பெரிதாகவும் நல்ல முகம் மிகச் சிறிதாகவும் உள்ள நிலையில்.. பெரிய முகத்தின் தாக்கத்தை பற்றி சமூகத்திற்கும்.. உலகிற்கும்.. ஏன் சிங்களவர்களுக்கும் இனங்காட்ட வேண்டிய பொறுப்பு உண்டு.

சிங்கள அரசு அமைச்சர்களே பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். ரவுடிக் குழு வைத்து செயற்படுகின்றனர். கஞ்சா வியாபாரம் செய்கின்றனர். விலைமாது வியாபாரம் செய்கின்றனர்.

பாலியல் இலஞ்சம் என்பது சிறீலங்காவில் மட்டுமல்ல.. இந்திய உபகண்டத்தில் அரசியலில் குவிந்து கிடக்கும் ஓர் அம்சம். (பாலியல் இலஞ்சம் கொடுத்தே ஈழப் போராளிகளை ரோ கூட ஒரு காலத்தில் விலைக்கு வாங்கி ஒருவருக்குள் ஒருவர் மோத விட்டு.. அடைய வேண்டி அவர்களின் இலக்கை தகர்த்து.. இந்தியா அடைய வேண்டிய இலக்கை அடையச் செய்தார்கள்.)

அனைத்து பஞ்ச மகா பாதகங்களையும் செய்கின்றனர் சிங்கள ஆட்சியாளர்களும் நிர்வாகிகளும்.. அதில் விளையாட்டுத் துறையும் அடங்கும். அப்படியாப்பட்ட நாட்டில்... ஒரு அரசே இவ்வளவு மோசமான பின்னணியில் உள்ள நிலையில்.. அதனையும்.. அது சார்ந்த தவறான அணுகுமுறைகளையும் சுட்டிக்காட்டுவது மொத்த சிங்கள இனம் மீதான கருத்து என்று ஏன் சிலர் காட்ட நினைக்கினம்..??! அந்தக் காட்டல் தான் தவறே தவிர சிங்களத்தின் மத்தியில் பாலியல் இலஞ்சம் குவிந்து கிடக்கிறது.. சமூகக் குற்றங்கள் நிறைந்து கிடக்க்கின்றன..என்பது தவறான ஒரு செய்தியல்ல. சிங்களவர்களுக்கே அது தெரியும். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது சீண்டல் கருத்து அல்ல. கனவுக் குழுக்களின் மனநிலை அறிந்தே எழுதினேன். இப்படியே விட்டால் புலிகள் ஆட்சியில் இப்படியான சம்பவங்கள் நடந்து இருக்காது என கனவில் வாழும் அன்பர்களை நினைந்து எழுதப்பட்டது. இல்லாவிட்டால் இப்ப ரவுண்டு கட்டிப் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நிச்சயம் தலைப்புடன் தொடர்புபட்ட கருத்துத் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பாப்பா தமிழீழ வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் முதன்மைச் சாலை கிளிநெச்சியில் புலிகளின் குரல் தலைமையகம் முன்பாக திரு பாப்பாவின் மனைவி மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி ரணகளமாடி பாப்பாவின் வண்டவாளங்களை எல்லாம் ஊரறியச் செய்ததும் சாதி அடையாளத்தை எடுத்துப்பேசியதும் மக்கள் அறிவார்கள். தவிர்க்க முடியாத நிலையில் பாப்பா விளையாட்டுப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு யாழ் அரசியல் துணைப் பொறுப்பபாளராக பதிவியிறக்கம் செய்யப்பட்டார். இவை எல்லாம் நான் கண்ணால் கண்ட சம்பவங்கள். இவற்றுக்கு ஆதாரம் தருவதென்றால் ஈழநாதத்தில் செய்தியாகப் பிரசுரிக்கப் பட்டிருக்கவேண்டும். அது அப்போது அங்கு சாத்தியம் இல்லை. புனைவு என்று கருதுவீர்களாயின் அது உங்களைப் பொறுத்தது. ஆனால் உண்மை உங்கள் காதுகளுக்கு ஒருநாள் தாமதமாகவேனும் வந்து சேரும்.

அது இருக்க சீண்டல் கருத்துக்கள் எழுதினால் தனி மனிதத் தாக்குதல் நடத்தலாம் எனச் சொல்லாமல் சொல்லிநிக்கிறீர்கள். நன்றி

சுத்த பொய் !
திரும்ப திரும்ப எழுதினால் .... உலகம் நம்பும் என்ற நப்பாசை.
 
பாப்பாவிற்கு வேறு காரணத்தினால் தண்டனை வழங்க பட்டது. (அது இப்ப தேவை இல்லாதது )
 
பெண் பிரச்னைக்கு 
விலத்துதல் 
மண்டையில் போடுதல் தவிர்த்து வேறு தண்டனை புலிகள் கொடுத்ததே இல்லை. 
 
அவிக்கிறது என்று முடிவு எடுத்த பின்பு ....
கொஞ்சம் விலாசமா அவிச்சிருக்கலாம் என்பது எனது எண்ணம். 
 
2004ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் ...........
?????
  • கருத்துக்கள உறவுகள்

இது சீண்டல் கருத்து அல்ல. கனவுக் குழுக்களின் மனநிலை அறிந்தே எழுதினேன். இப்படியே விட்டால் புலிகள் ஆட்சியில் இப்படியான சம்பவங்கள் நடந்து இருக்காது என கனவில் வாழும் அன்பர்களை நினைந்து எழுதப்பட்டது. இல்லாவிட்டால் இப்ப ரவுண்டு கட்டிப் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நிச்சயம் தலைப்புடன் தொடர்புபட்ட கருத்துத் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பாப்பா தமிழீழ வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் முதன்மைச் சாலை கிளிநெச்சியில் புலிகளின் குரல் தலைமையகம் முன்பாக திரு பாப்பாவின் மனைவி மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி ரணகளமாடி பாப்பாவின் வண்டவாளங்களை எல்லாம் ஊரறியச் செய்ததும் சாதி அடையாளத்தை எடுத்துப்பேசியதும் மக்கள் அறிவார்கள். தவிர்க்க முடியாத நிலையில் பாப்பா விளையாட்டுப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு யாழ் அரசியல் துணைப் பொறுப்பபாளராக பதிவியிறக்கம் செய்யப்பட்டார். இவை எல்லாம் நான் கண்ணால் கண்ட சம்பவங்கள். இவற்றுக்கு ஆதாரம் தருவதென்றால் ஈழநாதத்தில் செய்தியாகப் பிரசுரிக்கப் பட்டிருக்கவேண்டும். அது அப்போது அங்கு சாத்தியம் இல்லை. புனைவு என்று கருதுவீர்களாயின் அது உங்களைப் பொறுத்தது. ஆனால் உண்மை உங்கள் காதுகளுக்கு ஒருநாள் தாமதமாகவேனும் வந்து சேரும்.

அது இருக்க சீண்டல் கருத்துக்கள் எழுதினால் தனி மனிதத் தாக்குதல் நடத்தலாம் எனச் சொல்லாமல் சொல்லிநிக்கிறீர்கள். நன்றி

இது முழுக்க முழுக்க அவதூறு நடந்த விடயத்தை தலைகீழா சொல்லிஉள்ளார் வாலி இனிமேல் செவிவழி கதைகள் யாழுக்கு காவுவதை விட்டால் நல்லது .ஆதரமற்ற கதையை ......................

:):) முடியல :)அஆஇஈஉஊஎஏஐஒஓஔஃ
  • கருத்துக்கள உறவுகள்

இப்புடித்தான் அய்ரோப்பிய பயணம் மேற்கொண்ட தமிழீழ பெண்கள் அணியோடு விளையாட்டுப் பொறுப்பாளர் பாப்பா விளையாடினவர். அவருக்குரிய தண்டனையாக செம்பருதியின் கீழ் யாழ் மாவட்ட துணை அரசியல் பொறுப்பாளரானார்!

யாரப்பா செம்பருதி?

சிங்களத்தை குற்றம் சாட்டினால் சிலருக்கு பொறுக்காது புனைவு கதைகளுடன் பதிலுக்கு தமிழரை தாக்க வந்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு அப்படி....
கடவுளைதான் கேட்க வேண்டும்.

மகளிர் கிரிக்கெட்டில் பாலியல் இலஞ்சம்: மூவர் பணி நீக்கம்
 
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணியில் இணைவதற்கு  பாலியல் இலஞ்சம் பெற்றதாக குற்­றம் சுமத்தப்பட்ட மூன்று அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பாலியல் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை செய்­ய­வென அமைக்­கப்­பட்ட குழு அதன் விசா­ரணை அறிக்­கையை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­க­விடம் கடந்த 20 ஆம் திகதி கையளித்­தது.

அதாவது இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி பணிப்பாளர் மற்றும் தேசிய தேர்­வா­ளர்கள், மகளிர் அணியில் இணைவதற்கு பாலியல் இலஞ்சம் பெறு­வ­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. இவ்­வி­டயம் தொடர்பில் விசா­ரணை நடத்த நிய­மிக்­கப்­பட்ட ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் நிமல் திஸா­நா­யக்க தலை­மை­யி­லான குழு கடந்த 20 ஆம் திகதி அமைச்­ச­ர் நவீன் திஸாநாயக்கவிடம்   அறிக்கை சமர்­ப்பித்­தது.

இந்நிலையில் மூன்று அதிகாரிகள் குற்றவாளிகள் என இனங்காணப்பட்ட போது போதுமான ஆதாரம் இல்லாமையால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய 2014ஆம் ஆண்டு அப்­போ­தைய விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விசாரணை குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/05/28/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிங்கள கிரிகெட் வீராங்கனைகள் பாலியல் இலஞ்சம் கொடுத்தது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

இது சீண்டல் கருத்து அல்ல. கனவுக் குழுக்களின் மனநிலை அறிந்தே எழுதினேன். இப்படியே விட்டால் புலிகள் ஆட்சியில் இப்படியான சம்பவங்கள் நடந்து இருக்காது என கனவில் வாழும் அன்பர்களை நினைந்து எழுதப்பட்டது. இல்லாவிட்டால் இப்ப ரவுண்டு கட்டிப் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நிச்சயம் தலைப்புடன் தொடர்புபட்ட கருத்துத் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பாப்பா தமிழீழ வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் முதன்மைச் சாலை கிளிநெச்சியில் புலிகளின் குரல் தலைமையகம் முன்பாக திரு பாப்பாவின் மனைவி மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி ரணகளமாடி பாப்பாவின் வண்டவாளங்களை எல்லாம் ஊரறியச் செய்ததும் சாதி அடையாளத்தை எடுத்துப்பேசியதும் மக்கள் அறிவார்கள். தவிர்க்க முடியாத நிலையில் பாப்பா விளையாட்டுப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு யாழ் அரசியல் துணைப் பொறுப்பபாளராக பதிவியிறக்கம் செய்யப்பட்டார். இவை எல்லாம் நான் கண்ணால் கண்ட சம்பவங்கள். இவற்றுக்கு ஆதாரம் தருவதென்றால் ஈழநாதத்தில் செய்தியாகப் பிரசுரிக்கப் பட்டிருக்கவேண்டும். அது அப்போது அங்கு சாத்தியம் இல்லை. புனைவு என்று கருதுவீர்களாயின் அது உங்களைப் பொறுத்தது. ஆனால் உண்மை உங்கள் காதுகளுக்கு ஒருநாள் தாமதமாகவேனும் வந்து சேரும்.

அது இருக்க சீண்டல் கருத்துக்கள் எழுதினால் தனி மனிதத் தாக்குதல் நடத்தலாம் எனச் சொல்லாமல் சொல்லிநிக்கிறீர்கள். நன்றி

விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராகவே பாப்பா அவர்கள் 2004ல் யேர்மனிக்கு வருகை தந்திருந்தார். 2005ல் தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராகவிருந்து நடாத்திய விளையாட்டுப் போட்டியில் சிறீலங்காக் காவல்துறைப் பிரிவுகளும் கலந்துகொண்டன. அதில் திருகோணமலைக் காவல்துறைப் பிரிவு வெற்றியீட்டியது. வெற்றியீட்டிய பிரிவு, தமிழீழத் தேசியக்கொடியின்கீழ் பரிசைப் பெற்றுக்கொண்டபோது எடுத்த படத்தில் பாப்பாவும் உள்ளார். அந்தப்படம் காவல்துறைக் காரியாலயத்தை அந்நேரத்தில் அலங்கரித்திருந்ததைப் பொதுமக்களும் அறிவார்கள். 2005ல் தமிழீழம் சென்றிருந்த யேர்மனி விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரைத் தலைவரிடம் அழைத்துச்சென்றது தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பாதான்.  
 
வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு உறுதியானது
 
இலங்கை தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் மீது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  இரண்டு விசாரணை அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

33nzq14.jpg

2013ஆம், 2014ஆம் ஆண்டுகள், இலங்கை அணியின் வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சரினால், இது தொடர்பாக விசாரணை செய்வதெற்கென விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் என்.ஈ. திசாநாயக்க தலைமையில் 3 பேர் கொண்ட குழு கடந்தாண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட அக்குழு, தங்களது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் அண்மையில் கையளித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, இது தொடர்பாக விசாரணை செய்வததெற்கென சட்டத்தரணி திருமதி. மனோலி ஜினதாசவை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்திருந்தது. இந்த இரண்டு அறிக்கைகளும் இலங்கை கிரிக்கெட் சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை கருத்து வெளியிட்டுள்ளது.

இதன்படி, வீராங்கனைகள் மீது இரண்டு ஆண் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஆனால், உடல்ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, இன்னோர் ஆண் அதிகாரி பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபட்டார் எனவும், ஆனால் அது பாலியல் துன்புறுத்தல் என்ற வகைக்குள் அடங்கவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, பெண்கள் அணியைக் கையாளுவதற்கு பெண்ணொருவரை நியமிக்காமை குறித்து இரு அறிக்கைகளும் கிரிக்கெட் சபையைச் சாடியுள்ளன. எனினும், இவ்வாண்டு ஏப்ரலிலிருந்து, இலங்கை பெண்கள் அணியின் முகாமையாளராக முன்னாள் வீராங்கனை டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளும் தங்களது முன்னைய பதவியில் தொடர்ந்து நீடிக்கவில்லையெனவும், ஏப்ரல் மாதத்தோடு அவர்களது ஒப்பந்தங்கள் நிறைவடைந்ததையடுத்து, அவர்களது ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/147077#sthash.YMhOIqMI.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.