Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாவிற்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி Photo in

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையில் தெரியாமல் தானா கேட்கிறீர்கள்?

அல்லது இலங்கை தமிழரின் அழிவுக்கு மூலகாரணமான அறியாமைக்கு உதாரணமாக உங்கள் கேள்வி அமைகிறதா?

 

எப்படி இருந்தாலும் இதோ எனது சின்ன பங்களிப்பு:

  1. அன்று இருந்த ஆட்சியில் (விடுதலை புலிகள் வழிநடத்தலில், இலங்கை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்து பதவிக்கு கொண்டு வந்த மகிந்த மற்றும் கொத்தவின் ஆட்சி) அன்று இந்த சுதந்தரம் இருக்கவில்லை.
அப்ப மக்களுக்கு பிரச்சனை இருக்கும்போது போராடமாட்டார்கள்.
அவர்களுக்கு தூசு கீசு விழாது என்று தெரிந்தால் மட்டும் 
வந்து சப்பாணி கட்டி உட்காருவார்கள் ??
  1. இன்று முதலமைச்சர் விக்னேசவரன் - சுமேந்திரன்  வழிநடத்தலில் 80% தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற அரசின் பங்காளிகளாக அந்த சுதந்திரம் இருக்கிறது. ஆகவே செய்கிறார்கள்.
மட்டுமட்டாக 40 மீத மக்கள் வாக்கு அளித்து இருந்தார்கள் கடந்த தேர்தலில் மீதி 
40 வீதமும் அமெரிக்காவில் இருந்து நீங்கள் ஷிப் பண்ணினதா ?? 
இப்படி பச்ச பொய்களை கொட்டித்தான் உங்கள் கருத்தக்களுக்கு வெள்ளை அடிக்க முடியுமா ??
நாட்டில் நடக்கும் உண்மை நிலைமைகளை உள்வாங்கி எழுத முடியாதா ?
  1. உங்களுக்கு பார்க்க கசக்கிறது - ஏன்? உங்களின் அபிமான தலைவர்கள் தோற்று போக, மக்கள் மாற்று தலைமையை, மாற்று கருத்துக்களை, மாற்று கொள்கைகளை ஏற்று கொண்டுள்ளது பார்க்க கடினமாக இருக்கிறது.
சோழமன்னனை பற்றி பேசுகிறீர்களா ?
அல்லது எல்லாளன் பற்றி பேசுகிறீர்களா என்பது தெளிவில்லை.
தெளிவாக உங்களால் கருத்துக்களை பதிய முடியாதா ??
file:///home/home/Documents/11108837_958191907558765_2361756184413969020_n.jpg
  1. ஆனால் உங்களுக்கு கசக்கிறது என்பதற்காக மக்களை அவர்களின் இன்றைய தலைவர்கள் அழிய விட முடியுமா? அதனால் தான் இதை இப்படி கூட்டு சேர்ந்து செய்கிறார்கள். 
வித்தியாவை பற்றி எதோ முனுமுக்குறீர்கள் எல்லா கருத்தும்போல இதுவும் தெளிவில்லை.
வித்தியா துச்பிரோயத்திட்கு ஆளாகவில்லை தற்போதைய தலிவர்கள் காப்பாற்றினார்கள் 
என்று ஏதும் சொல்ல வருகிறீர்களா ?
நீங்கள் சொன்னால் இருக்கும் ...... 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவம் நடக்கும் போது யார் ஆட்சியில் இருந்தது?

http://www.yarl.com/forum3/index.php?/topic/154606-காடையர்களால்-பாலியல்-வல்லுறவு/

இதனை ஒரு ராணுவ ம் அல்லது ஒரு சிங்களவன் செய்திருந்தால் ஒரு குருவி கூட இங்க காண முடியாது .
இதனை அவர்கள் அரசியல் செய்கிறார்கள் அவ்வளவுதான் ... இருந்தாலும் இரக்கமுள்ள சிங்கள உள்ளங்களுக்கு நன்றிகள் .
 
எங்கள் இனத்திக்குள் சாக்கடைகள் இருக்கும் போது நல்ல உள்ளம் உடைய சிங்களவர்கள் இருக்க கூடாதா ? ஆனால் எங்கட சும் அவர்களின் நடிப்புதான் தாங்க முடியவில்லை .... என்ன நடிப்பு நடிகர் திலகம் கூட தோற்றுவிடுவார் ....
 
சரியான நேரத்தில் போலீஸ் நடவடிக்கை எடுத்து இருந்தால் வித்யாவின் உயிரினை காப்பாற்றி இருக்கலாம் .போலிசின் உதாசீனம் தான் அந்த உயிர் போக காரணம் .....
 

Edited by பிரபாதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இப்படியானவர்களை தமிழ் அறிவிலிகள் எண்டு சொல்லப் படாது. இவர்கள் தமிழ் மூளையிலிகள்.

அக்னி - என்னது ஹாப் டைமுக்கு பிறகு கோல் அடிக்கும் பக்கத்தை மாத்துவாங்களா? சொல்லவே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வித்யாவை சிதைத்தவர்களும் எமது சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்தான்

ஏன் தப்பு செய்தவர்கள் திருந்தவே கூடாதா?

 

மயூரன் சிறைச்சாலையில் திருந்திவிட்டான் என்று வாதாடும் நாங்கள் ஏன் சிங்களவங்கள் மாறக்கூடாது என்கின்றோம்.

 

எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் நாங்கள் மாறலாம் ஆனால் சிங்களவர்கள் மட்டும் மாறக்கூடாது.

 

ஏன்?

 

உங்கள் மனதில் சிங்களவர்கள் மாறமாட்டார்கள் எனும் நினைப்பு. சிங்களவர்கள் மனதில் தமிழர்கள் மாறமாட்டார்கள் எனும் நினைப்பு.

 

இங்கு தீர்வு வந்த மாதிரித்தான்.

முதல் பந்தியில் தமிழர்கள் மாறி போராட்ட வடிவம் மாறி விட்டது என்கிறீர்கள். இரண்டாவது பந்தியில் சிங்களவர்கள் மனதில் தமிழர்கள் மாற மாட்டார்கள் என்கிறீர்கள்.

என்னுடைய கேள்வி மீண்டும் சிங்களவர்களுக்கு அப்படி என்ன நடந்து மனம் மாற வேண்டும்? போரில் தமிழரை வென்ற சிங்களவர்கள் இருக்கும் மமதையில் சிங்களவர்கள் எப்படி மாறுவார்கள் என்று கூறுங்கள்? செய்த போர்குற்றத்துக்கு ஐ.நா வரை தமிழர் சிங்கள ஆட்சியாளர்களை கொண்டு போக நினைக்கும் போது (நியாயம் கேட்க) தமிழர்களுக்கு தீர்வு தர நினைப்பார்களா அல்லது தீர்வு தராமல் விடக்கூடிய சாத்தியக்கூறுகளா அதிகம்?

  • கருத்துக்கள உறவுகள்

வித்யாவை சிதைத்தவர்களும் எமது சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்தான்

ஏன் தப்பு செய்தவர்கள் திருந்தவே கூடாதா?

 

மயூரன் சிறைச்சாலையில் திருந்திவிட்டான் என்று வாதாடும் நாங்கள் ஏன் சிங்களவங்கள் மாறக்கூடாது என்கின்றோம்.

 

எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் நாங்கள் மாறலாம் ஆனால் சிங்களவர்கள் மட்டும் மாறக்கூடாது.

 

ஏன்?

 

உங்கள் மனதில் சிங்களவர்கள் மாறமாட்டார்கள் எனும் நினைப்பு. சிங்களவர்கள் மனதில் தமிழர்கள் மாறமாட்டார்கள் எனும் நினைப்பு.

 

இங்கு தீர்வு வந்த மாதிரித்தான்.

மைத்திரியோ, ரணிலோ, சந்திரிகாவோ உரிமையை தருவர் என்று நம்புவது மடமை! - முதலமைச்சர் விக்னேஸ்வரன் காட்டம்

[saturday 2015-05-23 20:00]

ஆயுதம் தாங்கிய அரச படைகள் அச்சுறுத்தும் இயல்பினைக் கொண்டவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வளவுதான் மக்களைத் தம்வசங் கவருமுகமாக ஓர் இராணுவம் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் ஏற்றுக் கொள்ள கூடியவர்கள் அல்ல என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆயுதம் தாங்கிய அரச படைகள் அச்சுறுத்தும் இயல்பினைக் கொண்டவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வளவுதான் மக்களைத் தம்வசங் கவருமுகமாக ஓர் இராணுவம் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் ஏற்றுக் கொள்ள கூடியவர்கள் அல்ல என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

'பொலிஸார் வேறு, இராணுவம் வேறு. பொலிஸார் ஆயுதத்தை நம்பி வாழ்பவர்கள் அல்ல. பொலிஸார் மக்களுடன் மக்களாக மக்கள் நலம் கருதி கடமையாற்ற வேண்டியவர்கள். அவ்வாறான கடப்பாடு எதுவும் இராணுவத்துக்கு இல்லை' என தெரிவித்தார். இணுவில் இந்துக் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவும் புதிய கட்டடத் திறப்பு விழாவும் கையளிப்பு விழாவும் கல்லூரியில் அமரர் நா.கணேசபிள்ளை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்று சேர்ந்து எமது வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்பும் கடப்பாட்டினைக் கொண்டவர்களாக நாமுள்ளோம். எமது வளங்கள் பல விதங்களில் பாதிப்படைந்துள்ளன. வளங்கள் சில சூறையாடப்பட்டு பிற மாகாணங்களுக்கு களவாகக் கடத்தப்பட்டு வருகின்றன. எம் நாளாந்த வாழ்க்கை வழமைக்குத் திரும்ப வேண்டுமெனில் இராணுவத்தினர் எமது மண்ணில் இருந்து வெளியேற வேண்டும்.

நாங்கள் யாவரும் சகோதரர்கள். எமக்குள் நல்லெண்ணம் மலரட்டும்; சுமூகமான உறவுகள் உருவாகட்டும். என்றெல்லாம் மேடைகளில் ஏறிக் கூறிவிட்டுப் போரின் போது யுத்த குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தொடர்ந்து எம் மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள விடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. எமது மாணவ சமுதாயத்துக்கு மேற்படி தொடர் இராணுவப் பிரசன்னம் பலவிதமான பாதிப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் எல்லைகளை காப்பாற்றுவதாகக் கூறி எமது மண்ணையும், வளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு போர் முடிந்து 6 வருடங்களின் பின்னரும் வேண்டாத எம்மிடையே பலாத்காரமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு அரச படையே இராணுவமும், கடற்படையும்.

எமது பாதுகாப்புக்காக இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. ஆனால், நாங்கள் எவரும் எங்களைப் பாதுகாக்க நீங்கள் இங்கு இருங்கள் என்று இராணுவத்தினரிடம் கூறியதாகத் தெரியவில்லை. அவ்வாறு யாராவது கூறியிருந்தால் அவர் இராணுவத்தின் அனுசரணையாளனாகவோ இராணுவத்துக்குப் பயந்தவனாகவோ அல்லது அரசாங்கத்தின் ஒற்றனாகவோ தான் இருக்க வேண்டும்.

அண்மைக் காலங்களில் நடைபெறும் மிகக் கொடூரமான குற்றச் செயல்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கு மக்களிடையே அறிந்திராத செயல்கள். 2009க்கு முன்னரான கிருஷாந்தியின் கொலைக்கும் மக்களுக்கும் தொடர்பேதும் இருக்கவில்லை. ஆனால், தற்போது எமது இளைஞர் யுவதிகள் சுதந்திர தாகத்துடன் உருவாகக்கூடாது, அறிவில் சிறந்து விளங்கக் கூடாது, தொழிற் பாங்குடன் கடுமையாக உழைப்பவர்களாக உருவாகக் கூடாது என்று திட்டமிட்டுப் பிழையான வழிகளில் அவர்கள் பாதை தவறி நடக்க உரிய சூழலை யாராவது வழி அமைத்துக் கொடுக்கப் பார்க்கின்றார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது.

எந்த ஒரு அரசாங்கமும் தமிழர்களுக்கு நன்மை செய்வோம் என்று வெளிப்படையாக சிங்கள மக்களிடையே தெரியப்படுத்தத் தயங்குகின்றது. காரணம் அந்த அளவுக்கு சிங்களச் சகோதர சகோதரிகள் மனதில் நஞ்சை விதைத்துள்ளார்கள் அரசியல்வாதிகள். தமிழர்களுக்குத் தயை காட்டினால் தமக்குத் தேர்தலில் சிங்கள வாக்காளர்கள் தர அடையாளம் போட மாட்டார்களோ என்ற பயத்தில் எல்லா சிங்கள அரசியல் தலைவர்களும் கரவாகத்தான் எமக்கு உறுதிமொழிகளைத் தருகின்றார்கள். இது அபாயகரமானது.

1955ஆம் ஆண்டில் சேர் ஜோன் கொத்தலாவல என்ற அப்போதைய பிரதம மந்திரி வடமாகாணம் வந்து தீவுப் பகுதிகளில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம அந்தஸ்த்து வழங்கப் போவதாக அறிவித்தார். 1956ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பண்டாரநாயக்க 24 மணித்தியாலங்களில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்தார். சிங்கள மக்கள் பெருவாரியாக பண்டாரநாயக்க அவர்களுக்கு வாக்களித்துத் தேர்தலில் வெற்றி வாகை சூட வழி வகுத்தனர்.

பின்னர் தமிழர்கள் வெகுவாக ஆட்சேபித்ததால் நியாயமான தமிழ்மொழிப் பாவனைக்கான ஒரு சட்ட வரைவைக் கொண்டு வந்தார். உடனே அவரின் வீட்டின் முன் சுமார் 200 பௌத்த பிக்குமார் கூடினர். கூடி பிரதமரை வெளியே அழைத்து என்ன சொன்னார்கள் தெரியுமா? நாங்கள் யாவரும் மிகவும் பிரயாசைப்பட்டு உங்களைப் பதவியில் ஏற்றியது தமிழ் மொழிக்கு நியாயமான இடம் கொடுக்கவா? இல்லை. சிங்களம் மட்டும் நாடு பூராகவும் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு இந்தப் பதவியைத் தந்தோம் என்றார்கள். உடனே அந்தச் சட்டவரைவைப் பண்டாரநாக்க. பிக்குகள் முன்னிலையிலேயே கிழித்தெறிந்து விட்டார். அடுத்த வருடம் அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையேன் உங்கள் முன்னிலையில் இன்று இதைக் கூறுகின்றேன் என்றால், நாம் கரவாகக் காரியமாற்றினால் தப்பி விடலாம் என்று எண்ணுகின்றோம். அது அவ்வாறு நடப்பதில்லை. இன்று கரவாகத் தமிழர்களுக்கு நாம் உரிய உரித்துக்களைப் பின்னர் பெற்றுக் கொடுப்போம் என்று கூறுவோரை அவர்கள் பதவிக்கு வந்தபின் அவர்களுக்கு வாக்கை அளித்த பெருவாரியான சிங்கள மக்கள் இடமளிக்கமாட்டார்கள். சிறிசேன தருவார், ரணில் தருவார், சந்திரிக்கா தருவார் என்று நாம் எண்ணுவதெல்லாம் மடமை. இன்றே நாங்கள் எல்லோருடனும் வெளிப்படையாக ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். இதைத்தான் நாங்கள் செய்வோம். என்று சிங்களத் தலைவர்கள் கூற வேண்டும். இதுதான் எமக்கு வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கூற வேண்டும். கரவாக காரியங்கள் ஆற்றக் கூடாது என்றே கூறிவைக்கின்றேன்.

உண்மையை உறுதியாகப் பற்றிக் கருமம் ஆற்றுங்கள். உண்மையை நோக்கி வழி நடப்பதால் அதில் வரும் தடங்கல்கள், தாமதங்கள் ஆகியவற்றை ஏற்க நாங்கள் மனமுவந்து ஆயத்தமாக இருக்க வேண்டும். 'பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்த்த நன்மை உண்டாகப் பெறின்' என்றான் வள்ளுவன். சில சமயங்களில் பொய்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் எம்மை நாடி வரும். ஆனால், அது ஒரு விதிவிலக்கான நடவடிக்கையே. வள்ளுவன் கூறிவிட்டான் என்று பொய்மை வழியையே கடைப்பிடிக்காதீர்கள். பொய்மை ஒரு விதிவிலக்கு. மெய்மையே வழி. இன்னொரு இடத்தில் வள்ளுவன் கூறுகின்றான் 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று' என தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132632&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

tamil-children.jpg

 

 

இந்தக் பெண் குழந்தைகளின் சாவுக்கு காரணம் யார்..??! மிஸ்டர் சுமந்திரன் இவர்களுக்காகவும்.. இதே கூட்டத்தைக் கூட்டி இதே இடத்தில் அஞ்சலி செய்வாரா..?! :(:rolleyes:

 

http://www.salem-news.com/articles/july132011/sri-lanka-killers-tk.php

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

tamil-children.jpg

 

 

இந்தக் பெண் குழந்தைகளின் சாவுக்கு காரணம் யார்..??! மிஸ்டர் சுமந்திரன் இவர்களுக்காகவும்.. இதே கூட்டத்தைக் கூட்டி இதே இடத்தில் அஞ்சலி செய்வாரா..?! :(:rolleyes:

 

http://www.salem-news.com/articles/july132011/sri-lanka-killers-tk.php

 

அப்ப புலி தல இருந்தபடியால் எங்களால் சிங்கள முற்போக்குவாதிகளுடன் கூட்டுசேர முடியவில்லை இப்பொழுது புலிவால்கள்தான் இருக்கின்றது ஆகையால் நாங்கள்முற்போக்குவாதிகளுடன் கூட்டுசேர்கின்றோம்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் காரணங்களிலிருந்தாலும்

ஆயிரம் அரசியல் இருந்தாலும்

கையைக்கொடுக்கும் உறவை தட்டிவிடும் நிலை வளரக்கூடாது...

 

அதை எவ்வாறு நமது காயங்களை ஆற்றப்பாவிக்கப்போகின்றோம் என்பதே கேள்வி..

 

அறிவாயுதம்

அந்தப்பாடசாலையின் மைந்தர்கள் 

அது இது என அறிவு சார்ந்து வீரம் பேசும் நாம் 

ஏன் இதனை ஒரு முன்னதாரணமாக எடுத்துக்கொண்டு

அறிவைப்பயன்படுத்தி அவர்களுடன் நல்லுறவை வளம்படுத்த முயலக்கூடாது.....

 

வித்தியாவை உண்மையில் நாம் நேசிக்கின்றோம் என்றால்

இதுவே கடைசி வித்தியாவாக இருக்கணும் என நாம் மனதார உணர்கின்றோம் என்றால்

இவர்களைத்தட்டிவிடமாட்டோம...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப புலி தல இருந்தபடியால் எங்களால் சிங்கள முற்போக்குவாதிகளுடன் கூட்டுசேர முடியவில்லை இப்பொழுது புலிவால்கள்தான் இருக்கின்றது ஆகையால் நாங்கள்முற்போக்குவாதிகளுடன் கூட்டுசேர்கின்றோம்....

 

ஆனாலும் புத்து அப்பவும் இப்பவும் இறந்தது தமிழ் பொதுமக்கள் தானே. முற்போக்குவாதம் அவசியமா.. பொதுமக்களுக்கு அஞ்சலி செய்ய. அடிப்படை மனிதாபிமானம் போதுமே. :rolleyes::(

இக்கருத்திற்கு வெறுமனே பச்சை மட்டும் போட்டுவிட்டு போக முடியவில்லை. அதனால் மறுபடியும் உங்கள் கருத்தை எனது கருத்தாகவும் பதிகின்றேன்.

 

 

ஆயிரம் காரணங்களிலிருந்தாலும்

ஆயிரம் அரசியல் இருந்தாலும்

கையைக்கொடுக்கும் உறவை தட்டிவிடும் நிலை வளரக்கூடாது...

 

அதை எவ்வாறு நமது காயங்களை ஆற்றப்பாவிக்கப்போகின்றோம் என்பதே கேள்வி..

 

அறிவாயுதம்

அந்தப்பாடசாலையின் மைந்தர்கள் 

அது இது என அறிவு சார்ந்து வீரம் பேசும் நாம் 

ஏன் இதனை ஒரு முன்னதாரணமாக எடுத்துக்கொண்டு

அறிவைப்பயன்படுத்தி அவர்களுடன் நல்லுறவை வளம்படுத்த முயலக்கூடாது.....

 

வித்தியாவை உண்மையில் நாம் நேசிக்கின்றோம் என்றால்

இதுவே கடைசி வித்தியாவாக இருக்கணும் என நாம் மனதார உணர்கின்றோம் என்றால்

இவர்களைத்தட்டிவிடமாட்டோம...

 

Edited by ஜீவன் சிவா

கடந்த காலங்களில், யுத்தம் தமிழ் மக்களின் மீது திணிக்கப்பட்ட காலங்களில், பல ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள், சிங்கள அரச இயத்திரத்தினால் ஏவி விடப்பட்ட மிருகங்களினாலும், கூலிகளினாலும் வேட்டையாடப்பட்டனர். இவைகள் தொடர்பான ஆதாரங்கள் உலக மனித உரிமைகள் அமைப்புகளினால் கடந்த காலங்கள் அடிக்கடி வெளியிடப்பட்டும் வந்தது.

 

அக்கோரங்கள் நடந்தேறியபோது, இதே ரோசியும், விசயகலாவும், நடுவே உரசியபடி குந்திய "பின் வாசல்" சுமந்திரனும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருந்தனர்/அனுபவித்தனர். ஏன் அன்று ஒரு மெழுகுவர்தியேனும் கொழுத்த இவர்கள் முன்வரவில்லை?

 

இன்று "நாம் தமிழ் மக்களின் துயரங்களில் பங்கு கொள்கிறோம், அவர்களும் நாமும் ஒன்றே, இங்கு ஐக்கியமாக வாழுகின்றோம், சட்டத்தின் முன் யாவரும் சமமே, இப்பாதகர்களை நாம் தண்டிப்போம்" என உலகிக்கு காட்ட இந்நாடகம்! இந்நாடக முக்கிய கதாபாத்திரமே "பின் வாசல்" சுமந்திரந்தான். எம்மிலும் அதிலும் புலத்தும் சிலர் ஆகா, ஓகோ போடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்தது 2009 இல்

சும் பின்வாசல் வழியே பாராளுமன்று போனது 2010 இல்.

  • கருத்துக்கள உறவுகள்

ரோஸி சேனநயக்க கொஞ்சம் சிவப்பாவும் கன்னத்தில பிளஷ் போட்டு வெள்ளைச் சாரியில அழகா இருக்காங்களா அதான் சுமந்திரன் விஜயகலாக்கு இடையில் புகுந்து ஒட்டிகொண்டு இருக்கிறார்! :D

  • கருத்துக்கள உறவுகள்
சோழமன்னனை பற்றி பேசுகிறீர்களா ?
அல்லது எல்லாளன் பற்றி பேசுகிறீர்களா என்பது தெளிவில்லை.
தெளிவாக உங்களால் கருத்துக்களை பதிய முடியாதா ??
 
 
  வித்தியாவை பற்றி எதோ முனுமுக்குறீர்கள் எல்லா கருத்தும்போல இதுவும் தெளிவில்லை.
வித்தியா துச்பிரோயத்திட்கு ஆளாகவில்லை தற்போதைய தலிவர்கள் காப்பாற்றினார்கள் 
என்று ஏதும் சொல்ல வருகிறீர்களா ?
நீங்கள் சொன்னால் இருக்கும் ...... 

 

 

 

எல்லாருக்கும் எல்லாம் தெளிவாக புரியும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.

உங்களுக்கு தெளிவாக புரியாத விடயங்களில் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாவை உண்மையில் நாம் நேசிக்கின்றோம் என்றால்

இதுவே கடைசி வித்தியாவாக இருக்கணும் என நாம் மனதார உணர்கின்றோம் என்றால்

இவர்களைத்தட்டிவிடமாட்டோம...

 

மனித இனமே அதைதான் விரும்புகின்றது......ஆனால் சிறிலங்காவில் இது சாத்தியமா என்ற மில்லியன் டொலர் கேள்வி எழுகின்றது......மைத்திரியின் ஆட்சியின் பின்பு என்ன நடக்கும் என்ற உத்தரவாதம் யார் தருவது......காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....பலரின் கருத்தை பார்த்தால் தமிழர்கள் இவ்வளவு காலமும் நேசக்கரம் நீட்டாதபடி உள்ளது......

செத்தபாம்பை அடிப்பது போல இந்தமாதியான கொலைகளை கண்டிக்க பல கூட்டம் அதுவே ஒரு அளவுகோலாகவும் போய்விட்டது.

 

இறுதி சண்டையில் கொல்லப்பட்டவர்களை ஏன் பரிதவித்த பெண்களுக்கான நீதியை கூட இதே அமைப்பு நாட்டுபற்று என்று தடுத்தாலும் செய்தியா வருமா? 

 

இறந்த பெண் போராளிகளை புனனர்ந்த இழிகுல காமுகர்களை இந்த அமைப்பு கண்டுகொள்ளாதது ஏன்? 

 

மைத்திரி வருவாரென்று காத்திருந்தார்களா?

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.