Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிச் சட்டையுடன் திரிந்த காலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்! முன்னாள் பெண் போராளியின் உள்ளக்குமுறல்

Featured Replies

பச்சைச் சட்டையுடன் திரிந்த காலம் எங்களுக்குள் ஒரு மாற்றம். பச்சை வரி வரி உடுப்புக்கு என்ன மதிப்பு இருந்தது. வன்னியில் பச்சைக் காட்டில் பச்சைச் சட்டையுடன் திரிந்தோம். எம்மைப் பாதுகாத்தது பச்சை மரங்கள்.

பெண்கள் வெளிப்பட்ட அந்த நாள்கள் பொன்னானது. பெண் விடுதலை பெற்றுவிட்டதான ஓர் உணர்வு என்னில் ஓடிக்கொண்டே இருந்த காலம் அது. பஜிறோவில் ஏறிவரும் போது பெண்களுக்கு ஒரு சுதந்திரம் இருந்தது.

என்னை விட கூடுதலாக மக்கள் என்னைப் பார்த்தார்கள். துப்பாக்கி ஏந்தி நாம் போராடும் போது மக்கள் எம்மை அன்பாக வரவேற்று வீடு வீடாக எமக்கு விருந்து கொடுத்தார்கள். தமது பிள்ளைகளைப் போலப் பார்த்தார்கள்.

மனதில் ஓர் துணிவு எமக்கு இருந்தது. வாழ்க்கைப் பயம் அற்றுப் போனது. எது வேண்டுமானாலும் நல்ல விடயங்களாக இருந்தால் ஒற்றுமையாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டோம். அந்த நம்பிக்கை எமக்குள் இருந்தது.

துப்பாக்கி தோளில் தவழும் போது வாழ்க்கையில் முன் நோக்கித் தான் கூடுதலாக நகர்ந்தோம். அந்தக் காலப் பகுதியில் எமது தமிழ் உறவுகள் வாழ்க்கையை நகர்த்துவதற்காக கஸ்டப்பட்டதில்லை.

துப்பாக்கி தூக்கிப் போராடும் போது தான் குடும்பமானோம். பிள்ளைகளைப் பெற்றோம் சுமை தெரியவில்லை. சந்தோசமாக வாழ்க்கை நகர்ந்தது. கைகொடுக்க நிறையப் பேர் இருந்தார்கள். உதவி கேட்டு எவரும் வருவதில்லை.

போர்க்கள முனையில் இருந்து விடுமுறை நாளில் வீட்டுக்கு வரும் போது பாட்டி தாத்தா அம்மா அப்பா அண்ணா அக்கா தங்கச்சி தம்பி என பாசத்துக்கு அளவேயில்லை.

ஊர் மக்கள் திரண்டு வீட்டுக்கு வந்து நலம் விசாரிப்பார்கள். வரும் போது என்னை அவர்கள் பிள்ளையாக நினைத்து தின்பண்டம் எல்லாம் கொண்டுவந்து தருவார்கள். அவர்கள் என்னைப் பார்க்க அவர்களை நான் பார்க்க எமக்குள்ளே ஒரு ஒற்றுமை இருந்தது.

அந்த அழகான நாள்களை எத்தனை பேர் நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கிறோம். நாட்குறிப்பேடு எழுதத் தூண்டியதும் அந்த விடுதலைப் போராட்ட நாள்களில் தான். சண்டையில் நான் உயிருடன் திரும்புவேனோ அல்லது எனது கள நண்பிகள் உயிரை விடுவார்களோ எனக்குத் தெரியாது.

ஆனால் இருக்கின்ற நாள்களில் முழுமையாக வாழ்ந்ததான ஒரு உணர்வு எமக்குள்ளே இருந்தது. பயிற்சியிலும் ஆறுதலிலும் விட்டுப் பிரிதலிலும் பல கதைகள் இருக்கும். அந்தக் கதை எல்லோருக்கும் புதுமையாக இருக்கும்.

பெண்களிடையே ஒரு வரம்பு மீறாத கட்டுப்பாட்டை உருவாக்கிய பெருமை எமக்கு இருந்தது. பெண்ணானவள் பெண்ணாய் வாழ்ந்தாள் என்ற பெருமையைச் சேர்த்த நாள்களை எவராலும் மறக்க முடியாது.

இன்றோ தலை முடிக்கு பூமாலை கட்டி உடலினை தங்கத்தால் நிறைத்து விலையுயர்ந்த சேலை கட்டியும் அவமானப்பட்டு நிற்கிறோம். பெண்களுக்காகப் பெண்கள் எழுச்சி கொண்ட வரலாறு ஈழத்தில் உண்டு.

� அன்று புலியை முறத்தால் அடித்தாள், இன்று அதுவாக வெடித்தால். � என்ற தமிழ் நாட்டுக் கவிஞர் அறிவுமதியின் கவிதை நினைவுக்கு வருகிறது. 

ஈழத்துப் புரட்சிப் பெண்களைத் தமிழ் நாட்டுக் கவிஞர்கள் இப்படிப் புகழ்ந்தார்கள். பாரதி தமிழ்மங்கை தமிழவள் தமிழ்நிலா தமிழரசி தமிழினி போன்ற பெயர்கள் பெண்மையை வெளிப்படுத்த துணிந்த பெண்கள். தங்களுக்குச் சூடிக்கொண்ட தமிழ் பெயர்கள்.

தமிழுக்குள் மூழ்கி தமிழர்களுக்காய் போராடி தமிழ்ப் பண்பாட்டில் மேலோங்கியவர்கள் நாங்கள்.

இன்று எங்களின் வாழ்க்கையை யாராவது பார்த்தீர்களா? என்ன ஏது என்று கேட்டீர்களா? தடுப்பு முகாமில் பெண் என்று கூடப் பார்க்காமல் துன்புறுத்தப்பட்டு விடுவித்தார்கள். விடுவிக்கப்பட்டும் இயல்பு வாழ்வை வாழ விடாது சோதனை என்ற பெயரில் எம்மை துன்புறுத்துகிறார்கள்.

நாம் தங்கியிருக்கும் வீட்டுக்கு புலனாய்வாளர்கள் என்று சொல்லி வருபவர்கள் பெண்களிடம் கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்கிறார்கள். அன்றாட வாழ்வின் கஸ்டங்களை விட இராணுவ புலனாய்வாளர்களினாலும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

போராட்ட காலங்களில் எம்மை சமூகம் ஏற்றுக் கொண்டது. இன்று எங்களை கைவிட்டுள்ளது. பிறை நிலா நிலவில் வெண் பரப்பு முற்றத்து மணலில் பாட்டி சோறு ஊட்டிச் சொல்லும் கதைகள் எல்லாம் பாழாகி விட்டன.

எல்லாக் கதைகளையும் பொய்யாக்கி விட்டோம். எமக்கான கதையைப் புதுப்பிக்க .ஆரம்பிக்க முன்னரே நாம் உடைந்து போனோம். எப்படி எங்கள் பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லப் போகிறோம்? பொய்யான கதை சொல்லி சான்விச்சா ஊட்டப் போகிறோம்.

வெளிப்பட்டவர்களுக்கான வரலாறு ஒன்று இருக்கிறது. அதில் எவ்வளவு கஸ்ரங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கிறது என்ற உண்மை கண்டிப்பாக பதிவாகும்.

நாம் பட்ட துன்பம் எம்முடன் போய்விடவேண்டும் என்று பார்க்கிறோம். ஆனால் இன்று நிலைமை இப்படி இல்லை. நான் பட்ட துன்பங்களை எமது பிள்ளைகளும் அனுபவிக்கும் போது தான் எமக்கு வலி அதிகமாக இருக்கிறது.

இந்த வலிக்கு மருந்து போட யாருமில்லை. எங்கள் உணர்வையும் கற்பனைகளையும் சிதைக்கும் அரசு எமக்கான வாழ்க்கையைத் தருமா? முள்ளிவாய்க்காலிலேயே நாம் செத்து மடிந்திருக்கலாம். இங்கு வந்து அணு அணுவாய்த் துன்பப்படுகின்றோம்.

எங்கள் இனமே எங்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது. நாங்கள் போராட வழியைக் காட்டியவர்கள் ஏன் போராடினீர்கள் என்று இப்போது கேட்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒவ்வொரு தையையும் எதிர்பார்த்துக் காத்திருந்தும் தையும் பிறக்கவில்லை வழியும் பிறக்கவில்லை.

அரச அலுவலகங்கள் தொடக்கம் பாடசாலை வரை எங்களை எங்கள் பிள்ளைகளை குற்றவாளிகள் போல் பார்க்கிறார்கள். மக்களுக்கு அல்ல சிங்கள அரசுக்கு சேவை செய்யும் பலரால் எப்படி தமிழ் மக்களின் சேவையை நிறைவேற்ற முடியும்.

இதற்குள் எப்படி எங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போகிறார்கள். ஈழத்தில் பெண்களாலேயே பெண் விடுதலையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அரச அலுவலகங்களில் தலைமைப் பதவி வகிக்கும் பெண்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செல்பவர்கள் என்று முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கூறியிருந்தார்.

பெண்களால் விடிவு காணப் புறப்பட்ட ஈழம் இன்று பெண்களால் அடிமை யுகத்துக்குச் செல்கிறதா? பண பதவி ஆசைக்கு எதையும் விட்டுக் கொடுக்கும் தறுவாயில் இருக்கிறோமோ?

பெண்களே சுயபுத்தியோடு கொஞ்சம் சிந்தியுங்கள். நாங்கள் பெண் விடுதலைக்காகப் போராடினோம். இன்று கஸ்டப்படுகிறோம் ஆனாலும் எம்மிடம் நல்ல சமுதாய சிந்தனை இருக்கிறது. அதனை நீங்கள் வளர்ப்பீர்களா?

http://www.tamilwin.com/show-RUmtyGSYSUfo7H.html

  • Replies 64
  • Views 4k
  • Created
  • Last Reply

பதிவுக்கு நன்றி மீனா

துப்பாக்கியை தோளில் போட்டுக்கொண்டு பஜாராவில் திரிந்தது பெண்விடுதலை என்றால் எமது சமூகத்தை கடவுள்கூட(இருந்தால்) காப்பாற்ற முடியாது. இப்பதான் துப்பாக்கி தோளில் இல்லை,  பஜாரா இல்லை ஆனால் ஏன் மக்கள் மதிக்கிறார்கள் இல்லை. இதுதான் நிஜம், யதார்த்தம். ஆயுதத்தால் மற்றவனை அடிமைப்படுத்துவதற்கு பேர் சுதந்திரம் இல்லை. அதே ஆயுதம் அகற்றப்படும்போது மக்கள் சுயமாக முடிவெடுப்பார்கள். அதுதான் இது.

மக்கள் அவர்களை இப்போது புறக்கணிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் மீதான மரியாதை குறைந்தது அல்ல காரணம் அல்ல, அவர்களை ஆதரித்தால் உங்களைப் போன்ற ------ என்ன செய்வீர்கள் முதல் வேலையாக அவர்களை இராணுவத்திடம் காட்டிக் கொடுபீர்கள், அதனால் தான் மக்கள் முன்னாள் போராளிகளை ஒதுக்குகிறார்கள் மற்றப்படி நீங்கள் மனப்பால் குடிப்பதைப் போல் மக்கள் ஒன்றும் புலிகளையோ அல்லது அவர்கள் வளர்த்த விடுதலை வேட்கையையோ விட்டு விலகவில்லை.

Edited by நிழலி
தனிமனித தாக்குதல் மட்டுறுத்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுக்கு நன்றி மீனா

துப்பாக்கியை தோளில் போட்டுக்கொண்டு பஜாராவில் திரிந்தது பெண்விடுதலை என்றால் எமது சமூகத்தை கடவுள்கூட(இருந்தால்) காப்பாற்ற முடியாது. இப்பதான் துப்பாக்கி தோளில் இல்லை,  பஜாரா இல்லை ஆனால் ஏன் மக்கள் மதிக்கிறார்கள் இல்லை. இதுதான் நிஜம், யதார்த்தம். ஆயுதத்தால் மற்றவனை அடிமைப்படுத்துவதற்கு பேர் சுதந்திரம் இல்லை. அதே ஆயுதம் அகற்றப்படும்போது மக்கள் சுயமாக முடிவெடுப்பார்கள். அதுதான் இது.

ஆயுதங்கள்  பஜாராக்கள் இல்லாமல் அரசியல் போராட்டம் செய்த காலங்களில் ஏன் எமக்கு உரிய உரிமைகள் கிடைக்கவில்லை? அப்போது நிஜம் யதார்த்தங்கள் முளைக்கவில்லையா? 

குழந்தை போராளி .

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிள்ளை துப்பாக்கி ஏந்தி போராடிச்சுது உலகத்தை புரிந்து கொள்ளவில்லை.

Edited by MEERA

1948 பின்னர் நடந்த சிங்களத்தின் ஆக்கிரமிப்புகள், தனி சிங்கள சட்டம் , பண்டா -செல்வா , டட்லி -செல்வா ஒப்பந்தம் , அப்புறம் நடந்த அரசியல் போராட்டங்கள் , 77 கலவரம் , 83 கலவரம் , ...இவை எல்லாம் என்னங்க ...
 
நாயிலும் கேவலமக கொன்று தாருக்குள் போட்டு எரித்த எல்லா கொடுமைகளையும் எப்படி மறக்கிரிங்க .... புரியல ...
 
எப்ப போராளிகளின் கைகளில் ஆயுதம் வந்திச்சோ அதுக்கு பிறகுதான் சிங்களவன் நடுங்க தொடங்கினான் ... யதார்த்தம் தெரிந்தவர்களுக்கு அது புரியும் .... பச்சோந்திகளுக்கு இந்த ஜென்மத்தில் இது புரியாது ... துரோகத்தில் பிறந்து துளிர் விட்டவர்கள் ...(குழந்தை போராளி என்று தானே சொல்ல முடியும்).
 
கவலைபடாதே சகோதரி ... மானமுள்ள  தமிழன் எப்பவும் உங்களை வணங்குவான் ...வெளியில் சுதந்திரமாக அரவணைக்க சில சமயங்களில் சூழல் இடம் கொடுக்காது ... பயம் ஒரு காரணம் ...எங்கட தமிழினத்தின் புல்லுருவிகள் ..... சும்மா விடுவார்களா ....
 
நாங்கள் வணங்கும் காவல் தெய்வங்களே ... காலம் உதய மாகும் ...அப்ப போற்றப்படுவீர்கள் ....
 
Edited by பிரபாதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அவர்களை இப்போது புறக்கணிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் மீதான மரியாதை குறைந்தது அல்ல காரணம் அல்ல, அவர்களை ஆதரித்தால் உங்களைப் போன்ற ---- என்ன செய்வீர்கள் முதல் வேலையாக அவர்களை இராணுவத்திடம் காட்டிக் கொடுபீர்கள், அதனால் தான் மக்கள் முன்னாள் போராளிகளை ஒதுக்குகிறார்கள் மற்றப்படி நீங்கள் மனப்பால் குடிப்பதைப் போல் மக்கள் ஒன்றும் புலிகளையோ அல்லது அவர்கள் வளர்த்த விடுதலை வேட்கையையோ விட்டு விலகவில்லை.

நன்றி ...உங்கள் கருத்தை புலி வாந்தி எடுப்பவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது...நொண்டிச்சாட்டு சொல்லுவார்கள்...

Edited by நிழலி
மேற்கோள் காட்டப்பட்ட சொல் நீக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுக்கு நன்றி மீனா

துப்பாக்கியை தோளில் போட்டுக்கொண்டு பஜாராவில் திரிந்தது பெண்விடுதலை என்றால் எமது சமூகத்தை கடவுள்கூட(இருந்தால்) காப்பாற்ற முடியாது. இப்பதான் துப்பாக்கி தோளில் இல்லை,  பஜாரா இல்லை ஆனால் ஏன் மக்கள் மதிக்கிறார்கள் இல்லை. இதுதான் நிஜம், யதார்த்தம். ஆயுதத்தால் மற்றவனை அடிமைப்படுத்துவதற்கு பேர் சுதந்திரம் இல்லை. அதே ஆயுதம் அகற்றப்படும்போது மக்கள் சுயமாக முடிவெடுப்பார்கள். அதுதான் இது.

ஈபீ காரங்களை பார்த்து தான் அப்பிடி பயந்தார்கள். ஆனால் புலிப் போராளி தன்னிச்சையாக ஒரு பொது மகனை அடிக்க கூட முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு. மரியாதை தான் அங்கே இருந்தது புலிகளின் கொள்கைகளை வெறுத்தவர்கர்கள் கூட போராளிகளை மரியாதையோடு பார்த்தார்கள். போராளிகளும் மக்களோடு மரியாதையாக தான் நடந்தார்கள்.

கடிக்கும்  எறும்பை கூட தலைவரிடம் கேட்டுத்தான் கொல்லுவார்கள் .

அரைவாசி தமிழன் நாட்டை விட்டு ஓடியது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும் .

எவன் எக்கேடு கெட்டால் என்ன நாம் வாழ்ந்தால் சரி என்ற எத்தனையோ தமிழர்கள் இருந்தார்கள் ... இவர்கள் பயந்து ஓடத்தானே செய்வார்கள் ... அந்த கணக்கெல்லாம் எடுக்கபடாது ...
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் இவற்ர ஆட்களை அடித்ததை சொல்கிறார் என. உவயள் எங்காவது வசமாக அம்பிட்டால் எவனும் அடிப்பான்.

இவர் தான் பின்னங்கால் பிடரியில் பட ஓடி வந்ததை மறந்திட்டார்.

அடிபட்ட வேதனைகள் பாதிப்புகள் என்ற நிறைய இழப்புகளால் தான் வன்னி மக்கள் தற்காலிகமாக புலிகள் மீது கோபம் கொண்டார்கள் அது .. பிள்ளைகள் தந்தை தாய் மீது கோபம் கொள்வது போல் ..அதற்காக அதனை நிரந்தரம் என்று பக்கத்து வீட்டு காரன் உள்புக முடியாது ... அதே மாதிரித்தான் .. 
 
புலிகளை ஏசுவதற்கும் கோபம் கொள்வற்கும் பின் அணைப்பதற்கும் அவர்களை வளர்த்த தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு .ஆனால் அதனை நிரந்தரம் என்று நினைக்கும் ... ஒட்டு குழுக்கள் ...உங்கள் பருப்பு மக்கள் மத்தியில் அவியாது ... 
 
கனவு காணலாம் ஆனால் ஒருகாலமும் நடக்காது .. 

அரைவாசி தமிழன் நாட்டை விட்டு ஓடியது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும் .

MONEY THUDU PANAM

குழந்தை போராளி .

நான் 15 வயதில்  வெளிநாடு வந்தேன்  இப்போ 41 ஆச்சு .இப்போ என் அம்மா மீது  கோபம் எங்களை வெளிநாடு அனுப்பியதால் தான்  எங்களுக்கு இந்த நிலை  இதை என் அம்மாவிடம் சொல்லுவான் .என்னை பொறுத்த அளவில் எங்கள் மேல் தன தவறு .

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி மீனா

துப்பாக்கியை தோளில் போட்டுக்கொண்டு பஜாராவில் திரிந்தது பெண்விடுதலை என்றால் எமது சமூகத்தை கடவுள்கூட(இருந்தால்) காப்பாற்ற முடியாது. இப்பதான் துப்பாக்கி தோளில் இல்லை,  பஜாரா இல்லை ஆனால் ஏன் மக்கள் மதிக்கிறார்கள் இல்லை. இதுதான் நிஜம், யதார்த்தம். ஆயுதத்தால் மற்றவனை அடிமைப்படுத்துவதற்கு பேர் சுதந்திரம் இல்லை. அதே ஆயுதம் அகற்றப்படும்போது மக்கள் சுயமாக முடிவெடுப்பார்கள். அதுதான் இது.

ஈழ விடுதலைப் போரில் பெண் போராளிகளின் பங்கு அளப்பரியது. அதுபோல் இழப்பும் அவர்களதுதான். பெண்கள் தாமே வாகனம் ஒட்டி தாமே படை நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல. அவர்கள் பெருமிதத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதில் என்ன தவறு. புலம்பெயர் தேசத்திலேயே தன்னை விட தன மனைவிக்கு அதிகம் தெரிந்துவிடக் கூடாது என்னும் அடக்குமுறை எண்ணத்தினாலேயே பல ஆண்கள் தம் மனைவியை கார் பழகக் கூட அனுபதிப்பதில்லை. அப்படியிருக்க எமது நாட்டில் எத்தனை மனோதிடத்துடன் போராடியவர்கள் பெண் போராளிகள். அவர்களை நாம் எந்த விதத்திலும் விமர்சனம் செய்ய ஏற்றவர்கள் அல்ல ஜீவன் சிவா.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கனிடம்.. ரஷ்சியனிடமும் ஆயுதமே இல்லை என்ற சிந்தனையில் சிலர் ஜனநாயகத்தைப் பார்ப்பது வேடிக்கை விநோதம்.

உண்மை.. அவா ஒரு உதாரணமாகத்தான்.. பஜிரோ.. ஆயுதம் தரித்த நிலையில்.. பெண்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பைச் சொல்லுறா. அன்றைய காலத்தில் விறகுவெட்டி.. சைக்கிளில் கட்டி நல்லிரவில்.. செம்மணி வீதியால் போன பெண்களையும் மக்கள் மதித்தார்கள் தான். இன்று..????! :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தைகைய பதிவுகள் வாராது இருக்க அவர்களை நிராகரிப்பவர்களை விடுத்து, ஏனையவர்கள்-அரசியல்வாதிகள் உட்பட அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் . அதற்கு இப்போதைய விலாங்கு தமிழ் தலைமை அகற்றப்பட/ மாற்றப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடிக்கும்  எறும்பை கூட தலைவரிடம் கேட்டுத்தான் கொல்லுவார்கள் .

அரைவாசி தமிழன் நாட்டை விட்டு ஓடியது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும் .

என்னைப்போன்றவர்கள் மானம் கெட்டு சொந்தமண்ணை விட்டு ஓடிவந்தாலும்...... :(
 
எமக்கு ஒரு மண் வேண்டும் என்று புலம்பெயர்நாடுகளில் வீதிக்கு வீதி நடந்து குரல் அல்லது விழிப்புணர்வாவது கொடுக்கின்றோம். :icon_idea:
 
வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தவர்கள் எல்லாம் இங்கு வந்து தனிப்பட்ட பாதிப்பால் ஒட்டுமொத்த இனவிடுதலைப்போராட்டத்தையே நகைப்பிடமாக்குவது கேணைத்தனமான செயல். :lol:  :lol:  :lol:

நான் எதை எழுதியும் இங்கு இருப்பவர்கள் பலருக்கு விளங்கப்போவதில்லை .பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தமது வாழ்வை மேம்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டு நாட்டு பிரச்சனையில் ஓடுற குதிரைக்கு பணம் கட்டிய ஆட்கள் .இவர்கள் பலருக்கு நாட்டில் நடக்கும் அரசியலில் உண்மை அக்கறை இருந்ததாக தெரியவில்லை அப்படி ஒரு அக்கறை இருந்திருந்தால் யார் பிழை விட்டாலும் விமர்சனம் வைத்து போராட்டத்தை சரியான பாதைக்கு இட்டு சென்றிருப்பார்கள் .தாங்கள் அன்று விட்ட பிழைகளாலும் தான் போரட்டம் தோற்றது என்று பலருக்கு தெரியும் இருந்தும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று நிற்கின்றார்கள் .

இவர்களுக்கு தமிழ் இனத்தின் விடுதலையை விட தாம் சொன்னது செய்தது சரி என்று நிரூபிப்பதில் தான் அக்கறை .

அண்ணை நீங்கள் எழுதியதுமாதிரி "தனிப்பட்ட பாதிப்பால் வந்து"  - நான் சிங்கள அரசாலும் சரி புளோட்டாலும் சரி புலியாலும் சரி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை .புளொட் செய்த அராஜகங்களுக்கு ஆமா போட்டு உல்லாச வாழ்க்கை வாழா எனக்கு ஆயிரம் சந்தர்ப்பம் இருந்தது அதற்காக அல்ல நான் போரட போனது .நாங்கள் போனது மக்களின் விடுதலைக்கு அதற்காக நான் சார்ந்த இயக்கம் கொலை ,கொள்ளை என்று அராஜகம் புரிந்தால் விசுவாசம் என்று கண்ணை மூடிக்கொண்டு இருக்கவோ அல்லது உமாவிற்கு எல்லாம் தெரியும் என்று இருக்கவோ என்னால் முடியாது .பிழையான பாதையில் போனால் அழிவுதான் என்று நம்பினபடியால் தான் விலகினோம் கடைசியில் அதுதான் நடந்தது .

புலிகள் பற்றிய எனது பார்வையும் அதேதான் . எதிரியானவனை தாக்குதல் நடாத்தி பயமுறுத்தினார்களே தவிர அவர்கள் அரசியலும் கொலை கொள்ளை அரசியல் தான் .அது தோல்வியில் முடியும் என்று முற்று முழுதாக நம்பினேன் கடைசியில் புலிகளுக்கும் அதுதான் நடந்தது .

சகோதர யுத்தம் ,அமிர் ,நீலன் ,ராஜீவ்,கதிர்காமர் ,சிங்கள அரசு தலைவர்கள் கொலைகளே இதற்கு பெரிய சாட்சி .எமது இனத்தின்  விடுதலைதான் முக்கியமே ஒழிய பழி வாங்கல் அல்ல ஆனால் நீங்கள் அவற்றைத்தான் விசில் அடித்து வரவேற்றிர்கள் .இந்த வித்தியாசம் தான் எனக்கும் உங்களுக்கும் ஆனது .

வெண்ணை திரண்டு வரவுமில்லை எவரும் தாழி உடைக்கவுமில்லை அது விளங்காமல் கனவு கண்டவர்கள் கடைசியில் பழியை வேறொருவர் தலையில்தான் போடவேண்டும் .

உண்மையில் புலிகள் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப்போட்டார்கள் .

மெசோ - எமது போரட்டத்தில் தோற்றுப்போன போராளிகளுக்கு என்ன நடந்தது என்று உந்த பெண் போராளிக்கு தெரியாதா ?

போராட போன மாற்று இயக்க பெண் போராளிகளுக்கு தாங்கள் என்ன செய்தோம் என்றாவது அவருக்கு தெரியாதா ?

கடைசி மாத்தையா ,கருணாவுடன் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றாலும் தெரிந்திருக்கும் .தோற்றால் தங்களுக்கும் அதே நிலைதான் என்று தெரியாமல் இருந்தபடியால் தான் குழந்தை போராளி என்று எழுதினேன் .

போராட போனவர்களுக்கு எமது சமூகம் கொடுத்த மதிப்பு அனைவருக்கும் தெரியும் .இன்றும் பலர் அதில் இருந்து மீளமுடியாமல் அலைகின்றார்கள் .

Edited by arjun

ஒரு போராட்ட அமைப்பை ஒரு எதிரி அல்ல உலக நாடுகள் மற்றும் புல்லுருவிகள் என்று கணக்கில் அடங்கா காக்கைவன்னியங்கள் என்று எல்லாவற்றையும் தாண்டி போராடுவது ஒரு சாதாரணமான விடயமல்ல ... இதனை தாண்டி புலிகள் அடைந்த வெற்றிகள் எண்ணில் அடங்கா .... ஆனையிறவு யுத்தம் .. என்ன சாதாரணமான யுத்தமா அது ... உலகமே நடுகிங்கிய விடயம் ... மற்றும் விமானப்படை ... இதெல்லாம் தான் உலக நாடுகள் திரண்டு வந்து முடித்தார்கள் ....
 
இதன் அர்த்தம் என்னவெனில் இலங்கை மட்டும் யுத்தம் செய்து இருந்திருந்தால் எப்பவோ தனி நாடு சாத்தியமாகி இருக்கும் ... வெண்ணையும் திரண்டது ... தாழியும் உடைய அவசியம் இருந்திருக்காது ....
 
அமீர் , நீலன் இப்படியான கதிர்காமர் இவர்களை என்ன கொஞ்சுவதா ? அவர்கள் தமிழ் இனத்திக்கு செய்த படு பாதகமான விடயங்கள் என்ன கொஞ்சமா ? இவர்களை அழிப்பதை தவிர வேறு ஒரு தெரிவும் இல்லை ...சில விடயங்களுக்கு உடனடி தீர்வு காண்பதே நல்லம் ...
 
ராஜீவ் விடயத்தில் புலிகளை முன்னிறுத்தி சாட்ட முடியாது  அது இடியப்ப சிக்கல் ...நிறைய பேரின் பங்களிப்பு ... புலிகளின் தலையில் மட்டும் மாட்டி விட்டார்கள் ... சுப்பிரமணியம் சுவாமியை பிடித்து விசாரித்தால் எல்லாம் வெளி வரும் ... எல்லாருக்கும் என்ன நடந்தது என்று தெரியும் ... சும்மா புலிகளை சாட்ட மட்டும் ஏன் இந்த வெறி .....
 
எத்தனை தமிழ் எம் .பி களை அரசாங்கம் கொன்றுவிட்டது .. இதற்கு என்ன சொல்ல போகின்றீர்கள் அர்ஜுன் ?
அப்பா அரசாங்கம் என்ன தீவிர வாதியா ?   .
 
எங்கள் போராட்டம் அழிந்ததற்கு காரணம் உலக நாடுகள் புலிககளை அழிக்க முடிவெடுத்ததுதான் ... ஒரு கேவலமான செயல் ... புலிகள் வீழ்ந்தாலும் வீரர்கள் தான் ...இறந்தும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் ...
  • கருத்துக்கள உறவுகள்

அமீர் , நீலன் இப்படியான கதிர்காமர் இவர்களை என்ன கொஞ்சுவதா ? அவர்கள் தமிழ் இனத்திக்கு செய்த படு பாதகமான விடயங்கள் என்ன கொஞ்சமா ? இவர்களை அழிப்பதை தவிர வேறு ஒரு தெரிவும் இல்லை ...சில விடயங்களுக்கு உடனடி தீர்வு காண்பதே நல்லம் ...

ஆயுதம் தாங்காதவர்களை கொலை செய்வது:
  • போர்க்குற்றம், அல்லது
  • கொலைகுற்றம், அல்லது
  • பயங்கரவாதம்.
புலிகளின் ஆட்சியை விரும்பி அவர்களை ஆதரித்து வாழ்ந்த பொதுமக்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுவிட்டு கோத்தபாயா அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்திய விதமாகவே நீங்களும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறீர்கள்.

எங்கள் போராட்டம் அழிந்ததற்கு காரணம் உலக நாடுகள் புலிககளை அழிக்க முடிவெடுத்ததுதான் ... ஒரு கேவலமான செயல் ... புலிகள் வீழ்ந்தாலும் வீரர்கள் தான் ...இறந்தும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் ...

உலக நாடுகள் பயங்கரவாதத்தை அழிக்கும் என்பது புலிகளுக்கும் உங்களுக்கும் எப்படி தெரியாமல் போனது?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் பயங்கரவாதத்தை அழிக்கும் என்பது புலிகளுக்கும் உங்களுக்கும் எப்படி தெரியாமல் போனது?

ஏன் உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அப்படி இத்தளத்தில் எழுதியதாக தெரியவில்லை. 2009க்கு பின்னர் தான் தாளத்தை மாத்தி போடுகிறீர்கள்.

புலிகள் விடுதலைக்காக போராடா விட்டால் 30 வருடம் நிலைத்து இருக்க முடியுமா? ஜே.வி.பிக்கு நடந்தது தெரியாதோ?

மெசோ - எமது போரட்டத்தில் தோற்றுப்போன போராளிகளுக்கு என்ன நடந்தது என்று உந்த பெண் போராளிக்கு தெரியாதா ?

போராட போன மாற்று இயக்க பெண் போராளிகளுக்கு தாங்கள் என்ன செய்தோம் என்றாவது அவருக்கு தெரியாதா ?

கடைசி மாத்தையா ,கருணாவுடன் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றாலும் தெரிந்திருக்கும் .தோற்றால் தங்களுக்கும் அதே நிலைதான் என்று தெரியாமல் இருந்தபடியால் தான் குழந்தை போராளி என்று எழுதினேன் .

போராட போனவர்களுக்கு எமது சமூகம் கொடுத்த மதிப்பு அனைவருக்கும் தெரியும் .இன்றும் பலர் அதில் இருந்து மீளமுடியாமல் அலைகின்றார்கள் .

ஒரு நேர்மையான கருத்தாளனாக ., மாற்று இயக்க போராளியாக இருந்து இருந்தால் மாற்று இயக்கங்கள் புலிகள் இயக்கத்துக்கு செய்ததை ஏன் மூடி மறைக்கிறீர்கள். ஏதோ மற்ற இயக்கங்கள் அச்சா பிள்ளையாக இருந்ததாகவும் புலிகள் தான் அவர்களை தாக்கியதாகவும் உங்களின் உப்புசப்பில்லாத கதை போகுது.

ஆயுதம் தாங்காதவர்களை கொலை செய்வது:

  • போர்க்குற்றம், அல்லது
  • கொலைகுற்றம், அல்லது
  • பயங்கரவாதம்.
புலிகளின் ஆட்சியை விரும்பி அவர்களை ஆதரித்து வாழ்ந்த பொதுமக்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுவிட்டு கோத்தபாயா அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்திய விதமாகவே நீங்களும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறீர்கள்.

உலக நாடுகள் பயங்கரவாதத்தை அழிக்கும் என்பது புலிகளுக்கும் உங்களுக்கும் எப்படி தெரியாமல் போனது?

முதலில் எது பயங்கரவாதம் என்பதை அறிந்து தெரிந்து விட்டு வாருங்கள் ... இலட்சிய வீரர்களை சிங்களம் வெல்ல முடியாமல் உலக நாடுகளை தன பக்கம் திருப்பி அவர்களுக்கு பயங்கரவாத முத்திரையை கொடுத்தது ..அதன் முக்கிய சூத்திரதாரிகள் சிங்களம் இல்லை .. கத்ர்காமர் , நீலன் என்ற தமிழ் பெயர் கொண்ட துரோகிகள் ...
 
இவர்கள் தங்கள் படிப்பினையும் செல்வாக்கினையும் பயன்படுத்தி ஏதாவது தீர்வினை எடுத்து கொடுத்திருக்கல்ம் ... புலிகளை விடுங்கள் ...
 
எங்கள் பிரச்சனை 1948 இலேயே ஆரம்பித்து விட்டது ... புலிகள் உதயமானது 1972 இல் அதற்கு முதல் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் எல்லாம் இவர்களுக்கு தெரியும் தானே .. ஒரு விடிவினை ஏற்படுத்தி கொடுத்திருக்கல்ம் ... 
 
அதனை விட்டுட்டு தமிழின காட்டி கொடுப்புகள் செய்தால் அதற்குரிய தண்டனையை தான் புலிகள் கொடுத்தார்கள் ...ஒவ்வொரு தமிழ் மகனும் செய்ய வேண்டியதை புலிகள் செய்தார்கள் ...
 
உங்களின் புத்தியினை கொஞ்சம் கழுவுங்கள் ... உங்களுக்கு எது பயங்கரவாதம் ... ஏது சுதந்திர போராட்டம் ..என்று ஒரு இழவும் புரியவில்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.