Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தமிழர்களை, நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார்: சிறீதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தமிழர்களை, நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார்: சிறீதரன்
[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 06:35.22 PM GMT ]

பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டார். தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

இந்தப்பாடசாலையின் வரலாற்றில் இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் வரவு ஒரு அத்தியாயமாக வரப்பிரசாதமாக அமைகின்றது. இப்படியான நவீன வளங்கள் கிடைக்கின்றபோது மாணவர்களின் சிந்தனை திறனும் தேடலும் மாற்றத்தக்கு உள்ளாகின்றது.

அதன் மூலம் சாதனைகள் படைக்கப்படுகின்றது. புதிய சிந்தனைகள் படைப்புக்கள் பிறக்கின்றன. இந்த மண்ணிலே எமது தொழில் நுட்ப அறிவை நவீன சிந்தனையை வெளிப்படுத்தக்கூடிய மனிதர்கள் வாழந்துபோயிருக்கின்றார்கள்.

பேராசிரியர் துரைராஜா சிவத்தம்பி போன்ற துறை சார் விற்பன்னர்கள் உலகம் வியக்கும் வண்ணம் வாழ்ந்து வரலாறு ஆகியிருக்கின்றார்கள். இந்த உலகத்தின் வளர்ச்சியுற்ற நாடுகளில் தமிழ் மாணவர்கள் சாதனை படைக்கின்றவர்களாக கண்டுபிடிப்புக்கள் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

இது தமிழர்களின் மரபில் ஊறியுள்ள விடயம். அதனால் அந்த ஆற்றல் இந்த சந்ததியிடமும் இருக்கும் அவை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.அதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும். உலகத்தை நாம் வெல்கின்றவர்களாக மாறவேண்டும்.

அதற்கு உதைப்பு வேண்டும். கோழக்குஞ்சு முட்டையை கொத்தி அந்த உடைத்துத்தான் இந்த உலகத்தை பார்க்கின்றது. எல்லோரும் யாருக்கும் முழுமையாக தந்துவிடமாட்டார்கள். அதில் முயற்சியும் பங்கும் சிந்தனையும் இருக்கவேண்டும்.

முதலையும் உதைத்து உடைத்தே வெளிவருகின்றது. அதன் வல்லமையை உணர்கின்றது. வாழ்கின்றது. வாழ்க்கை இப்படித்தான். வாழக்கையில் நாம் எம்மை இந்த உலகத்தில் அடையாளப்படுத்த வேண்டும். விவேகானந்தர் இளைஞர்களை நோக்கிய தன் சிந்தனையால் அடையாளமானார். அன்னை தெரேசா அன்பால்அரவணைப்பால் அடையாளமானார்.

நெல்சன் மண்டேலா விடுதலைப் போராட்டத்தால் தன்னை அடையாளப்படுத்தினார். பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார். எனவே மாணவர்களே! நாமும் இந்த உலகத்தில் சாதனையாளர்களாக மாறவேண்டும்.

அதற்கு போராடித்தான் ஆகவேண்டும். அதற்கு வெற்றியின் மீதான நம்பிக்கைவேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றிபெறுகின்றார்கள். எல்லா ஜீவராசிகளும் பேராடித்தான் தினமும் வாழ்கின்றன.

எனவே வாழ்க்கையில் எல்லா துறைகளிலும் நாம் வெற்றி பெற அறிவையும் ஆற்றலையும் வளர்த்து இந்த உலகத்தை நாம் வெல்ல வேண்டும். அதற்கு இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடமும் ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி உயர் அதிகாரிகள் வடக்கு மகாண சபை உறுப்பினர் சயந்தன் சாவகச்சேரி பிரசேசபைத் தலைவர் துரைராசா உட்பட கல்விச் சமூகத்தினர் வரணி மண்ணின் மைந்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

http://www.tamilwin.com/show-RUmtyHTYSUes6I.html

ஐயா கவனம்.. நீங்கள் வாக்கு வாங்கிறதுக்காக கண்டதையும் பேசிப் போடாதேங்கோ!

பிறகு விடுதலைப் புலிகளையோ ஆயுதம் தூக்கினவையையொ எங்களுக்குப் பிடிக்காது எண்டு சொல்லிக் கொண்டு இதயங்களாலை இணையிற சம்பந்தன் ஐயாவுக்கும் சுமந்திரன் ஐயாவுக்கும் கெட்ட கோவம் வந்திடும்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒரு தலைமையின் கீழ் போராடவேண்டும் என்பதற்காக தலைவர் பிரபாகரனை எங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டோம்.  கொண்டகொள்கையிலும் தனிமனித ஒழுக்கத்திலும் உறுதியான மனிதர் அவர். ஆனால் வீரம் என்பது போர்க்களத்தில் எதிரியை நேரடியாகச் சந்திப்பது. பால்ராஜ் அண்ணை, தீபன் அண்ணை, கருணா அம்மான் போன்றவர்கள் கண்ட நேரடிக் கள அனுபவங்களின் முன்னர் தலைவரது முன்கள அனுபவங்கள் குறைவானவையே. திட்டமிடல் தயாரிப்புக்களைத் தலைவர் மேற்பார்வை செய்திருக்கக் கூடும்.  ஆனால் தமிழ் மண்ணை தமது வீரத்தால் அடையாளப்படுத்திய ஒப்பற்ற வீரர்களுக்கு ஓரு குறியீடாகக் கருத முடியுமே தவிர தனித்த அவரின் வீரமாகக் கருத முடியாது. ஈராக்கில் பாதுகாப்பாக இருக்கும் போது சதாம் குசேனும், லிபியாவில் பாதுகாப்பாக இருக்கும்போது முகம்மர் அல் கடாபியும் மாவீரர்களே! படைவீரர்களின் பாதுகாப்பில் இருப்பவர்கள் இருந்தவர்கள் வீரர்களா? அவர்கள் கொள்கையில் வீரர்களாக இருந்திருக்க முடியும். ஆனால் இவர்களின் கொள்கைகளுக்காகவும் பாதுகாப்புக்காவும் பேச்சுக்காகவும் ஆயிரம் ஆயிரம் உண்மையான வீரர்கள் களமாடி வீழ்ந்திருக்கின்றார்கள்!

இவ்வாறான வார்த்தைப் பிரயோகம் செய்யும் போது "நமது மண்ணை மாவீரர்களின் வீரத்தால் தனது கொள்கையில் இருந்து விலகாமல் வழிகாட்டியாக இருந்து அடையாளப்படுத்தினார்" என்பதே சாலவும் பொருந்தும்!

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியாவுக்கு, மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தார்" என்று, இனி யாராவது சொன்னால்....
வாலியின், மேற் கூறிய  கருத்தை வாசித்து, மறுப்பறிக்கை கொடுக்க வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலா விடுதலைப் போராட்டத்தால் தன்னை அடையாளப்படுத்தினார். பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார். எனவே மாணவர்களே! நாமும் இந்த உலகத்தில் சாதனையாளர்களாக மாறவேண்டும்.

மாணவர்களை நோக்கிச் சொல்லப்பட வேண்டிய நல்ல கருத்து. அரசியலுக்கு வாக்குக்கு அப்பால் உண்மையை அதுவும் ஆக்கிரமிப்பு நிழலின் கீழ் நின்று பேசுவதற்கு ஓர் உறுதி வேண்டும்.

தமிழ்சிறீ அண்ணா... வாலி மாதிரி ஆக்கள்.. உருவாக மில்லியன் கணக்கான பிற விந்துகள் செத்து வீழ்ந்ததற்காக அவர் நாளை தன்னை தானே அழிக்கப் போறார் பொறுத்திருந்து பாருங்க. சும்மா தாங்களும் ஏதோ எழுதனும் என்பதற்காக.. தலைமைத்துவம் என்ற சொல்லாடலின் அர்த்தம் புரியாமல் எழுதித் தள்ளுதுங்க விடுங்க. கருணாவுக்கு புகழ்.. கருணாவின் நிழலில் பிரபா என்பது போல் இவர்கள் வாதம். கருணா என்று பெயர் வைச்சது முதல் சும்மா கிடந்த முரளிதரனை.. அம்மான் என்ற அந்த நிலைக்கு உயர்த்தியதே தேசிய தலைமை.. என்ற அந்தத் தலைமைத்துவம் தான். அது பின் முரளிதரனாகவே காசுக்கு விலை போய் துரோகியானது.. அது பிறந்த பிறப்பின் குணமாக இருக்கலாம். :lol:

Edited by nedukkalapoovan
எழுத்துப் பிழை திருத்த.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம் - பிரபாகரன் பயங்கரவாதி

சிறிதரன் - பிரபாகரன் வீரன் 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களை நோக்கிச் சொல்லப்பட வேண்டிய நல்ல கருத்து. அரசியலுக்கு வாக்குக்கு அப்பால் உண்மையை அதுவும் ஆக்கிரமிப்பு நிழலின் கீழ் நின்று பேசுவதற்கு ஓர் உறுதி வேண்டும்.

தமிழ்சிறீ அண்ணா... வாலி மாதிரி ஆக்கள்.. உருவாக மில்லியன் கணக்கான பிற விந்துகள் செத்து வீழ்ந்ததற்காக அவர் நாளை தன்னை தானே அழிக்கப் போறார் பொறுத்திருந்து பாருங்க. சும்மா தாங்களும் ஏதோ எழுதனும் என்பதற்காக.. தலைமைத்துவம் என்ற சொல்லாடலின் அர்த்தம் புரியாமல் எழுதித் தள்ளுதுங்க விடுங்க. கருணாவுக்கு புகழ்.. கருணாவின் நிழலில் பிரபா என்பது போல் இவர்கள் வாதம். கருணா என்று பெயர் வைச்சது முதல் சும்மா கிடந்த முரளிதரனை.. அம்மான் என்ற அந்த நிலைக்கு உயர்த்தியதே தேசிய தலைமை.. என்ற அந்தத் தலைமைத்துவம் தான். அது பின் முரளிதரனாகவே காசுக்கு விலை போய் துரோகியானது.. அது பிறந்த பிறப்பின் குணமாக இருக்கலாம். :lol:

நெடுக்ஸ்..... நான், வாலியின் கருத்துக்களை, சீரியசாக எடுப்பதில்லை.
ஏனென்றால்... அவர் அரசியலில் படிக்க கன பாடங்கள் உள்ளது.
அவரின் அரசியல் எழுத்துக்கள், அருவரி பிள்ளைகள், "சிலேட்டில்" கிறுக்கி விளையாடுவது போல் இருக்கும். 
வாலி,  வேணுமென்றால்... அர்ஜுன் , கோசானிடம்..." ரியூசன்" எடுக்கப் போவது நல்லது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

  தேர்தலில் வாக்குக்காக,  மக்களை உசுப்பேத்த, அவர்கள் ஏதோ சொல்ல , எங்கே என்று இருப்பவர்கள் வந்து விட்டார்கள் வரிச்சுக்கொண்டு விளக்கம் கொடுக்க.

சம்  சும் மாவை இவர்கள் இனி எப்படி பிரச்சாரம் செய்யப்போரர்கள் .. இவரே தலைவரின் வீரத்தை சொல்லி எல்லாருக்கும் முதலாக வாக்கு வாங்க தொடக்கி உள்ளார் .. இனி மற்ற கிழடுகளும் நாக்கு கூசாமல் புகழ் பட தொடங்கப்போரர்கள் ... இதனை விட விபச்சாரம் செய்வது மேல் ... மானம் கெட்டதுகள் ... 

சரியாக சொன்னீர்கள், அண்ணன் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்

தேர்தல் முடிய ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு....

ஆனா மகிந்த வந்தால் எல்லோரும் தப்பியோடிவிடுவார்கள்

நெடுக்ஸ்..... நான், வாலியின் கருத்துக்களை, சீரியசாக எடுப்பதில்லை.
ஏனென்றால்... அவர் அரசியலில் படிக்க கன பாடங்கள் உள்ளது.
அவரின் அரசியல் எழுத்துக்கள், அருவரி பிள்ளைகள், "சிலேட்டில்" கிறுக்கி விளையாடுவது போல் இருக்கும். 
வாலி,  வேணுமென்றால்... அர்ஜுன் , கோசானிடம்..." ரியூசன்" எடுக்கப் போவது நல்லது. :lol:

ரியூசன் எண்டத்தான் ஞாபகம் வருகுது, ரியூசனில் செக்கியா வேலை செய்றவை காலப்போக்கில் ஆசிரியர் ஆவது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளவை செக்கியா வேலை செய்வதற்கும் "அது" வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சூழ்நிலையில்தான் சுமந்திரனின் நேர்மை தெளிவாக தெரிகிறது.

நாம் ஏற்கிறோம் இல்லை என்பதுக்கு அப்பால் - பிரபாகரனை வைத்து வாக்குப் பொறுக்காமல், நினைவேந்தலில் பங்கெடுக்காமல் தன் அரசியலை மட்டும் முன்னிலைப் படுத்தி அரசியல் செய்ய ஒரு தில் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை சம்பந்தர் சொல்வாரா???சும்சும் செய்யும் அரசியலை விமர்சிக்கத் துணிவில்லை. தேர்தல் நெருங்க புலியளை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டு விட்டீர்கள்.சம்பந்தர் சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்தபொழுதும் சும்சும் சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட பொழுதும் வாயை மூடிக்கொண்டிருந்து விட்டு வாக்குப் பொறுக்கி ரெசியல் செய்வது நேர்மையாக இல்லை.

புலவர் பெருமானே!

கவிதைக்குப் பொய்யழகு :rolleyes:

அரசியலுக்கும் பொய்தான் அழகு :lol:

கவிதையில் பொய் மக்கள் மனத்தை வாங்கிவிடும் :)

அரசியல் பொய் மக்கள் மானத்தையே விற்றுவிடும். :o

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்! அரசியலுக்குப் பொய்தான் அழகு! அதைத்தான் சிறீதரனும்.......

என்னத்தை சொல்லுறது? ...  உந்த "புலி" சார்ந்த வீரவசனங்கள் இனி வடகிழக்கில் தேனாக பாயும், மாரி மழை கொட்டியது போல் கொட்டும், சோழகக்காத்து அடிப்பது போல் வீசும்!

ஏனேனில்

இனி இதயங்களால் ஒன்று பட்டதையும், சிங்கக்கொடி அசைத்ததையும் கேட்டா வாக்கு கேட்பார்கள்?

எங்கே, இதுவரை சில மாதங்களாக சம்பந்த சும்சும்கள் கொட்டிய புலி எதிர்ப்பு குப்பைகளுக்கு விசிலடித்த வீரவான்கள், அதே குப்பைகளை கொட்டி வாக்கு கேட்பார்கள்தான் என்று சொல்லட்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் இன்னும் அதே குப்பையை கொட்டித்தான் வாக்குக்குகேக்கிறார்கள். சிறீதரன் யாரால் கைகாட்டப் பட்டவர் தெரியும்தானே ?

சம் சும் இன்னும் அதே குப்பையை கொட்டித்தான் வாக்குக்குகேக்கிறார்கள். 

ம்ம்ம்.. பின்வாசல் வாக்கு கேட்கிறார்? ... கேட்கிறவன் கேணையன் என்ரால் ..!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் எப்ப அரசியலுக்கு வந்தவர் என்று சிலருக்கு தெரியவில்லை. 

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 வல்லாதிக்க அரசுகளின்  ஆசிய பூகோள அரசியல் நடவடிக்கைகள் எமது போராட்டத்தை வீழ்ச்சியடைய செய்திருந்தாலும்....

ஈழத்தமிழருக்கான அடக்குமுறைகளையும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனங்களையும் உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் விடுதலைப்புலிகள்.
தமிழர்களின் வீரத்தையும்...வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என நிரூபித்து உலகிற்கு உணர்த்தியவர்கள் விடுதலைப்புலிகள்.

உலகிற்கு சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனத்தை  வெளிப்படித்தியவர்கள் என்கின்றீர்கள் பின்னர் இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் அழித்தார்கள் என்றும் சொல்லுகின்றீர்கள் .

எங்கையோ உதைக்கிது 

அப்ப வெளிபடுத்தியபடியால் அழித்தார்களோ ? அப்ப இனி வெளிப்படுத்தாமல் இருப்பம் .

 தற்பொழுது உலக ஒழுங்கில் , இரண்டாம் உலகபோரின் பின்பு உருவான சில தேசியங்கள்  இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றது போல தெரிகின்றது....சில  தேசியங்களை கடனாளிகளாக்கி அதை பெரும் தேசியங்களுடன் இணைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றதோ தெரியவில்லை.....ஐரோப்பாவுக்கு ஒரே நாணயம்....இந்தியா பிராந்தியத்திற்கும் ஒரே நாணயம் 

  • கருத்துக்கள உறவுகள்

அடாவடிதனத்தை உலகுக்கு உணத்தியவர்கள் புளட். இப்ப உதைக்காது என நினைக்கிறேன்.மற்றது பின்வாசலால் வந்து வீரம் கதைக்கவும் ஒரு தில் வேண்டும் இருக்க வேண்டும் என்பது சரியானது. அரசியலுக்கு பொய அழகு என்பதால் தான் அனந்திக்கு இடம் கொடுக்கப்படவில்லையோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அண்ணை நீங்கள்  அறிவு கடல் தொடர்ந்து இப்படியே  நீந்துங்கோ .மறந்து போயும் வெளியில வந்திடாதையுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் தான். ரொரன்டோவில் வெளிக்கிட்டு வாயை திறந்திடாதேங்கோ.தாழ்மையோடை கேட்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.