Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எனது விருப்பம் நிராகரிப்பு - அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாலும் விளங்ககூடியவர்களா அவர்கள் .

எத்தனை பேர்கள் எத்தனை விதமாக சொல்லிப்பார்த்தார்கள் .மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது .

அதுதான் முடிவு அப்படி வந்தது .

 "பயங்கரவாதிகள்", "மக்களை  அழித்தார்கள்" போன்ற  சொல்லாடலை  விட்டால்  வேறு பதங்களே வராதா? அப்பு ராசா! எங்கட முந்தய அரசியல் தலைவர்கள் பேசிப்பார்த்து, உடன்படிக்ககைகள் செய்து, கிழிந்த கதை வேறு. அகிம்சா வழியில் போராடி, மண்டை உடைஞ்சு, கெஞ்சி, கூத்தாடி, சர்வதேசத்திட்டை முறையிட்டு ஒன்றுமே மாறாத, மாற்ற முடியாத காரணத்தால தம்மைக்காக்க வேறொரு வழி இல்லா நிலையில் அழிவிலிருந்து தம்மைத் தடுக்க எடுத்த முயற்சிதானப்பு  ஆயுதம். அதை எதிர்பார்க்காதவன் பயங்கரவாதி! பயங்கரவாதி! என்று கூவிக் கூவி உலகமெலாம் ஓடி, ஓடி பிச்சையும் எடுத்துக்கொண்டு தனது இனவாதத்தை மறைக்க பயங்கரவாதத்தை வலிந்து பெற்றெடுத்தான் சிங்களவன். இதை விட மாற்று வழி ஏதாவது அப்போதோ, இப்போதோ இருந்ததா,  இருக்கா எமக்கு? எம் இனக் குலக்கொழுந்துகளை துகிலுரித்து, இளைஞர்களை ரயர் போட்டுக்கொளுத்தி களியாட்டம் போடுபவனின் காலைப் பிடித்து வாழ நினைப்பவன் ஒன்று பைத்தியம் மற்றது சுத்தக் கோழை இன்னொன்று சுயநலவாதி.   ஏனப்பு புலியள் வரமுன்னம் தமிழர் எல்லாம் சமாதானப் பூங்காவில இருந்தவை, மூப்பைத்தவிர சாவே வரேல்ல எண்டு யாரேனும் உங்களுக்கு சொன்னவையே? மக்கள் அழிவென்று பாத்தால் உலகில் அரைவாசி நாடுகள் அடிமை நாடுகளாய்த்தானப்பு இருந்திருக்கும். புலியளுக்குப் பின்னால போன சனம்தானப்பு மிஞ்சினது முள்ளி வாய்க்காலில. சிங்களவன்ர பேச்சை நம்பினதெல்லாம் முகவரி தெரியாமல் மண் மூடிப்போட்டுது. புலியள யாரும் வளர்க்கேலயப்பு. இழப்பு, வலி அதில வந்த வெறிதானப்பு உருவாக்கி, வளர்த்தது. நீரும் அதை அனுபவித்திருந்தால் அது கட்டாயம் உமக்கும் வந்திருக்கும். கோயில் கட்டுமானப்பணிக்கு காசு கேட்டால் கொடி பிடிச்சவன் குடுக்கட்டும், புலவாலுகள் குடுக்கட்டும் எண்டு லாப நட்ட கணக்கு பாக்கிற நம்மிடமிருந்துதானப்பு தம் இன்னுயிரை நமக்காய் தந்த  அந்த தியாகிகள் உருவானார்கள். வெளிநாட்டுக்கு ஓடிப்போய் சுகமாய் இருந்து கொண்டு கூவுகினம் எண்டொரு கதை. அங்கை, எல்லாம் இருந்தால் ஏனப்பு தாயகத்தைப்பற்றி கவலைப்படுகினம்? ஏனப்பு ஆபத்து நிறைந்த நாட்டுக்கு ஓடி வருகினம்? உண்மையாய் சொல்லப்பு நீங்கள் உங்க சந்தோசமாய், நிம்மதியாய் வாழுகிறீர்களே? அப்படி எண்டா எங்கட புலம்பலுக்கெல்லாம் காது குடுக்காதீர்கள். சிலபேர் சொல்லுகினம் ரணிலுக்கு அந்த நேரம் வோட்டு போட்டிருந்தால் சமஸ்டி தந்திருப்பாராம், அப்ப தாறதை இப்ப தந்தா குறைஞ்சா போயிடுவார் ரணில்? இன்னொரு சாரார் சொல்லுகினம் போராட்டத்தை கைவிட்டு இடையில பேசியிருந்தா சிங்களவன் நல்லதொரு தீர்வை தந்திருப்பானாம்.  அவனைப் பற்றி நாம் புரிஞ்சு கொண்டது அவ்வளவுதான்.

சிங்களவன் எங்கட பலம் பலவீனம் எல்லாம் நல்லாய்த் தெரிஞ்சுதான் இவ்வளவு காலம் சளைக்காமல் இனவழிப்பு என்ற தேரை கச்சிதமாய் ஓட்டுறான். அவன்ர வெற்றிக்கு முண்டு குடுக்கிறது நாமதானப்பு. எங்கட பலமே எங்களுக்கு தெரியல, தடுத்தாடவும் தெரியல, ஆடுறது சுயநல ஆட்டம். அவுட், அவுட் நாமே நமக்கு குடுத்து சந்தோசப்படுகிறோம். நீங்கள் எழுதுகிற கருத்துகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற மாதிரி இருக்கு. முள்ளி வாய்க்கால் இனவழிப்புக்கு பின் நல்ல, வல்லவர்கள் சொன்னவை உமக்கு கேட்டிருக்க வாய்ப்பில்ல. கோத்தா: "பிரபாகரனை நாம் அழித்து விட்டோம். அரசியல் தீர்வென்று ஒன்றுமில்லை. நாங்கள் கொடுப்பதை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்". அவர்களிடம் என்ன தீர்வு இருந்தது எமக்கு தருவதற்கு? பொன்சேகா : "தமிழர் இங்கு வாழலாமே தவிர வேறெதுவும் கேட்க முடியாது." பிரபாகரன் காலத்தை நழுவ விட்டிட்டார் என பகற்கனவு காணுறோம். ராசா உங்களுக்கு ஒவ்வாமை இருந்தா உமக்கு ஒரு தட்டைத் தேடி அதில எடுங்கள் . மற்றவன் தட்டில எடுத்துப்போட்டு அதை அவன் தின்ன வேணுமெண்டு எதிர்பார்க்காதீர்கள். கருத்து சுதந்திரம் என்று தனி மனித வசை வேண்டாம். போன பஸ்சுக்காக கை காட்டிக்கொண்டு காலத்தை வீணடிக்காமல், சர்வதேசத்துக்கே குதிரை விடுகிறவனட்டை எப்படி தீர்வை பெறலாமெண்டு உங்களுக்கு  தெரிஞ்சா அந்த வழியில, எத்தனையோ தமிழ் அரசியல் கட்சிகள், தலைமைகள் இருக்கு அவர்களோடு சேர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்றால் தொடர்ந்து வயிற்றெரிச்சலைக் கொட்ட வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்.

  • Replies 62
  • Views 4.1k
  • Created
  • Last Reply

ஆயுதம் தூக்கிய விடுதலை போராட்டத்தை யார் தப்பென்று சொன்னது ?

அதை பயங்கரவாதமாக மாற்றியதுதான் தப்பு .தப்பு தப்பு .

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கிய விடுதலை போராட்டத்தை யார் தப்பென்று சொன்னது ?

அதை பயங்கரவாதமாக மாற்றியதுதான் தப்பு .தப்பு தப்பு .

ஆயுதம் தூக்கிய சகல போராட்டங்களும் பயங்கரவாதம் என்று தான் சர்வதேசம் முத்திரை குத்தும் ....புலிகள் இல்லாமல் புளொட் போராடியிருந்தாலும் அது பயங்க்ரவாதம் என்றுதான் சிங்களமும் சர்வதேசமும்  சொல்லியிருக்கும்

இது அருவரிப்பாடமாச்சே....

அவர் அதுக்கும் கீழா......

ஆயுதம் தூக்கிய சகல போராட்டங்களும் பயங்கரவாதம் என்று தான் சர்வதேசம் முத்திரை குத்தும் ....புலிகள் இல்லாமல் புளொட் போராடியிருந்தாலும் அது பயங்க்ரவாதம் என்றுதான் சிங்களமும் சர்வதேசமும்  சொல்லியிருக்கும்

நொண்டிக்கு குதிரைக்கு சறுக்கின சாட்டு .ஏனடா பரீட்சையில் பெயில் விட்டனி என்று கேட்டால் எல்லாரும் பெயில் என்று குழந்தைதனமாக பதில் அளிப்பவர்கள் தான் இங்கு அதிகம் .

ஆயுதம் தூக்கி போராடிய இயக்கங்கள் அனைத்தும் பயங்கர வாதமாக சர்வதேசம் எங்கும் சொல்லவில்லை .அனுராதபுரம் தொடங்கி கென் டொலர் என்று முள்ளிவாய்கால் வரை பயங்கரவாதம் தான் நடந்தது .மாற்று இயக்கங்கள் ,அரசியல்வாதிகள்.சமூக ஆர்வலர்கள் என்று கொலை கொள்ளை என்று தொடர்ந்தால் அது பயங்கரவாதம் என்று சர்வதேசம் சொல்ல தேவையில்லை அவர்களுக்கே  தெரியும் .

திருப்பி திருப்பி எழுதி எனக்கே அலுத்துவிட்டது .

என்று  சிங்களம் சொல்லுவதை யார் கணக்கில் எடுப்பது ஆனால் சர்வதேசதை கணக்கில் கொள்ளாமல் விட்டது பெரும் தவறு . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதம் தூக்கிய விடுதலை போராட்டத்தை யார் தப்பென்று சொன்னது ?

அதை பயங்கரவாதமாக மாற்றியதுதான் தப்பு .தப்பு தப்பு .

அண்ணை என்ன சொல்லவாறார் எண்டால்........ வேலாயுதம் சூலாயுத்தத்தை வைச்சு போஸ் குடுக்கோணுமே தவிர பாவிக்கக்கூடாது.........

ஒரு வேளை ஆயுதங்கள் எண்டு பூவரசம் கேட்டியை சொல்ல வாறரோ தெரியேல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கிய சகல போராட்டங்களும் பயங்கரவாதம் என்று தான் சர்வதேசம் முத்திரை குத்தும் ....புலிகள் இல்லாமல் புளொட் போராடியிருந்தாலும் அது பயங்க்ரவாதம் என்றுதான் சிங்களமும் சர்வதேசமும்  சொல்லியிருக்கும்

வெளிநாட்டு  பயங்கரவாதிகள் என்ற அமெரிக்காவின் பட்டியலிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலிலும் இடம் பெற்ற அமைப்புகளே சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளாக கருதப்பட்டன. கிழக்கு தீமோர் போராளிகளும் லிபியாவில் கடாபிக்கு எதிரான போராளிகளும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றதாக தெரியவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பிறகு  ஒரு முன்னாள் அமெரிக்க உயர் அதிகாரி (Richard Armitrage) விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது தவறு என்று கூறியிருந்தார். அவர் தமிழ் அமைப்புகளுக்கு ஆலோசகராக செயல்படும் சந்தர்ப்பத்தை (வருமானாத்தை) எதிர்பார்த்து இதை சொல்லி இருக்கலாம். அமெரிக்க அரசுக்கு சார்பாக ஆரம்பம் முதலே விடுதலை புலிகள் வெளிப்படையாக செயற்பட்டு இருந்தால் அவர்கள் இந்த பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெறுவதை தவிர்த்து இருக்க கூடும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தீமோர் மற்றும் கடாபிக்கு எதிரான போராளிகள் யாருடைய பின்னணியில் இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 

நொண்டிக்கு குதிரைக்கு சறுக்கின சாட்டு .ஏனடா பரீட்சையில் பெயில் விட்டனி என்று கேட்டால் எல்லாரும் பெயில் என்று குழந்தைதனமாக பதில் அளிப்பவர்கள் தான் இங்கு அதிகம் .

ஆயுதம் தூக்கி போராடிய இயக்கங்கள் அனைத்தும் பயங்கர வாதமாக சர்வதேசம் எங்கும் சொல்லவில்லை .அனுராதபுரம் தொடங்கி கென் டொலர் என்று முள்ளிவாய்கால் வரை பயங்கரவாதம் தான் நடந்தது .மாற்று இயக்கங்கள் ,அரசியல்வாதிகள்.சமூக ஆர்வலர்கள் என்று கொலை கொள்ளை என்று தொடர்ந்தால் அது பயங்கரவாதம் என்று சர்வதேசம் சொல்ல தேவையில்லை அவர்களுக்கே  தெரியும் .

திருப்பி திருப்பி எழுதி எனக்கே அலுத்துவிட்டது .

என்று  சிங்களம் சொல்லுவதை யார் கணக்கில் எடுப்பது ஆனால் சர்வதேசதை கணக்கில் கொள்ளாமல் விட்டது பெரும் தவறு . .

ஒசாமாவை வளர்த்ததும் அமெரிக்கா தான் பின்னர் பயங்கரவாதி என்று முத்திரை குத்தியதும் அதே அமெரிக்கா தான் .. இதிலிருந்து எல்லாரும் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் நோக்கம் புரிய வேண்டும் ...

அமெரிக்காவுக்கு யாரும் தேவை இல்லாமல் போகும் போது அவர்கள் பயங்கரவாதி ஆக்கப்படுகின்றார்கள் ...
இதனை இன்னும் புரியாத அரிவரி களுக்கு எப்படி பாடம் எடுப்பது ... அறிவாளிகளே புலிகள் மீது கோபம் இருக்கலாம் ஆனால் அவர்கள் பயங்கரவாதி ஆக்கப்பட்டது உலக நாடுகளின் நலனுக்காக ....

ராஜீவ் தமிழருக்கு எதிராக செய்த கொடும் பயங்கரவதத்திக்கு யார் தண்டனை கொடுப்பது ...அதெல்லாம் நியாயம் என்கின்றீர்களா ? உணர்வில்லாத மனிதர்களே ...எத்தனை பெண்களை இந்திய ராணுவம் நாசப்படுத்தியது ...இதனை பற்றி ராஜீவ் ஏதாவது விசாரணை நடத்தி எந்த ராணுவத்திக்கு தண்டனை கொடுத்தது . இதனை விட இந்திய ராணுவம் செய்த கொடுமைகள் நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை .கொலைகாரன் ராஜீவ் செய்த கொலைகளுக்கு யார் தண்டனை கொடுப்பது ? அல்லது 
அது தர்மமா ? 

அர்ஜுன் , இப்படிபட்ட ராஜீவினை என்ன செய்யலாம் ? ***
ராஜீவின் கொலை மட்டுமே புலிகளை பயங்கரவாதி ஆக்கப்பட்டதுக்கு அவர்கள் வைக்கும் முக்கிய காரணம் 
பதவியில் உள்ளவர்கள் செய்தால் அது உலக நியாயமா ? இதனை புலிகள் தட்டி கேட்பார்கள் ஏனெனில் அவர்கள் மானமுள்ள  புனிதர்கள் ...மக்களுக்காக போராட புறப்பட்டவர்கள் *** ....உண்மையுள்ள எவனும் இதனை தப்பு என்று சொல்ல மாட்டான் .

அரசியல் நோக்கங்களுக்காக உலக நாடுகள் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கினார்கள் தவிர உண்மையில்லை . இதனை வைத்து புலிவாந்தி எடுப்பவர்களின் உலக அரசியல் வெறும் பூச்சியம் தான் ...வேறு என்ன சொல்ல இருக்கு ....

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு  பயங்கரவாதிகள் என்ற அமெரிக்காவின் பட்டியலிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலிலும் இடம் பெற்ற அமைப்புகளே சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளாக கருதப்பட்டன. கிழக்கு தீமோர் போராளிகளும் லிபியாவில் கடாபிக்கு எதிரான போராளிகளும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றதாக தெரியவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பிறகு  ஒரு முன்னாள் அமெரிக்க உயர் அதிகாரி (Richard Armitrage) விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது தவறு என்று கூறியிருந்தார். அவர் தமிழ் அமைப்புகளுக்கு ஆலோசகராக செயல்படும் சந்தர்ப்பத்தை (வருமானாத்தை) எதிர்பார்த்து இதை சொல்லி இருக்கலாம். அமெரிக்க அரசுக்கு சார்பாக ஆரம்பம் முதலே விடுதலை புலிகள் வெளிப்படையாக செயற்பட்டு இருந்தால் அவர்கள் இந்த பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெறுவதை தவிர்த்து இருக்க கூடும்.

அமேரிக்காவுக்கு நன்றாகவே தெரியும் சிறிலங்காவில் இரு நாடுகாளை உருவாக்கி பிர்ச்சனையை வளர்ப்பதைவிட , சிறிலங்காவில் தனது சார்பு அரசை உருவாக்குவது இலகுவானது என்று....அமெரிக்கா சார்பு( வலதுசாரி)கட்சிகள் பல உள்ளது... புலிகள் தாங்கள் இடதுசாரிகள் என பகிரங்கமாக அறிவிக்கவில்லை ....ஆனால் எனைய விடுதலை இயக்கங்கள் புரட்சிகமுன்னனி, மக்கள் முன்னனி,என அறிவித்து அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்பதை பகிரங்கமாக வெளிகாட்டிகொண்டவர்கள்...

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தெரிந்தும் அந்த அறிவு பயனற்று போனது ஏன்?

கிழக்கு தீமோர் மற்றும் கடாபிக்கு எதிரான போராளிகளுக்கு அந்த பின்னணியை அணைத்துக்கொள்ள தெரிந்து இருந்தது அவர்களின் வெற்றிக்கு காரணம் ஆயிற்று. அது தெரியாமல் போனது முள்ளிவாய்க்காலில் தோல்விக்கு காரணமாய் போனது.

அமெரிக்காவுக்கு தேவைப்பட்டவர்களாக இருக்க கிழக்கு தீமோர் போராளிகளுக்கும் தென் சூடானியருக்கும் லிபிய போராளிகளுக்கும் தெரிந்து இருக்கிறது. ரணிலுக்கு தெரிந்து இருக்கிறது. ஆகவே அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள். உலக நாடுகளின் நலன்கள் அவர்களின் நலன்களுடன் முரண்படவில்லை. ஆகவே அவர்கள் பயங்கரவாதிகள் ஆக்க படவில்லை. 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உதாரணமாக குறிப்பிட்ட அமைப்புகளை உருவாக்கம், வழங்கல், திட்டம் வரை பெரியண்ணன் பார்த்துக் கொண்டார். இன்று வரை அவர்களின் கட்டுப்பாட்டில் தான் எல்லாம்.

எமது நாட்டில் இந்தியா தலையிட்டு நடந்தது உங்களுக்கு தெரியும், இந்தியாவை மீறி எந்த நாடும் எங்களுக்கு ஆதரவாக வராது ஆனாலும் பெரியண்ணன் உதவியை நாம் பெற்றுக் கொண்டிருந்தால் அவருக்கு அடிமையாய் இருந்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசுக்கு சார்பாக ஆரம்பம் முதலே விடுதலை புலிகள் வெளிப்படையாக செயற்பட்டு இருந்தால் அவர்கள் இந்த பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெறுவதை தவிர்த்து இருக்க கூடும்.

அப்படியெல்லாம் ஒன்றும் நடந்திருக்காது ....ஒருவேளை இலங்கை முழுவதும் பெட்ரோல் வளமும் , இலங்கை சனாதிபதி சதாம் குசேன் போல அமெரிக்கா எதிர்ப்பாளருமாக இருந்திருந்தால் நீங்கள் கூறியவை நடந்திருக்கலாம்  

தேர்தலுக்கு விண்ணப்பிக்காமல் அனந்தி வெறுமனே குற்றம் சாட்டுகிறார்! மாவை சேனாதிராசா
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 12:08.57 PM GMT ]
ananthi_mavai.jpg
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் இல்லையென அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கின்ற வேளையில், அனந்தி சசிதரன் அதற்கான விண்ணப்பத்தை தங்களிடம் ஒப்படைக்கவே இல்லை.

இருந்தும் அவர் தன்னை பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் மாவை சேனாதிராஜா வினா எழுப்பினார்.

அத்துடன் சில ஊடகங்கள் முன்பாகவும், வெளிநாடுகளுக்கும் சென்று கட்சியின் தீர்மானத்திற்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்துவரும் அனந்தி சசிதரனுக்கு எதிராக கட்சியின் தலைமை இதுவரை எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் இணைப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும், மாகாணசபை உறுப்பினராகவும் இருந்து கொண்டிருக்கும் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழரசு கட்சியிடம் வேட்பாளர் நியமனம் தருமாறும் கேட்கவில்லை. ஆனால் ஊடகங்களில் தன்னுடைய வேட்பாளர் நியமனத்தை நாங்கள் தடுத்தோம் என கூறிக்கொண்டிருக்கிறார்.

அவருக்காக நாங்கள் வருந்துகிறோம். அவர் தன்னுடைய அனேகமான வேலைகளை ஊடகங்கள் வாயிலாகவே செய்கிறார்.

மேலும் அனந்தி, தமிழரசு கட்சியின் உறுப்பினர், கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாகாணசபை உறுப்பினரும் கூட. ஆனால் அவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகவும் செயற்பட்டிருக்கின்றார்.

குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையை அனந்தியின் வாகனத்தில் கொண்டுவரப்பட்டே எரிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழரசு கட்சியின் செயற்குழுவில் அனந்தி மீது ஒழுக்காற்ற நடவடிக்கை எடுப்பதற்கு கடிதம் அனுப்பப்பட்டபோதும், அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.

இந்நிலையிலும் நாம் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ, அவருடைய மாகாணசபை உறுப்பினர் பதவியை பறிக்கவோ தீர்மானிக்கவில்லை.

இந்நிலையில் ஊடகங்களிடம் சென்று தனது நியமனத்தை நாங்கள் தடுத்துவிட்டோம். என கூ றுவது ஒத்துக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.

இதேவேளை நாம் வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதா, இல்லையா? என்பது தொடர்பாக பேசியிருந்தோம்.

இதன்படி கட்சி தலைவர்களுக்கு மட்டும் அந்த உரித்தை நாம் வழங்கியுள்ளோம். இதனை விடுத்து ஊடகங்களுக்கு பேசுவதை அனந்தி நிறுத்தவேண்டும்.

அனந்தி தனது பல செயற்பாடுகளை ஊடகங்கள் வாயிலாகவே மேற்கொண்டு வருகின்றார். மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை நானும் சுமந்திரனும் பெற்றுக் கொடுத்திருந்தோம் என்றார்.

வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிடுவது தொடர்பாக வடக்கு, கிழக்கிற்கு மாகாணங்க்ளுக்கு வெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை பரிசீலித்து வருவதாக கூட்டமைப்பு மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புத் தலைமைகள் மற்றும் பிற மாகாணங்களில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வருகிறோம்.

இது தொடர்பில் இன்னும் சில திங்களில் முடிவு எடுத்து அறிவிப்போம் எனவும் மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் போட்டியிட வேண்டும் என விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மாவை இவ்வாறு குறிப்பிட்டார்.

http://www.tamilwin.com/show-RUmtyHTcSUev2C.html

மாவையருக்கு சித்தம் கலங்கிவிட்டது ... அவர் ஒருக்கா கும்மாளம் அடித்திட்டு (விளங்கும் தானே) வர எல்லாம் தெளிஞ்சுடும் ... சும்மா வாய் போன வாக்கில் அனந்தியை கோர்த்து பிதற்று கின்றார் ...

2 மாதங்களிட்கு முன் மாவை அண்ணன்  வெள்ளவத்தை நோலிமிட்டில் ஒருதமிழ் பையனிடம் ஆங்கிலத்தில் முக்கி முக்கி விலைவிசாரித்ததை நேரடியாக காணக்கூடியதாக இருந்தது.

வவுனியா கடந்தவுடன் எப்படி தமிழ் பாசம் வருகுதோ தெரியல

  • தொடங்கியவர்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதேவேளை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தத்தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக அவர் முறையாக விண்ணப்பித்திருந்தால், அவரை அழைத்து தாங்கள் பேசியிருப்போம் என்றும் மாவை சேனாதிரஜா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தமிழரசு கட்சியின் சார்பில் வேட்பாளர்களாவதற்குப் பலர் விண்ணப்பம் செய்திருக்கின்ற நிலையில் விண்ணப்பம் செய்யாத அனந்தியை எவ்வாறு வேட்பாளராக நியமிக்க முடியும் என்றும் சேனாதிராஜா கேள்வி எழுப்பினார்.
"தமிழரசுக் கட்சியிடம் கேட்பதற்குப் பதிலாக ஊடகங்களிடம் நாங்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் தரவில்லை என்று அனந்தி கூறி வருகிறார்", என்றும் சேனாதிராஜா குற்றம் சுமத்தினார்.

null
தமிழரசுக் கட்சி தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று அனந்தி விமர்சனம்

அனந்தி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியின் சார்பில் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கேட்டபோது, மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு மாத்திரமே தனக்குக் கட்சியிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், வேறு எந்த விடயம் குறித்தும் தனக்குக் கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்றும் அனந்தி மறுத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து முறையான ஒரு விசாரணை நடத்தப்பட்டிருக்குமானால், தனது நிலைப்பாட்டைத் தான் நிரூபித்திருக்க முடியும் என்றும் அனந்தி சசிதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுக்கள் நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என கேட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தனித்து சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும், அந்த மக்களின் ஆதரவுடன் இந்தத் தேர்தலில் வெற்றியீட்டப் போவதாகவும் அனந்தி சசிதரன் பதிலளித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/07/150709_ananthi

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அடுத்த தோல்வி..

ஒரே கொள்கையில் உள்ளவர்கள்

இவரது   தொகுதியில் இவரை ஆதரித்தால்

வெற்றி பெறுவார்....

  • கருத்துக்கள உறவுகள்

இது இதைத்தான் எதிர்பார்த்தேன். அதை     விட்டுட்டு சும்மா எங்கட கூட்டமைப்புக்குள்ள வந்து புலம்பிக் கொண்டு நிக்கக்கூடாது.  எழிலனின் இறுதிப் போர்கால நடவடிக்கைகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.  அநேகமாக இவருடன் அரசியல் இத்துடன் முற்றுப் பெற்றுவிடும். கடைசி ஜனநாயகக் கோமாளிகளுடன் மன்னிக்கவும் போராளிகளுடனாவது சேர்ந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""
இது இதைத்தான் எதிர்பார்த்தேன். அதை     விட்டுட்டு சும்மா எங்கட கூட்டமைப்புக்குள்ள வந்து புலம்பிக் கொண்டு நிக்கக்கூடாது.  எழிலனின் இறுதிப் போர்கால நடவடிக்கைகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.  அநேகமாக இவருடன் அரசியல் இத்துடன் முற்றுப் பெற்றுவிடும். கடைசி ஜனநாயகக் கோமாளிகளுடன் மன்னிக்கவும் போராளிகளுடனாவது சேர்ந்திருக்கலாம்."""

அதனால் தான் 80 ஆயிரம் சனம் காலமை உதயன் போலி பதிப்பை வெளியிட்ட பிறகும் போட்டது. 

மாவையார் தனக்கு தலை போகும் என்ற பயத்தில் இடம் குடுக்காமல் விட்டவர். 

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் 80 ஆயிரம் சனம் காலமை உதயன் போலி பதிப்பை வெளியிட்ட பிறகும் போட்டது. 

மாவையார் தனக்கு தலை போகும் என்ற பயத்தில் இடம் குடுக்காமல் விட்டவர். 

அனந்தியை ஒரு முற்றுகைக்குள் வைத்திருந்தனர்

தமிழரசுக்கட்சி

மாகாணசபை உறுப்பினர்

சில குற்றச்சாட்டுக்கள்

இப்படியே அமுக்கி வைத்து அவரது அரசியல் வாழ்க்கையை அழித்துவிடலாம் என்ற அறிவு....... களுக்கு 

அனந்தியின் இந்த அறிவுப்பு நிச்சயம் நித்திரையைக்கெடுக்கும்..

அனந்தியின் அரசியல் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரப் போகின்றது. 
அனந்தியிடம் தாயக மக்கள் ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அவ்  மக்களுக்காக அரசியல் செய்யாமல்  புலம்பெயர் தேசங்களில் கதிரைப் போட்டிக்காக அடிபடும் தமிழ் தேசிய வியாபாரிகளுக்காக உணர்ச்சி அரசியல் செய்து தனக்கு மக்கள் கொடுத்த வாய்ப்பினை நாசமாக்கி விட்டார்.

அனந்தி தோல்வி அடைந்த பின் அவர் யாருக்காக அரசியல் செய்தாரோ  அவ் பு.பெ. தமிழ் தேசிய வியாபாரிகளே அவரை முற்றாக கைவிட்டு விடுவர்

இதில இரண்டு பக்கம் இருக்குது. ஒன்று இருந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் விடுவது மற்றது இயலகூடியதை அடைய முயல்வது . தனிபட்ட ரீதியில் அனந்தியோ, விடுதலை போராளிகளோ , ததேமு ஒ தோற்கலாம் ஆனால் இனம் என்று அவர்கள் செய்ய வேண்டியதை வேண்டியதை செய்திருகிறார்கள், செய்வார்கள் . 

கூடுதலான சுயேட்சைகளின் வரவு துரதிஸ்ட வசமாக டக்லஸ் இனதும் வியகலவினதும் இருப்பை உறுதிப்படுத்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின் அரசியல் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரப் போகின்றது. 
அனந்தியிடம் தாயக மக்கள் ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அவ்  மக்களுக்காக அரசியல் செய்யாமல்  புலம்பெயர் தேசங்களில் கதிரைப் போட்டிக்காக அடிபடும் தமிழ் தேசிய வியாபாரிகளுக்காக உணர்ச்சி அரசியல் செய்து தனக்கு மக்கள் கொடுத்த வாய்ப்பினை நாசமாக்கி விட்டார்.

அனந்தி தோல்வி அடைந்த பின் அவர் யாருக்காக அரசியல் செய்தாரோ  அவ் பு.பெ. தமிழ் தேசிய வியாபாரிகளே அவரை முற்றாக கைவிட்டு விடுவர்

இப்ப கொஞ்ச காலமாக

இவ்வாறு எழுதுவது அதிகரித்து வருகிறது

அதன்படி பார்த்தால் இந்த வியாபாரிகள் தமிழரிடையே பெருமளவில் இருக்கணும்

துரோகி என்ற பட்டத்தை எவருக்கும் கொடுப்பதை விரும்பாதவர்கள்

எதிர்த்தவர்கள்

தற்பொழுது தாங்களே ஒரு பகுதியை நோக்கி இவ்வாறு எழுதவேண்டி வந்தது வருந்தக்கது..

இதில் நான் புலம் பெயர் தமிழ் அரசியல் வாதிகள் என்று அனைவரையும் குறிக்கும் முகமாக  பொதுப் பண்பில் குறிப்பிடவில்லை.' புலம்பெயர் தேசங்களில் கதிரைப் போட்டிக்காக அடிபடும் தமிழ் தேசிய வியாபாரிகளுக்காக' என்று தான் வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளேன்.

எனக்கு இந்த இரண்டு பிரிவினரையும் நன்கு தெரியும். ஒரு பிரிவு உண்மையாகவே மக்களின் அழிவுகளுக்காக கவலைப்பட்டு அவர்களுக்காக நல்ல விடயங்களை செய்து வரும் பிரிவு. மக்களின் முடிவுகளை ஏற்று அவர்களிற்காக இயங்கும் பிரிவு அது.  இன்னொரு பகுதி அம் மக்கள் மீது தம் முடிவுகளை திணிக்க முயலும் வியாபாரிகள் பகுதி. என்றுமே தம்மை கதிரையில் வைத்து பார்க்க அலையும் பிரிவு இது

பொதுவாகவே இந்த இரண்டாம் பிரிவை பற்றி எழுதினால் உங்களுக்கு கோபம் வருவது நிதர்சனம்

 இனம் என்று அவர்கள் செய்ய வேண்டியதை வேண்டியதை செய்திருகிறார்கள், செய்வார்கள் . 

இனம் என்ற ரீதியில் அனந்தி  செய்த காத்திரமான விடயம் என்று ஒன்றை குறிப்பிடவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.