Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் கழற்றிவிடப்பட்ட கருணா.. 'நோ' சீட்...

Featured Replies

அதிர்ச்சியில் கருணா – உறுதிமொழி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக விசனம்

JUL 15, 2015 | 1:27by கார்வண்ணன்in செய்திகள்

karunaதனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது.

இந்தச் சூழலில், இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது.

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.

அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன்காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/15/news/7832

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 
கதிர்காமர் முக்கி முக்கி செயல்பட்டதற்கு பலன் கங்காராமை சந்தியில் ஒரு இத்துப்போன சிலை 

(பிரதம வேட்பாளர் ஆகும் தகுதியிருந்தும் வழங்கப்படவில்லை )

இப்ப  உமக்கு நன்றாக வாயில வைச்சிட்டினம்....(முன்கதவு பின்கதவு என்ன கதவிற்கு அருகிலேயே வரமுடியாதபடி ஆக்கிப்போட்டினம்).

இனி என்ன எப்பிடியும் சிங்களவன் தமிழனை கொன்றதை  ஒப்புகொள்ளமாட்டான் , அப்பிடி நடந்தாலும் அத அப்பிடியே தூக்கி உம்மட பிளேட்டில் போடுவான் .... ருசித்து சாப்பிடும் ....கேரளத்து ரோ குட்டியோட (ஆண்டியோட) திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப.... கவலைப் பட்டு, என்ன பிரயோசனம் கருநா....
காட்டிக் கொடுப்பவனுக்கு, இது தான்.. நடக்கும் என்று.... முன்பே தெரியாமல் போனது ஏன்?
விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராடியிருந்தால்.... 
இந்நேரம் ஐ.நாவில் தமிழீழ தேசியக் கொடி Flag.gif பட்டொளி வீசி பறந்து  கொண்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
போரில் கோத்தாவுக்கு உதவிய தன்னை ஏமாற்றி விட்டனராம்! பொருமுகிறார் கருணா 
[Wednesday 2015-07-15 07:00]
தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். “தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது.

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும், இந்தச் சூழலில், இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135900&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பொருமி.. AP ஐ கூப்பிட்டு சுதந்திரக் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று அறிக்கை விட்டு படமா காட்ட முடியும். தனது சுயநலத்துக்காக மீண்டும் 300 கிழக்கு மாகாண பிள்ளைகளை பலிகொடுத்திருக்கிறார்... இந்த நவீன காக்கைவன்னியன். உலகில் எட்டப்பனுக்கும் காக்கைவன்னியன்களுக்கும் வாழ்க்கை இப்படித்தான் அமையும். :grin:

இந்தக்கருநாய் சிக்கி சின்னபின்னமாகி நடுரோட்டுக்கு வர வாழ்த்துகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவே, உள்ளவா, வெளியவா எண்டு தடுமாறேக்க இவருக்கு குசும்பு.

தெற்காலிப் பக்கம் போய் மேடை ஏறி மகிந்த பாட்டு பாடேக்கவே தெரியும் இவருக்கு ஆப்புத்தான் என்று.

மகிந்தா அண்ட் கம்பனியே இந்தப் பாடுபட்டு இடம் எடுக்க, இவர் தண்ணியப் போட்டுட்டு படுத்துக் கிடந்து போட்டு இப்ப நிண்டு குளறுறார்.

அரசியலில இது சகசமப்பா.

கோடரிக்காம்புகளுக்கு என்னாகும்...இ

வெகுவிரைவில் தன் மக்கள் முன் நிர்வாணமாக இவர் நிற்பார் என எதிர்பார்த்தேன்

இவர் எங்கும்  செல்லமுடியாது

எங்கு சென்றாலும் சவூதித்தீர்ப்புத்தான்..

அதையும் என் கண்ணால் பார்க்கணும்

பார்ப்பேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

 நம்பியவரை கழுத்தறுத்த உன்னை சிங்களவன் நம்புவான், பதவி தருவான் எண்டு நீ நினைப்பது உனது அறியாத்தனமும் அதிகப்படியான எதிர்பார்ப்புமாகும். தலைவரால் நீ பெற்றுக்கொண்டதெல்லாம் நீயே வீணாக்கி போட்டு. இப்ப விளங்கி இருக்கும் நீ யார்? என்பது. வெறும் கறிவேப்பிலை. 

  • கருத்துக்கள உறவுகள்

புலியாக இருந்த கருணா அம்மானுக்கு நிறையத் திறமைகள் உள்ளதை யாரும் மறுக்கமுடியாது. அவர் தனது திறமைகளைப் பாவித்து இலங்கை அரசியலில் சுழியோடுவார்.

எத்தினை நாளைக்குத்தான் உளறலை பொறுத்துக்கொண்டிருப்பான் சிங்களவன்? காட்டிக்கொடுத்ததை விட என்ன திறமை   இருக்கு?நாடாளுமன்றத்தில சீற் எடுக்க. தன்ர இனத்தையே காட்டிக் கொடுத்தவனை அவன் நம்புவான் எண்டு நினைப்பது அம்மான்ர முட்டாள்த்தனம். அதை வைச்சு நெடுங்  காலம் கதிரைக்கு கனவு காண்பது கொஞ்சம் அதிகம்தான். 

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது.

இந்தச் சூழலில், இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது.

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.

அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன்காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.http://www.pathivu.com/news/41589/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 நீ உன்ர இனத்துக்கு குடுத்த ஏமாற்றத்தை விடவா? பெரிய  ஏமாற்றம் உனக்கு. "உனக்கு ஏமாற்றம்." என்று நீ சொல்வதுதான் எமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இப்ப தெரியும் உனக்கு ஏமாற்றத்தின் வலி. காட்டிக்குடுத்த உனக்கு இவ்வளவு வலி எண்டா, உன்னை வளர்த்து விட்டவனுக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும்? அனுபவி ராசா அனுபவி. காட்டிக் கொடுத்ததை விட நீ போட்ட  கும்மாளம். எல்லாம் உன்ர அற்ப தனம்.

அண்ணையை மட்டக்களப்பிலை போட்டியிடச் சொல்லி கட்சி சொன்னதாம். அண்ணை மறுத்திட்டாராம். (தான் போட்டி போட்டால் மக்கள் போட்டுக் குவிக்கிற வாக்குகளை எண்ண உத்தியோகத்தர்கள் கஸ்ரப்படுவினம் எண்டு யோசிச்சிருக்கலாம்)

பிள்ளையானுக்கு இருக்கிற துணிவு கூட அண்ணைக்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

கருணா நல்லவர் வல்லவர் எண்டு கொஞ்சப்பேர் சொல்லிக்கொண்டு திரிஞ்சினம்.....இப்ப என்ன சொல்லப்போயினம்.......இனித்தான் நாடகங்கள் அரங்கேறப்போகுது :wink:

 இது நடக்கும் என்று எப்பவோ எங்களுக்கு தெரியும் ... ------ உன்னால எத்தனயயிரம் போராளிகளின் உயிர்களும் எங்கள் நாடும் இழந்தது ...இன்னும் அனுபவிப்பாய் 

Edited by நிழலி
Removed

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் புலிகளின் அழிவுக்குக் காரணமானவர் என்பதால் பலருக்கு அவர் மீது கோபம் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் அவர் அரசியலில் இருந்து காணாமல் போவார், செல்லாக்காசாகிவிடுவார் என்று எதிர்பார்ப்பதெல்லாம் நடக்காது. கொஞ்சக்காலம் பார்ட்டிகளிலும், கிளப்புக்களிலும் பொழுதைப் போக்கிவிட்டு மீண்டும் வருவார். :wink:

இவரால் சிங்களத்திக்கு ஏதாவது தேவை இருப்பின் மட்டுமே இவரினை நாடுவார்கள் ..போரின் போது இவர் மிகவும் தேவைப்பட்டார் அதன் பின்னர் வெளிநாடுகளில் உள்ள புலிகளை பிடிப்பதற்கு இவரின் உதவி தேவைப்பட்டது . ஆனால் இப்ப நிலவரம் வேற ..சிங்களவன் இப்ப கோசமிடுகின்றர்கள் ஏன் கருணா மற்றும் கே.பி போன்றவர்களின் குற்றங்களை அரசாங்கம் இன்னும் தண்டிக்கவில்லை என்று .

இவர் இப்ப செல்லா காசு ... கழட்டி விடப்பட்டுள்ளார் .. போர்க்குற்ற விசாரணையில் இவர் பிரதான குற்றவாளியாக உள்ளார் ..அதன் முன் ஏற்பாடு தான் இது ...அரசியல் விளங்காத ஒரு நபர் தான் இந்த கருணா .

தலைவரின் சிறந்த வழி காட்டுதலால் ஒரு சிறந்த போர்த்தளபதியாக இருந்தவர் இப்ப ஒரு வெற்று காசு ஆக்கப்பட்டுள்ளார் ...

இது சம்பந்தன் சுமந்திரனும் சிங்களத்தை பற்றி படிக்க ஒரு நல்ல உதாரணம் ..

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 
கதிர்காமர் முக்கி முக்கி செயல்பட்டதற்கு பலன் கங்காராமை சந்தியில் ஒரு இத்துப்போன சிலை 

(பிரதம வேட்பாளர் ஆகும் தகுதியிருந்தும் வழங்கப்படவில்லை )

இப்ப  உமக்கு நன்றாக வாயில வைச்சிட்டினம்....(முன்கதவு பின்கதவு என்ன கதவிற்கு அருகிலேயே வரமுடியாதபடி ஆக்கிப்போட்டினம்).

இனி என்ன எப்பிடியும் சிங்களவன் தமிழனை கொன்றதை  ஒப்புகொள்ளமாட்டான் , அப்பிடி நடந்தாலும் அத அப்பிடியே தூக்கி உம்மட பிளேட்டில் போடுவான் .... ருசித்து சாப்பிடும் ....கேரளத்து ரோ குட்டியோட (ஆண்டியோட) திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான் 

securedownload.png

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு  துரோகம் செய்து சிங்களவருடன் சேர்ந்தவர் நாளைக்கு சிங்களவருக்கு துரோகம் செய்ய மாட்டார் என எப்படி நம்புவது என சிங்களவர்கள் நிச்சயமாக யோசிப்பார்கள்.இவரின் தேவை இருந்தால் பயப்படுத்தி கொள்வார்கள். இப்போதைக்கு அந்த தேவையும் இல்லை என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
face book -Jaffna Campus Uniதமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகள் களமிறக்கப்பட்டுள்ளன, மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். :- {துணைக்குழு தலைவர்} - ததேகூ வேட்பாளர் சித்தார்த்தன்,{தினக்குரல் 15/07/15}
தன்னை சொல்லி இருப்பரோ?
இனி இந்த பேட்டியை படிக்கவும் .
http://transcurrents.com/…/the_13th_amendment_to_the_cons.h…
இந்த பேட்டி 2010 டிசெம்பரில் சித்தர்த்தனினால் வழங்கப்பட்டது :
 
//இறுதி நேர யுத்தத்தில் இறுதி பாதுகாப்பு வலயம் வரைகுமான சண்டையில் மிகவும் துல்லியமான‌ முறையில் சிறி லங்கா ராணுவம் தமது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள். சிறி லங்கா ராணுவம் வேண்டுமென்றே தமிழ் மக்களைக் கொன்றது என யாரும் சொல்ல முடியாது.
விடுதலைப்புலிகள் எவ்வளுவு தான் கத்தினாலும் இலங்கையிலிருந்து பார்ர்கிற எமக்கு தெரியும் இக்குற்றச்சாட்டு சரியானது அல்ல என்று.
ஆனால் நடந்தவற்றிற்கு பொறூபுக்கூறல் வேண்டும்,
இடம்பெயர்ந்த மக்க்ளிடமிருந்து நான் கேள்விப்பட்டவரை, {இராணுவத்தோடு }ஒப்பீடளாவில் விடுதலைப்புலிகளே மிக கொட்டுரமாக இருந்திருக்கிறார்கள். தப்ப முயன்ற பலரை கொன்ற்ருக்கிறாகள் ,
எது எப்படியாயினும் பலர் இறந்திருக்கிறார்கள் . ஐயாயிரம் தொடகம் ஏழாயிரம் வரையிலான மக்கள் இறந்திருக்கலாம், இந்த எண்ணிக்கையை நான் சீரியஸாக எடுக்கவில்லை.//
//"கடந்த (2010) பொதுத் தேர்தலில் 4000 கூட்டமைப்பு வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்றது. யாழ்ப்பாணத்தில் கூட 20,000 வாக்குகளாலேயே வெற்றி பெற்றது. இதன் அர்த்தம் என்னவென்றால் கணிசமான தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்தார்கள் என்ப‌தே. இவ்வளவு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தமை அரசாங்கம் போர் குற்றங்களைப் புரியவில்லை என்பதையே காட்டுகின்றது. //
//{செட்டிகுளாம்}தடுப்புமுகாம்களில இருந்து பெரும் எண்ணிக்கையான விடுதலைப்புலிகளின் முகிய உறூப்பினர்க்ள் பணத்தைப்பயன்படுத்தி தப்ப்பி சென்றனர்,இதுபற்றீ நான் ஜனதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு சொல்லிக்கொடுத்தேன், அவர் கடும் பகோபம் அடைந்திருந்தார்,//
//"வடக்கில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே நல்லுறவு உள்ளது. தமக்கு ஒரு பிரச்சனை என்றால் அதனை ராணுவத்திடம் மக்கள் சொல்கின்றனர். இராணுவத்தினரும் அந்தப் பிரச்சனையை தீர்க்க இயன்ற வரை தம்மால் ஆன சகலதையும் செய்கிறார்கள்".//
நான் இராணுவத்திற்கு எதிரான ஒரு சீரியஸான‌ குற்றச்சாடையும் கேள்விப்படவில்லை.//
//மகிந்தர் தமிழில் பேசுவதை பலர் விமர்சிக்கிறார்கள் .நான் சொல்கிறேன் அவர் தமிழைப்படிப்பதற்கான துணிவைக்கொண்டொருக்கிறார். அதை பாராட்ட வேண்டும்.
அது எம்மை நோக்கிய ஒரு நல்ல சமிக்ஞை. smile emoticon //
//நாங்கள் விடுதலைப்புலிகளின் தோல்வியை எதிர்பார்த்திருந்தோம்,, ஆனால் அது இவ்வள்வு விரைவில் இப்படியாக நடக்கும் என நாங்கள் நம்பியிருக்கவில்லை.//
— feeling crazy.
Balamurukan Thirunavukarasu
Jaffna Campus Uni's photo.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.