Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

amal.jpg

புளொட்டால் நியமிக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் தெரிவான இளம் நாடாளுமன்ற உறுப்பினரானஅமல் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ச.வியாளேந்திரன்.

  • Replies 571
  • Views 32.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனோ வெற்றி சந்தோசம்.

குகவரதன் என்னானார்?

  • கருத்துக்கள உறவுகள்

2015-General-Election-resutls-web-600-1%

ஒரே பார்வையில் தேர்தல் முடிவுகள்

Edited by zuma

தமிழர் தரப்பில் இரு கட்சி  அரசியல் தான் தேவை  இனவாத கட்சிகள் அல்லாத இரு தமிழ்க்கட்சிகள்  தேவை. ஒன்று தமிழ்தேசிய கூட்டமைப்பாயின் ,,மற்றையது தமிழ்தேசிய மக்கள் முன்னனி.  அப்போதான்  சிங்களத்துடன்   அரசியல் செய்யலாம்.

தமிழ்நாட்டில்  தி.மு.க    அ.தி.மு.க  . தேசியகட்சிகள் அல்லாதவை போன்று  ஈழத்திலும் வர வேண்டும்.

அதைதான் புலம் தமிழர்கள் மனதில் கொண்டு கஜேந்திரன் அணிக்கு  மதிப்பளிக்கலாம், அல்லது ஊக்குவிக்கலாம். 

அதை இங்க சிலர் புலிகளுடன் வாந்தி எடுப்பது தான்  கேவலம். அரசியல் தெரியாத கோமாளிகள்.

தேர்தல் முடிவுகள் சூப்பர் 

என்ன என்னுடைய இன்னொரு சின்ன ஆசை நிறைவேறாமல் போனது கொஞ்சம் வருத்தம்.

அனந்தி தனியாகவோ அல்லது சைக்கிள் கோஸ்டியோட போட்டி போட்டு மண் கவ்வி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

அனாலும் இறுதிநேரத்தில் அவர் சரியான முடிவேடுத்ததனால் அது நடைபெறவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சுண்டங் காய் கஜே குழுவை நிகராக வைத்து பேச நல்ல அரசியல் அறிவு தேவை.  எங்களிண்ட டக்கிளஸ் அங்கிளைச் சொன்னாலும் காரியமில்லை. 

தமிழர் தரப்பில் இரு கட்சி  அரசியல் தான் தேவை  இனவாத கட்சிகள் அல்லாத இரு தமிழ்க்கட்சிகள்  தேவை. ஒன்று தமிழ்தேசிய கூட்டமைப்பாயின் ,,மற்றையது தமிழ்தேசிய மக்கள் முன்னனி.  அப்போதான்  சிங்களத்துடன்   அரசியல் செய்யலாம்.

தமிழ்நாட்டில்  தி.மு.க    அ.தி.மு.க  . தேசியகட்சிகள் அல்லாதவை போன்று  ஈழத்திலும் வர வேண்டும்.

அதைதான் புலம் தமிழர்கள் மனதில் கொண்டு கஜேந்திரன் அணிக்கு  மதிப்பளிக்கலாம், அல்லது ஊக்குவிக்கலாம். 

அதை இங்க சிலர் புலிகளுடன் வாந்தி எடுப்பது தான்  கேவலம். அரசியல் தெரியாத கோமாளிகள்.

:grin:

காமடி தாங்க முடியவில்லை, முடிவெடுத்தது மக்கள்.. 

அடுத்தது, இலக்கு இன்னும் அடையப்படவில்லை, ஒரு தீர்வு வரட்டும் அதோட தேர்தல் முறையும் மாறட்டும் அதுக்குபிறகு சைக்கிள வாங்கோ அல்லது எதில எண்டாலும் வாங்கோ. 

தமிழ்நாட்டு தேர்தல் முறைமை எங்கள் அரசியல் நிலமை தெரியாமல் பிரிந்து நிப்பதால் பிரதிதித்துவும் தேசிய கட்சி போனால் தீரவாவது மண்ணாங்கட்டியாவது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே சிலர் கூட்டமைப்பின்  வெற்றியினை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

இதை நாங்கள் காலாகாலமாக கொண்டாடி விட்டோம். :cool:

நல்லது கெட்டதுகளிலும் முக்கிய தமிழ்கட்சிகள் தோல்வியடைந்ததாக சரித்திரமேயில்லை.:)

அதை இங்கே சிலர் தங்களின் முயற்சியால் என்பது போல் புளகாங்கிதமடைந்து பொதறிவில்லாது நையாண்டி கருத்துக்களை எழுதி வருகின்றார்கள்.    

நாட்டின் / சர்வதேச அரசியல் சூழ்நிலை காரணமாக அவர்கள்தான் வெற்றியீட்ட வேண்டும் இது நிர்ப்பந்தம்.

ஆனால் இங்கே கூட்டமைப்பின் வெற்றியை யார் கொண்டாடுகின்றார்கள்?  நாட்டின் மேல் பாசம் கொண்டவர்களா? அப்படியாயின் இங்கு என்ன செய்கின்றார்கள்? மற்றவர்களை பார்த்து விசிலடிச்சான் குஞ்சுகள்  / படிப்பறிவில்லாததுகள் என ஏளனம் செய்துவிட்டு...தாங்கள் எப்படியான கருத்துக்களை இங்கே முன் வைத்திருக்கின்றார்கள்? தொடர்ந்து வாசித்தவர்களுக்கு தெரியும்.  :wink:

அவர்களின் ஒரேயொரு கொள்கை புலிகளை எதிர்ப்பதுதான். அது யார் வடிவிலும் எந்த கொள்கையிலும் வந்தாலும் சரி... ஆதரவு அவர்களுக்குத்தான்! பின்விளைவுகள் பற்றி அவர்களுக்கு கவலையேயில்லை. புலியும் அதனை சார்ந்தவர்களும் அழிய வேண்டும். அதுவே அவர்களின் தார்மீக சிந்தனை.

தந்தை செல்வா ஆரம்பித்த பயணம் தொடர்ந்தாலும் இன்னும் ஒழுங்கான சாரதிகளிடம் வாகனம் கிடைக்கவில்லை என்பதே என் ஆதங்கம். :(

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறோம் ஒறிஜினல் புலிகள் வேறு புலிவால்கள் வேறு. இந்தப் புலிவால்கள் ஒறிஜினல் புலிகளாக தங்களை காண்பித்து புலத்து மக்கள் மேல பாசம் கொண்டவர்கள் போல பாசாங்கு செய்து புலம்பெயர் தமிழர்களின் இரத்த்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள். தயவு செய்து ஒறிஜினல் புலிகள் போல நடிக்கவேண்டாம். இங்கு வெற்றிக் களிப்பில் இருப்பவர்களின் ஒரே காரணம் புல மக்கள் தமது அரசியலைத் தீர்மானித்து புலிவால்களை விரட்டி விட்டார்கள் என்பதே. இங்கு புலிகளை எவரும் எதிர்க்கவில்லை.  சும்மா புலிகளை முன்னுக்கு வைத்து தோல்வியில் அனுதாபம் தேடும் முயற்சியில் இறங்க வேண்டாம். 

வாலி புலிகளை எதிர்க்கவில்லை என்னும் நீங்கள், கோசான், மற்றும் சிலர் இந்த தேர்தல் புலி நீக்கம் எனும் போது அதை மறுக்காதமை முரண் இல்லையா? 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

மட்டகளப்பில் அமலும் வெற்றி .(இரண்டாவது இடம் )

அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை ஆனால் அவர் என்ர ஆள். 

போங்கடா நீங்களும் உங்கட கேவலம் கெட்ட இணக்க அரசியலும்.

இன்னும் ஒரு சில தசாப்தங்களின் பின் ஈழத்தமிழனை அருங்காட்சியகத்தில் தான் தேட வேண்டி வரும். 

கிழக்கு பறி போய் விட்டது . இப்பொழுது வடக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகின்றது. உங்கள் இணக்க அரசியல் இடங்களை பறி கொடுத்து இன அடையாளங்களை பறிகொடுத்து மத மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்து உங்களை இரண்டாவது சிறுபான்மையினமாக மாற்றும் . ஆனால் கவலைப்பட்டதீர்கள் . அதுவரை நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள். நீங்கள் தெரிவு செய்த தலைவர்களும் இருக்க மாட்ட்டார்கள்.. அவர்களுக்கு என்ன வாழும் வரை தமிழின தலைவர். வாரிசுகள் வெளிநாட்டில் தமிழே தெரியாமல்.

என்ன உங்களுக்காக தங்கள் வாழ்வை உருக்கிய அந்த உள்ளங்களை நினைக்கத்தான் நெஞ்சு வெடிக்கிறது.

மீரா ஊருக்கு கதைத்தீர்களா? மக்கள் என்ன சொல்லினம்?

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தினி சிறீஸ்கந்தராஜா தெரிவாகவில்லை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாண சபை உறுப்பினரான டொக்டர் சிவமோகன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவாகியுள்ளார்.

முன்னதாக சாந்தினிக்கும் சிவமோகனுக்கும் இடையில் ஆறு வாக்குகள் வித்தியாசம் இருந்தது என்றும் பின்னர் மீள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் சிவமோகன் தெரிவாகியுள்ளதாக தற்போது அறியத்தந்துள்ளனர்.  

  • கருத்துக்கள உறவுகள்

மீரா ஊருக்கு கதைத்தீர்களா? மக்கள் என்ன சொல்லினம்?

நீங்கள் கேட்டது தேர்தல் தொடர்பாக எனில் அதை திங்கள் காலையிலேயே எழுதி விட்டேன். 

கூட்டமைப்பு சரியான எதிரனியாக   ஈ.பி.டி.பி யாக தான் இருக்கும்  கஜேந்திரன்   சுயநல அரசியல் செய்கிறார்   சில வேளைகளில்  கூட்டமைப்பில்  இருந்து   யாரவது வெளியேறி மாற்று சக்தியாக வரலாம்....ஆட்சியில் பங்கு எடுக்கும் கட்சிகளை மக்கள்  ஆதரிக்க விரும்புவார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

போங்கடா நீங்களும் உங்கட கேவலம் கெட்ட இணக்க அரசியலும்.

இன்னும் ஒரு சில தசாப்தங்களின் பின் ஈழத்தமிழனை அருங்காட்சியகத்தில் தான் தேட வேண்டி வரும். 

கிழக்கு பறி போய் விட்டது . இப்பொழுது வடக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகின்றது. உங்கள் இணக்க அரசியல் இடங்களை பறி கொடுத்து இன அடையாளங்களை பறிகொடுத்து மத மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்து உங்களை இரண்டாவது சிறுபான்மையினமாக மாற்றும் . ஆனால் கவலைப்பட்டதீர்கள் . அதுவரை நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள். நீங்கள் தெரிவு செய்த தலைவர்களும் இருக்க மாட்ட்டார்கள்.. அவர்களுக்கு என்ன வாழும் வரை தமிழின தலைவர். வாரிசுகள் வெளிநாட்டில் தமிழே தெரியாமல்.

என்ன உங்களுக்காக தங்கள் வாழ்வை உருக்கிய அந்த உள்ளங்களை நினைக்கத்தான் நெஞ்சு வெடிக்கிறது.

பிணக்க அரசியலில் என்ன ஐயா சாதிக்கப் பட்டது?

போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் கண் முன்னே தெரிகிறதே.

மக்கள், வெளிநாடு என்று வெளிக்கிட, 9 இல் இருந்த உறுப்பினர் தொகை 7 ஆகி உள்ளது. இது எதனைச் சொல்கிறது?

இப்போது தேவை இணக்க அரசியல். அதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பிக்கை கொள்ள வைத்து, தாயகத்தில் முதலீடு செய்ய வைத்து, பக்கத்தில் இருக்கும் இந்திய பெரும் சந்தையினை குறி வைத்து, உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.

அரசுடன் இணங்கி, பொருளாதார வளையங்களை உருவாகக்க வேண்டும்.

சிங்களவர்களும் வேலை வாய்ப்புக்களுக்க, மத்திய கிழக்குக்கு பதில் எமது பகுதிகளுக்கு வரும் போது, எமது ஆளுமை அதிகமாகும்.

பொருளாதாரமே பெரும் பலமாக வரும். ஆயுதம் அல்ல.

 பிரித்தானியாவின் பெரும் வியாபாரி virgin அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கரிபியனில் ஒரு தீவினை வாங்கி விட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் கீரிஸ், பல சிறிய தீவுகளை விற்க முனைகிறது.

கொழும்பில் ஒரு சிங்கள டாக்ஸி டிரைவர் சொன்னார்: '83 ல் அடித்து விரட்டப் பட்ட தமிழர்கள் பெரும் பொருளாதார பலத்துடன், மீண்டு வந்து, கொள்ளுபிட்டியில் இருந்து பாணத்துறை வரை, சிங்களவர்களை பணத்தினால் அடித்து திரத்தி விட்டனர்.

இஸ்ரேல் நாடு பிறந்தது அவர்களது பொருளாதாரத்தினால் வந்த அரசியல் பலத்தினால்.

மிகச் சிறிய சிங்கப்பூருக்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆளுமையை பாருங்கள். 

இந்தியா ஒரு நாடாக இணைந்து இருப்பதால் தான் பெரும் பொருளாதார நாடாக உருவெடுத்து உள்ளது.

எமது தீவு இரண்டானால், எமது எதிர்கால சந்ததிக்கு பக்கத்து சிங்கள நாடுடன் தீரா எல்லைச் சண்டையுடனே காலம் போகும்.

எனவே, உணர்வு பூர்வ சிந்தனைக்கு பதில், அறிவு பூர்வ சிந்தனை தான் இன்றைய தேவை.

Edited by Nathamuni

திறமான கருத்து, எனக்கு பச்சை முடிந்து விட்டது.  

குருநாகலில் 91 வாக்குகளைப் பெற்ற சிவாஜிலிங்கம்
 
article_1439964914-sivaji.jpg-குணசேகரன் சுரேன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். 

தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் களமிறங்கினார்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் குருநாகலில் தனக்கு எதிராக களமிறங்கியுள்ளதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பிரசாரத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/152364#sthash.xiKXEYHV.dpuf

Edited by நவீனன்

மக்களால் வீட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்!

கடந்த முறை பாராளுமன்றில் இருந்து இம்முறை தேர்தலில் தோல்வியுற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ற்கும் அதிகமாகியுள்ளது.

அவர்களின் விபரங்கள் இதோ...

ஐமசுமு - குருநாகல் - சாந்த பண்டார
ஐமசுமு - ஜயரத்ன ஹேரத் - குருநாகல்
ஐமசுமு - நில்வலா விஜேசிங்க - குருநாகல்
ஐமசுமு - அத்துல விஜேசிங்க - குருநாகல் - முன்னாள் முதலமைச்சர்

ஐமசுமு - நிருபமா ராஜபக்ஷ - ஹம்பாந்தோட்டை
ஐமசுமு - வி.கே.இந்திக்க - ஹம்பாந்தோட்டை

ஐமசுமு - லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன - மாத்தறை
ஐமசுமு - ஹேமால் குணசேகர - மாத்தறை
ஐமசுமு - விஜே தஹநாயக்க - மாத்தறை

ஐமசுமு - குணரத்ன வீரகோன் - காலி
ஐமசுமு - பியசேன கமகே - காலி

ஐமசுமு - நந்திமித்ர ஏக்கநாயக்க - மாத்தளை
ஐமசுமு - ரோஹண திஸாநாயக்க - மாத்தளை

ஐமசுமு - மஹிந்த சமரசிங்க - களுத்துறை

ஐமசுமு - சந்திரசிறி சூரியாராச்சி - பொலன்னறுவை
ஐதேக - எம்.எஸ்.தவுபிக் - பொலன்னறுவை

ஐமசுமு - திஸ்ஸ கரலியத்த - அநுராதபுரம்
ஐமசுமு - பீ.ஏக்கநாயக்க - அநுராதபுரம்

ஐதேக - பி.ராஜதுரை - நுவரெலியா
ஐதேக - ரேனுகா ஹேரத் - நுவரெலியா

ஐமசுமு - நியோமல் பெரேரா - புத்தளம்
ஐமசுமு - மில்ரோய் பெனாண்டோ - புத்தளம்
ஐமசுமு - தயாசிறித திசேரா - புத்தளம்
ஐமசுமு - விக்டர் என்டனி - புத்தளம்

ஐமசுமு - ஜகத் புஸ்பகுமார - மொனராகலை
ஐமசுமு - விஜித் விஜேமுனி சொயிசா - மொனராகலை

ஐமசுமு - லக்ஷமன் செனவிரத்ன - பதுளை
ஐமசுமு - ரோஹண புஸ்பகுமார - பதுளை
ஐமசுமு - உதித் லொக்குபண்டார - பதுளை
ஐமசுமு - சாமிக புத்ததாச - பதுளை

ஐமசுமு - சனி ரோஹண - இரத்தினபுரி

ஐமசுமு - எஸ்.பி.திஸாநாயக்க - கண்டி
ஐமசுமு - எரிக் பிரசன்ன வீரவர்த்தன - கண்டி
ஐமசுமு - அப்துல் காதர் - கண்டி

ஐமசுமு - அதாவுத செனவிரத்ன - கேகாலை
ஐமசுமு - லலித் திஸாநாயக்க - கேகாலை

ஐதேக - ரோசி சேனாநாயக்க - கொழும்பு
ஐமசுமு - திலங்க சுமதிபால - கொழும்பு

ஐமசுமு - பீலிக்ஸ் பெரேரா - கம்பஹா
ஐமசுமு - பண்டு பண்டாரநாயக்க - கம்பஹா
ஐமசுமு - சரத் குமார குணரத்ன - கம்பஹா
ஐமசுமு - ருவான் ரணதுங்க - கம்பஹா
ஐமசுமு - உபேக்ஷா சுவர்ணமாலி - கம்பஹா

ததேகூ - சுரேஷ் பிரேமசந்திரன - யாழ்ப்பாணம்

ததேகூ - பா. அரியநேந்திரன் - மட்டக்களப்பு
ஐமசுகூ - ஹுஸ்புல்லா - மட்டக்களப்பு
ததேகூ - பொன்.செல்வராசா - மட்டக்களப்பு

ஐமசுகூ - அதாவுல்லா - அம்பாறை

ததேகூ - வினோநோகதாரலிங்கம் - வன்னி

பிணக்க அரசியலில் என்ன ஐயா சாதிக்கப் பட்டது?

போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் கண் முன்னே தெரிகிறதே.

மக்கள், வெளிநாடு என்று வெளிக்கிட, 9 இல் இருந்த உறுப்பினர் தொகை 7 ஆகி உள்ளது. இது எதனைச் சொல்கிறது?

இப்போது தேவை இணக்க அரசியல். அதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பிக்கை கொள்ள வைத்து, தாயகத்தில் முதலீடு செய்ய வைத்து, பக்கத்தில் இருக்கும் இந்திய பெரும் சந்தையினை குறி வைத்து, உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.

அரசுடன் இணங்கி, பொருளாதார வளையங்களை உருவாகக்க வேண்டும்.

சிங்களவர்களும் வேலை வாய்ப்புக்களுக்க, மத்திய கிழக்குக்கு பதில் எமது பகுதிகளுக்கு வரும் போது, எமது ஆளுமை அதிகமாகும்.

பொருளாதாரமே பெரும் பலமாக வரும். ஆயுதம் அல்ல.

 பிரித்தானியாவின் பெரும் வியாபாரி virgin அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கரிபியனில் ஒரு தீவினை வாங்கி விட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் கீரிஸ், பல சிறிய தீவுகளை விற்க முனைகிறது.

கொழும்பில் ஒரு சிங்கள டாக்ஸி டிரைவர் சொன்னார்: '83 ல் அடித்து விரட்டப் பட்ட தமிழர்கள் பெரும் பொருளாதார பலத்துடன், மீண்டு வந்து, கொள்ளுபிட்டியில் இருந்து பாணத்துறை வரை, சிங்களவர்களை பணத்தினால் அடித்து திரத்தி விட்டனர்.

இஸ்ரேல் நாடு பிறந்தது அவர்களது பொருளாதாரத்தினால் வந்த அரசியல் பலத்தினால்.

மிகச் சிறிய சிங்கப்பூருக்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆளுமையை பாருங்கள். 

இந்தியா ஒரு நாடாக இணைந்து இருப்பதால் தான் பெரும் பொருளாதார நாடாக உருவெடுத்து உள்ளது.

எமது தீவு இரண்டானால், எமது எதிர்கால சந்ததிக்கு பக்கத்து சிங்கள நாடுடன் தீரா எல்லைச் சண்டையுடனே காலம் போகும்.

எனவே, உணர்வு பூர்வ சிந்தனைக்கு பதில், அறிவு பூர்வ சிந்தனை தான் இன்றைய தேவை.

நாதமுனி

அருமையான, யதார்த்தமான கருத்துப் பதிவு. பச்சை மட்டும் போதாது அதனால் நன்றி சொல்ல ஒரு சிறிய பதிவு.

பாஸ் எ...உ....இ...மு....?

நல்ல கருத்து........நடக்குறதை சிந்திக்கணும் என்பதே யதார்த்தம்

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் எ...உ....இ...மு....?

நல்ல கருத்து........நடக்குறதை சிந்திக்கணும் என்பதே யதார்த்தம்

பாஸ், கொத்து ரொட்டி இந்தியாவுக்கு எக்போட் பண்ணோனும். உங்கள சந்திக்கேலுமா?

நடக்குறதை அல்ல, நடக்கக் கூடியதை தான் சிந்திக்க வேண்டும்.

சனம், 'பிச்ச வேண்டாம் ராசா, நாயப்பிடி முதல்ல', நிலை. நாம் எப்படித்தான் கத்தினாலும், சூடு பட்ட பூனை என்ன குளிராயினும் அடுப்பங்கரை நாடாது. இதை கஜே கோஸ்டி மறந்து விட்டது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பச்சை முடிந்துவிட்டது அல்லது நாமு க்கு ஒரு சாத்து சாத்தி இருக்கலாம்.

பச்சை சாத்துறத சொன்னேன்.

ஆ...கா! ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.