Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள்: சம்பந்தன் சிங்களத்தில் பேட்டி (வீடியோ)

Featured Replies

Sam Opp

இலங்கைப் பாராளுமன்றில் இன்றையதினம் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  தமது கட்சி நாட்டைப் பிரிப்பதற்கு எதிரானது என்று இன்று பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

 

வடக்கு, கிழக்கில் 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீளவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றின்ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருப்பெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனத்தின் பின்னர் சிங்கள சந்தேஷிய சேவைக்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் போன்றே தான் செயற்படவிருப்பதாகவும் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன எனக் கேட்டதற்குப் பதிலளித்துள்ள அவர்:

“சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்வேன்.

“ஒருபோதும் நாட்டைப் பிரிக்க மாட்டேன். நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை. நாட்டைப் பிரிக்கும் கதையே தேவையில்லை. நாட்டைப் பிரிக்கும் கதையை முற்றுமுழுதாக விட்டுவிடலாம்,” என்று ஐயம் திரிபறத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அரசிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன எனக் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்துள்ள திரு சம்பந்தன்:

“இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும். எல்லோரும் ஒன்றாக இருக்ககூடிய தீர்வு எத்தகைய தீர்வாவது கொண்டுவரப்பட வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

http://www.colombomirror.com/tamil/?p=5646

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பது வருசத்துக்கு முந்தி தமிழீழம் தான் எங்கடை முடிவு எண்டு சொல்லி பாராளுமன்றம் போன கோஷ்டி.....இப்ப ஒண்டுக்கை ஒண்டாய் இருப்பம் எண்டு சிங்கள ரீவிக்கு சத்தியவாக்கு குடுக்கினம்...

பொடியளை உசுப்பேத்தி உதுப்பேத்தி  அழிச்சுப்போட்டு .....இப்ப சிங்கள தார்மீக கதையளை கதைக்கிறார்.....

அல்லாவிற்கு உண்மையும் பகிடியும் தெரியாது .

உண்மைதான் நம்ம சம்பந்தனின் அரசியல் ராசா தந்திரத்துக்கு முன்னால் மோட்டு சிங்களவனின் தந்திரங்கள் எடுபடாது இருந்து பாருங்கோ தமிழன் வாழுமிடமெல்லாம் பாலும் தேனும் ஓடப்போகுது ......... அட சொன்னால் நம்பு வீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததற்கே இத்தனை மாற்றம் என்றால்.... பிரதமர்பதவி கிடைத்திருந்தால் புத்த பிச்சுவாகவே மாறியிருப்பாரோ....?? புத்தம் சரணம் கச்சாமி...!!  th?id=OIP.Mfefff3f453c7d4610d093d0819f11

  

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக வந்தததற்கு....
அவருக்கு, யாரும்..... தலையில் முடி  சூட்டி அழகு பார்க்கவில்லையா.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அபி ரட்ட பெதன்னா  ....அபி ரட்ட பெதன்னா
ஹொந்த தீந்துவ என்டோனே ......ஹோந்தம தீந்துவ என்டோனே 

மொனவகே தீந்துவத என்டோனே ....?

ஏக அபி தன்னா ....ஹபய் தீந்துவ என்டோனே 

தீந்துவ மொகத்த கியலா தன்னத்துவத தீந்துவ கன கத்தாகரன்னே 

மே மல்லி பலபங் ஓய வகே கதாகரளா தமாய் மே  மோட தெமல ஜனதாவ  ரவட்ட கண்ட புளுவன்  

நத்னங் லபன எலக்ஷன்ட  அபிட சந்த இல்லண்ட பரிவேவி  
 

எல்லாவற்றையும் விட கொடுமை இந்த பேட்டியை பார்த்து போட்டு வந்து மண்டையில சுகமில்லாத ஒண்டு வந்து நம்மளிட்ட சொல்லுது 
(சுட்டுபோட்டாலும் ஒரு சிங்கள வசனம் வாயில வராது ...ஏதோ எல்லாம் விளங்கியவர் போல வந்து சொல்லுது எப்பிடி நாம சம்பந்தன் ஐயா சிங்களவருக்கும் விழங்கிற மாதிரி தமிழர் பிரச்சினையை சிங்களத்தில் சொல்லியிருக்கிறார் என்று ) இப்பிடியாகவிருக்கிறது திருவாளர் வாக்காளர்களின் நிலைமை 

  • கருத்துக்கள உறவுகள்

-------
எல்லாவற்றையும் விட கொடுமை இந்த பேட்டியை பார்த்து போட்டு வந்து மண்டையில சுகமில்லாத ஒண்டு வந்து நம்மளிட்ட சொல்லுது 
(சுட்டுபோட்டாலும் ஒரு சிங்கள வசனம் வாயில வராது ...ஏதோ எல்லாம் விளங்கியவர் போல வந்து சொல்லுது எப்பிடி நாம சம்பந்தன் ஐயா சிங்களவருக்கும் விழங்கிற மாதிரி தமிழர் பிரச்சினையை சிங்களத்தில் சொல்லியிருக்கிறார் என்று ) இப்பிடியாகவிருக்கிறது திருவாளர் வாக்காளர்களின் நிலைமை 

33 வருசம் பாராளுமன்றத்திலும், கொழும்பிலும் இருந்த சம்பந்தனுக்கு....
சிங்களம்... தண்ட புளுவாங் (நல்லாய் தெரிஞ்சிருக்கும்) என்று... அந்த மண்டையில் சுகமில்லாதது நினைத்திருக்கலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் சிலரின் பிடரிக்குச் சேதம் வரப்போகுது. ஆம்புலன்சை ரெடியாக வைத்திருப்பது நல்லது. ambulance.gif

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் சிலரின் பிடரிக்குச் சேதம் வரப்போகுது. ஆம்புலன்சை ரெடியாக வைத்திருப்பது நல்லது. ambulance.gif

நாங்கள் ஊரிலேயே.... மாதம் 25 ரூபாய் கட்டி, சிங்கள ரியூசன் மாஸ்ரடிடம் சிங்களம் படித்து, 3´ம் வகுப்பு பாஸ் பண்ணினாங்கள்.
இப்பவும்.... சிங்கள டிக்க... டிக்க தண்ணுவ..... பாஞ்ச் மாத்தையா. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கில் ஏறினதும்... சொந்த மக்களை அவர்களின் உரிமையை தாரை வார்க்கத் தயங்காத அப்புக்காத்துக் கூட்டம்.

அதுசரி.. இவர் சிங்களப் பாராளுமன்றத்தில் சிங்கள மக்களின் எதிர்கட்சி தலைவராக இருப்பார் என்றால்.. பிறகெதற்கு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வாறவர். சிவாஜி மாதிரி.. குருணாகல்.. இரத்தினபுரின்னு தேர்தலில் நின்றிருக்கலாமே..?!

மிச்சமுள்ள இந்த ஒன்றே இப்படின்னா.. அமிர்தலிங்கம்.. வகையறாக்களும் இப்ப வரிசையில் நின்றிருந்தால்.. தமிழ் மக்களின் நிலை... அந்தோ பரிதாபம் தான்.

எதிர்கட்சி தலைவர் பதவின்னா.. சொறிலங்காவில் ஆட்சி அதிகார பதவிபோல எதுக்கு இந்தப் படம் காட்டல்... காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்குத் தான் கதை. எல்லாம் தமிழனின் தலை எழுத்து. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"கொந்த படு " வேணும் என்று சொல்லுறார்

  • கருத்துக்கள உறவுகள்

அல்லான்ர பகிடியால இழந்தது நாங்கள் தானே, உங்களுடைய ஆயுத போராட்டம் உங்களுக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு. போராட்டத்தால் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் கிடைத்தது வெளிநாட்டு சுகபோக வாழ்க்கை. 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்குப் பின்னதான காலம் என்பது எப்போதும் இல்லை. தற்போதைய தமிழர் அரசியல் முற்றிலும் ஒழுங்கமைக்கப்பட்ட பிளைப்புவாத அரசியலே.

முள்ளிவாய்க்காலின்பின்பு, புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் புலிகள் எனக்கூறும் உதிரிகள் அனைவரும் இல்லாதொழிக்கப்படல்வேண்டும். 

புலம்பெயர்தேசத்தமிழர்கள் அனைவரும் தாயக அரசியலிலிருந்தும் தாயகத் தமிழர்களது அனைத்து விடையங்களிலிருந்தும் முற்றாக ஒதுங்கிக்கொள்ளல்வேண்டும்.

தவிர புலம்பெயர்தமிழர்கள் இனிவரும்காலங்களில்  சிறீலங்கா அரசுடன் முட்டிமோதாமல் மாறாக நல்லுறவை வளர்க்க முயலவேண்டும். இதன்மூலம் எமக்கு பலவிடையங்களில் நன்மை ஏற்படும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட்டுட்டு எல்லோரும் சிங்களம் முதலில் படியுங்கள் 
அடுத்த தேர்தல் பிரச்சாரம் ,விஞ்சாபனம் முற்று முழுதாக சிங்கள மொழியில் ....பின்ன சிங்கள எதிர்கட்சி தலைவர் போல வேலை செய்யவேண்டுமென்றால் ....இந்தாள் என்ன சொல்லறார் செய்றார் என்று சிங்களவன் எப்படி தெரிந்து கொள்வது (அவனுக்கு தமிழ் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது )
கேட்டு....படித்து வாக்கு போடணுமில்லே....?

யகோ பளபளா இன்னத்துவ  களின் கிஹில்லா சிங்கள இகனகனில்லா .....

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை பிரிக்க நான் எதிரானவர்கள்,ஆனால் இந்தியாவுக்கு நாட்டை பிரிக்க வேணும் என்று ஆசை வந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய ஏலாது......:சம்பந்தன் மாத்தையா...

சா... சம்பந்தர் சிங்களத்தில என்னவா வெளுத்து கட்டுறார்

  • கருத்துக்கள உறவுகள்

சா... சம்பந்தர் சிங்களத்தில என்னவா வெளுத்து கட்டுறார்

சூறாவளி இப்ப சில பேர் சொல்லபோயினம் புலம் பெயர்ந்தவையள் அந்த நாட்டு மொழியில வெளுத்து கட்டும் பொழுது ஏன் சம்பந்தன் மாத்தையா சகோதர மொழியாம் சிங்களத்தில் வெளுத்து கட்டக்கூடாது என்று....

சூறாவளி இப்ப சில பேர் சொல்லபோயினம் புலம் பெயர்ந்தவையள் அந்த நாட்டு மொழியில வெளுத்து கட்டும் பொழுது ஏன் சம்பந்தன் மாத்தையா சகோதர மொழியாம் சிங்களத்தில் வெளுத்து கட்டக்கூடாது என்று....

உண்மையும் தானே புத்தர்.. 

சிங்களம் கதைப்பதில் எந்த தவறும் இல்லை

அனால் இனிமேல் தமிழில் கதைக்க மாட்டன் என்றால் தான் தவறு.

 

எங்களுக்கு எந்த மொழியுடனும் கோபம் இல்லை மத்தத்தினிடமும் கோபமில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் எங்களுக்கான உரிமை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையும் தானே புத்தர்.. 

சிங்களம் கதைப்பதில் எந்த தவறும் இல்லை

அனால் இனிமேல் தமிழில் கதைக்க மாட்டன் என்றால் தான் தவறு.

 

எங்களுக்கு எந்த மொழியுடனும் கோபம் இல்லை மத்தத்தினிடமும் கோபமில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் எங்களுக்கான உரிமை.

ஒற்றையாட்சியில் சம உரிமை இப்பவும் இருக்குதாம் என சிங்கள அரசியல்வாதிகள் சொல்லியினம்...

ஒற்றையாட்சியில் சம உரிமை இப்பவும் இருக்குதாம் என சிங்கள அரசியல்வாதிகள் சொல்லியினம்...

அவிங்க அப்பிடித்தா சொல்லுவாய்ங்க.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பிழையா எதையும் சொல்லவில்லை. தமிழீழ நாட்டை வடக்கு/தெற்கு என்று பிரிக்க மாட்டாராம்.. lol

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கு தலை, மீனுக்கு வால், அவர் விலாங்கு மீனாக்கும் ! அங்கொரு கதை, இங்கொரு கதை. 

புலிகளுக்குப் பின்னதான காலம் என்பது எப்போதும் இல்லை. தற்போதைய தமிழர் அரசியல் முற்றிலும் ஒழுங்கமைக்கப்பட்ட பிளைப்புவாத அரசியலே.

முள்ளிவாய்க்காலின்பின்பு, புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் புலிகள் எனக்கூறும் உதிரிகள் அனைவரும் இல்லாதொழிக்கப்படல்வேண்டும். 

இக் கூற்று புலம்பெயர் தேசங்களில் உள்ள புலிகள் என்று கூறித் திரியும் அமைப்புகளுக்கும் கூட பொருந்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி அரசியல் வாதிகளை நம்பி அப்பாவி ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தங்கள் இன்னுரை ஈகம் செய்துள்ளதை நினைத்தால்தான் வேதனையாக உள்ளது.

விடுதலை போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இவர்கள் மேடைகளில் இவ்வாறு பேசி இருந்தால் இவிளைஞர்கள் இறந்திருக்கமாட்டார்கள்.  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.