Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிட்லரும், வீரவன்சவும் தம் இனத்தைத் தவிர மற்ற இனத்தவரை விரட்ட வேண்டும் என நினைத்தவர்கள் / நினைப்பவர்கள். அது இனவாதம். ஆனால் நாம் தமிழர் கட்சியின் முழக்கம் அதுவல்ல..

வந்தவரையெல்லாம் வாழவைப்போம்.. இது எமது இனத்தின் பெருமை.

இனி எம் சொந்தவரை மட்டுமே ஆளவைப்போம்.. இது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.

இதில் என்ன தவறு உள்ளது?

இங்கு சாதி சான்றிதழ் எதுவும் தேவையில்லை. வந்தவரையெல்லாம் வாழ வைப்போம் என்று கூறும்போது அவர்களை இனவாதிகள் என்று சிலர் சொல்லக் காரணம் அந்த இரண்டாவது வரிதான்.. "இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம்." அவர்கள் தாங்களாகவே தாம் சொந்தக்காரங்க இல்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறார்கள். இனவாதம் என கூச்சல் போடுகிறார்கள்.

Edited by இசைக்கலைஞன்

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கணும் நீங்கள் பேசுவது இனவாதம் கூட இல்லை. சாதியவாதம்.

600 வருடம், 3000 வருடமாய் தமிழைப் பேசி, தமிழ் நாட்டில் வாழுபவனை எல்லாம் ஒரே நொடியில் தமிழன் இல்லை என்று "வந்தார்" ஆக்கும் உங்கள் பச்சை சாதியம் கிட்லரும், வீரவன்சவும் பேசும் இனவாதத்தை விட மோசமானது.

இன்னொன்று பெரியார் திராவிட இயக்கத்தை அமைத்த போது மெட்ராஸ் பிரசுடென்சியில் மலையாளி, கன்னடன், தெலுங்கன், எல்லோரும் அடங்கினார்கள். ஆகவே அப்போ திராவிடம் என்பது தேவையான கொள்கை. தமிழன் தலையில் மிளகாய் அரைக்க கன்னடன் ஈவேரா திராவிடத்தை சமைக்கவில்லை.

பெரியார் வோட்டுப் பொறுக்கி அரசியல் செய்யவில்லை. அவர் தமிழனுக்காக போராடினாரே தவிர தமிழனிடம் வோட்டுப் பிச்சை வாங்கிப் பிழைக்கவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்கம் போல. அன்று அந்த கொள்கையே/பெயரே சரியாய் இருந்தது.

இன்று திராவிடம் காலாவதியாகி விட்டது என்பீர்களானால் அது அறிவார்ந்த கருத்து.

ஆனால் வேற்று மொழிக்காரன் தமிழ் நாட்டை ஆண்டு குட்டிச் சுவராக்கினார் என்பது சுத்தப் பேய்க் கதை.

மொழிவாரி பிரிப்புக்குப் பின் காலம் காலமாய் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் நாட்டை ஆண்டார்கள். 

ஜெயாவும், கருணாநிதியும், எம் ஜி ஆரும் செய்த தவறுகள் எல்லாம் அவர்கள் மோசமான மனிதர்கள் என்பதால் நிகழ்ந்தவை அதுக்கும் அவர்கள் என்ன சதவீதம் தமிழர் என்பதற்கும் சம்பந்தமே இல்லை.

இதே காலத்தில்தான் மூப்பனாரும், சிதம்பரமும், இன்னும் பல சுத்த தமிழர்கள் காங்கிரசுக்கு காவடி எடுக்கும் கூட்டிக் கொடுக்கும் அரசியல் செய்தார்கள்.

ஆக தலைவர்களின் சாதி, 600 வருடங்களுக்கு முன் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதல்ல தீர்மானிக்கும் சக்தி. அவர்கள் நல்லவரோ இல்லையோ என்பதே தீர்மானிக்கும் சக்தி.

வைகோ - குறைந்த பட்ச செயல்திட்டம் என்பது வேறு கட்சி கொள்கை வேறு. முன்பும் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி வைத்த போதும், பிரபா இருந்த காலம், இப்படிசெய்தார். 

இது அப்போ கண்ணுக்குத் தெரியவில்கையா? இப்போ சீமானை கண்டதும் கண்ணை உறுத்துதா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

நீங்கள் இந்த திரியை ஆரம்பித்த நோக்கம் பிசராது செய்திகளை இணையுங்கள்.
எங்கள் சொந்த நாட்டின் அரசியலையே இன்னும் சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலையில், நாங்கள் அவன் சாதி எது, இவன் சாதி எது, அவன் எந்த அப்பனுக்கு பிறந்தான், யார், எங்கே முந்தானை விரித்தாள் போன்ற அபத்தமான கேள்விகளுக்கு பதில் எழுதுவது நேரத்தை வீண் விரையம் செய்வதாகும்.
தமிழகத்து தேர்தலில் தமிழ் உணர்வாளர் சீமான் வென்றால் அதனை பார்த்து சந்தோசப்பட சிலர்.
இதே தேர்தலில் சீமான் தோற்றால் அதை விமரிசையாக கொண்டாடி, தங்கள் மன வக்கிரங்களை பல்வேறு வழிகளில் காட்டுவதற்கென்று சிலர். இது ஒன்றும் புதிதில்லை.

மண்ணுக்காக போராடி, உயிர் துறந்த 50 ஆயிரம் போராளிகளையே கொச்சைப் படுத்த மேதாவிகள் இருக்கையில், வெறும் மேடைப்பேச்சு, அரசியல், பிரபாகரன் துதி பாடல் என்றால் அவர்களுக்கு கசக்காமலா இருக்கும்?

மே 16 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியலில் முன்னர் இருந்த ஆர்வம் போய்விட்டது.

ஆனால் தூய தமிழ்வாதிகள் என்று சாதி அரசியலை கூசாமல் முன்னெடுக்கும் இந்த அரசியல்வாதிகளால் சகல தமிழக மக்களையும் சாதீய  வேறுபாடு பார்க்காமல் ஆளமுடியுமா? முடியாது என்பதுதான் விடையாக இருக்கும்.

ஒரு ஆசனத்தையும் எடுக்கமுடியாத சீமானுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வெல்வது வெல்லாதது  இரண்டாம் பட்சம். ஆனால் பலரின் முகத்திரையை கிழித்த பெருமை சீமானை சாரும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழ்நாட்டு அரசியலில் முன்னர் இருந்த ஆர்வம் போய்விட்டது.

ஆனால் தூய தமிழ்வாதிகள் என்று சாதி அரசியலை கூசாமல் முன்னெடுக்கும் இந்த அரசியல்வாதிகளால் சகல தமிழக மக்களையும் சாதீய  வேறுபாடு பார்க்காமல் ஆளமுடியுமா? முடியாது என்பதுதான் விடையாக இருக்கும்.

ஒரு ஆசனத்தையும் எடுக்கமுடியாத சீமானுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

அவர்தான் இலக்கு 2021 என்று சொல்லி, 2016ல் 'வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் முயற்சி என்று சொல்கிறாரே'!

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சியிலேயே காலம் போய்விடும். அடுத்த ஐந்து வருடத்தில் தமிழகம் தாராளவாதப் பொருளாதாரத்தால் மேலும் மேலும் மேற்கத்தைய கலாச்சாரங்களை நுகர்ந்து பிற இனங்களையும், மொழி பேசுபவர்களையும் ஏற்றுக்கொள்பவர்களாக மாறிவிடுவார்கள்.

பொருளாதாரத்தில் முன்னுக்குவர எவர் உதவுகின்றார்களோ அவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு சீமான் திட்டங்களை வகுத்து இப்போதே செயலில் இறங்கவேண்டும். உசுப்பேற்றும் மேடைப்பேச்சால் மாத்திரம் ஆட்சிக்கு வரலாம் என்ற காலம் மலையேறிப்போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இசைக்கலைஞன் said:

ஹிட்லரும், வீரவன்சவும் தம் இனத்தைத் தவிர மற்ற இனத்தவரை விரட்ட வேண்டும் என நினைத்தவர்கள் / நினைப்பவர்கள். அது இனவாதம். ஆனால் நாம் தமிழர் கட்சியின் முழக்கம் அதுவல்ல..

வந்தவரையெல்லாம் வாழவைப்போம்.. இது எமது இனத்தின் பெருமை.

இனி எம் சொந்தவரை மட்டுமே ஆளவைப்போம்.. இது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.

இதில் என்ன தவறு உள்ளது?

இங்கு சாதி சான்றிதழ் எதுவும் தேவையில்லை. வந்தவரையெல்லாம் வாழ வைப்போம் என்று கூறும்போது அவர்களை இனவாதிகள் என்று சிலர் சொல்லக் காரணம் அந்த இரண்டாவது வரிதான்.. "இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம்." அவர்கள் தாங்களாகவே தாம் சொந்தக்காரங்க இல்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறார்கள். இனவாதம் என கூச்சல் போடுகிறார்கள்.

இங்கே சில திராவிட முகவர்கள், திராவிடக் கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்துவிட்டார்கள். இவர்களுக்கு பதில் தந்து நேரத்தை விரயமாக்காமல் தொடருங்கள்.

விதண்டாவாதம் செய்வார்கள். எரிச்சல் ஊட்டுவார்கள். இவர்களை சீரியசாக எடுத்து பதில் சொல்ல மினக்கடாதீர்கள்.

அவர்கள் போடும் பதிவின் நீளத்தைப் பாருங்கள், அவர்களுக்கு இந்தளவு தமிழகம் பற்றிய, ஆழமான அறிவு சொந்தமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.

எங்களிடம் தான் வாக்குகள் இல்லையே,  நோக்கம் என்ன? என்று நினைத்தீர்களாயின், வாக்குகள் வைத்திருக்கும், யாழின் வாசகர்களான தமிழக வாக்காளர்களே இலக்கு என புரிந்து கொள்வீர்கள்.

1 hour ago, கிருபன் said:

பயிற்சியிலேயே காலம் போய்விடும். அடுத்த ஐந்து வருடத்தில் தமிழகம் தாராளவாதப் பொருளாதாரத்தால் மேலும் மேலும் மேற்கத்தைய கலாச்சாரங்களை நுகர்ந்து பிற இனங்களையும், மொழி பேசுபவர்களையும் ஏற்றுக்கொள்பவர்களாக மாறிவிடுவார்கள்.

பொருளாதாரத்தில் முன்னுக்குவர எவர் உதவுகின்றார்களோ அவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு சீமான் திட்டங்களை வகுத்து இப்போதே செயலில் இறங்கவேண்டும். உசுப்பேற்றும் மேடைப்பேச்சால் மாத்திரம் ஆட்சிக்கு வரலாம் என்ற காலம் மலையேறிப்போய்விட்டது.

உங்கள் ஆதங்கம் புரிகிறது.

சீமானுக்கு இருக்கும் ஒரே பலம், பேச்சு. பணத்தால் மோத முடியாது.

பேச்சுவன்மை இல்லாததால் தான ரணில் ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்தார். 

ஓபாமாவின் பேச்சுவன்மை, பலமிக்க கிலாரியின் நோக்கத்தை 8 வருடங்கள் தாமதமாக்கியது.

கிற்லர், சர்சில் சொல்லிக் கொண்டே போகலாம்.

பலமிக்க காங்கிரஸ் காமராஜரை வீழ்தியது அண்ணாவின் பேச்சுவன்மை. அந்த கட்சி இன்றும் தொடர கலைஞர் பேச்சு.

சாதியத்துக்கு மேலே வந்து உயர் பதவியை அடைய பிரேமதாசவுக்கு உதவியது அவர் பேச்சு.

நாவண்மை இருந்துவிட்டால், சாமானியனும், அரசியலில் சரித்திரம் படைக்கலாம்.

ம்... வைகோ: நாவன்மை இருந்தும், நோக்கத்தில் தடுமாற்றம்.

பேச்சுவன்மை, நோக்கத்தில் தெளிவு, நேர்மை இருந்தால் ஒருநாள் பலன் கிடைக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட முகவர்கள் - சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சு நாமு.

என்ன செய்வது கருத்து வறுமை ஏற்படும் போது இப்படி ஏதாச்சும் சொல்லிக்கிறத தவிர வேறு வழியில்லை.

ரோறோ ஏஜெண்ட், மலயாளி, நாயக்கர், மகிந்த ஏஜெண்ட், இப்போ திராவிட ஏஜெண்ட்...

சமயங்களில் என்னை நினைக்க எனக்கே மலைப்பாய் இருக்கு.

தமிழகம் பற்றி ஆழமான அறிவு ( ரொம்ப நன்றி) சொந்தமாய் இல்லை அண்ணோய். Barclays Bank இல் கடன் வாங்கி வந்தேன்.

Please don't measure others with your own yardstick. நம்மில் சிலருக்கு ஆழமான அறிவை தேடிச் சேமித்து வைக்க முடிகிறது. உங்கள் பேணி ஓட்டைப் பேணி என்பதற்காக எல்லோர் பேணியும் ஓட்டை என்று ஆகாது.

திராவிடம் என்ற கருத்தியல் மீது, பெரியார் மீது எனக்கும் பெரியதொரு விமர்சனப் பார்வை உண்டு. ஆனால் வரலாற்றைத் திரித்து பெரியார் மீது வீண்பழி போடுவதை ஏற்க முடியாது. சீமான் செய்வது அதைத்தான். அதுக்குத்தான் இந்த மறுவினை.

அப்புறம் யாழை வாசித்து தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும் அளவுக்கு யாழ் ஒன்றும் பெரிய ஊடகம் இல்லை. தமிழகத்தில் இருந்து நாளுக்கு 500 பேர் யாழை வாசித்தாலே பெரிய விடயம்.

சீமானுக்கு தமிழக மக்கள் சாணியை குழைத்து முகத்திலே அடிப்பார்கள் என்பது திண்ணம். என் கருத்து பதிவு அதில் எந்த பாதிப்பும் செலுத்தாது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மற்றவர்கள் படிப்பறிவற்ற பாமரர்கள், நாம் தான் அதிமேதாவி, ஆகவே அவர்களுக்கு அறிவு சொல்லி திருத்துகிறேன் என வாயால வடை சுடுவதை விடுத்து, அடுத்தவனும், நம்மைப் போல சிந்திக்க தெரிந்தவன், அவனும் அறிவுள்ளன் என்ற எண்ணம் இருந்தால், இங்கே இரவு பகலாக சிலர் பாயைப் போட்டு 'வயற்காவல்' செய்ய வேண்டியதில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நினைக்க கவலையாக இருக்கு...

இருக்கும் உறவுகளை பெருக்கவேண்டாம்

இருப்பவர்களையாவது தங்க வைக்கமுயலவேண்டாமா??

எமது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் இங்கு செய்த வினைகள் என்ன?

கனக்க எதற்கு 

தாயக மக்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டி எம்மோடு நல்லுறவை வளர்த்து

எமக்காக பேசிய ராஐவன்னியன் எங்கே?

ஏன் காணாமல் போனார்??

கெஞ்சிக்கெஞ்சிக்கேட்டபோதும்

இவற்றையெல்லாம் செய்துவிட்டு இப்போ......???

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

தேர்தலில் நிற்பவர்களே 2021 என்று தெளிவா இருக்கா, சிலர்  ஐயோ இந்த முறையோ என அரண்டு போயுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தேர்தலில் நிற்பவர்களே 2021 என்று தெளிவா இருக்கா, சிலர்  ஐயோ இந்த முறையோ என அரண்டு போயுள்ளனர்.

எந்த ஒரு கருத்துக்கணிப்பிலோ

தொலைக்காட்சியிலோ

முன் நிறுத்தப்படாத நாம் தமிழர் கட்சி

தேர்தலின் பின்னர் தவிர்க்கமுடியாத

முன் நிறுத்தப்படும் கட்சியாக வரணும்

வரும்

அதுவே 2016இன் நகர்வு.

.....

அவருக்கு 2021 இல் ஒரு சொய்ஸ் இருக்கு ஆறு அல்லது எழு சீட் கேட்டு தி மு க அல்லது அ தி மு கா வுடன் கூட்டு வைக்க அதில் ஒரு சீட் வென்று திருமா மாதிரி வந்தாலே அவருக்கு காணும் ,

இவர் இப்ப காட்டுவது எல்லாம் பூச்சாண்டி மக்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, arjun said:

இவர் இப்ப காட்டுவது எல்லாம் பூச்சாண்டி மக்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை 

அது சொல்ல வேண்டியது தமிழ்நாட்டு வாக்காளர், நாமல்ல, அண்ணோய்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பயிற்சியிலேயே காலம் போய்விடும். அடுத்த ஐந்து வருடத்தில் தமிழகம் தாராளவாதப் பொருளாதாரத்தால் மேலும் மேலும் மேற்கத்தைய கலாச்சாரங்களை நுகர்ந்து பிற இனங்களையும், மொழி பேசுபவர்களையும் ஏற்றுக்கொள்பவர்களாக மாறிவிடுவார்கள்.

பொருளாதாரத்தில் முன்னுக்குவர எவர் உதவுகின்றார்களோ அவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு சீமான் திட்டங்களை வகுத்து இப்போதே செயலில் இறங்கவேண்டும். உசுப்பேற்றும் மேடைப்பேச்சால் மாத்திரம் ஆட்சிக்கு வரலாம் என்ற காலம் மலையேறிப்போய்விட்டது.

12809622_201252226904109_660676043530119

இதில் நீர்வளப் பெருக்கம் எவ்வாறு என்பதை ஏற்கனவே விளக்கிவிட்டார். நாம் தமிழர் செயற்பாட்டு வரைவில் அனைத்துத் துறைகளுக்குமான திட்டங்கள் வெளிவரும் (சில நாட்களில்..)

நிலமும், நிலம் சார்ந்த தொழில் வளர்ச்சியும் என்பதுதான் அடிநாதமாக உள்ளது. (மன்னிக்கவும் நாதம்.. tw_blush: பதில் எழுதவேணும் என்று தோன்றியது..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

03.03.2016: பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை..

1935998_1070540073007273_458105892978130

12802730_1070540109673936_74778594938646

12813916_1070540163007264_35638111241424

12790909_1070540203007260_57683416756854

12794585_1070540233007257_41442562705022

12802813_1070540289673918_37283473363631

12798837_1070540333007247_12457833445879

12803037_1070540416340572_20368128781894

12801106_1070540469673900_36772189935018

12821541_1070540483007232_11188294370309

12801410_1070540576340556_63735341925853

12794458_1070540683007212_66963626735989

12800207_1070540786340535_76116862802358

12814715_1070540826340531_71047920254618

12376790_1105673906129792_29710515639274

இந்த திரியில் எழுத கூடாது என்றுதான் இருந்தேன் ஆனால் ஆட்சியை பிடிப்பார் கவுப்பார் என்று எழுதும் போது அது ஒரு காலமும் நடக்காது என்று எழுதாவிட்டால் எப்ப நீங்கள் அப்படி சொன்னிர்கள் என்று கேட்கவும் ஆட்கள் இருக்கினம் 

இதுதான் இந்த திரியில் கடைசி பதிவு தேர்தல் மட்டும் 

...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எனக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியாத நான்.. ஒரு சமூகத்தை மாற்ற முடியாது..!"

12 hours ago, arjun said:

மே 16 

விடை மே 19

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
குறள்:1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

இந்த திரியில் எழுத கூடாது என்றுதான் இருந்தேன் ஆனால் ஆட்சியை பிடிப்பார் கவுப்பார் என்று எழுதும் போது அது ஒரு காலமும் நடக்காது என்று எழுதாவிட்டால் எப்ப நீங்கள் அப்படி சொன்னிர்கள் என்று கேட்கவும் ஆட்கள் இருக்கினம் 

இதுதான் இந்த திரியில் கடைசி பதிவு தேர்தல் மட்டும் 

...

இதுதான் இந்த திரியில் கடைசி பதிவு 2021 தேர்தல் மட்டும்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

துறைமுகம் சட்டமன்ற தொகுதி 54 வது வட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு வீட்டில் துண்டறிக்கை கொடுக்கும் போது துண்டறிக்கையை பாத்துட்டு ஒரு அண்ணன் ஓ சீமானா என்னாப்பா ரெண்டு நாள் முன்னாடி தந்தி டிவில இப்படி பேசுறாரு மக்கள் நலக் கூட்டணியை விட நாம் தமிழர் கட்சி ஒரு வாக்கு குறைவாக எடுத்தாலும் கூட நான் கட்சியை கலைச்சிட்டு கம்யூனிஸ்ட்ல வந்து சேர்ந்துடுறேன் என்று சவால் விடுறாரு யார்ப்பா இது மாதிரி சவால் விட முடியும்?அந்த விஷயம்தான் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சிப்பா அவன்,அவன் நீ என் கூட்டணிக்கு நீ என் கூட்டணிக்கு வா என்று அலைஞ்சிட்டு இருக்கான்ங்க நீங்க தனியா நிக்கிறிங்க சூப்பர் தம்பி என்று சொல்லி என் குடும்பத்தில் 5 ஓட்டு இருக்கு கண்டிப்பா அது உங்க கட்சிக்குதான்ப்பா என்ற சொல்லிட்டு போனார் ரொம்ப சந்தோசம் என்று நாங்களும் கடந்து வந்தோம்.போனவர் எங்களை அழைத்து இந்தாப்பா இந்த துணடறிக்கையை என் வீட்டில் ஒட்டுப்பா என்று ஓட்ட சொன்னார் யாராவது என் வீட்டுக்கு வந்தா இதை படிக்கட்டும் என்று சொல்லி வேற ஒரு துண்டறிக்கையை வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார்...

12814268_821947607910614_463090226271900

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சிட்டாங்கய்யா..

12803234_184721788571018_528428509547706

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.