Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்,

இனியொருவில் வந்ததை நீங்கள் படித்துவிட்டீர்கள். ஆனால் பலர் வாசிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். மருதங்கேணி வாசித்துவிட்டு மோதகமும் கொழுக்கட்டையும் ஒன்றுதான் என்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்.

துரதிருஸ்டவசமாகப் புலம்பெயர் பிழைப்புவாதிகளின் கரங்களின் முடங்கியிருக்கும் தமிழர்களின் அரசியல் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புலிகளின் தவறான பக்கங்களையும், அரசியலையும், மனித உரிமை மீறல்களையும் நியாயபடுத்துவதன் ஊடாக உலக மக்களிடமிருந்து தமிழர்கள் அன்னியப்படுத்தப்படுவார்கள். இலங்கை அரசாங்கம் நீதியானது என்ற கருத்து உலகம் முழுவதும் ஏற்படும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது போர்க்குற்றமிழைத்தவர்களின் வெற்று முழக்கம் என உலக மக்கள் நம்பும் நிலை தோன்றும் சில காலங்களில் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை அழிக்கப்பட்டு வடக்குக் கிழக்கு தமிழர்களின் தன்னாதிக்கத்திற்கு உரிய பகுதிகளாக இருந்தன என்பது வரலாற்றுப் புத்தகங்களின் மட்டுமே எழுதப்படும்.

இப்போது ஐ.நா. அறிக்கை சொல்லும் கலப்புப் பொறிமுறை எல்லாம் தமிழர்களுக்கு நியாயத்தை வழங்காது. ரணில், கூட்டமைப்பு எல்லாம் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு நடப்பார்கள். அவர்கள் நடாத்தும் நாடகத்தில் ஐ.நா,வும் ஒரு வேஷம் கட்டியுள்ளது. 2009 இல் புலிகளை முழுமூச்சுடன் அழிக்க இதே மேற்கு நாடுகளும் ஐ.நா.வும் துணைநின்றன என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. புலிகளையும் அதன் தலைமையும் அழிக்க நாப்பதாயிரம் மக்களைக் காவு கொடுக்க உடன்பட்டவர்கள்தான் இவர்கள். 

இலங்கையரசு தமது கட்டுக்குள் இருக்கவேண்டும் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை.

  • Replies 168
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்,

இனியொருவில் வந்ததை நீங்கள் படித்துவிட்டீர்கள். ஆனால் பலர் வாசிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். மருதங்கேணி வாசித்துவிட்டு மோதகமும் கொழுக்கட்டையும் ஒன்றுதான் என்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்.

பார்த்தேன் ஐயா! மருதர் இப்படி சிம்பிளாகத் தீர்ப்புச் சொல்லி விட்டு நகர்ந்து விட்டதற்காக நான் அந்தோனியாருக்கு நன்றி சொல்லிக் கோழி நேர்ந்து விட்டிருக்கிறேன்! அவருடைய lateral thinking ஐ அவுட்டு விட்டிருந்தால் பலருக்கு வாசிச்சே ஸ்ட்றோக் வந்து விடும்! :cool:

கனவான்களே தனி மனிதர் மீதான கருத்துத்  தாக்குதலை நிறுத்தி யதார்த்தமாக, முன்னேற்றகரமாக, உருப்படியாக கருத்து பகிரலாமே.

இனிவரும் காலங்களில் சிங்களவர்,  முஸ்லீம்,பறங்கியர் இன்னும் பலரோடு தமிழ் மக்கள்  சகோதரத்துவத் தொடு  இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை பற்றி கதைக்கும் நீங்களே .. (இந்த யாழ் களம் என்ற சின்ன வட்டத்துக்குள்)  ஒருவரை ஒருவர் மன்னிக்கவோ அல்லது விட்டுக் கொடுப்பதற்கு தயாராய் இல்லை என்பதே கசப்பான உண்மை.

இது இன்னும் ஒரு தசாப்த காலம் போனாலும் தொடரும்...
இது ஒரு போதை ... ஒருவன் சொல்லும் கருத்துக்கு எப்படியாவது ஒரு பாயிண்டை கண்டு பிடித்து அதற்கு மறுதலித்து பின்னோட்டம் இடுவது  ...
இதுவும் கூட எனக்கு புரியாத ஒரு பக்கம் தான்.... அர்ஜுன் 

சசியர், இது பதில் சொல்லும் போதை இல்லை! பார்க்கிறீர்கள் தானே? ஏதோ லீகல் பொயின்ரைக் கண்டு பிடிச்ச கணக்கா வந்து கேள்வி கேட்கிறார்களாம்! ஊரில் நடந்தது ஒன்றுமே தெரியாதாம்! மக்கள் சொல்வதில்லையாம்! 2002 வரை இயக்கம் எப்படி ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை உள்வாங்கியது என்று தெரியாதாம் இவர்களுக்கு! இவர்களை உலகத்தோடு பேச விட்டால், 1979 இல் இருந்தே புலிகள் நோட்டீஸ் அனுப்பி வீட்டுக்கொரு பிள்ளையைக் கொண்டு போய்த் தான் இயக்கம் வளர்த்தார்கள் என்று கதையைப் பரப்பி விடுவார்கள்!  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் கசப்பானவை தான், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கருத்து மோதல்களில் ஈடுபடும் அனைவரும் தாயகத்தில் இருக்கும் உறவுகளின் நன்மை கருதியே கருத்தாடுகிறார்கள்.முதலில் இங்கு வர சந்தர்ப்பம் கிடைத்தவர்கள்(பல வழிகளில்) புலம் பெயர்ந்தவர்கள் என்றும் வர சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் தாயக மக்கள் என்றும் தான் கொள்ளப்படுகிறது என்று தான் நினைக்கிறேன்.தீர்வு தீர்வு என்று இரன்டு தரப்பும் இங்கிருந்து காரசாசாரமான கருத்து பரிமாறல்களை நடத்துகிறார்கள்.ஆனால் தாயகத்தில் உள்ள மக்கள் என்ன தீர்வை எதிர் பாக்கிறார்கள் என்று யாரும் கணக்கில் எடுப்பதில்லை.ஒரு கற்ப்பனைக்கு புதுசா ஒரு கட்ச்சி ஆரம்பத்து நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் குடும்பத்துக்கு ஒருவரை வெளி நாட்டுக்கு அனுப்புவம் என்று பிரச்சாரம் செய்தால் கூட்டமைப்புக்கு கட்டுக்காசும் கிடைக்காது.மிச்சத்தை பின் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்,

இனியொருவில் வந்ததை நீங்கள் படித்துவிட்டீர்கள். ஆனால் பலர் வாசிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். மருதங்கேணி வாசித்துவிட்டு மோதகமும் கொழுக்கட்டையும் ஒன்றுதான் என்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்.

இப்போது ஐ.நா. அறிக்கை சொல்லும் கலப்புப் பொறிமுறை எல்லாம் தமிழர்களுக்கு நியாயத்தை வழங்காது. ரணில், கூட்டமைப்பு எல்லாம் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு நடப்பார்கள். அவர்கள் நடாத்தும் நாடகத்தில் ஐ.நா,வும் ஒரு வேஷம் கட்டியுள்ளது. 2009 இல் புலிகளை முழுமூச்சுடன் அழிக்க இதே மேற்கு நாடுகளும் ஐ.நா.வும் துணைநின்றன என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. புலிகளையும் அதன் தலைமையும் அழிக்க நாப்பதாயிரம் மக்களைக் காவு கொடுக்க உடன்பட்டவர்கள்தான் இவர்கள். 

இலங்கையரசு தமது கட்டுக்குள் இருக்கவேண்டும் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை.

கட்டுரையாளரின் முரன்பாட்டைதான் நான் சுருக்கமாக கூறி இருந்தேன் ......

அவரே சொல்கிறார் 
இலங்கையின் பூரண போர்குற்றம் அதில் இல்லையாம் 
அது மறைக்க பட்டு இருக்கிறதாம்.
(ஏன் என்பதற்கு விளக்கம் இல்லை. விளக்கினால் கட்டுரையே இல்லை) 

மேற்கு எதை நினைக்கிறதோ அதை செய்கிறதாம்.

ஆனால் புலிகள் தவறானவர்கள் என்று புலம்பெயர்ந்தவர்கள் சொன்னால் 
உடனேயே சுயநிர்ணய உரிமை கிடைக்குமாம்.

எப்படி என்பது யாருக்கும் தெரியாது ...... கட்டுரையிலும் இல்லை. 

இப்போ புலம்பெயர்ந்தவர்களிடம் மேற்கை ஏய்க்க கூடிய ஒரு சக்தி இருப்பதாக இவர் 
சடைஞ்சு கொள்ளும் அதே நேரம் .....
மேற்கு தனக்கு எது லாபமோ அதை செய்யும் என்கிறார். 

இவர் மொத்தத்தில் என்ன சொகிறார் ?

எந்த ஆதர அடிப்படையில் புலம்பெயர் மக்கள் புலிகளின் நடவடிக்கையைகளை ஏற்றுகொள்வதால் சுயநிர்ணயம் மறுக்கபடுகிறது என்று எழுதுகிறார் ?

உலக மக்களின் தேவை என்ன ?
உலக மக்களுக்கு புலம்பெயர் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பது ஏன் முக்கியம் ?
சர்வதேசத்திடம் எல்லாம் ஆதரத்தோடு இருக்கும்போது புலம்பெயர் மக்களின் வாக்குமூலம் எதற்கு ?
புலம்பெயர் மக்கள் முள்ளி வாய்க்காலில் நின்றார்களா ?

ஊரில் புளிமரத்தில் பேய் இருக்கு என்பதை போன்ற ஒரு பூச்சாண்டி தாண்டி ஆதரபடுத்தபட்ட எந்த செய்தியும் கட்டுரையில் இல்லை 

புலம்பெயர்ந்தவர்கள் புலிகளை தவறு என்று சொன்னால் சொக்கலட் கிடைக்கும் என்று சிறுபிள்ளைத்தனம் ஒன்றுதான் இருக்கிறது.

இல்லை அதை தாண்டி ஏதும் இருந்தால் நீங்கள்தான் எழுதவேண்டும்.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி 
புலிகள் தவறானவர்கள் என்று புலம்பெயர்  மக்கள் (பொய்) கூறினால் 
சிங்களம் ஏன் சுயர்நிர்ணயம் தரவேண்டும் ?
அதை ஏன் இப்போதே தர கூடாது ? 
சுயநிர்ணயம் தந்த பின்பு  நாம் முன்பு சொன்னது பொய் புலிகள் நல்லவர்கள் என்று சொன்னால் என்ன செய்வார்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்

ம்..அந்தோனியாருக்கு ஒரு கோழி நட்டம்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேற்கோள் காட்டிய பந்தியே சிரிப்புக்கு உரியது .....

தமிழர்களின் அரசியல் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் இருக்கிறதாம் 
(அதை தொடர்ந்தே மீதி வாய்பன் மாவையும் வைச்சு இழுக்கிறார்)
இது எப்படி என்று நீங்கள் கொஞ்சம் விளக்கினால் நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் முதல் அங்கிருக்கும் மக்களுக்கு அங்கு வாழவதற்க்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.அங்கு உள்ள நிலமையை கேலி பண்ணுவதன் முலம் அங்கு வாழ்பவர்களையும் நாட்டை விட்டு வெளியேறத் துன்டினால் பின் தீர்வுக்க்கே தேவையில்லாமல் போய்யு விடும்.இதுக்கு இங்குள்ளவர்கள் அங்கு போய் வாழ வேண்டும்.வெளி நாட்டின் போலியை தோலுரித்து காட்ட வேண்டும்.ஆனால் இங்கிருந்து யாரும் போவதாக இல்லை .அதற்க்கும் மேலாக போவர்கள் துரோகி என்று பாற்க்ப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்..அந்தோனியாருக்கு ஒரு கோழி நட்டம்! :rolleyes:

கோழி எனது பெயரால்தானே கொடுக்கபாட்டது ......?
கோழி அபோதே எனது சொத்தாகிவிட்டது 

இனி நான்தான் முறைப்படி கோழியின் எதிர்காலம் பற்றி நிர்ணயிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தோணியாருக்கு ஒரு கோழிப் பண்ணையயே கொடுத்தாலும் சரிவராது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் முயற்சியை ஒருபோது கைவிட கூடாது .....
இரண்டு ஆட்டுக்குட்டியை விட்டு பாருங்கள். 

அந்தொனியாரிடமும் ஒரு சக்தி இருக்காதானே செய்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

All guerrilla leaders and fighters killed a large number of people and it is not something new when it comes to the LTTE Leader Prabhakaran. Even Nelson Madela killed white people and their families. - See more at: http://www.dailynews.lk/?q=local/bahu-rejects-hybrid-court-proposal#sthash.C16vkdYb.dpuf ~ கூறியது டாக்டர். விக்ரமபாகு கருணாரட்ன 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவின் ஆதர்ஷ நாயகன்  நெல்சன் மாண்டேலா 
இதையும் தான் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே...

The hero of the anti-apartheid struggle was not the saint we want him to be.

The image of Nelson Mandela as a selfless, humble, freedom fighter turned cheerful, kindly old man, is well established in the West. If there is any international leader on whom we can universally heap praise it is surely he. But get past the halo we’ve placed on him without his permission, and Nelson Mandela had more than a few flaws which deserve attention.

He signed off on the deaths of innocent people, lots of them

Nelson Mandela was the head of UmKhonto we Sizwe, (MK), the terrorist wing of the ANC and South African Communist Party. At his trial, he had pleaded guilty to 156 acts of public violence including mobilising terrorist bombing campaigns, which planted bombs in public places, including the Johannesburg railway station. Many innocent people, including women and children, were killed by Nelson Mandela’s MK terrorists. Here are some highlights

-Church Street West, Pretoria, on the 20 May 1983

-Amanzimtoti Shopping complex KZN, 23 December 1985

-Krugersdorp Magistrate’s Court, 17 March 1988

-Durban Pick ‘n Pay shopping complex, 1 September 1986

-Pretoria Sterland movie complex 16 April 1988 – limpet mine killed ANC terrorist M O Maponya instead

-Johannesburg Magistrate’s Court, 20 May 1987

-Roodepoort Standard Bank 3 June, 1988

Tellingly, not only did Mandela refuse to renounce violence, Amnesty refused to take his case stating“[the] movement recorded that it could not give the name of ‘Prisoner of Conscience’ to anyone associated with violence, even though as in ‘conventional warfare’ a degree of restraint may be exercised.”

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உப்புப் புளி இல்லாத கருத்துகள் சசி! மண்டேலாவை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள் என்று யார் இங்கே சொன்னது? இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவில்லை! புலிகள் சிங்களப் பகுதிகளில் வைத்த குண்டுகள் செய்த தாக்குதல்களைப் பற்றி ஒருவரும் இங்கே பேசவில்லை, ஐ.நா அறிக்கை கூடப் பேசவில்லை! காக்க வேண்டிய மக்களைப் பலி கொடுத்தார்கள் என்றால் மண்டேலாவின் பின்னணியைத் தேடுகிறீர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையாளன் மண்டேலா ஏன் வன்முறையை கைவிட்டு மென்முறைக்கு மாறினார்?

அங்க இருக்கு சூட்சுமம்.

ஐ ஆர் ஏ போராளிகள் இன்று அமைச்சர்கள்.

நேபாளத்திலும்

கிழக்குத் தீமோரிலும்

கொசொவோவலும்.  

இதே கதை தான்.

ஒரு கட்டத்துக்கு மேல் ஆயுதத்தை கைவிட மறுத்து, வரும் வாய்புகளை எல்லாம் உதறி, தொடர்ந்தும் பொது மக்களை தாக்கும் போது தான் பயங்கரவாதி முத்திரை அழுத்தமாய் விழத்தொடங்கும்.

அப்படி விழுந்தால் மீள்வது கஸ்டம்.

புலிக்கு 1995 இன் பின்னே இந்த முத்திரை வீந்தது.

Edited by goshan_che

இதுதான் எங்களுக்கும் நடந்தது, உலகில்  வேறொரு விடுதலை இயக்கமும் பெறமுடியாத வெற்றிகளை புலிகளின் ஆயுத போராட்டம் பெற்றுக்கொண்டது. இருந்தும் 2000 ம் ஆண்டுக்கு பின்னர் உலக ஒழுக்கில் ஏற்பட்ட மாற்றமும் உலகமயமாக்கல் காரணமாகவும். 

ஆயுத போராட்டம் நகரமுடியாமல் மட்டுபட்டது, புலிகள் இயக்கம் தானே கட்டிவளர்த்த அல்லது இயக்கத்தை கட்டிஎளுப்பிய விட்டுக்கொடாத தன்மை மற்றும் உள்ளக / வெளியக துரோகங்கள் காரணமாகவும் போராட்டமும் இயக்கமும் அதன் முடிவை எய்தியது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

 யாழிலே எழுதி  கனகாலம்,ஆனால் சிலவற்றை வாசித்த பின்னர் எழுத வேண்டியிருக்கிறது. 

சிங்கள அரசு எவ்வாறு போர்க் குற்றங்களைப் புரிந்தார்கள் என்பது உண்மையோ அவ்வளவுக்கு புலிகளும் போர்க் குற்றங்களையும் மனித உரிமைகளையும் மீறி இருந்தார்கள் குறிப்பாக 2006 - 2009 வரை. நான் ஊரை விட்டு கிளம்பிய 2006 காலப் பகுதியிலேயே மக்கள் படை என்ற பெயரிலே வன்னிக்கு எரிமலைக்கு பலரையும் பயிற்சிக்கு கூப்பிடிருந்தார்கள். முச்சக்கர சாரதிகள் சங்கம், மீனவர் சங்கம், தனியார் பேரூந்து  சங்கம் என அனைத்து சங்கங்கள் மூலமும் ஆட்களை சுழற்சி முறையில் கூப்பிட்டு, பயிற்சி வழங்கினார்கள். பயிற்சி என்றால் ஒன்றும் பெரிய ரெயினிங் இல்லை. ரமணன் மாஸ்டருக்கு முன்னால கிரவுண்டை சுத்தி மூண்டு தரம் ஓட்டம், பிறகு மண்வெட்டிப் பிடியோட எப்பிடி பொசிசன் எடுக்கிறது, கிறினேட் கிளிப் டைமிங்,  கடைசியா AK யிலே கொஞ்ச ரவுண்ட்ஸ். பின்னர் வந்தவர்களிடம் கிரேனேட் எறியும், கிளைமோர் வைக்கும் வேலைகள் வழங்கப்பட்டிருந்தன. கிராமக்கோட்டடியிலே லீவிலே போன ஆமியின் பஸ்சுக்கு வைத்த கிளைமொரிலிருந்து மந்திகை காம்புக்கு எறிந்த கிரனேட் வரை இப்படி பயிற்சி பெற்ற அனுபவம் அற்றவர்களாலேயே நடத்தப்பட்டது. இதனாலேயே ஓட்டோ குட்டி சுடப்பட்டதும், சலூன் ஜெகனின் தம்பி காணாமல் போனதும். பயிற்சி பெற்ற பலர் வெளிநாடுகளுக்கும் தப்பி ஓடியிருந்தார்கள். ஹாட்லியிலெ நான் படித்த காலத்திலேயே, ஒரு பள்ளிக்கூட நாளில் நான் உட்பட உயர்தர மாணவர்களை மொடேன் கொமேர்சுக்கு கூப்பிட்டு அமுதாப், லோரென்ஸ், இளந்திரையன், பாப்பா என அனைவரும் வாட்டியிருந்தார்கள். "சமாதானம் எல்லாம் முறியப் போகுது, கடைசிச் சண்டை வரப்போகுது, நாங்கள் கூப்பிட்டு நீங்களா வந்தா நல்லது, இல்லாட்டிக்கு இழுத்துக்கொண்டு போவம்." என்ற தொனியிலே அவர்களின் கதை இருந்தது. 

எனக்குத் தெரியும் இது 2005/2006 கதை என ஆனால் இது பின்னர் மிகத் தீவிரமாகி 2008/2009 இலே தேவாலயத்திலே ஒளித்திருந்தவர்களை சுட்டது வரைக்கும் வந்தது. கடைசிக் காலங்களிலே 5பேரைப் பிடிசுக் குடுத்தால் சைக்கிளில் இருந்து 10பேரைப் பிடுச்க் குடுத்தால் மோட்டார் சைக்கிள் வரைக்கும் rewards உயர்வடைந்திருந்தது. வன்னித் தொடர்பு இருப்பவர்கள் தாராளமாக cross check பண்ண முடியும். முன்னரங்க நிலைக்கு அனுப்பப்பட்ட பல இளவயதினர்கள் முதல்நாள் பிடிக்கப் பட்டவர்கள். கனரக ஆயுதங்களுடன் வரும் இராணுவத்திற்கு முன்னால் இவர்களால் எப்படி நிற்க முடியும்? இப்படிப் பலர் சண்டை பிடிப்பதை விட தாங்கள் எப்படி தப்பலாம் எனத்தான் யோசித்தார்கள். பெண்பிள்ளைகளை பிடிக்காமல் இருப்பதற்கு அவர்களின் கற்பு விலை பேசப்பட்டதில் இருந்து அரசியல் துறைக்கு லஞ்சம் கொடுத்து காட்டினூடு கள்ளப் பாதை வெட்டியதுவரை நடந்தது. த.வி.பு பற்றி பலரது மனதில் இருக்கும் விம்பத்தொடு இந்தச் சம்பவங்கள் பொருந்தாமையால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். பலர் ஆரம்ப கால இயக்கம் பற்றிய நினைவிலேயே இருக்கிறார்கள். இது 2002 இன் பின்னர் மாற்றமடையத்மாற்றமடையத் தொடங்கி 2008 இலே மோசமாகி 2009 இலே பலரையும் பலியெடுத்து முடிவடைந்தது.

யார் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் புலிகள் மனித உரிமைகளை மீறியதில் இருந்து போர்க்குற்றங்களைப் புரிந்தது வரை நடந்தது. இது சர்வதேச புலனாய்வு நிறுவனங்களில் இருந்து ஐ.நா வரைக்கும் தெரிந்த விடயம். 

எந்த மக்களால் ஒருகாலத்தில் நேசிக்கப்பட்டு வளர்க்கபட்டார்களோ அதே மக்களால்  அவர்கள் வெறுக்கப்படட்டார்கள், இதுவே அவர்களை வேரோடு அழித்தது. ஹிட்லருக்கு, சதாமுக்கு, கடாபிக்கு நடந்ததும் அவர்களது சொந்த மக்களால் அவர்கள் வெறுக்கப் பட்டமையே.

இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம்? எமது நம்பகத்தன்மை அதிகரிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இன போர் நடந்த நாட்டில் பிறந்த ஒரு ஆண்மகனாக 
உங்களுக்கு ஏதும் கடமைகள் இருந்தாக நீங்கள் உணர்ந்து இருந்தால் ...?
அவை என்ன என்று அறிய ஆவல் ....

அர்ஜுன் அண்ணாவின் ஆதர்ஷ நாயகன்  நெல்சன் மாண்டேலா 
இதையும் தான் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே...

The hero of the anti-apartheid struggle was not the saint we want him to be.

The image of Nelson Mandela as a selfless, humble, freedom fighter turned cheerful, kindly old man, is well established in the West. If there is any international leader on whom we can universally heap praise it is surely he. But get past the halo we’ve placed on him without his permission, and Nelson Mandela had more than a few flaws which deserve attention.

He signed off on the deaths of innocent people, lots of them

Nelson Mandela was the head of UmKhonto we Sizwe, (MK), the terrorist wing of the ANC and South African Communist Party. At his trial, he had pleaded guilty to 156 acts of public violence including mobilising terrorist bombing campaigns, which planted bombs in public places, including the Johannesburg railway station. Many innocent people, including women and children, were killed by Nelson Mandela’s MK terrorists. Here are some highlights

-Church Street West, Pretoria, on the 20 May 1983

-Amanzimtoti Shopping complex KZN, 23 December 1985

-Krugersdorp Magistrate’s Court, 17 March 1988

-Durban Pick ‘n Pay shopping complex, 1 September 1986

-Pretoria Sterland movie complex 16 April 1988 – limpet mine killed ANC terrorist M O Maponya instead

-Johannesburg Magistrate’s Court, 20 May 1987

-Roodepoort Standard Bank 3 June, 1988

Tellingly, not only did Mandela refuse to renounce violence, Amnesty refused to take his case stating“[the] movement recorded that it could not give the name of ‘Prisoner of Conscience’ to anyone associated with violence, even though as in ‘conventional warfare’ a degree of restraint may be exercised.”

காந்தியுடன் திலீபனை ஒப்பிடலாம் மண்டேலா ,சேகுவேராகாஸ்ட்ரோ போன்றவர்களுடன் பிரபாவை ஒப்பிடலாம் உங்கள் ஆசைக்கு மட்டும் .நாட்டில் கூட இனி அப்படி ஒரு நிலைமை என்றும் திரும்பாது .

சர்வதேசமும் வரலாறும் அதை என்றும் சொல்லபோவதில்லை ஏனெனில் அது உண்மையும் இல்லை .

2009 ஆண்டிற்கு முதல் வார இறுதிகளில் மஞ்சள் கறுப்பு உடைகளுடன் நின்று ஆடிய அந்த கோஸ்டிகளில் தான் உங்களையும் இப்போ பார்க்கவேண்டியிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் சேர்க்க  முடியாது என்று......
பல வரலாறுகளை எழுதி முடித்த ஆசிரியர்கள் சொன்னால் ..... யாரால்தான் மறுக்க முடியும்?

காந்தியோடு தீலிபனை ஒப்பிட முடியாது ...
திலீபன் தான் நேசித்த மக்களுக்காக தனது உயிரை வாரி கொடுத்தவன்.

மூடி வைத்த காந்தியின் பொட்டலம் இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சமாக 
வெளியில் வருகிறது ....
சோசல் மீடியாவின் ஆதிக்கம் கூடிக்கொண்டு போகும் நாட்களில் .... மொத்தமும் வெளிவரும். 

 யாழிலே எழுதி  கனகாலம்,ஆனால் சிலவற்றை வாசித்த பின்னர் எழுத வேண்டியிருக்கிறது. 

சிங்கள அரசு எவ்வாறு போர்க் குற்றங்களைப் புரிந்தார்கள் என்பது உண்மையோ அவ்வளவுக்கு புலிகளும் போர்க் குற்றங்களையும் மனித உரிமைகளையும் மீறி இருந்தார்கள் குறிப்பாக 2006 - 2009 வரை. நான் ஊரை விட்டு கிளம்பிய 2006 காலப் பகுதியிலேயே மக்கள் படை என்ற பெயரிலே வன்னிக்கு எரிமலைக்கு பலரையும் பயிற்சிக்கு கூப்பிடிருந்தார்கள். முச்சக்கர சாரதிகள் சங்கம், மீனவர் சங்கம், தனியார் பேரூந்து  சங்கம் என அனைத்து சங்கங்கள் மூலமும் ஆட்களை சுழற்சி முறையில் கூப்பிட்டு, பயிற்சி வழங்கினார்கள். பயிற்சி என்றால் ஒன்றும் பெரிய ரெயினிங் இல்லை. ரமணன் மாஸ்டருக்கு முன்னால கிரவுண்டை சுத்தி மூண்டு தரம் ஓட்டம், பிறகு மண்வெட்டிப் பிடியோட எப்பிடி பொசிசன் எடுக்கிறது, கிறினேட் கிளிப் டைமிங்,  கடைசியா AK யிலே கொஞ்ச ரவுண்ட்ஸ். பின்னர் வந்தவர்களிடம் கிரேனேட் எறியும், கிளைமோர் வைக்கும் வேலைகள் வழங்கப்பட்டிருந்தன. கிராமக்கோட்டடியிலே லீவிலே போன ஆமியின் பஸ்சுக்கு வைத்த கிளைமொரிலிருந்து மந்திகை காம்புக்கு எறிந்த கிரனேட் வரை இப்படி பயிற்சி பெற்ற அனுபவம் அற்றவர்களாலேயே நடத்தப்பட்டது. இதனாலேயே ஓட்டோ குட்டி சுடப்பட்டதும், சலூன் ஜெகனின் தம்பி காணாமல் போனதும். பயிற்சி பெற்ற பலர் வெளிநாடுகளுக்கும் தப்பி ஓடியிருந்தார்கள். ஹாட்லியிலெ நான் படித்த காலத்திலேயே, ஒரு பள்ளிக்கூட நாளில் நான் உட்பட உயர்தர மாணவர்களை மொடேன் கொமேர்சுக்கு கூப்பிட்டு அமுதாப், லோரென்ஸ், இளந்திரையன், பாப்பா என அனைவரும் வாட்டியிருந்தார்கள். "சமாதானம் எல்லாம் முறியப் போகுது, கடைசிச் சண்டை வரப்போகுது, நாங்கள் கூப்பிட்டு நீங்களா வந்தா நல்லது, இல்லாட்டிக்கு இழுத்துக்கொண்டு போவம்." என்ற தொனியிலே அவர்களின் கதை இருந்தது. 

எனக்குத் தெரியும் இது 2005/2006 கதை என ஆனால் இது பின்னர் மிகத் தீவிரமாகி 2008/2009 இலே தேவாலயத்திலே ஒளித்திருந்தவர்களை சுட்டது வரைக்கும் வந்தது. கடைசிக் காலங்களிலே 5பேரைப் பிடிசுக் குடுத்தால் சைக்கிளில் இருந்து 10பேரைப் பிடுச்க் குடுத்தால் மோட்டார் சைக்கிள் வரைக்கும் rewards உயர்வடைந்திருந்தது. வன்னித் தொடர்பு இருப்பவர்கள் தாராளமாக cross check பண்ண முடியும். முன்னரங்க நிலைக்கு அனுப்பப்பட்ட பல இளவயதினர்கள் முதல்நாள் பிடிக்கப் பட்டவர்கள். கனரக ஆயுதங்களுடன் வரும் இராணுவத்திற்கு முன்னால் இவர்களால் எப்படி நிற்க முடியும்? இப்படிப் பலர் சண்டை பிடிப்பதை விட தாங்கள் எப்படி தப்பலாம் எனத்தான் யோசித்தார்கள். பெண்பிள்ளைகளை பிடிக்காமல் இருப்பதற்கு அவர்களின் கற்பு விலை பேசப்பட்டதில் இருந்து அரசியல் துறைக்கு லஞ்சம் கொடுத்து காட்டினூடு கள்ளப் பாதை வெட்டியதுவரை நடந்தது. த.வி.பு பற்றி பலரது மனதில் இருக்கும் விம்பத்தொடு இந்தச் சம்பவங்கள் பொருந்தாமையால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். பலர் ஆரம்ப கால இயக்கம் பற்றிய நினைவிலேயே இருக்கிறார்கள். இது 2002 இன் பின்னர் மாற்றமடையத்மாற்றமடையத் தொடங்கி 2008 இலே மோசமாகி 2009 இலே பலரையும் பலியெடுத்து முடிவடைந்தது.

யார் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் புலிகள் மனித உரிமைகளை மீறியதில் இருந்து போர்க்குற்றங்களைப் புரிந்தது வரை நடந்தது. இது சர்வதேச புலனாய்வு நிறுவனங்களில் இருந்து ஐ.நா வரைக்கும் தெரிந்த விடயம். 

எந்த மக்களால் ஒருகாலத்தில் நேசிக்கப்பட்டு வளர்க்கபட்டார்களோ அதே மக்களால்  அவர்கள் வெறுக்கப்படட்டார்கள், இதுவே அவர்களை வேரோடு அழித்தது. ஹிட்லருக்கு, சதாமுக்கு, கடாபிக்கு நடந்ததும் அவர்களது சொந்த மக்களால் அவர்கள் வெறுக்கப் பட்டமையே.

இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம்? எமது நம்பகத்தன்மை அதிகரிக்கும். 

ஒரு இன போர் நடந்த நாட்டில் பிறந்த ஒரு ஆண்மகனாக 
உங்களுக்கு ஏதும் கடமைகள் இருந்தாக நீங்கள் உணர்ந்து இருந்தால் ...?
அவை என்ன என்று அறிய ஆவல் ....

மருது, சத்தியமா தெரியாமல் தான் கேக்கிறன். மேல எழுதியிருக்கும் பதிவுக்கும் நீங்கள் கேட்ட கேள்விக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?? ஜீன்ஸ் படத்தில வாற எஸ் வீ சேகர் மாதிரி ஒன்டும் புரியாமல் கதைப்பதிலும் பார்க்க நேரடியா ரத்திண சுருக்கமா பதிவிட்டா வாசிப்பவர்களுக்கும் கொஞ்சம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கும் அல்லவா? 
சில வேளைகளில் அதி புத்திசாலித்தனமாக யோசிப்பதாக எண்ணி பதியும் கருத்துக்கள் இவ்வாறான எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,

இந்த அக்கினி இங்கே முன்பு வேறு பெயரில் வந்து சுங்குடி சுப்பு ஆக்கப் பட்ட ஒரு தீப்பொறித் திருமுகம் தான்.

பழைய பேர் ரிப்பேர் ஆனவுடன் இப்போ புதுப் பெயரில் கப்ஸா வுடுறார்.

ஊரில் இருந்து எழுதிறாறாம் ...... நம்பீட்டம். ???

அக்கினி,

நாங்கள் எப்போது ஊரை விட்டுப் போனோம் திரும்பி வர ????

உங்கள் புலிவால் கோஸ்டிகள்தான் ஊரை விட்டு ஓடி வந்து 10, 15 வருசமா ஊருக்குப் போகாமா விசர் கதை கதைப்பது. நாங்களில்லை. 

தீர்வுக்கு உழைக்கிறோமோ இல்லையோ தீர்வு வர உழைப்பவர்களுக்கு உபத்திரவம் செய்யாமலாவது இருக்கிறோம்.

அண்ணை கோச்சா 
நான் தீப்பொறி திருமுகமும்  இல்லை .....நெருப்பு நீலமேகமும் இல்லை ....
ஊரில் தானே இருக்கிறீர்கள்...யாழ் கள உறவுகள் சந்திப்பொன்று ஒழுங்கு படுத்துவோம் .....கிழக்கு மாகாணத்திற்கு வர விருப்பம் ஏதும் உண்டா 
திங்கிறது ....தங்கிறது எல்லாம் என்னுடைய பொறுப்பு....அறுகம்பையில் இருந்து மார்பில் பீச் வரை சென்று வருவோம்  ....நான் சொல்லத்தேவையில்லை என்னுடைய IP Address ஏ உண்மையை சொல்லும் .....
 
தீர்வுக்கு உழைக்கிறோமோ இல்லையோ தீர்வு வர உழைப்பவர்களுக்கு உபத்திரவம் செய்யாமலாவது இருக்கிறோம்.

அண்ணை இப்படி எல்லோரும் இருந்தும் ஏன் தீர்வு வருகுதில்லை ...சின்ன சந்தேகம் தீர்வு தருபவனில் கோளாறா ...? இல்லை தீர்வுக்கு உழைப்பவர்களில் கோளாறா ....? 

  • கருத்துக்கள உறவுகள்

மருது, சத்தியமா தெரியாமல் தான் கேக்கிறன். மேல எழுதியிருக்கும் பதிவுக்கும் நீங்கள் கேட்ட கேள்விக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?? ஜீன்ஸ் படத்தில வாற எஸ் வீ சேகர் மாதிரி ஒன்டும் புரியாமல் கதைப்பதிலும் பார்க்க நேரடியா ரத்திண சுருக்கமா பதிவிட்டா வாசிப்பவர்களுக்கும் கொஞ்சம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கும் அல்லவா? 
சில வேளைகளில் அதி புத்திசாலித்தனமாக யோசிப்பதாக எண்ணி பதியும் கருத்துக்கள் இவ்வாறான எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. 

என்னுடைய கருத்துக்கள் விளங்குவதில்லை என்றுதான் பலரும் எழுதுகிறார்கள் 
நீங்களும் அப்படி எழுதுவதால் .... எனது கருத்தில் தவறு இருக்கலாம்.

நீங்கள் கூறியதுபோல் ...
பனைக்கும் தென்னைக்கும் சம்மந்தம் இல்லை.
ஆனால் தென்னை பற்றி பேசும்போது புரியாதவிடத்து   ஒரு வேளை சிலருக்கு பனையை பற்றி பேசும்போது புரியலாம்.
எனது கேள்விக்கு உங்களிடம் ஏதும் பதில் இருந்தால் தாருங்கள்.
மேலே இருக்கும் கருத்தில் அது எந்த இடத்தில் உடன்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். 

நான் கஸ்ட்ரபட்டு அதிகாலை அலாரம் வைத்து எழும்பி வேலைக்கு போய் கடினமாக உழைக்கிறேன்.
அமெரிக்க அரசு சொகுசாக எனது உழைப்பில் 25% வலு கட்டாயமாக புடுங்கி கொள்கிறது.
இந்த அடாவடி தனத்தை பல அரசுகள் செய்கின்றன .....
ஏன் மக்களாகிய நாங்கள் ஒரு ஆர்பாட்டம் செய்து இனி வரி தரமாட்டோம் என்று சொல்ல முடியாது ??

புலிகள் விட்ட எல்லா தவறுகளையும் தட்டி கேட்கும் நாம் ...
ஏன் இந்த அரசுகளின் அடவடிதனத்தை கேட்க கூடாது ..... என்று நீங்கள் எண்ணியதில்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்

எண்டை அம்மே ....இதுக்கும் மேல நம்மால மல்லுக்கட்ட முடியாதுப்பா 
முடிஞ்சவரைக்கும் Simple ஆகவே முடித்து கொள்வோம் 

ஜஸ்டின் அண்ணை உங்களது கேள்வி 
புலிகள் தவறு செய்தார்கள் என்பதை ஏற்று கொள்கிறீர்களா ....? ஏற்று கொள்கிறேன்  (ஆனால் புலிகள் மட்டும் தான் தவறு செய்தார்கள் என்று ஏற்று கொள்ளமாட்டேன் )
புலிகள் பலவந்தமாக ஆட்களை இணைத்தார்கள் என்று ஏற்று கொள்கிறீர்களா ...? ஏற்று கொள்கிறேன் 

புலிகள் ஆட்கடத்தல் செய்தார்கள் என்று ஏற்றுகொள்கிறீர்களா ...? ஏற்று கொள்கிறேன் 

இன்னும் மற்ற இதர ..மனித உரிமை மீறல் அது இது எல்லாம் செய்தார்கள் என்று ஏற்று கொள்கிறீர்களா ....? ஏற்று கொள்கிறேன் 

இப்போது என்னுடைய கேள்வி 

புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற திட்டத்தை இங்கே  முன்வைத்தவர் நீங்கள் 

இதனை யார் முன்னெடுப்பது ....?  நடைமுறைப்படுத்துவது .....? 
யார் மேற்பார்வை செய்வது .....?

இந்த தீர்வுத்திட்டத்தில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குரிய  தீர்வு வழங்கியபின் ... சிங்களவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் தீர்விட்குள்ளும்  சேர்த்து கொள்ள படுவார்களா .....?  இவர்கள் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிற்றே ...ஒருவேளை ரெண்டு தீர்வும் இவர்களுக்கு செல்லுபடியாகுமா .? ..பிடித்தனுப்பியது புலிகள் ....கொன்றது சிங்களவன்...
மனாதால விரும்பி பிள்ளையை போராட அனுப்பிய சில குடும்பங்கள், பிள்ளையே விரும்பி போராடப்போன குடும்பங்கள்  நீங்கள் வழங்கப்போகும் பொருளாதார தீர்வில் ஆசை கொண்டு ...புலிகளால் பாதிக்கப்பட்டதாக கூறினால் அவர்களது உண்மை தன்மையை எப்படி அறிந்துகொள்வீர்கள் ...?  

ஏன் அதனை அமுல்படுத்த தமிழ் தேசிய தூண்களை துணைக்கு இழுக்கிறீர்கள் ...இவர்கள் பயங்கரவாதத்திற்கு துணை போனவர்கள் அல்லவா ...?இவர்கள் மீண்டும் இதற்குள் வருவது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தாதா ....?

எனக்கென்னவோ என்ற சிற்றறிவுக்கு ஏற்ற வகையில் இந்த தீர்வு திட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக தெரிகிறது ...எல்லாம் அல்லாவுக்கே வெளிச்சம் 

ஒட்டு மொத்தமா  தமிழனுக்காக  போராட போனதே பிழை.  , உயிரை தந்தவர்கள்  பாவங்கள். எங்களை நம்பி ஏமாந்து போனார்கள்.

தமிழனுக்கு அடிமையாய் இருப்பதே பிடித்தமானது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.