Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ச.அ.டேவிற் ஐயா (11.10.2015 ) இன்று கிளிநொச்சியில் காலமானார்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!

அஞ்சலிகள்.

உங்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கைத் தமிழ் சமூகம் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்த/வாழ்ந்த ஒர் உண்மையான போராளி ஒருவரை இழந்துவிட்டது."

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அருமையான போராளியைத் தமிழ்சமூகம் தெருவில் வீசிஎறிந்த வரலாற்றை யாராலையும் மாற்றமுடியாது செய்துவிட்டது இவரது மறைவு. புலிகள் இவரை ஒதுக்கித்தள்ளியதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. 

இனிமேல் அவரது மறைவுக்குப்பின்பு அனைத்து அரசியல்வாதிகளும் பட்டுப்பீதாம்பரம் சாத்துவார்கள்.

 

இன்றும் இலங்கைத்தீவின் தமிழர்பிரதேசங்களில் ஆக்கிரமிப்பை கொஞ்சமாவது தடுக்கக் கண்விழித்திருக்கின்றதென்றால் இந்த மகானது கைங்கரியமே.

வீரவணக்கம் செய்யப்படவேண்டிய எமதுதேசத்தில் முதல்குடிமகன்.

வீரவணக்கம் ஐயா.

இவர் நிச்சயம் கர்த்தருக்குள் உறைவார். 

ஐயா என்ன எழுதுகிறோம் என்று கொஞ்சம் யோசித்து எழுத முடியாதா ?


டேவிட் ஐயா மட்டுமல்ல ....
உலகின் ஒரு மூலையில் இன்னொரு மனிதனின் பசியை போக்க போராடுபவனும் ஒரு போராளிதான்.
யாரும் வெற்றி பெறுவதில்லை.

கல்வியை மேம்படுத்த எத்தனையோ பேர் தமது வாழ்வை அர்பணித்து போராடி இருக்கிறார்கள்.
மலலாதான் அமெரிக்க சொகுசு அறைகளில் இருந்து கல்வி வளர்பிட்காக நோபல் பரிசை தட்டி சென்றார். 

இதுதான் இன்றைய உலகம். தமிழனை தமிழன் என்று அவர்கள்  அடையாளம் கண்டு அடித்தார்கள்.
இப்போ புலிகள் என்று அடையாளம் காட்டி சிலர் அடிக்கிறார்கள். 
ஆபிரிக்காவில் தோற்றுப்போன பல போராட்டங்கள் இருக்கின்றன .... நாம் எமக்கு என்ன என்று விட்டு நகர்ந்து போவதை போல 
உலகமும் நடந்து போகிறது. 

டேவிட் ஐயா வாழ்ந்து இறந்தார் என்பதே பெரிய மகிழ்ச்சி.
உமாமகேஷ்வரனின் துப்பாக்கி பலரை இள வயதிலேயே கொண்டு சென்றுவிட்டது. அதில் தப்பியதே பெருத்த அதிர்ஷ்டம்.

இவ்வையத்தே வாழ்ந்த இந்த நல்ல மனிதருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

டேவிட் ஐயாவுக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயாவின் ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்….. : கிரிதரன்

divdடேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று. அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது வடிவமைப்பில் உருவான கட்டடங்களிலொன்று என்றெண்ணுகின்றேன்.

இவரைப்பற்றி நான் விரிவாக அறிந்து கொண்டது எண்பதுகளின் ஆரம்பத்தில் மருத்துவர் ராஜசுந்தரம் மூலம்தான்.

மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து தன்னார்வத்தொண்டினை ஆற்றிவந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த நாவலர் பண்ணைக்கு மருதோடை என்னுமிடத்திலிருந்து இலகுவாகச்செல்வதற்கேற்ற வகையில் பாதையொன்றை உருவாக்குவதும் அத்தொண்டுகளிலொன்று. அதற்காக வார இறுதி நாள்களில் மாணவர்கள் பலர் செல்வதுண்டு. அவ்விதம் செல்லும் சமயங்களில் புகைவண்டி வவுனியாவை அடைய நள்ளிரவாகிவிடும். வவுனியாவில் இறங்கி மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை அவரது ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச்செல்வது வழக்கம். செல்லும் வழியெல்லாம் இராஜசுந்தரம் அவர்கள் வாய்க்கு வாய் டேவிட் ஐயா என்று கூறிக்கொண்டே அவரது சேவைகளைப்பற்றிக்கூறிக்கொண்டு வருவார். அப்பொழுதுதான் விரிவாக அவரைப்பற்றி அறிந்து கொண்டது. அதற்கு முன்னர் சில தடவைகள் அவரைப்பற்றிக்கேள்விப்பட்டிருந்தாலும் அவராற்றும் பல்வகையான சேவைகளின் தன்மையினை அறிந்திருக்கவில்லை.

diva10பல வருடங்களின் முன்னரே அவர் வன்னிப்பிரதேசத்தில் பண்ணைகளை வாங்கி இயக்கி வந்ததாக அறிந்தேன். 77 இனக்கலவரத்தைத்தொடர்ந்து மலையகத்திலிருந்து வன்னி நோக்கிப்புலம்பெயர்ந்த அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்றது காந்தியம் அமைப்பே. அவ்விதம் வரும் அகதிகளைக்குடியேற்றி, அவர்களுக்கு விவசாயம் செய்வதை விளங்கப்படுத்திச் சொந்தக்கால்களில் நிற்க வைப்பதுதான் காந்தியம் அமைப்பின் பிரதான நோக்கம். அதற்காக அவ்விதம் அமைக்கப்படும் குடியேற்றத்திட்டங்களுக்கு அறிவு போதிக்கும், உதவி புரியும் மாதிரிப்பண்ணைகளாக விளங்கிய பண்ணைகளிலொன்றே நாவலர் பண்ணையும். இங்கு நியாய விலையில் குழந்தைகளுக்கான திரிபோஷா மா போன்ற பொருள்கள் வழங்கப்பட்டதுடன், குழந்தைகளைப்பராமரிக்கு வசதிகளும் ஏற்படுத்தித்தரப்பட்டன. அப்பண்ணைகளில் விவசாயம் செய்வதில் அக்குடியேற்றவாசிகளைப்பங்கு பற்ற வைப்பதன் மூலம் அவர்களுக்கு விவசாய அறிவினைப்போதிப்பதுதான் அம்மாதிரிப்பண்ணைகளின் நோக்கமாகவிருந்தது.

இப்பண்ணைகள் பற்றிய அறிவு எனக்கு டேவிட் ஐயா மீதான மதிப்பினை அதிகரிக்கவே வைத்தது. திருமணமாகாத அவர் தன் வாழ்க்கையினை ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அவரது கட்டடக்கலை அறிவுக்கும், அனுபவத்துக்கும் வெளிநாடுகளில் ஏன் இலங்கையிலேயே சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ தான் உழைத்ததையெல்லாம் காந்திய அமைப்புக்கே செலவிட்டார்.

இவரைச் சில தடவைகள் சந்தித்திருக்கின்றேன். ஆனால் கதைத்ததில்லை. நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் இவர் தனது கட்டட வரைப்படங்களுடன் , அனுமதி வேண்டி வந்திருப்பதைக்கண்டிருக்கின்றேன். அப்பொழுதுதெல்லாம் வெள்ளை நிற ‘சேர்ட்டு’டன் கால்களில் வெறும் செருப்புடன் தான் வருவார். இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கிறது. இன்னுமொரு தடவை டேவிட் ஐயாவின் மீது பெரு மதிப்புக்கொண்ட கட்டடக்கலைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரூடாக ஒரு சில தொழில்ரீதியான உதவிகளை நானும், நண்பரொருவரும் செய்திருக்கின்றோம். ஆனால் அப்பொழுதும் நேரில் அவரைச்சந்திக்கவில்லை.

அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்பானது தமீழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்ததன் காரணமாக இலங்கை அரச படைகளின் கண்கள் அவ்வமைப்பின் மீதும் விழுந்தது. அதன் விளைவாகவே மருத்துவர் ராஜசுந்தரம், டேவிட் ஐயா, அண்மையில் கனடாவில் மறைந்த சண்முகலிங்கன் போன்றவர்களெல்லாரும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.

பின்னர் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திலேற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது வாழ்க்கை நீண்ட காலம் தமிழகத்தில் கழிந்தது. இறுதி வரையில் அவர் தன் கருத்துகளில் தெளிவாக இருந்தததை அவ்வப்போது பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவரும் செய்திகள் மூலம் அறிய முடிந்தது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானது. முக்கியமாக அகதிகள் புனர்வாழ்வுக்காக அவ்வமைப்பு வட, கிழக்கில் ஆற்றிய சேவை போற்றப்பட வேண்டியதொன்று. மலையகத்தமிழர்களையும் வட, கிழக்கில் குடியேற்றி அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க முற்பட்ட செயலானது தீர்க்கதரிசனம் மிக்கவொன்றாக அச்சமயம் தோன்றியது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பை எவ்விதம் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாதோ அவ்விதமே டேவிட் ஐயாவின் பங்களிப்பினையும் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாது. தன் வாழ்வையே ஈழத்தமிழர்களின் நல் வாழ்வுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவரைப்பற்றி வரலாறு சரியாகவே இனங்கண்டு , நினைவு கூரும்.

 

 

http://inioru.com/memories-of-david-aiya/

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா,
உங்களைப் போல கர்மவீரர்கள், தியாகசீலர்கள் மறைந்ததின் பின்னர் தான் மக்களின் மனதில் இடம் பிடிக்கிரீர்கள். இந்த நிலை மாறுதல் வேணும், இருக்கும் போதே உங்களைப் போன்றவர் போற்றப்படுதல் வேண்டும் !!
எமக்கு தொடர்பே இல்லாத காந்தி ஜீக்கு ஜனன தினம், சிரார்த்த தினம் வைக்கும் கூட்டம் தான் நாம்.
 

  • தொடங்கியவர்

டேவிட் ஜயாவின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது

 
 

 

டேவிட் ஜயாவின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது


காந்தீய அமைப்பின் தலைவர் சொலமன் அருளானந்தம் (டேவிட் ஜயா) அவர்களின் இறுதி நிகழ்வுகள் இ;ன்று புதன் கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கு முன்பாக ஆனந்தபுரத்தில் அவரின் வசிப்பிடத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்ட்டிருந்த பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் காந்தீய அமைப்புகளின் பிரநிதிகள்  பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

 


தமிழ் மக்களின் நலனுக்காக உண்மைதன்மையுடன் பணியாற்றி ஒரு மனிதர் டேவிட் ஜயா இவர் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது பாதிக்கப்பட்டு தென்னிலங்கையில் இருந்து வந்த மக்களை வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் மற்றும் கிழக்கு மாகாண மாவட்டங்களில் குடியேற்றுவதற்காக காந்தீய அமைப்பினை உருவாக்கி உழைத்தவர். 500 க்கு மேற்பட்ட முன்பள்ளிகளை காந்தீய  அமைப்பின் மூலம் ஆரம்பித்து செயற்படுத்தி வந்தவர். இப்படி பல பணிகளை மேற்கொண்டவர் டேவிட் ஜயா அவர்கள்.

 


இவரின் பூதவுடல் இன்று மதியம் 1 மணிக்கு ஆனந்தபுரத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கிளிநொச்சி புனித திரேசம்மாள் ஆலயத்தி;ல் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருநகர் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

 

 

 

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124889/language/ta-IN/article.aspx

 

Edited by நவீனன்

ஜயாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.

12105832_10154160298076111_2707085568656

டாக்டர் ராஜசுந்தரம் .டேவிட் ஐயா ,சந்ததியார் .

டேவிட் ஐயாவின் 92 ஆம் பிறந்த தினம் அன்று...

 

11059751_1714449195445316_13071080284090

12079448_1714449355445300_44870728678153

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உப செயலாளர் தோழர் சி.மகேந்திரன் அவர்களின் முகநூலில் இருந்து அவர் அனுமதியுடன் படங்களை பிரசுரிக்கின்றேன். தோழர் சி.மகேந்திரன் அவர்கள் டேவிட ஐயாவின் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவர். இவ் வருடம்  ஏப்ரல் மாதத்தில் டேவிட் ஐயாவின் பிறந்த தினம் அன்று அவருடன் எடுத்த படங்களை ஏற்கனவே யாழ் இணையத்தில் இணைக்க அனுமதியும் தந்து இருந்தார்

 

மட்டகளப்பு ஜெயில் உடைப்புடன் அவனவன் தப்பி ஓடிய நிலையில் டேவிட் ஐயாவை தமிழ் நாடு கொண்டு வந்து சேர்த்தது பரந்தன் ராஜன் .

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. மிகக்குறைந்தளவானவர்களே கலந்து கொண்டனர். ஊடகங்கள் எதுவும் அவரின் இறுதி நிகழ்வு பற்றிய செய்திகளையோ அவரைப்பற்றிய விவரங்களையோ வெளியிடவில்லை. அவர் ஒரு காலங்கடந்த மனிதராகவே ஊடகங்களால் கைவிடப்பட்டிருந்தார். குறைந்த பட்சம் இணையத்தளங்களையும் முகப்புத்தகத்தையும் பார்த்துக்கூட அவரைப்பற்றிய தகவல்களை அறியும் நிலையில் இலங்கைத்தமிழ் ஊடகங்கள் இருக்கவில்லை. அல்லது அவர் புளட்டுடன் அடையாளம் காணப்பட்டவர் என்பதால், தற்போது அவர் எந்தப் பட்டியலில் (துரோகியா தியாகியா ) உள்ளார் என்ற குழப்பத்தில் அவரைப்பற்றி எழுதவும் வெளிப்படுத்தவும் தயங்கியிருக்கலாம். இறுதி நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆனால் டேவிட் ஐயா எந்த இடம் பெயர்ந்து வந்த மலையக மக்களின் ஈடேற்றத்துக்காக முன்னின்று உழைத்தாரோ, யாருடைய வாழ்க்கை முன்னேற்றம் காண வேண்டும் என்று விளைந்தாரோ அவர்களில் இருந்து ஒருவர் கூட உரையாற்றவில்லை. அப்படி ஒருவருக்கான இடமும் கிடைக்கவில்லை.
அவரைச் சிலர் தமக்கான நிகழ்கால - எதிர்கால அரசியலுக்குத் தத்தெடுக்க முனைந்ததுதான் ஆகப் பெரிய அவலமாக இருந்தது.

FB

அவர் தமிழீழத்தின் நிலப்பரப்பில் நடைபெற்றுவந்த சிங்களக்குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழர்கள் அங்கே நிறைய குடியேற வேண்டும் என நினைத்து அதற்கான திட்டங்களைத் தீட்டி செயற்பட்டவர் யாழ்ப்பாண மக்கள் வன்னிக்காட்டுக்கு வர விரும்பவில்லை அதே சமயம் ஓடுக்குமுறைக்குள் வாழ்ந்த மக்கள் தமக்கென ஒரு துண்டு நிலம்தானும் இல்லாத மலையக மக்களை வன்னிப்பரப்பெங்கும் குடியேற்ற முயன்றார். காந்தீயம் மட்டுமே அவருடைய திட்டத்தை உள் வாங்கியது திரு டொக்டா் ராஜசுந்தரம் தனிமனிதராக இவரையும் இவருடைய திட்டங்களையும் செயற்படுத்தினார் என்பது மிகையல்ல...அக்காலத்தே புலிகளும் புளொட் அமைப்பும் ஒன்றாகவே இருந்தன. கல்லாறு நைனாமடு கன்னாட்டி கிறித்தவகுளம் முசல்குத்தி கந்தசாமிநகர் நித்திநகர் (இங்குதான் புலிகளும் புளொட்டும் பிரிவதற்கான கூட்டம் நடைபெற்றது) என ஒவ்வொரு இனக்கலவரத்தையும் அடுத்து துரத்தப்பட்டு வந்த மக்களை இந்தப்பகுதிகளில் குடியேற்றி.அவர்களுக்கான வாழ்வாதாரங்களை அமைத்துக்கொடுத்து நற்பணிகளை ஆற்ற முன்நின்றார் இவருடைய நிழலின்கீழ் காந்தீயமும். காந்தீயத்தின் நிழலின்கீழ் புளொட்டும் உயிர் கொண்டன ஈற்றில் இந்தக்குடியேற்றங்களை இலக்குவைத்தே ராணுவ ம் சுற்றிவளைப்புகளையும் கைதுகளையும் படுகொலைகளையும் முன்னெடுத்தபோது கொதிக்கிற சட்டியிலிருந்து வந்த மலையக மக்கள் நெருப்பில் விழுந்தனர். எழுதமுற்படின் இந்த மலையக மக்களின் சோகவரலாறும்...டேவிட்ஐயாவின் வரலாற்றில் அடக்கம். பேசாப் பொருளாக இன்னும் பல துரோகங்கள் இதில் உண்டு அவற்றை எழுத முனையின் .....????இந்த குடியேற்றங்களின் விருத்திக்காக ஓடியோடி உழைத்த சந்ததியார் டேவிட்ஐயா டொக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் நினைவுகூராமல் விடப்பட்டவர்களே....ஆயினும்....என்மனக்கண்முன் இன்னும் இவை அழியாமல் நிற்கிறதே....

FB

  • தொடங்கியவர்

டேவிட் அய்யா காலமாகியதை குறித்து இலங்கை தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிடாதது ஏன்?

 
 

GTBC.FM ன் பத்திரிகை கண்ணோட்டத்ததிருந்து

டேவிட் அய்யா காலமாகியதை குறித்து இலங்கை தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிடாதது ஏன்?

 

 
ஈழப் போராளி டேவிட் அய்யா காலமாகியது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் எவையும் செய்தி வெளியிடாதது மிகவும் அதிருப்தி தரும் விடயமாகும் இவ்வாறு உலகத் தமிழ் வானொலி GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
குளோபல் தமிழ் குழுமத்தின் உலகத் தமிழ் வானொலியான GTBC.FMஇல் வார நாட்களில் இடம்பெறும் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் நாளிதழ்கள் குறித்த பார்வை இடம்பெறுகின்றது. அதன் இன்றைய நிகழ்ச்சியிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டது பின்வருமாறு: 
 
அண்மையில் ஈழப் போராளியும் காந்தியவாதியுமான டேவிட் அய்யா கிளிநொச்சியில் காலமாகியிருந்தார். ஈழப்போராட்டத்தில் மிகவும் பங்களிப்பை நல்கிய டேவிட் அய்யா இலங்கை அரசின் ரெக் புக் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
 
இவர் தனது இறுதிக்காலத்தை கழிக்க கிளிநொச்சி திரும்பியிருந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி காலமானார். டேவிட் அய்யாவின் மரணம் குறித்தும் அவரது பங்களிப்பு குறித்தும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை. 
 
யாழ் பிராந்திய நாளிதழ் ஒன்று மாத்திரமே டேவிட் அய்யாவின் மரணம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தமையையும் அவரது பங்களிப்பு குறித்து தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியிருந்தது. 
 
தமிழ் மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக பலப் பணியாற்றி சிறைகளில் அடைக்கப்பட்டு தமிழகத்தில் அகதியாக வாழ்ந்து மடிந்தவர் அவர்.
 
டேவிட் அய்யா தன் வாழ் நாளையே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்தவர். கட்டட கலை நிபுணராக அதில் பல பட்டங்கள் பெற்று பல நாடுகளுக்குச் சென்று தமிழ் மக்களுக்காக இறுதி மூச்சுவரை வாழ்ந்த அவருக்கு தமிழ் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? 
 
நேற்றைய தினம் கிளிநொச்சியில் டேவிட் அய்யாவின் இறுதி நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளாமைக்கு தமிழ் பத்திரிகைகள் அவரது மரணம் குறித்து செய்தி வெளியிடாமையே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது. 
 
நடிகை மனோரமா காலமாகிய நாள் முதல் அவர் குறித்து தொடர்ச்சியாக வர்ண கட்டுரைகளை வெளியிடும் தமிழ் நாளிதழ்கள் ஈழ மக்களுக்காக போராடி தன் வாழ்வு என்ற பற்றினை துறந்த மாமனிதருக்காக எந்த பதிவும் இடம்பெறவில்லை என்றும் டேவிட் அய்யாவின் இறுதி நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது. 
 
எவ்வாறெனினும் சமூக வலைத்தளங்களும் இணைய ஊடகங்களும் டேவிட் அய்யாவின் மரணம் தொடர்பில் செய்திகளையும் நினைவுகளையும் பகிர்ந்திருந்தன. அதன் காரணமாக இளைய தலைமுறையினர் பலர் டேவிட் அய்யா குறித்து அறிய முடிந்தது.
 
தற்கால இளைய தலைமுறை அதிகம் ஒன்றியிருக்கும் இணைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் டெவிட் அய்யா குறித்து பல நினைவுப் பகிர்வுகள் இடம்பெற்றன. 
 
இவ்வாறான நிலமைகளிலேயே சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் இந்திய ஊடங்களும் டேவிட் அய்யாவின் மரணம் தொடர்பில் செய்திகளைப் பிரசுரித்திருக்கின்றன. 
 
டேவிட் அய்யாவின் மரணம் குறித்த செய்தியை வெளியிடாமல் நடந்து கொண்ட இந்தச் செயல் தமிழ் மக்கள் குறித்த அவரது கனவுக்கு அவரது இலட்சியத்திற்கு மதிப்பளிக்காத செயலே. 
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டம் இன்றி, மக்கள் அமைதியாக வாழ இல்லிடம், சுய கௌரவம் என்பதை ஏற்படுத்திக் கொடுத்த அந்த மனிதரின் செயல் மக்கள் மனதில் நிலைக்கவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது. இறுதிவரை அகதியாகவும், தன் சொந்த உழைப்பிலும் வாழ்ந்த அந்த மனிதரின் ஆன்மா ஆண்டவன் சந்நிதியில் ஆறுதல் அடையும்.

ஆர்ப்பாட்டங்களோடு கூடிய அற்ப உதவிகளே மக்கள் மனதில் இடம் பெறுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.