Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைக்கு ஆர்ப்பரித்தார்கள், ஆனால் பிணை எடுக்க ஆளில்லை. அமைச்சரவைப் பேச்சாளர் கிண்டல்

Featured Replies

விடுதலைக்கு ஆர்ப்பரித்தார்கள், ஆனால் பிணை எடுக்க ஆளில்லை. அமைச்சரவைப் பேச்சாளர் கிண்டல்
 
விடுதலைக்கு ஆர்ப்பரித்தார்கள், ஆனால் பிணை எடுக்க ஆளில்லை. அமைச்சரவைப் பேச்சாளர் கிண்டல்
அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்று பெரிதாக கோஷமெழுப்பியவர்களெவரும் அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டபோது பிணையெடுப்பதற்கு அங்கிருக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 
 
12000 முன்னாள் விடுதலைப்புலிகள் அங்கத்தவர்களை விடுதலை செய்ததாக அடிக்கடிக் கூறி தம்பட்டமடித்துக்கொள்ளும் அரசாங்கம் எதற்காக 200  வரையான அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கு இத்தனை இழுபறிப்படுகின்றது என சுடரொளி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பதிலளிக்கையில்
 
இவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்.மாறாக இவர்கள் குற்றஞ்சாட்டுச் சுமத்தப்பட்ட கைதிகள். அந்தவகையில் நீதிமன்ற செயன்முறை இவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றையதினம் அவர்களுக்கு பிணைவழங்கப்பட்டது. அவர்களை விடுதலைசெய்யுமாறு பெரிதாக ஆர்ப்பரித்தவர்கள் எவருமே அவர்களுக்கு பிணை வழங்கியபோது  பிணையெடுப்பதற்கு அங்கு இருக்கவில்லை. அரசாங்கம் அவர்களை பிணையெடுக்கும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாதல்லவா என அமைச்சரவைப் பேச்சாளர் கிண்டல் செய்தார்.
 

... ம்ம்ம்ம், எங்க நேரம்???... பொழுது போக்குக்கு உள்ளுக்குள்ளாளை விடுங்கோ என்றால், நீங்களும் சீரியசாக எடுத்து விட வெளிக்கிடுகிறீர்கள்???? ... எமக்கு இப்போ "இதயங்களால் ஒன்று பட்டு விட்டோம், இனவழிப்புக்கான ஆதரங்கள் ஏதும் இல்லை, புலிகள் முஸ்லீங்களை இனச்சுத்திகரிப்பு செய்தார்கள், ..." என்று கதைக்க அல்லவா மட்டும் நேரம் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

 எங்கட ராசதந்திரம் உங்களுக்கு விளங்காது. நாங்கள் இந்த நேரம் நாட்டில இருந்தா சிங்கள மக்கள் கோவப்படுவினம். நாங்கள் இன ஒற்றுமையை பாதுகாக்க வேணும். அதுக்கான ஏட்பாட்டோடதான் எல்லாம் நடக்குது.

... அங்கு ஐ.நாவின் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் செயற்குழு உறுப்பினர்கள் போன தருணம் ... நாமெல்லாம் எஸ்கேப்! ... நின்று விபரங்களை, சாட்சியங்களை கொடுத்தால், அது ஒன்றுபட்டவர்களின் இதயங்களை புண்பட வைத்திருக்கும்? ... 

சிறைகளில் எம்மவர்கள், உண்ணாவிரதம் என்று தொடங்கியவுடன் ... முக்குத்தக்குப்பட்டு இல்லாத பொய்களை சத்தியங்களை சொல்லி அவர்களின் போராட்டத்தை மழுங்கடித்தவர்கள், இன்றோ????????? எம் மக்களுக்கு இவர்கள் விடிவை தேடித்தருவார்கள்??? காத்திருப்போம்!!!

சந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்

 
IMG_0430-main(1).pngகொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் எடுக்க யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கைதிகள் விடுதலையை வைத்து நாடகமாடிய கூட்டமைப்பினர் இறுதியில் அவர்களை கைவிட்டுள்ளனர்.
 தமிழ் மக்களை பற்றிய பிரக்ஞைகளுமின்றி எழுந்தமானமாக அரசியல் செய்யும் இந்த கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்க தகுதியற்றவர்களாகும்.இதனூடாக இந்த நிலையை எதிர்கொள்ள எந்தவித திட்டமிடல்களோ சிவில் சமூக கட்டமைப்புக்களோ  இவர்களிடம் இருக்கவில்லை என்பது அம்பலமாகின்றது.
 
குறித்த கைதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டாலும் பிணை நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படாததால் மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். 
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சிங்கள அரசியல் வாதிகளின் மலிவு அரசியல் !

இவர்களிடம் இந்த 'நக்கல்' குணம் இருக்கும் வரையும்.. சிறுபான்மை இனங்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தேவை இருந்து கொண்டேயிருக்கும்!

அவுஸ்திரேலியாவில், நியுசிலாந்ததில், கனடாவில், அமெரிக்காவில் .. பூர்வீகக் குடிகளை நோக்கி இவ்வாறான கருத்துக் கூறப்பட்டிருந்தால், அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சம் சும் கும்பல் நடந்து கொண்ட விதம் எதிர்ப்பார்த்தது தான். ஆனால் தமிழ் தேசிய விடுதலை முன்னணியினராவது இவர்களுக்கு சட்ட ரீதியில் கைகொடுத்திருக்கலாம். அல்லது.. பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலையாவதை வலியுறுத்த இந்த தற்காலிக கபட விடுவிப்பை அவர்கள் வரவேற்காமல் விட்டார்களோ தெரியவில்லை.

எதுஎப்படி.. பொதுமன்னிப்பு அடிப்படையில் எல்லா அரசியல் கைதிகளையும் குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதானவர்களை விடுவிக்க விக்கி ஐயா ஐநா தூதர்கள் வந்துள்ள நேரம் பார்த்து சிங்கள அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் நல்ல நகர்வு.

ஆனால் சம்மும் சும்மும் நாட்டில் இல்லை. இதுதான் இவர்களுக்கு வாக்குப் போட்ட மக்களுக்கு செய்யும் இவர்களின் அரசியல். இது அரசியல் அல்ல அநாகரிமான ஏமாற்று வித்தை. இதையே சம் சும் கும்பல் தொடர்ந்தும் செய்து தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறது.

தமிழ் மக்கள் இந்த ஆபத்தைப் புரிந்து கொண்டு விழிப்போடு செயற்படுவது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

இதில் சம் சும் கும்பல் நடந்து கொண்ட விதம் எதிர்ப்பார்த்தது தான். ஆனால் தமிழ் தேசிய விடுதலை முன்னணியினராவது இவர்களுக்கு சட்ட ரீதியில் கைகொடுத்திருக்கலாம். அல்லது.. பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலையாவதை வலியுறுத்த இந்த தற்காலிக கபட விடுவிப்பை அவர்கள் வரவேற்காமல் விட்டார்களோ தெரியவில்லை.

எதுஎப்படி.. பொதுமன்னிப்பு அடிப்படையில் எல்லா அரசியல் கைதிகளையும் குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதானவர்களை விடுவிக்க விக்கி ஐயா ஐநா தூதர்கள் வந்துள்ள நேரம் பார்த்து சிங்கள அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் நல்ல நகர்வு.

ஆனால் சம்மும் சும்மும் நாட்டில் இல்லை. இதுதான் இவர்களுக்கு வாக்குப் போட்ட மக்களுக்கு செய்யும் இவர்களின் அரசியல். இது அரசியல் அல்ல அநாகரிமான ஏமாற்று வித்தை. இதையே சம் சும் கும்பல் தொடர்ந்தும் செய்து தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறது.

தமிழ் மக்கள் இந்த ஆபத்தைப் புரிந்து கொண்டு விழிப்போடு செயற்படுவது அவசியம்.

ஆகக் குறைந்தது உறவினர்களுக்காகவது தெரியப் படுத்தியிருக்கலாம்!

சரியான முன்னறிவித்தல் இல்லாமல் இவர்கள் விடுவிக்கப்பட்டது சிங்களத்தின் தவறு !

அதற்குள்ளே அமைச்சரின் நக்கல் வேற..!

அதைத் தூக்கி விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தித் தலையங்கம் போட ஒரு உண்மை பேசும் தளம்! :(

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டாண்டு தோறும் தமிழ்த்தலைமைகளின் நடவடிக்கைகளை உறுதிமொழிகளை கேட்டு...கேட்டு காது புளித்துவிட்டது.

இவர்கள் மக்களை நட்டாற்றில் விடுபவர்கள்.விட்டவர்கள். இன்றும் அதையே செய்கின்றார்கள். எதை மக்களுக்கு வாக்குறுதியாக கொடுத்தார்களோ அதை அடுத்தகணமே மறப்பவர்கள் இவர்கள்.

மகிந்த போட்ட அரசியல் பாதையில் பயணிக்கும் மைத்திரி......
மைத்திரிக்கு சம்பந்தன் கும்பல் ஒரு கைத்தடி.....
ஈழத்தமிழினமே கும்பல் இருக்கும் வரை உனக்கு விடிவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

ஆகக் குறைந்தது உறவினர்களுக்காகவது தெரியப் படுத்தியிருக்கலாம்!

சரியான முன்னறிவித்தல் இல்லாமல் இவர்கள் விடுவிக்கப்பட்டது சிங்களத்தின் தவறு !

அதற்குள்ளே அமைச்சரின் நக்கல் வேற..!

அதைத் தூக்கி விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தித் தலையங்கம் போட ஒரு உண்மை பேசும் தளம்! :(

புங்கையூரானிடமிருந்து.... வந்த இந்தக் கருத்தை, நான் எதிர் பார்க்கவில்லை.
சிங்களத்தின் மேல் முழுத் தவறையும் போட்டு, தமிழ் அரசியல் வாதிகளை நியாயப் படுத்துவது சரியல்ல.
ஏற்கெனவே...... மைத்திரி, அரசியல் கைதிகள் 7´ம் திகதிக்கு  முதல்  விடுவிக்கப் படுவார்கள் என்று...
சம்பந்தன், சுமந்திரனிடம் தான்.... சொல்லியிருந்தார். அப்படி இருந்தும், இந்த இருவரும் அந்த நேரம் பார்த்து.... 
இந்தியாவுக்கும், அவுஸ்திரேலியாவிற்கும்   பயணத்தை மேற்கொண்டது, ஏற்க முடியாதது.
அத்துடன்... இவர்களின் கடந்த கால  செயற்பாடுகளுடன் ஒப்பிடும் போது.... இவர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள் என்பதை மறுக்க முடியாது.

அரசியல் கைதிகளின் விடுதலையின் போது.... 
சட்டம் படித்த இவர்கள், அவர்கள் அருகில் இருந்து... அவர்களுக்கு வேறுசில சட்டச் சிக்கல்களோ, பிரச்சினைகளோ ஏற்படாமல் பாதுகாத்து இருக்க வேண்டியது, இவர்களின் தார்மீக கடமை. அதனை செய்யத் தவறியவர்களை, சிங்களவன் கிண்டல் செய்வதில் தப்பில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்று பெரிதாக  ஆர்ப்பரித்தார்கள், அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டபோது அவர்கள் யாரும் பிணையெடுப்பதற்கு அங்கிருக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். - செய்தி

 

அதிற்ச்சி தரும் செய்தி. தீவிரமாகப் பேசுவது தீவிரமாக இணையத்தில் எழுதுவது மட்டுமே நமது பணி செயல்படுவதல்ல என இனியும் புலம்பெயர்ந்த நாட்டுப் பற்றாளர்கள் இனியும் ஒதுங்கி இருத்தல்  தகுமா?  வெளிநாடுகளில் வாழும் அதி தீவிர உணர்வாளர்கள்கூட பேச்சோடு நிறுத்திக்கொண்டது அதிற்ச்சி தருகிரது. அவர்கள் நினைத்திருந்தால் அவர்கள் தங்களின் தங்கியுள்ள உறவினர் மூலம் அல்லது கட்ச்சி மூலம் முயன்றிருந்தாலே இந்த அவலம் வந்திருக்காது.

ஈழவிடுதலைத் தலைவர்களாக புலம்பெயர்ந்த நமது ஆதரவோடு பாராளுமன்றம் செல்ல விரும்பும் சில முன்னணி வளக்கறிஞர்கள் எப்பவுமே இத்தகைய தமிழ் அரசியல் கைதிகளின்  பிரச்சினைகளில் ஆர்வம் காட்டியதில்லை. எதிராக செயல்பட்ட வளக்கறிஞர்களுடன் பணிபுரிந்ததாக வேறு சிலர் எழுதுகிறார்கள். அவர்கள் மவுமம் எனக்கு ஆச்சரியம் தரவில்லை.

அன்று அரசியல் கைதிகள் விவகாரங்களில் ஈடுபட்டு பாராளுமன்றம் சென்றிருக்கும் வளக்கறிஞரோ இன்று  நல்லிணக்கத்தின் அத்திவாரக் கல்லான கைதிகள் பொதுமன்னிப்பு பிரச்சினையில் விட்டுக்கொடுக்குமாறு தமிழ் தலைமையை தூண்டுவதாக தொடர்ந்து வரும் செய்திகள் அதிற்ச்சி தருகிறது. இது பற்றி அவர் தன் நிலையை தெளிவு படுத்த வேண்டும்.

மீண்டும் ஈழத் தமிழ் அரசியல் கைதிகளின் அற போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மீண்டும் கொடுஞ்சிறையில் நீதிமன்றில் அல்லது விடுதலையின் பின் நமது அறப்போராளிகள் கைவிடப்படுகிற சூழல் உருவாக ஒருபோதும் நாம் இடமளிக்கக்கூடாது.

இனியேனும் பெரும் கோபம்கொண்ட புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பெரும் கருணையுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் உடனடியாக அரசியல் கைதிகளின் விடுதலை பிணை வளக்கு  விவகாரங்களை கையாளுதல் மற்றும் மறுவாழ்வு தொடர்பாக ஒரு அமைப்பை கட்டி எழுப்ப யாழ்க் களம்அமைக்க வேண்டும்.

 

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

எங்கயப்பா மற்ற அணியினர் ....? சும்மிட்கு தூசணத்தால் ஏசியதற்கு  விழுந்து விழுந்து கண்டிச்சார்கள் ....?  சந்தர்ப்பத்திற்கேற்றவாறு அமைதியாக இருப்பதாக சொன்னார்கள் ...இப்போது எங்கே இவர்கள் ...அதுசரி எங்கடை மக்கள் அவுசிட்கு சுற்றுலாபயணம் அடிக்கவும் ...டெல்லியில் போய் ரெஸ்ட் எடுக்கவும் தானே இவங்களை தேர்ந்தெடுத்தவைகள் ....அனந்தியிடம் கேள்வி கேட்டினம்....? இந்த சம் சும்களின் பயணங்களால் தமிழனுக்கு ஏதாவது நன்மை நடந்திருக்கிறதா .....உந்த கோதாரிகளை விட்டு விட்டு உருப்படியாக பிணை எடுப்பதையாவது செய்திருக்கலாம் ....சட்ட மேதைகளாம் ....லெவல்களும் வேறயாம் ....ஒ ஒருவேளை சும்மிண்ட லெவலுக்கு அவர் இதிலெல்லாம் தலையிடுவது கேவலமோ என்னவோ...?

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரையும்,

பாராளுமன்றம் அனுப்பியிருந்தால்.... இந்த நிலைமை, ஏற்பட்டு இருக்கவே..... இருக்காது.

7 minutes ago, தமிழ் சிறி said:

தாயக மக்கள்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரையும்,

பாராளுமன்றம் அனுப்பியிருந்தால்.... இந்த நிலைமை, ஏற்பட்டு இருக்கவே..... இருக்காது.

அதுதான் அனுப்பவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

 தேர்தலின் பின் அறைகூவல் விட்ட சேனாதிபதி, மாவை சேனாதிராசாதான் இதற்கு பதிலிறுக்கக் கடமைப்பட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தாயக மக்கள்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரையும்,

பாராளுமன்றம் அனுப்பியிருந்தால்.... இந்த நிலைமை, ஏற்பட்டு இருக்கவே..... இருக்காது.

சரியாகச் சொன்னீர்கள்! கஜேகஜே கோஸ்டியை பாராளுமன்றம் அனுப்பியிருந்தால் இந்த நிலைமை (கைதிகளின் விடுதலை) ஏற்பட்டு இருக்கவே.... இருக்காது! 

மகிந்தவை அகற்றி மைத்திரியை கொண்டுவர முற்பட்டபோது கஜே கோஸ்டி தமது எஜமானர்களின் கீழ்த்தரமான சிந்தனைக்கமைய தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரியது. அந்த அதிபர் தேர்தலில் மக்கள் புலன்பெயர் கோஸ்டிகளுக்கு முகத்தில் அறைந்தது போல் பதிலளித்து இருந்தனர். மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் கஜேகஜே கோஸ்டி வெட்கமில்லாமல் களமிறங்கியது. மக்கள் மீண்டும் புறக்கணித்தனர். 

நிச்சயமாக கஜே கோஸ்டியை மக்கள் ஆதரித்து இருந்தால் மகிந்தவே தொடர்ந்தும் அதிபராக இருந்திருப்பார். கஜே கோஸ்டியின் முதலாளிகளும் படம் காட்டி இருப்பர். 

அரசியல் கைதிகள் விடுதலைக்கு உண்மையாக உழைத்த, உழைத்துவரும் கூட்டமைப்பினரை பாராட்டாமல் இருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தாயக மக்கள்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரையும்,

பாராளுமன்றம் அனுப்பியிருந்தால்.... இந்த நிலைமை, ஏற்பட்டு இருக்கவே..... இருக்காது.

முதல்வர் விக்கியர் எங்கோ விட்டெறிந்த தொப்பியை தங்கட தலையில் கொழுவிக்கொண்டு எங்களுக்குத்தான் எறிந்தவர். ஆகவே பதவி விலகவேண்டும், என்று கொக்கரிக்கிறவர்கள், அந்தத் தொப்பி நமக்கல்ல, அவர் பிழையாய் எறிந்துவிட்டார். என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கவேண்டும். அல்லது தொப்பி நமக்குத்தான் அளவு என்று ஏற்றிருக்க வேண்டும். எதற்கும் துணிவில்லை. அவர் சொன்னதை உண்மை என நிருபித்துவிட்டீர்களே. அவரது பேச்சை உதாசீனம் செய்த  மக்களை ஏமாற்றி விட்டீர்களே. முதல்வரின் நாவை  நீங்கள் அடக்கினீர்கள். அவர் அடக்கினாலும், அடங்கி முடங்கவில்லை. தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதானிருக்கிறார்.
"நிறை குடம் தளம்பாது." குறை குடம் தளம்பி கொட்டிப்போச்சு.
கஜேந்திரக்குமார் அணியினர் மக்களில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் தங்களாலான உதவியை இந்த நேரத்தில்ச்செய்து தங்களின் நேர்மை தன்மையை மக்களுக்குக் காட்ட கிடைத்த தக்க சமயத்தை தவற விட்டு விட்டார்கள். "நமது முழங்கை நீண்டால்த்தான் மற்றவர் முன்கை நீளும்."யாரும் அரசியலுக்கு வந்துதான் சேவை செய்ய வேண்டுமென்பதில்லை. இலைமறை காயாய் எத்தனையோ நலன் விரும்பிகள் இருக்கிறார்கள். உ+ம் பிரித்தானிய பிரதமர் வந்தபோது எத்தனை நல்லுள்ளங்கள் ஒன்று திரண்டு பிரச்சனையை எடுத்துக் காட்டினார்கள். முல்லைத்தீவில் வெளிநாட்டுப் பிரதிநிதியொருவர் வந்தபோது அத்தனை இராணுவ அச்சுறுத்தலிலும் தங்கள் கருத்துக்களை தாங்களாகவே அவர்களிடம் தெளிவுபடுத்தினார்கள். ஏன் இந்த விக்கியர் அரசியலுக்கு வரமுன்னம் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளை கண்டித்தவர்தான். அதனாற்தான் சரியான ஆள் இல்லாமல் த. தே.கூ .தடுமாறியபோது புத்திஜீவிகள் அவரைச் சுட்டிக்காட்டின. அவரும் எந்த நிபந்தனயுமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் இன்றும் இட்ட பணியைச் செய்கிறார். பதவிக்கு வந்துதான் பணி செய்வேன் என்று அடம் பிடித்தால் இக்கரை மாட்டுக்கு அக்கரைபச்சை என்று மக்கள் ஏமாற வேண்டியது கடன். 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளும் ஏதோ நேற்று அல்லது அதற்கு முன்தினம் தான் இருக்கிறார்கள்போல் சிலர் கனவு கண்டு கொண்டு முதல்வருக்கு விளக்குப் பிடிக்க முயல்கின்றனர். இந்த அரசியல் கைத்திகள் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்றார்கள். அப்போது சிங்களத்தின் நீதிமன்றங்களில் நீதிபதியாகவும் ஈற்றில்உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த  முதல்வர் அய்யா இக் கைதிகளை விடுவிக்க செய்த முனைப்புக்கள் என்ன என்பதை யாரும் அறிவார்களா? அப்போது இப்படியான கைதிகள் இருந்தார்கள் என்பதை அய்யா அறியவில்லையா? அப்போது இருந்த அரசாங்களுடன் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி விடுதலைக்காகப் பேசியிருக்கலாமே முதல்வர் அவர்கள்!  தாம் முதல்வராகி மைத்திரி அரசு வரும்வரை அய்யா காத்து இருந்தாராம்! நல்ல வேடிக்கை! இப்போதும் கைதிகளின் விடுதலைக்காக சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்களின் முயற்சிகளில் அய்யா குளிர்காய்கின்றார். அதற்கு சிறிதரன் போன்ற வால்பிடிகள் கம்பளம் விரிக்கின்றார்கள். மைத்திரியுடன் அய்யா விடுதலை குறித்துப் பேசினாராம், ஏற்கனவே சம்பந்தனும் சுமந்திரனும் மைத்திரியுடன் பேசிவிட்டுத்தான் போயிருக்கிறார்கள் அவர்களுக்கு கொடுத்த பதிலைத்தான் அதிபர் இவருக்கும் கொடுத்திருக்கிறார். தமக்கு கைத்திகளை விடுவிக்க விருப்பம் இருக்கின்ற போதும் அரசியல் காரணங்களுக்காக முடியாதுள்ளது என அதிபர் மைத்திரி கூறியிருக்கிறார். அடுத்தவர் முயற்சியில் குளிர்காய நினைப்பது கேவலம். எல்லாப் புகழும் சுமந்திர சம்பந்தர்களுக்கே!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

தாயக மக்கள்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரையும்,

பாராளுமன்றம் அனுப்பியிருந்தால்.... இந்த நிலைமை, ஏற்பட்டு இருக்கவே..... இருக்காது.

நீதிமன்றத்தில் பிணை எடுப்பதற்கு உறவினர்களை வழிநடத்துவதற்கு பாராளுமன்றம் போய் பயனில்லை - நீதிமன்றம் போக வேண்டும். அதற்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். சட்டம் படித்த கஜேந்திரகுமார் எங்கே? மக்களில் அக்கறை இருந்திருந்தால் தான் படித்த சட்டத்தின் உதவியுடன் மக்களுக்கு உதவி இருக்கலாம். 

5 hours ago, Jude said:

நீதிமன்றத்தில் பிணை எடுப்பதற்கு உறவினர்களை வழிநடத்துவதற்கு பாராளுமன்றம் போய் பயனில்லை - நீதிமன்றம் போக வேண்டும். அதற்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். சட்டம் படித்த கஜேந்திரகுமார் எங்கே? மக்களில் அக்கறை இருந்திருந்தால் தான் படித்த சட்டத்தின் உதவியுடன் மக்களுக்கு உதவி இருக்கலாம். 

கஜேந்திரகுமார் சிறைக்கைதிகள் சார்பில் இதுவரையும் எந்த வழக்கிலும் ஆஜராகவில்லை என்பதை கடந்த தேர்தலின்போது ஒரு பத்திரிகை எழுதியிருந்தது. மாறாக சுமந்திரன் அரசியலுக்குள் நுழைய முன்னரே இவ்வாறான பல வழக்குகளில் ஆஜராகியிருந்தார். இதுவே மக்களிடத்தில் இவருக்கென்று ஒரு மதிப்பு வரவும் ஒரு காரணம். இதெல்லாம் எங்க புரியப்போகின்றது.

ஜனாதிபதிக்கு தண்டனைக் குறைப்பு செய்யும் அதிகாரமே மட்டுமே உள்ளது. ஆனால் இவர்கள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் இல்லை, விசாரணைக்கைதிகள் மட்டுமே. சட்டப்படி ஜனாதிபதி இவர்கள் மீது எவ்விதமான கருணையையும் காட்ட முடியாது. இதற்கு சட்டப்படி ஏதாவது செய்வதாயின் முதலில் பயங்கரவாதச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். 

அப்ப விக்கியருக்கு கொடுத்த உறுதிமொழி - அழுகிற சின்னப்பிள்ளைக்கு கொடுத்த சொக்காதான். சட்டம் தெரிந்த விக்கியருக்கே இப்படியென்றால், கைதிகள் பாடு திண்டாட்டம்தான். இவர்களை சட்டரீதியாக விடுதலை செய்வதில் மட்டுமே பிரச்சனை என்றில்லை, அதற்குள் அரசின் அரசியல் ரீதியான மறைமுகக் காரணமும் ஒன்றுள்ளது. அது என்ன? அதை எப்படி சரி செய்யலாம் என்பதில்தான் இவர்களது விடிவு தங்கியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.