Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கையில்லை – ஜனாதிபதி

Featured Replies

புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கையில்லை – ஜனாதிபதி

புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கையில்லை – ஜனாதிபதி

புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பி;க்கையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போது பௌத்த பிக்குகளாக துறவறம் பூணும் சிலர் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அமரபுர நிக்காயவின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய தெவுல்தென்ன ஞானீஸ்ஸர தேரரரின் 100ம் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஞானீஸ்ஸர தேரரர் போன்ற பௌத்த பிக்குகளையே பொது மக்கள் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்hளர்.

எவ்வாறனெனினும் சில புதிய பௌத்த பிக்குகள் மூத்த பௌத்த பிக்குகளின் வழித்தடங்களை பின்பற்றுவதில்லை என்றே தென்படுகின்றது என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127408/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவது தவறு என்று அன்று சோழ அரசன் சொன்னது, இன்றுதான் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காதில் விழுந்துள்ளதுபோலும்.th?id=OIP.M5d8a48e812cbc34d6d1fc4bae0b5a   th?id=OIP.M0eaf78e07d6ae25135653f4e8960c   th?id=OIP.M5290858bb2bf72f376067785c98e4

எனக்குத் தெரிந்து இலங்கையின் அதிபர் ஒருவர் பெளத்த பிக்குகளை பற்றி இந்தளவுக்காவது சொல்லி இருப்பது இதுதான் முதல் தடவை

  • கருத்துக்கள உறவுகள்

அரச இலவச சலுகைகளுக்காக, பிக்கு வேடம் போட்ட உந்த பம்மாத்து மொட்டைக் கோஸ்டிகள் பற்றி எங்களுக்கு முன்னமே தெரியும்.

உங்களுக்கு இப்பத் தானே விளங்குது. ?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

அரச இலவச சலுகைகளுக்காக, பிக்கு வேடம் போட்ட உந்த பம்மாத்து மொட்டைக் கோஸ்டிகள் பற்றி எங்களுக்கு முன்னமே தெரியும்.

உங்களுக்கு இப்பத் தானே விளங்குது. ?

இலங்கை அரசாங்கம் மிகுந்த இனவெறியைக் கொண்டிருக்கும் புத்த பிக்குகளின் செயல்பாட்டில் கட்டுண்டு கிடக்கிறது. பிக்குகளில் பலர் இனவெறி பிடித்தவர்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1959 ஆம் ஆண்டு ரோசுமெட் அரண்மனையில் கூமாரா என்ற புத்த பிக்கு, பிரதமமந்திரி சாலமன் பண்டார நாயக்காவை படுகொலை செய்கிறது. "இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குப் பல உரிமைகளை ஏன் வழங்கியது? அவ்வாறாக உரிமைகள் வழங்கியதை தான் விரும்பவில்லை. ஆகவேதான் நான் பிரதமரைக் கொலை செய்தேன்" என்று குறிப்பிடுகிறான். புத்தமதத்தையே பேணித் தழுவக்கூடிய புத்த பிக்குகள் இனவெறிப்பிடித்து அலைகிறார்கள் என்பதற்கு இதை விடச் சான்று ஒன்றும் தேவையில்லை.

நான் கட்டிவைத்த நாய்களை பிரதமர் திறந்துவிட்டார் அதுகள் அவரையே கடித்துவிட்டது என்று ஒரு சிங்கள அமைச்சர் தெரிவித்ததாக வந்த செய்தியொன்றை படித்த ஞாபகம் உள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

எனக்குத் தெரிந்து இலங்கையின் அதிபர் ஒருவர் பெளத்த பிக்குகளை பற்றி இந்தளவுக்காவது சொல்லி இருப்பது இதுதான் முதல் தடவை

19 hours ago, Nathamuni said:

அரச இலவச சலுகைகளுக்காக, பிக்கு வேடம் போட்ட உந்த பம்மாத்து மொட்டைக் கோஸ்டிகள் பற்றி எங்களுக்கு முன்னமே தெரியும்.

உங்களுக்கு இப்பத் தானே விளங்குது. ?

அதற்கு முக்கிய காரணம் அவர்கள் விரும்பி துறவி ஆவதில்லை ....
சிறுவயதில் கொண்டுபோய் விட படுகிறார்கள் ....
பின் இளவயதில் உணர்ச்சியோடு போராடி வெல்ல முடியாமல்
ஆசா பசங்களிடம் தோற்றுபோகிரார்கள்.
இன வெறியை மூத்த பிக்குகள் சமூக முன்னோடிகளிடம் பெற்றுகொள்கிரார்கள்.

நிழலி!
இது மட்டுமல்ல மைத்திரி பல விடயங்களில் மிகவும் உண்மையாகவும் எளிமையாகவும் இருக்கிறார்.

இது தற்போதைய அரசியல் அரங்கிற்கு பொருத்தம் அற்றது. என்றுதான் நான் நினைக்கிறேன். எளிதில் தூக்கி ஏறிய பட்டுவிடலாம்.
அல்லது தலைகீழாக ...... இலங்கை ஏற்றம் காணலாம்.

எதுக்கும் காசு வேணும்  ..... காசு தாரவனின் கதைக்கு யாருமே காது கொடுத்தே ஆகவேண்டும். இது எல்லா 3தர நாடுகளுக்கும் உள்ளே ஒரே நிலை

பண்டாவின் கொலைக்கும் இனபிரச்சனைக்கும் தமிழர்கள் உரிமைகளுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை .எங்கிருந்துதான்  இப்படி பிழையான தரவுகளை எடுகின்றார்களோ தெரியவில்லை .

தனிப்பட்ட பல பிரச்சனைகளின்  முடிவுதான் இந்த கொலை .விமலா விஜயவர்த்தன ,புத்தரகித்ததேரோ தான் அதன் நாயகர்கள் 

20 hours ago, நிழலி said:

எனக்குத் தெரிந்து இலங்கையின் அதிபர் ஒருவர் பெளத்த பிக்குகளை பற்றி இந்தளவுக்காவது சொல்லி இருப்பது இதுதான் முதல் தடவை

சேர்.ஜோன்.கொத்தலாவ இவர்களை காலி முகத்திடலில் நிர்வாணமாக வைத்து சவுக்கால் அடிக்க வேண்டுமென்று கூறியதாக சிறு வயதில் அப்பா சொல்வார் - உண்மையா என்பது தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, arjun said:

பண்டாவின் கொலைக்கும் இனபிரச்சனைக்கும் தமிழர்கள் உரிமைகளுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை .எங்கிருந்துதான்  இப்படி பிழையான தரவுகளை எடுகின்றார்களோ தெரியவில்லை .

தனிப்பட்ட பல பிரச்சனைகளின்  முடிவுதான் இந்த கொலை .விமலா விஜயவர்த்தன ,புத்தரகித்ததேரோ தான் அதன் நாயகர்கள் 

வேறொரு இடத்தை சுட்டிக்காட்டாமல்/மறைமுக காரணங்களை நீட்டாமல் பண்டாவின் கொலைக்கான நேரடி காரணத்தை ஆதாரத்தோடு இங்கே காட்டுங்கள் பார்க்கலாம்.

1 minute ago, குமாரசாமி said:

வேறொரு இடத்தை சுட்டிக்காட்டாமல்/மறைமுக காரணங்களை நீட்டாமல் பண்டாவின் கொலைக்கான நேரடி காரணத்தை ஆதாரத்தோடு இங்கே காட்டுங்கள் பார்க்கலாம்.

ஒரு தொடர் எழுதும் ஆசையிருக்கு எப்ப என்றுதான் கேள்வி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, arjun said:

ஒரு தொடர் எழுதும் ஆசையிருக்கு எப்ப என்றுதான் கேள்வி .

எதிர்பார்த்த பதில். ஏனென்றால் அனுபவம் அப்படி :cool:

ஒரு கருத்திற்கு பதில் எழுதுவதற்கு குத்துவிளக்கு நிறைகும்பம் ஏதாவது வேண்டுமா? :grin: 

அரை குறையில் எனக்கு திருப்தி வராது .ஆதாரத்துடன் முழு விருந்து தான் எப்போதும் .

எனக்கு பதில் சொல்லாமல் ஓடியவர்கள் தான் அதிகம் .நான் அப்படி ஒன்றிற்கும் இதுவரை ஓடவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்த விடயத்தை எழுதுவதற்கும்.....தெரியாத விடயத்தை எழுதுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. அது நன்றாகவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

பண்டாவின் கொலைக்கும் இனபிரச்சனைக்கும் தமிழர்கள் உரிமைகளுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை .எங்கிருந்துதான்  இப்படி பிழையான தரவுகளை எடுகின்றார்களோ தெரியவில்லை .

தனிப்பட்ட பல பிரச்சனைகளின்  முடிவுதான் இந்த கொலை .விமலா விஜயவர்த்தன ,புத்தரகித்ததேரோ தான் அதன் நாயகர்கள் 

1. Mapitigama Buddharakkitha Thero 2. Hemachandra Piyasena Jayawardene 3. Pallihakarage Anura de Silva 4. Talduwe Somarama Thero 5. Weerasooriya Arachchige Newton Perera 6. Vimala Wijewardene 7. Amerasinghe Arachchige Carolis Amerasinghe - See more at: http://www.dailymirror.lk/53002/the-incident-that-rocked-ceylon-55-years-ago-the-assassination-of-prime-minister-swrd-bandaranaike#sthash.wdboZo3n.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு நாயக்கர் வம்சம்.... பதவிக்காக பெளத்தராகி, கிறிஸ்தவராகி, மீண்டும் பெளத்தராக நடித்து...

நடித்தே நாட்டை நாசமாக்கிய, பண்டா, சிறிமா, சந்திரிகா, ஜே .ஆர், மகிந்தா.

தூய பெளத்தர்கள்: தகனாயகா, விஜயதுங்கா, பிரேமதாச

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ் பண்டாரநாய‌க்கா காலத்தில் இருந்தவர் அவ‌ர் எழுதினால் சரியாதான் இருக்கும்.....சிங்களம் மட்டும் என்ற சட்டத்தையும் பண்டார நாயக்கா அறிமுகப்படுத்த‌வில்லை என்று ஜெயராஜ் எழுதினால் அதையும் நாம் நம்ப வேண்டும்

  • தொடங்கியவர்
9 minutes ago, putthan said:

ஜெயராஜ் பண்டாரநாய‌க்கா காலத்தில் இருந்தவர் அவ‌ர் எழுதினால் சரியாதான் இருக்கும்.....சிங்களம் மட்டும் என்ற சட்டத்தையும் பண்டார நாயக்கா அறிமுகப்படுத்த‌வில்லை என்று ஜெயராஜ் எழுதினால் அதையும் நாம் நம்ப வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
On 1.1.2016 at 6:05 PM, arjun said:

பண்டாவின் கொலைக்கும் இனபிரச்சனைக்கும் தமிழர்கள் உரிமைகளுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை .எங்கிருந்துதான்  இப்படி பிழையான தரவுகளை எடுகின்றார்களோ தெரியவில்லை .

தனிப்பட்ட பல பிரச்சனைகளின்  முடிவுதான் இந்த கொலை .விமலா விஜயவர்த்தன ,புத்தரகித்ததேரோ தான் அதன் நாயகர்கள் 

1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ் மொழி விசேட சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சகித்துக் கொள்ள முடியாத பௌத்த பிக்கு ஒருவரினால் 1959 செப்டம்பர் 29ஆம் திகதி பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்
On 02/01/2016 at 1:02 AM, arjun said:

அரை குறையில் எனக்கு திருப்தி வராது .ஆதாரத்துடன் முழு விருந்து தான் எப்போதும் .

எனக்கு பதில் சொல்லாமல் ஓடியவர்கள் தான் அதிகம் .நான் அப்படி ஒன்றிற்கும் இதுவரை ஓடவில்லை .

நானும் ,நீங்கள் வாமதேவன் கதையை எழுதுவீர்கள்.புகுந்து விளையாடலாம் எண்டு காத்திருக்கிறேன்.ஒரு கதையும் சொல்லுற ஐடியா இல்லியா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

நானும் ,நீங்கள் வாமதேவன் கதையை எழுதுவீர்கள்.புகுந்து விளையாடலாம் எண்டு காத்திருக்கிறேன்.ஒரு கதையும் சொல்லுற ஐடியா இல்லியா

கொஞ்சம் பொறுங்கோ நந்தன் அவர்களே! அப்புக்காத்துமாருக்கு நீதவான் எழுதும் தீர்ப்பு வெளிவந்தபின்பு எல்லாமும் வெளிவரும். :grin:

4 hours ago, Paanch said:

1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ் மொழி விசேட சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சகித்துக் கொள்ள முடியாத பௌத்த பிக்கு ஒருவரினால் 1959 செப்டம்பர் 29ஆம் திகதி பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

விளங்கின மாதிரித்தான் .இங்கு எல்லோரும் விக்கிபிடியா கோஸ்டிகள் போலிருக்கு .

வாமனை பற்றி எழுத அவர் என்ன சரித்திர புருசனா ? எனக்கு தெரியும் என்று சொன்னேன் .

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, arjun said:

விளங்கின மாதிரித்தான் .இங்கு எல்லோரும் விக்கிபிடியா கோஸ்டிகள் போலிருக்கு .

வாமனை பற்றி எழுத அவர் என்ன சரித்திர புருசனா ? எனக்கு தெரியும் என்று சொன்னேன் .

பொய்மை நிறைந்த உலகில் நாம் மட்டும் உண்மை பேசி ஏமாளியாக நிற்க முடியாது என்ற உண்மையை தங்கள் பின்னூட்டம் இடித்துரைக்கிறது உறவே. :) 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

விளங்கின மாதிரித்தான் .இங்கு எல்லோரும் விக்கிபிடியா கோஸ்டிகள் போலிருக்கு .

வாமனை பற்றி எழுத அவர் என்ன சரித்திர புருசனா ? எனக்கு தெரியும் என்று சொன்னேன் .

அவர் சரித்திர புருசன் அல்ல புளட்டின் ஆதர்ச புருசன்.நீங்கள் கட்டாயம் அவரைப்பற்றி எழுதனும் எழுதுவதாகத்தான் திண்ணையில் எனக்கு சொன்னீர்கள்.வேலிக்கு ஓணான் போல் எனக்கு நிழலி இருக்கிறார்

அப்படி உங்களுக்கு ஒரு தேவை இருந்தால் எனக்கு தெரிந்தவற்றை எழுதுகின்றேன் .

31 minutes ago, Paanch said:

பொய்மை நிறைந்த உலகில் நாம் மட்டும் உண்மை பேசி ஏமாளியாக நிற்க முடியாது என்ற உண்மையை தங்கள் பின்னூட்டம் இடித்துரைக்கிறது உறவே. :) 

பண்டா கொலை பற்றி சற்று விபரம் தெரிந்தவர்களுடன் கதைத்து பார்க்கவும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.