Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை! முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை உரித்துக்களை, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக்காட்டாது என்னால் இருக்க முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பிரதம மந்திரியின அமைச்சு, இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சு, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு இணைந்து நடாத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 2016ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் அன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் உரை

கௌரவ பிரதம மந்திரி அவர்களே, வெளிநாட்டுப் பொதுநலவாய அலுவலகங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் அவர்களே, கௌரவ சுவாமிநாதன் அமைச்சர் அவர்களே, வடக்கு மாகாண ஆளுநர் அவர்களே, கௌரவ விஜயகலா மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சர் அவர்களே, சமயத் தலைவர்களே, இங்கே வந்திருக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களே, உயர் அதிகாரிகளே, எனதருமைச் சகோதர சகோதரிகளே,

அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சகல சமயத்தவரின் பண்டிகைகளையும் அச்சமயத்தினர் வாழும் இடங்களில் நாடு பூராகவும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக இன்றைய இந்த நிகழ்வு நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.

சர்வ மதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செயலாளராக நான் இருந்தேன். பிரதமர் டட்லி சேனாநாயக பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் சம்மேளனம் இதையே செய்தது. மற்றவர்களின் மத நிகழ்வுகளில் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

அப்போதைய மல்வத்த மகா நாயக்க தேரோவை யாழ்ப்பாணம் அழைத்து வந்து நயினாதீவுக்கு அழைத்துச் சென்றோம். அவர் இந்துக் கோயிலையுந் தரிசித்து புத்த விகாரைக்கும் விஜயம் செய்தார். இப்போது அந்த சம்மேளனத்தின் உறுப்பினர்களில் உயிரோடு இருப்பவர் நான் மட்டுந்தான் என்று நினைக்கின்றேன்.

அதன் பின்னர் நிலை மாறிவிட்டது. இன்றைய நிலையை நாம் எடுத்துப் பார்த்தால் எமது வடமாகாணம் அதன் அவலங்களிலும் ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீங்கப்படவில்லை,

தனியார் காணிகளும் மக்கள் நலம் சார்ந்த கட்டிடங்களும் விடுவிக்கப்படவில்லை, காணமற்போனார் விபரங்களை அவர்களின் சுற்றத்தார் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். முன்னால் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை, மாகாணத்தின் அலுவல்களில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு குறைந்தபாடில்லை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படவில்லை, மீனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை, விதவைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவல நிலையைப் பட்டியல் இட்டுக் கூறிக் கொண்டே போக முடியும்.

எம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எனினும் மூன்று விடயங்கள் இன்று மிக முக்கிய நிலையைப் பெற்றுள்ளன.

ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் மாற்றம் ஏற்படுத்தல், தமிழ் மக்களின் பிரச்சினையை ஐ.நா. உரிமை சாசனங்களின் அடிப்படையில் நிரந்தரமாகத் தீர்த்து வைத்தல், போர்க்குற்ற விசாரணைகளை 2015 செப்ரெம்பர் மாத ஐ.நா. இணைந்த பிரேரணையின் அடிப்படையில் முறையாக நடத்துவித்து நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியனவையே அவை.

இவற்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது எமக்குத் தெரிந்ததே. ஆனால் எவ்வாறான அரசியல் மாற்றம் நடைபெறும், எவ்வாறான தீர்வு எமக்குக் கிடைக்கும், போர்க் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவார்களா என்பதில் எமக்கு மயக்கநிலையே இருந்து வருகின்றது.

தென்ஆபிரிக்காவில் இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் தீர்க்க வேண்டியிருந்த போது அவற்றை அரசியல் ரீதியாகத் தீர்த்து விட்டே “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை” அமைத்தார்கள். இங்கு 67 வருடகால பிரச்சினைகள் தொடர்ந்திருக்கும் போதே இப்பேர்ப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்.

மக்களின் மனமாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்கின்றோம். ஆனால் உண்மையில் எமது மக்களில் பெரும்பான்மையினர் தைப்பொங்கல் நாளில் விழாக் கொண்டாடும் மனோநிலையில் இல்லை என்பதே யதார்த்தம்.

எடுக்கக் கூடிய பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்கள் எடுக்காது இருப்பதால் இந்த மனோநிலைக்குள் நாங்கள் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றோம். அவற்றை எடுக்க எமது மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நிலையை கொழும்பில் இருந்து உணர முடியாது.

என்னைப் போல் கொழும்பில் பிறந்து வாழ்ந்து விட்டு இங்கு வந்து சாதாரண மக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் போதுதான் அவர்களின் அவலங்கள், ஆற்றாமைகள், சிந்தனைகள், சினங்கள் யாவையும் புரிவன.

என்னை என் கட்சியின் ஒரு பகுதியினரும் ஊடகங்களூடாக மூளை சலவை செய்யப்பட்டுள்ள வட,தென்னிலங்கையின் ஒரு பகுதியினரும் ஒரு தீவிர போக்குடையவர் என்கின்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் தீவிரவாதியல்ல. எம் மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் ஒருவன் நான்.

ஐம்பத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டத்தரணியாகப் பதவியேற்ற நான் உச்ச நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிய பின் இன்று எமது மக்களின் வழக்கைக் கையேற்றிருக்கின்றேன். தேர்தல் காலங்களில் தான் 2013ல் எனது வழக்குக் கோப்பு எனக்குத் தரப்பட்டது. அது தான் எமது தேர்தல் விஞ்ஞாபனம். அதன் அடிப்படையில் தான் நான் என் வழக்கைக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றேன்.

எமது மக்களின் மனோ நிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம், எமது 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னெடுக்கும் வண்ணம் எனது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தேர்தலில் ஒன்றைக் கூறி நடைமுறையில் இன்னொன்றிற்கு உடன்படுவதாக இருந்தால் நாங்கள் மக்களின் புதியதொரு ஆணையைப் பெற வேண்டும்.

அவ்வாறு பெறாதவிடத்து என்னை ஆற்றுப்படுத்திய அந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே எனது நடவடிக்கைகளைக் கொண்டு போக வேண்டும். அதையே நான் செய்து கொண்டும் வருகின்றேன்.

எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை உரித்துக்களை, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக்காட்டாது என்னால் இருக்க முடியாது.

67 வருடங்களாக நாங்கள் எமது மக்களின் உரிமைகளை புறக்கணித்து வந்துள்ளோம். பேச்சுவார்த்தை, உடன்படிக்கைகளில் தருவதாகக் கூறியவை எவையும் இன்னமுந் தந்தபாடில்லை. தந்திருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

எனினும் எமது மத ரீதியான ஐக்கியமும் ஒன்றிணைப்பும் மென்மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வர நான் வாழ்த்துகின்றேன். அதே நேரத்தில் எமது மக்களின் ஆழ வேரூன்றியிருக்கும் பிரச்சினைகளை உரிமைகளின் அடிப்படையில் தீர்க்க யாவரும் முன்வர வேண்டும் என்று கூறி எனக்குப் பேசச் சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி கூறி அடுத்து ஆங்கிலத்தில் சில வார்த்தைகளைக் கூறுகின்றேன்.

http://www.tamilwin.com/show-RUmuyBSZSWir2C.html

  • Replies 60
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முகத்துக்கு அஞ்சி உண்மைகளை மறைக்காமல் வெளிநாட்டுத்தூதுவர்கள் மத்தியில் சிங்கள அரசின் முகத்திரையக் கிழித்திருக்கிறார்.தீர்க்கவேண்டிய பிரச்சனைகளத்தீர்க்காது தேசியப் பொங்கல் என்ற கவர்சிகரமான வார்த்தைகளால் மட்டும் நல்லெண்ணத்தைக் கட்டி எழுப்ப முடியாது. என்பதை ரணிலுக்கு மட்டுமல்ல சர்வதேச தூதுவர்களுக்கும் உறைக்கும் படி சொல்லியிருக்கிறார்.சம்பந்தர் போல சிங்கள அரசுக்கு வெள்ளை அடிக்க முயலவில்லை. அதுமட்டுமல்ல சம்சும் கும்பலிலின் கருத்தை நேற்று வாந்தி எடுத்த ஒருசில மாகாணசபை உறுப்பினர்களுக்கும் சாட்டை அடி கொடுத்துள்ளார். இந்த அடி சம்சும்மாவை ரணில் சர்வதேசம் உட்பட எல்லோர் முதுகிலும் விழுந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழரசு said:

எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை

இதே சிந்தனையைத்தான் தலைவர் பிரபாகரனும் கொண்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேர் வெளிநாட்டு ராஜதந்திரிகளை கூப்பிட்டு வைச்சு ஹாட்டல் றூமில மூடிய அறைக்குள் பேசிட்டு.. படம் பிடிச்சு போட்டிட்டு.. எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருக்கு என்று சொல்ல வைப்பதிலும் பார்க்க.. விக்கி ஐயா எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு அந்தப் பொதுமேடையிலேயே மக்களின் முன்னாலே அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலித்திருப்பது மிக மிக மிக வரவேற்கத்தக்கது. வெளிநாட்டு ராஜதந்திரிகள் சிந்திக்க வேண்டும்.. இந்த வேறுபாடுகள் குறித்தும்... முடிவுகள் எடுக்கும் போது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வந்து மக்களுக்கு ஏதோ செய்து கொண்டு இருக்கின்றோம் என பூச்சுத்துபவர்களின் முன்

தேவையையும்

நிலமையையும்

தீர்வின் அடிப்படைஅத்திவாரத்தையும் 

எடுத்து சொன்ன ஐயாவுக்கு நன்றிகள்

இங்கு தாறுமாறாக ஐயா பற்றி எழுதுபவர்கள் இதை வாசிக்கணும்...

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவின் மேலுள்ள நம்பிக்கை இன்னும் கூடிக்கொண்டே செல்கின்றது. மக்கள் சரியான தலைமையை உணரும் காலம் வந்துவிட்டது

தமது வாழ்வையே அரசியலுக்கு கொடுத்தவர்கள் பலர் கூட்டமைப்பில் இருக்கினம் 

இவ்வளவு காலமும் அரச உயர் பதவியில் இருந்து விட்டு வந்து ஒரு  கோலை அடித்து பார்ப்பம் என்று நினைக்கின்றார்.

பேய்காட்டும் தமிழர்களை மக்கள் அடையாளம் கண்டு கனகாலம் ஆகிவிட்டது என்று விக்கியருக்கு விளங்கவில்லை இப்பவும் விளங்காமல்  இருக்கும்  நாலு விசில் அடித்தால் காணும் என்று நினைக்கின்றாரோ தெரியவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசில் எண்டவுடனை எனக்கு தமிழர்விடுதலைக்கூட்டணியும் அதிலை இருந்த தலைவர்களையும் தான் பக்கெண்டு ஞாபகத்துக்கு வருது. நடக்காத விசயத்துக்கும் வீரதீர வசனங்களை விருமாண்டி ரேஞ்சிலை வெளுத்துவாங்கி பாராளுமன்றம் போய் பின்கதவு அலுவல் பாத்தவையள்.tw_tounge_wink:

புதிய கோணத்தில் அரசியல் பயணித்தால் அதை விமர்சிக்காமல் அமைதியாக இருக்கலாம்.:cool:

விக்னேஸ்வரன் அவர்களின் பேச்சு நியாயமானது.

எது எமக்கான தேவை அதை எப்படிப் பெறுவது? என்பதுதான் யதார்த்த நிலை.

இந்த விடயத்தில் தமிழர் உரிமைகளைப் பேசும் எவரும் அதனைப் பெறும் வழிகள் பற்றிய தெளிவின்மையுடையவர்களாக இருக்கின்றனர்.

புதிய அரசியல் யாப்புத் திருத்தத்தின் மூலம் பெறக் கூடிய உரிமைகள்தான் இப்போதய தமிழரின் எதிர்பார்ப்பு.

இச் சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரன் அவர்களது உரையில் இந்த விடயம் தொனிக்கிறது.

இந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே ஒரு வடிகால் பாராளுமன்றந்தான்.

அதைச் செய்யபவர்களுக்குப் பக்கத்தில் நிற்கப் போகின்றவர்கள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான்.

தமிழர் அரசியல் இதுவரை தனக்கான அரசியல் உரிமைத் தேடலின் நகர்வில் இதுவரை மாகாணசபை என்ற அமைப்பை அடைந்துள்ளது.

இது இலங்கைக்கான பொது நிர்வாக அலகு. இனிமேலும் அப்படிப்பட்ட அடிப்படையில்தான் அதிகாரங்கள் பிரிக்கப்படும்.

தமிழர் விடுதலைப் போரில் உச்சத்தைத் தொட்ட விடுதலைப்புலிகளால் நகர்த்த முடியாத நகர்வை

சாதாரண அரசியல் வாதிகளால் பேச முடியுமே தவிர செய்ய முடியுமா?

சில பேருக்கு எல்லாத்துக்கும் எதிர் கருது எழுதுவது வேலையாய்போச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, arjun said:

தமது வாழ்வையே அரசியலுக்கு கொடுத்தவர்கள் பலர் கூட்டமைப்பில் இருக்கினம் 

இவ்வளவு காலமும் அரச உயர் பதவியில் இருந்து விட்டு வந்து ஒரு  கோலை அடித்து பார்ப்பம் என்று நினைக்கின்றார்.

பேய்காட்டும் தமிழர்களை மக்கள் அடையாளம் கண்டு கனகாலம் ஆகிவிட்டது என்று விக்கியருக்கு விளங்கவில்லை இப்பவும் விளங்காமல்  இருக்கும்  நாலு விசில் அடித்தால் காணும் என்று நினைக்கின்றாரோ தெரியவில்லை .

அண்ணே நீங்க மறந்து போய் சுமந்திரனை காட்டி குடுக்கிறீங்க

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக்காட்டாது என்னால் இருக்க முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

."சுட்டு" காட்டியே புரியாத அர‌சியல்வாதிகளிடம்  நீங்கள் சுட்டிக்காட்டி என்னத்தை புரியபோகுது

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

அண்ணே நீங்க மறந்து போய் சுமந்திரனை காட்டி குடுக்கிறீங்க

எதிரிக்கு எதிரி நண்பன் என்று மட்டும் சிந்தித்தால்

இப்படி சில இடங்களில் முறுகிவிடும்....

1 hour ago, நந்தன் said:

அண்ணே நீங்க மறந்து போய் சுமந்திரனை காட்டி குடுக்கிறீங்க

சுமந்திரன் இலங்கை அரசில் ஏதும் பதவி வகுத்ததாக நான் அறியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, arjun said:

சுமந்திரன் இலங்கை அரசில் ஏதும் பதவி வகுத்ததாக நான் அறியவில்லை .

அவர் போராட்ட அரசியலில் மட்டும் ரொம்ப கிழிச்சிட்டாராக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

அவர் போராட்ட அரசியலில் மட்டும் ரொம்ப கிழிச்சிட்டாராக்கும்

சிறீலங்கா நீதிபதியாக இப்பொழுது பதவி கிடைத்தால்

சுமந்திரன் அதை கணக்கே எடுக்கமாட்டார்

நம்பிட்டம்...

இப்படி நடந்தால் என்ற கற்பனையில் வாழ்ந்தவர்கள் இன்றும் அதே மாதிரியே சிந்திகின்றார்கள் .

சுமந்திரன் போராட போனவர் என்று எவரும் எழுதவில்லை .விக்கியர் தலைமை நீதிபதியாக இருந்தவர் இதுதான் உண்மை .

அப்படி நடந்தால் இப்படி இருந்தால் என்று எல்லாம் எழுதுவது லூசுத்தனம் .

  • கருத்துக்கள உறவுகள்
Quote

I am not sure this P0nnaya going to fall into Para Demala's trap. If he falls there would be another riot. That is what Wikiya Wants.

http://www.lankanewspapers.com/news/2016/1/96739_2_image_headline.html?CH11452956187538EN1

இது ஒரு சிங்கள இனவெறியரின் கருத்து.. அதாவது விக்கியரின் பொறிக்குள் ரணில் விழுந்தால் இன்னொரு கலவரம் வெடிக்குமாம்.. tw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, arjun said:

தமது வாழ்வையே அரசியலுக்கு கொடுத்தவர்கள் பலர் கூட்டமைப்பில் இருக்கினம் 

இவ்வளவு காலமும் அரச உயர் பதவியில் இருந்து விட்டு வந்து ஒரு  கோலை அடித்து பார்ப்பம் என்று நினைக்கின்றார்.

பேய்காட்டும் தமிழர்களை மக்கள் அடையாளம் கண்டு கனகாலம் ஆகிவிட்டது என்று விக்கியருக்கு விளங்கவில்லை இப்பவும் விளங்காமல்  இருக்கும்  நாலு விசில் அடித்தால் காணும் என்று நினைக்கின்றாரோ தெரியவில்லை .

சித்தார்த்தன் அடிச்சதிலும் பார்க்கவோ.

  • கருத்துக்கள உறவுகள்
On January 15, 2016 at 9:49 AM, குமாரசாமி said:

இதே சிந்தனையைத்தான் தலைவர் பிரபாகரனும் கொண்டிருந்தார்.

உண்மைதான் . அப்ப தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தினது புத்தபெருமான் மீதும் பிக்குமார் மீதும் இருந்த எதிர்ப்பினாலும் கோபத்தினாலுமாகும்! மத வழிபாட்டுத் தளங்களுக்கு ஒருபோதும் மக்கள் வருவதில்லை. 

கீழ்வரும் இணைப்பில் 1985 இல் அப்பாவி சிங்கள மக்கள் மீது கோபம் இல்லாமல் அன்புடன் நடாத்திய அன்புடன் கூடிய தாக்குதல்.

 

சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் மீது எதிர்ப்புடனும் கோபத்துடனுமே எப்போதும் நடந்துகொண்டன.  அதனால்தான் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களை தெரிந்தும் திட்டமிட்டும் தாக்கியது. 

(நிச்சயமாக இந்த உண்மை நிர்வாகத்தால் நீக்கப்படும். ஆனால் உண்மைகளை என்றும் மூடிமறைக்க முடியாது எனபது அவர்களுக்குப் புரியாது)

வடிவேலுவை ஒரு படத்தில் முத்துகளை" செத்து செத்து விளையாடுவம் வாங்கோ" என்பார் 

அப்படிதான் இங்கு பலரின் போர் பற்றிய அனுபவம் .

Edited by arjun
எழுத்துபிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nunavilan said:

சித்தார்த்தன் அடிச்சதிலும் பார்க்கவோ.

உண்மையிலையே கெக்கெட்டம் விட்டு சிரிச்சன். happy01941.gif

On 16. Januar 2016 at 0:36 PM, வாலி said:

உண்மைதான் . அப்ப தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தினது புத்தபெருமான் மீதும் பிக்குமார் மீதும் இருந்த எதிர்ப்பினாலும் கோபத்தினாலுமாகும்! மத வழிபாட்டுத் தளங்களுக்கு ஒருபோதும் மக்கள் வருவதில்லை. 

கீழ்வரும் இணைப்பில் 1985 இல் அப்பாவி சிங்கள மக்கள் மீது கோபம் இல்லாமல் அன்புடன் நடாத்திய அன்புடன் கூடிய தாக்குதல்.

 

சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் மீது எதிர்ப்புடனும் கோபத்துடனுமே எப்போதும் நடந்துகொண்டன.  அதனால்தான் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களை தெரிந்தும் திட்டமிட்டும் தாக்கியது. 

(நிச்சயமாக இந்த உண்மை நிர்வாகத்தால் நீக்கப்படும். ஆனால் உண்மைகளை என்றும் மூடிமறைக்க முடியாது எனபது அவர்களுக்குப் புரியாது)

வாலி இணைத்த திரைப்படக் காட்சி சிறந்த முறையில் அந்த திரைப்பட இயக்குனரால் படமாக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு. தத்துவமான காட்சியமைப்பு. திரைப்படத்தைத் எடுத்த கலைஞர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, trinco said:

வாலி இணைத்த திரைப்படக் காட்சி சிறந்த முறையில் அந்த திரைப்பட இயக்குனரால் படமாக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு. தத்துவமான காட்சியமைப்பு. திரைப்படத்தைத் எடுத்த கலைஞர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். 

திரைப்படத்தைத் எடுத்த கலைஞர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். 

5 minutes ago, வாலி said:

திரைப்படத்தைத் எடுத்த கலைஞர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். 

எழுத்துகள் பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி வாலி. தானியங்கி சொல் திருத்தி செயலி அடிக்கடி கோளாறு பண்ணுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.