Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிடவுள்ளோம்: சிறிதரன்

Featured Replies

தமிழீழத்தை கைவிடவுள்ளோம்: சிறிதரன்
 

article_1454344268-srithara.jpgஎம்.றொசாந்த்

தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிடவில்லை. தமிழீழ கோரிக்கைக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைத்து போட்டியிட்டவர்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.

கிடைக்கப்போகும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலுள்ள அரசியலமைப்புக்களை போன்றதொரு அரசியலமைப்பை இலங்கையில் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை ஆதரிக்க வேண்டும்.  தமிழீழம் பற்றி பேசி, புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/165158/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%B4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-#sthash.7gEFqcBl.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம். தமிழீழத்தை நீங்களே தான் முன்னிறுத்தினீர்கள். அதையிட்டு இளைஞர்களை யுவதிகளை பலியிட்டீர்கள். இப்ப அந்த அலுவல் முடிஞ்சுது கைவிடுறியள். சிங்கள மக்கள் எப்ப தான் நீங்கள் தமிழீழத்தை உச்சரிக்கேக்க வரவேற்றவை கண்டியளோ. இப்ப அவைக்கு பயந்து அதைக் கைவிடுவதாய் அவிக்க.

தமிழீழம் என்பது.. எமது வரலாற்று இருப்பு. அதனை நீங்கள் அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதமாக்கிக் கொள்ளலாம். ஆனால் வரலாறும் மக்களும் கைவிட மாட்டார்கள்.

மக்கள் முன் தமிழீழத்தை கைவிட்டிட்டம் என்று.. கூட்டமைப்பை விட்டு வெளியேறி நின்று உவர் சிறீதரன் தேர்தலை சந்திச்சிட்டு வரட்டும் முதலில்.. மக்கள் எதை விரும்பினம் என்பதை அது சொல்லும்.

50,000 மாவீரர்களின் தியாகங்களை மக்கள் குழிதோண்டிப் புதைக்கமாட்டார்கள் என்பது நிஜம். ஆனால் அரசியல்வாதிகள் நீங்கள் புதைப்பீர்கள் என்பது நன்கு தெரிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்தப் புத்தியீவிகள்???சம்பந்தரும் ,சுமத்திரனும்தானே?சிறிதரன் சம்பந்தருக்கு நல்லா வால்பிடிக்கிறார். அவர் மனம் கோணாதபடி நடக்க வேணும் என்று நினைக்கிறார்.ஆனால் இந்தத் தமிழீழக் கோரிக்கையை புலிகள் முதலில் முன் வைக்கவில்லை. அந்தக் கோரிக்கையை வைத்துத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது.தந்தை செல்வா,ஜீஜீ பொன்னம்பலம்,திருச்செல்வம் ,அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற சட்ட மேதைகள் எல்லாம் புத்தியீவிகள் இல்லையோ???அப்ப இனி என்னுடை தலைவர் பிரபாகரன் இனிச் சொல்ல மாட்டியள் ன்று அடிச்சுச் சத்தியம் செய்யுங்கோ. சம்பந்தர்தான் உங்கள் தேசியத் தலைவர் என்று சொல்லுங்கோ. தேர்தல் nநுரத்தில் மீண்டும் பிரபாகரன் ,புலிகள் என்று கோசம் எழுப்பக் கூடாது.

இப்பொழுது இவருக்கும் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் தான் என்ற ஆசை வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கப்படுகின்ற ஒரு இனத்தின் பரிணாம வளர்ச்சியின் விளைவே 'தமிழீழக் கோரிக்கை' ஆகும்!

யாழ் களத்தின் மாற்றுக்கருத்தாளர்கள் கூட எனது கருத்துடன் உடன்படுவார்கள் என்று எண்ணுகின்றேன்!

தமிழீழக் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை!

அதை அடையும் வழிமுறைகளில் தான் கருத்து வேறுபாடுகள், விமரிசனங்கள் உண்டு!

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும், அபிலாசைகளும் ஓரளவுக்காவது தீர்க்கப்படாதவிடத்தில், தமிழீழம் என்பது தவிர்க்க முடியாத தேவை!

உதாரணமாக 'வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, கனேடிய பிரஞ்சு மொழி பேசும் மாநிலங்கள்' போன்றவை ஒரு காலத்தில் பிரிந்தே செல்லும்!

இந்தியாவின் மாநிலங்களும் பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும்!

அதனால் தான் 'பரிணாமம்' என்ற வார்த்தையை உபயோகித்தேன்!

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த ஒரு போராட்டத்தின் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும், அநியாயங்களும், மரணங்களும், அழிவுகளும், இடம் பெயர்வுகளும், ஆக்கிரமிப்புக்களும்.. ஒரே இரவில் மறக்கப் பட்டு விட மாட்டாது!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் கூட கலந்து கொண்ட சில பேச்சு வார்த்தைகளில் "தனி தமிழீழம் " என்ற கோரிக்கையிலிருந்து  சற்றே இறங்கி வேறு பல தீர்வு முறைகளையும் ஆராய்ந்தார்கள் என்பதாகவே என் சிற்றறிவு சொல்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, Sasi_varnam said:

புலிகளும் கூட கலந்து கொண்ட சில பேச்சு வார்த்தைகளில் "தனி தமிழீழம் " என்ற கோரிக்கையிலிருந்து  சற்றே இறங்கி வேறு பல தீர்வு முறைகளையும் ஆராய்ந்தார்கள் என்பதாகவே என் சிற்றறிவு சொல்கிறது.

மூலக்கரு புலிகளை அழிக்க வேண்டும். அதுதான் அங்கே நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகள் கொள்கைகள் எல்லாவற்றையும் அவர்கள் கைவிட்டிருந்தாலும் முடிவு ஒன்றாகத்தான் இருந்திருக்கும்.

1 hour ago, புங்கையூரன் said:

அடக்கப்படுகின்ற ஒரு இனத்தின் பரிணாம வளர்ச்சியின் விளைவே 'தமிழீழக் கோரிக்கை' ஆகும்!

யாழ் களத்தின் மாற்றுக்கருத்தாளர்கள் கூட எனது கருத்துடன் உடன்படுவார்கள் என்று எண்ணுகின்றேன்!

தமிழீழக் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை!

அதை அடையும் வழிமுறைகளில் தான் கருத்து வேறுபாடுகள், விமரிசனங்கள் உண்டு!

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும், அபிலாசைகளும் ஓரளவுக்காவது தீர்க்கப்படாதவிடத்தில், தமிழீழம் என்பது தவிர்க்க முடியாத தேவை!

உதாரணமாக 'வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, கனேடிய பிரஞ்சு மொழி பேசும் மாநிலங்கள்' போன்றவை ஒரு காலத்தில் பிரிந்தே செல்லும்!

இந்தியாவின் மாநிலங்களும் பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும்!

அதனால் தான் 'பரிணாமம்' என்ற வார்த்தையை உபயோகித்தேன்!

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த ஒரு போராட்டத்தின் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும், அநியாயங்களும், மரணங்களும், அழிவுகளும், இடம் பெயர்வுகளும், ஆக்கிரமிப்புக்களும்.. ஒரே இரவில் மறக்கப் பட்டு விட மாட்டாது!

மிக நிதர்சனமான உண்மை புங்கை .

அடக்கப்படும் எந்த இனமும் அடக்குமுறை தொடரமட்டும் தமது விடுத்தலைக்காக போராடியே தீருவார்கள் .

உண்மையில் இதுவும் ஒரு பரிணாமம் தான் .

அயர்லாந்தின் போராட்டம் என்ற எஸ் வி ராஜதுரை எழுதிய புத்தகத்தை முடிந்தால் வாசிக்கவும் .உலகின் மிக நீண்ட தேசிய இன விடுதலை போராட்டம் அயர்லாந்து மக்களினது போராட்டம் என்றுதான் நினைக்கின்றேன் .மார்க்ஸ் எங்கல்ஸ் பிறக்க முதல் என்றால் பாருங்கோவன் .

பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளிலேயே அது தொடங்கிவிட்டது .ஆங்கிலேயர்களின் கோர முகமும் பிரித்து ஆழும் தந்திரமும் வெகுதுல்லியமாக வெளிக்கொணரபட்டுள்ளது .

ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படுவதும் கிழிப்பதும் ஒப்பந்ததை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பதும் ஏமாற்றுவதும் என்ற பிரிட்டிஷ்காரர்கள் செய்த அநியாயங்கள் சொல்லிமாளாது .

அடக்குபவன் எப்பவும் ஒரு வர்க்கம் தான் ஆனால் அடக்கபடுபவன் கிளர்ந்து எழுந்து அக ,புற காரணிகள் சாதகமான சூழ்நிலையில் முழுமையாக போராடப்புறப்படும் போது அந்த போராட்டம் வெற்றிபெறவேண்டும் இல்லையெனில் அப்படியொரு சூழ்நிலை உருவாக சகாப்தங்கள் எடுக்கும் .

போராட்டத்தின் தோல்வி அடக்குபவன் தரும் அற்பசலுகையுடன் நீர்த்துவிடும் .இன்றைய தமிழர்களின் நிலையும் சிறீதரனின் அறிக்கையும் அதைதான் சொல்லி நிற்குது .

இனி எண்பதுகள் போல தமிழர்களுக்கு போராட்டத்திற்கான அக புற காரணிகள் சரியாக அமைந்துவர பல சகாப்தங்கள் எடுக்கலாம் .

குறிப்பு -புலிகளில் எனக்கு மட்டும் அல்ல என் போன்றவர்களுக்கும் இருக்கும் ஒட்டு மொத்த கோபம் அப்படி அமைந்த ஒரு சூழ்நிலையை அறியாமையால் வீணடித்தது மாத்திரம் இல்லாமல் முற்றுமுழுதாக எதிரியிடம் சரணடையும் நிலைக்கு போராட்டத்தை இட்டு சென்றது .

வராலாறுகளில் இருந்து நாம் கற்றுகொள்ளவேண்டியது அதுதான் மற்றவர்கள் விட்ட பிழைகளை நாம் விடாமல் இருப்பது .

புலிகள் செய்த ஒரே நல்ல விடயம் விடுதலைக்காக போராடும் இனங்களுக்கு எப்படி போராடக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றதேயாகும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

புலிகளும் கூட கலந்து கொண்ட சில பேச்சு வார்த்தைகளில் "தனி தமிழீழம் " என்ற கோரிக்கையிலிருந்து  சற்றே இறங்கி வேறு பல தீர்வு முறைகளையும் ஆராய்ந்தார்கள் என்பதாகவே என் சிற்றறிவு சொல்கிறது.

புலிகளின் தாகம்... தமிழீழத் தாயகம்.. என்பது தான் அவர்களது தாரக மந்திரம்!

சிங்களத்தின் உண்மை முகத்தை தோலுரித்து உலகத்துக்குக் காட்டவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து இறங்கி வந்தார்கள்!

சிங்களத்தின் மகாவம்ச மனநிலை என்றும் மாறாதது என்று அவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது!

இன்று அந்த உண்மை.. உங்களுக்கும் எனக்கும் கூட தெளிவாகவே தெரிகின்றது!

இன்றும் கூட சிங்களம் மனது வைத்தால்.... இலங்கையைத் தோள் மீது தாங்க தமிழ் மக்கள் தயாராகவே உள்ளார்கள்!

தமிழ் மக்களின் பெரும்பானமையானோர்  ( நானும் நீங்களும் உட்பட) போரை விரும்பியதில்லை!

போர் எமதினத்தின் மீது.. பல விட்டுக்கொடுப்புக்களையும் மீறிப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை!

உலகத்தின் அத்தனை நாடுகளிலும் ஒரு பிரச்சனைகளும், சமுதாயத் தொந்தரவுகள் எதுவும் கொடுக்காமல் வாழுகின்ற தமிழினம்.. இலங்கையில் மட்டும் போராடுகின்றது ஏன் என்று நினைத்துப் பார்க்கையில் பல உண்மைகள் புலப்படும்!

தரப்படுத்தல், ஜாதிக சேவக சங்கமைய போன்றவற்றால் நேரடியாகப் படிப்பும், தொழில் வாய்ப்புக்களும் பறித்தெடுக்கப் பட்ட தலைமுறை என்னுடையது!

தமிழர்கள் தான் இலங்கையின் மூத்த பௌத்தர்கள் என்பது கூடப் பலருக்குத் தெரிவதில்லை!

எமது இனம் ஒடுக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காவே சிங்களம் பௌத்தத்தைக் கையிலெடுத்துள்ளது! அதனால் தான் விகாரைகளும், புத்தர் சிலைகளும் ஆக்கிரமிப்பின் சின்னங்களாகப் பார்க்கபடுகின்றன!

அனுராதபுரத்தில் உள்ள மகாவிகாரைக்கும், அபயகிரி விகாரைக்கும் விசேட மானியம் ஒதுக்கியவன் தமிழ் மன்னன் எல்லாளன் என்பதையும் நாம் மறந்து விடகூடாது! அதாவது மகாவம்சத்தைத் தொகுப்பதற்கு 'மானியம்' வழங்கியவன் தமிழ் மன்னனே!

யாதும் ஊரே.. யாவரும் கேளிர்... என்ற கணியன் பூங்குன்றனார் வழி வந்தது தமிழினம்!

அதுவே அதன் 'பலவீனமாக' இன்று மாறியுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்களம் மனது வைத்தால்.... இலங்கையைத் தோள் மீது தாங்க தமிழ் மக்கள் தயாராகவே உள்ளார்கள்!

நீங்கள் மேலே சொன்னது ..வெறும் வார்த்தைகள் அல்ல இது ஒரு சத்திய வாக்கு புங்கை அண்ணா,
இன்று வரை என் சிங்கள நண்பர்களுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் சொல்லி வைக்கும் விடயமும் இது தான்.

எங்கள் எல்லோரின் வாழ்க்கையிலும் மண் அள்ளிப் போட்டவர்கள் சிங்கள/தமிழ்  அரசியல் வாதிகளே.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

புலிகள் செய்த ஒரே நல்ல விடயம் விடுதலைக்காக போராடும் இனங்களுக்கு எப்படி போராடக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றதேயாகும் .

தேர்தல் முடிய தமிழீழம் என்று வட்டுக்கோட்டையில தீர்மானம் போட்டவை.. அதை அடைஞ்சவை..! பொங்கலுக்கு தமிழீழம் என்றவை அதை அடைஞ்சவை..! இந்து சமுத்திரத்தில மீன்பிடிப்படகில் எவ் எம் மைக்க வைச்சுக்கிட்டு இந்தா கப்பல் வருகுது.. சாம் 7 வருகுது.. என்றவை தமிழீழத்தை அடைஞ்சவை..! ஏன் தமிழீழத்தின் விடிவிப்பு மாலைதீவில் ஆரம்பம் என்று அதைப் பிடிக்கப் போனவை அதை அடைஞ்சவை.

புலிகள் மட்டும் தான்.. அடையல்ல.

என்ன புலிகள் மட்டும் தான் தமிழீழ விடுதலைக்காகப் போராடினார்கள்.. மற்றவர்கள் தமிழீழ விடுதலை என்ற பெயரில் தங்கள் சொந்த.. பல வகைப் பிழைப்புக்காக போராடினார்கள். அதில் புலிகள் தோற்கடிப்பட்டார்கள் (கேவலம் தமிழீழம் கேட்டவையே புலிகளை தோற்கடிக்க சிங்களவனோடு ஹிந்தியனோடு உயிரைக் கொடுத்து உழைச்சிருக்கினம் என்பது தான்.. இப்ப எல்லாம் புலிகளால்... மொத்த பழியும் புலி மேல. இதில கோபம் வேறயாம்.) மற்றவர்கள் தேவை முடிய முடிய தேவையற்றுப் போனதை கைவிடுகிறார்கள்.

அண்ணனுக்கு இந்த சிம்பிள் லாஜிக்கே புரியாமல்..! ஆனால் அண்ணன் புலிகள் மேல..இவ்வளவு கோபத்தின் மத்தியிலும்..அவர்கள் விடுதலைக்காகப் போராடினார்கள் என்று ஏற்றுக் கொள்கிறார். நெல்சன் மண்டேலா இதைச் சொன்னதுக்கு சமன் கண்டியளோ..!

முடியல்லைடா சாமி. நம்ம சிலதுகளின் அரசியல் சதிர். மேடைக்கு மேடை காட்சி மாத்திப் பழகிட்டுதுகள். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan
மேலதிக விபரம் இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழமே இறுதி இலட்சியம் என்று சொன்னால் போராடுவதற்கும் கை விடுவோம் என்றால் கைவிடுவதற்கும் தமிழ்மக்கள் ஒன்றும் எடுப்பார்கைபிள்ளை அல்ல.தமிழீழத்திற்காக போராடப்புறப்பட்ட அத்தனை இயக்கங்களும் இந்தியாவின் தலையீட்டுடன் அந்தக் கோரிக்கையக் கைவிட்ட போதிலும் புலிகள் அந்தக் கோரிக்கையை இறுதிவரை கைவிடாது போராடினர்.(இந்தியா உட்பட சர்வதேசமும்  எதிர்த்த பொழுதும் அவர்கள் அடி படிந்து கோரிக்கையைக் கைவிடவில்லை.தமிழீழம் என்பது தமிழர்களின் உணர்வோடு கலந்த கோட்பாடு.இடையில் சில தீர்வு முயற்சிகள் நடைபெறலாம்.ஆனால் தமிழர்களால் முன்வைக்கப்படும் எந்த ஒரு வலுக்குறைத்த தீர்வையும் சிங்களம் தராது மறுப்பதன் மூலம் சிங்களமே அந்தக் கோட்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.போராட்டத்தில் பங்களிக்காமல் போராட்டத்தை நசுக்கப் பங்களித்த ஒருசில புத்தியீவிகள் விரும்பவில்லை என்பதற்காக சிறிதரன் கைவிடலாம்.தனி ஒரு சிறிதரனோ சம்பந்தரோ சுமத்திரனோ கைவிடுவதால் யாருக்கும் நட்டமில்லை.அது அவர்களுக்கு சில தற்காலிக நன்மைகளைத்தரலாம்.எமக்கான அகப் புறச்சூழ்நிலைகள் அமையும் போது சர்வதேசமே தமிழீழத்தை உருவாக்கித் தர வேண்டிய நிலமை ஏற்படும்.இந்த உலகம் ஒருபொழுதும் ஒரே அச்சில் சுழல்வதில்லை.நெலசன் மண்டேலாவையும் நாசிர்அரபாத்தையும் பயங்கரவாதிகள் என்று சொன்ன அதே சர்வதேசம்தான் அவர்களை விடுதலைப் போராளிகள் என்று ஏற்றுக் கொண்டது.ஆக சிறிதரனின் கூற்றும் கடந்து போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் அடாவடித்தனங்களாலும்

ஏற்றுக்கொண்டு ஒப்பந்தமிட்டவைகளையே சிதைத்தாலும்

தமிழீழக்கோரிக்கை  என்பது தமிழர்களின் பொறுமையின் விழிம்பின் கடைசி முடிவாகவே வந்தது

அதை எவருக்கும் தூக்கிப்போடும் உரிமையில்லை

அப்படியொரு முடிவுக்கு முன்னால் எதையாவது சிங்களம் தந்திருக்கணும்

புலிகளும் பேச்சுவார்த்தைகளின் போது எதையாவது வையுங்கள்

பரிசீலிக்கின்றோம் என்று மட்டுமே சொன்னார்கள்

காரணம் எதையும் வைக்கமாட்டார்கள்

எதற்காக நாம் எமது கடைசி முடிவை இலகுவாக்கணும் என்பதால் மட்டுமே.

இவர் 2009க்குப் பின் பிரான்சுக்கு வந்திருந்தபோது

முள்ளிவாய்க்காலுக்குப்பின் இளைய தலைமுறை என்ன முடிவில்  உள்ளது என்ற கேள்வியை நான் கேட்டேன்

அதற்கு அவர் சொன்ன பதில்

வெளியில் சென்று வர பயமாக இருக்கு என்று தான் தனது வீட்டில் சொன்னதற்கு 

தனது மகன் சொன்னானாம்

40 ஆயிரத்தைக்கொடுத்துவிட்டோம்

நீங்க 40 ஆயிரத்து ஒன்று.

போய் வாங்க என்று. அவர்கள் தெளிவாக உள்ளார்கள் என்றார்.

அண்ணைக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கு ஆப்பு......

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் மன்னிக்கவும்.இப்ப உங்கள் குடும்பம் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்கள்.நீங்களே சொல்லி உள்ளீர்கள் நாங்கள் இந்த நாட்டை மதிக்க வேணும் நன்றி செலுத்த வேணும் என்டு.சரி இப்ப நீங்கள் சொல்கிறீர்கள் வெளியிலே ஜ ஸ் காரன் குண்டு வைக்கிறான் வெளியில போக பயமாக இருக்குது என்டு அப்ப உங்கள் மகன் சொல்வாரா ஏற்க்கனவே இறந்தவர்களுடன் உங்களைச் சோ்த்தால் ஒன்று கூடும் என்று.:)

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு நாளும் கொள்கையை கையேடு வைத்திருந்ததட்கு ரொம்ப நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சுவைப்பிரியன் said:

விசுகர் மன்னிக்கவும்.இப்ப உங்கள் குடும்பம் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்கள்.நீங்களே சொல்லி உள்ளீர்கள் நாங்கள் இந்த நாட்டை மதிக்க வேணும் நன்றி செலுத்த வேணும் என்டு.சரி இப்ப நீங்கள் சொல்கிறீர்கள் வெளியிலே ஜ ஸ் காரன் குண்டு வைக்கிறான் வெளியில போக பயமாக இருக்குது என்டு அப்ப உங்கள் மகன் சொல்வாரா ஏற்க்கனவே இறந்தவர்களுடன் உங்களைச் சோ்த்தால் ஒன்று கூடும் என்று.:)

வணக்கம் சுவைப்பிரியன்

கருத்துக்களம் தானே

இதில் எதற்கு மன்னிப்பு??

 

உங்கள் கேள்வி மிகக்குழப்பமாக உள்ளது

நான் ஒரு சாதாரண குடிமகன்

சிறிதரன் அந்த நாட்டு மக்கள் பிரதிநிதி.

சிறிதரனுக்கு பயம் அவரது அரசாங்கத்தால்.

எனக்கு அப்படியொரு நிலை பிரெஞ்சு அரசால் வந்தாலும் எனது மகனிடம் இந்தக்கேள்வியைக்கேட்கமுடியுமா என்று தெரியவில்லை

ஏனெனில் இது எனக்கு பிராசாஉரிமை தந்த நாடு மட்டுமே.

மற்றும்  ஜ ஸ் காரனுடன் யாரை ஒப்பிடுகின்றீர்கள் என்பதும் புரியவில்லை

மற்றும்படி எனது கருத்து ஒரு சாதாரண குடிமகனின் கருத்து

ஒரு நீங்கள் உடுப்பை மாற்றும் முதல் ஆகக்குறைந்தது

மிக முக்கிய உள்ளாடைகளையாவது எடுத்து வைத்துவிட்டுத்தானே உடுப்பை மாற்றுவீர்கள்...??

ஒன்றுமில்லாது எல்லாவற்றையும் களட்டிவிட்டு.........???

அது தான் எனது கருத்தின் உள்ளடக்கம்..

 

 

 

 

 

Edited by விசுகு

தமிழீழம் என்பது தமிழர்களின் பண்டைய , பாரம்பரிய பூமி ....கை விடுவதற்கு இவர் யார் ? எவனுக்கும் அந்த அதிகாரம் இல்லை ....தமிழர்களின் பூர்வீகம் எப்படி ...இந்த சிறியர் அடுத்த கட்சி தலைவருக்கு வழிகின்றார் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1.2.2016 at 7:48 PM, நவீனன் said:

தமிழீழத்தை கைவிடவுள்ளோம்

இந்த வசனத்தை சொல்லுறதுக்கு மணியான ஆள் சுமந்திரன் தான்.....happy01941.gif

அவுஸ் நச்சரிச்சலோடை ஆள் இப்ப கொஞ்சம் பின்னுக்கு........ fighting0059.gif

ஆனால் "தமிழீழத்தை கைவிடுகின்றோம்" என்ற வசனம் கூட்டமைப்பின் வாயால் வரவேண்டும் என்பது ஒரு சில பெரிய ஆட்களின் கனவு.:rolleyes:

"இன்றும் கூட சிங்களம் மனது வைத்தால்.... இலங்கையைத் தோள் மீது தாங்க தமிழ் மக்கள் தயாராகவே உள்ளார்கள்! "

புங்கையரின் இந்த வசனம் அநேக காதலர்கள் காதலிமாரை பார்த்து கூறும் வசனம் போல இருக்கு .

இப்படி ஆயிரம் ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்தாலும் காதலிகள் பலர் அந்த காதலை ஏற்க பலமுறை சிந்திகின்றார்கள் .அப்படித்தான் சிங்களவர்களும் சிந்திகின்றார்கள்.

கலியாணம் முடிய தோழல் விழுத்தி நிலத்தில் போட்டு உழக்கினால் என்ன என்ன செய்வது.

வரலாறுகள் பல விடயங்கள் சொல்லி நிற்குது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.