Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்...

Featured Replies

'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்...

 

“அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு,  அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.”
- இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள்.

poet%20guna%20kaviyalagan.jpgஅவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். 'இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆம், எனக்கு இலக்கியம் தவிர பேச வேறொன்றுமில்லை. சம்மதமா...?' என்றார்.

உடனே சம்மதித்தேன். குணா அவருடைய நாவல்களிலேயே அரசியல் பேசுபவர். ஆகவே, நிச்சயம் அது வெறும் இலக்கிய உரையாடலாக மட்டும் இருக்காது என்று நம்பியதால் சம்மதித்தேன்.

உங்களுக்கு குணா யாரென்று நான் முன்கூட்டியே கூறிவிட்டால், இந்த பேட்டியை படிக்க வசதியாக இருக்கும். ‘குணா கவியழகன்’ ஈழத்தமிழர். இந்த இன அடையாளம் மட்டும் அவருடையதல்ல. நஞ்சுண்டகாடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் என மூன்று நாவல்களை எழுதியவர். ஊடகவியலாளர். தன் நாவல்கள் மூலம் விடுதலைப் புலிகளையும் நேர்மையாக விமர்சனம் செய்தவர். இப்போது புலம்பெயர்ந்த தமிழர் என்ற அடையாளத்துடன் நெதர்லாந்தில் வசித்து வருபவர்.
 

வெயில் கக்கும் ஒரு முன்பகலில், சென்னை பெருமழையில் மோசமாக பாதிக்கப்பட்ட இடம் ஒன்றில் அவரைச் சந்தித்தேன். ஆனால், இப்போது அதற்கான எந்தவொரு வடுவையும் அந்தப் பகுதி சுமந்திருக்கவில்லை. ஆனால் குணா கவிழயகன்,  போர் ஏற்படுத்திய அனைத்து வடுகளையும் சுமந்திருக்கிறார். இனி அவருடனான உரையாடல்...

எளிய செய்திகளுடன் இந்தப் பேட்டி அமைய வேண்டும். அதனால் ஒரு தட்டையான கேள்விவுடனே இந்தப் பேட்டியைத் தொடங்குகிறேன். எது உங்களை நாவல் எழுத தூண்டியது...?

மென்மையாகச் சிரிக்கிறார். ’’எனக்கு இலக்கியம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. நான் வன்னி யுத்தத்திற்கு பின்பு அமெரிக்காவின், ’ஆசிய மறுசீராக்கல் கொள்கை’ குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினேன். அதன் நீட்சியாக வேண்டுமானால் என் முதல் இலக்கிய நூலான ‘நஞ்சுண்டகாடு’ நாவலைச் சொல்லலாம். யோசித்தால், அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. என் நாவல்கள் என் வலிகளுக்கான வடிகால். அதை எனக்கான உளச்சிகிச்சையாக நினைக்கிறேன். போர் தந்த வலிகளிலிருந்து மீள எனக்கு எழுத்து நல்ல சிகிச்சையாக இருக்கிறது. அந்த சுய சிகிச்சை நாவலாக உருமாறி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், நான் எழுதப் போகும் ஒரு முக்கியமான நாவலுக்கான பயிற்சியாகத்தான் இந்த மூன்று நாவல்களையும் பார்க்கிறேன்.
   
புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்கள் முதல் நாவலான நஞ்சுண்டகாடுவில் விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனம் செய்து இருந்தீர்கள் அல்லவா...?

"ஆம். நான் எழுதுவதென்று முடிவெடுத்தவுடனே ஒரு விஷயத்தில் திடமாக இருந்தேன்... அது சமரசமற்றதாக இருக்க வேண்டுமென்று. அதனால் அவர்கள் செய்த பிழைகளையும் நான் விமர்சனம் செய்திருந்தேன். இந்தக் காரணத்தால் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால், நான் என் எழுத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறேன்!’’

eelam%20people.jpg

இறுதியாக நடந்த இன அழிப்பு போரை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் என்று எண்ணியதுண்டா...? போருக்கு காரணம் புலிகளின் ராஜதந்திர தோல்வி என்று கூறலாமா...?

’’ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஈழ மக்கள் என்றுமே போரை விரும்பியதில்லை. உலக நாடுகளின் ராஜ தந்திர விளையாட்டில் ஈழம் சிக்கி, சின்னாபின்னமானது. இந்த போரை விரும்பியது சீனா, அது சிங்கள அரசிற்கு துணை நின்றது. நியாயமாக சீனாவின் அரசியல் எதிரிகளான இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளின் பக்கமல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. சீனாவின் பிடி இலங்கையில் இறுகக் கூடாது என்று இந்தியா நினைத்தது. அதுவும் இலங்கை அரசின் பக்கம் நிற்கிறது. ஆசிய கண்டத்தில் இந்தியாவை பகைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. அதுவும் இந்தியாவின் நிலைப்பாட்டையே ஆதரிக்கிறது. ஆனால், புலிகள் தோற்கடிக்கப் படவேண்டும் என்று மட்டும்தான் அமெரிக்கா விரும்பியது. அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பமாக இருந்தது.

இந்தியாவின் இனப்பகைதான் இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றதற்கு காரணம் என்கிறார்களே இங்குள்ள தமிழ் தேசியர்கள்...?


’’இல்லை. இந்தியா துணை நின்றதற்கு காரணம் புவிசார் அரசியல் மட்டுமே!’’

அப்படியானால், இது புலிகளின் ராஜதந்திர தோல்விதானே...?

’’இது அவர்களின் ராஜதந்திர தோல்வி மட்டுமல்ல. முள்ளிவாய்க்கால், அனைத்து நாகரீக சமூகத்தின் தோல்வி. போரில், போர் குற்றம் நடந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இந்தப் போரே குற்றம்தான். அமைதி உடன்பாட்டில் இருக்கும் ஒரு சமூகத்தின் மீது போரை திணித்தது யார்...? இது மோசமான முன்னுதாரணம் அல்லவா...? இனி எந்தப் போராட்ட இயக்கமாவது, இவர்கள் கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தை நம்புமா...?’’

காங்கிரஸ் இல்லாமல் வேறு கட்சி மத்தியில் இருந்திருந்தால், இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது என்று சொல்லலாமா...?

"இல்லை. நிச்சயம் இல்லை. இது இந்தியாவின் நிலைப்பாடு!’’

புலிகள் பல முறை இந்தியாவுடன் நேசக்கரம் நீட்டியும், இந்தியா அவர்களை நம்ப மறுக்க காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்...?

’’ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தது. அப்போது புலிகள் அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால், பின்பு அவர்கள் புரிந்து கொண்டார்கள், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு கிடைக்காது என்பதை... ஆனால், இந்தியாவோ, புலிகளின் தனி ஈழக்கோரிக்கையை, தமிழ் அகண்ட தமிழ்த் தேச பேரரசிற்கான கோரிக்கையாக பார்த்தது. அதனால், அவர்கள் அதை ஆதரிக்கவில்லை; அதை முன்னெடுத்த புலிகளையும் ஆதரிக்கவில்லை. இப்போதும் நாங்கள் இந்தியாவையே நம்புகிறோம், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு  இல்லை!’’

 

mgr%20pirabakaran.jpg

ஒரு காலத்தில் எம்.ஜி. ஆரின் முயற்சியால், இந்தியா ஒரு தீர்வை முன் வைத்தது. இலங்கையின் வடகிழக்கை ஒன்றிணைத்து தனி மாகாணமாக்கி, அதற்கு பிரபாகரனை முதல்வர் ஆக்குவது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த அழிவை தவிர்த்து இருக்கலாம் அல்லவா...?

’’நிச்சயம். நான் ராஜதந்திர தோல்வி என குறிப்பிட்டது இதைத்தான். அப்போது அதை  ஏற்றுக் கொண்டிருந்தால், நாங்கள் அரசியல் செய்வதற்கு, எங்கள் கோரிக்கைகளை அனைத்து சமூக மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். அதை மறுத்ததன் மூலம், அந்த வாய்ப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. புலிகள் போர் வெற்றியில்தான் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அரசியல் தளத்தில் கவனம் செலுத்த தவறிவிட்டார்கள். இவர்கள் இரண்டிலும் கவனம் செலுத்தி இருந்தால், பல தோல்விகளை தவிர்த்து இருக்கலாம்!’’

சரி. இப்போது ஈழமக்களுக்கு எது தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?


’’வடகிழக்கை இணைப்பது. போலீஸ், வருவாய் போன்ற அதிகாரங்களை மையப்படுத்தாமல். அதைப் பகிர்ந்தளிப்பது!’’

அதாவது, இந்தியாவில் உள்ள மாநில அமைப்பு போல்...?


’’ஆம். அதுதான் தீர்வென்று நம்புகிறேன்!’’

தனி ஈழக்கோரிக்கையை முன்னிறுத்தி மீண்டும் அங்கொரு போர் மூள வாய்ப்புள்ளதா...?

’’நிச்சயமாக இல்லை. எக்காலத்திலும் போர் மூள வாய்ப்பில்லை. ஆனால், போர் மட்டுமே முடிந்துவிட்டது; போராட்டங்கள் முடியவில்லை. தன்னாட்சி உரிமைக்கான அரசியல் போராட்டங்கள் தொடரும். அங்குள்ள தமிழ் மக்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். தங்களது கூட்டு உரிமைக்காக இன்னும் போராடி வருகிறார்கள். அதனால்தான் தமிழ் தேசியக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுகின்றன!’’

உங்கள் கோரிக்கையை ஏற்க ராஜபக்‌ஷே முன் வந்தால் அவரை ஆதிரிப்பீர்களா...?
 

 ’’நிச்சயமாக!’’

என்ன...?!


’’ஆம். போர் எதிரி. அரசியல் எதிரியாக இருக்கவேண்டியது இல்லை. இதற்கு நம் கண் முன்னால் இருக்கும் உதாரணம் ஜப்பான். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், அவர்கள் கூட்டு சேர்ந்தது, அவர்கள் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்காவுடன்!’’

போர் நடந்த போது, தமிழக மக்கள் மீதும், ஈழ ஆதரவு தலைவர்கள் மீதும், போராளிகளின் பார்வை எப்படி இருந்தது...?

’’நாங்கள் தமிழக மக்களை மட்டுமே முழுமையாக நம்பினோம். என்றுமே தலைவர்களை இல்லை. எங்களுக்கு அவர்களின் நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தமிழக அரசியலை தாண்டித்தான், ஈழம் எல்லாம்... அதற்காக எங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்காள். அதையும் நாங்கள் உணர்ந்தே இருந்தோம்.

அரசியல் தலைவர்களுக்கு ஈழமக்கள் மீது உண்மையான கரிசனம் இருந்திருந்தால், இங்கு அகதி முகாமில் இருக்கும் ஈழ மக்களுக்கும் அவர்கள் ஆதரவு கரம் நீண்டு இருக்க வேண்டும் அல்லவா... ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லையே..!’’

tamil%20nadu%20srilankan%20camp.jpg

வேறு எப்படி உங்கள் லட்சியங்களை அடைவது சாத்தியம் என நினைக்கிறீர்கள்...?

’’எங்கள் படகுக்கு நாங்கள்தான் துடுப்பு போட வேண்டும். எங்கள் பிள்ளையை நாங்கள்தான் பெற்றெடுக்க வேண்டும்!’’

சரி. இந்த கேள்வி இல்லாமல் பேட்டி முற்றுபெறாது... எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த கேள்வியை கேட்பதில் உடன்பாடில்லை... பிரபாகரன் இன்னும் உயிரோடு இருகிறாரா...?

’’நான் இந்த சந்தேகத்தை கிளப்புவதே இந்திய அரசு என்றுதான் நினைக்கிறேன். அவரின் தியாகம் முக்கியமானது. அவர் இறந்துவிட்டார் என போரை நடத்திய இலங்கை அரசே சொல்லிவிட்டது. இவர்கள் இப்படி ஒரு சந்தேகத்தை கிளப்ப காரணம், ’பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்று அவர்கள் அறிவித்தால், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கை முடிக்க வேண்டும். அப்படி அந்த வழக்கு முடியும்பட்சத்தில், அந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை சாத்தியம் ஆகும். அதை இந்தியா விரும்பவில்லை.

இதை தவிர்க்கவே இந்திய அரசு ஒரு குழப்ப நிலையை உண்டாக்கி, பிரபாகரனை உயிர்ப்புடன் வைத்திருக்க முனைகிறது என நினைக்கிறேன். இந்த இந்திய அரசின் ராஜதந்திரத்திற்கு, இங்குள்ள தமிழ் ஈழத் தலைவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பலிகடா ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றவர் பெருமூச்சோடு சாய்ந்து அமர்ந்து கொள்கிறார்.

சின்ன இடைவேளைக்குப் பின் சன்னமான குரலில் சொல்கிறார்...

’’நான் அரசியலே பேசக் கூடாது என்றுதா நினைத்தேன். ஆனால், நீங்கள் அது போன்ற கேள்விகளையே கேட்டதால், பேச வேண்டியதாகிவிட்டது. நான் இப்போது தீவிர அரசியலில் இல்லை, இலக்கியம் மட்டுமே என் பணி. அதிலேயே இயங்க விரும்புகிறேன்!’’

-ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுடன் விடைபெற்றேன்.
http://www.vikatan.com/news/coverstory/59249-india-wants-prabakaran-to-be-alive-eezha-writer.art

தெளிவான  பேட்டி ,

சில பதில்களுடன்  எனக்கு  உடன்பாடில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்தான் எல்லாத்தையும் அழித்தார்கள் 
அப்படி என்று வந்திருக்க வேண்டும் ...


பேட்டியை பார்க்க ஆமி செல் அடிச்ச மாதிரியும் வருகிறது ...
அதாவது யாதர்த்தமாக சொன்னால் 
எனக்கு உடன்பாடு இல்லை !

புலிகள் பல முறை இந்தியாவுடன் நேசக்கரம் நீட்டியும், இந்தியா அவர்களை நம்ப மறுக்க காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்...?

’’ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தது. அப்போது புலிகள் அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால், பின்பு அவர்கள் புரிந்து கொண்டார்கள், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு கிடைக்காது என்பதை... ஆனால், இந்தியாவோ, புலிகளின் தனி ஈழக்கோரிக்கையை, தமிழ் அகண்ட தமிழ்த் தேச பேரரசிற்கான கோரிக்கையாக பார்த்தது. அதனால், அவர்கள் அதை ஆதரிக்கவில்லை; அதை முன்னெடுத்த புலிகளையும் ஆதரிக்கவில்லை. இப்போதும் நாங்கள் இந்தியாவையே நம்புகிறோம், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு  இல்லை!’

ஆரம்பத்தில் நடந்த சில தவறுகள் - சில மன்னிக்க முடியாத தவறுகள் ,சில அதிலிருந்து விலகமுடியாத தவறுகள் இவையெல்லாம் செய்ய முதலே ஆயிரம் தடவைகள்  யோசிக்கவேண்டிய தவறுகள் .

84-85 களிலேயே எங்களுக்கு  மிக  தெளிவாக விளங்கிய விடயம் இது .

ஆனால் இந்த தவறுகளை பற்றி  இன்று வரை பெருமை பேசுபவர்கள் தான் அதிகம் .இவர்கள் அந்த பெருமைக்காக இனத்தையே அழித்தார்கள் .

இந்த முதிர்சி புலிகளுக்கு என்றுமே வரவில்லை வரக்கூடிய சந்தர்ப்பமும் இல்லை ,

 

Edited by arjun
எழுத்து திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

பேசுறவரும் புலிதான்......

 

17 minutes ago, விசுகு said:

பேசுறவரும் புலிதான்......

 

38 minutes ago, arjun said:

இந்த முதிர்சி புலிகளுக்கு என்றுமே வரவில்லை வரக்கூடிய சந்தர்ப்பமும் இல்லை ,

84-85 களிலேயே எங்களுக்கு  மிக  தெளிவாக விளங்கிய விடயம் இது .

ஆனாலும் சிலருக்கு வந்திருக்கு.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

தான்அரசியலில் இல்லை என்று சொல்லியுள்ளாரே....

இந்தியாவுடன்  குலாவவேண்டுமென்றால் அரசியல் செய்யணுமே....

6 minutes ago, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

உண்மைதான் கிருபன். ஆனால் அவருக்கு அப்போ தர்மபுரம் காணி பற்றி யோசிக்கவே நேரம் போதுமானாதாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

தான்அரசியலில் இல்லை என்று சொல்லியுள்ளாரே....

இந்தியாவுடன்  குலாவவேண்டுமென்றால் அரசியல் செய்யணுமே....

இப்ப அரசியலில் இல்லை. ஆனால் 2009 மே வரை இருந்தவர்தானே. அந்தக் காலத்தில் சிரிப்பின் செல்வரோடு ஒத்துவரவில்லை போலிருக்கு.

Edited by கிருபன்

11 minutes ago, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

எவர் சொல்லையும் கேட்கும் நிலையில்  எந்த தலைமையும் இருக்கவில்லை ,

பாலசிங்கத்தின் சொல்லே கேட்கவில்லை குணா எம்மாத்திரம் 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

எவர் சொல்லையும் கேட்கும் நிலையில்  எந்த தலைமையும் இருக்கவில்லை ,

பாலசிங்கத்தின் சொல்லே கேட்கவில்லை குணா எம்மாத்திரம் 

கவியழகன் தமிழீழ அரசியல் ஆய்வு மையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். ஒருவகையில் புலிகளின் ராஜதந்திர அரசியல் பாதைகளுக்கும் பொறுப்பாக இருந்தவர் எனக்கூறலாம். 

2006 இல் வந்த செய்தி..

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

பிழைப்புவாதம் செய்பவன் அங்குமிங்கும் ஒட்டி வாழ்ந்துகொள்வான் 

போராளிகள் இலட்சியத்தால் உருவாகுபவர்கள் 
அவர்களுக்கு ஒரு வழி பாதைதான்.

எல்லாம் முடிய சினிமாவிற்கு விமர்சனம் எழுதி பிளைக்கவும் ஒரு கூட்டம் இருந்துகொள்ளும்.

அம்பேத்தகர் 
பெரியார் 
போல இந்தியாவில் யாரும் தோற்றுபோகவில்லை 
ஆனால் ஆறறிவு மனிதர்களிடம் அவர்கள் யாரும் உலகில் தோற்பது இல்லை.

இது உலக நியதி.

தற்போதைய சிரியா நிலைமைக்கு 
நாளை சிரிய அதிபரை சாட ஒருகூட்டம் சிரியாவில் உருவாகும்.
சிரிய அரசு சியாத் முஸ்லீம்களை உள்ளடக்கியதால்தான் இந்த நிலைமையே 
சிரியாவிற்கு வந்தது. 

இப்போ எந்த ராஜதந்திரமும் அங்கு இல்லை 
வெறும் ரவ்டிசம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது 
மேலை நாட்டு அரசியல் வாதிகளிடம் உண்மையில் ராஜதந்திரம் இருந்திருந்தால் 
ரசியா உள்ளிறங்க முன்பு காய் நகர்த்தி இருக்க வேண்டும்.
இப்போ ரசியா துருக்கி எல்லைக்கு வந்த பின்பு .... போர் நிறுத்தம் என்று கத்த வேண்டி வந்திருக்காது.

2007இல் ஆயிரகணக்கான பெண்கள் கென்யாவில் பாலியல் பலாத்தகாரம் 
செய்யபட்டார்கள் 
ஐ நா உடனே விச்சாரனை வேண்டும் என்று  பிரேரணை கொண்டுவந்தார்கள் 
பிரதமர் அங்கு இங்கு சுற்றாமல் நேரே அமெரிக்காவின் காலடியில் போய்  விழுந்தார் 
கென்யா அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் மாதிரி எமக்குள் ஏன் விசாரணை அது இது என்று ?

பின்பு இன்றைய அதே இலங்கை நிலைமை ....
உள்ளக விசாரணை என்று போனது 
(கிருபன் நேற்று செய்தி பார்த்தீர்களா ?) 
நேற்று உள்ளக விசாரணையும் நடக்காது என்று அரசு அறிவித்திருக்கு 
ஐ நா அது உள்நாட்டு விடயம் என்ற மாதிரி பொருள்பட சின்ன மட்டம் மூலமாக சொல்லியிருக்கு 
பெரிய மட்டம் பி பி சீ க்கு இன்னமும் முடிவு எடுக்கவில்லை 
மேலதிக ஆராய்வு நடப்பதாக சொல்லியிருக்கிறது 

சரியாக ஒருவருட வித்தியாசத்தில் இலங்கை விடயம் போய்கொண்டிருக்கு ...
முடிவு ஆறறிவு மனிதர்களுக்கு தெரிந்ததுதான் 
தெரியாத ஒரு கூட்டம் ...... 
அதன் பின்புதான் தாம் இருக்கிறோம் என்று காட்ட 
ஆய்வு கட்டுரை அது இது என்று எழுதும் 
அதுக்கு பல்லக்கு தூக்க ஒரு அடிமை கூட்டம் 
இங்கு காத்து கிடக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை, சர்வதேச, உள்நாட்டு கலப்பு விசாரணை, பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களை மட்டும் கொண்ட கலப்பு விசாரணை, உள்ளக விசாரணை என்று தேய்ந்து அதுவும் இல்லாமல் போகச் சாத்தியங்கள் அதிகம்தான். மைத்திரியும், ரணிலும் இப்போது மேற்குநாடுகளின் விருப்பத்திற்குரிய தலைவர்கள். அவர்களின் ஆட்சியைத் தொடரவும், அரசியலமைப்பை மாற்றவும், அதன் மூலம் தமிழர்களுக்கு 'ஏதாவது' ஒரு தீர்வைக் கொடுக்கவும் மேற்குநாடுகள் முனைகின்றன. ஆனால் கிடைக்கும் தீர்வு தமிழர்களுக்கு சரியான தீர்வா என்று கேள்வி கேட்டாலே புலி முத்திரை குத்த ஒத்தோடிகள் உள்ளனர். இதுதான் இப்போதைய நிலை!

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் இருக்கட்டும்.இவருக்கு எப்படி இந்திய அரசு விசா கொடுத்தது

பாலசிங்கத்தை விட உயர் பதிவியிலா இருந்தார் ?

22 minutes ago, Maruthankerny said:

பிழைப்புவாதம் செய்பவன் அங்குமிங்கும் ஒட்டி வாழ்ந்துகொள்வான் 

போராளிகள் இலட்சியத்தால் உருவாகுபவர்கள் 
அவர்களுக்கு ஒரு வழி பாதைதான்.

எல்லாம் முடிய சினிமாவிற்கு விமர்சனம் எழுதி பிளைக்கவும் ஒரு கூட்டம் இருந்துகொள்ளும்.

அம்பேத்தகர் 
பெரியார் 
போல இந்தியாவில் யாரும் தோற்றுபோகவில்லை 
ஆனால் ஆறறிவு மனிதர்களிடம் அவர்கள் யாரும் உலகில் தோற்பது இல்லை.

இது உலக நியதி.

தற்போதைய சிரியா நிலைமைக்கு 
நாளை சிரிய அதிபரை சாட ஒருகூட்டம் சிரியாவில் உருவாகும்.
சிரிய அரசு சியாத் முஸ்லீம்களை உள்ளடக்கியதால்தான் இந்த நிலைமையே 
சிரியாவிற்கு வந்தது. 

இப்போ எந்த ராஜதந்திரமும் அங்கு இல்லை 
வெறும் ரவ்டிசம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது 
மேலை நாட்டு அரசியல் வாதிகளிடம் உண்மையில் ராஜதந்திரம் இருந்திருந்தால் 
ரசியா உள்ளிறங்க முன்பு காய் நகர்த்தி இருக்க வேண்டும்.
இப்போ ரசியா துருக்கி எல்லைக்கு வந்த பின்பு .... போர் நிறுத்தம் என்று கத்த வேண்டி வந்திருக்காது.

2007இல் ஆயிரகணக்கான பெண்கள் கென்யாவில் பாலியல் பலாத்தகாரம் 
செய்யபட்டார்கள் 
ஐ நா உடனே விச்சாரனை வேண்டும் என்று  பிரேரணை கொண்டுவந்தார்கள் 
பிரதமர் அங்கு இங்கு சுற்றாமல் நேரே அமெரிக்காவின் காலடியில் போய்  விழுந்தார் 
கென்யா அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் மாதிரி எமக்குள் ஏன் விசாரணை அது இது என்று ?

பின்பு இன்றைய அதே இலங்கை நிலைமை ....
உள்ளக விசாரணை என்று போனது 
(கிருபன் நேற்று செய்தி பார்த்தீர்களா ?) 
நேற்று உள்ளக விசாரணையும் நடக்காது என்று அரசு அறிவித்திருக்கு 
ஐ நா அது உள்நாட்டு விடயம் என்ற மாதிரி பொருள்பட சின்ன மட்டம் மூலமாக சொல்லியிருக்கு 
பெரிய மட்டம் பி பி சீ க்கு இன்னமும் முடிவு எடுக்கவில்லை 
மேலதிக ஆராய்வு நடப்பதாக சொல்லியிருக்கிறது 

சரியாக ஒருவருட வித்தியாசத்தில் இலங்கை விடயம் போய்கொண்டிருக்கு ...
முடிவு ஆறறிவு மனிதர்களுக்கு தெரிந்ததுதான் 
தெரியாத ஒரு கூட்டம் ...... 
அதன் பின்புதான் தாம் இருக்கிறோம் என்று காட்ட 
ஆய்வு கட்டுரை அது இது என்று எழுதும் 
அதுக்கு பல்லக்கு தூக்க ஒரு அடிமை கூட்டம் 
இங்கு காத்து கிடக்கிறது 

ஐந்தறிவுக்கு ஆறறிவு -1
ஆறறிவுக்கு ஐந்தறிவு +1
அப்ப எனக்கு எத்தனை அறிவு.

நிச்சயம் நாலுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

அதெல்லாம் இருக்கட்டும்.இவருக்கு எப்படி இந்திய அரசு விசா கொடுத்தது

விழ விழ ஒன்றல்ல ஓராயிரமாய் எழுந்துகொண்டு இருந்த 
சாத்த்ரிக்கு விசா மட்டும்மா கொடுத்தார்கள் ?
உளவுத்துறை அதிகாரியே வந்து புத்தகத்தை வெளியிட்டார்கள் 

அவருக்கே அந்த சலுகை இருக்கும்போது 
இவருக்கு விசா கொடுக்க கூடாதா ?

பற்றரி வாங்கி கொடுத்தவன் ஆயுள்கைதி ...
புலியை கண்டிருக்கிறேன் என்றவன் சிறை கைதி ...

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி இயக்கத்தில் இருந்தார் என்பதை அவரே சொன்னாலே தவிர மற்றவருக்கு தெரியாது!. ஆனால் இவர் அப்படியா???????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேட்டியை எடுத்தமை/கேள்விகள்/பதில்கள் /பிரசுரித்தமை யாவும் இந்தியாவின் தேவைக்கே என "பப்" புத்தனின் அரசியல் நொலேட்ஜ்க்கு  எட்டுது.....இனிமேல் இந்தியாவாலும் தீர்வு எடுத்து தரமுடியாது ,அதற்கும் காரணம் புலிகள்தான் என்று சொல்லுகிறார்......ஆனால் இலங்கையில் இனி தீர்வு தேவையில்லை காரணம் இலங்கை இந்தியாவின் கைக்குள் என்று பேட்டி மூலம் சொல்ல வைத்திருக்க‌லாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பகலவன் said:

உண்மைதான் கிருபன். ஆனால் அவருக்கு அப்போ தர்மபுரம் காணி பற்றி யோசிக்கவே நேரம் போதுமானாதாக இருந்தது.

வேண்டாமே ராசா

இதைத்தான் சிலர் ஆசைப்படுகிறார்கள்....

இறுதியாகப் பதியப்பட்ட பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் திரியின் தலைப்போடு ஒட்டி பண்பாக கருத்துக்களை வைக்கவும்.

 

 

You have received a YouTube video!

 

 

 

You have received a YouTube video!

 

 

 

You have received a YouTube video!

 

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமும் இருட்டாத் தான் கிடக்கும் என்று சொல்கிற மாதிரி இருக்குது விசுகு அண்ணா உங்கட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமும் இருட்டாத் தான் கிடக்கும் என்று சொல்கிற மாதிரி இருக்குது விசுகு அண்ணா உங்கட கருத்து.

இருக்கலாம் சகோதரி

ஒரு பொது நன்மை கருதி இவர்கள் மௌனம் காக்கணும் என்பதே 

இன்றைய சூழ்நிலைக்கு நல்லது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.