Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு! - மேஜர் ஜெனரல் ரத்நாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு! - மேஜர் ஜெனரல் ரத்நாயக்க Top News
[Tuesday 2016-03-01 07:00]
ஓரு அமைப்புக்கு எதிராகவே இராணுவம் போரிட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் கடந்த ஒரு வருடங்களாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் 14 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஓரு அமைப்புக்கு எதிராகவே இராணுவம் போரிட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் கடந்த ஒரு வருடங்களாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் 14 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  

'2009 ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளோம். இவ்வேலைத்திட்டத்திற்கு தனியான நிறுவனங்களோ, திணைக்களங்களோ முன்வராததால் இராணுவத்திடம் இப்பணி கையளிக்கப்பட்டது. இராணுவம் இவ்வேலைத்திட்டத்தை சரியாக செய்துள்ளதுடன் இப்போது புனர்வாழ்வு நிலையத்தில் 300 பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். அவர்களும் வெகு விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள். அத்துடன் சிறையிலிருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க தயாராகிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் செயற்படவில்லை. பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவே செயற்ப்பட்டது. இதேபோன்று ஜே.வி.பி. இயக்கத்திற்கு எதிராக இராணுவம் செயற்ப்பட்டதே தவிர சிங்கள மக்களுக்கு எதிராக செயற்ப்படவில்லை. ஆகவே த இராணுவத்தற்கு எதிராக தமிழ்மக்கள் கோபமோ, வைராக்கியமோ கொள்ளக்கூடாது. எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை மாத்திரமே நாங்கள் நிறைவேற்றினோம். எனவே நாங்கள் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் செயல்ப்பட்டு நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல வேண்டும். ஜே.வி.பி.யுடன் யுத்தம் செய்து அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டார்கள் ஆனால் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜே.வி.பி. அமைப்பின் கிளர்ச்சி முடிவடைந்து அவர்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள் இன்று எத்தனைபேர் பாராளுமன்றத்தில் உள்ளனர்? சமூகம் அவர்களை ஏற்றுக்கொண்டதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 30 வருடகால யுத்தம் எந்தவிதமான நன்மையையும் பெற்றுத்தரவில்லை .யுத்தத்தால் பொருளாதாரத்தில் கலாசாரத்தில் நாடு 30வருடங்கள் பின்தங்கிவிட்டது. இவ்யுத்தத்தில் மூவின மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இராணுவத்தை பொறுத்தமட்டில் நாட்டின் அபிவிருத்தியே முக்கியம். அத்துடன் இராணுவம் போராளிகளுக்கான புனர்வாழ்வு பணியை வெற்றிகரமாகவும் நிறைவாகவும் செய்துள்ளது என வும் அவர் குறிப்பிட்டார்.

 

army-general-010316-seithy.jpg

வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க தயாராகிவருவதாகவும் அவர் தெரிவித்தார். :rolleyes:

12 ஆயிரத்தை தாண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முதல்ல சொறீலங்காவை விட்டு வெளில வந்து உலகத்தைப் பார்க்கட்டும். அதன் பின் யாருக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டி வரும் என்பதை அவரே தீர்மானிப்பார். சொறீலங்காவுக்குள் ஒரு கிணற்றுக்குள் இருந்து கொண்டு வெற்றி மமதையில் எதனையும் சொல்லலாம். 

உங்களால் இனப்படுகொலைக்கு ஆளான மக்களுக்கு என்ன பண்ணினீர்கள். யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகப் போகிறது.. ஏன் தமிழ் மக்களின் பூமியை ஆக்கிரமித்து நிற்கிறீர்கள்..??! 

ஜேவிபியுடனான சண்டையில்.. நில ஆக்கிரமிப்பு என்ற ஒன்று நடந்ததோ...??!:rolleyes:tw_angry:

மோட்டு சிங்களவா ஜே.வி.பி யுத்தம்  தன் இனம் தானே மோதி கொண்டது. தமிழரது அப்படி அல்ல   ,ஒரு இனம் இன்னொரு இனத்தை அடித்து கொண்டது. ஜேர்மன் கிட்டலருக்கு ஒப்பானது..

எங்கள் வாழ்வுரிமை போரட்டத்தை    சிங்களத்துடன் சிங்களவன்  அடிபட்டதை ஒப்பிடமுடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வின் அர்த்தமா புரியுமா??

 

உனது நாட்டை விட்டு எதற்காக ஓடினார்கள் என்று ஆராய்வு  செய்..

புலத்தில் இருப்பவர் பிழையாக நடந்தால் அந்தந்த நாடுகள் அதைச்சொல்லட்டும்...

 

18 minutes ago, விசுகு said:

புனர்வாழ்வின் அர்த்தமா புரியுமா??

 

உனது நாட்டை விட்டு எதற்காக ஓடினார்கள் என்று ஆராய்வு  செய்..

புலத்தில் இருப்பவர் பிழையாக நடந்தால் அந்தந்த நாடுகள் அதைச்சொல்லட்டும்...

 

கட்டாயம் புனர்வாழ்வு அவசியம், யாருக்கு மாற்று கருத்து மாணிக்கம்ஸ் அண்ட் கூட்டமைப்பு விசுவாசிகள்.

நாட்டில யாருக்கு புனர்வாழ்வு கொடுத்தது என்றே தெரியாது போலிருக்கு .

மேஜர் சரியாகத்தான் பேசியிருகின்றார் பலரின் பதிலே அதை நிரூபிக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் எல்லா தீர்மானங்களையும் ஆதரித்தவன் நான்.

புலிகளின் துடைத்தெடுப்புக்கள் நியாயமானவை

சில தவறுகள் நடந்ததற்கும் ஆயுதத்துடன் நின்ற புலிகள் பொறுப்பல்ல

இன்றும் அதை இங்கே சிலர் நிரூபித்தே வருகிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் செயற்படவில்லை என்று சொல்கின்றார். உண்மையாகத்தானே இருக்கும்.<_<

6 minutes ago, கிருபன் said:

மேஜர் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் செயற்படவில்லை என்று சொல்கின்றார். உண்மையாகத்தானே இருக்கும்.<_<

இதையே தான் சர்வதேசம் இராக் ,ஆப்கானிஸ்தான் சிரியா மீதான போரில் சொல்கின்றார்கள் .

அவர்களிடம் இருந்து பாடம் கற்பவர்கள் தானே இலங்கை இராணுவமும் .

"துடைத்தெடுப்பு செய்தவர்களுக்கும் அதை ஆதரித்தவர்களும் தான் புனர்வாழ்வு" மேஜர் சரியாகத்தான் சொல்லியிருகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் நிர்வாகத்தினரின் புரிதலுக்கு!

பல தனிமனித தாக்குதல்களை நான் தொடர்ந்தும் செய்பவன் 
இனியும் தொடருவேன் என்று பலமுறை எழுதி இருக்கிறேன்.
பல நேரங்களில் நான் தனிமனித தாக்குதல்களை ஆதரிப்பதாக அதை விளங்கி கொண்டு 
எனது வெளிப்படையான தனிமனித தாக்குதல் தொடரும் என்ற கருத்தை நீங்கள் தூக்குவதுண்டு.

இன்னொருவன் சகதியில் கிடப்பதால் 
ஏன் நாமும் சகதியில் இறங்க வேண்டும் ? என்ற கேள்வி இன்னொரு நிஜாஜமனது போல தோற்றம் கொடுக்க கூடியது.

தனி மனிதர்கள் சமூக விரோதிகளாக மாறும்போது 
அவர்கள் மீதுதான் தாக்குதல் தொடர முடியும்.

மக்களின் ஜெனநாயக குரல்கல்களை அடக்குவோம் எனும் 
அடாவடித்தனம் உடைய சமூக விரோத நாய்களிடம் ஜெனநாயகம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

குரைக்கும் தெரு நாய்களுடன் நாமும் குரைத்து கொண்டு இருக்க முடியாது 
கல்லெறிந்து அடிக்க வேண்டும். அல்லது தெரு நாய்களின் பெருக்கத்தை குறைக்க வேண்டும். 

ஏகாபத்திய முதளித்துவ முதலாளிகள் ஏழை நாடுகளின் இயற்கை வளங்களை அழித்து 
இன்று தமது இரசாயன கலப்பு உணவு மருந்துகளை ஏழைகளிடம் விற்று ஏழைகளை 
மேலும் மேலும் ஏழைகள் ஆக்கும் துர்பாக்கிய நிலையை வெற்றி கரமாக செய்துவருகிறார்கள்.
மக்களுக்கு நலன் கொடுக்க கூடிய உள்ளூர் இயற்கை உற்பத்திகள் திட்டமிட்டு இல்லாது ஒழிக்க படுகிறது.

ஒரு சிறுபான்மை இனத்தை ஒரு பெரும்பாண்மை இனம் உலக வல்லாதிக்க ஏகாபத்தியங்களுடன் 
கூடி பல பிரிவினைகளை தூண்டி வெட்டி இரவோடு இரவாக பரம்பரையாக வாழ்ந்த கிராமங்களில் இருந்து 
துரத்தி அடித்து கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை என்று உலகில் இல்லாத துயரம் எல்லாம் கொடுத்து இன்று உலகின் ஓர் மூலையில் கேட்க நாதி அற்று ஏறியபட்டு இருக்கிறது.

விபச்சாரத்திட்கு பிறந்த சில விபச்சார குழந்தைகள் வெளி உலகம் தெரியாது வாழ்ந்த 
காரணத்தால் அந்த விபச்சாரத்தை வரேட்கிறது என்று எண்ணுகிறேன்.
அதற்காக சாதாரண மனிதர்கள் தன்மானத்தை அடகுவைக்க தேவையில்லை.

ஒரு மனிதன் நல்லவனாக அல்லது கெட்டவனாகத்தான் இருக்கமுடியும்.
இனத்தை காட்டி கொடுத்து 30வருட  வாழ்வை வாழ்ந்த பச்ச துரோகிகளிடம். யாரும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் துரோக நாய்களுக்கு துரோக புத்தி தவிர்த்து .... வேறு ஏதும் வந்தால்தான் அதிசயம்.

எஜமானிக்கு பல்லக்கு தூக்கும் பச்சை துரோகிகளை நாம் 80களிலேயே கடந்தவர்கள் 
எமது இனம்  வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்தித்தது. அதனால் அடுத்த கால கட்டத்தில் 
அது கலங்கி நின்றது கிடையாது. மீண்டும் எழுந்து நின்ற வரலாறுதான் தமிழன் உடையது. 

நாம் அரச பயங்கரவாத்தின் துயரத்தால் துன்பத்தால் தோய்ந்தவர்கள் 
எமது வலியின் தாக்கம் வார்த்தைகளில் தெறிக்கவே செய்யும்.

விபச்சார நாய்கள் விபச்சார விடுதிகளில் நின்று விளம்பரம் செய்தால் எமக்கு நட்டம் இல்லை 
நாடுகளில் இறங்கி சமூகத்தில் விஷம் கக்கும்போதுதான். தடியெடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை 
எமக்கு வருகிறது. 

யாழ்களத்தின் வளர்ச்சி  என்பது நகாரீகமான கருத்தாடலில் தங்கி இருப்பதால்தான் 
யாழ் களத்தின் நலன் கருதி பலர் தமது வாய்களை அடைத்து வைத்திருக்கிறார்கள் 
நான் கூட பல திரிகளில் எழுதுவதில்லை 
சில சில்லறைகளின் கருத்துக்களை வாசிப்பதை கைவிட்டு விட்டேன்.
தமிழ் இனத்தின் முன்னேற்றம் பற்றி யாழ் சிந்திக்கும்போது அது இன்னமும் சிறக்கும் என்பது 
என்னுடைய தனிபட்ட எண்ணம். (காரணம் வேற்று மொழி காரர் யாரும் இங்கே எழுதுவது இல்லை) 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ஸப்பா...! மருதரின் பாரதம் வாசிச்சு விளங்குவதற்குள் வேட்டி அவுந்துடும் போலிருக்கு..! இப்படியே uptight ஆக இருந்தால் மூல வியாதி தான் வரப்போகுது! :rolleyes:

52 minutes ago, Justin said:

ஸ்ஸப்பா...! மருதரின் பாரதம் வாசிச்சு விளங்குவதற்குள் வேட்டி அவுந்துடும் போலிருக்கு..! இப்படியே uptight ஆக இருந்தால் மூல வியாதி தான் வரப்போகுது! :rolleyes:

யாழில் நாங்கள் செய்வதும் ஒரு வித புனர்வாழ்வுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

இணையதளத்தில் குந்தி இருந்து "ப்ரீ அட்வைஸ்" கொடுப்பதுவும்  புனர்வாழ்வா? 
அப்ப சரி புலத்தில ... இருந்தும் நாட்டுக்கு போராடலாம், தவறுசெய்பவர்களை தோலுரித்தும் காட்டலாம்.
    

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் சொல்லுவதற்கு எல்லாம் ஆமா போட்டால், அது புனர்வாழ்வே?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, arjun said:

வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க தயாராகிவருவதாகவும் அவர் தெரிவித்தார். :rolleyes:

12 ஆயிரத்தை தாண்டும் .

அண்ணை நீங்களும் இந்த லிஸ்ட்டில் தான் இருக்கிறீர்கள் .....
முதலில் லைனில் நின்று  பெயரை பதிந்து துண்டு வாங்குங்கள் .....பிறகு உங்களுக்கு புனர்வாழ்வு அவசியமா இல்லையா என்பதை மேஜர் தீர்மானிக்கட்டும்  

 

 

3 hours ago, Justin said:

ஸ்ஸப்பா...! மருதரின் பாரதம் வாசிச்சு விளங்குவதற்குள் வேட்டி அவுந்துடும் போலிருக்கு..! இப்படியே uptight ஆக இருந்தால் மூல வியாதி தான் வரப்போகுது! :rolleyes:

ஜஸ்டின் அண்ணை ...நீங்களும் இந்த லிஸ்ட்டில் தான் ......வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு என்று தான் மேஜர் போட்டிருக்கிறார் 
(Scholarship இல போனவங்களுக்கு exemption இருக்கா என்பது பிறகு)  
லைனில் நின்று  பெயரை பதிந்து துண்டு வாங்குங்கள்...பிறகுதான் உங்கட படிப்பு இன்ன பின்ன இத்தியாதிகள்  எல்லாம் கணக்கில எடுபடும்

இங்க உப்பிடித்தனே புனர்வாழ்வுக்கு அனுப்பினவைகள் ....அங்கையும் அப்படித்தானே செய்யனும் ...அதுதானே முறை  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை நீங்களும் இந்த லிஸ்ட்டில் தான் இருக்கிறீர்கள் .....
முதலில் லைனில் நின்று  பெயரை பதிந்து துண்டு வாங்குங்கள் .....பிறகு உங்களுக்கு புனர்வாழ்வு அவசியமா இல்லையா என்பதை மேஜர் தீர்மானிக்கட்டும்  

 

 

ஜஸ்டின் அண்ணை ...நீங்களும் இந்த லிஸ்ட்டில் தான் ......வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு என்று தான் மேஜர் போட்டிருக்கிறார் 
(Scholarship இல போனவங்களுக்கு exemption இருக்கா என்பது பிறகு)  
லைனில் நின்று  பெயரை பதிந்து துண்டு வாங்குங்கள்...பிறகுதான் உங்கட படிப்பு இன்ன பின்ன இத்தியாதிகள்  எல்லாம் கணக்கில எடுபடும்

இங்க உப்பிடித்தனே புனர்வாழ்வுக்கு அனுப்பினவைகள் ....அங்கையும் அப்படித்தானே செய்யனும் ...அதுதானே முறை  

ஐயோ ராசா, நான் ஸ்கொலர்ஷிப்பில வரவே இல்லை! அப்படி வந்திருந்தாலும் நான் வாய் விட்டுச் சொல்லமாட்டன் இனி! இத்தோட zip !

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஐயோ ராசா, நான் ஸ்கொலர்ஷிப்பில வரவே இல்லை! அப்படி வந்திருந்தாலும் நான் வாய் விட்டுச் சொல்லமாட்டன் இனி! இத்தோட zip !

வேறொன்றுமில்லை ஜஸ்டின் அண்ணை 
எங்களுக்கு நல்லிணக்க வாத்திமார் பாடமெடுக்கும் போது ....எல்லோரையும் ஒரே தராசில் வைக்க வேண்டும் என்று சொல்லித்தந்தவைகள் 
படிப்பித்த பாடத்தை வாத்தி மறக்கலாம் ....படித்த மாணவர்கள் மறக்கலாமோ .....? அதுதான் ....
மேலும் நீங்க முதலொருதரம் கூத்தமைப்பிட்கெதிரான ஆர்ப்பாட்டம் பற்றி கேட்டிருந்தியல் என்று ஞாபகம் .....குறைந்த பட்சம் கொழும்பிலாவது நடந்ததா என்றும் கேட்டிருந்தியல் ......இன்றைய சக்தி டி.வி செய்தி பாருங்கோ சம்பூர் மக்களிடம்  தெருவில் வைத்து சாத்தாத குறையா சம் அய்யா வாங்கி கட்டுகிறார்...
அவரது திருமலை மண்ணிலேயே நடக்கிறது .....காலம் பதில் சொல்கிறது  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.