Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரபாகரன் அஞ்சினார்'

Featured Replies

'பிரபாகரன் அஞ்சினார்'
 
'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், துப்பாக்கி மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர், ஆயுதங்களைக் களைவதற்கு அஞ்சியமையால், ஒவ்வொரு செயற்பாடும் தோல்வியடைந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள்; மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயற்பட்ட தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எழுதியுள்ளார்.

அவர் மரணிப்பதற்கு முன்னர் எழுதிய இரண்டு புத்தகங்களிலேயே மேற்கண்டவாறு எழுதியுள்ளார்.

ஒரு கூர்வாளின் நிழலில், போர்க்காலம் ஆகிய இரண்டு புத்தகங்களையே அவர், எழுதியுள்ளார்.அவ்விரு புத்தகங்களின் வெளியீட்டு விழா, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்றது.

அவர், தன்னுடைய ஒரு கூர்வாளின் நிழலில், எனும் புத்தகத்தில், பிரபாகரன் தன்னுடைய பாதுகாப்பு தொடர்பில் எச்சந்தர்ப்பத்திலும் சந்தேகத்துடனேயே இருந்தார். சமாதான ஒப்பந்தத்தின் பெறுபேறாக நிராயுதமாகிவிடுவோம் என்றும் அது பாதுகாப்பற்றது என்றும் பிரபாகரன் கவனஞ்செலுத்தியிருந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல, இறுதி யுத்தத்தில் தோல்வியடைவதற்கான பிரதான காரணங்கள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 வருடங்கள் தொடர்ச்சியாக யுத்தம் செய்தமையால் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள், கடும் மனவழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தின் புலனாய்வாளர்கள், புலிகள் அமைப்பின் உள்துறைக்குள் நுழைந்தமை, நான்காவது ஈழப்போரின் கட்டளையிடும் தளபதிகள் 45 மற்றும் 50 வயதுகளை உடையவர்கள், அவர்களால் 1 கிலோமீற்றர் தூரம் கூட ஓடிச்செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர் என்பன, மிக முக்கியமான காரணங்களாக அமைந்திருந்தன என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (நன்றி: லங்காதீப)

- See more at: http://www.tamilmirror.lk/168572/-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B0-#sthash.oRZ5AyoV.dpuf
  • Replies 95
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்புத்தகங்கள் இவர் தான் எழுதினாரா அல்லது அவர் எழுதியவற்றுக்குள் செருகல்கள் வேறு யாராலோ வைக்கப்பட்டது போலுள்ளது. எப்படி இரு புத்தகங்களும் அவர் இறந்த பின் வெளிடப்படுகிறது?

  • தொடங்கியவர்

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? : வெளிவராத உண்மைகள் : தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’  

thamizini_book._jpg.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்டகுறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

கிளிநொச்சி கூட்டுறவுக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 3.0 மணியளவில் கவிஞர் பொன். காந்தன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.Thamilini_7.JPGThamilini_5.JPGThamilini_6.JPG

புத்தகத்தின் சில பகுதிகள்

தலைவரைப்பற்றியது :-

“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;

“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”

தமிழினியின் கருத்தாக:-

“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார். அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது. 2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதூர், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது. புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.” “Thamilini_4.JPG

 எதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி::-

“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப்பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப்போல சுதாகரித்துக் கொண்டேன். சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார். அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.

சளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது. அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிக இயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது. அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்

யுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான்:-

மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;

“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள், இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான் அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப்போகுது, யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதை கூறுவதற்காகத்தான்”.

அத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒரு வார்த்தை கூறப்படவில்லை. பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-

விதுஷா தமிழினியிடம்கூறியது :-

“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா. ”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”

“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்..:: “

http://www.virakesari.lk/article/4441

இலங்கை இரானுவம் தான் மாவிலாறில் முதலில் தாக்கியது

புலிகள் முதலில் தாக்கினார்கள் என்று கூறுவது தவறு

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, raja.m1982 said:

இலங்கை இரானுவம் தான் மாவிலாறில் முதலில் தாக்கியது

புலிகள் முதலில் தாக்கினார்கள் என்று கூறுவது தவறு

இனி  இப்படித்தான்...

கனக்க வாசிக்கலாம்....

தலையங்கமே

பிரபாகரன் அஞ்சினார்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாற்றில் இராணுவம் தாக்குதல் செய்வதற்கான காரணியை புலிகளே ஏற்படுத்தினர்.

உண்மைகள் என்றும் உறங்குவதில்லை ,

இன்னும் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

லங்காதீப விமர்சனம் எழுதிற அளவுக்கு புத்தகம் வந்திருக்குது...

சாவுக்கு முன்னம் அக்கா ஒருக்காலும் சொல்லேல்ல இத்தனை புத்தகம் வெளியிடப் போறன் என்று.. முகநூலில் எல்லாம் முகம் காட்டியதாகப் பேசப்பட்ட போது கூட... (அது அவாட ஐடியோ என்பதில் ஐயம் வேறு உள்ளது) உதுகளை அங்கேயே எழுதி இருக்கலாம்....

மேலும்... சொறீலங்கா இராணுவத் தளபதிக்கு யுத்தம் செய்யேக்க வயசு 20.. கட்டளத் தளபதிகளுக்கு வயசு 18.. எல்லாம் களத்தில் ஓடித்திரிசவை.. புலிகள் மட்டும் தான் வயசான தளபதிகளை வைச்சிருந்தவை..

தளபதிகளுக்கு 45 வயசு என்பது பெரிய பிரச்சனை.. தோல்விக்கான முக்கிய காரணம்...?! முடியல்ல...?!

கேட்கிறவன் கேணயன் என்றால்.. எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்.

தமிழர்களில் இன்னும் முட்டாள்கள் உள்ளனர் என்று சிங்களமும் சில தமிழர்களும் திடமாக நம்புகிறார்கள். அவர்களுக்கு அப்படி இல்லை என்று சொல்ல முடியாத வகைக்கு தமிழரில்... முட்டாள்களும் உள்ளனர் தான். அதுவும் சும்மா முட்டாள்கள் இல்ல.. உண்மையா இருக்குமோ.. இல்லையோ என்று ஒரு சதத்திற்கும் பிரயோசனமற்றவற்றில் சந்தேகம் வைக்கக் கூடிய முட்டாள்கள். 

இந்த நூல்களின் வரவு தமிழர்களை.. அவர்களின் அரசியல் இலக்குகளை திசை திருப்பும்.. போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறது.

காரணம் உண்மை என்று.. சம்பந்தப்பட்டவர்கள் எவருமே.... பிரச்சன்னம் ஆகாத சூழலில்.. சொல்லப்படுவதில் இருந்து.. அங்கு எதுவுமே உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற யதார்த்தம் கூட எழ வாய்ப்புள்ள நிலையில்...... அதுவும் எதிரியின் ஆசீர்வாதம் பெறப்பட்டு.. வரும் ஆக்கங்களில் தங்கி இருக்கும் உண்மை எவ்வளவு என்பதை....  சாதாரண மக்கள் இலகுவாக எடை போட்டுக் கொண்டு.. தங்களுக்கு தேவையான தற்கால அரசியலை நோக்கி முன்னேறுவதே சிறப்பு ஆகும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ,இலங்கை அரசியலில் இருந்து எவ்வளவு விரைவாக அகற்ற முடியுமோ அவ்வளவு வேகமாக அகற்றுவது 

அங்கு அரசியல் செய்வோருக்கு அவசியம் .

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நந்தன் said:

புலிகளை ,இலங்கை அரசியலில் இருந்து எவ்வளவு விரைவாக அகற்ற முடியுமோ அவ்வளவு வேகமாக அகற்றுவது 

அங்கு அரசியல் செய்வோருக்கு அவசியம் .

இங்கு அரசியல் செய்ய முயலுவோருக்கும் அது முக்கியம் நந்தன்...

Quote

எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்

புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற தலமையின் காலத்தில் தமிழீழம் அல்லது சுதந்திரம் கிடைத்தால் உண்டு இல்லையோல் எப்போதும் இல்லை என்பது எப்போதும் உணரப்பட்ட அல்லது எதிர்பாரக்கப்பட்ட விசயம். ஏனெனில் சாதிமதபிரதேசவாதங்களை முன்னுக்கு வைத்து இனத்தேசியத்தை இரண்டாம் பட்சமாக கொண்ட தமிழர் சமுதாயத்தில் இனவிடுதலைப்போராட்டமோ அதன் நிமிர்த்தம் விடுதலையோ சாத்தியமில்லை என்பது வெளிப்படையாக உணரப்பட்ட விசயம். புலிகள் தலமையின் காலத்தில் விதிவிலக்காக இனவிடுதலை கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்புகள் சிதறியதன் மறுதாக்கமாக சில பிரச்சனைகள் பேசப்படுகின்றது. விமர்சிக்கப்படுகின்றது.குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இவற்றால் எந்த ஒரு மாற்றமும் நிகழ்வதற்கு இல்லை. அதாவது இனத்தேசீய அடிப்படையில் ஐக்கியப்படவோ இல்லை பலப்படவோ போவதில்லை. மாறாக மறிமாறி சொறிவதற்கு சில வாய்ப்புகள் அமைகின்றது.

இனப்பிரச்சனையை காரணம் காட்டி நாங்கள்  வெளிநாடுகளுக்கு வந்து குடியேறினோம் தவிர போராட்டத்தில் ஐக்கியப்படவில்லை. கேட்டால் கொள்கை பிடிக்கவில்லை கொடி பிடிக்கவில்லை என நியாயப்படுத்துவோம்

போராட்டம் முடிவுக்கு வரமுதலே இது இனி சரிவராது என்று சேர்த பணத்தை அமுக்கிவிட்டார்கள்

எங்களுக்குள் நாங்கள் போட்டுத்தள்ளியதை ஒரு தனிமனித குற்றமாக அணுகினார்களே தவிர அது சமூகத்தின் இயல்பு என்பதை எப்போதும் எற்பதில்லை. தமக்குள் தாமே இரைதேடும் மானுட விரோதத்தை இயல்பாகக்கொண்ட சமுதாயத்தில் துரோத்துக்கு எப்போதும் பற்றாக்குறை இருக்காது.  

இனவிடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அது முடிவுக்கு வந்ததை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு ஆச்சரியம் சற்று சிந்தித்தால் இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இந்த இனம் எதை பிரதானமாக தன்னுள் வைத்திருக்கின்றதோஅல்லது வைத்திருக்க விரும்புகின்றதோ அதில் வெற்றிபெற்றிருக்கின்றது. இனவிடுதலைப்போராட்டம் முதலில் தமிழர்களிடமே தோற்றது. அதற்கு பிரபாகரன் என்ற தனிமனிதனை காரணம் காட்டி சுட்டுவிரலை எத்தனைபேர் நீட்டினாலும் மற்றவிரல்கள் அனைத்தும் அவரவரையே சுட்டும். எப்போது நாம் மிச்ச நான்கு விரல்களையும் பற்றி பேச முற்படுகின்றோமோ அப்போது அதற்கு பலனிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இனி பிர‌பாகரன் கெஞ்சினார்,கொஞ்சினார்,மிஞ்சினார் என பல கட்டுரைகள் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சண்டமாருதன் said:

நன்றி ஐயா.....

15 hours ago, arjun said:

உண்மைகள் என்றும் உறங்குவதில்லை ,

இன்னும் வரும் .

உண்மைகள் என்றும் உறங்குவதில்லை என்பது எல்லாருக்கும் பொருந்தும்.

இறந்தவரை பற்றி கதைக்க கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் சில விடயங்களை நான் தவிர்க்கிறேன்.

ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். உங்களுக்கு தெரிந்தவரை தமிழினி (சிவகாமி) எங்கு வைத்து எப்போது கைது செய்யப்பட்டார்/சரணடைந்தார்  என்பதை அவரின் கணவரிடம்/ தெரிந்தவரிடம் விசாரித்து பதில் அளியுங்கள்.

அந்த உண்மையை கூட சொல்ல தெரியாதவர்கள் போராட்டத்தை பற்றிய உண்மைகளை எழுதுவதை, அதை புத்தகமாக்கி வெளியிடுபவர்களையும் , புலிகளை வைத்து புலம்பெயர் சந்தைபடுத்தல், வாணிபம் செய்தவர்களையும் எனக்கு வேறுபடுத்திபார்க்க தெரியவில்லை.

என்னை பொறுத்தவரை இந்த விடயத்தை பார்க்கும் போது "போராட்டத்தை தனக்கு பின் மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்கசொன்ன" தலைவர் தான் ஞாபகம் வருகிறார். 

தமிழ்செல்வனின் மறைவிற்கு பின்னர் சில மாதங்கள் தமிழினி அரசியல் துறைபொறுப்பில் இருந்து நீக்கபட்டு மாலதி படையணியை சேர்ந்த ரசியப்பிரியா அரசியல்துறை பொறுப்பாளர் ஆக்கப்பட்டதன் பின்னணி பற்றி எழுதாதவரை, 

தமிழினியின் பரவிப்பாஞ்சான் முகாமில் வாயிற்றினுள்ளே எறிகுண்டை வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்போராளிகளை பற்றி தமிழினி எழுதாதவரை, இதுவும் தற்புகழ்ச்சி நிறைந்த ஒரு போராளியின் சுயசரிதையாகவே பார்க்கப்படும்.

மற்றவர்கள் எழுதவில்லை என்பதற்காக உண்மையான போராட்ட வரலாற்றை யாராலும் மாற்றமுடியாது என்பதை சிவகாமியின் கணவரான ஜெயக்குமாரனுக்கு தெரியபடுத்திகொள்ள விரும்புகிறேன். 

தமிழினியை இங்கிலாந்து கூப்பிடுவதற்காக ஜெயகுமாரனுக்கு வேலை வாங்கி கொடுத்தவர்களில் இருந்து, குறிப்பிட்ட வரித்தொகை காட்டினால் மட்டுமே sponser பண்ணக்கூடியதாக இருக்கும் என்று அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வரை இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்பதை அவருக்கும் அவரை ஆட்டுவிப்பவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

உண்மைகள் என்றுமே சாவதில்லை.

4 hours ago, சண்டமாருதன் said:

வைகோவின் வாரிசு போல ,எப்ப எவருடன் கூட்டு வைப்பார் என்ன பேசுவார் என்று யாருக்கும் தெரியாது .

புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற தலமையின் காலத்தில் தமிழீழம் அல்லது சுதந்திரம் கிடைத்தால் உண்டு இல்லையோல் எப்போதும் இல்லை

இது புலிகளின் தளபதிகளால் போராளிகளுக்கு உயிரை பலி கொடுபதற்கு சொல்லபட்ட விடயம் ,

புலிகள் தமிழ் ஈழம் எடுப்பார்கள் யாரும் நம்பியிருந்தால் அந்த கூட்டத்திற்குள் சேர்ப்பதை தவிர வேறுவழியில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

இறந்தவரை பற்றி கதைக்க கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் சில விடயங்களை நான் தவிர்க்கிறேன்.

ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். உங்களுக்கு தெரிந்தவரை தமிழினி (சிவகாமி) எங்கு வைத்து எப்போது கைது செய்யப்பட்டார்/சரணடைந்தார்  என்பதை அவரின் கணவரிடம்/ தெரிந்தவரிடம் விசாரித்து பதில் அளியுங்கள்.

அந்த உண்மையை கூட சொல்ல தெரியாதவர்கள் போராட்டத்தை பற்றிய உண்மைகளை எழுதுவதை, அதை புத்தகமாக்கி வெளியிடுபவர்களையும் , புலிகளை வைத்து புலம்பெயர் சந்தைபடுத்தல், வாணிபம் செய்தவர்களையும் எனக்கு வேறுபடுத்திபார்க்க தெரியவில்லை.

என்னை பொறுத்தவரை இந்த விடயத்தை பார்க்கும் போது "போராட்டத்தை தனக்கு பின் மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்கசொன்ன" தலைவர் தான் ஞாபகம் வருகிறார். 

தமிழ்செல்வனின் மறைவிற்கு பின்னர் சில மாதங்கள் தமிழினி அரசியல் துறைபொறுப்பில் இருந்து நீக்கபட்டு மாலதி படையணியை சேர்ந்த ரசியப்பிரியா அரசியல்துறை பொறுப்பாளர் ஆக்கப்பட்டதன் பின்னணி பற்றி எழுதாதவரை, 

தமிழினியின் பரவிப்பாஞ்சான் முகாமில் வாயிற்றினுள்ளே எறிகுண்டை வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்போராளிகளை பற்றி தமிழினி எழுதாதவரை, இதுவும் தற்புகழ்ச்சி நிறைந்த ஒரு போராளியின் சுயசரிதையாகவே பார்க்கப்படும்.

மற்றவர்கள் எழுதவில்லை என்பதற்காக உண்மையான போராட்ட வரலாற்றை யாராலும் மாற்றமுடியாது என்பதை சிவகாமியின் கணவரான ஜெயக்குமாரனுக்கு தெரியபடுத்திகொள்ள விரும்புகிறேன். 

தமிழினியை இங்கிலாந்து கூப்பிடுவதற்காக ஜெயகுமாரனுக்கு வேலை வாங்கி கொடுத்தவர்களில் இருந்து, குறிப்பிட்ட வரித்தொகை காட்டினால் மட்டுமே sponser பண்ணக்கூடியதாக இருக்கும் என்று அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வரை இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்பதை அவருக்கும் அவரை ஆட்டுவிப்பவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

உண்மைகள் என்றுமே சாவதில்லை.

நீங்களெல்லாம் பேச வேண்டும்

ஆனால் பொய்களை விரும்பும்

எதிர்பார்க்கும்

ஊக்குவிக்கும் தருணம் இது...

என்ன பேசப்போகிறீர்கள்?

எங்கு பேசப்போகிறீர்கள்?

யாரிடம் பேசப்போகிறீர்கள்??

சிலவேளைகளில் நான் நினைப்பதுண்டு

ஏன் சில உண்மைகளை அறிந்து கொண்டேன் என்று.

இருந்தபோதும் புலிகளின் முழுமையையும் யாரும் அறிந்ததில்லை.

அது என்னைப்பொறுத்தவரை நல்லது

ஆனால் பொய்களை பரப்புபவர்களுக்கு

எதிர்பார்த்து ஊக்குவிப்பவர்களுக்கு .........???

இருந்தபோதும் பொறுமையே வெல்லும்

உண்மைகள் என்றோ ஒருநாள் தனது கடமையைச்செய்யும்

நம்புவோமாக.

இதுவும் கடந்து போகக்கடவது....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இறந்த பிறகு அவரின் பெயரில் புத்தகம் வெளியிடப்படுமாயின் அந்தப் புத்தகத்தில் இருப்பது முழுவதும் அவரின் உண்மையான கருத்துத்தான் என்று உறுதியாகக் கூறமுடியாது.இந்தப் பத்தகத்தை அவர் புனர்வாழ்வு பெற்ற காலத்தில் வெளியிட்டிருந்தால் அவருடைய குடும்ப கஸ்டத்தையாவது போக்கியிருக்கலாம். புத்தகம் இதே கருத்துக்களைத் தாங்கியிருந்தால் அந்த நேர அரசாங்கமே அதை வெளியிட அனுமதித்திருக்கும். இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை அவர் சரணடைய முதல் கொண்டிருந்த கருத்துக்களாகவோ அவருடைய கருத்துக்களாகவோ எற்க  எந்த ஆதாரமும் இல்லை.

இந்தப்புத்தகத்திட்கு பொலிஸ் உத்தரவு அது இது என்று சீன் போடேக்கையே தெரியும் விளையாட்டு நடக்குதெண்டு. தமிழினி ஆள் சேர்த்தவ அது இது எண்டு கதைச்சவை வந்திட்டினம் உண்மை பொய் உலகத்திற்கு  காட்ட.

மே 19 போராட்டம் எப்படி முடிஞ்சதெண்டு எங்கள் தலைவர் அண்ணன் பிரபாகரனை தவிர வேற ஒரு கொம்புக்கும் தெரியாது. இதுதான் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Surveyor said:

நீங்க எழுதும் போது  எழுதுகிறீர்கள் - எங்கள் அண்ணன் பிரபாகரன் என்று.

தமிழினி எழுதியதாக இருக்கு - விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அஞ்சினார் என்று.

நம்பினால் நம்புங்கள்.

நான் வரல இந்த விளையாட்டுக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

வர வர இந்தப் புத்தகத்தின் மீது சந்தேகம் வலுக்கவே செய்கிறது.

ஆனால் முழுதாய் வாசிக்காமல் சொல்ல முடியாது.

"அஞ்சினார்" என்பது பயப்பட்டார் என்ற அர்த்தத்தில் மட்டும் பார்க்கப்படாமல், "கவலைப்பட்டார்" என்ற அர்த்ததிலும் பார்க்கப் படலாம். ஆங்கிலத்தில் concerned என்ற பதத்தை தமிழில் அஞ்சுதல் என்றே பெரும்பாலும் மொழி பெயர்கிறோம்.

இங்கே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். தனிநாட்டுக்கான புலிகளின் போராட்டம் பிரபாவோடு அழிந்து விட்டது, இப்போ புலிகள் என்று ஊரிலும் வெளியிலும் யாருமில்லை என்பதை பகலவன் போன்றவர்களே ஏற்கும் நிலை வந்துளது. 

பிரபா இதைதான் "மொத்தமாயும் சில்லறையாயும்" விற்பது என்றார்.

உங்களில் யாருக்காவது எதாவதொரு அமைப்பை காட்டி, இவர்கள்தான் புலிகளின் அசல்(genuine decedents ) வாரிசுகள் என சொல்ல முடியுமா?

இல்லை, லண்டனில் மாவீரர் இல்லம் கட்டுறவை, கோயில்காரர், பிரான்சு ரவுடிக்கூட்டங்கள், முன்பு ராம், இப்போது தமிழினி இவ்வாறு புலி எனச் சொல்லும் எல்லோரின் மீதும் கள்ளர் எனும் நியாயமான சந்தேகம் முற்றாய் பதிந்து விட்டது.

புலத்திலும் இப்போ புலி என்று சொல்லுவோரை சனம் ஆடு களவெடுக்கிறவன் ரேஞ்சுக்கு பார்க்கத் தொடங்கி விட்டது.

இதுதான் பிரபா கூறிய " மொத்தமாயும் சில்லறையாயும்" புலியை விற்கும் நிலை.

காந்தி காலத்தில் இருந்ததுதான் காங்கிரஸ், இப்போ இருப்பது கள்ளர் காங்கிரஸ்.

அண்ணா காலத்தில் இருந்ததுதான் திமுக, இப்போ இருப்பது கள்ளர் திமுக.

பிரபா காலத்தில் இருந்ததுதான் புலி ........

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்களுடைய இந்தக்கருத்தோடு  உடன் படுகின்றேன்

பச்சை கைவசமில்லை...

அதனால் தான் ஆரம்பத்திலிருந்தே

2009க்கு முன் புலிகள்

2009க்கு பின் புலிகள் என எழுதிவருகின்றேன்.

ஆனால் புலிகள் இல்லாமலில்லை

இனி அவர்களது செயல்கள் மூலம் அவர்கள் வளரணும்

அது புலியாகவும் இருக்கலாம்

வேறு வடிவிலும் இருக்கலாம்

வரவேண்டும்

வருவார்கள்  என்ற நம்பிக்கையுண்டு.....

ஏனெனில் அண்ணையின் வளர்ப்பில் எந்த சந்தேகங்களும் எனக்கில்லை.

5 hours ago, arjun said:
Quote

Quote

வைகோவின் வாரிசு போல ,எப்ப எவருடன் கூட்டு வைப்பார் என்ன பேசுவார் என்று யாருக்கும் தெரியாது .

புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற தலமையின் காலத்தில் தமிழீழம் அல்லது சுதந்திரம் கிடைத்தால் உண்டு இல்லையோல் எப்போதும் இல்லை

இது புலிகளின் தளபதிகளால் போராளிகளுக்கு உயிரை பலி கொடுபதற்கு சொல்லபட்ட விடயம் ,

புலிகள் தமிழ் ஈழம் எடுப்பார்கள் யாரும் நம்பியிருந்தால் அந்த கூட்டத்திற்குள் சேர்ப்பதை தவிர வேறுவழியில்லை 

கூட்டு வைப்பதறகு இங்கு இரண்டு தரப்புகள் என்று எதுவும் இல்லை. நீங்கள் எப்போதும் புலி அல்லது புலி எதிர்ப்புத் தரப்பு என்ற இரு தரப்பை நிலுவையில் வைததிருக்க முனைபவர். ஏனெனில் அதுவே காலாககாலததிற்கும் சொறிந்துகொண்டிருக்க வசதியாய் இருக்கும். தியாகி துரோகி என்ற வாதங்களும் சொறிந்துகொண்டிருக்க இதமானது. இவற்றை கடந்து போவது தவிர்க்க முடியாமல் நிகழும். 

புலிகளை தவிர வேறு யார் தமிழீழம் எடுப்பார்கள் என்று நம்பினார்கள்? தமிழரசுக்கட்சி ? கூட்டணி ? அல்லது 30க்கும் மேற்பட்ட இயக்கத்தில் ஒன்று? 

இலங்கையில் வாழும் தமிழர்களானாலும் சரி இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஆனாலும் சரி அவர்கள் தனித்து தம்மை ஆழும் தகுதியற்றவர்கள். இவர்களுக்குள் இருக்கும் பல்வேறு சமூக முரண்பாடுகளும் பிளவுகளும் இனக்கட்டுமானத்திற்கான அடித்தளத்தையும் சுய ஆட்சியை ஏற்படுத்துவதையும் நிர்மூலமாக்கிவிட்டது. பல நூறாண்டுகளாக தொடரும் இன்னும் தெடரப்போகும் நிகழ்வு இது. இடையில் முப்பது வருடம் புலிகளின் காலம். இந்த முப்பது வருட காலம் இனத்தின் பாரம்பரிய அசைவியக்கத்திற்கு விதிவிலக்காக இனம் தேசீயம் என்பது முன்னிலைப்படுத்தப்பட்டு சுயாட்சி வரலாம் என்ற நம்பிக்கை சிறிதளவு ஏற்பட ஏதுவான காலமாக இருந்தது. தமிழர்களின் சமூக முரண்பாடுகளின் கால நீட்சியையும், இரவல் கலாச்சாரம் மற்றும் இரண்டாம் தரமாக பண்பாடு கலாச்சரத்தை சார்ந்திருக்கும் தன்மையும் ஒட்டுண்ணி வாழ்க்கை மீதான ஈடுபாடும் எப்போதும் இவர்களுக்கு தனித்துவமோ விடுதலையோ அவசியம் அற்றது என்பதை வலியுறுத்தும். புலிகளின் அழிவு உட்பட போராட்டம் முடங்கிப்போனதை இவ் வலியுறுத்தல் ஊடாகவே புரிந்துகொள்ள முடியுமே தவிர தனிமனிதர்களை அவர்கள் கருத்துக்கள் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி இல்லை. அவ்வாறு சுட்டிக்காட்டுதல் சமூக முரண்பாட்டு உளவியல் ஊடாக ஏற்படும் அரிப்பும் சொறிதலும் என்பவற்றுக்குள் மட்டும் அடங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

உங்களுடைய இந்தக்கருத்தோடு  உடன் படுகின்றேன்

பச்சை கைவசமில்லை...

அதனால் தான் ஆரம்பத்திலிருந்தே

2009க்கு முன் புலிகள்

2009க்கு பின் புலிகள் என எழுதிவருகின்றேன்.

ஆனால் புலிகள் இல்லாமலில்லை

இனி அவர்களது செயல்கள் மூலம் அவர்கள் வளரணும்

அது புலியாகவும் இருக்கலாம்

வேறு வடிவிலும் இருக்கலாம்

வரவேண்டும்

வருவார்கள்  என்ற நம்பிக்கையுண்டு.....

ஏனெனில் அண்ணையின் வளர்ப்பில் எந்த சந்தேகங்களும் எனக்கில்லை.

இங்கேதான் நான் உங்களுடன் முரண்படுகிறேன். பிரபா வளர்த்தவர்கள்தான் ராமும், கேபியும், கருணாவும், தமிழினியும், இங்கே நாம் சந்தேகிக்கும் இன்னும் பலரும்.

இதே சந்தேகம் எனக்கு சீமான் மீதும் உண்டு. அண்ணா வளர்ப்பு என்று கலைஞரை நம்ப முடியாது.

புலிகள் இனி இல்லை. அவர்கள் தம் காலத்தில் கொள்கையுறுதியுடன் போராடினார்கள். முயற்சித்தார்கள், முடியவில்லை, மடிந்து போனார்கள்.

அவர்களது கொள்கைகூட, பிரபாவின் கடைசி 5 வருடத்திலேயே காலாவதியாகி விட்டது. அவர் இருக்கும் மட்டும் இழுத்துப் பிடித்தார் அவ்வளவே.

இனி நாம் ஒரு புதிய தலைமையை, புதிய அணுகுமுறையை கட்டி எழுப்பவேண்டும்.

தொடர்ந்தும் இல்லாத புலிக்கு இலவு காத்திருப்பது, எல்லாளன் வரவுக்கு காத்திருப்பது போன்றது.

அது புலி வேடம் போட்டு கொள்ளை அடிப்பவர்களின் சொத்துக்கணக்கை கூட்டுவதை தவிர வேறு ஏதும் செய்யாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

சகோதரா

இவ்வாறு தான் நாம் பேசணும் என நான் விரும்புகின்றேன்

ஆளையாள் கோபப்படுத்தாமல்

சீண்டாமல்

எனக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவன் எல்லாம் முட்டாள் என்றில்லாமல் பேசினால்...

பலவற்றை பகிரலாம்

கிரகிக்கலாம்

ஒரு புதுப்பாதை தேடலாம் என்பதே எனது பலநாள் கனா.

மேலே நீங்கள் எழுதியுள்ளவர்கள் புலிகளில் மிக மிக சிலரே..

அதிலும் ராம் கேபியர் மற்றும் தமிழினி ஆகியோரை இங்கு சேர்க்கமுடியாது

கேபியர் 2009க்கு முன்னரா?

பின்னரா என்பதே கேள்வி. 

தமிழினி இதை எழுதினாரா என்றே தெரியாதபோது......??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.