Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறால் உள்ளி Sauce பொரியல்: என் செய்முறை

Featured Replies

கடந்த வாரம் சீன உணவகம் ஒன்றில் சாப்பிட்ட இவ் சாப்பாடு நன்றாக இருந்தமையால் அதனை வீட்டில் செய்து பார்த்தேன். செய்முறையின் அடிப்படையை இணையத்தில் வாசித்த பின் எனக்கேற்ற மாதிரி மாற்றியுள்ளேன்

தேவையானவை:

1. கொஞ்சம் அளவில் பெரிய இறால் 1 இறாத்தல்

2. உள்ளி 5 பற்கள்

3. சோயா சோர்ஸ் (Soya sauce) 1.5 மேசைக் கரண்டி

4. உறைப்பு Chili Sauce 1.5 மே.க

5. சீன அரிசி வைன் (Chinese rice wine): 2 மே.க

6. சீன நல்லெண்ணெய் (Chinese sesame oil)- 1. மே.க

7. ஒலிவ் எண்ணெய் 1. மே.க

8. Non fat சோளம் எண்ணெய்

9. சீனி 1. மே.க

செய்முறை:

1. இறாலை தோல் உரித்து, கழுவி வைத்துக் கொள்ளவும்

2. உள்ளியை இடிச்சு பசை மாவாக (Garlic Paste) ஆக்கவும்

3. ஒரு பாத்திரத்தில் சோயா சோஸ், chili sauce, olive oil, rice wine என்பனவற்றை கலந்து அதனுடன் சீனியையும் சேர்த்து கொள்ளவும்

4. தாச்சியில் சோள எண்ணெயை விட்டு நடுத்தர அளவில் சூடாக்கி அதில் உள்ளி பசை மாவை (Garlic paste) போட்டு பொரிக்கவும்

5. 45 வினாடிகளில் இறாலை போட்டு இரண்டில் இருந்து 4 நிமிடங்களுக்கு இருபக்கமும் சிவப்பாக வரும் வரைக்கும் பொரிக்கவும்

6. இப்ப, sauce கலவையை இறால் மேல் இட்டு நன்கு கலக்கவும்

7. ஒரு 5 நிமிடங்களுக்கு இதமான / நடுத்தர சூட்டில் நன்றாக கலந்து பொரிக்க / வதக்கவும்

Prawns_Fry_Sauce.jpg
photo hosting

கருப்புச் சட்டியில் சோயா சோஸ் போட்டதால் சட்டி கடுமையாக கருப்பாக தெரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...நிழலி...இந்தக் கிழமை செய்து பார்க்கிறேன்!

அது சரி... ஒரு றாத்தல் றால்...இவ்வளவும் தானா வரும்?:cool:

நன்றி பகிர்வுக்கு. செய்து பார்ப்போம். ஏன் எல்லாம் சீன தயரிப்புககள் வேண்டும்?

கடைசி வசனம் போடவிட்டிருந்தால் நினைத்ததை எழுதியிருப்பேன்tw_blush:

சீனி 1. மே.க - இது மட்டும் சேர்க்க மாட்டேன்

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புங்கையூரன் said:

நன்றி...நிழலி...இந்தக் கிழமை செய்து பார்க்கிறேன்!

அது சரி... ஒரு றாத்தல் றால்...இவ்வளவும் தானா வரும்?:cool:

பொரிக்க பொரிக்க சாப்பிட்டால் இவ்வளவுதான் வரும் புங்கை, அதுதான் தண்ணிப்போத்தலை வைத்துவிட்டு சமைக்கனும்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சமையல் செய்த இரால் பொரியல் மொத்தம்  (தரவு: சட்டியில் உள்ளது)          = 16
ருசி, பதம் பார்க்கும் போது நிழலி வாயில போட்டது                                                                 = 3
தன் சமையல் சாகசத்தை காட்டி அன்பு மனைவிக்கு ருசி பார்க்க கொடுத்தது         = 3
நிழலி கையில் ஒரு கிண்ணத்தை ஏந்தி அதனை சீப்பிக்கொண்டே ருசித்தது           = 6
குட்டி மகள் கடித்து துப்பியது                                                                                                                   = 1
சாப்பாடு பரிமாறும் போது மனைவி தன் பங்கையும் நிழலிக்கு தியாகம் செய்தது= 3

சாப்பாடுக்கு பின் ?????
 
கூட்டி, கழித்து பார்க்க கணக்கு சரியா வருதா?   tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Sasi_varnam said:

அப்போ...குட்டி மகன் சைவைக்காரன் போல கிடக்கு! :mellow:

கணக்கெடுக்கிறாங்களே இல்லையே??? 

பதினாறு றால் தான் தேறியது எண்டு சொன்னால் ...விஷயம் இலகுவாக எல்லாருக்கும் விளங்கியிருக்கும்!

அல்லது தமிழ்க்கடைக் காரன்  ஒருவன்... றாலை நிறுத்திருக்க வேண்டும்!tw_dizzy:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

அப்போ...குட்டி மகன் சைவைக்காரன் போல கிடக்கு! :mellow:

கணக்கெடுக்கிறாங்களே இல்லையே??? 

தம்பி இரால் சாப்பிட மாட்டார். ...

தவறு பிடிக்க கண்ணுக்குள்ள வெண்ணை விட்டு திரிகிறார் அண்ணர் tw_yum:  நான் கணக்கில கொஞ்சம் வீக் இல்ல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நிழலி said:

கடந்த வாரம் சீன உணவகம் ஒன்றில் சாப்பிட்ட இவ் சாப்பாடு நன்றாக இருந்தமையால் அதனை வீட்டில் செய்து பார்த்தேன். செய்முறையின் அடிப்படையை இணையத்தில் வாசித்த பின் எனக்கேற்ற மாதிரி மாற்றியுள்ளேன்

மனிசிக்காரி சமைச்சதை ஏதோ தான் சமைச்சு வெட்டி புடுங்கினமாதிரி எங்களுக்கு சேக்கஸ் காட்டுறார். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மனிசிக்காரி சமைச்சதை ஏதோ தான் சமைச்சு வெட்டி புடுங்கினமாதிரி எங்களுக்கு சேக்கஸ் காட்டுறார். :cool:

இல்லை...நிழலி தான் சமைத்திருக்கிறார்!

மனுசி சமைத்திருந்தால் ...றால் வடிவாகத் தோல் அகற்றப்பட்டு....வடிவாக இருந்திருக்கும்!

சட்டியும்.. இப்போதைய கோலத்தில்...கமராவுக்கு முகத்தைக் காட்டியிருக்காது!tw_dissapointed_relieved:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

6. சீன நல்லெண்ணெய் (Chinese sesame oil)- 1. மே.க

7. ஒலிவ் எண்ணெய் 1. மே.க

8. Non fat சோளம் எண்ணெய்

அடேங்கப்பா.... எண்ணை அயிட்டமே மூன்று  விதமாக இருக்கு. Smiley
சீன நல்லெண்ணையை விட, எங்கடை ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் தானே... உலகத்திலேயே திறம். Smiley
பொரித்த இறாலை பார்க்க வாயூறுது. விரைவில்... செய்து பார்க்க வேண்டும். cooking-on-fire.gif
பகிர்விற்கு... நன்றி நிழலி. Smiley

தாயகத்தில குசினி பக்கமே எட்டிப் பாக்காம  புலம் பெயர்ந்த ஆம்படையான் எல்லாம் இப்ப குசினிக்குள்ள ரொம்பத்தான் பிசி போல. எனக்கும் சமைக்க ரொம்பவே பிடிக்கும் (இப்படி ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டி இருக்கு). 

என்னதான் இருந்தாலும் விதம் விதமாக சமைத்து பார்ப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே. (பெண் களஉறவுகள் சண்டைக்கு வரக்கூடாது). அதனால்தான் எங்கு போனாலும் புகழ் பெற்ற சமையல்காரர்கள் எல்லாம் ஆண்களாகவே இருக்கிறார்கள். 

அசத்துங்கப்பா  cook emoticon

  • கருத்துக்கள உறவுகள்

இறால் ஒர் கொலஸ்ரோல் நிறைந்த உணவு அடிக்கடி உண்ணக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

இறால் ஒர் கொலஸ்ரோல் நிறைந்த உணவு அடிக்கடி உண்ணக்கூடாது

ஓம் இறால் நண்டு கொலஸ்றோலு கூடியது☝

நல்லாத்தான் இருக்கிறது நிழலி செய்து பார்க்கதான் வேண்டும் ?

வாயை கட்டி வைக்க முடியாத நிலையில் நாம் சாப்பிட்ட பிறகு குளிசை சாப்பாட்டுக்கு முன் குளிசை இப்படி ஓடுகிறது  பலருக்கு ??

சட்டி கறுத்த சட்டிதானா??

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் செய்துள்ளார். மினக்கட்டுச் செய்ததை அப்படியே ஒரு கண் அகப்பையில் எடுத்து ஒரு வெள்ளை மாபிள் கோப்பையில் போட்டு மேலே வெங்காய றிங்க்ஸ் நாலு போட்டு இரண்டு கொத்தமல்லித் தழை அல்லது கறிவேப்பிலை தூவி லெமனில ஒரு சில்லு சீவி வைத்து விட்டால் டெக்கரேசன் சும்மா அள்ளும்....!  tw_blush:

  • தொடங்கியவர்
22 hours ago, புங்கையூரன் said:

நன்றி...நிழலி...இந்தக் கிழமை செய்து பார்க்கிறேன்!

அது சரி... ஒரு றாத்தல் றால்...இவ்வளவும் தானா வரும்?:cool:

ஒரு இறாத்தல் 450 கிராம் தானே..!  கொஞ்சம் பெரிய இறால் (tiger prawns)  என்பதால் எண்ணி 16 தான் வந்தது

22 hours ago, வந்தியதேவன் said:

நன்றி பகிர்வுக்கு. செய்து பார்ப்போம். ஏன் எல்லாம் சீன தயரிப்புககள் வேண்டும்?

கடைசி வசனம் போடவிட்டிருந்தால் நினைத்ததை எழுதியிருப்பேன்tw_blush:

சீனி 1. மே.க - இது மட்டும் சேர்க்க மாட்டேன்

கடைசி வசனம் சேர்க்கவில்லை என்று நினைச்சு எழுதுங்கோ

இப்படியான பொரியல்களில் கொஞ்சம் சீனி சேர்த்தால் சுவை கூடும். நான் செய்யும் அநேகமான பிரட்டல் / பொரியலுக்கு இறுதியில் கொஞ்சம் சீனி சேர்ப்பேன்.

22 hours ago, Sasi_varnam said:

நிழலி சமையல் செய்த இரால் பொரியல் மொத்தம்  (தரவு: சட்டியில் உள்ளது)          = 16
ருசி, பதம் பார்க்கும் போது நிழலி வாயில போட்டது                                                                 = 3
தன் சமையல் சாகசத்தை காட்டி அன்பு மனைவிக்கு ருசி பார்க்க கொடுத்தது         = 3
நிழலி கையில் ஒரு கிண்ணத்தை ஏந்தி அதனை சீப்பிக்கொண்டே ருசித்தது           = 6
குட்டி மகள் கடித்து துப்பியது                                                                                                                   = 1
சாப்பாடு பரிமாறும் போது மனைவி தன் பங்கையும் நிழலிக்கு தியாகம் செய்தது= 3

சாப்பாடுக்கு பின் ?????
 
கூட்டி, கழித்து பார்க்க கணக்கு சரியா வருதா?   tw_blush:

சமைக்கும் போது நான் ஒரு போதும் பதம் பார்ப்பது இல்லை. பதம் பார்த்து சமைச்சால் ஆள் சமையலில் கெட்டிக்காரன் இல்லை என்று ஊரில கதைப்பினம். கலியாணம் கட்டின புதிசில தான் மனைவிமார் எல்லாம் தியாகம் செய்வது...10 வருடம் போன பிறகு தியாகம் எல்லாம் புள்ளைகளுக்கு மட்டும் தான் செய்வினம்.

21 hours ago, Sasi_varnam said:

தம்பி இரால் சாப்பிட மாட்டார். ...

தவறு பிடிக்க கண்ணுக்குள்ள வெண்ணை விட்டு திரிகிறார் அண்ணர் tw_yum:  நான் கணக்கில கொஞ்சம் வீக் இல்ல...

ஹஹ்ஹா... நான் புது வகையாக சமைக்க விரும்புவதே அவனுக்காகத்தான். ஆள் என் அப்பாவைப் போல கடும் சாப்பாட்டு ராமன்.

21 hours ago, குமாரசாமி said:

மனிசிக்காரி சமைச்சதை ஏதோ தான் சமைச்சு வெட்டி புடுங்கினமாதிரி எங்களுக்கு சேக்கஸ் காட்டுறார். :cool:

மகூம்... மனுசி எப்படா நான் சமைப்பன் தான் ரெஸ்ட் எடுக்கலாம் என்று இருப்பார்.

  • தொடங்கியவர்
21 hours ago, புங்கையூரன் said:

இல்லை...நிழலி தான் சமைத்திருக்கிறார்!

மனுசி சமைத்திருந்தால் ...றால் வடிவாகத் தோல் அகற்றப்பட்டு....வடிவாக இருந்திருக்கும்!

சட்டியும்.. இப்போதைய கோலத்தில்...கமராவுக்கு முகத்தைக் காட்டியிருக்காது!tw_dissapointed_relieved:

உண்மையில் எனக்கு இறாலின் தலையையும் போட்டு சமைக்கத்தான் விருப்பம். ஒருநாள் நள்ள குஜாலாக இருக்கும் போது, யாழில் ஒருவர் இறாலின் தலையில் தான் அதன் 'கக்கா' இருக்கு என்று எழுதியதை சொன்னதன் பிறகு தலையை போட விரும்புறா இல்லை. அதனாலதான் அதன் முன்னம் கால்களையாவது கொஞ்சம் போடுவம் என்று விட்டு இருக்கின்றேன்.

21 hours ago, தமிழ் சிறி said:

அடேங்கப்பா.... எண்ணை அயிட்டமே மூன்று  விதமாக இருக்கு. Smiley
சீன நல்லெண்ணையை விட, எங்கடை ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் தானே... உலகத்திலேயே திறம். Smiley
பொரித்த இறாலை பார்க்க வாயூறுது. விரைவில்... செய்து பார்க்க வேண்டும். cooking-on-fire.gif
பகிர்விற்கு... நன்றி நிழலி. Smiley

சீன உணவு முறையில் செய்யும் போது சீன எண்ணெய் தான் பாவிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கு.

19 hours ago, ஜீவன் சிவா said:

தாயகத்தில குசினி பக்கமே எட்டிப் பாக்காம  புலம் பெயர்ந்த ஆம்படையான் எல்லாம் இப்ப குசினிக்குள்ள ரொம்பத்தான் பிசி போல. எனக்கும் சமைக்க ரொம்பவே பிடிக்கும் (இப்படி ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டி இருக்கு). 

என்னதான் இருந்தாலும் விதம் விதமாக சமைத்து பார்ப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே. (பெண் களஉறவுகள் சண்டைக்கு வரக்கூடாது). அதனால்தான் எங்கு போனாலும் புகழ் பெற்ற சமையல்காரர்கள் எல்லாம் ஆண்களாகவே இருக்கிறார்கள். 

அசத்துங்கப்பா  cook emoticon

எனக்கு அம்மா அப்பாவுடன்  இருக்கும் வரைக்கும் சுடுதண்ணீர் வைக்க கூட தெரியாது. பிறகு டுபாய்க்கு போய் தனிய வாழும் போது கடைச் சாப்பாடு வெறுத்து நண்பர்கள் நாம் மூன்று பேர் சேர்ந்து சமைக்க தொடங்கியதன் பின் தான் சமையல் பழகியது.  நண்பர்கள் இருவரும் முஸ்லிம்கள் என்பதால் பல மச்சக் கறிகள் செய்ய பழக முடிந்தது.

18 hours ago, colomban said:

இறால் ஒர் கொலஸ்ரோல் நிறைந்த உணவு அடிக்கடி உண்ணக்கூடாது

மாசத்தில் இரண்டு நாள் சாப்பிடலாம் தானே.

7 hours ago, suvy said:

நன்றாகத்தான் செய்துள்ளார். மினக்கட்டுச் செய்ததை அப்படியே ஒரு கண் அகப்பையில் எடுத்து ஒரு வெள்ளை மாபிள் கோப்பையில் போட்டு மேலே வெங்காய றிங்க்ஸ் நாலு போட்டு இரண்டு கொத்தமல்லித் தழை அல்லது கறிவேப்பிலை தூவி லெமனில ஒரு சில்லு சீவி வைத்து விட்டால் டெக்கரேசன் சும்மா அள்ளும்....!  tw_blush:

பொதுவாக படம் எடுப்பதற்காக இப்படி சோடனை எல்லாம் செய்வதுண்டு. ஆனால் சட்டியில் இருந்து வெளியே எடுத்தால் அதன் கூட்டு (Gravy) இல்லாமல் போய்விடும் என்று சட்டியில் வைச்சே படம் எடுத்தாச்சு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

உண்மையில் எனக்கு இறாலின் தலையையும் போட்டு சமைக்கத்தான் விருப்பம். ஒருநாள் நள்ள குஜாலாக இருக்கும் போது, யாழில் ஒருவர் இறாலின் தலையில் தான் அதன் 'கக்கா' இருக்கு என்று எழுதியதை சொன்னதன் பிறகு தலையை போட விரும்புறா இல்லை. அதனாலதான் அதன் முன்னம் கால்களையாவது கொஞ்சம் போடுவம் என்று விட்டு இருக்கின்றேன்.

இறாலின் தலையில்,  கக்கா இருக்கு என்று சொன்னவரே.... புங்கையூரான் தான்.
அதன் பின் எனக்கு, இறால் சாப்பிடும் போதெல்லாம், புங்கையின் ஞாபகம் தவறாமல் வரும். Smiley

  • கருத்துக்கள உறவுகள்

இறாலின் தலையில் இல்லை,  கழுத்தடியில் அதன் முதுகில் மெலிதாய் கத்தியால் கீறினால் நூல் போல அதன் குடல் வரும் அவ்வளவுதான். அதை எடுத்துப் போட்டு கால் கூந்தலை லைட்டாய் கத்தரியால் நறுக்கிவிட்டு முழுதாகப் பொரிக்கலாம். சிங்கள கட்டிய மேக்கதமாய் உயனவ... சாப்பிடும் போது ஓடு உடைத்துச் சாப்பிட அந்தமாதிரி இருக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ, நிழலி...

கொஞ்சம் பொறுங்க.....

இறாலா, இறால் கோதா என்று பாருங்கோ முதலில்... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

13087525_10153556879907944_8869553745798

இது எங்கட வேர்சன். நாங்களே செய்தது. 

செய்முறை.. ஏலவே அரை அவியல் செய்யப்பட்டு.. விற்கும் பெரிய இறாலை சுப்பர்மார்க்கெட்டில் வாங்கவும்.

வெங்காயம்.. 1

பச்சைமிளகாய்.. 1

பூண்டு.. 1

சிறிதாக நறுக்கி எடுக்கவும்.

பிரையிங் பானை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு.. வெங்காயம்.. பச்சைமிளகாய்.. பூண்டு.. வதக்கவும். முழுமையாக வதங்க முதல் சிறிதளவு கறித்தூள் இடவும். கூடவே உப்பையும் சேர்த்துக் கிளறி கவலையாகச் சேர்த்தபின்.. இறாலை அதனுள் கொட்டி.. இறாலின் மேல் சிறிதளவு எண்ணேய் உற்றி.. கிளறிப் பொரிக்கவும்.

5/10 நிமிடம் சமைத்த பின்...

சுவை பார்க்கவும். உப்பு போதாது எனில் அட் பண்ணவும்.

இப்படி.. பொன்னிறமாக வதங்கி வரும் நிலையில்.. இறால் பொரி வாசம் காற்றில் பரவி மூக்கைத் துளைக்கும் வேளையில் இறக்கி.. சிறிது ஆறிய பின் உண்டு மகிழவும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nedukkalapoovan said:

இது எங்கட வேர்சன். நாங்களே செய்தது. 

தம்பிமார் என்னதான் குத்திமுறிஞ்சாலும்....எங்கடை காப்புக்கையள் சமைச்சால் அதின்ரை சுவையே தனி....என்ன மருந்து மாயமோ தெரியேல்லை...அவையள் பைப்பிலை வாற சுடுதண்ணியிலை தேத்தண்ணி போட்டாலும் அந்தமாதிரித்தான் இருக்கும்.:cool:

இந்த இறாலும் உதுக்கு நல்லாயிருக்குமா?
 
இணைப்புக்கு நன்றி நிழலி
இறால் வேண்டிக்கொண்டுவந்து மனைவியிடம் கொடுத்து, நீங்கள் எழுதிய விபரத்தையும் கொடுத்தேன். என்மனைவி அப்பா உப்பு போடுறதா இல்லையா என்று கேட்டா.   நான் யோசித்து இணையப்பக்கம் வர. இறால் எரிந்து கருகிப்போய் இறால் வேண்டிய காசும் நட்டமாகப் போச்சு...   யாரிடம் சொல்வேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.