Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சேமிப்பு" எமக்குத் தெரிந்த சேமிப்பு வழி முறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்......
பெண்டாட்டிமார்,  தீண்டத் தகாவதர்கள் அல்ல,
அவர்கள்... உங்கள்..... தாயாகவும்,  சகொதரியாவாகவும், மகளாகாவும் இருக்கலாம்.
அது... பார்க்கும், கண்களிலே தான் உள்ளது.

தமிழ் பொண்டாட்டிமார் அநேகர் வேலைக்குப் போகாத நிலை பார்க்கிறம். கணவன்மார் தான் அவைக்கும் உழைச்சுப் போடினம். அவைட குடும்பங்களுக்கும் போடினம். இதுவும் சேமிப்பை பாதிக்கிற விசயம். பொண்டாட்டிமார் தங்கட பணத் தேவைக்கு தாங்களே உழைக்கவும்.. சேமிக்கவும் பழக்கப்பட்டால்.. அந்தக் குடும்பத்திற்கான நிதிச் சேமிப்பு நல்ல நிலையில் இருக்கும்.

இதை தான் சொல்ல வாறம். இதுக்க சென்ரிமெட் எல்லாம் பார்த்தால்.. கணவன்களாக உள்ள ஆண்கள் தான் கஸ்டப்படனும்.. கடைசி வரை. அவர்களை சார்ந்திருக்கும் கையாலாகாத நிலை தான் தமிழ் பொண்டாட்டிமாரிடம் பெருகும். அதனால்.. யாருக்கு என்ன நன்மை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

 

பொண்டாடி மாருக்கு கொடுத்துப் பழக்கவே கூடாது. சுயமா உழைக்க விடனும். அவைட தேவையை அவையே பூர்த்தி செய்யச் சொல்லனும். அதுவும் சேமிப்புக்கு மிக முக்கியம். (உப்படியான கடும் நிபந்தனைகள் தமிழ் பொம்பிளைகளுக்கு கண்ணிலும் காட்டக் கூடாது.. தமிழ் பொம்பிளையள் கூர்ப்படைய நிறையக் கிடக்குது.)  tw_blush:

எங்கே ராசா இருக்கே அட்ரசைச் சொல்லுப்பாtw_confused:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வல்வை சகாறா said:

எங்கே ராசா இருக்கே அட்ரசைச் சொல்லுப்பாtw_confused:

ஏன் உண்மைச் சொன்னதுக்கு விருது வழங்கவா. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பேர்ப்பட்ட உண்மை செல்லமே.... அதான் பிரித்தானிய வாழ் தமிழ்பெண்கள் வந்து உங்களுக்கு பட்டமும் பட்டயமும் தந்து மதிப்பளிக்கப்போகிறார்களாம்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வல்வை சகாறா said:

எப்பேர்ப்பட்ட உண்மை செல்லமே.... அதான் பிரித்தானிய வாழ் தமிழ்பெண்கள் வந்து உங்களுக்கு பட்டமும் பட்டயமும் தந்து மதிப்பளிக்கப்போகிறார்களாம்:cool:

பட்டம் பட்டயம் எல்லாம் நம்கிட்ட நிறையக் கிடக்கு. பிரித்தானியா வாழ் தமிழ்பெண்கள்.. புருசன்மாரை அட்டை உறிஞ்சிராப் போல உறிஞ்சிறதை நிற்பாட்டிட்டு.. வேலைக்கு போகச் சொல்லுங்க. கள்ளமொளிச்சதும்.. அரசாங்கக் காசை ஆட்டையப் போட்டதும்.. புருசன்மாரை உறிஞ்சி அழிச்சதும் போதும்.. என்று சொல்லுங்க. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, வாத்தியார் said:

வெளி நாடுகளில் 20 30 வருடங்கள் வாழும் நம்மவர்களில்  இன்றும் பதிவு  இல்லாமல் வேலை செய்துகொண்டு அகதிக் காசில் வாழ்பவர்கள் நிறைய இருக்கின்றனர்.
அவர்களிடம் அதிகமான அளவில் பணம் இருந்தும் அதைச் சட்ட பூர்வமாகச் சேமிக்க முடியாமல் அண்ணன் , தம்பி மாமன் மச்சானிடம் அவர்களை நம்பிக்  கொடுத்துவிட்டு மீளப் பெறமுடியாமல் அல்லல்ப்படுபவர்களும் உள்ளனர்.
பலர் சீட்டுக் கட்டி ஏமாற்றப்பட்டும் உள்ளனர்.
பிள்ளைகளின் கல்வியில் முதலிட்டு விட்டுப் பின்னர் அவர்கள் திருப்பித் தராவிட்டால் வழக்குப் போடும் நிலையும் வேண்டாம்.
எதுவும்   எங்கள் பிடியில் இருந்தால் தான் மற்றவர்கள் எங்களை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்.
காணி நிலம் வீடு போன்றவற்றில் முதலிட்டால் தேவைப்படும் போது அவற்றைக்  காசாக்கலாம். வாடகை கட்டிக் காசை வீணாக்குவதை விட அந்த வாடகையையே முதலாக்கலாம்.

 

ஊரிலை படகுமாதிரி வீட்டை கட்டி வடிவுக்கு விட்டுட்டு........இஞ்சை சோசல்லை இருந்து கள்ளவேலை செய்து காசை வட்டிக்கு குடுக்கிறதிலை இருக்கிற சந்தோசம் வேறை ஒண்டிலையும் இல்லை. :cool:

சேமிப்பு என்பது எதற்காக என்ற தெளிவுடன் இருப்பதே ஆரோக்கியமானது. எம்மால் வேலை செய்ய முடியாத காலத்தில் அது வயதான பின்னோ இல்லை ஏதாவது விபத்தின் அல்லது நோயின் காரணமாக பாதிக்கப்படும்போதோ எமது பொருளாதராச் செலவுகளை ஈடு செய்யும் நோக்கிலான சேமிப்பு கூடவே எமது இறுதிக்கிரிகைகளுக்கான பொருளாதாரச்செலவுக்கான சேமிப்பு. இதற்கான காப்பீட்டுத் திட்டங்களில் ஈடுபடுவது ஆரோக்கியமானது. ஓய்வு மற்றும் சுற்றுலாவுக்கான சேமிப்பும் நல்லது.

பிள்ளைகள் தமக்கான வாழ்வை தாம் வாழபழக்குவதும் அவர்களுக்கானசேமிப்பைஅவர்களே செய்வதும் ஆரோக்கியமானது. அவர்களுக்கக நாம் சேமிப்பது அல்லது அவர்கள் வழ்வை நாம் தீர்மானிப்பது அவர்கள் வாழ்வை கொல்வது அல்லது சூறையாடுவதுக்கு ஒப்பானது.

கணவனேனா மனைவியே தத்தமது ஆடம்பரத்துக்கானசெலவை தமது உழைப்பில் இருந்தே எடுத்துக்கொள்வது சிறந்தது. கணவன் மனைவி உழைப்பில் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யலாம்  ஆனால் கணவன் உழைப்பில் விதவிதமாக நகை அணிய மனைவி முற்படுவது உணர்வு மற்றும் உறவு என்ற முகமூடிகளை அணிந்து என்னுமொருவனை சுரண்டுவதே. அடுத்தவனுக்காக பந்தாகாட்டுவது நகை அணிவது பட்டுசேலை கட்டுவது கொண்டாட்டங்ளை செய்வது என்று அடுத்தவன் என்ன சொல்வானோ என்று தம் வாழ்வை தெலைத்தவர்கள், கடனாளியானவர்கள், இரண்டு மூன்று வேலைசெய்து நோயாளியானவர்கள், விவகாரரத்து செய்தவர்கள் ஏராளம். அளவுக்கதிகமான முதலீட்டில் வீட்டை வாங்கி வாகனங்களை வங்கி அதன் கடனைக்கட்டுவதற்காக வாழ்வு முழுவதையும் ஒய்வற்ற உழைப்பாக்கி மன அழுத்தத்தை அதிகமாக்கி  ஆரோக்கியமான உணவை சமைத்து உண்ண நேரமின்றி கடையில் மலிவாகக் கிடைப்பதை வாங்கி உண்டு இரத்த அழுத்தமும் சக்கரை வியாதிகளும் என பெரும்பாலனவர்கள் மாறுகின்றார்கள். 

பணம் மீதான பாய்ச்சல் அல்லது வெறி புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த வெறிக்கு அதிகம் இரையாவதும் எம்மவர்களே. பலர் வீடு வாங்கி பேஸ்மென்ரில் ஐந்து ஆறு பேர் என்று குடியமர்த்தி வாடகை பெறுகின்றனர். ஆழுக்கு நானூறு ஐநூறு என்று வாங்குகின்றர். வருட இறுதியில் வருமானவரிக்கு வாடகை ரசீதை கொடுக்க மறுக்கின்றனர். சிலர் குடியேறியபின் சமைக்க முடியாது கடையில் மலிவு அங்கு வாங்கி சாப்பிடுங்கள். வெளியில் கொண்டுபோய் துணிகளை துவையுங்கள் மின்சாரக்கட்டணம் அதிகம் என்று குடியேறியபின்பு அழுத்தங்களை கொடுக்கின்றனர். இவ்வாறான உள்வாடகை விடயங்களில் 50 வீதத்திற்கும் மேல் இருப்பவருக்கும் கொடுப்பவருக்கும் சண்டைகளும் சச்சரவுகளும் மன அழுத்தமும் அதிகம். மேலும் சில உணவகங்களில்  புதிதாக குடியேறிய எம்மவர்களிடம் மதக்கணக்கில் வேலைவாங்கிய பின்பு பணம் கொடுக்காமல் அல்லது சிறிது பணம் கொடுத்துவிட்டு ஏமாற்றும் நிகழ்வுகளும் நடக்கின்றது. 

சேமிப்பு என்பதற்குப் பின்னால் எம்மவர்களிடம் இருப்பது பெரும்பாலும் பணம் மீதான பாய்சலே. இப் பாய்ச்சலில் அறம் தவறிய நிலை அதிகம். தனக்கான வாழ்வு எப்போதும் அடுத்தவன் அல்லது ஊரான் பார்வைக்கு ஏற்ப தீர்மானிக்கும் நிலையில் உள்ளவர்களின் சேமிப்பு எப்போதும் அடுத்தவனை சுரண்டுவதையே குறியாய் கொண்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

Will எனப்படும் மரணசாசணம் எழுதி வைக்கும் விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. ஒருவர் இறந்து விடுவதால் பிரச்சணை இல்லை. கோமாவில் படுத்து விட்டால் அவ்வளவு தான். குடும்பம் 5 சதம் கூட அவரது கணக்கில் இருந்து பெற முடியாது. அதே வேளை அவர் ஒரு ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்கக் கூடிய சாதணம் எழுதி, தனக்கு வருத்தமோ, மரணமோ உண்டானால், வங்கியில் பணம் எடுத்து செலவு செய்ய இன்னாருக்கு உரித்து உள்ளது என குறித்திருந்தால் மட்டுமே எடுக்க முடியும்.

சொத்துகளை இறப்பதற்கு ஏழு வருடங்களுச்கு முன் பகிர்து கொடுத்தால், பெறுபவர்களுக்கு வரி இல்லை. இல்லாவிடில் மரணத்துக்குப் பின்னாயின் 40% வரி. (UK)

  • கருத்துக்கள உறவுகள்

வாரிசு (inheritance) ஒருவரும் இல்லாவிட்டால் என்ன செய்வது நாதமுனி? ஒர் (administrator) நிர்வாகியை நியமித்து வரும் வருமானங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமா? அவைகளுக்கு inheritance tax உண்டா?


மேலும் will & probate ஆகியன இரண்டும் ஒன்றா?

2 hours ago, Nathamuni said:

Will எனப்படும் மரணசாசணம் எழுதி வைக்கும் விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. ஒருவர் இறந்து விடுவதால் பிரச்சணை இல்லை. கோமாவில் படுத்து விட்டால் அவ்வளவு தான். குடும்பம் 5 சதம் கூட அவரது கணக்கில் இருந்து பெற முடியாது. அதே வேளை அவர் ஒரு ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்கக் கூடிய சாதணம் எழுதி, தனக்கு வருத்தமோ, மரணமோ உண்டானால், வங்கியில் பணம் எடுத்து செலவு செய்ய இன்னாருக்கு உரித்து உள்ளது என குறித்திருந்தால் மட்டுமே எடுக்க முடியும்.

சொத்துகளை இறப்பதற்கு ஏழு வருடங்களுச்கு முன் பகிர்து கொடுத்தால், பெறுபவர்களுக்கு வரி இல்லை. இல்லாவிடில் மரணத்துக்குப் பின்னாயின் 40% வரி. (UK)

 

  • கருத்துக்கள உறவுகள்

முழுச்சொத்தும் கலியாணத்தக்குப் பிறகே வந்ததாயின் முழுதும் மனைவிக்கு. தேட்டமாயின்...., வாரிசில்லாவிடில் மனைவிக்கும், கணவர் இரத்த சொந்தங்களுக்கும் பிரியும்.

வாரிசு இல்லாமல் இறந்து விட்டால், பிறகு புற்றீசல் போல கிளம்புவார்கள் வாரிசுகள் என... 

ஒருவரின் இரத்தவழி சொந்தங்கள் என வரும் எவரும் வாரிசுகள் தான்... மனைவி மட்டுமே.... மனைவியின் உறவுகள் இரத்தவழி சொந்தங்கள் அல்ல. 

ஆனால், சொத்து மனைவி கைக்குப் போய், அவர் எழுதாமல் இறந்தால்... அவர் இரத்தவழி சொந்தங்கள் கிளம்பலாம்...

will என்பது மரணத்தறுவாயில் விருப்பம்: யார் யாருக்கு என்ன என்ற...

மரணத்துக்கு முன் எப்போதும் மாத்த முடியும். இதுவே, மரணசாசனத்துக்கும், அறுதியாக உறுதி முடித்துக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம். அதாவது சொத்தை எழுதிவாங்கிய பின் தந்தவரை திரத்தலாம்.   இந்த மெல்லிய, நம்பிக்கையீன Gap ல் பூந்து தான் அரசு 40% வரி அடிக்குது.

Probate: நீதிமன்றில் அல்லது அதற்கான அதிகாரம் உள்ளவரிடம் மரணசாதனத்தினை பதிந்து அதுவே உறுதியானதும், இறுதியானதும் என, பத்திரிகை விளம்பரம் செய்து, ஆட்சேபனை யாருக்கும் உண்டா என்று கேட்டு  சட்டரீதியாக்குவது. இது அந்த மரணசாதணத்தை எழுதியவர் இருக்கும் போதோ அல்லது மறைந்த பின்னரோ நடக்கலாம்.

ஒருவருக்குமே எழுதாமல் போட்டார், நான் சின்னவீட்டின்ற ஒரே பெடி என்று தாரும் வந்தால், probate தூக்கிப் போட்டால் அதோட அவர் போக வேண்டியது தான்.

இல்லாவிடில், அப்பர் என்னட்டையும் ஒரு will தந்து வச்சிருந்தவர் எண்டு ஒன்றைக் அவர் காட்டினால்.....

பிறகென்ன, பிரக்கிராசியாருக்கு கொண்டாட்டம் தான்..

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

உங்கள் வீட்டில் மடிக்கணணியும் (Laptop), மேசைக்கணணியும் இருந்தால், முடியுமான வரை மடிக் கணணியையே பாவியுங்கள் , மடிக்கணணி குறைந்தளவு மின்சாரத்தினையே எடுத்துக் கொள்ளும். மேசைக்கணணி 200 watt எடுத்துச் செய்யும் வேலையை  மடிக்கணணி  வெறும் 30 watt இல் செய்துமுடிக்கும். இதன் மூலம் நீங்கள் சராசரியாக வருட மொன்றிற்கு 109.5 kWh மின்சாரத்தினைச் சேமிக்க முடியும். இம் மின் சாரத்தின் பெறுமதி(சுவிசில்) 27.40 பிராங்குகள்.

http://www.20min.ch/schweiz/energy-challenge/story/25873841

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2016 at 6:44 PM, suvy said:

இன்று "மதர்ஸ் டே" யில் நல்ல விடயத்தைத் தொடங்கி இருக்கிறீங்கள் அதற்கு முதல் பாராட்டுக்கள்....!

--- இந்த எலக்ட்ரிக் , எலட்ரோனிக் பொருட்களை கண்டவுடன் வாங்கிற வேலையை நிறுத்த வேண்டும்.

--- மாதம் இருமுறை திட்டமிட்டு மளிகைப் பொருட்கள் பூரா வாங்கிவிட வேண்டும். ஒரு கிலோ பாண் வாங்க பத்து  கிலோமீட்டர் கார் எடுத்துக் கொண்டு ஓடக் கூடாது. அதைவிட அன்று பச்சைத் தண்ணியைக் குடிச்சுட்டு படுக்கலாம். (நல்ல சீவன் பத்துப் பண்ணிரண்டு நாளைக்கு கிடக்கும்).

--- ஒரு கலியாண வீட்டுக்கு உடுக்க புதுச் சேலை வாங்க முதல் ஒருமுறை அலுமாரியைத் திறந்து பார்த்திட்டு  முடிவெடுப்பது உசிதம். அப்படியும் வாங்கத்தான் வேண்டுமென்றால் முதலில் பிளவ்ஸ் துணியை எடுத்துப் போட்டு அதற்கு மாட்சாக சேலை எடுப்பது கால விரயத்தைப் போக்கும்.

இன்னும் ஏராளம் இருக்கு. மற்றவர்களும் கொஞ்சம் புலம்பி ஆறுதலடையட்டும் என மூக்கைச் சிந்தி கண்ணைத் துடைத்துக் கொண்டு ஒதுங்குகின்றேன்...!  tw_blush:

சுவியர்...என்ர அனுபவத்தின் படி...பிளவுசை வைச்சுக் கொண்டு சீலையைத் தேடினாலும், சீலையை வைச்சுக் கொண்டு பிளவுசைத் தேடினாலும்..எடுக்கும் காலத்தில் வித்தியாசம் இருக்காது!

சீலையோட..பிளவுஸ் துண்டும் சேர்ந்த மாதிரி ஒண்டு வரும்!

அது தான் கால விரயத்தைத் தடுக்கும்!

ஆனால்...சேமிப்பு பற்றிக் கருத்துக் கூற முடியாது!

வெள்ளைக் காறப் பொம்பிளையாய்ப் பார்க்கிறது தான் ஒரே வழி..!

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

சுவியர்...என்ர அனுபவத்தின் படி...பிளவுசை வைச்சுக் கொண்டு சீலையைத் தேடினாலும், சீலையை வைச்சுக் கொண்டு பிளவுசைத் தேடினாலும்..எடுக்கும் காலத்தில் வித்தியாசம் இருக்காது!

சீலையோட..பிளவுஸ் துண்டும் சேர்ந்த மாதிரி ஒண்டு வரும்!

அது தான் கால விரயத்தைத் தடுக்கும்!

ஆனால்...சேமிப்பு பற்றிக் கருத்துக் கூற முடியாது!

வெள்ளைக் காறப் பொம்பிளையாய்ப் பார்க்கிறது தான் ஒரே வழி..!

 

வெள்ளைக்காரியா...... ஐயோ ஆளைவிடுங்க சாமி.
சட்டியிலிருந்து..... அடுப்புக்குள் விழுந்த கதையாகி போயிடும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

வெள்ளைக் காறப் பொம்பிளையாய்ப் பார்க்கிறது தான் ஒரே வழி..!

வெள்ளைப் பெட்டையள் காசு தான் முக்கியம்.

பிரித்தானியர் ஒருவர் சிங்கப்பூரில் பேயேரிங் வங்கியில் இன்வெஸ்ட்மென்ட் பாங்கராக வேலை பார்த்து 800 மில்லியன் டாலர் வரை அனுமதியின்றி, முதலீடு செய்து இழந்து, வங்கியும் முறிந்த நிலையில், ஜேர்மணிக்கு ஓடிவிட்டார், விரைவில் மனைவியாக இருந்த பெண் நண்பியுடன்.

சிங்கப்பூர் அரசோ அவரை திருப்பி அனுப்ப சொல்கிறது. 20, 25 வருடங்கள் உள்ளதான் என்ற நிலை. அவரோ தான் திருடவில்லை. தனக்கான அனுமதி வரம்பை மீறியது தான் தன் தவறு என்கிறார். இடையே கடும் சுகவீனம் அடைகிறார்.

இந்த களேபரத்துக் கிடையே அந்த பெண் அவரை விட்டு விலகி வேறு ஒரு வரை மணக்கிறார். அவர் சொன்னார்... 'அவருடன் நல்லாத் தான் வாழ்ந்தேன்... ஆனால் இனி அவரை ஆதரிக்கும் முட்டாள் தனத்தை செய்ய நான் முட்டாள் அல்ல'.

மிக மோசமான சுயநலமாக அது காட்டப்பட்டது.

நீண்ட இழுபறியின் பின், அவரில்லாமலே, 20 வருடங்கள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், சிங்கை அரசு வடிவேலு பாணியில் அந்த நபருடன், 'ஐயா, மரியாத இல்லையா, அப்புறம் எவனும் மதிக்க மாட்டான், நீயா வா, உள்ளார ஒரு வாரம் மட்டும் இரு, உடனே விடுதலை' என கனவான் ஒப்பந்தம் செய்து, பிரச்சனையை முடித்தது.

வருத்தத்தில் இருந்து மீண்டு, பல வங்கிகளுக்கு ஆலோசனையாளராய் முன்னரை விட பெரும் பணக்காரரானார். 

அந்தப் பெண்? ம்..ம்..

2 hours ago, தமிழ் சிறி said:

வெள்ளைக்காரியா...... ஐயோ ஆளைவிடுங்க சாமி.
சட்டியிலிருந்து..... அடுப்புக்குள் விழுந்த கதையாகி போயிடும். tw_blush:

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2016 at 11:50 PM, nedukkalapoovan said:

ஏன் உண்மைச் சொன்னதுக்கு விருது வழங்கவா. tw_blush::rolleyes:

ஒன்றுக்கும்  பயப்படத்தேவையில்லை நெடுக்கு..

கூட்டமாக வரவேமாட்டார்கள்.....

(ஏதோ நம்மால் முடிஞ்சதுtw_blush:)

 

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்சாதன பெட்டி தொலைக்காட்சி போன்றவை சில கடைகளில் ஒரு சதமேனும் கட்டாமல் ஒரு வருடத்திற்கு கட்டணம் எதுவும் இல்லாமல் கொடுப்பார்கள்.

சிலர் ஒரு வருடம் எதுவும் கட்ட தேவையில்லை என்று எண்ணி வருடம் முடிந்த பின் கட்ட தொடங்குவர் சிலர் கட்ட வேண்டும் என்பதையே மறந்து போவார்கள்.கடைசியில் 20-29 வீதம் வட்டியுடன் கடிதம் வரும் போது ஒப்பாரி வைத்து ஏமாற்றி போட்டார்களே என்று திட்டித் தீர்ப்பார்கள்.கடைசி வரை தமது தவறை ஏற்கமாட்டார்கள்.

300 டொலருக்கு சாமான் வாங்கினால் மாதம் 30 டொலர் படி ஆரம்பத்திலிருந்தே கட்டிக் கொண்டு வந்தால் பணம் கட்டுதிலும் பிரச்சனை இருக்காது கூடுதல் பணம் கட்ட வேண்டியும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லம் !
அவசரத்தில் இனி தமிழ் பெண்களை ஆப்ரிக்க கறுப்பருக்கு திருமணம் முடித்து கொடுத்தால்தான் 
சரி என்று எழுதினால் ................

அவர்கள் வந்து சோம்பேறிகளே முதல்ல அதே செய்யுங்கடா புண்ணியமா போகும் என்று 
வந்து யாரவது ஒரு பொம்பிளை எழுதினால் 

போகபோவது எமது மானமும் கூடவே!

நெடுக்கர் என்ன இருந்தாலும் எங்கட பிள்ளையளை நாங்கள்தான் அனுசரிச்சு போகணும்.
ரோஜாவில் இருக்கும் முள்ளை பூத கண்ணாடி வைத்து பார்த்து கொண்டிருப்பதில் 
ஏமாற்றம் மட்டுமே இருக்கும்.
துரத்தில் நின்று பார்க்கவே தெரியும் அதன் பூவை பார்த்து பரவசபடுவதுதான் வாழ்க்கை.

எல்லோரும் சாக போகிறோம் என்பாதால் .... இன்றே சாக வேண்டுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி நானும் ஒவ்வொரு மாதம் இவ்வளவு காசு சேர்க்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்கும் போது அந்த மாதமே டபுள் மடங்கு செலவு செய்வதற்கு எதாவது காரணம் வந்திருக்கும்..."செல்வம் எப்போதும் செல்லும்,செல்லும் என்று தான் சொல்லிக் கொண்டு இருக்கும்"....காசோ,பணமோ சேருகிறவர்களிடம் தான் சேரும்.அது இருப்பவர்கள் தான் இன்னும் வேண்டும்,வேண்டும் என்று அலைகிறார்கள்.இல்லாதவர்கள் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைகிறார்கள்.பிள்ளைகளை,அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கச் செய்தாலே போதுமானது...வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிச்சு வாழ வேண்டும்.

  • தொடங்கியவர்

நீரைச் சுடவைக்கும் போது பாதிரத்தினை ஒரு மூடியினால் மூடுங்கள். இதன் மூலம் நீர் விரைவாகக் கொதிக்கும் . (நான் ஒரு தேனீர் போடுவதென்றால் கூட நீரை மூடிதான் சூடாக்குவேன் இதன் மூலம் மின்சாரம் ,நேரம் சேமிக்கலாம், இது சமையலுக்கும் பொருந்தும்)சுவிஸ் காரர் சொல்கிறார் இதன் மூலம் வருடத்திற்கு 66 kWhமின்சாரத்தினைச் சேமிக்கலாம் என (எமது சமையல் முறைக்கு இன்னும் அதிகமாகவே சேமிக்கலாம்)http://www.20min.ch/schweiz/energy-challenge/story/15230424

ஒரு தேவைக்கு நீரைக் கொதிக்க வைக்கும் போது தேவையான அளவினை மட்டுமே கொதிக்க வைக்கவும், அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து மிகுதியை வீணாக ஊற்ற வேண்டாம் - ( புட்டு, இடியப்பத்திற்கு மா குழைப்பதற்கு அல்லது நூடில்ஸ் செய்ய ....) 

சமையலில் ஒரு பொருளை அவிக்கும் போது எவ்வளவு நேரம் அவித்தால் போதுமெனத் தெரிந்து வையுங்கள் , தேவையில்லாமல் அதிக நேரம் அவிக்க வேண்டாம் ( மரக்கறிகள் steam பண்ணும் போது , முட்டை அவிக்கும் போது) சமையலறையில் kitchen timer இனை பாவியுங்கள் .

குளிக்கும் போது உங்கள் உடல் தாங்கக்கூடடிய ஆகக் குறைந்த சூட்டில் குளியுங்கள் , சும்மா கொதிக்க கொதிக்க குளிப்பதனால் மின்சார செலவு தான் ஏற்படும்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வெயில் காலங்களில் திரைச்சீலைகளின் மூலமாகவோ , அல்லது ஷட்டரினை மூடுவதன் மூலமோ சூரிய கதிர்கள் வீட்டினுள் நுழைவதனைத் தடுங்கள் இதன் மூலம் உங்கள் இல்லம் வெப்பம் ஆவது குறைக்கப்படும் , இதன் மூலம் நீங்கள் மின் விசிறி AC போன்றவற்றின் பாவனை நேரம் குறைக்கப் பட்டு பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படும்

இதன் மூலம் நீங்கள் சராசரியாக வருட மொன்றிற்கு 793 kWh மின்சாரத்தினைச் சேமிக்க முடியும். இம் மின் சாரத்தின் பெறுமதி(சுவிசில்) 198.30 பிராங்குகள்.

bild32.jpg

http://www.20min.ch/schweiz/energy-challenge/story/22062884

இது எனது அனுபவத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெயில் காலங்களில்  நாம் வெளியில் செல்லும் போது வீட்டில் ஷட்டர் அணைத்தினையும் மூடி இருட்டாக்கி விட்டு செல்வோம் , பின்னர் வரும் போது மிகவும் குளிர்மையாக இருக்கும், வீட்டில் இருக்கும் போது கூட அறைகள் அணைத்திலும் ஷட்டர் மூடப்படே இருக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.