Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்வெளி (brexit): உங்கள் பார்வை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு பிரெண்ட் இருக்கிறா. அவட கார் உடைந்து,கொஞ்சநாள் பஸ்சில் பிள்ளைகளை அனுப்ப அவ பட்ட பாடு இருக்கே

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வேறென்ன எல்லாம் சுயநலம் தான் காரணம் அண்ணெய்...இவர்களது வருகைகள் கூட,கூட வீட்டு விலைகள் கூடுகிறது.வாடகை அதிகரிக்கின்றது.பத்தாததற்கு வேலைகள் எல்லாத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்...ஒரு சாரார் ஜரோப்பாவில் இருந்து வரும் போதே சொத்து,சுகங்களோட வாறது,வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுப் போட்டு,களவாய் வேலை செய்து கொண்டு,பெனிபிட் எடுத்துக் கொண்டு பேசாமல் இருந்தால்,நாங்களும் பேசாமல் இருந்திருப்போம். ஆனால் இங்கே இருக்கும் ஆட்களை கேவலமாய் பார்ப்பினம் பாருங்கோ! அதற்குத் தான் இந்த வோட்டு

அது, ஆரையோ இடிக்கிற மாதிரிக் கிடக்குது. ஆனாலும் நூறுக்கு நூறு சப்போட்.

நாங்கள், பிரிஜ்க்க 5 நாளென்ன,10 நாளாம் வச்சுச் தின்னுவம்.... எங்கண்ட வீடு... எங்கண்ட பிரிஜ். அவை போனாப் பொறவு போய் பார்க்கத் தான் இருக்கு, அங்க என்ன வெளயாட்டுக் காட்டுகினம் எண்டு!

என்னக்கா! :cool:

 மறு வாக்குப் பதிவு  தேர்தல் தேவை வேண்டும் என்று பாராளுமன்றைக் கோரி மனுத்தாக்கல்  2,500,000.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 

உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

நீங்கள் புரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பிரித்தானியாவுக்கு பலர் வர விரும்புவதற்கு காரணம் இங்குள்ள தாராளமான அரச மானிய கொடுப்பனவு.

கொம்பியூட்டர் வளராத 90 களில், முழு நேர வேலையாக ஒவ்வொரு கவுன்சில் (லண்டனில் மட்டும் 33) ஏரியாவிலும் அகதியாக வேறு பெயரில் பதிந்து, வீடு வாடைக்கு எடுத்து, அதை வேறு ஆட்களுக்கு வாடகைக்கு கொடுத்து, அதன் மூலம் பணமும், அந்தந்த கவுன்சில் அனுப்பி வைத்த கொடுப்பனவு புத்தகத்தினை தபால் நிலையம் சென்று காட்டி பணம் வாங்கி கொழுத்த பணம் உழைத்து தாம் ஏதோ வெட்டிப் புடுங்கின மாதிரி அடுத்தவரை கேவலமாக பார்ப்பார்கள். ஒரு படி மேல போய் மட்டை யாவாரம் வேற..

பிடிபட்டு உள்ள போய் வந்த பொறவு தான் அடங்கி இருப்பினம்.

Edited by Nathamuni

5 minutes ago, Nathamuni said:

கொம்பியூட்டர் வளராத 90 களில், முழு நேர வேலையாக ஒவ்வொரு கவுன்சில் (லண்டனில் மட்டும் 33) ஏரியாவிலும் அகதியாக வேறு பெயரில் பதிந்து, வீடு வாடைக்கு எடுத்து, அதை வேறு ஆட்களுக்கு வாடகைக்கு கொடுத்து, அதன் மூலம் பணமும், அந்தந்த கவுன்சில் அனுப்பி வைத்த கொடுப்பனவு புத்தகத்தினை தபால் நிலையம் சென்று காட்டி பணம் வாங்கி கொழுத்த பணம் உழைத்து கேவலமாய் பார்ப்பினம்.

தமிழனா கொக்கா? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 

உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

மனித மனம்தான் எவ்வளவு தன்னலமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருத்தரும் வாக்களித்தற்கான காரணங்களை சொல்கின்றீர்கள். அதிலும் தனிப்பட்ட பிரச்சனைகளை காரணம் காட்டுகின்றீர்கள். இருந்தாலும் இங்கிலாந்து விலகியதையிட்டு ஜேர்மனிக்கு மனதுக்குள் ஒரு சந்தோசமாம்....விலை கொஞ்சம் அதிகம் தான். ஆனால் தனிக்காட்டு ராஜா.:cool:

பிரித்தானியா பிரிய வேண்டும் என்று விரும்பியவர்கள் கூறும் காரணங்கள் பல நொண்டிச் சாட்டுகள். பிரித்தானியா பிரிய வேண்டும் என வாக்களித்தவர்களே இன்று பிரித்தானியா பிரிவதை நினைத்துப் பயப்பட ஆரம்பித்துள்ளனர். ஜேர்மனியில் இன்று கூடிய முக்கிய 6 ஐரோப்பிய அதிகாரிகள் பிரித்தானியா காலம் தாழ்த்தாமல் விரைவில் பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள்.

பிரான்சில் இன்று எதிர்க் கட்சித் தலைவர்கள் உட்பட முக்கிய அனைத்துத் தரப்புத் பிரதிகளைச் சந்தித்த பிரெஞ்சு ஜனாதிபதியும் பிரித்தானியாவின் பிரிவில் கடும் போக்கைக் கடைப் பிடிக்கப் போவதாகத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 

உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

நாங்க அகதியாக வரவும் இல்லை.. இல்ல வேறு வடிவில் வந்தோ.. இந்த நாட்டு மக்களின் பொருண்மியத்தை சுரண்டவும் இல்லை. மாறாக இந்த நாட்டின் பொருண்மியத்தில் பங்களிக்கிற குடியேற்றக்காரர்கள். அந்த வகையில் இந்த மண்ணின் மக்களின் மாண்பில் அக்கறை செய்வது தவறும் அல்ல. 

நாங்கள் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம்.. பிரித்தானிய மக்களே பிரித்தானியாவுக்குள் சுய பெறுமதி அற்று வாழ வேண்டிய நிலை வந்தது தான். (ஊரில நாங்க ஏன் சிங்களவனுக்கு வாக்களிக்கிறமில்லை.. சிங்களவன்ர அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்து கொண்டு..  எமது சுயம் பாதுகாக்கப்பட்டனும் எமது தேவைகளை நம்மவர் தான் உணர முடியும்..என்பதற்காகத்தான்.)  நாங்க வரும் போது பிரித்தானிய மக்களால் நிறைந்திருந்த தெருக்கள் எல்லாம்.. இன்று குடியேற்றக்காரர்களால் நிரம்பி வழிகிறது. பிரித்தானிய values கொஞ்சமும் மதிக்கப்படுவதில்லை.

மேலும்.. பிரித்தானியா EU.. NON-EU என்று இரண்டு பாரபட்சமான அணுகுமுறைகளை கடைப்பிடித்து வந்தது. அதில்.. EU பணக்கார வலயம் ஒப்பீட்டளவில்.. ஏழை நாடுகளை அதிகம் கொண்ட NON-EU வலயத்திலும் அதிக நன்மைகளைப் பெற்று வந்தது. அது குடியேற்றமாக இருக்கட்டும்.. மாணவர்களாக இருக்கட்டும்.. வேலை வாய்ப்பாக இருக்கட்டும். பிரித்தானியா காலனித்துவம் செய்து அதிகம் கொள்ளையடித்தது.. EU வில் அல்ல. மாறாக.. NON-EU இல் தான். பிரிட்டனின் முன்னாள் காலனித்துவ நாடுகளைக் கொண்ட பொதுநலவாயத்துக்கு வாக்களிக்க உள்ள உரிமை.. குடிவரவில்.. பொருண்மியத்தில்.. மற்றும் EU பெறும் அநேக சலுகைகளில் கிடையாது. இந்த பாரபட்சமான நடைமுறைகளில் இருந்தும் பிரித்தானியாவும் பிரித்தானிய மக்களும் வெளி வரனும்... என்ற நோக்கமும் தான். 

EU என்ற கொழுத்த எருமைக்கு.. பிரித்தானியக் கரிக்குருவி உண்ணி எடுத்துக் கொண்டிருப்பதிலும்.. வெளியேறி கரிக்குருவி.. ஊரெல்லாம் பறந்து பறந்து அதன் சுயத்தோடு அது விரும்பிய மந்தையில் உண்ணி பொறுக்கி வாழும் அதன் சுயத்தை மீட்பது தான்.. அதுக்கும் நல்லம்.. உலகமயமாக்கம்.. ஏழைகளின் வயிற்றில் அடிப்பதைத் தடுக்கும். 

இதுக்கு மேல. வேறு சில்லி காரணங்களை எல்லாம் நாங்க முன்வைச்சு வாக்குப் போடுவதில்லை. tw_blush:

------------------------------------------------------

உதாரணத்துக்கு..

ஒரு பிரான்ஸ் மாணவர் பிரித்தானியவில்  Imperial college இல் படிக்க விரும்பினால்..

அவரது கல்விக் கட்டணம்.. பிரித்தானிய உள்ளூர் மாணவர்களுக்கு சமனானது..

முழுக் கடன் வசதி உண்டு.

பாரமரிப்புக் கடன் வசதி உண்டு.

விசா கட்டணங்கள் எதுவும் இல்லை...

படிச்சு முடிந்ததும் நிரந்தரமாக தங்கி இருந்து வேலை தேடலாம்.. வேலை செய்யலாம்.

நிம்மதியான கல்வி.

இதே ஒரு இலங்கை மாணவன் படிக்கனும் என்றால்..

கட்டணம். பிரித்தானியக் கட்டணத்தை விட 3 மடங்கு கூடிய கட்டணம்.

கடன் வசதிகள் எதுவும் இல்லை.

பராமரிப்புச் செலவுக்கும் மாணவரே பொறுப்பு.

விசாக்கட்டணங்கள் உச்சம்.

மேலும் சுகாதாரக் கட்டணம்.

படிச்சு முடிஞ்சதும்.. நாடு திரும்பனும். வேலை தேடுவது என்றால் அங்கிருந்து தேடிக் கொண்டு மீண்டும் நுழையனும். அதற்கு தனியான கட்டணங்கள்.

இதில்... இருவரும் மாணவர்கள் தான். EU மாணவரை விட அதிக பொருண்மியத்தை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும்.. ஒரு NON-EU மாணவன்.. வெகு சிறு சலுகை தானும் பெற முடிவதில்லை. இந்த பாரபட்சத்தை.. EU கண்டிச்சதும் இல்லை கண்டு கொண்டதும் இல்லை. அந்தக் கொழுத்த எருமைக்கு நலிந்து கிடக்கும் ஏழை செம்மறி ஆடுகளின் பாதிப்பு, நன்மை குறித்த கவலையோ அக்கறையோ இருந்ததும் இல்லை. அதுவும்.. ஏழைகளை ஏழைகளாக இருக்க வைச்சு அவர்களிடமே சுரண்டி வளரும்.. அதன் உலகமயமாக்கல் கொள்கையும் உடையனும் என்பதும் தான் எங்கள் வாக்கின் உண்மையான நோக்கம் ஆகும். அது நடக்கனும்... அதன் ஆம்பமாக இது இருந்தால் நல்லம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம் -சொரிலன்காவில் பாதுகாப்பு இல்லை என்று அன்று அமைதியாகவிருந்த uk யில் வாழ வந்தம் இன்று eu எனும் முத்தின பயித்தியம் தீவிர மதவாதிகளையும் தீவிர மத வெறியர்களையும் ukக்கு ஏற்றுமதி செய்வதில் உடந்தையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்களால் பாரிய குழப்ப நிலை உருவாகும் இதை தவிர்க்கணும் என்றால் எடுத்ததுக்கு எல்லாம் கதை பேசும் கிழடுகள் போன்று இருக்கும் eu வை விட்டு விலகுவதே நல்லது.

மதவாதிகளால் பிரச்சினை இப்பவே ஆரம்பிக்கபட்டு விட்டது ஈஸ்ட்காமில் உள்ள கவுன்சிலில்  முறைப்படி  அனுமதி பெற்று கட்டபெற்ற இந்துக்கோவில் இங்குள்ள முஸ்லிம் மதவெறியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கபட்டு இடை நிறுத்தப்பட்டது மீண்டும் கோட் படியேறி மிகுந்த அல்லைதொல்லைக்கிடையில் வேலைகள் தொடர்கிறது வந்த இடத்தில் மதவெறியை பரப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலவச இணைப்பாக எங்கடை சனத்துக்கும் நாலு தட்டு தட்டினால் தான் தாயகத்தில் உள்ள மக்களின் நிலமை கொஞ்சமாவது விழங்கும்.

On 27 juin 2016 at 0:09 AM, பெருமாள் said:

நான் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம் -சொரிலன்காவில் பாதுகாப்பு இல்லை என்று அன்று அமைதியாகவிருந்த uk யில் வாழ வந்தம் இன்று eu எனும் முத்தின பயித்தியம் தீவிர மதவாதிகளையும் தீவிர மத வெறியர்களையும் ukக்கு ஏற்றுமதி செய்வதில் உடந்தையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்களால் பாரிய குழப்ப நிலை உருவாகும் இதை தவிர்க்கணும் என்றால் எடுத்ததுக்கு எல்லாம் கதை பேசும் கிழடுகள் போன்று இருக்கும் eu வை விட்டு விலகுவதே நல்லது.

மதவாதிகளால் பிரச்சினை இப்பவே ஆரம்பிக்கபட்டு விட்டது ஈஸ்ட்காமில் உள்ள கவுன்சிலில்  முறைப்படி  அனுமதி பெற்று கட்டபெற்ற இந்துக்கோவில் இங்குள்ள முஸ்லிம் மதவெறியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கபட்டு இடை நிறுத்தப்பட்டது மீண்டும் கோட் படியேறி மிகுந்த அல்லைதொல்லைக்கிடையில் வேலைகள் தொடர்கிறது வந்த இடத்தில் மதவெறியை பரப்புகிறார்கள்.

பிரித்தானியா பிரிந்தால் ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளைத் திறந்துவிடும். குறிப்பாக பிரான்ஸ் தனது கல்லேயில் உள்ள தடுப்பு முகாம்களைத் திறந்துவிடும். இலகுவாக இங்கிலாந்து எல்லை வரை வரலாம்.  இங்கிலாந்து உள்நாட்டிலேயே வரும் அகதிகளைப் பராமரிக்க வேண்டி வரும். 
 
வெள்ளையின பிரித்தானியர்களிடம் மதம் கல்வி வேலைவாய்ப்பு விடயங்களில் போட்டியிடும் வெளிநாட்டவர்களிடமிருந்து  இலங்கைத் தமிழரைப் பிரித்துத் தனித்துவமாக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்று அநேகமான இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

ஏற்கனவே உங்க கல்லேயில் திறந்து விட்டுத்தான் பிரச்சினையே அதை விளங்கி கொள்ளாமல் இந்த பிரசினையை விளங்கி கொளவது கஷ்ட்டம் அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"You were fighting for the exit...why are you here?"

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் போர் அகதியாக வந்தான்; பொருளாதார அகதியாக வந்தான்; படிப்புக்காக வந்தான்; வேலைக்காக வந்தான்.. இவையெல்லாம் பிரச்சினையில்லை. அவனுக்கு குடியுரிமை ஒன்று கிடைத்துவிட்டால் அதன்பிறகு அவனுக்கு எந்த முடிவும் எடுக்கும் தகுதி கிடைத்துவிடும். அவன் வந்த பின்புலத்தை வைத்து அவனுக்கான உரிமையை மறுப்பது பாகுபாடு காட்டும் செயலாகும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

On 29 juin 2016 at 1:06 AM, பெருமாள் said:

ஏற்கனவே உங்க கல்லேயில் திறந்து விட்டுத்தான் பிரச்சினையே அதை விளங்கி கொள்ளாமல் இந்த பிரசினையை விளங்கி கொளவது கஷ்ட்டம் அண்ணை.

பிரித்தானியா பிரிவதால் கல்லேயில் உள்ள தடுப்பு முகாம்களை அகற்றப் போவதாக பிரான்ஸ் கூறியதை அடுத்து பிரித்தானியா பிரான்சுடன் பேச்சு நடத்தி ஒரு இணக்கத்துக்கு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் தடுப்பு முகாம்களை மூடாது. பதிலுக்கு பிரித்தானியா, எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆகப்போகும் செலவினைப் பிரான்சுக்கு வழங்கும். 

https://fr.news.yahoo.com/les-accords-franco-britanniques-sur-calais-maintenus-135236652.html?nhp=1

  • கருத்துக்கள உறவுகள்

இருமல் கிழவியைக் குடுத்து  தும்மல் கிழவியை வங்கியமாதிரிப் போய்க்கொண்டு இருக்கு கதை....!

  • கருத்துக்கள உறவுகள்

பிரதான அரசியல் கட்சிகள் தலைமைத்துவப் போட்டியில் சிக்கியுள்ளன. எப்படியும் பொருளாதாரம் ஆட்டம் காணும். இனவாதம் அதிகமாகும். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும். 

நாட்டை துப்பரவு செய்ய இவை வழிவகுக்கும்! பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று வாக்குப்போட்டேன். எதிர்பார்த்தது எல்லாம் நடக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஏதோ உங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டி வாக்குப் போட்டு இருக்கிறியள் போல கிடக்குது.

நல்லது... நாளைக்கு நம்மளையும் போகச் சொல்லுவார்கள்... எதிர் பார்த்து இருங்கோ. அதுவும் நடக்கும்.

எங்களது சொந்த இடத்திலிருந்தே சிங்களவன் துரத்த ஓடி வந்த நாங்க, வெள்ளையன் தனது சொந்த நிலத்திலிருந்து போகச் சொல்லும் போது, போக வேண்டியது தான்.

ஒன்றை நாம் மறக்கக் கூடாது: கிழக்கு ஐரோப்பாவோ, பிரித்தானியவோ..... வெள்ளை தோல் ஐயா, வெள்ளைத் தோல்..... நாம் எல்லாம் இரண்டாம் தரம்.

சும்மா பீலா விடப் படாது.... முதலுக்கே மோசம்..tw_bawling:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஏதோ உங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டி வாக்குப் போட்டு இருக்கிறியள் போல கிடக்குது.

நல்லது... நாளைக்கு நம்மளையும் போகச் சொல்லுவார்கள்... எதிர் பார்த்து இருங்கோ. அதுவும் நடக்கும்.

எங்களது சொந்த இடத்திலிருந்தே சிங்களவன் துரத்த ஓடி வந்த நாங்க, வெள்ளையன் தனது சொந்த நிலத்திலிருந்து போகச் சொல்லுவார்கள்.

ஒன்றை நாம் மறக்கக் கூடாது: கிழக்கு ஐரோப்பாவோ, பிரித்தானியவோ..... வெள்ளை தோல் ஐயா, வெள்ளைத் தோல்..... நாம் எல்லாம் இரண்டாம் தரம்.

பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதுதான் திட்டம்! மேற்கு நோக்கிப் போவதா, கிழக்கு நோக்கிப் போவதா என்று யோசித்து காலம் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. பிறநாட்டவர் வெளியேறவேண்டும் என்ற அழுத்தம் வராது. ஆனால் நாடு போகும் நிலைமையைப் பார்த்து நாமே வெளியேறலாம் என்றுதான் இப்போது நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதுதான் திட்டம்! மேற்கு நோக்கிப் போவதா, கிழக்கு நோக்கிப் போவதா என்று யோசித்து காலம் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. பிறநாட்டவர் வெளியேறவேண்டும் என்ற அழுத்தம் வராது. ஆனால் நாடு போகும் நிலைமையைப் பார்த்து நாமே வெளியேறலாம் என்றுதான் இப்போது நினைக்கின்றேன்!

போறது எண்டு நினைத்து இருந்தால், இருப்போருக்கு உதவ வில்லையே....tw_cold_sweat:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.