Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரவணபவன் எம்.பி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்! - மைத்திரியும் பங்கேற்பு

Featured Replies

த.தே.கூ. எம்.பி.யின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி : புதல்வியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் யாழில் உள்ள வீட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை  சென்றுள்ளார். 3b893c7b-7017-4037-bd43-2f43c774cdf9.jpg

குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் புதல்விக்கு பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி நேரில் சென்றுள்ளார். 

முன்னதாக யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழப்பாணம் வருகை தரும் அதே தினம் தனது புதல்வியின் பிறந்த தினம் என்பதால் நேரில் வீட்டுக்கு வருகை தருமாறு குறித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார் இந் நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு நேரில் சென்று வாழ்த்தியதோடு சிறு விருந்துபசாரத்திலும் பங்கேற்றதாக தெரியவருகின்றது.

இக்கொண்டாட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், மஸ்தான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

6c007880-6b89-4a53-a17f-a3fe398fc2b8.jpgD5454054545405.jpg

http://www.virakesari.lk/article/7727

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நவீனன் said:

த.தே.கூ. எம்.பி.யின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி : புதல்வியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு

முன்னதாக யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழப்பாணம் வருகை தரும் அதே தினம் தனது புதல்வியின் பிறந்த தினம் என்பதால் நேரில் வீட்டுக்கு வருகை தருமாறு குறித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார் இந் நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு நேரில் சென்று வாழ்த்தியதோடு சிறு விருந்துபசாரத்திலும் பங்கேற்றதாக தெரியவருகின்றது.

கூட்டமைப்பு உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மனதளவில் சாய்ந்தவர் ......இப்ப மகள வைத்தே வென்றூவிட்டார்...அம்மணீக்கும் இந்தவயதில் பற்றீௐ சட்டை போட்டு கேக்கு வெட்டுற பலன்.....

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வாத்தியார் said:

கூட்டமைப்பு உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்

தமிழினம் பற்றி கோரிக்கை வைத்தால்??

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, alvayan said:

மனதளவில் சாய்ந்தவர் ......இப்ப மகள வைத்தே வென்றூவிட்டார்...அம்மணீக்கும் இந்தவயதில் பற்றீௐ சட்டை போட்டு கேக்கு வெட்டுற பலன்.....

பற்றிக் சட்டை ......அதுவும் ஒரு நல்லிணக்கத்திற்கான சகிம்சை

சரவணபவனது உதயன் பத்திரிகையின் கிளிநொச்சிக் கிளையில் பணிபுரியும் இருவரால் பத்திரிகை காரியாலயத்தில் வைத்து ஒரு சிறுமி கடந்தவாரம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இவர் தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவது, இவர்களின் கொடூர மனநிலையையும், இவர்களின் சமுதாயப் பற்று மற்றும் சமுதாயப் பொறுப்பு இல்லாத தன்மையை தெளிவாக காட்டுகிறது.

இவரைப் போன்றவர்கள் தமிழர் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி அற்றவர்கள்.

எத்தனையோ பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள்  தமது பிள்ளைகள், கணவர், அப்பாக்களை காணமல் தேடிக் கொண்டிருக்க............,

அவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர்,

தமக்கு விடிவை பெற்றுத் தருவார் என அந்த அப்பாவி மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாரளுமன்றம் அனுப்பப் பட்ட ஒருவர் ...... எதனையும் மக்களுக்காகச் செய்யாமல், எமக்கு அழிவைத் தந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியினை அழைத்து தனது மகளின் பிறந்தநாளினைக் கொண்டாடும் அவலம் ஈழத்தமிழர் அரசியலில் மாத்திரமே சாத்தியம்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

த.தே.கூ. எம்.பி.யின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி : புதல்வியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு

இதுதான் எமது தமிழ் அரசியல்வாதிகளின் இலட்சணம்.

மேடையிலும் பாராளுமன்றத்திலும் ஆவேசமாக கொக்கரிப்பார்கள். ஆனால் தனிப்பட்ட ரீதியில்  ஆகா ஓகோ...
எமக்கு இவையெல்லாம் புதிதல்ல.....அன்று தொடக்கம் இது போன்ற நிகழ்வுகளை நிறைய பார்த்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

சரவணபவனது உதயன் பத்திரிகையின் கிளிநொச்சிக் கிளையில் பணிபுரியும் இருவரால் பத்திரிகை காரியாலயத்தில் வைத்து ஒரு சிறுமி கடந்தவாரம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இவர் தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவது, இவர்களின் கொடூர மனநிலையையும், இவர்களின் சமுதாயப் பற்று மற்றும் சமுதாயப் பொறுப்பு இல்லாத தன்மையை தெளிவாக காட்டுகிறது.

இவரைப் போன்றவர்கள் தமிழர் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி அற்றவர்கள்.

2 hours ago, Athavan CH said:

எத்தனையோ பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள்  தமது பிள்ளைகள், கணவர், அப்பாக்களை காணமல் தேடிக் கொண்டிருக்க............,

அவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர்,

தமக்கு விடிவை பெற்றுத் தருவார் என அந்த அப்பாவி மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாரளுமன்றம் அனுப்பப் பட்ட ஒருவர் ...... எதனையும் மக்களுக்காகச் செய்யாமல், எமக்கு அழிவைத் தந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியினை அழைத்து தனது மகளின் பிறந்தநாளினைக் கொண்டாடும் அவலம் ஈழத்தமிழர் அரசியலில் மாத்திரமே சாத்தியம்........

1 hour ago, குமாரசாமி said:

இதுதான் எமது தமிழ் அரசியல்வாதிகளின் இலட்சணம்.

மேடையிலும் பாராளுமன்றத்திலும் ஆவேசமாக கொக்கரிப்பார்கள். ஆனால் தனிப்பட்ட ரீதியில்  ஆகா ஓகோ...
எமக்கு இவையெல்லாம் புதிதல்ல.....அன்று தொடக்கம் இது போன்ற நிகழ்வுகளை நிறைய பார்த்திருக்கின்றோம்.

நீங்கள் அனைவரும் ஒரு குழுவாக அடுத்த தேர்தலில் நின்று மக்கள் ஆதரவை கேட்டு பார்க்கலாமே?

Edited by Jude

2016க்குள் தமிழர் பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று தேர்தலில் நின்று வென்று போட்டு, அந்த பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வு சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு காணாமல், தமிழர்படும் துன்பங்களை மறந்துவிட்டு, தனது காரியாலயத்தில் நடந்த பாலியல் வல்லுறைவை இருட்டடிப்புச் செய்து போட்டு, தமிழின அழிப்புக்களை தொடர்ந்து செய்து வரும் சிங்கள-பௌத்த இனவெறியர்களுடன் கூத்தடிப்பது, நிச்சயமாக தமிழின விரோதிகளுக்கும், தமிழினப் படுகொலைகளை செய்பவர்களுக்கும், அவர்களின் எடுபிடிகளுக்கும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்று தெரிகிறது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Jude said:

நீங்கள் அனைவரும் ஒரு குழுவாக அடுத்த தேர்தலில் நின்று மக்கள் ஆதரவை கேட்டு பார்க்கலாமே?

ஐயா! ஒரு தமிழ்குடிமகனுக்கு கேள்வி கேட்க கருத்து சொல்ல உரிமையில்லையா?  Buhu

தமிழருக்கு விடிவு கிடைக்க மட்டும் அவர்கள் அழுது வடிஞ்சு கொண்டிருக்க வேணும் போலிருக்கிறது. 

12 hours ago, Athavan CH said:

எத்தனையோ பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள்  தமது பிள்ளைகள், கணவர், அப்பாக்களை காணமல் தேடிக் கொண்டிருக்க............,

அவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர்,

தமக்கு விடிவை பெற்றுத் தருவார் என அந்த அப்பாவி மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாரளுமன்றம் அனுப்பப் பட்ட ஒருவர் ...... எதனையும் மக்களுக்காகச் செய்யாமல், எமக்கு அழிவைத் தந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியினை அழைத்து தனது மகளின் பிறந்தநாளினைக் கொண்டாடும் அவலம் ஈழத்தமிழர் அரசியலில் மாத்திரமே சாத்தியம்........

போர் நடைபெற்ற நேரம் மக்கள் சாகும் நேரங்களில் பிரபாகரனும் அவரது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். அந்த படங்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். குடும்ப வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளின் நிகழ்வுகளை கொண்டாடுவது சகஜம். பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள்  எந்த நேரமும் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்க முடியாது.
எமக்கு ஒருவரை பிடிக்காது என்பதற்காக அவர்கள் நின்றால் குற்றம் இருந்தால் குற்றம் என்றால் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஐயா! ஒரு தமிழ்குடிமகனுக்கு கேள்வி கேட்க கருத்து சொல்ல உரிமையில்லையா?  Buhu

கருத்து சொல்ல உரிமை இல்லை என்று யார் சொன்னது? தேர்தலில் நில்லுங்கள் என்றால் கருத்து சொல்ல உரிமை இல்லை என்ற அர்த்தம்? கருத்து சொல்ல மட்டுமல்ல தேர்தலில் நிற்கவும் உரிமை இருக்கிறது உங்களுக்கு.

  1. தேர்தலில் நின்றால் மக்கள் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் என்ற பயமா? அல்லது
  2. நீங்கள் வெறும் வாய் சொல் வீரர் மட்டும் தானா? அல்லது
  3. இன்று நீங்கள் குறை பிடிக்கும் மக்கள் பிரதிநிதிகளிலும் பார்க்க நீங்கள் மோசமானவர் என்பது அம்பலமாகும் என்ற பயமா?
2 hours ago, தெனாலி said:

போர் நடைபெற்ற நேரம் மக்கள் சாகும் நேரங்களில் பிரபாகரனும் அவரது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். அந்த படங்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

ஓ! அப்பிடியா சங்கதி. இது தெரியாம போச்சே!!!
அங்கால மக்கள் சாகேக்க இங்கால கொண்டாடினவரே? நீங்கள் பெரிய வின்னர் தான்.

கூட யார் யார் யாரோட கொண்டாடினவர் என்றும் சொல்லி இருக்கலாமே! தமிழின படுகொலைகளை, தமிழின அழிப்பை செய்துவரும் போர்க் குற்றவாளி ராஜபக்சவோட கொண்டாடினவரே? போர்க் குற்றவாளி சந்திரிகாவோட கொண்டாடினவரே?

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவனின் இந்தப் "படங்காட்டல்" அரசியல் தமிழ் மக்களுக்கு எதையும் கொண்டு வரப்போவதில்லை. ஆனால் சரவணபவனுக்கு பல ஆதாயங்கள் இருக்கும். இன்று எம் மக்கள் தெரிவு செய்துள்ள அரசியல்வாதிகள் எல்லாருமே இந்த ரகம் தான். தவறு மக்களினதே தவிர.. படங்காட்டல்காரர்களதுன்னு சொல்ல முடியாது. tw_blush:

போற போக்கிலை இங்க,

தமிழ் பெண்களை பாலியல் வன்புனர்வு செய்து போட்டு சுதந்திரமா திரிபவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டால், முடிந்தால் நீங்களும் அவனைப் போல பெண்களை பாலியல் வன்புனர்வு செய்துபோட்டு சுதந்திரமா திரிய முடியுமோ என்று கேட்கவும், ....

தமிழர்களை கடத்தி கொள்ளயடித்து, கொலை செய்து போட்டு சுதந்திரமா கும்மாளம் அடித்து திரிபவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டால், முடிந்தால் நீங்களும் அவனைப் போல கடத்தி கொள்ளயடித்து, கொலை செய்துபோட்டு கும்மாளம் அடிக்க வேண்டியது தானே என்று சொல்லவும், ....

மாபெரும் தமிழினப் படுகொலைகளை செய்து போட்டு எக்காளமிட்டு திரிபவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டால், முடிந்தால் நீங்களும் அவனைப் போல படுகொலைகளை செய்துபோட்டு கும்மாளம் அடிக்க வேண்டியது தானே என்று சொல்லவும், ....

ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாமலே ஜனநாயகப் பற்று பொங்கி வழியும் பெரும் கும்பலே உருவாகிடும் போல இருக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வீட்டுக்கு சென்று, நாடாளுமன்ற உறுப்பினரின் புதல்விக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரும் அதே தினம் தனது புதல்வியின் பிறந்த தினம் என்பதால் வீட்டுக்கு வருகை தருமாறு  நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந் நிலையிலேயே ஜனாதிபதி நேரில் சென்று வாழ்த்தியதோடு சிறு விருந்துபசாரத்திலும் பங்கேற்றதாக தெரியவருகின்றது. இந்த விருந்துபசார நிகழ்வில் மாவை.சோ.சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், மஸ்தான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

sara-b.day-maithri-190616-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=159846&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ...... பாவம் பிள்ளைகளை மண் மீட்புக்காக இழந்த பெற்றோர்.

ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உண்மையோ பொய்யோ தெரியவில்லை, 
ஒருமுறை சரவனபவனின் மகள் கொழும்பில் மகிந்தவை சந்தித்தபோது சொன்னாவாம் 
"அங்கிள் அப்பா is no letting me to go to Jaffna. Can you ask him to let me go"

இந்த மூதேசியளுக்கு வாக்களிக்கிற கூட்டத்துக்கு தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் தியாகம் செய்த பிரபாகரன் முட்டாளா புத்திசாலியா 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, hasan said:

அதை எப்பவோ சொல்லியாச்சு ஹசன். புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவனின் மனதை வெல்ல நினைத்த மைத்திரி, இடம்பெயர்ந்த மக்கள் வாழும் நலன்புரி முகாம்களுக்கு சென்று இருந்தால் ஆயிரக்கணக்கான மக்களின் மனங்களை வென்று இருக்கலாம்.

அதேபோன்று, சரவணபவனும் தனது வீட்டுக்கு வரவிருந்த மைத்திரியினை இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் சூழலை காண்பித்து இருந்தால் அந்த மக்களின் மனங்களை வென்று இருக்கலாம். 

பின்கதவு வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைப் பெற்று இருந்தால் இவ்வாறுதான் நீங்கள் செயற்படுவீர்கள் என்பது அனைவரும் அறிந்த செயல். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. உங்கள் வியாபாரத்தினை நீங்கள் நன்றாகவே நடத்துங்கள். பாவம் யாழ்ப்பாண மக்கள். 

சிறு குழந்தையின் பிறந்த நாள் என்றாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு இளம் பெண்ணின் பிறந்த நாளுக்கு மைத்திரி சென்று இருப்பது நாட்டில் அவ்வளவுக்கு மக்களின் பிரச்சினைகள் குறைந்து சிங்கப்பூர் போன்றா தோற்றம் அளிக்கின்றது?

அன்று தந்தை செல்வாவும் இவ்வாறுதான் தமிழ் இளைஞர்களை உசுப்பிவிட்டு, யாழ்ப்பாணத்துக்கு அந்த நேரம் வருகை தந்து இருந்த அப்போதைய ஐனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார். அப்போது தந்தை செல்வாவின் மனைவியார், கறுத்த கொழும்பான் மாம்பழத்தினை வெட்டிக் கொடுத்தவாறு இதன் சுவையை அறிய விரும்பின் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லுங்கள் என்றாராம்.

இவ்வாறுதான் எமது மக்களின் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அன்றும் இன்றும் உள்ளது. இதில் மாற்றம் எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.
 
Edited by nirmalan

627_thumb_cartoon_20-06-2016.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.