Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபாலிடா...... தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி

Featured Replies

கபாலிடா......   தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் கபாலி திரை படத்திற்கான வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகின்ற நிலையில், மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எயார் ஏசியா விமானத்தில், வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

13465950_10154238241753433_2750337088176

ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த 'கபாலி' விளம்பரம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

 

‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ விளம்பர, விமான நிறுவனமான எயார் ஏசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது.

குறிப்பாக “சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள்” என்ற வாசகத்துடன் அண்மையில் சலுகை விலை டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்திய எயார் ஏசியா, தங்களது இந்தியா செல்லும் விமானம் ஒன்றில் சூப்பர் ஸ்டாரின் படத்தை வரைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

13512244_10154238241478433_6117157928172

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டீசரும், பாடல்களும் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்க, படத்தின் விளம்பரங்களோ புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

 

13524298_10154238241613433_1175108195016

கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பெங்களூரில் இருந்து தனி விமானம் ஒன்றை எயார் ஏசியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. காலையில் பெங்களூரில் இருந்து புறப்படும் விமானத்தில் சென்னை வந்து முதல் காட்சியை பார்த்துவிட்டு மதியத்துக்குள் மீண்டும் பெங்களூர் திரும்பிவிடலாம். 

Air-Asia-3.jpg

இதற்காக வண்ணமயமான கபாலி பட ஸ்டிக்கர்களுடன் விமானம் ஒன்றும் தயாராகியுள்ளது. 

இது போன்ற புதிய வகையிலான விளம்பரங்களால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கபாலி திரைப்படம் எதிர்வருமை் ஜூலை 22 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/8328

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிக்காக கற்பனைக்கும் அப்பாற்பட்டு யோசிக்கின்றார்கள்....!  tw_blush:

  • தொடங்கியவர்

கடன் அட்டையில் ஓடுகிறது கபாலி

 

சுப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் கபாலி. இந்த படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பாரிய வரவேற்பை பெற்றுவருகின்றன.

adad.jpg

இந்த படத்தின் விளம்பர உரிமையை பெற்ற எயார் ஏசியா நிறுவனம் கபாலி திரைப்படத்தின் ஸ்டிக்கர்களை விமானத்தில் ஒட்டி கபாலியின் புகழை வானளவிற்கு கொண்டு சென்றுள்ளது. 

இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கபாலியின் விளம்பர உரிமையை பெற்ற சிட்டி வங்கி கபாலி திரைப்படத்தில் உள்ள ரஜினியின் உருவப்படத்தை தமது பிளட்டினம் கடன் அட்டைகளில் உள்ளடக்கியுள்ளது.

தற்போது புதிய சிட்டி வங்கியின் கடன் அட்டைகளை பெற்றால் அதில் கபாலி ரஜினியின் புகைப்படங்கள் அடங்கிய கடன் அட்டைகளே கிடைக்கும்.

தமிழ் திரைப்படங்கள் தொடர்பில் இவ்வாறான விளம்பரங்கள் வெளிவருவது இதுவே முதற்தடவை. 

இவ்வாறான விளம்பரங்கள் வெளிவருவதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 

http://www.virakesari.lk/article/8519

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30.6.2016 at 10:18 AM, நவீனன் said:

கபாலிடா......   தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி

வெடித்து சிதறாமல் இருந்தால் சந்தோசம் :cool:

இவங்க போற போக்க பாக்க படம் ஊத்திக்கும் போலத்தான் இருக்கு - ஆனாலு நம்ம தலைவரின் ரசிகர்களை நம்ப முடியாதப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

CmSkXFfUEAAGrPY.jpg:large

இருபத்தைந்து வருசம் கழித்து வந்திருக்கேன் உடனே ஒரு டான்ஸ் ஆடு ராதிகா அப்தே ??வித் டிரஸ் ஆர் வித்தவுட் டிரஸ் கபாலி

                                                                                                                                                                          (with dress or without dress)

  • கருத்துக்கள உறவுகள்

கபாலி விமானத்தில் வில்லன்களும் பயணிக்கலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
 

ரஜனியை கிழிக்கும் பச்சைத்தமிழன், நெருப்படா பருப்படா என்று படு கிழவனுக்கு மேக்கப்போட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்போகும் படக்குழுவினா்,

Posted by தமிழுக்காக நாம் தமிழா் Thamilukaga Naam Thamilar on Sonntag, 17. Juli 2016

 

  • கருத்துக்கள உறவுகள்

13781803_1712950485589064_87126130693362

பின்..... மர மண்டையிலும், பிடரியிலும்..... கபாலிடா...... :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள சிடி வந்தா சொல்லுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

கள்ள சிடி வந்தா சொல்லுங்கப்பா.

எனக்கும் .

புகைப்பிடித்தல் மது அருந்துதல் தூள் அடித்தல் போல் ரஜனி தல தளபதி என்பதும் ஒரு போதையாகிவிட்டது. இதற்கு அடிமையானவர்களிடம் பணம் பார்க்கின்றார்கள். கலை என்றபோர்வையில் சட்டபூர்வமான ஒரு போதை வியாபாரம். 

  • கருத்துக்கள உறவுகள்

கபாலி.. தரையிலும் ஆகாயத்திலும் காலின்னு வாசிச்சுப் போட்டன். 

எடுக்கிற எடுப்புக்கு படம் ஓடுமோ... உவருடைய கடைசியா வந்த படங்கள்.. ஊத்திக்கின்னது தான் வரலாறு. ஆனால்.. ஊத்தாத மாதிரி காட்டிக்கிறது. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

கள்ள சிடி வந்தா சொல்லுங்கப்பா.

விழுந்தடிச்சு  கபாலி முதல் ஷோ பார்க்கப்போற ஆக்கள்  தயவுசெய்து விசிலடிக்காமல் சத்தம் போடாமல்  பார்க்க சொல்லவேணும்...ஏனெண்டால் கள்ள சீடியிலை  ஒரே சத்தமாய் கிடக்கு.:cool:

  • தொடங்கியவர்
8 hours ago, ஈழப்பிரியன் said:

கள்ள சிடி வந்தா சொல்லுங்கப்பா.

  13775846_1259868334025342_81559136214154 :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13718520_921152108006862_189965768419332
  • கருத்துக்கள உறவுகள்

13700001_10153733094782944_1979584055844

  இது ஈழத்தமிழரை நாசம் செய்ய வந்த கபாலிடா. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
 

Super Star ரஜினியின் கபாலிக்கு எதிராகவும், சினிமா வெறியர்களுக்கு எதிராகவும் இலங்கையர் ஒருவரின் குரல்... ?????

Posted by Cine Boost on Mittwoch, 13. Juli 2016

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CnxrgVtUEAEgJ9v.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19.7.2016 at 2:23 AM, பெருமாள் said:

எனக்கும் .

Cn0B_qsUAAABzaO.jpg

  • கருத்துக்கள உறவுகள்

13709754_278505815844163_648566543516440

  • கருத்துக்கள உறவுகள்

13697217_278522269175851_655519700382119

  • தொடங்கியவர்

13692721_1211833085517836_63528276634703

13716014_1211833075517837_78179306249580

13769584_1211833078851170_63202652132518

பைத்தியங்கள்டா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.