Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போக்கிமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13770378_1116903035046966_20637477283577

வசந்தகாலம் .........
பச்சையம் விரிந்த புல்வெளியும்
பல வா்ண அழகு மலா்களும்
வீதியின் இருமருங்கும் வியாபித்திருக்க
பள்ளி விடுமுறையில் மழலைகள்
துள்ளி விளையாடும்
பூங்காவை நோக்கி நான்
என் பேரனுடன் நடைபயில
இரண்டாவது படிக்கும்
அவனது கையிலும் ஜ போன்
வீதியில் ஓடிஓடி மூலைக்கு மூலை
எதையோ தேடி அலைந்தான்
அன்று தும்பி பொன்வண்டுதேடி
மாட்டு வால் தடத்துடன்
ஓடி விளையாடிய என்
அண்ணன் தம்பிகளின்
இளமைப் பருவம் நினைவில் ஊசலாட
இவனென்ன தேடுகிறான் என்று
எண்ணித் திகைத்து
வீதியில் கவனமாக நடத்கும்படி
எச்சாித்தபடி நான்
அவன் சொன்னான்
போக்கிமான் பிடிக்கிறானாம்
காலமும் தேசமும் மாறினாலும்
தேடல் ஒன்றுதான் என்று என்
நினைவில் நிழலாட
அவனைத்தவிர மூலைக்கு மூலை
ஓடித் தேடும் சிறுவா்களுடன் விடலைகளும்
வீதியில் வாகனமோ மனிதா்களோ
வருவது கூட கவனத்தில் இல்லை
இவா்களை வீதியில் அலையவைத்த
விஞ்ஞானத்தை மனதுக்குள் வைதபடி
என் பேரனின் தேடலுடன் என்
நடையும் தொடா்ந்தது.
 
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது போண் கவிதை 

விஞ்ஞானத்தின் விளைச்சலில் இதுவும் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை போய் முடியப் போகுதோ. :rolleyes: பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்ய??
காலத்தின் கோலமிது.....
கவிதைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி...!

மாரீசன் என்ற ஒரு மாய மானால் 'சீதை' சுயமிழந்தாள்!

இந்தப் போக்கிமான் என்கிற மாய மானால் உலகமே சுயமிழக்கும் போல உள்ளது! 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பின்னூட்டம் இட்டா பிறகுதான் வாராங்கள்  இது என்ன டிசைனோ ஹாஹாஹா:unsure:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, முனிவர் ஜீ said:

நம்ம பின்னூட்டம் இட்டா பிறகுதான் வாராங்கள்  இது என்ன டிசைனோ ஹாஹாஹா:unsure:tw_blush:

கண்மணி அக்கா இந்தக் கவிதையை இணைத்த.... ஜூலை 21´ம் திகதி, வீட்டில் விருந்தினர்கள் வந்து நின்ற படியால்.... களத்திற்கு அதிகம் வரமுடியாததால்... இப் பதிவு கண்ணில் படமால் போய் விட்டது. இப்போ.... முனிவர் அதனை மீண்டும் மேலே கொண்டு வந்து விட்டதால், எமது கண்ணில் பட்டது மகிழ்ச்சியே..... :)

போக்கிமானை வைத்து......  எழுதிய நவீன கவிதை அருமை.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, முனிவர் ஜீ said:

நம்ம பின்னூட்டம் இட்டா பிறகுதான் வாராங்கள்  இது என்ன டிசைனோ ஹாஹாஹா:unsure:tw_blush:

நான் தினசரி அவதானித்தபடியே இருந்தேன் tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
On 01/08/2016 at 8:53 AM, தமிழ் சிறி said:

கண்மணி அக்கா இந்தக் கவிதையை இணைத்த.... ஜூலை 21´ம் திகதி, வீட்டில் விருந்தினர்கள் வந்து நின்ற படியால்.... களத்திற்கு அதிகம் வரமுடியாததால்... இப் பதிவு கண்ணில் படமால் போய் விட்டது. இப்போ.... முனிவர் அதனை மீண்டும் மேலே கொண்டு வந்து விட்டதால், எமது கண்ணில் பட்டது மகிழ்ச்சியே..... :)

போக்கிமானை வைத்து......  எழுதிய நவீன கவிதை அருமை.:)

நான் சும்மா பகிடிக்கு எழுதியது அண்ணா 

18 hours ago, குமாரசாமி said:

நான் தினசரி அவதானித்தபடியே இருந்தேன் tw_glasses:

ம்கும் ஹா ஹா நல்லது 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அவனைச் சொல்லுறேள். நானே வீட்டில இருக்க ஒரு பொம்பிளை போக்கிமோன் அதுவா தேடித் தேடி வந்து தொல்லை பண்ணுதுன்னு.. கவலைல இருக்கன். இருந்தாலும் விட்டனா... எறிஞ்சன்.. பிடிச்சுட்டன். 

எனக்குத் தெரியும் படம் போட்டால் தான் நம்புவியள் என்டு. 

13932727_10153765480797944_9580315441851

13669778_10153765480887944_3756637466094

On 8/1/2016 at 3:55 AM, முனிவர் ஜீ said:

நம்ம பின்னூட்டம் இட்டா பிறகுதான் வாராங்கள்  இது என்ன டிசைனோ ஹாஹாஹா:unsure:tw_blush:

நாங்க பின்னூட்டம் விட நேரமில்லாம விளையாடுறம். இவர் என்னடான்னா.. :rolleyes:tw_blush:

===============

நிகழ்கால ஓட்டத்தை பிரதிபலிக்கும் கவிதை அழகு.tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ உங்கள் பிள்ளை விளையாடும் வயதில் நீங்கள் விளையாட்டு காட்டுகிறீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

போக்கிமானும்  பேரனும் போக்குக்காட்ட  காவல்காத்துக் கொண்டு கண்மணி செல்கின்றார் ....!  tw_blush:

அருமையான கவிதை சகோதரி  ....!

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

போக்கிமானும்  பேரனும் போக்குக்காட்ட  காவல்காத்துக் கொண்டு கண்மணி செல்கின்றார் ....!  tw_blush:

அருமையான கவிதை சகோதரி  ....!

இந்தா இவரும் இப்ப தான் வந்திருக்கிறார்     டூ லேட்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

இந்தா இவரும் இப்ப தான் வந்திருக்கிறார்     டூ லேட்tw_blush:

இப்பதான் இந்தக் கவிதை கண்ணில் பட்டது  மகரிஷி ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இப்பதான் இந்தக் கவிதை கண்ணில் பட்டது  மகரிஷி ....!  tw_blush:

நல்லது அண்ணா கண்மணீ அக்கான்ட திரியை கொஞ்சம் சிரிப்பு எண்ணெய் ஊற்றி சீராக்கவே எனது பதிவுtw_blush: 

அக்கேய்  தம்பியை மன்னித்து அருளும் குரு பெயர்ச்சி தம்பிக்கு நல்லதாம் அக்கா ஏசாமாட்டாtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பட்டாம்பூச்சிகளை பிடிக்க

முள்ளுக்குத்தும் என்று தாய் தகப்பன் எம்பின்னால் ஓடிவந்தார்கள்

இப்ப 

தொழில்நுட்ப உலகம்

அவன் விளையாடுகின்றான்

ஒரே கல்லில் பல மாங்காய்

உங்களுக்கும் நடப்பதால் பல நன்மைகள்

ஆச்சியை நடக்கவைத்த பேரனுக்கு  பராட்டுக்கள்.

கவிதைக்கு நன்றி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நாங்க பட்டாம்பூச்சிகளை பிடிக்க

முள்ளுக்குத்தும் என்று தாய் தகப்பன் எம்பின்னால் ஓடிவந்தார்கள்

இப்ப 

தொழில்நுட்ப உலகம்

அவன் விளையாடுகின்றான்

ஒரே கல்லில் பல மாங்காய்

உங்களுக்கும் நடப்பதால் பல நன்மைகள்

ஆச்சியை நடக்கவைத்த பேரனுக்கு  பராட்டுக்கள்.

கவிதைக்கு நன்றி அக்கா

இவரும் லேட் தான் அக்காtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

இவரும் லேட் தான் அக்காtw_blush:

தமிழேண்டா

(இவங்க கிட்ட எப்படி  தப்புவது?)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

ஓகோ உங்கள் பிள்ளை விளையாடும் வயதில் நீங்கள் விளையாட்டு காட்டுகிறீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும்tw_blush:

பாஸ் நாங்க ரிவி கேம் காலத்தில இருந்து உப்படி விளையாட்டுக்களை விளையாடிக்கிட்டு வாறம். ஊரில பட்டரி இல்லாத காலத்திலும்.. உள்ள பென்ரோச் (3ஏ) பட்டரியை வெயில்ல காய வைச்சு அதுக்கு சேர்க்கிட் போட்டு விளையாடின ஆக்கள்.

போக்கிமோன் கோ.. பலருக்கு இப்ப தான் தெரியுது. ஆனால் நாங்க கேம்பாய் காலத்திலேயே போக்கிமோன் விளையாட தொடக்கிட்டம். அப்புறம்.. டி எஸ்.. பி எஸ் பி.. பி எஸ்.. கம்பியூட்டர் கேம்.... எக்ஸ் பாக்ஸ்.. இப்ப சிமாட் போன்.. என்று வந்திருக்குது. நாங்களும் தொடர்ந்து கிட்டிருக்கிறம்.

நாங்க எல்லாம்.. ரி வி கேம் காலத்தில் வளர்ந்த கூட்டம் என்பதால்.. இதொன்னும் புதிசில்லை. 

முதல் முதல் விளையாடிய கேமில்... பசு மாடு இடிக்காமல்.. கன்றுக்குட்டியை பிடிக்கனும்.. இன்னும் ஞாபகத்தில் இருக்குது. அப்ப எல்லாம்.. LCD இல் குறைவான கிரபிக்ஸில் காட்டூன் வடிவில் விளையாடினது.. இப்ப கூடின கிராபிக்ஸில் LED.. retina.. என்று பார்த்து விளையாடுறம்.

அவ்வளவும் தான் எங்களைப் பொறுத்த வரை வேறுபாடு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

இப்படியே விலாடித்திரிங்க ச்ச‌tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. "போகிப் பண்டிகையன்று மான் பிடிக்கும் வேலை ஏன்..?" என குழம்பியபடி வந்தால், இது வேறேதோ ஒன்னு..! grognon-2009.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பதிந்த அனைவருக்கும் என் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 2.8.2016 at 7:47 AM, nedukkalapoovan said:

நீங்க அவனைச் சொல்லுறேள். நானே வீட்டில இருக்க ஒரு பொம்பிளை போக்கிமோன் அதுவா தேடித் தேடி வந்து தொல்லை பண்ணுதுன்னு.. கவலைல இருக்கன். இருந்தாலும் விட்டனா... எறிஞ்சன்.. பிடிச்சுட்டன். 

எனக்குத் தெரியும் படம் போட்டால் தான் நம்புவியள் என்டு. 

நாங்க பின்னூட்டம் விட நேரமில்லாம விளையாடுறம். இவர் என்னடான்னா.. :rolleyes:tw_blush:

===============

நிகழ்கால ஓட்டத்தை பிரதிபலிக்கும் கவிதை அழகு.tw_blush:

நெடுக்ஸ்.... நிஜப் பெண்களை விட, மிச்ச எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்துகின்றார் போலுள்ளது.:grin:
அப்படிப் பட்டவரை.... மோகன் அண்ணாவின் பிரித்தானிய யாழ். கள உறவுகள் சந்திப்பில்,
பலரும் அவரை நேரில் காண ஆசைப் பட்டதில் வியப்பில்லை, என்றே நினைக்கின்றேன்.:)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... நிஜப் பெண்களை விட, மிச்ச எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்துகின்றார் போலுள்ளது.:grin:
அப்படிப் பட்டவரை.... மோகன் அண்ணாவின் பிரித்தானிய யாழ். கள உறவுகள் சந்திப்பில்,
பலரும் அவரை நேரில் காண ஆசைப் பட்டதில் வியப்பில்லை, என்றே நினைக்கின்றேன்.:)

வெந்த புண்ணில் ஏன் வேலைப் பாய்ச்சுகுறீர்கள் சிறியண்ண ஹாஹா

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

வெந்த புண்ணில் ஏன் வேலைப் பாய்ச்சுகுறீர்கள் சிறியண்ண ஹாஹா

வாழ்க்கை சிமூத்தா போய்க்கிட்டிருக்குது. இதில வெந்த புண் எங்க இருந்து வந்திச்சு. சம்சாரிகள் தான் பாவம் வெந்து போய்க் கிடக்குதுங்க. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.