Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஷ ஊசி விவகாரம் பொய் – சுமந்திரன்!

Featured Replies

விஷ ஊசி விவகாரம் பொய் - சுமந்திரன்!

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரை முன்னாள் போராளிக்ள 105பேர் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், விஷ ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தார்கள் என்பது தொடர்பாக இதுவரை 5 பேரைக் கூட கட்டுபிடிக்கமுடியவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=40345

  • கருத்துக்கள உறவுகள்

 அரச தரகர் ஆரம்பித்து விட்டார். இனி எஜமானர் முடிப்பினம். முந்திரிக் கொட்டைபோல  எல்லாத்துக்கும் முந்தி விடுவார். 

கை நீட்டிக்  காசு வாங்கிய வக்கீல் தனது கட்சிக்கார்ர்களுக்ககாக வாதாடுவதே வக்கீல்த் தொழில்.  தோல்வியடைந்து எந்த பெறுமதியும் இல்லாமல் கிடக்கும் ஒரு இனத்திற்காக தனது தொழில் வருமானத்தை இழக்க முடியுமா?  வெற்றியடைந்த கனவான் Clients ஐ இழக்கமுடியுமா? 

விசஊசியும் .....வில்லங்கமும்!!!

 
EX-ltte.jpg
 

காலத்துக்கு காலம் ; கிழமைக்கு கிழமை ஏதோ ஒரு "விசயம்" பரபரப்பாய் பேசப்படவேண்டும்.அப்படி பேசப்படும் அல்லது கிழறப்படும் விடயங்கள் அண்மையகாலமாக அதிகரித்துவிட்டது.

அப்படி பரபரப்பாய் கிழறப்பட்ட; அல்லது கிழறப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியவிடயம் தான் “விச ஊசி”.
 
உண்மையில் “விச ஊசி” ஏற்றப்பட்டதா? என்ற மர்மகேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறது.ஆனால் இந்த விடயத்தினை கிழறிக்கொண்டிருக்கும் சிலருக்கு “விசர் ஊசி”ஏற்றப்பட்டிருப்பது தெளிவாகத்தெரிகிறது.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர்; பல ஆயிரம் விடுதலைப்புலிகளின் போராளிகள் சரணடைந்தார்கள்.
அதில் பலர் கைதுசெய்யப்பட்டார்கள்.கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள் அல்லது கொல்லப்பட்டுவிடார்கள்.
புனர்வாழ்வில் பலர் சித்திரவதைக்கு உள்ளானார்கள் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளானார்கள் என சுதந்திரமான சர்வதேச ஆய்வுகள்(International independent research) கூறுகின்றன.

"Freedom of Torture" என்ற சர்வதேச ஆய்வு மையம் தனது ஆய்வுகளின் முடிவின் இறுதியில் பல உண்மைகளை “புட்டுப்புட்டு”
வைத்திருக்கிறது. சுமார் 350 பணியாளர்களின் உதவியோடு இயங்கும் ஒரு சர்வதேச தொண்டு நிறுவனம் இது.


அந்த தொண்டு நிறுவனத்தின் ஆவணங்களை இந்த இணைப்பில் பாருங்கள்.

https://www.freedomfromtorture.org/sites/default/files/documents/update_on_post_conflict_torture_may_2016.pdf

லண்டனைத்தளமாகக்கொண்டியங்கும் இந்த அமைப்பின் இணையத்தில்
2009 இல் இருந்து இன்றுவரை சிறிலங்காவில் நிகழ்ந்த பல “துன்புறுத்தல் சம்பவங்களை” பட்டியலிட்டுள்ளது.

2009 இல் இருந்து 2016 வரை சுமார் 1750 துன்புறுத்தல் முறைப்பாடுகளை அந்த அமைப்பு பெற்றுக்கொண்டிருக்கிறது.அவற்றில் சுமார் 148 பேரை தெரிவுசெய்து;
“Tainted Peace" என்ற தலைப்பில் ஒரு ஆழமான ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.

அதன் இணைப்பு இங்கே:
https://www.freedomfromtorture.org/features/8481

2009 இல் இருந்து 2015 வரை சுமார் 250 பேருக்கு சட்டபூர்வமான மருத்துவவியல் பரிசோதனையையும்( Medico-Legal Reports-MLRs) செய்துள்ளார்கள்.

எந்த ஒரு இடத்திலும் அவர்கள் இந்த “விச ஊசி” “விச உணவு” பற்றிய வாக்குமூலங்களை சித்திரவதைக்கு உள்ளானவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று சொல்லவில்லை.

அதன் முழுவிபரங்களையும் அவர்களின் இணையத்தில் பார்வையிடலாம்.

இனி முக்கியவிடயத்துக்கு வருவோம்.

அண்மைய காலமாக விடுதலைப்புலிகளின் போராளிகளின் மரணத்தில் “சந்தேகம்” எழுந்துள்ளது. இந்த சந்தேகம் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணிப்பொறுப்பாளர் தமிழினியின் மரணத்தில் இருந்து ஆரம்பமாகியது. தமிழினி “புற்றுநோயால்” இறக்கவில்லை அவருக்கு “விச ஊசி” அல்லது “தொற்றுநோய் கிருமி” ஏற்றப்பட்டிருக்கலாம் என ஒரு சிலர் ”புரளியை”கிளப்பிவிட்டார்கள். அது புரளியா? அல்லது உண்மையா ? என கண்டுபிடிப்பதற்குள் தொடர்சியான போராளிகளின் மரணம் அந்த விடயத்தினை இன்னும் பேசுபொருளாக்கி முக்கிய விவகாரமாக்கியது.

சுமார் 20 வருடங்களாக பல யுத்தங்களில் காயமடைந்து விழுப்புண்களை சுமந்த தமிழினி 2009 இல் புனர்வாழ்வு முகாமில் அடைக்கப்படார். அதன் பின் ஒரு சில வருடங்களில் வெளியில் வந்த அவர் 2014இல் நோயாளியாக அவதிப்பட்டார். 2015 இல் புற்றுநோய் கண்டறியப்பட்டு இறந்துபோனார்.

இவர் பல மருத்துவ பரிசோதனைகளை இலங்கையின் பல வைத்தியசாலைகளில் சிங்கள,தமிழ் மருத்துவர்களிடம் செய்துள்ளார். 
தமிழினியின் மரணம் புற்றுநோய்தான் என மருத்துவச்சான்றிதழ் சொல்கிறது.அது போலியானது என்பது ஒரு சிலரின் சந்தேகம்.
சரி அது போலியான மருத்துவச்சான்றிதழாக கூட இருக்கட்டும்.

 ஆனால் தமிழினி உயிரோடு இருந்தபோது புலம்பெயர் தேசத்தில் பலரோடு பேசி இருந்தார். இந்த “விச ஊசி” பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை .
அப்படிப்பேசியிருந்தால் இந்த விவகாரம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கிழம்பியிருக்கும்.

தமிழினியின் மரணத்துக்கு முன்னும் பின்னும்  பிறகு சுமார் 100இக்கும் அதிகமான  போராளிகள்  நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்கள். அதாவது சுமார் 6 வருடங்களில் இந்தச்சாவுகள் உத்தியோகபூர்வமற்றதாக சுமார் 100 ஆக இருக்கலாம் எனச்சொல்லப்படுகிறது.

அதாவது சுமார் 20 பேர் ஒரு வருடத்தில் இறந்திருக்கலாம் என்பது எடுகோள்.
இந்தச்சாவு வீதம் என்பது 2009 இக்கு பின்னராக போரினால் காயமடைந்து ; அந்த விழுப்புண்களின் காரணமாக சாவடைந்த சாதாரண பொதுமக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மிகக்குறைவானது.

அதற்கும் மேல் விளக்கமாக சொல்வதானால்;
2009 இக்கு முன்னர் விடுதலைப்புலிகளில் இருந்த போராளிகளில் சண்டையில் “விழுப்புண்” அடைந்து அதன் காரணமாக சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகமானது.குண்டுச்சன்னங்கள் தலைகளில் ஏறி அல்லது வயிற்றில் ஏறி அதை சத்திரசிகிச்சை செய்து எடுக்கமுடியாத நிலையில் ஏற்புத்தாவி சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகம்.

இறுதிப்போரில் “பொஸ்பரஸ் குண்டுகள்” மற்றும் “இரசாயண ஆயுதங்கள்” பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கான ஒரு சில ஆதாரங்களும் இனங்காணப்பட்டுள்ளன. சிறிலங்கா இதை மறுத்தாலும்; அப்படியான தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் கடைசி யுத்தத்தில் பாவிக்கப்பட்டிருப்பதற்கான ஆதரங்கள் உள்ளதாக சுதந்திர சர்வதேச அமைப்புகள் ( Independent international agencies) தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு இந்த “இரசாயண குண்டுகளின்” தாக்கம் நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அந்த “இரசாயண குண்டுகளின்” துண்டுகள்( piece) அவர்களின் உடம்பில் இருந்தால் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

பல  போராளிகள் இந்த நோய் அறிகுறிகள் இருந்தால்; அதற்கான பரிசோதனையை செய்தும் சத்திர சிகிச்சை செய்தும் பூரண குணம் அடைந்து தங்களின் இயல்பு வாழ்க்கையினை வாழ்கிறார்கள்.

ஒரு சில  போராளிகள் இப்போதும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான பிரத்தியேக சிகிச்சை ( specialist treatment) செய்தால் அவர்களும் பூரண குணமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

 போராளிகளின் நோய்கள் பெரும்பாலும் உடல் ரீதியானதாக(physical) இருப்பதை விட மனரீதியான அழுத்தங்கள்தான் (Mental Depression) அதிகமாக காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் சொல்கின்றன.
உடல் ரீதியாக சிறு காயங்களுக்கு உட்பட்ட அவர்களை மன அழுத்தங்கள் மேலும் கடும் நோயாளிகள் ஆக்குகின்றன.

போரின் பின்னரான புனர்வாழ்வு காலத்தில்   போராளிகளுக்கான  மன அழுத்த சிகிச்சையோ( psychological Treatment) அல்லது ஆற்றுப்படுத்தல்களோ
( counselling) போதியளவு வழங்கப்படவில்லை. போதியளவு என்று சொல்வதை விட “முற்றாக வழங்கப்படவில்லை” என்றுக்கூடச்சொல்லலாம்.

பல இன்னல்களையும் சித்திரவதைகளையும் துன்புறுத்தல்களையும்(Trauma and torture)  மன அழுத்தங்களையும் தாண்டி வந்த இவர்களை முறையான பராமரிப்பு செய்ய தவறிவிட்ட குற்றத்தினை செய்த தரப்பாக;

1. இலங்கை அரசாங்கம்
2.தமிழ் அரசியல் தலைமைகள்
3.புலம்பெயர் சமூகம்

இருக்கின்றன.

இதில் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்த நிலைதான் இன்றும் காணப்படுகிறது. ஏனெனில் போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக சொல்லும் அவர்கள் போரின் பின்னரான நடவடிக்கைகள் இப்போதும் ”விமர்சனத்துக்கும் விசாரணைக்கும்” உட்பட்டவையாக காணப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட போராளிகளை யார் கவனிப்பது? அல்லது அவர்களில் யார்  அக்கறை காடுவது? என்ற கேள்விக்கான விடைக்கு இரண்டு பதில்கள் முக்கியமானவை.

புலம்பெயர் சமூகமும்; தமிழ் அரசியல் தலைமைகளும் நிச்சயமாக இந்த விடயத்தில் முக்கிய கவனமெடுத்து செயற்படவேண்டும்.

”விச ஊசி” அல்லது “ விச உணவு” என்ற சொற்பதங்கள் மிகவும் கூரிய வார்த்தைகள்(sensitive words). இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
சொல்லிவிட்டு கடந்துபோய் வேறு வேலையைப்பார்க்கும் சாதாரண பிரச்சினை அல்ல. இது ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட விடயம்( sensitive issue).பல ஆயிரம் உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயம். பல ஆயிரம் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விடயம்.

சில நுண்ணிய விவகாரங்களை கையாளும் விதம் எப்படி? என்று தெரியாத ஒரு சிலரின் கைகளில் இந்த விடயம் போய்ச்சேர்ந்து இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அவர்களில் முக்கியமானவர்கள்.....

1.சுயலாப அரசியல்வாதிகள்
2.அநாமதேய தமிழ் இணையங்கள்
3.சமூக வலைப்பதிவர்கள்

சுயலாப அரசியல்வாதிகளின் கைகளில் இந்த விடயம் போய்ச்சேர்ந்ததால்...

 
  • போராளிகளின் வேதனைகளை தாங்கள் பங்கு போடுகிறோம் என்றும்;
  • அவர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம் என்றும் “பப்படா” காட்டி;

 அரசியலில் தமது இருப்பை தக்கவைக்க இதையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்திறார்கள்.

மக்களின் நன்மதிப்பை பெற்று தங்களின் வாக்கு வங்கியை குறையவிடாமல் பாதுகாக்க இதுவும் ஒரு வழியாக பயன்படுத்துகிறார்கள்.

அடுத்து;
அநாமதேய தமிழ் இணையங்கள் நடாத்தும் ஒரு சில “தமிழ் தேசியவாதிகள்”
தங்களின் “இணைய வியாபாரத்துக்கு” அல்லது “இணையப்பிரபலத்துக்கு” இந்த விடயத்தினை பயன்படுத்துகிறார்கள்.

சும்மா கிடக்கும் கல்லுக்கு ”பொட்டும் பூவும்” வைச்சு அதுக்கு பால் ஊற்றி; கும்பாபிசேகம் செய்யும் வல்லமை இந்த முதலெழுத்து இல்லாத அநாமதேய தமிழ் இணையங்களுக்கு “கைவந்த கலை”.

இவர்களுக்கு இந்தச்செய்தி “காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த “ நிலை.



அடுத்து “சமூக வலைப்பதிவர்கள்”.

இவர்களில் பலர் ஈயடிச்சான் “copy and paste"  வகையறாக்கள்தான் அதிகம்.
10$ அநாமதேய இணையத்தளங்களை மேயும் இவர்கள் அந்த செய்திகளை அப்படியே பகிர்வார்கள் அல்லது அதில் இருந்து கொஞ்சம் பொறுக்கி அதை நறுக்கி ஒரு பதிவாக பகிர்ந்து அதற்கு கிடைக்கும் “like and comments" இல் ;
குதூகலம் அடைவார்கள்.


ஆக; உற்றுநோக்கிப்பார்த்தால் விச(ர்) ஊசி ஏற்றப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட மூன்று பகுதியினருக்குத்தான் என்பது தெட்டத்தெளிவு.
  • ஒரு செய்தியின் பின்னணி ( Background) 
  • ஒரு செய்தியின் அடிப்படை(Basic)
  • ஒரு செய்தியின் தொடர்ச்சி(follow up)

    இவை பற்றிய தேடலும் அறிவும் ( Research and knowledge)  இல்லாத ஆர்வக்கோளாறு உடையவர்கள் செய்திகளை எழுதுகிறார்கள் என்று சொல்வதை விட உருவாக்குகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    பொறுப்புக்கூறும் வல்லமை இல்லாத தமிழ்  ஊடகங்கள் ஒருசிலவற்றின் ஆர்வக்கோளாறின் காரணமாகவே இந்த “விச ஊசி “ விவகாரம் ஊதிப்பெருப்பிக்கப்படுகிறது.

    நாளை இந்த ‘விச ஊசி” விவகாரத்தை மறந்து வேறு ஒரு விடயத்தைப்பற்றி பரபரப்பாக பேசத்தொடங்கிவிடுவார்கள்.

புலம்பெயர் தேசத்தில் இருக்கும் ஒருசில அதிதீவிர "ஆர்வக்கோளாறுகள்" எப்போதும் உணர்வுகளின் அடிப்படையில் இயங்குவதற்கு மட்டுமே பழக்கப்பட்டுவிட்டார்கள்.
அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டிய தருணங்களில் கூட
 " உணர்ச்சிக்கொந்தளிப்பு" தான் அவர்களை இயக்கும். இப்படியானவர்களின் கைகளில் இந்த விடயம் இப்போது "குரங்கு கையில் பூமாலையாக" சிக்கி சின்னாபின்னமாகிறது.

 
 
2009 இக்கு முன்னரும் பின்னரும் பல ஆயிரம் போராளிகள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள். அவர்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளானவர்கள்.
 
உதாரணத்துக்கு அவுஸ்திரேலியாவுக்கு உள் நுழையும் போது நிச்சயமாக அவர்களின் இரத்தம் முழுமையான பரிசோதனைக்கு( FBC- full blood count) உட்படுத்தப்படும். அவர்களின் குருதியில் ஏதாவது வித்தியாசம் இருந்தால்
அப்படியான பரிசோதனையில் நிச்சயம் தெரியவந்திருக்கும்.

 ஒரு சிலருக்கு குண்டுத்துகள்கள்( piece) அவர்களின் தலை நெஞ்சுப்பகுதியில் இருந்தது. தலைசுற்று, மயக்கம், களைப்பு போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு அதிகமாக வந்த போது அவர்களுக்கு "சத்திரசிகிச்சை" செய்யப்பட்டது. இப்போது அவர்கள் பூரண சுகமாக இருக்கிறார்கள்.

இலங்கையில் இருக்கும் விழுப்புண் அடைந்த  போராளிகள் பலருக்கு தகுந்த சிறப்பு சிகிச்சை( special treatments) இன்னமும் அளிக்கப்படவில்லை. அப்படி  தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டால் அவர்களும் பூரண சுகம் அடைந்து தேக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விழுப்புண் அடைந்த போராளிகள் பலர் சிகிச்சைபெற்று மிகவும் ஆரோக்கியத்துடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று சந்தோசமாக வாழ்கிறார்கள்.

எனவே
போராளிகளே...!!!
 
  • இப்படியான “விச ஊசி” “விச உணவு” செய்திகளைக்கேட்டு மனதளவில் பாதிப்படையதேவையில்லை.
  • பல வலிகளை தாங்கிய உங்களுக்கு இது ஒரு பெரிய விடயம் அல்ல; இருந்தாலும் இது பற்றிய தெளிவும் மனத்தைரியமும் உங்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும்.
  • உங்களது உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள மருத்துமனைக்குச்சென்று பூரண பரிசோதனை (full blood count and medical check up) செய்யுங்கள்.
  • உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அயலவர்களுக்கும் முடிந்தளவு தெளிவுபடுத்துங்கள்.
  • உங்களுடைய நண்பர்கள் பலர் புலம்பெயர் தேசங்களில் இருக்கிறார்கள்.உங்களோடு புனர்வாழ்வு மையங்களில் வலிகளை சேர்ந்து அனுபவித்தவர்கள் அவர்கள். அவர்களை அந்தந்த நாடுகளில் மருத்துவ பரிசோதனை செய்து “உண்மை” என்னவென்று வெளியுலகத்துக்கு சொல்லச்சொல்லுங்கள்.
 
 போராளிகளின் பெற்றோர்களே... உறவினர்களே!!!
  • பல ஆண்டுகளாக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்து ; பல வேதனைகளையும் வலிகளையும் தாங்கிக்கொண்டு வாழும் உங்களின் பிள்ளைகள்/உறவுகளிற்கு உறுதுணையாக இருங்கள்.
  • அவர்கள் அனுபவித்த வலிகளை தங்களுக்குள்ளே மூடி வைத்து;உங்களுக்காக வாழும் அவர்களுக்கு மனத்தைரியமும் ஆதரவும் கொடுக்கவேண்டியது உங்களின் கடமை.
  • உங்களால் முடிந்த அளவு அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுங்கள்.
  • மனவழுத்தம் தான் பல நோய்களுக்கான முக்கிய காரணி. இந்த மன அழுத்தத்தினை குறைக்கும் வழிகளை கண்டறிந்து அவர்களிற்கு மனத்தைரியத்தினை கொடுங்கள்.
  • எல்லா வழிகளிலும் அவர்களுக்கு  ஆதரவாக இருங்கள்.
 


இறுதியாக;


கிட்டத்தட்ட 15000 முன்னாள் போராளிகளின் எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியாக்கி ; அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் வைத்துத்தான் சர்வதேச சமூகத்துக்கு எமக்கு நிகழ்ந்த கொடுமைகளை உறுதியாக சொல்ல முடியும் எனும் கட்டாயம் இங்கு இல்லை.

அதற்காக அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் அநீதிகளுக்கும்  அவர்கள் பற்றிய பிரச்சினைகளை பேசாமல் எப்படி தீர்வு கிடைக்கும்? என்ற கேள்வி எழலாம்.
நியாயமான கேள்விதான்.

ஆனால் ஒரு விடயத்தினை நினைவில் வைத்துக்கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்.

தங்களின் வாழ்க்கையின் பாதியை தொலைத்துவிட்டு; உடலாலும் மனதாலும் பல வலிகளின் வடுக்களை சுமந்து ...
ஏதோ ஒரு வாழும் நம்பிக்கையில்...
அம்மா...அப்பா...கணவன்...மனைவி...பிள்ளைகள் என ஒரு புதிய உலகத்தில்..
வாழ ஆசைப்படும் அவர்களின் மிகுதி வாழ் நாட்களை கேள்விக்குறியாக்காதீர்கள்.

சில விடயங்களை எப்படி கையாளவேண்டும் ? எப்படி கையாளக்கூடாது? என்பதற்கு இந்த “விச ஊசி” விவகாரம் மிக நல்ல உதாரணம்.நாளை ஒரு சுதந்திர மருத்துவ பரிசோதனை (independent international medical test) செய்யப்பட்டு இந்த விவகாரம் “பொய்” என நிரூபிக்கப்பட்டால்;விடுதலைப்புலி போராளிகளின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மை(credibility) கேள்விக்குறியாக்கப்படும்.

சரி உண்மையாகவே அப்படி நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பின் ; புலம்பெயர் தேசங்களில் வாழும்  போராளிகள் ஒன்றிணைந்து ஒரு மருத்துவ பரிசோதனையை செய்து முறையாக வெளிக்கொணர்ந்து இருக்கலாம். அந்தப்பரிசோதனை நம்பத்தகுந்ததாக அமைந்திருக்கும்.

இதுவரை ...

புலம்பெயர் தேசத்தில் உள்ள  போராளிகள் ஒரு வாய்கூடத்திறக்காமல்  மெளனமாக இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்????

பல மருத்துவ பரிசோதனைகளை அவர்கள் வாழும் புலம்பெயர் நாட்டில் கட்டாயம் செய்திருப்பார்கள். அப்படியொரு வித்தியாசமான நோய்த்தாக்கம்  கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நாட்டு மருத்துவ திணைக்களம் நிச்சயம் அதை அவர்களுக்கு சொல்லியிருக்கும்.
அப்படி நிகழ்ந்ததாய் இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.
இந்த “விச ஊசி” செய்தியின்    பின்னர் ;
புலம்பெயர் தேசத்தில் இருக்கும்  ஒரு சில  போராளிகள் தங்களை பூரண பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை யாருக்கும் இப்படியான “விச ஊசித்தாக்கம்” கண்டுபிடிக்கப்படவில்லை.
 
மேலும் இந்த “விச ஊசி”  செய்தியால் ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கிறது.யாரும் கவனிப்பாரற்றுக்கிடந்த போராளிகளின் பக்கம் எல்லோரினதும் கவனம் திரும்பியுள்ளது. ”மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என அக்கறையோடு  பலர் போராளிகளைப்பார்த்து கேட்கிறார்கள்.நிச்சயமாக அவர்கள் பூரண மருத்துவ பரிசோதனை செய்வதினால்; அவர்களுக்கு ஏதாவது நோய்கள் இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.அதற்கான சிகிச்சை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இதனால் பல போராளிகளின் நாட்பட்ட நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு பூரண சுகம் அடைய வாய்ப்புகள் உருவாகும்.


 
எம் இனத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளை நிரூபிக்க ...
ஆயிரம் வழிகள் இருக்கிறது.
அதை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் “அந்த சீவன்களின்” உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.


 
சொந்த அண்ணாவோ; தம்பியோ; தங்கச்சியோ; அக்காவோ...
கடைசிநேரம் பிடிபட்டு புனர்வாழ்வுக்குப்போய் திரும்பி வந்திருந்தா...
"விச ஊசி" " வன்புணர்வு" எண்டு கதைக்க மனம் வராது.
மனச்சாட்சியும் இடம் கொடுக்காது!!!!
இதை நான் சொல்லவில்லை...
ஊரில இருக்கும் தம்பி ஒருத்தன் சொன்னான்.

அப்படியானால் இசைப்பிரியா, கிருசாந்தி இவர்களுக்கு நிகழ்ந்த கொடுமையை பேசக்கூடாதா? என்ற கேள்வி எழலாம்.
பேசுங்கள்......
ஆனால் பேச முதல்...
இந்த  கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்த பின்;
அவர்கள்  உலகின் ஒரு மூலையில்   உயிரோடு இருக்கிறார்கள்  என வைத்துக்கொண்டால்..
எப்படி பேசுவீர்களோ...
அப்படிப்பேசுங்கள்!!!


 
 
"இசைப்பிரியா" ஒரு நொடியில் இறந்தாள்!
அவளைப்பெற்றவர்கள் ...
உயிரோடு இருக்கும்
ஒவ்வொரு கணமும்
இறக்கிறார்கள்!!!
 
 

போராளிகள் மன ரீதியாக இன்னும் வலிமையோடுதான் இருக்கிறார்கள் என்பது உண்மை.

மற்றவர்களுக்காக போராடியவர்கள்...
இப்போது தங்களின் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள்.
சாகும் வரை அவர்களின் வாழ்வு போராட்டமே!!!


எமக்காக எவ்வளவோ செய்தவர்கள்... காலம் வரும் போது தங்களின் மெளனம் கலைத்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை துணிவோடு சொல்வார்கள். அதுவரை பொறுத்திருங்கள்.

“உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. உபத்திரவம் செய்யாதீர்கள்”
 
போதும் இனியாவது அவர்களை “ துகிலுரியாது” இருப்போம்.





 #தமிழ்ப்பொடியன்©

http://tamilpodiyan.blogspot.ca/

கற்றுக்குட்டி கருத்தாளர்களுக்கு சமர்ப்பணம் !

விஷ ஊசி விவகாரம் சம்சும் கும்பலுக்கு பாரிய வில்லங்கத்தை ஏற்படுத்தியிருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது!

31 minutes ago, Gari said:

உண்மையில் “விச ஊசி” ஏற்றப்பட்டதா? என்ற மர்மகேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறது.ஆனால் இந்த விடயத்தினை கிழறிக்கொண்டிருக்கும் சிலருக்கு “விசர் ஊசி”ஏற்றப்பட்டிருப்பது தெளிவாகத்தெரிகிறது.

அண்ணேய் இப்படி உங்களை கூபிடுவதே எனக்கு அருவருப்பாக உள்ளது .நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை விட்டு அவசர அவசரமாய் இந்த விடயத்தில் இலங்கை அரசு சார்பா ஏன் வக்காலாத்து வேண்டி நிக்கிறிங்கள் என்று விளக்க முடியுமா ? இப்ப விசர் எங்களுக்கு இல்லை உங்களுக்கு

37 minutes ago, Gari said:

அண்மைய காலமாக விடுதலைப்புலிகளின் போராளிகளின் மரணத்தில் “சந்தேகம்” எழுந்துள்ளது. இந்த சந்தேகம் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணிப்பொறுப்பாளர் தமிழினியின் மரணத்தில் இருந்து ஆரம்பமாகியது. தமிழினி “புற்றுநோயால்” இறக்கவில்லை அவருக்கு “விச ஊசி” அல்லது “தொற்றுநோய் கிருமி” ஏற்றப்பட்டிருக்கலாம் என ஒரு சிலர் ”புரளியை”கிளப்பிவிட்டார்கள். அது புரளியா? அல்லது உண்மையா ? என கண்டுபிடிப்பதற்குள் தொடர்சியான போராளிகளின் மரணம் அந்த விடயத்தினை இன்னும் பேசுபொருளாக்கி முக்கிய விவகாரமாக்கியது.

இங்கு விச ஊசி என்பது புற்றுநோய் உருவாக்க காரணமான polonium-210 போன்ற பொருள் சைனைட் 10000 ஒரு பங்கு போதும் போடும் உடுப்பில் தடவி விட்டாலும் காணும் தன் அலுவலை தொடங்கிவிடும் இறுதி யுத்தத்தில் மிக பெரிய பங்களிப்பை செய்த சீனாவின் அணு உலைகள் இலகுவாக polonium-210 உருவாக்கும் வல்லமையும் அதை பாதுகாப்பாய் கொண்டு செல்லும் வல்லமையும் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது

49 minutes ago, Gari said:

புலம்பெயர் தேசத்தில் உள்ள  போராளிகள் ஒரு வாய்கூடத்திறக்காமல்  மெளனமாக இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்??

அங்கு உள்ள போராளிகள் கடசிசன்டையின் போது ஒன்றில் தப்பியவர்கள் அல்லது இலங்கை அரசின் உங்களை போன்ற ஊதுகுழல்கள் அல்லது செல்வாக்கு மூலம் வெளி வந்தவர்கள் .

54 minutes ago, Gari said:

புலம்பெயர் தேசத்தில் இருக்கும்  ஒரு சில  போராளிகள் தங்களை பூரண பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை யாருக்கும் இப்படியான “விச ஊசித்தாக்கம்” கண்டுபிடிக்கப்படவில்லை

அங்குள்ள மேற்கு நாடுகளில் கூட இந்த polonium-210 சோதனை ஆரம்பகட்டத்தில் உள்ளது இலகுவாக கண்டுபிடிக்க முடியாது

1 hour ago, Gari said:

போராளிகள் மன ரீதியாக இன்னும் வலிமையோடுதான் இருக்கிறார்கள் என்பது உண்மை.

மற்றவர்களுக்காக போராடியவர்கள்...
இப்போது தங்களின் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள்.
சாகும் வரை அவர்களின் வாழ்வு போராட்டமே!!!


எமக்காக எவ்வளவோ செய்தவர்கள்... காலம் வரும் போது தங்களின் மெளனம் கலைத்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை துணிவோடு சொல்வார்கள். அதுவரை பொறுத்திருங்கள்.

“உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. உபத்திரவம் செய்யாதீர்கள்”

நீங்கள் தமிழரசு கட்சி இதுவரைக்கும் அவர்களுக்கு என்ன செய்தனிங்கள் என்று விளக்கமுடியுமா ? அல்லது சிறையில் இருபவர்களையாவது வெளியில் எடுக்க முயற்ச்சி எடுத்ததுண்டா ?  யுத்தம் முடிந்து இந்த 7 வருடத்துக்கும் மேலாக அகதியாக வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் பற்றியாவது உங்களுக்கு தெரியுமா ?         

  • கருத்துக்கள உறவுகள்

யாசிர் அரஃபாத் முதற்கொண்டு யாருமே தானாக இறக்கவில்லை என்பதுதான் எனது எண்ணம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Athavan CH said:

விஷ ஊசி விவகாரம் பொய் - சுமந்திரன்!

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அப்போ சாட்சி இல்லையென்றால் குற்றச்சாட்டு பொய்யா??

இவரது நோக்கமே வேறு   போலிருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 கற்றுக்குட்டி கருத்தாளர்களுக்கு சமர்ப்பணம் !

வன்னியில்  மக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்களா? அப்படியெனில் ஆதாரம் தரவும்?

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரிகள் ....
விபச்சாரத்திட்கு விளம்பரம் கொடுக்கவில்லை என்றால்தான் ...
வியக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் குற்றமே செய்திருந்தாலும் கூட, அவர் குற்றவாளி அல்ல என்று மறுத்து வாதாட வேண்டியது எங்களின் சட்டக் கடமை என்று வக்கீல்கள், அவர்களின் நியாயமற்ற செயல்களுக்கு, அவர்களே வக்காலத்து வாங்கி கொள்வார்கள்.

சரிங்க, நீங்கள் சொல்லுவது போல் எந்த சட்டத்தில், எந்தப் பிரிவில் சொல்லப்படிருக்கிறது என்று, அவர்களிடம் ஒரு குறுக்கு கேள்வியைப் போட்டால், அவர்களால் பதில் சொல்லவே முடியாது.திரு திரு என்று முழிப்பர்கள் ஏனெனில், உண்மையில் அப்படியொரு சட்டப்பிரிவே கிடையாது. அப்படியொரு சட்டப்பிரிவு இருக்க முடியுமா என்ன?

அவர்களின் தொழிலை நியாயப்படுத்துவற்காக அவர்கள் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்றே! வக்கீல்களின் தொழிலுக்கு மூலதனம் பொய்!!

நியாயமான வழக்குகளை மட்டுமே நடத்துவது என்கிற கொள்கையில் தொழில் செய்த ஒரு வக்கீலிடம், தனக்கு நியாயம் இல்லை என தெரிந்தும் வழக்கை ஒப்படைக்கிறார் ஒருவர். கட்சிகாரரின் சூட்சமத்தை அறியாத அவ்வக்கீல் அக்கட்சிக்காரருக்காக வாதாடுகிறார்.

குறுக்கு விசாரணையின் போது, தன் கட்சிக்காரரால் பதில் சொல்ல முடியாததை கண்ட அவ்வக்கீல், தனது கட்சிக்காரர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, நீதிபதிக்கு அதை எடுத்துச் சொல்லி தகுந்த தண்டனை பெற்றுத்தந்ததாக தனது சத்திய சோதனையில் சமுதாயத்திற்கான போதனையாக குறிப்பிட்டுள்ளார்.

அடடே! உலகில் இப்படியும் கூட ஒரு வக்கீல் இருந்தாரா என்று வியப்பாக இருக்கிறது அல்லவா?

இப்படி இருந்ததால்தாம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியானவர், பின்னர் மக்களால் ‘‘மகாத்மா காந்தி’’ ஆனார். இப்படி தன் கட்சிக்காரருக்கே தண்டனை வாங்கி கொடுத்த யோக்கியமான, கண்ணியமான, உண்மையான வக்கீல், உலகத்தில் மகாத்மாவைத் தவிர வேறு எவருமே இருந்ததாக தெரியவில்லை. பொய் பேச நேரிடும் என்று தெரிந்து பாரிஸ்டர் பட்டம் பெற்றும் அவர் அத்தொழிலை கைவிட்டார்.

பொய்யர்களின் தொழிலானது விபச்சாரத்திற்கு இணையானது என்கிற மகாத்மாவின் தத்துவக் கருத்தை இந்திய தன்னாட்சி நூலில் படிக்க நேர்ந்தது.

அதன் இறுதிப்பகுதியில், ‘‘இவ்விபச்சாரிகளின் (பொய்யர்களின்) தொழில் எப்படி வளர்ந்து என்பது குறித்து, நீங்கள் மிகச்சரியாக தெரிந்து கொண்டால், அத்தொழில் குறித்து எனக்கிருக்கும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்’’ என குறிப்பிட்டு இருப்பார்.

இதுகூட தெரியாத கூறுகெட்டவர்களாக இருப்பதால்தாம், உங்களது விபச்சார தொழிலை மகாத்மா காந்தி என்னவோ பெரிதாகப் பாராட்டுவதுபோல, அவரது ஒளிப்படத்தை நீதிமன்ற அறையில் மாட்டி வைத்திருக்கிறீர்கள்.இது கசாப்பு கடையில் மாட்டி இருப்பது போல தோன்றவில்லையா?

‘‘யோக்கியர்கள் இவ்வேலைக்கு தகுதியற்றவர்கள்’!!! -தந்தை பெரியார் 10- 5 - 1931 குடியரசு வார இதழ்

நன்றி : நீதியை தேடி (புத்தக ஆசிரியருக்கு)

டிஸ்கி : என்னடா  இப்படி நானே காந்தியை புகழ்ந்து  ..! என்று ஈழ தோழர்கள் வியப்பு அடையலாம் ..! பல விடயங்களில் அவருடைய கொள்கைகளில் உடன்பாடு இல்லை.. பகத்சிங்க் தூக்குக்கு நாள் குறித்தது.. நேதாஜிக்கு பியுஸ் பிடிங்கியது... கிந்தியா சுதந்திரம் அடைந்த போது தனி தமிழ் நாடு கேட்க இங்கிலாந்திற்கு பறந்து சென்ற பட்டு கோட்டை அழகிரிசாமிக்கு  என்ன நடந்தது..?  ஆயிரம் விடயங்கள் இருக்கலாம் ஆனால் இந்த உண்மை / பொய் ஈத்த்றை வழக்கறிஞ்சர் (சட்டத்தரணி) தொழில் குறித்து அவரின்ட பார்வை மிக சரி.. கோர்ட்டில் புளுகுவது போக பொதுவாழ்வில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டோ அல்லது ராஜ்ய சாபா (பின்வாசல் )வழியாக நுழைந்தாலோ அள்ளி  விடுவதன்னவோ ... ???

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dioxin-poison_zps51a5c78f.gif

alexan1_zps024a90a0.jpg  alexan2_zps39a3e8be.jpg 

இவர்கள் இருவருக்கும் நடந்த விடயங்கள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன். :unsure:

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

விஷ ஊசி ஏற்றப்பட்டதை உறுதிசெய்ய முடியவில்லை'

article_1473218628-Untitled-1.jpg

புனர்வாழ்வு பெற்ற, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமையை உறுதி செய்ய முடியாதுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு, இதுவரை முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷ ஊசி ஏற்றப்பட்டதால், 100 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, சுமந்திரன் எம்.பி, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், 'விஷ ஊசி ஏற்றப்பட்டதால், முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்ததாகத் தகவல்கள் இருந்தன. அது தொடர்பில் நாம் தேடிப்பார்த்தோம். ஆனால், அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதற்காக, விஷ ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் பொய்யானது என்று என்னால் கூறமுடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஊசி ஏற்றினார்களா, இல்லையா என்பது குறித்து எனக்கு எப்படித் தெரியும். விஷ ஊசி ஏற்றப்பட்டமைக்கான சாட்சியங்களை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை மட்டுமே என்னால் கூறமுடியும்' என்று கூறியுள்ள சுமந்திரன் எம்.பி, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் வடக்கிலிருந்த புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமைக்கும், கண்டனத்தைத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/181308/-வ-ஷ-ஊச-ஏற-றப-பட-டத-உற-த-ச-ய-ய-ம-ட-யவ-ல-ல-

On 9/6/2016 at 8:31 AM, TNT said:

 

நீங்கள் தமிழரசு கட்சி இதுவரைக்கும் அவர்களுக்கு என்ன செய்தனிங்கள் என்று விளக்கமுடியுமா ? அல்லது சிறையில் இருபவர்களையாவது வெளியில் எடுக்க முயற்ச்சி எடுத்ததுண்டா ?  யுத்தம் முடிந்து இந்த 7 வருடத்துக்கும் மேலாக அகதியாக வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் பற்றியாவது உங்களுக்கு தெரியுமா ?         

இந்த கேள்வியை மற்றவர்களிடம் கேட்க முன் நீங்கள் இதுவரை போராளிகளுக்கும் ,மாவீரர்களுக்கும் என்ன செய்துள்ளீர்கள் ?நான் தமிழரசுக்காரன் என்பதை எவருக்கும் பயமில்லாமல் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவேன் அதை விட தலைநகரத்து தமிழனும் .

எல்லோரும் வட கிழக்கு இணைப்பு பற்றியும் ,ஈழம் பற்றியும் கதைப்பவர்கள் ,தென்னைமரவடி கிராமத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா ?1984இல் இருந்து இன்று வரை அந்த மக்களுக்கு எங்களால் முடியுமான உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றோம் ஒரு பானை சோற்றில் ஒரு சோற்றை சொல்லியிருக்கு !உங்களுடைய யூகங்களுக்கெல்லாம் பதிலை நீங்கள் தான் தேடவேண்டும் .

On 9/6/2016 at 0:01 PM, nunavilan said:

வன்னியில்  மக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்களா? அப்படியெனில் ஆதாரம் தரவும்?

விதண்டா வாதம் ?இங்கு கருத்து எழுதிய யாரிடமாவது உங்கள் சொந்த மாவட்டத்தில் கொல்லப்படடவர்கள் ,காணாமல் போனவர்கள் விபரங்கள் உள்ளதா ?நான் இங்கு மற்றவர்களுடைய Like க்காக கருத்தெழுவது கிடையாது ?

1983இல் இருந்து 1987 வரை யில் திருகோணமலை மாவடடத்தில்  இராணுவத்தால் கொல்லப்படடவர்கள் ,காணாமல் போனவர்கள் விபரங்கள் சம்பவங்கள் நடக்கும் பொழுதே நாங்கள் சேகரித்து சகல மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளோம் .இன்றைக்கும் இது சம்பந்தமான சகல விபரங்களும் எங்களிடம் இருக்கின்றது .அவர்களுக்கு பல உதவிகளும் செய்திருக்கின்றோம் .

 

http://www.tamilmirror.lk/

http://thuliyam.com/    இந்த இரண்டு செய்திகளும் முரண்பாடாக உள்ளதே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை ஒரு சில ஆக்கள் தமிழ் பிரதேசங்களிலை சிங்களவன் எது செய்தாலும் ஒரிஜினல் புத்த சாதுக்கள் மாதிரி திரிவினம்.

ஆனால் தமிழன் சிங்களவனைப்பற்றி ஏதும் கூடாமல் சொன்னால் பொங்கியெழுந்து அனலாய் கக்குவினம்.

நாலு பேருக்கு உதவியை செய்து போட்டு ஒரு இனத்துக்கே விடிவு வந்தமாதிரி பினாத்தல் கதையள்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Gari said:

இந்த கேள்வியை மற்றவர்களிடம் கேட்க முன் நீங்கள் இதுவரை போராளிகளுக்கும் ,மாவீரர்களுக்கும் என்ன செய்துள்ளீர்கள் ?நான் தமிழரசுக்காரன் என்பதை எவருக்கும் பயமில்லாமல் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவேன் அதை விட தலைநகரத்து தமிழனும் .

எல்லோரும் வட கிழக்கு இணைப்பு பற்றியும் ,ஈழம் பற்றியும் கதைப்பவர்கள் ,தென்னைமரவடி கிராமத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா ?1984இல் இருந்து இன்று வரை அந்த மக்களுக்கு எங்களால் முடியுமான உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றோம் ஒரு பானை சோற்றில் ஒரு சோற்றை சொல்லியிருக்கு !உங்களுடைய யூகங்களுக்கெல்லாம் பதிலை நீங்கள் தான் தேடவேண்டும் .

அது என்ன தலைநகரத்து தமிழன்?

  • கருத்துக்கள உறவுகள்

துரையிட்ட கைவசம் பல பட்டங்கள் உள்ளன போல. விடுதலைப்புலிகள் தொடர்பில் ஆய்வே இல்லாமல் துரை சகட்டு மேனிக்கு எடுத்துவிடுறார். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அண்மைய போக்குகள்,  எம் இனத்தின் எதிர் காலத்தையே..... கேள்விக்குறி ஆக்கிவிடும் நிலையில் உள்ளது.
இவர்களை ஒருக்கால்,  மலேசியாவுக்கு அனுப்பி.... விருந்து கொடுக்க வேண்டும். :grin:

 

On 9/8/2016 at 10:10 AM, குமாரசாமி said:

இஞ்சை ஒரு சில ஆக்கள் தமிழ் பிரதேசங்களிலை சிங்களவன் எது செய்தாலும் ஒரிஜினல் புத்த சாதுக்கள் மாதிரி திரிவினம்.

ஆனால் தமிழன் சிங்களவனைப்பற்றி ஏதும் கூடாமல் சொன்னால் பொங்கியெழுந்து அனலாய் கக்குவினம்.

நாலு பேருக்கு உதவியை செய்து போட்டு ஒரு இனத்துக்கே விடிவு வந்தமாதிரி பினாத்தல் கதையள்tw_blush:

யாழில் சிங்கள கடசிகளுக்கு வாக்களிக்கும் உங்களின் சொந்தங்களை எச்சரிக்க வக்கில்லை ,மற்றவர்களை பற்றி கதைக்க வந்திடடார் ?அம்மணமாக ஓடும் உங்களைப்போன்றவர்களுக்கு மான ரோசம் கிடையாதுதானே ?

  • கருத்துக்கள உறவுகள்
On 09/09/2016 at 8:19 AM, MEERA said:

அது என்ன தலைநகரத்து தமிழன்?

கொழம்பு டமிழ்tw_tounge_wink:

On 9/8/2016 at 11:24 AM, Gari said:

இந்த கேள்வியை மற்றவர்களிடம் கேட்க முன் நீங்கள் இதுவரை போராளிகளுக்கும் ,மாவீரர்களுக்கும் என்ன செய்துள்ளீர்கள் ?நான் தமிழரசுக்காரன் என்பதை எவருக்கும் பயமில்லாமல் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவேன் அதை விட தலைநகரத்து தமிழனும் .

எல்லோரும் வட கிழக்கு இணைப்பு பற்றியும் ,ஈழம் பற்றியும் கதைப்பவர்கள் ,தென்னைமரவடி கிராமத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா ?1984இல் இருந்து இன்று வரை அந்த மக்களுக்கு எங்களால் முடியுமான உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றோம் ஒரு பானை சோற்றில் ஒரு சோற்றை சொல்லியிருக்கு !உங்களுடைய யூகங்களுக்கெல்லாம் பதிலை நீங்கள் தான் தேடவேண்டும் .

ஐயா கொளுபுடமில் தலைநகரத்து வரட்டு திமிர் எங்களுக்கு முதல் 83ல் அடி வேண்டியும் திருந்தவில்லை போற போக்கிலை தென்னமரவாடி பற்றி இங்குள்ளவர்களுக்கு அடித்துவிட்டு போயுள்ளிர்கள் 1984 லிருந்து அங்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் உங்கள் அரசியல் திமிர் வாழ்க்கை

On 9/8/2016 at 11:41 AM, Gari said:

1983இல் இருந்து 1987 வரை யில் திருகோணமலை மாவடடத்தில்  இராணுவத்தால் கொல்லப்படடவர்கள் ,காணாமல் போனவர்கள் விபரங்கள் சம்பவங்கள் நடக்கும் பொழுதே நாங்கள் சேகரித்து சகல மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளோம் .இன்றைக்கும் இது சம்பந்தமான சகல விபரங்களும் எங்களிடம் இருக்கின்றது .அவர்களுக்கு பல உதவிகளும் செய்திருக்கின்றோம் .

எல்லாரும் வாயால் வெட்டி விழுத்தலாம் நானும் 100 பேருக்கு 1கோடி குடுத்தன் என்று பிலா விடலாம் உண்மை மீடியாவில் வந்ததா இல்லையே அதுவும் அந்த 5 வருடகாலதானா ராணுவம் மக்களை கொன்றது ? உங்களை போல் கோட்டுபோட்ட பிச்சைக்காரர் தொல்லை கூடிபோயிட்டுது 2009பின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Gari said:

யாழில் சிங்கள கடசிகளுக்கு வாக்களிக்கும் உங்களின் சொந்தங்களை எச்சரிக்க வக்கில்லை ,மற்றவர்களை பற்றி கதைக்க வந்திடடார் ?அம்மணமாக ஓடும் உங்களைப்போன்றவர்களுக்கு மான ரோசம் கிடையாதுதானே ?

ஆண்டாண்டு காலம் ஈழத்தமிழ்மக்கள் தமிழ்சார்ந்த கட்சிகளைத்தானே முன்னிலைப்படுத்தி பாராளுமன்றம் (ஐமீன் கலம்புக்கு) அனுப்பினார்கள்.
இதுவரைக்கும் என்னத்தை வெட்டி புடுங்கினார்கள்??? தமிழ் பிரதேசங்களுக்கு சிங்களவன் தானாய் உணர்ந்தும்/சர்வதேச அழுத்தங்களின் பிரகாரமும் தான் ஒரு சில அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணத்திலை இருக்கிற சிங்கள ஆமியை வெளியேற்ற வக்கில்லாத கூட்டம்.
அம்மணத்தை பற்றியும் கோமணத்தை பற்றியும் கதைக்க வந்திட்டார்.

உந்த நாதாரி தமிழர் விடுதலைக்கூட்டணியை முளையிலையே கிள்ளி எறிஞ்சிருந்தால் எங்கடை நாடும் அவலப்பட்டிருக்காது...சனமும் அழிஞ்சிருக்காது....சனமும் புலம்பெயர்ந்திருக்க தேவையுமில்லை...

தூ....எல்லாம் என்னைப்போலை ஆக்கள் விட்ட பிழை...tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2016 at 8:31 AM, TNT said:

அங்குள்ள மேற்கு நாடுகளில் கூட இந்த polonium-210 சோதனை ஆரம்பகட்டத்தில் உள்ளது இலகுவாக கண்டுபிடிக்க முடியாது    

முன்னாள் போராளிகளுக்கு இந்த விஷம் ஏற்றப் பட்டிருந்தால் எப்படி நிருபிப்பது? வளர்ச்சி அடைந்த நாடுகளாலேயே நிருபிக்க  முடியவில்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.