Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடக சங்கீதம்  கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Featured Replies

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=51950

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Athavan CH said:

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏண்டா ஈழத்தமிழன் கிந்தி படிக்க வேணும்!!!? tw_angry:

44 minutes ago, குமாரசாமி said:

ஏண்டா ஈழத்தமிழன் கிந்தி படிக்க வேணும்!!!? tw_angry:

ஒருவேளை இவர் கர்நாடக சங்கித்தான் கற்பிப்பாரா??

நோக்கம் எதுவாக இருந்தாலும், மாணவர்களுக்கு இலவசமாய் கர்நாடக சங்கீதம் கற்க வாய்ப்பு கிடைத்தால் நல்லதுதானே. ஒரு மணித்தியாலத்துக்கு கர்நாடகசங்கீதம் கற்பிக்க இங்கே கர்நாடக சங்கீத வகுப்புகளிற்கு ஆசிரியர்கள் எவ்வளவு வசூலிக்கின்றார்கள் தெரியுமா?

குளத்துடன் கோவித்துக்கொண்டு குளிக்காமல் இருக்கலாமா? இந்திய அரசியல்வாதிகள் செய்யும் சேட்டைகளுக்குள் அகப்பட்ட இந்திமொழி என்ன பாவம் செய்தது. நான் ஆர்வக்கோளாறு காரணமாக 84/85ஆம் ஆண்டுகளில் இந்திமொழி கற்றுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் ஜேர்மன்/டொச், பிரென்ச், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளை ஆங்கிலம், தமிழ் என்பனவற்றுடன் கற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணியுள்ளேன். வெவ்வேறு மொழிகளை கற்பதால் பல பயன்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஆண்களூம் கற்றுக்கொள்ளலாமா கேட்டுச்சொல்லுங்க  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்ட தவறுகள் இனியும் வரக்கூடாது.
ஓசி...ஓசி...ஒசி...ஓசியெண்டால் பொலிடோலும் குடிக்கிற சமுதாயத்தில் தான் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றோமா????

வாழ்க்கைக்கு/கல்விக்கு/தொழிலுக்கு தேவையான அவசியமான மொழிகள் பல இருக்கின்றன. அவற்றை படியுங்கள். கிந்தி எதுக்குமே உதவாதது. சீன மொழியை கற்க ஐரோப்பாவில் கூட பரிந்துரை செய்கின்றார்கள். ஆனால் கிந்தியை?????

கிந்தி பிறரை கழுத்து அறுப்பதற்கே தவிர......:grin:

ஈழத்தமிழன் ஏதோ இவ்வளவுகாலமும் கருநாடக சங்கீதம்  படிக்க இயலாமல் கரைச்சல் படுறமாதிரியும்......வாழ்க்கைக்கு அத்தியாவசியம் மாதிரியும் கதை விடுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நீங்க தலைகீழா நின்றாலும் நாங்க படிப்பமாக்கும்tw_blush: 

இங்கே ஆசிரியர் தொழில் டபிள் சம்பாத்தியமாக்கும்  ஒரு பிள்ளைக்கு அட்வான்ஸ் சாதாரண் ரியுசன் வகுப்புக்கு 2000 ரூபா வரைக்கும் போகுது  இலவசம் எனும் போது பயன் படுத்தினால் என்ன ??
எனது சகோதரர் இந்தியா சென்று கற்கிறார் சங்கீதம் அது பற்றி எனக்கு விபரம் தெரியாது  போகமுடியாதவர்கள் இங்க கற்கலாமே   சங்கீதத்தில் ஆர்வமுள்ளவர்கள் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஓசி...ஓசி...ஒசி...ஓசியெண்டால் பொலிடோலும் குடிக்கிற சமுதாயத்தில் தான் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றோமா????

குமாரசாமி  அண்ணே... இந்தியா,  ஓசியில் ஆயுதப் பயிற்சி தரும் போது... அதை பயின்றனாங்கள்,  தானே.. 
அதைப் போல்... ஓசியில் வாற கர்நாடக சங்கீதத்தையும் பயில்வதில் என்ன  தவறு. :grin:

உலகின் மிக அநாகரிகமான, பண்பற்ற மக்களின் மொழியான ஹிந்தியை தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்திய போர்க்குற்றவாளிகள் தமிழரின் மீது திணிக்க முயலுவது ஒன்றும் ஆச்சரியமல்ல.

அத்துடன் கர்நாடக சங்கீதத்தை இணைத்திருப்பதுவும் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்திய போர்க்குற்றவாளிகளின் உதவியல்ல தூண்டிலில் மாட்டப்பட்டுள்ள இரை!

தூண்டிலில் சிக்காமல் இரையை மட்டும் எடுக்கவல்லவர்கள் இலவசத்தைப் பெற முயற்சிப்பதில் பெரும் தவறில்லை. ஆனால் இலவசங்கள் மக்களை நாளடைவில் சோம்பேறிகளாக்கி அழித்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கதிகமான சுயமாக சிந்திக்கும் திறனற்ற தமிழகத்தினுள்ளே கிந்தியை திணித்தும் எடுபடவில்லை. ஆகவே புதிய கிந்தி திணிப்புக்கு 
வட மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனையும் வந்தாயிற்று, ஏன் இந்தியத்துணை தூதரகத்தை அம்பாந்தோட்டையிலும் திறந்து 
சிங்கள மக்களுக்கும் கிந்தி சொல்லித்தரலாமே .....? 
இந்த பீடைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது நல்லது ...படர விட்டோம் மீண்டும் கத்தக்கத்த அடி வாங்க  வேண்டித்தான் வரும்
ஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் இனத்தால் ஒன்றுபட்டு நிற்கும் சைவரையும் கிருத்தவரையும் மதவாதத்தால் பிரித்து 
தெருவோரம் திருவோட்டுடன் விடப்போகும் முன்னாயத்தம் தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாதூதரகத்தில் கராத்தேயும், குங் பூவும் இலவசமாக கற்பிக்கப்படுமாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கர்நாடக சங்கீதத்துக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் அக்னி  அது  சங்கீத பயிற்ற்சி அவ்வளவுதான்

13 minutes ago, putthan said:

சீனாதூதரகத்தில் கராத்தேயும், குங் பூவும் இலவசமாக கற்பிக்கப்படுமாம்

அது சரி அதைப்பழகி நம்மட ஆட் களூக்கு நாலு சாத்து சாத்துவம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

அது சரி அதைப்பழகி நம்மட ஆட் களூக்கு நாலு சாத்து சாத்துவம் 

ஒருத்தன் சாத்த மற்றவன் மறிக்க அதை நாங்கள் பார்க்க ஒரே.....பம்பல்தான்......tw_tounge_wink:சங்கீதபயிற்சியை ஏன் தூதரகம் செய்வான்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

ஒருத்தன் சாத்த மற்றவன் மறிக்க அதை நாங்கள் பார்க்க ஒரே.....பம்பல்தான்......tw_tounge_wink:சங்கீதபயிற்சியை ஏன் தூதரகம் செய்வான்?

தூதரகத்தின் வெளியுறவு கொள்கை tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, முனிவர் ஜீ said:

கர்நாடக சங்கீதத்துக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் அக்னி  அது  சங்கீத பயிற்ற்சி அவ்வளவுதான்

ஐயா  ...முனி நாங்களும் அதைத்தான் கேட்கிறோம் ..தூதரகத்திற்கு எதற்கு தேவையில்லாமல் சங்கீதம், கிந்தி படிப்பிட்க்கும் வேலை 
தூதரகம் வந்ததன் பின் தான் சிவசேனையும் எட்டிப் பார்க்கிறது ...எங்கேயோ இடிக்கலை....?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஐயா  ...முனி நாங்களும் அதைத்தான் கேட்கிறோம் ..தூதரகத்திற்கு எதற்கு தேவையில்லாமல் சங்கீதம், கிந்தி படிப்பிட்க்கும் வேலை 
தூதரகம் வந்ததன் பின் தான் சிவசேனையும் எட்டிப் பார்க்கிறது ...எங்கேயோ இடிக்கலை....?

இந்திய தூதரகம் அறுவடை இல்லாமல் வேலை செய்யாது  அது எல்லோரும் அறிந்ததே  கர்நாடக சங்கீதம் என்பது இந்தியர்களை விட 
கற்றறிந்தவர்கள் கிடையாது  கற்க வேண்டியவர்கள் கற்கட்டும்  நமது பிள்ளைகள் தானே அது அவர்கள் வாழ்க்கைக்கு உதவலாம் சிவசேனை 
இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்  அதனால் எதையும் பெரிதாக இங்கு சாதித்து விட முடியாது  நமக்கு  எது தேவையோ அதை
கிடைக்கும் போது எடுத்துக்கொள்வோம் அதற்கு அடுத்ததாக மற்றயதை நோக்குவோம் தற்போது உள்ள சூழ்நிலையில்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

இந்திய தூதரகம் அறுவடை இல்லாமல் வேலை செய்யாது

இதுதான் அடிவயிற்றை கலக்குது ...நல்ல நோக்கத்தில் சங்கீதம் படிப்பித்தாலும் தவறாக தான் பார்க்க தோன்றுகிறது. நல்லது நடந்தால் பரவாயில்லை
நாசமாக்கும் எண்ணம் இருந்தால் ...? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

இதுதான் அடிவயிற்றை கலக்குது ...நல்ல நோக்கத்தில் சங்கீதம் படிப்பித்தாலும் தவறாக தான் பார்க்க தோன்றுகிறது. நல்லது நடந்தால் பரவாயில்லை
நாசமாக்கும் எண்ணம் இருந்தால் ...? 

பூந்து அடிச்சு கலைச்சு விடுவம்  வேற என்ன தான் செய்கிறது tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Athavan CH said:

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=51950

"ஏக் காவ் மே, ஏக் கிசான் ரகதாத்தா.. " இந்திப் படிப்பு இப்படியிருந்தால் நல்லதுதான்!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

ஆமா ஏர் டெல் ரீ சார்ஜ் ஆபர்.. !!  மற்றும்   சாரதா சில்க்ஸ் தீபாவளி பொங்கள் தள்ளுபடி!!

யோவ் ! நீ எல்லாம் பெரிய மனுசன் .. ஐ.எப்.எஸ்    படிச்சுருக்கங்களாம்.. அட வெளக்கெண்ண.. இங்கிட்டே குடிக்க கூழ் கஞ்சியில்லாம  திரியாறாங்கா.. செலவு செய்வது என்ன ஒங்க அப்பன் வீட்டு காசா ..?அவுங்க கேட்டாங்களா உன்ன ?

https://www.youtube.com/watch?v=fFtTPz9h9jY

சங்கீதம் உண்மையில் அருமையான கலை அது சிவபெருமான் நாபி கமலத்தில் இருந்து உருவாகிறதாம் ..கற்று கொடுப்பவர்கள் கண்றாவியாக இருக்கும் போது எவர் ஏற்று கொள்ளுவார் ? ரெல் மீ ரெல்!!

டிஸ்கி :
அதான் எல்லாம் முடித்துவிட்டீர்களே ! அப்புறம் என்ன ..பேசாமல் உள் அடி போடவதை விடுத்து  வடக்கு.. ஹிந்தியாவின்  இன்னோரு மாநிலம் என்று அறிவித்துவிட்டு போங்கள்... புடிங்கீங்களா..!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும், இலங்கைத் தீவுக்கும் இடையில் அதிக கலாச்சார தொடர்புகள் இருக்கிறது என்று கோடிட்டு காட்டுகிறார்களாம். இந்த டான்ஸ் பயிற்சியை பார்த்திட்டு சீனனும், அமெரிக்கனும் ஒதுங்கி போயிடுவாங்களாம்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை வரும் 

பின்னே.....??

இப்படித்தான் போகுமோ......

  • கருத்துக்கள உறவுகள்

Composers of Carnatic music were often inspired by religious devotion and were usually scholars proficient in one or more of the languages Kannada, Malayalam, Sanskrit, Tamil, or Telugu.

என்னுடைய புத்திக்கு எட்டிய மட்டில் ...கர்னாடக சங்கீதம் பழகுவதில் எந்த தவறும் கிடையாது.
உதாரணம் ...தமிழ் பெரிதாக பேசத் தெரியாத என் குழந்தைகள் தேவாரம், திருவாசகம், ஆத்திசூடி, கீர்த்தனைகள் என்று பாடுகிறார்கள். அதுவே எனக்கு போதும்.  
உன் பிள்ளைகள் ஏன் பெரிதாக தமிழ் பேசவில்லை என்ற கேள்வியை திருப்பி என்னிடம் வைக்காதீர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் ...

இது ஒன்றும் இலவசம் இல்லை! தமிழர்களிடம் கொள்ளையடித்த சொத்துக்களில் ஒரு சிறுபகுதியை அள்ளி வீசி, தமிழனை மீண்டும் ஏமாற்ற முடியுமோ என முயற்சிக்கிறார்கள் இந்த ஹிந்திய ஹிம்சாவாதிகள்.  

இந்த ஹிந்திய கொலைகாரக் கும்பலிடம் பறிக்க முடிந்தவற்றை பறித்து அவர்களை கைவிடுவதில் தவறில்லை.

ஹிந்திய கொலைகாரக் கும்பலின் அழிவில் தான் தமிழர்களின் நலன் தங்கியுள்ளது என்பது எப்பவோ உணர்த்தப்பட்ட விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.