Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

************

சிறு பருவத்திலிருந்து ஒரு பழக்கம்  அதை பழக்கமென்பதைவிட கணிப்பு என்று  சொல்லலாம்

ஒருவர்  குடித்திருந்தால் அவருடன் எந்த பேச்சுவார்தையும் அன்று வைப்பதில்லை.

இது எனது தகப்பனாரின் குடிக்குப்பின்னாலான நடவடிக்கைகளை பார்த்து வந்து

அதன் பின்  நண்பர்கள்  உறவுகள்  என தொடர்ந்து வந்திருக்கிறது

எல்லோரது  செயலும் எனது கணிப்புக்கு உரமேற்றியிருக்கின்றனவே தவிர 

ஒரு போதும் வலுவிளக்கச்செய்ததில்லை.

நான் தான் இப்படியான கணிப்பு வைத்திருக்கின்றேன்  என்றில்லை

குடிப்பவர்களே மற்றொரு குடிப்பவரை பார்த்து இவ்வாறு தான் சொல்கிறார்கள்

எமது சமுதாயமும் இப்படித்தான் ஒரு கணக்கு போட்டு  வைத்துக்கொள்கிறது

எனது தகப்பனார் என்னிடம் ஒரு முறை சொன்னார்

நான் தற்செயலாக கல்  தடக்கி  விழுந்தாலும் இந்த சமுதாயம்   அவர்  வெறியில்  விழுந்திருப்பார்  என்று தான்  சொல்வார்கள்

ஆனால் நீ  ஒரு நாள் வெறியில்  விழுந்தாலும் அவருக்கு கல்  தடக்கி இருக்கும் என்பார்கள் என்று.

**********

நண்பர்களோ  உறவுகளோ

தண்ணி அடி என்று என்னை ஒரு போதும்   வற்புறுத்தியதில்லை

என்னை  விட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்

ஏதாவது பேசணும்   என்றால்   தண்ணி என்றால்  என்  முன்னே  வரமாட்டார்கள்

தவிர்த்துவிடுவார்கள். இது தான்வழமை. இதுவரை...

**********

இப்ப  எதுக்கு இதெல்லாம்

அது தானே கேள்வி

முடிவுரை இனித்தானே....

*********

தம்பி ஒருத்தன்

அன்றைக்கு வீட்டுக்கு வந்தான்

குடித்திருக்கின்றான் என்று தெரிந்தது.  

சாதாரணமாக குடித்திருந்தால் என்முன்னே வரமாட்டான்

அன்று சுத்தி  சுத்தி  வந்தான்

ஏதோ என்னிடம் பேச முயல்கின்றான்  என்பது தெரிந்தது

ஆனாலும்  தண்ணியில இவன் என்னத்தை புலம்பி என்ன பயன்??

ஏதாவது  இருந்தால் நாளை பேசலாம் என புறக்கணித்து விட்டேன்

போகும் போது ஒரு மாதிரி பார்த்தபடியே தான்  போனான்

அந்த பார்வை  ?????

அன்றிரவு அவன்  தற்கொலை  செய்து கொண்டான்.

(சில  வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவம்.  சில உருமாற்றங்களுடன்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிலசமயம் நீங்கள் அவருடன் கதைத்திருந்தால் அவர் தனது முடிவை மாற்றிக் கூட இருந்திருக்கலாம்.பாருங்கள் வருடங்கள் கடந்தபோதும் அது உங்களை உறுத்துகின்றது....!

நான் ஒருபோதும் குடித்ததில்லை ஆயினும் எனது நண்பர்களில் பெரும்பாலானோர் குடிப்பவர்கள். நானும் அந்தந்த நேரங்களில் அவர்களைச் சமாளித்து வீடுவரை விட்டுட்டு வருவேன்.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மது அருந்துதல் என்பது கெட்ட பழக்கம் என்ற கோட்பாடு மதுவை எப்படி எந்தநேரத்தில் அருந்த வேண்டும் என்று தெரியாதவர்களை பார்த்து வகுக்கப்பட்டது என நினைக்கின்றேன்.அதைப்பற்றி அதிகம் எழுதலாம்.அது இதற்கு உகந்த திரியல்ல.
 
சுருக்கமாக......... இன்றைய உலகில் மதுவை விட மனநோய் அதிகமாகி விட்டது. வெறிகாரன் வாறான் என்றால் ஒதுங்கிப்போகலாம். மனநோய் உள்ளவன் எந்த கோணத்தில் எப்படி வருகின்றான் என்பதே தெரியாமல் இருக்கின்றது.அதனால் பல இடங்களில் கொடூர கொலைகளும் அவலங்களுமே நடந்து முடிகின்றன.

ஒருவனுக்கு மனித இயல்புகளில் பலவகை என்ற பக்குவம் வந்தாலே அவன் மகான்.

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டு ஒன்று.....துண்டு ரெண்டு...என்று வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை!

மது என்பது ஒவ்வொருவரது இயல்புக்கேற்ப அவரை அது ஆழும்...அல்லது அவர் மதுவை ஆழுவார்!

எகிப்திய பிரமிட்டுக்களுக்குள்ளும் .....மது வடித்தலுக்கான உபகரணங்கள் காணப்பட்டன!

ராஜ ராஜ சோழன்....மதுவருந்திய நிலையிலேயே... மங்கலம் என பெயர் கொண்ட ( உதாரணம்...குமாரமங்கலம்) விளைநிலங்களை எல்லாம்...ஆரியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் முடிவை எடுத்தான்!

நீங்கள் மதுவிலிருந்து விலகியிருப்பதற்கான காரணங்களை மதிக்கும் அதே வேளையில்...மனித உணர்வுகள் மிகவும் மென்மையானவை என்பதையும் நீங்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்!

உங்களை ஒரு உயர் ஸ்தானத்தில் அவன் வைத்திருந்திருக்கிறான்! அதனால் தான் உங்களின் கருத்தைக் கேட்க வந்திருக்கிறான்!

தம்பி...எதுவாயிருந்தாலும்...நாளைக்கு வாப்பு என்று நீங்கள் கூறியிருந்தால்....அவனது முடிவை அவன் பின்போட்டிருக்கலாம்!

நான் உயர்ந்த நிலையில்...வைத்திருக்கும் ஒரு மனிதனின்..உதாசீனம் என்னால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது!

அது தான் ஊரில் சொல்லுவார்கள்...வேணுமெண்டால் ரெண்டு அடியை அடிச்சுப் போட்டுப் போ....ஆனால் இந்தக் கண்டதும் காணாமல் போற மாதிரிப் போகாதை எண்டு!

நிச்சயமாக உங்களில் குற்றம் காணும் நோக்கம் எனக்கில்லை! ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது! அவ்வளவு தான்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடத்தில் கருத்து எழுதுவது என்பது கத்திமுனையில் காலூன்றி நடப்பது போன்றது. எனது தந்தை, எனது துணைவர் மதுப்பழக்கத்திற்கு உள்ளானவர்களே. மதுப்பழக்கம் என்பது புத்தியைப் பேதலிக்க வைப்பதும் உண்டு..... இயல்பாக எனக்கும் இப்பழக்கம் அறவே பிடிக்காது ஆனால் வாழ்க்கையில் அறிவு தெரிந்தகாலம் முதல் மதுப்பழக்கம் உள்ளவர்களோடே இன்றுவரை வாழ்கிறேன். மது கெட்டதென்று எந்த முட்டாள் சொன்னதென்று சில சமயம் கேட்கவும் தோன்றியிருக்கிறது.  மதுவை நன்றென்றும் ஒரு காலமும் மனம் ஒப்பியதில்லை.தாயகத்தில் மதுப்பழக்கம் இல்லாத பலர் குளிர் அதிகரித்த புலங்களில் வாழும் சூழலில் இன்று மதுவை நாளாந்தம் உள்ளெடுக்கப்பழகி இருக்கிறார்கள் ஏன் பெண்களும் அதற்கு விதிவிலக்கல்ல எனது பல தோழியர் மது பாவிக்கிறார்கள் இந்த நாட்டில் அதனை மருத்துப்பொருளாகவும், மன அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற வழிகாட்டியாகவும் அநேகரது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்றாக உணரமுடிகிறது. நான் மதுவை ஆதரிக்கிறேனா? எதிர்க்கிறேனா?

ஐயய்யோ மது அருந்தாமலே எனக்கு புத்தி பேதலித்துவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வல்வை சகாறா said:

ஐயய்யோ மது அருந்தாமலே எனக்கு புத்தி பேதலித்துவிட்டதா?

ஆபிரிக்காவின் 'மரிலா' என்னும் மரத்தின் பழங்கள்....மதுவைப் போல போதை தருவன!

அதனைச் சாப்பிட்ட..யானைகள் ஓயவேடுப்பதைப் பாருங்கள்!

drunk_elephants_marula_3_2014_05_13.jpg?

பின் வரும் காணொளியையும் பாருங்கள்..!

அரை வாசி வாழ்க்கைக் காலத்தை வீணாக்கி விட்டதாக ..நிச்சயம் உணர்வீர்கள்..!:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மதுவும் மாதுவும் ஒன்று தான்.
அளவோடு சுவைக்கணும்.

உங்க பாலிசியைப் பார்த்தா பொழுதுபட்டால் யாரோடும் நீங்க பேச முடியாது போலிருக்கே.

குடிகாரர் ரொம்ப பேரை எனக்கு பிடிக்கும்.ஏனென்றால் உண்மை பேசுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களில் எழுதுவது பொல்லைக் கொடுத்து  நாங்களே அடி வாங்குவது போன்றது..

மரிலா பழ பார்ட்டி..

??

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

மது உடலுக்கும், மனதிற்கும் கேடு என அறிந்தும் அதற்கு சப்பை கட்ட ஆயிரம் காரணங்கள்..!  tape-poing.gif

முடியல..!! va-taper.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

மது உடலுக்கும், மனதிற்கும் கேடு என அறிந்தும் அதற்கு சப்பை கட்ட ஆயிரம் காரணங்கள்..!  tape-poing.gif

முடியல..!! va-taper.gif

எதுக்கும் அவசரப்படாதையுங்கோ, வன்னியன்!

தானாச் சீனாவும் வந்து தனது கருத்தைச் சொன்ன பிறகு...முடிவெடுங்கள்! tape-poing.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, புங்கையூரன் said:

எதுக்கும் அவசரப்படாதையுங்கோ, வன்னியன்!

தானாச் சீனாவும் வந்து தனது கருத்தைச் சொன்ன பிறகு...முடிவெடுங்கள்! tape-poing.gif

அப்ப வெள்ளிக்கிழமை முடியும் மட்டும் காத்திருக்க வேணும்.:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையும்   கேளுங்க...

நேரமில்லாவர்கள்  1-50 நிமிடத்திலிருந்து 2-05 மட்டும்  கேளுங்க...

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

இதையும்   கேளுங்க...

நேரமில்லாவர்கள்  1-50 நிமிடத்திலிருந்து 2-05 மட்டும்  கேளுங்க...

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு எண்டாலும் சிலர் அதன் பிடியிலிருந்து விடுபட்டு கொள்வதில்லை என்பதும் புரியும்.அவர்கள் தான் அப்படி நடந்து கொள்கிறாரகள் என்றால் நாங்களும் அவர்களை தண்டிக்கனும் என்று இல்லைத் தானே..குடிப்பவர் உங்கள் முனனே வருவதில்லை வரப்படாது என்று நினைக்கிறீங்களே தவிர அவர்களது பிரச்சனைகளை தீர்ப்பவராக இல்லவே இல்லை...

ஒரு வேளை நீங்கள் அந்த உறவோடு பேசி இருந்தால் தான் எடுக்க இருக்கும் எடுத்திருக்கும் முடிவிலிருந்து தன்னை மாற்றியிருக்க ௬டும் இல்லயா..எப்போதும் உங்கள் தரப்பு தப்புக்களையும் ஒத்துக் கொள்வதில்லை.அது அப்படி இல்ல இப்படித் தான்..இப்படி இல்ல அப்படி தான் என்று சொல்கிறீர்களே தவிர வேறு என்ன சொல்ல வாறீங்கள். யாழின் 19 ஆம் ஆண்டினை ஒட்டிய புதிய ஆக்கம் அவ்வளவே தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2017 at 7:11 PM, suvy said:

சிலசமயம் நீங்கள் அவருடன் கதைத்திருந்தால் அவர் தனது முடிவை மாற்றிக் கூட இருந்திருக்கலாம்.பாருங்கள் வருடங்கள் கடந்தபோதும் அது உங்களை உறுத்துகின்றது....!

நான் ஒருபோதும் குடித்ததில்லை ஆயினும் எனது நண்பர்களில் பெரும்பாலானோர் குடிப்பவர்கள். நானும் அந்தந்த நேரங்களில் அவர்களைச் சமாளித்து வீடுவரை விட்டுட்டு வருவேன்.....!

உண்மை  தான்  அண்ணா..

முள்ளாய்க்குத்தும் ஒரு தவறு அது.

என்னால் காப்பாற்றியிருக்கமுடியும் என்று இப்பொழுது  தோன்றுகிறது

ஒருவர் ஒரு விடயத்தை வெளியில் கக்குவதற்காகவும்குடிப்பார்கள் என்பதையும்அன்று  புரிந்து கொண்டேன்.

நன்றியண்ணா  உங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும்.

On 15/03/2017 at 8:22 PM, குமாரசாமி said:

மது அருந்துதல் என்பது கெட்ட பழக்கம் என்ற கோட்பாடு மதுவை எப்படி எந்தநேரத்தில் அருந்த வேண்டும் என்று தெரியாதவர்களை பார்த்து வகுக்கப்பட்டது என நினைக்கின்றேன்.அதைப்பற்றி அதிகம் எழுதலாம்.அது இதற்கு உகந்த திரியல்ல.
 
சுருக்கமாக......... இன்றைய உலகில் மதுவை விட மனநோய் அதிகமாகி விட்டது. வெறிகாரன் வாறான் என்றால் ஒதுங்கிப்போகலாம். மனநோய் உள்ளவன் எந்த கோணத்தில் எப்படி வருகின்றான் என்பதே தெரியாமல் இருக்கின்றது.அதனால் பல இடங்களில் கொடூர கொலைகளும் அவலங்களுமே நடந்து முடிகின்றன.

ஒருவனுக்கு மனித இயல்புகளில் பலவகை என்ற பக்குவம் வந்தாலே அவன் மகான்.

உண்மைதான்அண்ணா

எனது இந்த கதையும் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள் சார்ந்துதான்.

அதை மருந்தாக அளவாக  மற்றவர்களுக்கு இடைஞ்சலற்று பாவிப்பவர்கள்சார்ந்துஅல்ல.

நன்றியண்ணா...

கருத்துக்கும்ஆலோசனைக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2017 at 10:52 PM, புங்கையூரன் said:

வெட்டு ஒன்று.....துண்டு ரெண்டு...என்று வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை!

மது என்பது ஒவ்வொருவரது இயல்புக்கேற்ப அவரை அது ஆழும்...அல்லது அவர் மதுவை ஆழுவார்!

எகிப்திய பிரமிட்டுக்களுக்குள்ளும் .....மது வடித்தலுக்கான உபகரணங்கள் காணப்பட்டன!

ராஜ ராஜ சோழன்....மதுவருந்திய நிலையிலேயே... மங்கலம் என பெயர் கொண்ட ( உதாரணம்...குமாரமங்கலம்) விளைநிலங்களை எல்லாம்...ஆரியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் முடிவை எடுத்தான்!

நீங்கள் மதுவிலிருந்து விலகியிருப்பதற்கான காரணங்களை மதிக்கும் அதே வேளையில்...மனித உணர்வுகள் மிகவும் மென்மையானவை என்பதையும் நீங்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்!

உங்களை ஒரு உயர் ஸ்தானத்தில் அவன் வைத்திருந்திருக்கிறான்! அதனால் தான் உங்களின் கருத்தைக் கேட்க வந்திருக்கிறான்!

தம்பி...எதுவாயிருந்தாலும்...நாளைக்கு வாப்பு என்று நீங்கள் கூறியிருந்தால்....அவனது முடிவை அவன் பின்போட்டிருக்கலாம்!

நான் உயர்ந்த நிலையில்...வைத்திருக்கும் ஒரு மனிதனின்..உதாசீனம் என்னால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது!

அது தான் ஊரில் சொல்லுவார்கள்...வேணுமெண்டால் ரெண்டு அடியை அடிச்சுப் போட்டுப் போ....ஆனால் இந்தக் கண்டதும் காணாமல் போற மாதிரிப் போகாதை எண்டு!

நிச்சயமாக உங்களில் குற்றம் காணும் நோக்கம் எனக்கில்லை! ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது! அவ்வளவு தான்!

இங்கு குடி - மதி  என்று  பெயர் வைத்ததற்கே காரணம்

இவை  இரண்டும் பல பொருள்கொண்டவை என்பதால்தான்...

குடி என்பது குடும்பத்தையும்  குடிசையையும்கூட குறிப்பிடுகிறது

அதேபோல்  மதி  என்பதும் புத்தி   மரியாதை கௌரவம் எனவிரிகிறது

அடுத்து மதுவை  அருந்துபவர்களை நாம்தாங்குவோம் என்பதால்தான்

அவர்கள் தமது எல்லைக்கு மேல்குடிக்கிறார்கள்என்பது எனது அனுபவத்திலானது.

இதுவும்எம்மை அறியாது நாம் ஒரு குற்றத்துக்கு துணை  போவது தான்.

அவனை காப்பாற்றியிருக்கலாம்என்று என்மனம்இன்று சொல்கிறது (அவர் சொல்ல  வந்ததை அறியாமலேயே)

இதுவும் ஒரு சந்தர்ப்பகரமான கற்பனைத்தீர்மானந்தான்.  

தற்கொலை  செய்து  தப்பிய இருவரை

அவர்கள் தப்பிய வேளையில் போய்ப்பார்த்தபோது வைத்தியசாலையிலிருந்த அவர்களை  அடிக்கப்போனேன்

அப்பொழுது  அவர்கள்  இருவருமே சொன்னது

அந்த கணங்கள்  எல்லோருக்குமே  வரும்

சில செக்கன்கள்தான்

அதை தவிர்த்தவர்கள் வாழ்கிறீர்கள்

தவிர்க்க முடியாது பலியானவர்  நாம்என.

அவர்கள்சொன்னபோது என்னால்பதில்  எதுவும்சொல்லமுடியவில்லை

அந்தகணங்களை பலரும்அனுபவித்திருப்பார்கள் என்று தான் நினைக்கின்றேன்.

அவர்கள்  இருவருமே தம்மை மீண்டும்அழித்துக்கொண்டார்கள்.

உங்கள்  கருத்துக்களுக்கும்நேரத்துக்கும்  மிக்க நன்றியண்ணா..

Edited by விசுகு

தெரியாமல் இஞ்ச வந்து வாசிச்சுப் போட்டன்... ஆளை விடுங்க சாமி (அதுவும் வெள்ளிக்கிழமையா பார்த்து)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இங்கு குடி - மதி  என்று  பெயர் வைத்ததற்கே காரணம்

இவை  இரண்டும் பல பொருள்கொண்டவை என்பதால்தான்...

குடி என்பது குடும்பத்தையும்  குடிசையையும்கூட குறிப்பிடுகிறது

அதேபோல்  மதி  என்பதும் புத்தி   மரியாதை கௌரவம் எனவிரிகிறது

அடுத்து மதுவை  அருந்துபவர்களை நாம்தாங்குவோம் என்பதால்தான்

அவர்கள் தமது எல்லைக்கு மேல்குடிக்கிறார்கள்என்பது எனது அனுபவத்திலானது.

இதுவும்எம்மை அறியாது நாம் ஒரு குற்றத்துக்கு துணை  போவது தான்.

அவனை காப்பாற்றியிருக்கலாம்என்று என்மனம்இன்று சொல்கிறது (அவர் சொல்ல  வந்ததை அறியாமலேயே)

இதுவும் ஒரு சந்தர்ப்பகரமான கற்பனைத்தீர்மானந்தான்.  

தற்கொலை  செய்து  தப்பிய இருவரை

அவர்கள் தப்பிய வேளையில் போய்ப்பார்த்தபோது வைத்தியசாலையிலிருந்த அவர்களை  அடிக்கப்போனேன்

அப்பொழுது  அவர்கள்  இருவருமே சொன்னது

அந்த கணங்கள்  எல்லோருக்குமே  வரும்

சில செக்கன்கள்தான்

அதை தவிர்த்தவர்கள் வாழ்கிறீர்கள்

தவிர்க்க முடியாது பலியானவர்  நாம்என.

அவர்கள்சொன்னபோது என்னால்பதில்  எதுவும்சொல்லமுடியவில்லை

அந்தகணங்களை பலரும்அனுபவித்திருப்பார்கள் என்று தான் நினைக்கின்றேன்.

அவர்கள்  இருவருமே தம்மை மீண்டும்அழித்துக்கொண்டார்கள்.

உங்கள்  கருத்துக்களுக்கும்நேரத்துக்கும்  மிக்க நன்றியண்ணா..

இதுக்குத் தான் வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பவன் அதை ஒவ்வொன்றாக கழட்டி வேறு வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்பார்கள்.லோட் பண்ணி வைத்திருந்தால் எடுத்த வீச்சுக்கு சுட்டுவிடுவார்கள்.ஒவவொன்றாக தேடி எடுத்து லோட் பண்ண எடுக்கும் நேரத்தில் முடிவை மாற்ற சந்தரப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதுக்குத் தான் வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பவன் அதை ஒவ்வொன்றாக கழட்டி வேறு வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்பார்கள்.லோட் பண்ணி வைத்திருந்தால் எடுத்த வீச்சுக்கு சுட்டுவிடுவார்கள்.ஒவவொன்றாக தேடி எடுத்து லோட் பண்ண எடுக்கும் நேரத்தில் முடிவை மாற்ற சந்தரப்பம் உண்டு.

எல்லா துப்பாக்கியையும் கழட்டி வைக்க ஏலாது ஐயா.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ர அப்பனும் குடித்து,குடித்தே செத்தார்

  • கருத்துக்கள உறவுகள்
On 16.3.2017 at 3:24 AM, ராசவன்னியன் said:

மது உடலுக்கும், மனதிற்கும் கேடு என அறிந்தும் அதற்கு சப்பை கட்ட ஆயிரம் காரணங்கள்..!  tape-poing.gif

முடியல..!! va-taper.gif

On 16.3.2017 at 5:12 AM, புங்கையூரன் said:

எதுக்கும் அவசரப்படாதையுங்கோ, வன்னியன்!

தானாச் சீனாவும் வந்து தனது கருத்தைச் சொன்ன பிறகு...முடிவெடுங்கள்! tape-poing.gif

23 hours ago, குமாரசாமி said:

அப்ப வெள்ளிக்கிழமை முடியும் மட்டும் காத்திருக்க வேணும்.:grin:

விசுகு, பதிந்த கருத்தில், எனக்கு..... எள்ளளவும்  உடன்பாடு இல்லை.
ஆனால்... அவரின் பதிவுக்கு,    "யாழ் - 19"  என்ற இந்த மாத,  சுய ஆக்கம் பதிபவர்களுக்கு. என்னால்.... கொடுக்கப்  பட்ட  ஊக்கம் மட்டுமே..... 

குடிகாரர்களில் பல வகை..... 
1)  மொடாக்  குடியர்.  ("வெறி" முறிய முதல், குடித்துக் கொண்டே..... இருப்பார்கள்.)
2)  டீசன்டாக குடிப்பவர்கள்.  
3)  மனிசிக்கு தெரியாமல்,  அலுமாரிக்குள்...  "வைன்" போத்தலை வைத்து குடிப்பவர்கள்.   
4)  கவலையை.... மறக்க குடிப்பவர்கள்.
5)  வெள்ளிக்கிழமை மட்டும், குடிப்பவர்கள் என்று.... பலவகைப் படுத்தலாம்.

நமது,   இதிகாச சமய கடவுள்கள் கூட.... "சோம பானம்"  அருந்தி  உள்ளார்கள்.
"டாஸ்மார்க்"  அரசாங்கமே.... மதுவை, விற்றால்...  என்ன செய்வது?

தகப்பன் குடித்தால், மகன் மதுவை தொடமாட்டான் என்று, 
ஊரில் சொல்வதை... கேள்விப் பட்டு, அவதானித்ததை... பார்த்தால்,  சரியாக உள்ளது.  

################

tw_smiley:

இந்தக் காணொளி,  சும்மா... பகிடிக்கு.....  விசுகின், பெயர் வந்ததற்காக இணைக்கப் பட்டது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/03/2017 at 0:05 AM, தமிழ் சிறி said:

விசுகு, பதிந்த கருத்தில், எனக்கு..... எள்ளளவும்  உடன்பாடு இல்லை.
ஆனால்... அவரின் பதிவுக்கு,    "யாழ் - 19"  என்ற இந்த மாத,  சுய ஆக்கம் பதிபவர்களுக்கு. என்னால்.... கொடுக்கப்  பட்ட  ஊக்கம் மட்டுமே..... 

குடிகாரர்களில் பல வகை..... 
1)  மொடாக்  குடியர்.  ("வெறி" முறிய முதல், குடித்துக் கொண்டே..... இருப்பார்கள்.)

நன்றி சிறி

மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவரை  சரி..

மற்றவர்கள் சார்ந்தது அல்ல  எனது பதிவு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பர்கள் நிறைய  குடிப்பது உண்டு நான் இல்லை ஆனால் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒவ்வொரு சோகம் இழப்பு என்னத்தை சொல்வது வாழ்ந்துட்டு போகட்டும் என்ற நினைப்பில் நானும் 

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குடி -  குடிப்பவனையும் கெடுக்கும்,  குடிக்காட்க உறவுகளையும் கெடுக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.