Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா எங்கேயண்ணா இவ்வளவு நாளும் உங்கள் எழுத்தற்றலை ஒளித்து வைத்தனீங்கள்?...நீங்கள் சரியான பேய்க்காய்:cool:...யாழுக்கு பிறந்த நாள் என்டவுடன் எல்லோரும் போட்டிtw_cookie: போட்டுக் கொண்டு எழுதுகிறதைப் பார்க்க அழுகை,அழுகையாய் வருகுது.tw_cry:

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 18.3.2017 at 3:21 PM, suvy said:

சாமியோ தண்டத்தை எடுக்க முடியாமல் தடுமாறுது. காலடியில் கிடந்த பெண்ணும் என்ன சாமி இன்னும் தனக்கு தண்டத்தால அடிக்கேல்ல என்று நிமிர்ந்து பார்த்து "அம்மோவ்" என்று அலற உள்ளிருந்த கோழி பயப்பிராந்தியில் பின்புறத்தை பையால் கொஞ்சம் அரக்கி  அவள் முகத்தில் ஆய்போகுது.  அதே நேரம்  மாமரத்தில் இருந்த காகம் ஒன்று கா... கா என்று காத்திக் கொண்டு பறக்க அங்கிருந்து ஒரு  துண்டு அவளுக்குமேல விழுகுது. அதைப் பார்த்த மாத்திரத்தில் சாமியும் "அட பைரவா" படியில போட்ட கௌபீனத்தை கட்ட மறந்திட்டன் என்று சுதாகரித்துக் கொண்டு திருநீறை எடுத்து அப்பெண்ணின் மூஞ்சியில் அடித்து தண்டத்தைக் கைமாற்றி தலையில் ரண்டு போட்டு  எழுப்பி விட்டுது. 

----

அப்போது பர்வதத்தின் மகளும் கதிரவேலுவின் மனைவியுமான பொன்மணி அங்கு வந்து சாமி நீங்கள் சைவம்தான் சாப்பிடுவியளா என்று கேட்க சாமி அவசரமாக அதை மறுத்து நான் பைரவ உபாசகன் அம்மா என்கிறார். அங்கிருந்த துடுக்கான பெட்டை ஒன்று எழுந்து  சாமி நீங்கள் விஜய் ரசிகரா என்று கேட்க எல்லோரும் சிரிக்கினம். பொன்மணி அவர்களை அதட்டி விட்டு எல்லோரும் சற்று தள்ளிப் போய் விளையாடுங்கோ, சாமி கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் என்கிறாள்.

அடக்  கறுமமே.... :shocked:
இவ்வளவு நேரமும் சாமி...  கோவணம் கட்டாமலா  இருந்து, அருளாசி வழங்கிக்  கொண்டு இருக்குது. :D:
கோவணம் கட்ட மறக்கிற அளவுக்கு, சாமிக்கு "வேலைப் பளு" அதிகம் போலுள்ளது. tw_smiley:

காலங்காத்தாலை...  தனிய இருந்து சிரிக்க வைச்சிட்டுது இந்தச் சாமி. :grin:
அருமையான, நகைச்சுவை சுவி. தொடருங்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்...சத்தியமாய்ச் சொல்லுறன்!

அடுத்த படலம் எப்ப வரும் எண்டு நினைச்சு இரவில நித்திரையும் சரியாய் வருகுதில்லை!

துருச் சாமியின்ர படம் இருந்தால் போட்டு விடுங்கோ...!

யாழ் கள உறவுகள்...எவருடையதாவது சாயல் இருக்கா என்று ஒருக்காப் பாப்பம்!

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி  தொடர்கிறது....!

6) நீதி வழங்கும் படலம்....!

நேரம் 03 :30 மணி. சாமியும் தூங்கி எழுந்து மீண்டும் முகம், கை, கால் கழுவி விபூதி பூசிக்கொண்டு வந்து மரத்தடி வாங்கில் மான்தோல் மேல் அமர்ந்திருக்கு. மறக்காமல் கோவணமும் கட்டியிருக்கு. ஆங்காங்கே இருந்தவர்கள் கிட்டவா வந்து சேர்கின்றனர். சாமியும் பல கதைகள் சொல்லி அவர்களையும் குஷிப் படுத்திக் கொண்டு தானும் குஷியாய் இருக்கு.  அப்போது கூட்டத்தில் இருந்த ராசப்பு எழுந்து சென்று தனது சயிக்கிளை சரியாக ஸ்ரான்ட் போட்டுவிட்டு அருகே நின்ற கதிரவேலுடன் கதைத்துக் கொண்டு நிக்கிறான். பிள்ளைகள் மணல் கும்பியில் சுள்ளி ஒழித்து வைத்து கீச்சு மாச்சு தாம்பளம், கீயா மாயா தாம்பளம் விளையாடுகினம்.

அப்போது அங்கிருந்த கோமளம் கணநேரமாய் மணலைக் கிளறி சேலையை உதறி எதையோ தேட, என்னடி தேடுகிறாய் என பொன்மணி கேட்கிறாள். கோமளமும் உன்னாணை ஒருத்தருக்கும் சொல்லிப் போடாத, அக்கா என்ற மோதிரத்தக் காணேல்ல. இங்கினதான்  விழுந்திருக்கும் அதுதான் தேடுறன். சரி விடு பிறகு பார்ப்பம் என்கிறாள். பொன்மணிக்கு ஆதங்கமாய்க்  கிடக்கு தன்ர வீட்டில வந்து இப்படி ஆச்சுதே என்று. சாமிக்கு பாம்புக் காது. எந்நேரமும் உசாராகவே இருக்கும். அது அடிவாங்குவதாய் இருந்தாலும் சரி, எழுந்தோடுவதாய் இருந்தாலும் சரி.  சாமி கோமளத்தைப் பார்த்து சொல்லுது, கவலையை விடு தாயே ! நீ தொலைத்தது உன்னை வந்து சேரும். என்று சொல்லிவிட்டு தனது தண்டத்தை எடுத்து சயிக்கிளை நோக்கி விட்டெறியுது. அது ராமபாணமாய் சென்று சயிக்கிளை ஒண்டரை டன்னில் ஓங்கியடிக்க சயிக்கிள் சரிந்து விழ அதன் இருக்கையின் பின் இருக்கும் தோல் பையில் இருந்து ஒரு மோதிரம் வெளியே உருண்டு ஓடுது. ராசப்பு செய்வதறியாது திகைத்து நிக்க கோமளம் ஓடிப்போய் மோதிரத்தை எடுத்துக் கொள்கிறாள்.சாமியும் ராசப்புவைக் காட்டிக் கொடுக்காமல் இதெல்லாம் எனது சித்து விளையாட்டு எண்டு சொல்லுது.எல்லோரும் துருச்சாமிக்கு அரோகரா என்று கோஷம் போடுகின்றார்கள். ராசப்புவும் அங்கிருந்தே சாமியை நன்றியுடன் பார்த்து ஒரு பெரிய கும்புடு போட்டுவிட்டு சயிக்கிளோடு வெளியே போகிறான்.

ஒரே தொழிலில் இருப்பவர்கள் ஒருபோதும் ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்தானே. அத்துடன் சாமியிடம் ஒரு குணம்  "தான் இருக்கும் இடத்தில் வேறு யாரையும் திருட விடாது". 

இந்தக் களேபரத்தில் அங்கு சூசையின் மனைவி சுலோச்சனாவும் , டீச்சர் சுவேதாவும் வருகினம். பொன்மணி ஓடிப்போய் அவர்களை கட்டிப் பிடித்து வரவேற்கிறாள். அவர்கள் மூவரும் பால்யகாலத்தில் இருந்து தோழிகள். ஒன்றாகப் படித்தவர்கள். சுலோசனா ஏழ்மை காரணமாய் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிப்பாட்டிவிட்டு தாய்க்கு உதவியாய் சந்தைக்கு மீன்  விக்கப் போய்விட்டாள். அங்குதான் சூசையுடன் லவ்வு. பலரோடும் யாவாரம் செய்வதால் அவ்வப்போது அவளது பேச்சில் ஆங்கிலமும் நொந்து நூலாகி வெளிப்படும். பொன்மணி எட்டாம் வகுப்போடு கதிரவேலுக்கு வாழ்க்கைப் பட்டு விட்டாள். சுவேதா சயிக்கிளில் டவுனுக்குப்போய் வேம்படியில் படித்து இப்ப இந்தக் கிராமத்துப் பள்ளிக்கு கூடத்தில் தலைமை ஆசிரியையாய் இருக்கிறாள். 

எடி பொண்ணு, உன்ர வீட்டுக்கு ஒரு சாமி வந்திருக்கு எண்டு கேள்விப்பட்டன், எனக்கும் ஒரு பிரச்சனை அதுதான் சுவேயையும் கூட்டிக் கொண்டு வந்தனான். என்னடி சங்கிலியில புது டாலர் தொங்குது. ஓமடி நான் கடகராசிதானே அதுதான் நண்டு டாலர். அண்டைக்கு நல்ல யாவாரம். ஒரு வெளிநாட்டில இருந்து வந்தவை என்னிடம் கடகத்துக்க இருந்த முழு நண்டையும் வாங்கிக் கொண்டு டாலர்ஸ் தந்துவிட்டு கடகத்தோடு கிராஃபி எடுத்தவை. ம்... என்னையும் எடுக்க ட்ரை பண்ணுனவை. நான் மாட்டுப்படேல்ல.

சுவேதா: என்னடி கிராஃபியோ விசர்க் கதை கதைக்கிறாய்.

சுலோசனா : ஓமடி, இந்தக் கைபேசியால முகத்தை முக்கோணமாக்கி படம் எடுப்பினமே அது.

பொன்மணி : போடி இவளே அது செல்ஃபியடி.

சுலோசனா: போங்கடி உங்களுக்குத்தான் விசர். தன்னைத்தான் எடுத்தால் செல்ஃபி . கடகத்துக்க நண்டை எடுத்தால் அது கிராஃபி.

சுவேதாவுக்கு அவளை பார்த்து பொறாமையாய் இருக்கு. அட ! வேம்படியில ஏ. எல் படித்த எனக்கு இல்லாத அறிவு மரத்தடியில அறுக்குளாவும் அயிரையும் விக்கிற இவளிட்ட கிடக்குதே என்று. 

பொன்மணி அவர்களைச் சாமியிடம் அழைத்துப் போகிறாள்.சாமியும் அவர்களை ஏறிட்டுப் பார்க்குது. பார்வையில் என்ன என்ற கேள்வி தொக்கி நிக்குது. சுலோசனா சொல்கிறாள். கும்புடுறேன் சாமி, எனக்கு ஒரு பிரச்சினை என்னண்டால் சாமி அவர் மீன் விக்கிறவர் சாமி. நாங்கள் வித்துப் போட்டு மிஞ்சுற மீனை உப்புக்கண்டம் போட்டு கருவாடு ஆக்க முத்தத்தில் காயப் போடுவம். அப்ப இந்தக் குரங்குகள் வந்து தொல்லை குடுக்குது சாமி. அதுகள் வராமல் இருக்க ஒரு வழி செய்யுங்கோ சாமி. 

சாமியும் பைக்குள் இருந்து ஒரு தேசிக்காயை எடுத்து மந்திரம் ஓதி தனது வில்லுக்கத்தியால் வெட்ட அது ரத்த நிறமாய் ஒழுகுது . அதை ஒரு இலையில் வைத்து மூடி அவளிடம் குடுத்து, இதை நீ குரங்குகள் வாற திசை பார்த்து எறிந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிடு. அப்ப பிறகு குரங்குகள் வராதா சாமி.  பின்ன வந்த குரங்குகள் வரும் (மெதுவாய் சொல்லி), வராத குரங்குக்கு எல்லாம் வாயைக் கட்டிப் போட்டன், செத்த குரங்கு சென்மத்திலும் வராது என்று சத்தமாய் சொல்லுது. சரி சாமி அப்படியே செய்கிறேன் எண்டு சொல்லிவிட்டு ரெண்டு பெரிய ரூபாய் நோட்டை பவ்யமாய் அவர் தண்டத்தில் வைத்துவிட்டு திரும்புகிறாள். அப்போது சாமியும் அவளிடம் கொஞ்சம் நில்லு பிள்ளை உதை எறியும்போது  மனசில குரங்கை மட்டும் நினைச்சுப்  போடாதயனை. ஓம் சாமி என்றுவிட்டு குரங்கையே நினைத்துக் கொண்டு போகிறாள்....!

அற்புதங்கள் தொடரும்....!

 

 

 

1 hour ago, புங்கையூரன் said:

 

Link to comment
Share on other sites

On 16.3.2017 at 5:53 PM, suvy said:

அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது. அவற்றைப் பின்பு பார்க்கலாம். 

1lsyrk.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

சுவியர்...சத்தியமாய்ச் சொல்லுறன்!

அடுத்த படலம் எப்ப வரும் எண்டு நினைச்சு இரவில நித்திரையும் சரியாய் வருகுதில்லை!

துருச் சாமியின்ர படம் இருந்தால் போட்டு விடுங்கோ...!

யாழ் கள உறவுகள்...எவருடையதாவது சாயல் இருக்கா என்று ஒருக்காப் பாப்பம்!

தொடருங்கள்!

அதுதான் ....ஜீவன் ...... போட்டிருக்கிறார்.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

ஒரே தொழிலில் இருப்பவர்கள் ஒருபோதும் ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்தானே. அத்துடன் சாமியிடம் ஒரு குணம்  "தான் இருக்கும் இடத்தில் வேறு யாரையும் திருட விடாது".

இது நீதி வழங்கும் படலத்தின்...உச்சம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியின் அற்புதங்களை நிகழத்தும் சுவி ஐயாவுக்குப் பாராட்டுகள். அறியமையையும் கள்ளமற்ற  கிராமத்து மக்களை மட்டுமல்ல எல்லோரையும் ஏய்கத்தெரிந்த சுவாமிகள் தொடர்ந்து தரிசனம் கொடுத்தவாறேயிருக்கிறார்கள். 

எழுத்துநடை நகைச்சுவை சிந்திக்க என எல்லாவற்றையும் துருச்சாமி காவிவருகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி தொடர்கிறது....!

இந்தக் களேபரத்தில் எல்லோரும் இருக்கையில் வீட்டுப் படலையை உதைத்துத் திறந்துகொண்டு பழனி தன் பெஞ்சாதி செண்பகத்தின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு கையில் அவிழும் சாரத்தையும் பற்றிக் கொண்டு உள்ளே வருகிறான். அவன் நல்ல வெறியில் வேறு இருக்கின்றான்.அவனுக்கு செண்பகத்தின் மேல் அவ்வப்போது சந்தேகம் வரும். ஏனெண்டால் அவனே "முதல் ஒருவனின் ரெண்டாம் தாரமாய் இருந்த அவளுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வந்து ப்ரமோஷன் குடுத்து முதலாவது வைப்பாட்டியாய் வீடு வாசலோடு வைத்திருக்கிறான். அவளும் அதுக்குத் தகுதியானவள்தான்.உலக அழகிகளே  உச் சுக் கொட்டும் அளவுக்கு ஓங்கு தாங்காய் இருக்கிறாள். எல்லோரும் விலகி நின்று வேடிக்கை பார்க்கினம்.

சாமியிடம் நேராக வந்து அவளை சாமியின் காலடியில் தள்ளிவிட்டு சாமி" இண்டைக்கு எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்" சாமியும் ஒருமுறை கோவணத்தைத் தொட்டுப் பார்த்து  ம்...கட்டியிருக்கிறன் என்று தனக்குள் சொல்லுது. என்ன சொல்லு. சிலநாளாய் எனக்கு இவளின் நடத்தையில் சந்தேகமாக் கிடக்கு. இவள் இல்லை என்று சொல்லுறாள்.நீ ஒருக்கால் இவளிட்ட கேட்டுச் சொல்லு. சாமி முகத்தில் சாந்தம் தவழ அவளைப் பார்க்கிறது. செண்பகமும் வலு கெஞ்சலாய் சாமியைப் பார்க்கிறாள்.அந்தப் பார்வை எப்படியாவது என்னை காப்பாத்து என்கிறது. பழனியும் விடாமல் அடியேய் இப்ப நீ சாமிமேல கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணுடி என்று கத்துகிறான். செண்பகத்துக்கு பெருத்த அவமானமாய் இருக்கு. ஒரு முடிவுக்கு வந்தவளாய் முடியை இழுத்து முடிஞ்சு கொண்டு ஆவேசமாய் எழுந்து நிக்கிறாள். பழனியைப் பார்த்து உனக்குச் சாத்தியம்தானே பண்ணவேண்டும். நாயே என்னை யாரென்று நினைத்தாய், நீ சூடத்தை ஏற்று நான் இப்ப வாறன் என்று பழநியைத் தள்ளிவிட்டு கிணத்தடிக்குப் போகிறாள். நிறைவெறியில் நிண்ட பழனியும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே இருந்த சனங்களுக்கிடையில் மல்லாந்து விழ குழந்தைகள்  சேம்... சேம் என்று காத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.சுற்றி இருந்த பெண்டுகள் எல்லாம் முகத்தைத் திருப்பி கமுக்கமாய் சிரிக்கினம்.

சாமிக்கு செண்பகம் தன்மேல் சத்தியம் பண்ணுவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று அது சுற்று முற்றும் பார்க்குது. எட்டத்தில் ஒரு சிறு பிள்ளை ஒரு சின்ன பிள்ளையார் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருக்கு. உடனே சாமி அருகில் இருந்த ஒரு பெடிச்சியைக் கூப்பிட்டு காதில் எதோ சொல்ல, அவளும் ஓடிச்சென்று அந்தப் பிள்ளையிடம் இருந்து பிள்ளையாரைப் பிடுங்கிக் கொண்டு வருகிறாள். உடனே அந்தக் குழந்தையும் " என்ர பிள்ளையாரைத் தாடி பூமணி என்று பின்னால காத்திக் கொண்டு ஓடி வருகுது. பூமணி பொம்மையை சாமியிடம் குடுக்க வந்தப்பிள்ளை சாமியின் தண்டத்தைப் பார்த்து கம்மென்று நிக்குது.

சாமி அந்தப் பிள்ளையாரை தன்னருகே வைத்து ஒரு இலையில் சூடத்தை ஏற்றிவிட்டு எழுந்து நிக்குது. நீர் ஒழுக ஈரச்சேலையுடன் அங்கங்கள் எல்லாம் அங்கும் இங்கும் குலுங்க லக லக லக என்று பத்ரகாளிபோல் வந்த செண்பகம் பழனியை முன்னால இழுத்துவிட்டு சொல்கிறாள் " நீதான் என்ர புருஷன். உன்னோடு தவிர வேறு யாரோடும் போகவில்லை" என்று ஆவேசமாய்க் கூறி வலது கையை உயர்த்தி கற்பூரத்தின் மீது ஓங்கியடித்துச் சத்தியம் செய்ய  வெலவெலத்துப் போன துருச்சாமியின் கையில் இருந்த தண்டம் எகிரிப் பிள்ளையார் மேல் விழ மண்ணில் இருந்து வந்த பிள்ளையார் நொறுங்கி மண்குவியலாய்க் கிடக்கிறார்.

எல்லோரும் பிரமித்துப் போய் செண்பகத்தைப் பார்க்கினம். தங்கள் கண்களையே தங்களால் நம்ப முடியாமல் கிடக்கு. அட இந்தப் பத்தினித் தெய்வத்தையா இவ்வளவு நாளும் நாங்கள் வாய்கூசாமல் வம்பு பேசிக்கொண்டு திரிந்தோம், தாயே மகமாயி எங்களை மன்னித்துக் கொள் என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். பழனிக்கு வெறி எல்லாம் முறுஞ்சு போச்சு. கத்துறான் என்னை மன்னிச்சுக் கொள்ளடி செண்பகம், உன்னான இனி யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டன். உன்னைச் சந்தேகப் படமாட்டன் என்று அவள் காலைக் கட்டிப் பிடித்து அரற்றுகிறான்.எல்லோரும் எட்ட  தூரமாய் விலகி நிக்கினம். சாமிக்கு கிட்ட வந்த செண்பகம் சாமியைக் கும்பிட சாமி விபூதி எடுத்து அவள் முகத்தில் அடித்து விட்டு வாங்கில் இருக்க, அவள் தனது இடது கையில் இருந்து இரண்டு ஓட்டுச் சில்லுகளை சாமியின் மடியில் விட்டெறிந்துவிட்டு , ஈர ஆடையில் நீரொழுக நெஞ்சம் விம்மித் தனிய பின்னழகுகள் சதுராட ஒய்யாரமாய் நடந்து போறாள். போகும் போது மறக்காமல் கதிரைப் பார்த்து ஒரு காமப் பார்வையும் வீசிவிட்டு போகிறாள். பொன்மணியும் அநியாயமாய் சென்பத்தையும் தன்ர புருஷனையும் சந்தேகப் பட்டுட்டேன் என்று மனதுக்குள் மருகி இன்றிரவு மனுசனுக்கு விசேஷமாய் விருந்து போடணும் என்று நினைக்கிறாள். கதிரும் கூட அசைந்தசைந்து போகும் செம்பூவை வெறித்துப் பார்க்கிறான். அவனது பார்வையும் எல்லோரையும் போல் அவள் முதுகையோ முழங்காலையோ மேயவில்லை.

சாமி தன் மடியில் செண்பகம் எறிந்த ரெண்டு ஓட்டுச் சில்லுகளையும் எடுத்துக் பார்க்குது. அதில் ஒன்றில் கதிர் என்றும் மற்றதில் சூசை என்றும் காரியால் எழுதியிருக்கு. அவள் நின்ற இடத்துக்கு சிறிது தூரத்தில் இன்னொரு சில்லு கிடக்குது.சாமி எட்டி அதை எடுத்துப்  பார்க்க அதில்  பழனி என்று எழுதிக் கிடக்கு. அப்படியென்றால் முதலே மூன்றுபேரின் பெயரையும் மூன்று ஓட்டில் எழுதிவிட்டு வரும்போது பழனி என்று எழுதிய ஓட்டைத் தவறவிட்டு மற்ற இரண்டையும் இடக்கையில் வைத்துக் கொண்டு வலது கையால்  அசத்தியம் பண்ணியிருக்கிறாள். " உன் ஓடு தவிர வேறு யார் ஓடும் போகவில்லை" சிறுக்கி மவள்.  ஆகா எனக்குச் சிஷ்யையாக வரக்கூடிய  அத்தனை தகுதியும் உனக்கு இருக்குதடி என் தங்கம். என்று சென்பகத்தைச் சிலாகிக்குது சாமியின் மனசு.

இந்த நிகழ்ச்சியை எல்லோரும் உருசையாய் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது, ஒரு குழந்தை மட்டும் "என்ர பிள்ளையாரை வாங்கித் தாடி பூமணி" என்று அழுது அடம்பிடிக்குது. மண்குவியலாய் கிடக்கும் பொம்மையைப் பார்த்து பூமணி முழுச, சாமி அந்தக் குழந்தையைப் பார்த்து உனக்கு பிள்ளையார் பொம்மைத்தானே வேணும் ,நான் செய்து தாறன் அழக்கூடாது என்று சொல்லி வாங்கில் கிடந்த மண்குவியலோடு கொஞ்சம் குறுனிக் கற்களையும் பொறுக்கிச் சேர்த்து கமண்டலத்தில் இருந்த நீரை அதன் மேல் ஊத்துது. கமண்டலத்தில் காலையில் ஊத்திய கள்ளு புளித்துப் போய்க் கிடக்கு எண்டதை சாமி மறந்துட்டுது.ஊத்தியாச்சு இனி என்ன செய்ய, பேசாமல் அதைக் கையால் குழைத்து பிசைந்து அமுக்கி அமுக்கி பிள்ளையார் செய்யுது.

குழந்தையும் அதை பார்த்து ஆர்வத்துடன் ஐ...யா... ஆ.... கள்ளுப்பிள்ளையார் எண்டு கத்துது. பக்கத்தில் இருந்த சுவேதா டீச்சர் பிள்ளையிடம் அப்படிச் சொல்லக் கூடாது. கல்லுப்பிள்ளையார் என்று சொல்ல வேண்டும். எங்க சொல்லு கல்லு ...கல்லு மேலண்ணத்தை நாக்கு தொட்டு வருட வேண்டும். சொல்லிக் கொடுக்கிறாள்.குழந்தையும் விடாமல் "ள " கள்ளுப்பிள்ளையார் என்று பாடுது. சாமியும் சுவேதாவைப் பார்த்து விடுங்கம்மா குழந்தையும் தெய்வமும் ஒன்று எப்போதும் உண்மைதான் பேசும். பெரியவர்கள் நாங்கள்தான் பொய்யும், களவும்,பித்தலாட்டமும் என்று சொல்லி அந்தப் பிள்ளையார் பொம்மையை பிள்ளையிடம் குடுக்குது. குழந்தையும் அதை வடிவாய்ப் பார்த்து, ஹை ...யோ குரங்குச்சாமி , எனக்கு இதுதான் பிடித்திருக்கு என்று குதூகலிக்குது.எல்லோரும் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்படியே அச்சு அசலாய் குரங்கு போலவே இருக்கு வால்தான் இல்லை என்று சொல்லுகினம்.பர்வதக் கிழவியும் குரங்கு எண்டு சொல்லாதையுங்கோ, அனுமார் எண்டு சொல்லுங்கோ என்கிறாள்.சாமியும் மீண்டும் அதை வாங்கி தும்பிக்கையை ஒடித்து பின்னால் ஒட்டிவிட்டு மூக்கைச் சரிபண்ணிக் குடுக்குது. எல்லோரும் சாமியைப் புகழ்ந்து துருச்சாமிக்கு  அரோகரா என்று கோஷம் போடுகிறார்கள்.

நேரம்...05 : 00 மணி.  

பொன்மணியும் சுவேதாவும் எல்லோருக்கும் சுடச்சுட தேநீரும் கருப்பட்டியும் , அவித்த மரவள்ளிக் கிழங்கும் இடித்த சாம்பலும் , உளுந்து வடையும் பரிமாறுகினம். சாமியும் அவர்களுடன் சேர்ந்து அவற்ரைப் புசித்து விட்டு, தனக்குள் அட சே இன்று முழுதும் ஒரு புகை அடிக்கேல்ல , நாக்கு நாம நாம என்குது .எங்காவது ஒரு நல்ல இடமாய்ப்  இருந்து சுருட்டு பத்தவேணும். எண்டு நினைத்து தூளிப்பையையும், தண்டத்தையும், கமண்டலத்தையும் மறக்காமல் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் நமஸ்காரம் சொல்லுது. அப்போது எல்லோருமாய் சேர்ந்து தங்களால் முடிந்தளவு சில்லறையும் தாளுமாய் பணம்சேர்த்து சாமியின் பையில் கொண்டு வந்து போடுகினம்.சின்னஞ்சிறு நகைகள் கூட அதில் இருக்கு கோமளமும் தன்ர மோதிரத்தையும் கழட்டிப் போடுகிறாள். பொன்மணி கொஞ்சம் இறைச்சிக் கறியும் பொரியலும் வடை,கிழங்கு சம்பல் முதலியனவும் வாழை இலையில் கட்டி வந்து சாமியிடம் கொடுக்கிறாள். சுவேதாவும் புருஷன் காசு தன்னிடம் தாறதில்லை என்று சொல்லி பெண்மணியிடம் நூறுரூபாய் கடனாய் வாங்கிக் குடுக்கிறாள். கதிரவேலுவும் சாமி படலையடிக்கு வர அங்கு நின்று கொண்டு சாமியின் பையுக்குள் ஒரு சாராயப் போத்தலும் பணமும் வைத்து விடுகிறார். சாமியும் தனது தண்டத்தைத் தூக்கி எல்லோரையும் ஆசிர்வதித்து விட்டு வீதியால் இறங்கி நடக்குது.....!

பாலகர் காண்டம்:  பாகம் ஒன்று முற்றும்...! tw_blush:  tw_blush:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

துருச்சாமி தொடர்கிறது....!

குழந்தையும் அதை பார்த்து ஆர்வத்துடன் ஐ...யா... ஆ.... கள்ளுப்பிள்ளையார் எண்டு கத்துது. பக்கத்தில் இருந்த சுவேதா டீச்சர் பிள்ளையிடம் அப்படிச் சொல்லக் கூடாது. கல்லுப்பிள்ளையார் என்று சொல்ல வேண்டும். எங்க சொல்லு கல்லு ...கல்லு மேலண்ணத்தை நாக்கு தொட்டு வருட வேண்டும். சொல்லிக் கொடுக்கிறாள்.குழந்தையும் விடாமல் "ள " கள்ளுப்பிள்ளையார் என்று பாடுது. சாமியும் சுவேதாவைப் பார்த்து விடுங்கம்மா குழந்தையும் தெய்வமும் ஒன்று எப்போதும் உண்மைதான் பேசும். பெரியவர்கள் நாங்கள்தான் பொய்யும், களவும்,பித்தலாட்டமும் என்று சொல்லி அந்தப் பிள்ளையார் பொம்மையை பிள்ளையிடம் குடுக்குது. குழந்தையும் அதை வடிவாய்ப் பார்த்து, ஹை ...யோ குரங்குச்சாமி , எனக்கு இதுதான் பிடித்திருக்கு என்று குதூகலிக்குது.எல்லோரும் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்படியே அச்சு அசலாய் குரங்கு போலவே இருக்கு வால்தான் இல்லை என்று சொல்லுகினம்.பர்வதக் கிழவியும் குரங்கு எண்டு சொல்லாதையுங்கோ, அனுமார் எண்டு சொல்லுங்கோ என்கிறாள்.சாமியும் மீண்டும் அதை வாங்கி தும்பிக்கையை ஒடித்து பின்னால் ஒட்டிவிட்டு மூக்கைச் சரிபண்ணிக் குடுக்குது. எல்லோரும் சாமியைப் புகழ்ந்து துருச்சாமிக்கு  அரோகரா என்று கோஷம் போடுகிறார்கள்.

பாலகர் காண்டம்:  பாகம் ஒன்று முற்றும்...! tw_blush:  tw_blush:

 

 

சுவியரவர்கள் தனதோ அல்லது தான் கண்டதையோ எழுதுகிறாரோ(?) என்ற எண்ணமே தோன்றுகிறது. ஏனெனில் இதுபோன்று மக்களின் மண்டைகளைகழுவி மிகநேர்த்தியாக ஏமாற்றி நாட்கணக்காக உழைத்த பவுண்ஸை நிமிடக்கணக்கிலே உருவிவிடும் சாமியார்களை நம்பி ஏமாறுபவர்களை காண்கின்றோம். மாயைகள் விலகாதவரை (போலி) அற்புதங்களைச் சாமிகள் நிகழ்த்துவார்கள். 

சாமிக்குத்தமாகாதவரை மகிழ்ச்சி!


அடுத்தபாககங்களையும் படைத்தருள்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எல்லா இடமும் நகைச்சுவை வழிந்தோடுகிறது. தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனா வேம்படியை இறக்கிக் கதைக்கிறதை ஏற்றுக்கொள்ளேலாது சொல்லீற்றன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா எல்லா இடமும் நகைச்சுவை வழிந்தோடுகிறது. தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனா வேம்படியை இறக்கிக் கதைக்கிறதை ஏற்றுக்கொள்ளேலாது சொல்லீற்றன் 

வேம்படி, நீங்கள் அறிவை வாங்கிய இடம். நாங்கள் ஆன்மாவைத் தொலைத்த இடம். எப்படி இறக்கிக் கதைக்க முடியும். சுண்டுக்குளி, வேம்படியைத் தவிர்த்து எமது சுயசரிதை நிறைவுறாது சகோதரி....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தல் சுவி அண்ணை தொடருங்கள்

துருச்சாமியை நினைக்கவே சிரிப்பாக இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா எல்லா இடமும் நகைச்சுவை வழிந்தோடுகிறது. தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனா வேம்படியை இறக்கிக் கதைக்கிறதை ஏற்றுக்கொள்ளேலாது சொல்லீற்றன் 

சுவியர் வேம்படி கொஸ்ரலில் நடந்தவை அன்றைய பத்திரகைகளில் வந்ததை கொஞ்சம் எடுத்து விட்டுப் பார்த்தா என்ன?

துருச்சாமி நல்லதோ கெட்டதோ விட முடியாமல் தொடர்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சுவியர் வேம்படி கொஸ்ரலில் நடந்தவை அன்றைய பத்திரகைகளில் வந்ததை கொஞ்சம் எடுத்து விட்டுப் பார்த்தா என்ன?

துருச்சாமி நல்லதோ கெட்டதோ விட முடியாமல் தொடர்கிறோம்.

பேப்பரில் போடுறதெல்லாம் உண்மையாயிடுமாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி.

சாமியுடன் ஒருநாள். நகைச்சுவை, பாகம் ....2.

வாலிபர் காண்டம்....:    + 18ல் இருந்து 70 வரை.( 70ன் மேல் ஆரோக்கியம் இருக்குதெண்டு ஆட்டம் போடக் கூடாது). 

 வாலிபர் காண்டத்தில் இரண்டு படலங்கள் மட்டுமே உண்டு....!

1)  மதுவின் போதையில் மயங்கும் படலம்.

2)  அந்தரவெளியில் ஆலிங்கணப் படலம்.

நேரம்: 05 : 20. மணி.

வீதியால் நடந்து வந்துகொண்டிருந்த சாமி குடிமனை எல்லைக்கு வந்ததும் திரும்பிப் பார்க்குது. கனபேர் பின்னால வருகினம். அவர்களை பார்த்து சாமி சொல்லுது, இனி மாலை, இரவாகப் போகுது மக்களே ! நான் இனி காடு மலை சுடலைகள் தாண்டிப் போறன். காத்து, கறுப்புகள் வரும், அதனால நீங்கள் சின்னஞ் சிறுசுகள், பிள்ளைத்தாச்சிகள், உடல் பலவீனமானவர்கள் எல்லோரும் அவரவர் வீட்டுக்குப் போங்கோ. மற்றவர்கள் வாங்கோ என்று சொல்லுது.

புகைத்தல் :   புகைத்தல் , புகைவிடும் வாகனங்கள், பிளாஸ்டிக்குகள், குப்பைகள் எரித்தல் என்பன வாயு மண்டலத்தையும், தேக மண்டலத்தையும் பாதிக்கும்....!

மது அருந்துதல் : மாதுக்கு, நாட்டுக்கு, வீட்டுக்கு, ஹார்ட்டுக்கு, ஆட்டுக்கு, கோழிக்கு கேடு.....!

1)  மதுவின் போதையில் மயங்கும் படலம்.

 சாமி தனியாக வீதியால் நடந்து வருகின்றது. தோளில் தூளிப்பையும், கைகளில் கமண்டலமும் தண்டமும் இருக்கின்றன. எல்லோரும் பின்தங்கி விடடார்கள். அப்போது எங்கிருந்தோ சயிக்கிளில் வந்த ராசப்பு சாமியைக் கண்டதும் சயிக்கிளை விட்டிறங்கி வெகு மரியாதையாய் சாமிமுன் வந்து நின்று சாமி என்னை மன்னிக்கணும், நான் புத்திகெட்டுப் போய் ..... நல்ல காலம் நீங்கள் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை என்று சொல்ல சாமியும் இடைமறித்து பரவாயில்லை ராசப்பு, திருடுவது அயோக்கியத்தனம். அதுவும் நான் இருக்கும்போது நீ திருடக் கூடாது என்று சொல்லுது. அவனும் சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு கூடவே வருகிறான். அது கிடக்கட்டும் விடு ராசப்பு, வா  அந்த நாவல் மரத்தடியில் இருந்து கதைப்பம். இருவரும் பாதையை விட்டிறங்கி அந்த வனாந்திர வெளியில் நாவல் மரத்தின் கீழ் புல்லில் இருக்கினம். அந்த இடத்துல ஆங்காங்கே பெரிய மரங்களும், தெட்டன் தெட்டனாக பனைகளும், ஈச்சம் பத்தை மற்றும் வடலிகளுமாய் கிடக்கு. சாமியும் தனது பையில் இருந்து கத்தி எடுத்து ராசப்புவிடம் குடுத்து ரெண்டு வடலி ஓலை வெட்டி இதில போடு ராசப்பு என்று சொல்லிவிட்டு அந்த சாராயபோத்தல், பொன்மணி கட்டிக்க குடுத்த பார்சல்கள் மற்றும் ஒரு மஞ்சள் பையை எடுத்து அதிலிருந்த கசிப்புப் போத்தலையும் எடுத்து ஓலையில் வைத்துவிட்டு அந்த மஞ்சள் பையை பக்கத்துப் பத்தைக்குள்  தூக்கிப் போடுது. 

ராசப்பு உன்னிடம் சுருட்டு இருக்கா !  

இருக்குது சாமி அவன் எழுந்து போய் சயிக்கிளில் இருந்த பையை எடுத்துவந்து அதில் இருந்து நல்ல கோடா போட்ட சுருட்டுக்கட்டும்,தண்ணிப் போத்தலும் ரெண்டு கிளாசும் எடுத்து வைக்கிறான். இருவரும் கிளாசில் அரைவாசிக்கு சாராயம் விட்டு மிகுதியை தண்ணீரால் நிரப்பி முகத்தைச் சுளித்துக் கொண்டு ஒரு மீடறில் குடித்து விடுகிறார்கள். சாமி அவனிடம் அஞ்சாறு சுருட்டுகளைப் பிரிக்கச் சொல்லிவிட்டு பையில் இருந்து சில இலைத் தூள்களை ஒரு டப்பியில் இருந்து பக்குவமாய் எடுத்து இடது உள்ளங் கையில் வைத்து வலதுகைப் பெருவிரலால் நன்றாகக் கசக்குது. ராசப்புவும் காப்போத்தல் சாராயத்தை சாமிக்கு வைத்துவிட்டு கசிப்பை எடுத்து அதிலும் கொஞ்சம் குடிக்கிறான். சாமி கசக்கிய கஞ்சாவை நீட்ட அவனும் பக்குவமாய் அதை வாங்கி பிரித்த சுருட்டுக்களில் அடைத்து அவற்றை மீண்டும் சுற்றி தொடையில் வைத்து கைகளால் அழுத்தி உருட்டி போயிலை நுனியை நாக்கால் தடவி ஒட்டிக் கட்டி வைக்கிறான். அப்படியும் அந்தச் சுருட்டுகள் ஒவ்வொன்றும் கன்னா பின்னாவென்று தமன்னா மாதிரி தாறு மாறாய் வீங்கிக் கிடக்கு.....!

புகையில் மிதக்கலாம்....!

 

 

 

  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசிக்கு போறதை விட சாமியோடு போறது நல்லது போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்  எழுத்து எப்பொழுதும் நகைச்சுவையும் நற்சிந்தனையும் தரவல்லது

தொடருங்கள் அண்ணா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21.3.2017 at 0:00 PM, suvy said:

துருச்சாமி  தொடர்கிறது....!

6) நீதி வழங்கும் படலம்....!

நேரம் 03 :30 மணி. சாமியும் தூங்கி எழுந்து மீண்டும் முகம், கை, கால் கழுவி விபூதி பூசிக்கொண்டு வந்து மரத்தடி வாங்கில் மான்தோல் மேல் அமர்ந்திருக்கு. மறக்காமல் கோவணமும் கட்டியிருக்கு. ஆங்காங்கே இருந்தவர்கள் கிட்டவா வந்து சேர்கின்றனர். சாமியும் பல கதைகள் சொல்லி அவர்களையும் குஷிப் படுத்திக் கொண்டு தானும் குஷியாய் இருக்கு.  அப்போது கூட்டத்தில் இருந்த ராசப்பு எழுந்து சென்று தனது சயிக்கிளை சரியாக ஸ்ரான்ட் போட்டுவிட்டு அருகே நின்ற கதிரவேலுடன் கதைத்துக் கொண்டு நிக்கிறான். பிள்ளைகள் மணல் கும்பியில் சுள்ளி ஒழித்து வைத்து கீச்சு மாச்சு தாம்பளம், கீயா மாயா தாம்பளம் விளையாடுகினம்.

அப்போது அங்கிருந்த கோமளம் கணநேரமாய் மணலைக் கிளறி சேலையை உதறி எதையோ தேட, என்னடி தேடுகிறாய் என பொன்மணி கேட்கிறாள். கோமளமும் உன்னாணை ஒருத்தருக்கும் சொல்லிப் போடாத, அக்கா என்ற மோதிரத்தக் காணேல்ல. இங்கினதான்  விழுந்திருக்கும் அதுதான் தேடுறன். சரி விடு பிறகு பார்ப்பம் என்கிறாள். பொன்மணிக்கு ஆதங்கமாய்க்  கிடக்கு தன்ர வீட்டில வந்து இப்படி ஆச்சுதே என்று. சாமிக்கு பாம்புக் காது. எந்நேரமும் உசாராகவே இருக்கும். அது அடிவாங்குவதாய் இருந்தாலும் சரி, எழுந்தோடுவதாய் இருந்தாலும் சரி.  சாமி கோமளத்தைப் பார்த்து சொல்லுது, கவலையை விடு தாயே ! நீ தொலைத்தது உன்னை வந்து சேரும். என்று சொல்லிவிட்டு தனது தண்டத்தை எடுத்து சயிக்கிளை நோக்கி விட்டெறியுது. அது ராமபாணமாய் சென்று சயிக்கிளை ஒண்டரை டன்னில் ஓங்கியடிக்க சயிக்கிள் சரிந்து விழ அதன் இருக்கையின் பின் இருக்கும் தோல் பையில் இருந்து ஒரு மோதிரம் வெளியே உருண்டு ஓடுது.

------

கோமளமும்,  கோவணமும்...  வரும் கட்டங்களை  வாசிக்கும் போது...
இரண்டும் ஒரு சொல்லு மாதிரி .... இருந்ததால்,  
கம்புயூட்டருக்கு  முன், போய்..... இரண்டு தரம் வாசிக்க வைத்த, 
சுவியருக்கு... பாராட்டுக்கள்.   நன்றாக உள்ளது, ஐயா. :D: :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுவியர்!  ஒரு சாதாரண எழுத்தாளரால் இப்படி எழுதமுடியாது. நீங்கள் ஒரு அனுபவம் மிக்க எழுத்தாளர் போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

22 hours ago, suvy said:

மது அருந்துதல் : மாதுக்கு, நாட்டுக்கு, வீட்டுக்கு, ஹார்ட்டுக்கு, ஆட்டுக்கு, கோழிக்கு கேடு.....!

என்டை  பூனை நான் என்னத்தை சாப்பிட்டாலும் அல்லது குடித்தாலும் அருகே வந்திருந்து மியாவ் என்று கத்தும். அதுக்கு நான் குடிப்பது அல்லது சாப்பிடுவது பிடிக்குமோ இல்லையோ என்ற கவலை இல்லை. தனக்கும் வேணும் என்ற பிடிவாதம்தான் இருக்கும். நானும் சரி என்று எழுந்து போய் அதன் கோப்பையில் போட்டு விடுவேன். சில சமயம் குடிக்கும், சிலசமயம் தின்னும், பலசமயங்களில் முகர்ந்து பார்த்துவிட்டு ஓடிவிடும்.

பலதடவைகள் நான் பீர் குடிக்கும்போது இப்படித்தான் வந்திருந்து கத்தும் / நானும் கொடுத்ததில்லை. ஒருநாள் ஆய்க்கினை தாங்காமல் கொஞ்சத்தை அதன் கிண்ணத்தில் ஊற்றிவிட்டேன். முகர்ந்து பார்த்துவிட்டு என்னை மேலும் கீழுமா பார்த்தது.

பின்னர் ஒரு கேவலமான பார்வையை என்மீது வீசிற்று ஓடியே போட்டுது.

// மூதேவி இதை எப்படித்தான் குடிக்கிறியோ என்று கேட்டது மாதிரி இருந்தது//

இப்பவெல்லாம் பீர் டின்னை கண்டால் கத்துவதேயில்லை.

ஆகவே சுவியர் அவர்கள் லிஸ்டில் பூனைக்கும் கேடு எண்டு குறிப்பிடாததை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். :grin:

 

அப்புறம் துருசாமி பிச்சு உதறுகிறார் / மூஞ்சி புத்தகத்திலாவது என்னையும் சிஷ்யனா இணைக்கும்படி வேண்டுகின்றேன். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி....பாகம் ..2  தொடர்கிறது...! 

சாமி தனது மேலில் போர்த்து இருந்த சால்வையை எடுத்து கீழே வைத்து விட்டு பையில் இருக்கும் சாமான்களை ஒழுங்காக அடுக்கி வைக்குது. சந்நியாசிகளின் வாழ்க்கையில் அந்தந்தப் பொருள் அந்தந்த இடங்களில் இருப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் தந்திரங்கள் மாயங்கள் செய்ய முடியும். பணத்தை ஆயிரம் ஆயிரமாய் சுருட்டி அதற்குரிய பையில் போடுது. நகைகளை அதற்குரிய பையில் வைக்குது. ராசப்புவும் சிறிது போதை ஏறிய நிலையில் கீழே பார்த்து சுருட்டையும் சுற்றிக் கொண்டு சொல்லுகிறான். சாமி நீ என்ன நினைத்தாலும் சரி, நான் வேணுமெண்டு மோதிரத்தை எடுக்கேல்ல நான் அப்பா, அம்மா மூன்றுபேர். அக்காவை நல்ல சீதனத்துடன் கட்டிக் குடுத்திட்டம். எங்கட தோட்டத்தில நான் துலா மிதிக்க அப்பு பட்டையால இறைக்க அம்மா பாத்தி கட்டுறவா. முந்தாநாள் மாச்சான்  சொன்னார் ஒரு வூல்ஸிலி மிசின் ஒன்று நல்ல மலிவா வந்திருக்கு. வேணுமெண்டால் எடு என்று சொன்னவர். மிசின் இறைத்தால் நானும் அப்புவும் பாத்தி கட்ட அம்மாவுக்கு கொஞ்சம் சுகமாய் இருக்கும். நானும் அதே யோசனையில் இருக்கும் போதுதான் மணலுக்குள்ள அந்த மோதிரத்தைக் கண்டன்.எதோ ஒரு சபலத்தில அதை எடுத்திட்டன். தப்புதான். நல்ல காலம் நீங்கள் என்னைக் காப்பாற்றிப் போட்டிங்கள் சாமி என்கிறான்.அவன் கண்கள் கலங்கி இருக்கின்றன. சாமி யோசிக்குது காலாகாலத்தில எனக்கு ஒரு மகன் இருந்தால் இந்த வயசிலதான் இருப்பான்.

சாமியும், ஒரு விவசாயிக்கு வாழ்க்கையில் என்னேரம் என்னென்ன கஷ்டம் வரும் என்று சொல்ல முடியாது.அதுக்காக திருடுறது,தற்கொலை செய்வது என்றெல்லாம் நினைக்கக் கூடாது.நீ ஒன்றுக்கும் யோசிக்காத. இந்தா இதை வைத்துக்கொள் என்று சில கட்டுக் காசும் எதோ நினைத்தாற்போல் அந்த மோதிரத்தையும் அவனிடம் குடுக்குது. அவனும் வேண்டாம் சாமி என்று முதலில் மறுத்தாலும், பின்பு வாங்கிக் கொள்கிறான். பணத்தைத் தனது பையில் பத்திரப் படுத்தி விட்டு மோதிரத்தை தனது சின்னி விரலில் போட அது வலு பொருத்தமாய் இருக்கு. 

 மேலும் ஒருகிளாஸ் பொன்னிறத் திரவம் தொண்டையில் இறங்கியதும், பொன்னிற மேனிக் கோமளம் கண்முன்னே வருகின்றாள். கோமளம் பதினெட்டு பத்தொன்பதில் திருமணம் முடித்து விட்டாள்.ஆனால் மணமாகி ஒரு வருடத்தில் ஓர்நாள் அவள் கணவன் நண்பர்களுடன் இரணைமடுவில் நீர்க்காகத்தை சுட்டுவிட்டு குளத்தில் விழுந்த காகங்களை நீந்தி எடுக்கப் போனவன்தான், பேந்து வரவில்லை. இப்ப கோமளம் பருவத்தின் வாசலில் நிக்கின்றாள். எட்டிப் பறிக்கத் தோதாய் காய்த்திருக்கும் செவ்விளனி மரம்போல. நாளைக்கு முதல் வேலையாய் அந்த மிஷினை வாங்க வேண்டும். பிறகு அப்பு ஆச்சியை கோமளத்தைப் பெண் கேட்டு அனுப்ப வேண்டும். இப்ப பங்குனி, ஆவணியில் கலியாணம் காட்டினாலும் அடுத்து வார குளிர்காலம் அம்சமாய் இருக்கும் என்று திட்டம் போட்டுக் கொண்டு நிம்மதியுடன் சாமியைப் பார்க்கிறான். சாமி வெறும் மேலுடன் இருக்குது. அதன் உடம்பு முழுதும் தழும்பாய் கிடக்கு.....!

நினைவுகள் தொடரும்....!  

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

நினைவுகள் தொடரும்....! 

சுவியர்

நாங்கள் பார்த்த விடயங்கள், ரசித்த விடயங்கள், ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்தவை, விடலைப் பருவத்தின் விளையாட்டுக்கள் என்று அனைத்தையும் மறுபடியும் எமது கண்முன்னால் நிறுத்தும்படி எழுதுவதென்பது இலகுவான விடயமில்லை. அதற்கு ஒரு அபரிமிதமான ஞாபக சக்தியும் எழுத்தாடலும் தேவை.

துருசாமியாரின் திருவிளையாடல்களை இரண்டாவது முறை வாசிக்கும்போதுதான் பலவிடயங்கள் புரிகிறது. பல இணைப்புகளும் தெரிகின்றது.

ஒரு எழுத்தாளனாக வெற்றி பெற்றுள்ளீர்கள்.

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி... பாகம் -- 2 .... தொடர்கிறது....!

சாமியின் தேகம் எங்கும் சிறிதும் பெரிதுமாய் பல தழும்புகள்.தோளில், முதுகில்,மார்பில், விலாவில் என்று. அதிலும் அந்த விலாவில்  இருபது தையலும் முதுகில் ஐந்தாறு தையலும் பெரிய காயங்கள். பார்க்க போர்புரிந்து மீண்ட வீரன்போல் இருக்கு. அவனும் இது ரொம்ப அடிபட்ட சாமி போல என நினைத்துக் கொண்டு ஏஞ்சாமி உடம்பு முழுதும் தழும்பாய் இருக்கே தேசத்துக்காகப் போரிட்டு சிறைவாசம் அனுபவித்தீர்களோ...! இந்தக் கேள்விக்கு சாமி ஒரு மர்மம் நிறைந்த புண்ணகையைப் பதிலாய்த் தருது. ஏதோதோ ஞபகங்கள் "ஆட்டொகிராஃப்" போல் வந்து போகுது. "ஒவ்வொரு தழும்பின் வலிக்குப் பின்னும் வல்லிய சுகம் தந்த ஒரு பெண் இருக்கின்றாள்" என்று எப்படிச் சொல்லும் சாமி. சாமியின் இமேஜ் என்னாவது. மீசை முளைத்த பருவத்தில் மரவேலை பழகும் காலத்தில் ஒரு பரதேசி வந்து தனக்கு ஒரு தண்டம் செய்து தரச் சொல்லிக் கேட்குது. அந்த நேரம் அங்கிருந்த பிள்ளையுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கச்சி  வந்து தடி பிடிக்க தான் சீவலிக் கூட்டால்  முன்னும் பின்னுமாய் இழுத்துச் சீவ அங்கு வந்த அவள் அண்ணன்  உளி எடுத்து முதுகில் குத்தியதில் தான் தண்டத்துடன் ஓடிப்போய் காயவார்ட்டில் ஒரு தையல் வந்து ஐந்தாறு தையல் போட்டு முப்பதுநாள் போனது.

பின் சிலகாலம் வெறுந் தண்டத்துடன் அங்கும் இங்கும் அலைந்து, எப்படியும் ஒரு தொழில் கற்க வேண்டும் என்னும் உத்வேகத்துடன் ஒரு தையல் கடையில் வேலைக்கு சேர்ந்து தைத்துக் கொண்டு வரும் காலத்தில் ஒரு பண்டாரம் வந்து தனக்கு ஒரு துணிப்பை தைத்துத் தரச்சொல்லி  ஓடர் குடுத்து அது எப்படியெல்லாம் உள்ளறைகளுடன் இருக்கவேண்டும் என்று சொல்லுறார். கடைக்காரன் பெண்டில் ஓடர் எடுத்து துணியை வெட்டி அவனிடம் தைக்கத் தருகிறாள். அவனும் அதைத் தைத்து உள்ளறை எப்படித் தைப்பது என்று அவளிடம் கேட்க அவளும் உள்ளறைக்கே கூட்டிச் சென்று விலாவாரியாய் சொல்லிக் கொண்டிருக்கும்போது அகஸ்மாத்தாய் அங்கு வந்த தையல்காரன் கண்டு கத்தரிக்கோல் எடுத்து விலாவில் வரி வரியாய் இழுத்துவிட அவசர சிகிச்சைப் பிரிவில் பிரிந்த விலாவை சேர்த்து இருப்பது தையல் போட்டு இரண்டு மாதம். இடையில் எதிர்பாராமல் அங்கு வந்த தையல்காரி நாலு தோடம்பழமும், அவன் விட்டு வந்த தண்டத்தையும், அந்த தூளிப்பையையும் குடுத்து தனது எதிர்காலத்துக்கு ஒரு கௌரவமான தொழிலையும் காட்டிப் போகிறாள். அன்றிலிருந்து இன்றுவரை தொழில் சில பல சின்ன சின்ன பிரச்சினைகளுடன் நன்றாகவே போகின்றது. 

ம்...ம்... சாமி ஒரு நீண்ட பெருமூச்சு வீட்டுக் கொண்டு அங்கிருந்த சுருட்டில் ஒன்று எடுத்து மிகப் பக்குவமாய் வருடி மூக்கின் அருகே வைத்து வலமிருந்து இடமாக முக்குத் துவாரத்துடன் சேர்த்து மூச்சிழுத்து கோடாவும் கஞ்சாவும் கலந்த மயக்கும் மணத்தை நன்றாக உள்வாங்கி நுரையீரல் நிரப்பி பின் முழுச்சுருடடையும் வாய்க்குள் விட்டு லாவகமாய் சுழட்டி எடுத்து உதட்டில் பொருத்த ராசப்புவும் ஆனைத் தீப்பெட்டியை எடுத்து குச்சி உரசி காற்றனைக்காமல் இரு கையாலும் பாதுகாத்து பவ்யமாக அதை பற்ற வைக்கின்றான். மூன்றாவது குச்சியில் சுருட்டு ஜோராய் பத்தத் தொடங்கி விட்டது. குருவிடம் பாடம் கேட்கும் சீடன் போல் அந்தக் காட்சி இருக்கு. இப்ப சாமியும் அந்தச்சுருட்டை இடது கையில் நடுவிரலுக்கும்  மோதிரவிரலுக்கும் நடுவில் வைத்து வலது கையால் பொத்தி ஆள்காட்டிவிரலும் பெருவிரலும் குழாய் போல் இருக்க அதில் இதழ் பதித்து மூக்கால் முழுக்காற்றையும் வெளியேற்றி வாயால் உள்ளிழுக்குது. இப்படியாக முதல் இழுவையில் நுரையீரல் நிரம்ப ரெண்டாவதில் முகம் உப்ப மூன்றாவதில் காரம் உச்சியில் அடிக்குது. பின் சுருட்டை நிதானமாய் ராசப்புவிடம் குடுக்குது. அவனும் வினயமாக அதை வாங்கி அதேபோல் புகையை உள்ளிழுத்து ஆளுக்கொரு பக்கமாய் திரும்பி அந்த நாவல் மரத்தில் சாய்த்து இருக்கின்றனர்.

கள்ளு : பார்க்கும்போது முகம் மலரும். பனங்கூடலில் பர்ணசாலைபோல் இருக்கும் கொட்டிலில் இறப்பில் தொங்கும் பிளாவை எடுத்து பானைத் தண்ணியில் அலம்பி பனங்குத்தியில் இருந்து முன்னால் மணலைக் கும்மியாக்கி விட்டு பொன்னன் முட்டியுடன் வந்து பன்னாடையை கோலி கள்ளை ஊத்த பன்னாடைக்குள் கட்டெறும்புகளும், கரு வண்டுகளும் தங்க, நழுவிவந்த சித்தெறும்புகளும் சிறு துகள்களையும் எட்டி ஒரு கிளுவம் இலை போட்டு தடுத்து ஊற்றுப் போல் தெளிந்து வந்த கள்ளை நுரை மீசையில் தேங்க பாதிப்பிளா குடித்து மீதிப் பிளாவை மணலில் வைத்து நிமிர அது ஒரு ஆனந்தம். வெறி ஏறினால் வேலிகள் தடவி விழுந்து எழும்பி என்றோ நடந்த சண்டைக்கு எதிர்வீட்டுக்காரியை  திட்டிக்கொண்டு....!

சாராயம்: போத்தலை பைக்குள் மூடி மறைத்து கொண்டுவரும். மேசையில் கிளாசில் வார்த்துவிட்டு அதை வெறித்துப் பார்க்கும்.இதைக் குடிக்க வேணுமா என்று நினைக்கும். பின் அதை ஒரு கையால் எடுத்து மூக்கைப் பிடித்துக் கொண்டோ அல்லது துவாயால் முகத்தை மூடிக்கொண்டோ ஒரு மூச்சில் குடித்துவிட்டு முகத்தைக் கோணலாக்கி சிலுப்பும்.வெறி ஏறினால் பார்க்கிறவனெல்லாம் எதிரியாய் தெரிவான். தெருவில் கிடக்கும் தெருநாயை எட்டி உதைக்கும்.கடியையும் வாங்கி ஏறிய கல்லுத் தேடும். பேச்சில் தூசணம் தூக்கலாய் இருக்கும். வீட்டில் அடி குடுக்கும் அல்லது மிதி வாங்கி வாசலில் கிடக்கும்....!

கஞ்சா: புகையின் சுருள்கள் போல் நினைவலைகள் சுருண்டு சுருண்டு வரும். அது ஒரு தனி உலகம். நினைப்புகளுக்கு ஏற்றாற் போல் முகத்தில் நவரசம் கூத்தாடும்.எங்கும் சமரசம் உலாவும். தாயைப் பார்த்தும் சிரிக்கும் நாயைப் பார்த்தும் சிரிக்கும்.....!

அபின் : கைதடியில் இருந்து கைலாசம் வரை அழகழகான காட்சிகள் காட்டும். 70 எம். எம். திரையில் முப்பரிமானத் தோற்றத்தில் பார்க்கும் காட்சியுடன் நாலுபேருடன் ஐந்தாவதாய் நடைபோடும். சுனாமி வந்தாலும் இடம்பெயராது.....!

அப்போது அங்கு சின்னப்புவும் சோமுவும் வந்து அருகில் அமர்கின்றனர்.....!

இன்னும் வருவினம்.....! 

 

 

 

Link to comment
Share on other sites

உண்மையை சொன்னால் இந்த  துருச்சாமி  சுவிசாமி  கதையை  வாசிக்க தொடங்கவே இல்லை. 

நேரம் எடுத்து பொறுமையாக வாசிக்கவேணும். ஆனால் இந்த கதைக்கு  கருத்து எழுதியகளது கருத்துகளை முழுமையாக வாசித்தேன்.

தொடருங்கள் சுவி அண்ணா..:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.