Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசனம் அந்தமாதிரி வந்திருக்கு.

" அத்தனை மதச்சின்னங்களும் மாட்டின் முதுகில ... ஆனால் மாட்டுக்கு ஏது மதம். மனிதனுக்கு பிடித்திருக்கு"

  • Replies 104
  • Views 15k
  • Created
  • Last Reply
On 28.3.2017 at 7:53 PM, suvy said:

வேய்ங்குழல் ஓசை அந்தக் கானகமெங்கும் தவழ்ந்து ஆச்சியர் குடிலை நிறைக்கின்றது. அத்தனை கோபியரும் செய்த வேலைகளை அப்படியே விட்டு விட்டு யமுனைத் துறைக்கு ஓடி வருகிறார்கள். தயிர் கடைந்தவர்கள் முகங்களில் தயிர் அப்பிக் கிடக்கிறது. பாதி ரவிக்கை போட்டவள் பாதி மார்பு குலுங்க வருகிறாள். ஒருத்தி ஒட்டியாணத்தை கழுத்திலும் ஆரத்தை இடையிலும் அணிந்திருக்கிறாள். யாரும் யாரையும் பார்க்கவில்லை. அலங்கோலமாய் ஓடி வருகிறார்கள்.அதுவே அலங்காரமாய்...!  பாகவதத்தின் பத்தாம் காண்டம் யுகம் கடந்து விரிகின்றது. மாயக்கண்ணன் கோபியர் ஆடைகள் மீது நின்று குழலூதுகின்றான். யமுனை நதிக்குள் நின்று கண்ணா! எங்கள் ஆடைகளைத் தா, தா கண்ணா. உங்களுக்கு என்ன வேண்டும்.என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகின்றேன்.கிருஷ்ணன் சொல்லுகின்றான்.  அனுச்சனமும் உன்னோடு பிரியாத தேக சுகம் வேண்டும். காமசுகம் வேண்டும் என்ற ஒன்றையே வேண்டுகின்றார்கள். நிர்வாணமாய் நின்றவர்கள் பரிநிர்வாணத்தை  யாசிக்கின்றார்கள். அங்கனமே ஆகட்டும். அத்தனை கோபியருக்கும் அத்தனை கண்ணகளாய்  நின்று ஆலிங்கணம் புரிகின்றான். வானில் பவுர்ணமி நிலவு. ஆகாயத்தில் தேவர்கள், அருகே பசுக் கூட்டம், தருக்களில் மந்திகள். எல்லோரும் கண்டு களிக்க, ஜீவாத்மாக்கள் பரமாத்மாவிடம் ஐக்கியமாகி யமுனைத் துறையில் ரஸக்கிரீடை நடக்கின்றது. ராஸலீலை தொடர்கின்றது....!

இங்கும் அதே நிலவு, ஆகாயத்தில் விண்மீன்கள், அதே பூமி, மரங்களில் குரங்குகள், பக்கத்தில் பசுக்கள். காலங்கள்தான் மாறிவிட்டன. காட்சிகள் மாறவில்லை. சகல அங்கங்களும் சதுரங்கம் ஆடுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திலும்  ஜெயம் அவளுக்கே. தாயக்காய்களை  உருட்டுவது அவனாயினும் அவளே சகுனியாகிறாள்.வெற்றிக் களிப்பில் கொக்கரிக்கின்றாள். முனிவன் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். இழப்பதற்கு நாடில்லை, வீடில்லை, நால்வகைச்சேனை இல்லை, நான்குசோதரர் இல்லை, நாணமிக்க மனையாளும் இல்லை அதனால் தோல்வி சுகமாகின்றது. மனசு வலிக்கவில்லை மென்மேலும் தோல்வியடைய மனம் ஏங்குகின்றது. விதி மீறல்களே இங்கு விதியாகின்றது.விசில் ஊத நடுவரும் இல்லை. கஜுவேரா சிற்பங்கள் கலவியில் திளைக்கின்றன. காமசூத்திரத்தின் ஏடுகள் பக்கம் பக்கமாய் புரள்கின்றன. "கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி வெறும் கதலித் தண்டைப் பிளந்து தவித்து தடுமாறுகின்றது. பெருந் துன்பம் போன்ற பேரின்பம்.

1md1ef.jpg

1md1hh.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 27/03/2017 at 9:34 AM, suvy said:

எப்போதும் பெருங்குடி மக்களிடம் ஆரம்பிக்கும்போது அபரிதமான பணிவும் அடக்கமும் இருக்கும்.அதை ஐ.நா சபையிலும் காண முடியாது

On 27/03/2017 at 9:34 AM, suvy said:

வையாபுரியின் கண்முன்னே ஒரு புதிய உலகம் விரிகின்றது. வானில் வெண்ணிலா, அதன் முன்னால்  வானவில் போன்ற மேடையில் அழகிய துருக்கிப் பெண்கள் பெல்லி டான்ஸ் ஆடுகின்றார்கள்.

On 29/03/2017 at 1:23 AM, suvy said:

வாலிபர், வயோதிபர், ஒருதாரம், இருதாரம்,பலதாரம், வைப்பு, சொப்பு,கீப்பு, எல்லோரும் அமைதியாய் வரவும்.(வயோதிபர்களுக்கு வயாகரா இலவசம்).

On 29/03/2017 at 1:23 AM, suvy said:

நடுவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம், திருமால் தங்கையின் கை பிடித்துக் கொடுக்க  பெருமான் கைத்தலம் பற்றும் காட்சி. வலது பக்கம் முருகப் பெருமான் கோவணத்துடன் தண்டு கொண்டு நிக்க பாட்டி பக்கத்தில், அடுத்து தெய்வேந்திரன் இரு தேவமகளிரை இரு தொடைகளிலும் இருத்தி இடையை வளைத்து அணைத்துக் கொண்டு. இடது பக்கம் குறுமுனியும் கமண்டலத்தை கவிழ்க்கும் காகமாய் கணபதியும்.அடுத்து நரசிங்கமூர்த்தி மடியில்  ஸ்ரீ தேவி இருக்க கீழே கும்பிட்ட நிலையில் பிரகலாதன். அடுத்து குருந்த நிழலில் தட்ஷணா மூர்த்தியும் சீடர்களாக சனகாதி முனிவர்கள். அடுத்து  சந்திரனும் ரோகிணியும் சல்லாபித்த நிலையில். எல்லாம் கதை சொல்லும் சிற்பங்கள். அவற்றை வடித்த சிற்பிகளை வியந்து போற்றியபடி சாமி துரவுக்கு நடந்து போகின்றது.

 ஐயா வாசிச்சு வயிறு நோகிறது.....முழுதும் வாசித்த பின்பு எழுதுவோம் என்றிருந்தேன்....ஆனால் முடியவில்லை ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி.... பாகம்... 2....தொடர்கின்றது....! 

நேரம் 11 : 40....!

அதே நேரம் கோயிலுக்குள் இருந்து சங்கிலிக்கருப்பு சாமி  எழுந்து சோம்பல் முறித்து மேலே சுவரில் இருந்த டிஜிட்டல்  கடிகாரத்தைப் பார்க்குது. (யாரோ கருப்புக்கு அன்பளிப்பு செய்தது).அது மணி 23 :40 காட்டுது. வழக்கமாய் வெளியே வந்து வானத்தைப் பார்த்துதான் நேரத்தைக்  கணிக்கும், இப்ப கோயிலுக்குள்ளேயே பார்க்குது. சரி இனி ஊர்க்காவலுக்கு கிளம்பு வேண்டியதுதான் என்று பலிபீடத்தில் கிடந்த சங்கிலியையும் எடுத்துக் கொன்டு  அந்தப் பிரமாண்டமான கோயில் கதவை சங்கிலியை சுழட்டி வீசித் திறக்குது. அந்தப் பெரிய மரக் கதவில் ஒன்றில் அனுமாரும்  மற்றதில் காளிங்க நர்த்தனமும் பொழி சிற்பங்களாய் பார்க்கப் பயமூட்டுபவையாய் இருக்கின்றன. கருப்பு வெளியே கம்பீரமாய் வருகுது. அது ஒருநாளும் முன் வைத்த காலைப் பின்வைத்ததில்லை. அங்கன நின்ற நாய்கள் வாலால் மானத்தை பொத்திக் கொண்டு ஓட, மாடுகள் வாலைக் கிளப்பிக் கொண்டு ஓடுகின்றன. 

சயிக்கிளில் வேக வேகமாய் வந்த மாறன் துரவுச் சரிவில் அந்த பிரேக் இல்லாத சயிக்கிளை விழுத்தி விட்டு மோகனாவைத் தேடுகின்றான். மெல்லமாய் மோகனா ...மோகனா என்று கூப்பிடுகிறான். அவன் விழுந்த இடத்தில் சிதரிக் கிடந்த மல்லிகை நாறுது, கள்ளு மணக்குது. அவனும் அதிலே விழுந்ததால் சரஞ் சேட்டும் நாறுது. இவளை நான் இந்த நேரத்துக்கு இங்கு வரச் சொல்லி இருக்கக் கூடாதோ, மனம் பதறுது. ஒருவேளை மடத்தில் இருப்பாளோ என்று மடத்துப் பக்கம் போய் பார்க்கிறான். அங்கு யாரோ ஒரு பரதேசி சுகமாய் குறட் டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கு. மீண்டும் துரவுக்கு வருகின்றான். தூரத்தில் சங்கிலி நிலத்தில் உராய்ந்து  வரும் சத்தம். ம்... கருப்பு காவலுக்கு வெளிக்கிட்டுது போல. இனி இங்கு இருக்கக் கூடாது என்று மெதுவாய் மோகனா மோகனா என்று கூப்பிடுகிறான்.  

 கருப்பு வெளியே வர தூரத்தில் மோகனா என்று அழைக்கும் சத்தம் கேட்டு கருப்பும் குஷியாகுது. ம்... மோகினி இங்கு வருகிறாளா வரட்டும் வரட்டும் " நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே" என்று நினைத்துக் கொண்டே சந்திக்கு வருகுது. அதுக்கு தெரியும், தினமும் அவ்வழியால் போகிறவர்கள் தனக்கு ஏதாவது வைத்து விட்டுப் போவார்கள் என்று. அங்கிருந்த சுருட்டையும் சாராயத்தையும் கையில் எடுத்து, சாராயத்தை மூடியைத் திறக்காமலே பார்க்க போத்தல் காலியாகுது. சுருட்டை வாயில் வைத்து ஒரு சொடக்குப் போட அது பத்தி விட்டது. தேங்காய் சில்லை வாயில் வைத்து சப்புது. மோகனா என்னும் சத்தம் கேட்க கடவாயில் இருந்து  பாலும் ஜொள்ளும் சேர்ந்து வழியுது.  தூரத்தில் யாரோ மரம் அரியும் ஓசை மெல்லிசாய் கேட்குது.

மாறனும் மோகனாவைக் காணாது அவசரமாக சயிக்கிளை எடுத்துக் கொண்டு போக, சயிக்கிள் பின் சீற்றோடு  கொழுவிக் கொண்டு சாமியின் கோவணமும் போகுது. தூரத்தில் இரண்டு பேர் நடந்து போவதைப் பார்த்த மாறனும் வேகமாய் பெடலை மிதித்துக் கொண்டு அருகில் போய் காலால் பிரேக் பிடித்துப் பார்க்க அது மோகனாவும் செண்பகமும். சற்று தொலைவில் சின்ராசின் வண்டில் லாம்பு வெளிச்சத்தோடு ஆடி அசைந்து கொண்டு வருகுது. அப்படியே காலை நிலத்தை ஊன்றி நிண்டுகொன்டு மோகனாவை முன் பாரிலும், செண்பகத்தை பின் காரியரிலும் ஏற்றிக் கொண்டு போகிறான். மோகனாவும் கருப்புக்கு கற்பூரம் ஏற்றியதில் இருந்து சாமி தோன்றி பணமும் நகையும் தந்துவரை ஒரு பரவசத்துடன் சொல்லுகிறாள். மாறன் மூளையில் எதுவும் ஏறவில்லை. சயிக்கிள் மிதிக்கும் போது கால்கள் அவளின் பின்னழகிலும் முன் தொடைகளிலும் உரசிக் கொண்டிருக்கு. அவள் தலையில் இருந்து வரும் கசங்காத மல்லிலிகையின் வாசம் அவன் நாசியை வருடிச் செல்கிறது. பின்னால் இருக்கும் செண்பகமும் வலது கையால் அவன் இடுப்பை வளைத்துப் பிடித்திருக்கின்றாள். மாறன் ஒரு மார்க்கமாய் மிதிக்கிறான். 

பின்னால் இருக்கும் செண்பகத்துக்கு அவன் ஆடையில் இருந்து வரும் கள்ளு மணம் நாறுது. சாமியும் போட்டுது. நாங்களும் வெளிக்கிட்டுட்டம்.  பிறகு இவர் போய் அந்த மண்ணுக்குள்ளே விழுந்து எழும்பி வாறார் போல என்று நினைக்கிறாள். இப்ப அவளது தேகத்தில் அதிர்வுகள் நீங்கி வியர்வை முத்து முத்தாய் பூத்திருக்கு. முந்தானையை எடுத்து கழுத்தைத் துடைத்து பின் முகத்தைத் துடைக்க " உவ்வேக்" என்று அலறி கைகளை வேகமாய் உதற அந்தக் கோவணம் பறந்து போய் எதிரில் வந்த மாட்டு வண்டிலின் நுகத்தில் கொழுவிக் கொண்டு மடத்துப் பக்கம் சவாரி போகுது. அவள் மறு கை உதறிய வேகத்தில் முன் சீட்டில் அடிபட மயக்கத்தில் வந்த மாறனும்  "ம்மா" என்று அலறி சயிக்கிலும் பாதை தவறி பின் நேராய் போகுது. 

மடத்தில் சாமியும் பையைத் தலைக்குள் வைத்து தண்டத்தைக் கையில் பிடித்துக் கொண்டு ஆனந்த சயனம் கொள்ளுது. குறட்டைச் சத்தம்  சேத்துழவு செய்யும் டிராக்டர் போல் பெரிதாய் கேட்குது. சந்தியில் நின்ற கருப்பு நின்டு யோசிக்குது. இந்த நேரத்தில் யாராய் இருக்கும். கள்ளும் மணக்குது, மல்லிகையும் மணக்குது. முனியோ அல்லது மோகினியோ என்று நினைக்கும்போது, தூரத்தில் ஒரு நாய் ஊளையிடுகின்றது. அதைத் தொடர்ந்து மேலும் பல நாய்கள் கோரஸாய் ஊளையிடுகின்றன. கருப்பு கன்போர்ம் பண்ணிட்டுது, வருவது பைரவன்தான். எதுக்கும்  இண்டைக்கு வெளியே போக வேண்டாம், உள்ளே போய் இருப்பம் என்டு  சங்கிலி சத்தம் எழுப்பாதபடி  தூக்கிக் கொண்டு பின்னால் நடந்துபோய் அனுமார் கதவைத் திறந்து ஒருக்களித்த கதவுக்குள்ளால வீதியைப் பார்த்துக் கொண்டு குந்தி இருக்கு. நேரம் 23 :59....!

அந்த நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு துருச்சாமியின் குறட்டை ஒலி அந்த வனாந்தரமெங்கும் எதிரொலிக்குது. 

சுபம்.

நூற்பயன் :   

துருச்சாமியின் ஒருநாள் திருவிளையாடலை 

உடனிருந்து பார்த்தவரும் பிறர் சொல்லக் கேட்டவரும் 

இணையத்தில் படித்து இன்புற்றவரும் 

இஷ்டமுடன் நினைந்துருக 

ஆதவன் சக்தியில் ஓடும் காரும் 

ஆப்பிள் போனும் அழகிய மடிக் 

கணணியும், பேஸ்புக்கில் வாட்ஸப்பில் 

எண்ணற்ற விருப்புகளும் வந்து கூடும் காண்....!

துருச்சாமி வாலிபர் காண்டம் பாகம் ....2... முற்றும்....!

கண்டது கேட்டது பார்த்தது படித்தது தவிர யாவும் கற்பனை...!

யாழ் இணையம் 19 அகவைக்காக,

ஆக்கம் சுவி.....! 

 

 

 

 

20 hours ago, suvy said:

அவன் வண்டியில் தூங்கினால் கூட அந்த மாடு அந்தந்த நேரத்துக்கு அந்தந்த இடத்துக்கு போய் நிக்கும் சின்ராசு வியாபாரத்தைக் கவனிப்பான்.

நம்ம ஊரிலையும் இப்படி ஒருவர் + அவரின் மாடுகள் + வண்டில்.

மாட்டையும் வண்டிலையும் காணேல்ல எண்டு யாரும் தேடுவதில்லை. அது தானாக சிங்கனின் சிங்கி வீட்டிற்கு போய் கொல்லை பக்கத்தில பார்க் பண்ணீற்று நிக்குமாம். :grin: 

19 minutes ago, suvy said:

சுபம்.

ஆமா இவர் இப்ப யாரை கேட்டு சுபம் போட்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா இந்தக்கதையை நீங்கள்தான் எழுதினீர்கள் என்று நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளும் பயங்கர அவையடக்கமாக இருந்துவிட்டு இப்போது பயங்கர அட்டகாசமாக.... இனிமேல் அப்பாவிகளையெல்லாம் நம்பக்கூடாது. சாண்டில்யனும் தோத்துப்போனான். இந்தச் துருச்சாமியாலேயே உங்களால் வாசகர்களைக் களேபரப்படுத்தமுடிகிறதென்றால் நீங்கள் மட்டும் நாவல் எழுதினால்....... யாழ் தாங்காது.eTMkB58Ac.gif

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ள சுபம் போட்டு விட்டியளே ச்ச இன்னும் எதிர்பார்த்தேன் சாமியின் லீலைகள் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையண்ணா..

இதை  நீங்கள் விரைவாக முடிக்கணும் என எதிர்பார்த்தேன்

காரணம் இது போன்ற  தொடர்களை  எழுதும் நாட்களில் ஒருவித மன  நடுக்கம்தொற்றிக்கொள்ளும்

அதை நீடித்தல்  உங்கள்  உடலுக்கு நல்லதல்ல.

 

2 hours ago, வல்வை சகாறா said:

சுவியண்ணா இந்தக்கதையை நீங்கள்தான் எழுதினீர்கள் என்று நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளும் பயங்கர அவையடக்கமாக இருந்துவிட்டு இப்போது பயங்கர அட்டகாசமாக.... இனிமேல் அப்பாவிகளையெல்லாம் நம்பக்கூடாது. சாண்டில்யனும் தோத்துப்போனான். இந்தச் துருச்சாமியாலேயே உங்களால் வாசகர்களைக் களேபரப்படுத்தமுடிகிறதென்றால் நீங்கள் மட்டும் நாவல் எழுதினால்....... யாழ் தாங்காது.eTMkB58Ac.gif

கதையைப்பற்றி  நான்  எழுதுவதை விடஇதோ  சகாரா..

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா என்ன இது ஒரு அருமையான நாவலை இப்பிடி சடாரென்று முடித்துவிட்டீர்களே.  சாண்டில்யனின் நாவலைப் போல இருந்தது. என்ன அருமையான வர்ணனை சொல்லி வேலையில்லை.

3 hours ago, வல்வை சகாறா said:

சுவியண்ணா இந்தக்கதையை நீங்கள்தான் எழுதினீர்கள் என்று நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளும் பயங்கர அவையடக்கமாக இருந்துவிட்டு இப்போது பயங்கர அட்டகாசமாக.... இனிமேல் அப்பாவிகளையெல்லாம் நம்பக்கூடாது.

பின்ன மண்டபத்தில யாரோ எழுதினதை கொண்டு வந்தாரா:grin:

உங்களுக்கு இது புதுமையாக இருக்கலாம், ஆனால் சுவியருக்கு யாழ் களத்தின் அவைப்புலவர் என்ற பட்டத்தை கொடுத்து சில வருடமாக அவரை செல்லமாக சீண்டிக்கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம் இல்லை.

அவருக்குள் எதோ ஒண்டு இருக்கு எண்டு தெரியும் 

ஆனால் அது இதுதான் எண்டு இப்பதான் தெரிந்தது.:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையண்ணா. ஆனாலும் இப்பிடி முடித்திருக்கக் கூடாது. நான் ஒண்டும் சொல்லாமல் விட்டிருக்கலாம் எண்டு இருக்கண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையண்ணா. ஆனாலும் இப்பிடி முடித்திருக்கக் கூடாது. நான் ஒண்டும் சொல்லாமல் விட்டிருக்கலாம் எண்டு இருக்கண்ணா.

அட கடவுளே...! அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது சகோதரி. நான் இந்தக் கதையை எழுதிக் கொண்டு வரும்போது எந்தவிதமான (காம்ரமைசும்) சமரசமும் செய்யவில்லை. அதுதான் உண்மை. நீங்கள் இந்தக் கதையை ஆரம்பத்தில் இருந்து வாசித்து பின்நூட்டங்களும் விருப்புகளும் போட்டுள்ளீர்கள். அவற்றை ரசித்துக் கொண்டு வந்த எனக்கு,  உங்களுக்கு ஒவ்வாத ஒரு கருத்தை சொல்லும்போது நான் எப்படி வருத்தப் பட முடியும்.  இந்தக் கதையில் சாமியுடன் ஒருநாளை நேர ரீதியாய் சொல்லிக் கொண்டு வந்திருக்கின்றேன்,எனக்கும் கவலைதான் ஒரு நாளுக்கு 24 மணித்தியாலம் என்பதில்.....! நான் பிறகுதான் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றிருந்தேன்.உங்களின் கருத்தைப் பார்த்ததும் இதை எழுதுகின்றேன்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சின்ராசு, மாறன், மோகனா, கருப்பு எல்லாரையும் வைத்து இன்னும் "கலாதியாக"?? கதையைக் கொண்டுபோவீர்கள் என்று பார்த்தால் சுபம் போட்டு முடித்துவிட்டீர்களே சுவியர்☹️

பாவம் அவைப்புலவர்

அருமையான கதையை எழுதிய பின்னர் ஆளாளுக்கு கேள்வி கேட்க ரியாக்சன் இப்படி இருக்குமோ :grin:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/03/2017 at 9:34 AM, suvy said:

 

On 27/03/2017 at 9:34 AM, suvy said:

 

On 29/03/2017 at 1:23 AM, suvy said:

 

On 29/03/2017 at 1:23 AM, suvy said:

 

என்ன ஐயா கதையை படக்கென்று முடிச்சிட்டியள்....

கதை சூப்பர் குருஜி! :96_ok_hand:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனிடம் கதைத்த போது பத்து வார்த்தைக்கு ஒரு தடவை சுவி அண்ணையை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்.அதன் காரணம் இப்போது புரிகின்றது. இவ்வளவு காலமும் எங்கே இருந்தாய் தலைவா

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பல நாட்களாக புன் சிரிப்புடன் சுவியரின் கதையை வாசிக்க முடிந்தது.

பொலிவூட்டிலிருந்து ஒரு கோஸ்டி ஒன்று யார் இந்த சுவி என்று தேடி ஐரோப்பா முழுவதும் அலைவதாக ஒரு கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் ...ஒரு நல்ல படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது...ஒரு சுவாரசியமான கட்டத்தில்...படம் டக்கெண்டு முடிஞ்சு போன மாதிரி...ஒரு பீலிங்க்!

கடைசி...அந்தச் சங்கிலிக் கருப்பனாவது...சாமிக்குச் சங்கிலியாலஇரண்டு தட்டாவது...தட்டியிருக்க வேண்டும்!

வில்லன் தண்டிக்கப்படாமல்..படம் முடிவது...எமது கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒன்று!

நம்பியாரும்...அசோகனும்...சிறைக்குப் போகாமல்...எம்.ஜி.ஆர்..படங்கள் எப்போதாவது முடிந்தது உண்டா?

என்றாலும்...முடிவு எனக்குப் பிடித்திருக்கின்றது!

ஏனெனில்....எங்கள் எல்லோருக்குள்ளும்....ஒரு துருச்சாமி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்!

சந்தர்ப்ப சூழ்நிலைகள்....சமூக வலை...என்பன எம்மைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்று நினைக்கிறேன்!

அடுத்த கதை....எப்போது தொடங்குகின்றது?

4 hours ago, புங்கையூரன் said:

சுவியர் ...ஒரு நல்ல படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது...ஒரு சுவாரசியமான கட்டத்தில்...படம் டக்கெண்டு முடிஞ்சு போன மாதிரி...ஒரு பீலிங்க்!

யு மீன் கொழும்பு கோட்டைக்கு டிக்கெட் எடுத்துவிட்டு மருதானையில குதிச்ச பீலிங்.:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

யு மீன் கொழும்பு கோட்டைக்கு டிக்கெட் எடுத்துவிட்டு மருதானையில குதிச்ச பீலிங்.:grin:

 

இல்லை..ஜீவன்!

படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது .. இடைவேளைக்குப் பதிலாய் 'சுபம்' வந்த மாதிரி....!  

:cool:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/03/2017 at 3:44 PM, ஈழப்பிரியன் said:

சாமி படுக்குது இருக்குது வருகுது என்று பெரிய சாமி குத்தமாக போவுது.
தொடருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஈழப்பிரியன்.... சாமியை பவ்யமாக அப்படித்தான் அழைக்க வேண்டி இருக்கு....!  tw_blush:

On 16/03/2017 at 5:56 PM, ஜீவன் சிவா said:

1lj3gr.jpg

 

ஆல் ஓவர்.....! நன்றி ஜீவன்....!

On 16/03/2017 at 6:18 PM, வல்வை சகாறா said:

நானும் தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சுப்போட்டு பனங்காட்டுவழியாகவும் தோட்டத்திற்குள்ளாலயும் வரேக்க பனம்பழங்களையும் மரக்கறி முருங்கைக்காய் எல்லாம் பதுக்கிக் கொண்டு போகப்போறார் ஆக்கும் என்று நினைச்சன்.......உண்மையிலேயே சாமிகுத்தமாப்போப்போகுதுtw_anguished:

சரியா கண்டு பிடிச்சிட்டிங்கள் சகோதரி, எழுத்தாளர் இல்லையா.நன்றி வருகைக்கும் கருத்துக்கும்....!  tw_blush:

On 17/03/2017 at 0:48 AM, குமாரசாமி said:

துருச்சாமி!
பயமாய் இருக்கப்பா...:grin:
தொடருவோம்...:cool:

அது பாவம் ரொம்ப நல்ல சாமி கு. சா......!  tw_blush:

On 17/03/2017 at 2:47 AM, நந்தன் said:

இந்தாள் சுச்சி லீக்க்சுக்கு  அலையுது

அதே....அதே....! நன்றி நந்தன் வருகைக்கும் கருத்துக்கும்.....!tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/03/2017 at 3:57 PM, ஈழப்பிரியன் said:

 

துருச்சாமியின் நடவடிக்கைகள் நல்லதா தெரியலை.

அதுதானே.... எனக்கும் அப்போது சரியாய் தெரியவில்லை ஈழப்பிரியன்.... tw_blush:

On 17/03/2017 at 7:57 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für old model rubber horn  

சுவி... குறிப்பிட்ட   "மீன் கோன்"  :grin:

சுவியரின்.... ஆறு காண்டங்களில், 
முதல் வந்த மூன்று காண்டத்தை, நேற்று வாசித்து விட்ட போதும்.... 
அடுத்த காண்டத்தையும், வாசித்து விட்டு...  பதில் சொல்வோம் என்று, ஆற முதல்....
அடுத்த காண்டம், இவ்வளவு கெதியில் வந்ததற்கு, முதல் நன்றி.

//சாமியும் அந்தக் குழந்தையின் குஞ்சை பாசத்துடன் தடவிக் கொண்டே அதன் காதில் மெல்ல குஞ்சிதபாதம்... குஞ்சிதபாதம்...குஞ்சிதபாதம் என்று மூன்று முறை சொல்லிவிட்டு கையை ஆகாயத்தில் ஆட்டி ஒரு சங்கிலி எடுத்து அதன் கழுத்தில் போட எல்லோரும் வியக்கின்றார்கள்.//    சுவியர்  கதையை... கொண்டு போன இடத்தில் வந்த, Turning பாயிண்டு இதுதான்..... tw_smiley: :grin: :D:

இரண்டு காண்டங்களிலிலும்... நாம் மறந்த,  யாழ்ப்பாண சொல்லாடலை கையாண்டு இருப்பது, என்னை  அந்தப்  பதிவுடன், ஒன்று போகச்  செய்தது சிறப்பு. இது பிரதேச வாதம் அல்ல. இப்படியான பிறந்த பிரதேத்து  எழுத்து நடையில்...  ரதி, ராஜவன்னியன்,   முனிவர் ஜீ, அக்கினியஷ்த்திரா, புரட்சிகர தமிழ்தேசியன் போன்ற நண்பர்கள் எழுதியிருந்தாலும்  விரும்பி  வாசித்திருப்பேன். அழகிய  தமிழை....  எந்த பிரதேசத்தில் இருந்து  கேட்டாலும்,  இனிமையே..... :)

சிறியர் நீங்கள் இப்படி ரசிச்சு  வாசித்து கருத்திடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கு....!tw_blush:

On 17/03/2017 at 8:46 PM, நிழலி said:

உந்த துருச்சாமிக்கு சீடனாக போக ஆசை. வழி சொல்லுங்கோ சுவி அண்ணா

அது ஒண்டும் பெரிய காரியமில்லை நிழலி... எல்லோருக்குள்ளும் துருச்சாமி கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்....! tw_blush: 

On 18/03/2017 at 2:40 AM, புங்கையூரன் said:

சுவியர் ...இந்த இடத்தில தான்...நீங்கள் அடையாளம் பதித்திருக்கின்றீர்கள்!

வாசிக்க மிகவும் நன்றாக...இயல்பாக உள்ளது!

தொடருங்கள்!

நன்றி புங்கை....!  tw_blush:

On 18/03/2017 at 3:00 AM, நிலாமதி said:

கேலியும் கிண்டலும் மறைமுக  இரடடை அர்த்தங்களுடனும்   யாழ் கள மன்னர்களுக்கு ஆனந்தமாய் போகிறது தொடர்.  நல்ல  கதை சொல்லும்  திறமை இதனை நாளாய் எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்  i பாராட்டுக்கள் 

நன்றி சகோதரி....., ஒரு பலகாரத்தை வீட்டுக்கு செய்தால் அங்கங்க விண்டு விண்டு சாப்பிடலாம். அதையே விருந்தினருக்கு பரிமாறவேண்டும் என்றால் சிறிது அழகூட்டுதல் அவசியமாகின்றது.....!  tw_blush:

On 18/03/2017 at 4:29 PM, ஜீவன் சிவா said:

1lnf9o.jpg

 

நிஜமாகவே உங்களது படங்களும் சுவையான கருத்துக்களும்தான் என்னையும் ரசித்து எழுத வைக்குது ஜீவன்....!  tw_blush:

On 20/03/2017 at 3:02 PM, ஜீவன் சிவா said:

ஆமா சுவியர் 
இந்த துருச்சாமி இப்படித்தானே இருப்பார்  

images.jpg

யெஸ் ..... நீங்கள் கற்பூரம்....!  tw_blush:

 

On 20/03/2017 at 5:21 PM, முனிவர் ஜீ said:

ஹாஹாஹா  பேச்சு  மொழியில் சூப்பரா இருக்கிறது சுவி அண்ணை 

தொடரட்டும்   இந்த சாமி மார் எல்லாம் காக்கா நிற்கபனம் பழம் விழுந்த கதைதான் 

நன்றி தமிழ் சிறி அண்ணை நினைவு கூர்ந்தமைக்கு 

நன்றி முனிவர் வருகைக்கும் கருத்துக்கும் ....! tw_blush:

 

On 19/03/2017 at 3:12 PM, ஈழப்பிரியன் said:

சுவியர் நம்மியிருந்த துருச்சாமி கள்ளச்சாமியாகிட்டுதே.

நன்றாக இருக்கிறது தொடருங்கள்.

 இப்போது கதையை படித்து முடித்திருப்பீர்கள். சாமி நிறைய வள்ளலலாகவும் இருந்திருக்கே .....!tw_blush:

On 19/03/2017 at 6:38 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுவியண்ணா எங்கேயண்ணா இத்தனைநாள் இருந்தியள். தொடருங்கள் அண்ணா.

உங்களையும், உங்களை போன்ற பல எழுத்தாளர்களையும் கவனித்துக் கொண்டிருந்தேன்....!  tw_blush:

On 20/03/2017 at 5:48 PM, ஈழப்பிரியன் said:

சுவியர்
இளையராஜா மாதிரி இப்பவே காப்பிரைட் எடுத்து வையுங்க.கதையைப் பார்த்தா ஒரு திரைப் படத்திற்கு ஏற்ற கதை போலவே போகிறது.

தொடருங்கள்.

 நன்றி ஈழப்பிரியன் சாமி உங்களை நன்றாக கவர்ந்திருக்கு போல.......! :100_pray:  tw_blush:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/03/2017 at 7:45 PM, ரதி said:

சுவியண்ணா எங்கேயண்ணா இவ்வளவு நாளும் உங்கள் எழுத்தற்றலை ஒளித்து வைத்தனீங்கள்?...நீங்கள் சரியான பேய்க்காய்:cool:...யாழுக்கு பிறந்த நாள் என்டவுடன் எல்லோரும் போட்டிtw_cookie: போட்டுக் கொண்டு எழுதுகிறதைப் பார்க்க அழுகை,அழுகையாய் வருகுது.tw_cry:

நன்றி சகோதரி.... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.... எல்லாம் மயிலைப் பார்த்து வான்கோழி ஆடிய கதைதான்....!  tw_blush:

On 21/03/2017 at 5:03 AM, தமிழ் சிறி said:

அடக்  கறுமமே.... :shocked:
இவ்வளவு நேரமும் சாமி...  கோவணம் கட்டாமலா  இருந்து, அருளாசி வழங்கிக்  கொண்டு இருக்குது. :D:
கோவணம் கட்ட மறக்கிற அளவுக்கு, சாமிக்கு "வேலைப் பளு" அதிகம் போலுள்ளது. tw_smiley:

காலங்காத்தாலை...  தனிய இருந்து சிரிக்க வைச்சிட்டுது இந்தச் சாமி. :grin:
அருமையான, நகைச்சுவை சுவி. தொடருங்கள்.:)

உண்மைதான் சிறியர்...., சாமியாராய் அவதாரம் எடுத்தாலே வேலைப்பளுவும் கூடிவிடும்தானே ....!  tw_blush:

On 21/03/2017 at 10:44 AM, புங்கையூரன் said:

சுவியர்...சத்தியமாய்ச் சொல்லுறன்!

அடுத்த படலம் எப்ப வரும் எண்டு நினைச்சு இரவில நித்திரையும் சரியாய் வருகுதில்லை!

துருச் சாமியின்ர படம் இருந்தால் போட்டு விடுங்கோ...!

யாழ் கள உறவுகள்...எவருடையதாவது சாயல் இருக்கா என்று ஒருக்காப் பாப்பம்!

தொடருங்கள்!

உங்களின் கருத்தை வாசிக்க மகிழ்ச்சியாய் இருக்கு புங்கை.உண்மையில் இது ஒரு கன்னி முயற்சியே, யாழ் இஸ் கிரேட்....!   tw_blush:

On 21/03/2017 at 0:51 PM, ஜீவன் சிவா said:

1lsyrk.jpg

நிஜமாகவே இப் படத்தைப் பார்த்ததும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன் ஜீவன். சுசி லீக்ஸ்சும், சுவி லீக்ஸும்  சூப்பர்......!  tw_blush:

On 21/03/2017 at 11:06 PM, புங்கையூரன் said:

இது நீதி வழங்கும் படலத்தின்...உச்சம்!

நன்றி புங்கை .....!  tw_blush:

On 22/03/2017 at 9:28 AM, nochchi said:

சாமியின் அற்புதங்களை நிகழத்தும் சுவி ஐயாவுக்குப் பாராட்டுகள். அறியமையையும் கள்ளமற்ற  கிராமத்து மக்களை மட்டுமல்ல எல்லோரையும் ஏய்கத்தெரிந்த சுவாமிகள் தொடர்ந்து தரிசனம் கொடுத்தவாறேயிருக்கிறார்கள். 

எழுத்துநடை நகைச்சுவை சிந்திக்க என எல்லாவற்றையும் துருச்சாமி காவிவருகிறார்.

உள்ள சாமிகளுக்குள் துருச்சாமி  கொஞ்சம் பரவாயில்லை நொச்சி .....!  tw_blush:

On 22/03/2017 at 2:28 PM, nochchi said:

சுவியரவர்கள் தனதோ அல்லது தான் கண்டதையோ எழுதுகிறாரோ(?) என்ற எண்ணமே தோன்றுகிறது. ஏனெனில் இதுபோன்று மக்களின் மண்டைகளைகழுவி மிகநேர்த்தியாக ஏமாற்றி நாட்கணக்காக உழைத்த பவுண்ஸை நிமிடக்கணக்கிலே உருவிவிடும் சாமியார்களை நம்பி ஏமாறுபவர்களை காண்கின்றோம். மாயைகள் விலகாதவரை (போலி) அற்புதங்களைச் சாமிகள் நிகழ்த்துவார்கள். 

சாமிக்குத்தமாகாதவரை மகிழ்ச்சி!


அடுத்தபாககங்களையும் படைத்தருள்க.

உண்மைதான் இதில் அதிகமாய் அதுவும் சமீபத்தில் கண்டது கேட்டது  படித்தது எல்லாம் வருகின்றது....!  tw_blush: 

On 23/03/2017 at 2:20 PM, வாத்தியார் said:

அசத்தல் சுவி அண்ணை தொடருங்கள்

துருச்சாமியை நினைக்கவே சிரிப்பாக இருக்கின்றது

அப்பாடா இப்பதான் நிம்மதி வாத்தியார்.... நான் என் பாட்டுக்கு நகைச்சுவை கதை என்று போட்டுட்டு யாரும் சிரிக்காமல் விட்டுவிடுவினமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நன்றி வாத்தியார் வருகைக்கும் கருத்துக்கும்....!  tw_blush:

On 23/03/2017 at 11:26 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா எல்லா இடமும் நகைச்சுவை வழிந்தோடுகிறது. தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனா வேம்படியை இறக்கிக் கதைக்கிறதை ஏற்றுக்கொள்ளேலாது சொல்லீற்றன் 

நன்றி சகோதரி. வருகைக்கும் கருத்துக்கும் சந்தோசமாய் இருக்கு....!  tw_blush:

On 23/03/2017 at 5:47 PM, ஈழப்பிரியன் said:

சுவியர் வேம்படி கொஸ்ரலில் நடந்தவை அன்றைய பத்திரகைகளில் வந்ததை கொஞ்சம் எடுத்து விட்டுப் பார்த்தா என்ன?

துருச்சாமி நல்லதோ கெட்டதோ விட முடியாமல் தொடர்கிறோம்.

ஹா...ஹா.... அது ஒரு கனாக்காலம் , இனி காலச்சக்கரம் பின்னோக்கி போனாலும் கணக்கு கிடைக்காதது....!  tw_blush:

On 24/03/2017 at 5:52 PM, ஈழப்பிரியன் said:

காசிக்கு போறதை விட சாமியோடு போறது நல்லது போல இருக்கு.

யெஸ் ..... காசிக்கு போனால் கங்கையில் மூழ்கலாம், சாமியோடு போனால் கங்காவோடு தீர்த்தத்திலும் மூழ்கலாம்.....!  tw_blush:

On 24/03/2017 at 6:15 PM, விசுகு said:

உங்கள்  எழுத்து எப்பொழுதும் நகைச்சுவையும் நற்சிந்தனையும் தரவல்லது

தொடருங்கள் அண்ணா

 

நன்றி விசுகு....! வருகைக்கும் கருத்துக்கும். சும்மா எழுதியது.... ஆனால் எல்லோரினதும் அன்பையும் பார்க்க நெகிழ்ச்சியாய் இருக்கு....!  tw_blush:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/03/2017 at 10:58 PM, தமிழ் சிறி said:

கோமளமும்,  கோவணமும்...  வரும் கட்டங்களை  வாசிக்கும் போது...
இரண்டும் ஒரு சொல்லு மாதிரி .... இருந்ததால்,  
கம்புயூட்டருக்கு  முன், போய்..... இரண்டு தரம் வாசிக்க வைத்த, 
சுவியருக்கு... பாராட்டுக்கள்.   நன்றாக உள்ளது, ஐயா. :D: :grin: 

அது எதேட்சையாக  அமைந்து விட்டது சிறியர்.... ஆனாலும் நன்றாக வந்து இருக்கு.....! tw_blush:

On 25/03/2017 at 1:31 AM, குமாரசாமி said:

வணக்கம் சுவியர்!  ஒரு சாதாரண எழுத்தாளரால் இப்படி எழுதமுடியாது. நீங்கள் ஒரு அனுபவம் மிக்க எழுத்தாளர் போல் தெரிகின்றது.

நான் முன்பு கவிதை அந்தாதியில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கின்றேன் , மற்றும் பயணக் கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன். கதை என்று எதுவும் எழுதியதில்லை கு. சா...! இங்குதான் "வாந்தி " கதை யதேட்சையாய் எழுதியது. "துருச்சாமி" கொஞ்சம் மினக்கட்டு கருத்துக்கள் சேகரித்து எழுதியது அவ்வளவுதான். ஆனாலும் உங்களின் கருத்தில் உச்சி குளிருது....!  tw_blush: 

On 25/03/2017 at 9:18 AM, ஜீவன் சிவா said:

என்டை  பூனை நான் என்னத்தை சாப்பிட்டாலும் அல்லது குடித்தாலும் அருகே வந்திருந்து மியாவ் என்று கத்தும். அதுக்கு நான் குடிப்பது அல்லது சாப்பிடுவது பிடிக்குமோ இல்லையோ என்ற கவலை இல்லை. தனக்கும் வேணும் என்ற பிடிவாதம்தான் இருக்கும். நானும் சரி என்று எழுந்து போய் அதன் கோப்பையில் போட்டு விடுவேன். சில சமயம் குடிக்கும், சிலசமயம் தின்னும், பலசமயங்களில் முகர்ந்து பார்த்துவிட்டு ஓடிவிடும்.

பலதடவைகள் நான் பீர் குடிக்கும்போது இப்படித்தான் வந்திருந்து கத்தும் / நானும் கொடுத்ததில்லை. ஒருநாள் ஆய்க்கினை தாங்காமல் கொஞ்சத்தை அதன் கிண்ணத்தில் ஊற்றிவிட்டேன். முகர்ந்து பார்த்துவிட்டு என்னை மேலும் கீழுமா பார்த்தது.

பின்னர் ஒரு கேவலமான பார்வையை என்மீது வீசிற்று ஓடியே போட்டுது.

// மூதேவி இதை எப்படித்தான் குடிக்கிறியோ என்று கேட்டது மாதிரி இருந்தது//

இப்பவெல்லாம் பீர் டின்னை கண்டால் கத்துவதேயில்லை.

ஆகவே சுவியர் அவர்கள் லிஸ்டில் பூனைக்கும் கேடு எண்டு குறிப்பிடாததை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். :grin:

 

அப்புறம் துருசாமி பிச்சு உதறுகிறார் / மூஞ்சி புத்தகத்திலாவது என்னையும் சிஷ்யனா இணைக்கும்படி வேண்டுகின்றேன். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

அதுதான் உங்களின் பூனையையும் கதையில் உலவ விட்டிருக்கின்றேன் .....!tw_blush:

On 25/03/2017 at 2:55 PM, ஜீவன் சிவா said:

சுவியர்

நாங்கள் பார்த்த விடயங்கள், ரசித்த விடயங்கள், ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்தவை, விடலைப் பருவத்தின் விளையாட்டுக்கள் என்று அனைத்தையும் மறுபடியும் எமது கண்முன்னால் நிறுத்தும்படி எழுதுவதென்பது இலகுவான விடயமில்லை. அதற்கு ஒரு அபரிமிதமான ஞாபக சக்தியும் எழுத்தாடலும் தேவை.

துருசாமியாரின் திருவிளையாடல்களை இரண்டாவது முறை வாசிக்கும்போதுதான் பலவிடயங்கள் புரிகிறது. பல இணைப்புகளும் தெரிகின்றது.

ஒரு எழுத்தாளனாக வெற்றி பெற்றுள்ளீர்கள்.

தொடருங்கள்.

இந்தக் கதையில் வரும் பல சம்பவங்களும் பெரும்பாலும் இங்கின பொறுக்கினதுதான். ஆனாலும் உங்களின் கருத்து சிறப்பு....!  tw_blush:

On 26/03/2017 at 1:39 PM, நவீனன் said:

உண்மையை சொன்னால் இந்த  துருச்சாமி  சுவிசாமி  கதையை  வாசிக்க தொடங்கவே இல்லை. 

நேரம் எடுத்து பொறுமையாக வாசிக்கவேணும். ஆனால் இந்த கதைக்கு  கருத்து எழுதியகளது கருத்துகளை முழுமையாக வாசித்தேன்.

தொடருங்கள் சுவி அண்ணா..:)

இன்னும் தொடங்கவே இல்லையா , நான் எந்தச் சுவத்துல போய் முட்டுறது.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.