Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் 'ஷாக்' ஃபேஸ்புக் பதிவு!

Featured Replies

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் 'ஷாக்' ஃபேஸ்புக் பதிவு!

கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

எஸ்.பி.பியின் பதிவு கீழே!

ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.

சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. 

என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். 'எஸ்.பி.பி.50' என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். 

இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன். 

உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்."

இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

 

Dear all, Greetings from US. Had great shows in Seattle and LA last weekend. Grateful for the love you all showered upon us and the profesdional way the organizers conducted the shows.
Couple of days back, an Attorney representing Shri.Iliaya Raja, sent legal notices to me, Smt.Chithra, Charan, organisers of the concerts in different cities and the managements of all the venues, which says that we are not supposed to perform compositions of Shri.Iliayaraja without his permission, if so, it is breaking the copyright law and have to pay huge financial penalities and face legal action. Let me say, I am ignorant of these legalities.
My Son designed this world tour and wekick started this SPB50 conncert tour in August in Toranto, then we performed in Russia, Srilanka, Malaysia, Singapore, Dubai and did lots of shows in India too. I did not get any feelers from Shri. Raja's office at that time. I dont know why now when we started our US tour. As I said earlier, I am ignorant of the law. If it is a law, so be it and I obey it.
In these circumstances, our troupe can not perform Isaijnani's compositions from to day. But the show should happen.By God's grace I have sung lots of other composer's songs too which we will present. Hope you all will bless our concerts as usual.
I am always grateful for your love and affection.

I only request you all not to have any harsh opinions and discussions regarding this. If this is the design of God, I obey it with reverence.
Sarvejanah Sukhinobhavanthu.

 

 

http://www.vikatan.com/news/cinema/84013-spbalasubramaniam-posts-about-the-legal-notice-sent-by-ilaiyaraaja.html

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையென்றால் .....!

பாடல்களை யாரோ எழுதுகின்றார்கள் யாரோ இசையமைக்கின்றார்கள் யாரோ பாடுகின்றார்கள். அதைவிட முக்கியமாக அந்தப் பாடல்களை விற்று பணத்தையும் பெற்று விடுகின்றார்கள். அதன் பின் வித்த மாட்டில பங்கு வேணும் என்கிறது என்ன நியாயம். தார்மிகப் பொறுப்பேற்று இவரும் அவர் பாடிய பாடல்களைத் தன் கச்சேரிகளில்  பயன்படுத்தக் கூடாது. அது மட்டுமல்ல அந்தப் பாடல்களை வேறு யாரையாவது வைத்து மீண்டும் பதிவு செய்யவும் கூடாது. முன்பு எந்தெந்தப் பாடல்களை எப்படி எப்படி பரோட்டா போட்டது  என்று அவங்கட தம்பிமாரே மேடைகளில் சொல்லிக் கொண்டு திரியினம். ஈச்சம் பழத்தைப் பார்த்து இளிச்சுதாம் நாவல் பழம்....! 

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கு இசை மட்டுமே இளையராஜா. பாடல் எழுதியவர் ஒருவர், பாடியவர் இன்னோருவர்.

SBB யினது குரலுக்கும், பாடலாசிரியர் தமது எழுத்து உரிமைக்கும் தனித்தனியே கொப்பி ரைட்ஸ் வைத்திருக்கும் நிலையில் ஒட்டு மொத்தமாக இளையராஜா எப்படி முழுவதற்கும் ஆடடையைப் போட முடியும்? நல்லாயிருக்கே கதை.

தப்பாக சட்டம் புரிய பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரது இன்னோவேஷன் (கண்டுபிடிப்புக்கள்) அவருக்கு சம்பளம் கொடுத்த அவரது employer க்கு மட்டுமே உரியது என்பது உலகெங்கும் உள்ள சட்ட விதி.

படத்தினை தயாரித்தவர் பணத்தினைக் கொடுக்கும் போது அந்த உரிமைகள் அனைத்தும் (intelectual rights) அவருக்கே உரிமையாகிறது. 

மைக்கல் ஜாக்ஸ்ன், பிரிட்டினி ஸ்பியர்ஸ் போன்றவர்கள் தாமே பாடலை அரங்கு ஏத்தி, CD யில் வெளியிடுவதால் அவர்களுக்கு ஏகபோக உரிமை உள்ளது. ஆகவே அவர்களது பாடல்களை வேறு யாரும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தினால் அனுமதி பெற வேண்டும்.

ஆகவே இளையராஜா தவறாக சட்ட ஆலேசனை வழங்கப் பட்டு உள்ளார். பாட்டுக்கு பணம் வாங்கியவுடன் அவரது இசைக்கான ரைட்ஸ் intelectual rights கையை விட்டு போயிவிடும். 

இன்னும் தெளிவாக சொல்வதானால், தயாரிப்பாளரின் ஆர்டர் ஒன்றின் மீதே இவர் பாட்டு எழுதி வழங்கி உள்ளார்.

அந்த ஆர்டரின் மீதான பணம் வாங்கியவுடன் அவரது ரைட்ஸ் போய் விடுகிறது. ஆர்டர் இல்லாவிடில் பாட்டு இல்லை.

ஆயினும் வெளிநாடுகள், ரேடியோ ரைட்ஸ் என்று தனியாக ஒப்பந்தம் முன்னரே போட்டிருந்தாலும், பாடலாசிரியர், பாடகர் ரைட்ஸ் இவர் மட்டுமே ஆட்டையைப் போட முடியாது.
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஏனைய இசையமைப்பாளர்களும் சொன்னால் இனி மேடை நிகழ்ச்சிகளே இருக்காதே?

  • கருத்துக்கள உறவுகள்

http://www.thenewsminute.com/article/singers-are-minting-money-composer-doesn-t-get-1-rupee-ilaiyaraaja-s-consultant-tnm-58868

இது உரிமைக்கான ஒரு குரல் என நினைக்கிறேன்.

இளையராஜாவின் பாடலை மேடையில் பாடி நீங்கள் பணம் உழைத்தால் அதில் ஒரு சிறு பகுதியை (royalty) நீங்கள் இசை அமைப்பாளருக்கு கொடுக்க வேண்டும் என்பது சட்டம். பாடல் ஆசிரியருக்கும் அதேபோல ஒரு உரிமை இருக்கலாம்.

With Ilaiyaraaja holding the copyright to many of his songs, Pradeep observes that SPB should have taken the music director’s permission prior to commencing his SPB50 tour, which kicked off in Toronto last August. “They are friends. He could have spoken to Ilaiyaraaja and gotten rights to perform.”  

He also points out that the composer never seeks a percentage of the revenue generated from the shows. “There is flexibility. We are saying you tell us how much you want to pay. You have to ask for permission and pay a royalty. But no one is willing to pay even 1 rupee. People want to utilise him free of cost,” says Ilaiyaraaja’s copyright consultant.

 

சும்மா ஒரு பேச்சுக்காவது royalty எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்பதுதான் மரியாதை. அதை செய்ய தவறிவிட்டதாக எஸ்.பி.பி முகநூலில் பதிவு போட்டுள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

சும்மா ஒரு பேச்சுக்காவது royalty எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்பதுதான் மரியாதை. அதை செய்ய தவறிவிட்டதாக எஸ்.பி.பி முகநூலில் பதிவு போட்டுள்ளாராம்.

இசையர்,

மேலே, நம்ம கேள்விக்கு பதிலை வைங்க முதல்ல. ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

பாட்டுக்கு இசை மட்டுமே இளையராஜா. பாடல் எழுதியவர் ஒருவர், பாடியவர் இன்னோருவர்.

SBB யினது குரலுக்கும், பாடலாசிரியர் தமது எழுத்து உரிமைக்கும் தனித்தனியே கொப்பி ரைட்ஸ் வைத்திருக்கும் நிலையில் ஒட்டு மொத்தமாக இளையராஜா எப்படி முழுவதற்கும் ஆடடையைப் போட முடியும்? நல்லாயிருக்கே கதை.

தப்பாக சட்டம் புரிய பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரது இன்னோவேஷன் (கண்டுபிடிப்புக்கள்) அவருக்கு சம்பளம் கொடுத்த அவரது employer க்கு மட்டுமே உரியது என்பது உலகெங்கும் உள்ள சட்ட விதி.

படத்தினை தயாரித்தவர் பணத்தினைக் கொடுக்கும் போது அந்த உரிமைகள் அனைத்தும் (intelectual rights) அவருக்கே உரிமையாகிறது. 

மைக்கல் ஜாக்ஸ்ன், பிரிட்டினி ஸ்பியர்ஸ் போன்றவர்கள் தாமே பாடலை அரங்கு ஏத்தி, CD யில் வெளியிடுவதால் அவர்களுக்கு ஏகபோக உரிமை உள்ளது. ஆகவே அவர்களது பாடல்களை வேறு யாரும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தினால் அனுமதி பெற வேண்டும்.

ஆகவே இளையராஜா தவறாக சட்ட ஆலேசனை வழங்கப் பட்டு உள்ளார். பாட்டுக்கு பணம் வாங்கியவுடன் அவரது இசைக்கான ரைட்ஸ் intelectual rights கையை விட்டு போயிவிடும். 

இன்னும் தெளிவாக சொல்வதானால், தயாரிப்பாளரின் ஆர்டர் ஒன்றின் மீதே இவர் பாட்டு எழுதி வழங்கி உள்ளார்.

அந்த ஆர்டரின் மீதான பணம் வாங்கியவுடன் அவரது ரைட்ஸ் போய் விடுகிறது. ஆர்டர் இல்லாவிடில் பாட்டு இல்லை.

ஆயினும் வெளிநாடுகள், ரேடியோ ரைட்ஸ் என்று தனியாக ஒப்பந்தம் முன்னரே போட்டிருந்தாலும், பாடலாசிரியர், பாடகர் ரைட்ஸ் இவர் மட்டுமே ஆட்டையைப் போட முடியாது.
 

இது தான் எனது எண்ணப்பாடும்.எப்படி முழுவதையும் தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியும் இளையராஜா அவர்கள்.

 

  • தொடங்கியவர்

எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் ஏன்? இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம்! 

 

 
spb_duel

 

சென்னை: இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடுவது தொடர்பாக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஏன் என்று இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் விளக்கமளித்துள்ளார்.

தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் மேடையில் பாடக்கூடாது என்று அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்த பிரபல பிண்ண்னிப்பாடகர் எஸ்.பி.பிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக எஸ்.பி.பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இது தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப் குமார் என்பவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.  நோட்டீஸ் அனுப்பப்படுவது என்பது வழக்கமான நடைமுறைதான். இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதி பெற்று, உரிய ராயல்ட்டி தொகை செலுத்தி விட்டு பயன்படுத்திக் கொள்ளுமாறுதான் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஒரு முறைபடுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும்.

சாதாரணமாக மேடைக் கச்சேரிகள் செய்பவர்களிடமிருந்து ராயல்ட்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால்  வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதீப்குமார் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/mar/19/எஸ்பிபிக்கு-நோட்டீஸ்-ஏன்-இளையராஜாவின்-காப்புரிமை-ஆலோசகர்-விளக்கம்-2668856.html

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பாட்டுக்கு இசை மட்டுமே இளையராஜா. பாடல் எழுதியவர் ஒருவர், பாடியவர் இன்னோருவர்.

SBB யினது குரலுக்கும், பாடலாசிரியர் தமது எழுத்து உரிமைக்கும் தனித்தனியே கொப்பி ரைட்ஸ் வைத்திருக்கும் நிலையில் ஒட்டு மொத்தமாக இளையராஜா எப்படி முழுவதற்கும் ஆடடையைப் போட முடியும்? நல்லாயிருக்கே கதை.

தப்பாக சட்டம் புரிய பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரது இன்னோவேஷன் (கண்டுபிடிப்புக்கள்) அவருக்கு சம்பளம் கொடுத்த அவரது employer க்கு மட்டுமே உரியது என்பது உலகெங்கும் உள்ள சட்ட விதி.

படத்தினை தயாரித்தவர் பணத்தினைக் கொடுக்கும் போது அந்த உரிமைகள் அனைத்தும் (intelectual rights) அவருக்கே உரிமையாகிறது. 

மைக்கல் ஜாக்ஸ்ன், பிரிட்டினி ஸ்பியர்ஸ் போன்றவர்கள் தாமே பாடலை அரங்கு ஏத்தி, CD யில் வெளியிடுவதால் அவர்களுக்கு ஏகபோக உரிமை உள்ளது. ஆகவே அவர்களது பாடல்களை வேறு யாரும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தினால் அனுமதி பெற வேண்டும்.

ஆகவே இளையராஜா தவறாக சட்ட ஆலேசனை வழங்கப் பட்டு உள்ளார். பாட்டுக்கு பணம் வாங்கியவுடன் அவரது இசைக்கான ரைட்ஸ் intelectual rights கையை விட்டு போயிவிடும். 

இன்னும் தெளிவாக சொல்வதானால், தயாரிப்பாளரின் ஆர்டர் ஒன்றின் மீதே இவர் பாட்டு எழுதி வழங்கி உள்ளார்.

அந்த ஆர்டரின் மீதான பணம் வாங்கியவுடன் அவரது ரைட்ஸ் போய் விடுகிறது. ஆர்டர் இல்லாவிடில் பாட்டு இல்லை.

ஆயினும் வெளிநாடுகள், ரேடியோ ரைட்ஸ் என்று தனியாக ஒப்பந்தம் முன்னரே போட்டிருந்தாலும், பாடலாசிரியர், பாடகர் ரைட்ஸ் இவர் மட்டுமே ஆட்டையைப் போட முடியாது.
 

கீழேயுள்ள இணைப்பு இதைப்பற்றிச்சொல்லுகிறது ஆனால் இதன்பின் என்னநடந்தது என்று தெரியவில்லை.

http://www.hollywoodreporter.com/news/indian-copyright-act-amendments-329624

 

The Copyright Act  Bill 2012 இணைப்பு

http://www.wipo.int/edocs/lexdocs/laws/en/in/in066en.pdf

  • தொடங்கியவர்

இளையராஜா அனுப்பிய நோட்டீசுக்கு எஸ்.பி.பி.சரண் பதில்

பாடலுக்கு உரிமை மீறல் தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு இளையராஜா அனுப்பிய நோட்டீசுக்கு, எஸ்.பி.பி.சரண் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் என்ன தெரிவித்தார் என்பதை கீழே பார்ப்போம்.

 
 
 
 
201703201250502658_SPB-Charan-reply-over
 
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைத் தொடர்ந்து, அவரது மகனும் பாடகருமான  எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.பி. 50 என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

அதனைதொடர்ந்து, எஸ்.பி.பி 50 என்ற நிகழ்ச்சியை பல்வேறு நாடுகளில் நடத்த திட்டமிட்ட சரண்,  அமெரிக்காவில் முதல் இசை  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடினார்.

89B2B136-22A4-4460-ACF4-20EE3953599C_L_s

இதனையடுத்து, தான் இசையமைத்த பாடலுக்கு தனது அனுமதி பெறாமல் எஸ்.பி.பி. பாடியதாக இளையராஜா தரப்பில் இருந்து  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ,  அல்லது மேடைகளில் பாடினாலே அது காப்புரிமை மீறலாகும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பிரச்சனையில் கடுப்பான சரண், எனது தந்தை கடந்த 5 வருடங்களில் இதுவரை சுமார் 40,000 பாடல்களை பாடியுள்ளார்.  இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பே தனது தந்தை பாடல்களை பாட ஆரம்பித்து விட்டார். மேலும் இளையராஜா  இசையில் தனது தந்தை சுமார் 2,000 பாடல்களை மட்டுமே பாடியுள்ளதாகவும், மீதமுள்ள 38,000 பாடல்களை வேறு  இசையமைப்பாளர்களின் இசையிலேயே பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை நடத்த  எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.

209102CD-C934-4A4D-9BEF-5A38884D9D7E_L_s

மேலும் இளையராஜாவுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளார்.  அவரது பேச்சுக்கு மதிப்பளிக்கும் வகையில் எங்கள் தரப்பில் இருந்து எந்த தேவையற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது  என்றும் சரண் கூறினார். மாறாக அவர்கள் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ் மட்டும் அனுப்ப உள்ளோம் என்றார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/20125055/1074826/SPB-Charan-reply-over-the-notice-issue-from-ilayaraja.vpf

 

 

 

 

இளையராஜா செய்வது அசிங்கமாக உள்ளது: கங்கை அமரன் கண்டனம்

 

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பாடல்களை பாடக்கூடாது என்று இளையராஜா சொல்வது அசிங்கமாக உள்ளது என்று அவரது தம்பி கங்கை அமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
201703201242434006_Gangai-Amaran-condemn
 
தனது பாடல்களை இனி மேடைகளில் பாடக்கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனிமேல் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

DA14CDEE-4513-4493-A83D-7F9DD3890437_L_s

இந்நிலையில், இளையராஜாவின் தம்பியும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இளையராஜாவின் இந்த முடிவு தவறானது. மாணிக்க வாசகர், வள்ளலார் போன்றவர்கள்கூட எங்களுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள் என்று சொன்னதில்லை. அப்படியிருக்கையில் உங்களுக்கு ஏன் இந்த ஆசை.

இனிமேலும் சம்பாதித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். உங்களுக்கு அந்தளவுக்கா பணக் கஷ்டம் வந்துவிட்டது. இசையை நாம் வியாபாரமாக்கக்கூடாது. பாடல் இசையமைத்ததற்கான சம்பளத்தை ஏற்கெனவே நாம் வாங்கிவிட்டோம்.

77801552-56F8-4E89-BD1F-88B3D0152A85_L_s

நம்முடைய பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் அது நமக்குத்தானே பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசையமைத்தது மக்கள் பாடுவதற்காகத்தானே. அப்படி பாடக்கூடாது என்றால் எதற்காக இசையமைக்க வேண்டும். நீங்கள் இப்படி செய்வது அசிங்கமாக உள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார் கங்கை அமரன். 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/20124245/1074824/Gangai-Amaran-condemns-Ilayaraja.vpf

எனது காலை விழிப்பும் இரவு தூக்கமும் இந்த மனுசனுடன்தான்

இந்தாள் போகிற போக்கை பார்த்தால் பாத்த்ரூமுக்குள்ளே கூட பாடமுடியாது போலிருக்கு.

நான் சேர்த்து வைத்திருக்கும் 3500 க்கும் மேலான இவரது பாடல்கள் - எனக்கு பொக்கிஷம்

திறமை இருக்குமிடத்தில் செருக்கு + தற்பெருமை இருக்குமென்பார்கள்.
அதற்காக இவரை மதிக்க நான் தயாரில்லை.

எனது மதிப்பு இவரது பாடல்களுக்கு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்போல பாடல் பதிவு செய்யப்பட்ட போது பணியாற்றிய வாத்தியக் கலைஞர்கள், ஒலி அமைப்பாளர்கள் உட்பட அனைவரும் ராயல்டி கேட்கலாமே? 

  • தொடங்கியவர்

'பஞ்சத்துலையா இருக்கின்றாய், மெல்லிசை பாடகர்களிடம் பணம் கேட்பது கேவலமாக இல்லையா?.." : அண்ணன் இளையராஜாவை திட்டி தீர்த்த கங்கை அமரன்

Published by Selva Loges on 2017-03-20 16:09:40

 

'இதுவரை சம்பாதித்த பணம் போதாதா? மெல்லிசை பாடகர்கள் சம்பாதிக்கும் பணம் தான் உனக்கு தேவையா? முன்னுரிமை கேட்க வேண்டும் என்பது கேவலமான விடயம். உனக்கு பணம் வேண்டும் என்றால் நான் தருகிறேன். இப்படி அசிங்கமான வேலை செய்யாதே. எப்போது பாடல்கள் எல்லாம் பொதுமக்கள் இடத்தில் வந்ததோ அது அப்பவே பொதுச் சொத்தாக மாறிவிட்டது. உன்னுடைய பாடல்களை பாடக் கூடாது என்றால் பாடல்களை எல்லாம் ஒரு அலுமாறியில் மூடி அடைத்து விடு. எப்போது தான் திருந்துவாயோ என்று தெரியவில்லை, மெல்லிசை பாடகர்களை பாட வேண்டாம் என்று சொல்ல நீ யார் என இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், இளைராஜாவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.gangai-amaran.jpg

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய அனுமதி பெறாமல் பாடகர் எஸ்.பி.பி பாடியதால் அதற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இளையராஜாவின் சட்ட எச்சரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், மேடைகளில் படுவதற்குள்ள சட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், இருப்பினும் சட்டத்தை மதிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் இனி வரும் காலங்களில் இடம்பெறும் மேடைநிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லையென எஸ்.பி.பி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இது குறித்கு கருத்து தெரிவித்துள்ள இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், 

''நாம் படைத்தது எல்லாம் மக்களுக்காக படைத்து விட்டாச்சு. மக்கள் பாட்டால் மயங்கி கிடக்கின்றார்கள். நாளைக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் நோட்டிஸ் அனுப்பி ஏன்ட பாட்ட போடாதிங்க, குழந்தைகளை தூங்க விடாதிங்க என ரோயல்டி கேப்பது அசிங்கமானது.

இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது. காப்புரிமை கேட்பது அவர் பணம் சம்பாதிக்கவே ஆகும். மக்களை சுதந்திரமாக பாடல் கேட்கட்டுமே. எதற்காக இப்படி செய்கின்றீர்கள். லயிட் மியூசிக் செய்வர்கள் கச்சேரி கிடைக்காமல் தவிக்கின்றார்கள். இந்த பாடல்கள் மூலமே அவர்கள் உழைக்கின்றார்கள். அந்த பணம் உங்களுக்கு வேண்டுமா? அவ்வளவு பஞ்சத்துலையா இருக்கின்றோம். இந்த பணத்தை வாங்கியா பிழைக்க வேண்டும்.

பாடல்களை பாடியவர்கள் அவரின் பாட்டை பாட முன் அனுமதி எதற்காக பெறவேண்டும். இளையராஜா பாடிய தியாகராஜ கீர்த்தனைக்கோ, எம்.எஸ். விஸ்வநாதம் பாட்டுக்கோ முன்னுரிமை வாங்கியா பாடினார்?. தியாகராஜா கீர்த்தனை பாடும் போது தியாகராஜாவுக்கு கப்பம் கட்டினாரா?

மெல்லிசை பாடகர்கள் எல்லாம் பாடல்களை பாடியே சம்பாதிக்கின்றார்கள். அவர்களை பாட வேண்டாம் என்று சொல்வதற்கு நீ யார்?. உன்னுடைய பாடல்களை ஏற்கனவே பணத்துக்கு விற்பனை செய்து விட்டாய். அதற்கான சம்பளத்தையும் பெற்று விட்டாய்.

பாடல்கள் எல்லாம் மக்கள் சொத்தாகிவிட்டது. உனக்கு பணம் தேவை என்றால் நான் தருகிறேன். அசிங்கமான வேலை செய்யாதே. கேவலமாக இருக்கின்றது.

இசை வரலாற்றில் இவ்வாறு நடந்ததில்லை. கார்ல போகும் போது பாட்டு கேட்கலாம். ஆனால் முனுமுனுக்க கூடாது. அவ்வாறு முனுமுனுத்தால் பணம் வேண்டும் என்பது கேவலமான ஒன்றாகும்.

இன்று வெளிப்படையாக கூறுகின்றேன். எம்.எஸ். விஸ்வநாதனின் நிறைய பாடல்களை கொப்பியடித்துள்ளோம். அவருக்கு எதனை கொடுத்தோம். தியாகராஜ கீர்த்தனை, பழைய பாடல்கள், ஸ்ரீ ஜெயராம் பாடல்களை மாற்றி மாற்றி பாடியுள்ளோம். இவர்களுக்கும் பணம் கொடுத்தோமா?.

அகங்காரம் வரக் கூடாது. இசையில் தெய்வமாக பார்க்கும் இவரை, எனது பாட்டை பாட வேண்டாம் வாயை மூடு என கூறுவது அப சகுணமாகும். பணத்துக்காகதான் இதனை செய்கின்றார். இதுவரை சம்பாதித்த பணம் போதாததா? நீ சாப்பிடுறதும் கொஞ்சம் தான். எதற்காக புதிய சட்டங்களை இயற்றுகின்றாய். ஏனையவர்களை முட்டாளாக்காதீர்கள். 

மழை, வெயில் போன்று பாடல்களும் இயற்கையாக கிடைக்க வேண்டும். இசை சரித்திரத்தில் இப்படி நடந்தது இல்லை. இளையராஜாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எப்ப திருந்த போகின்றார் என்று தெரியவில்லை.''

http://www.virakesari.lk/article/18003

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா விவகாரம்... முழு தவறும் எஸ்பி பாலசுப்பிரமணியன் மீதுதான்!

இளையராஜா - எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை. இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் எஸ்பிபி. அல்லது அந்த கம்பெனி நிர்வாகிகளை அனுப்பி பேச வைத்திருக்கலாம். காப்புரிமை சட்டப்படி ராஜாவுக்கு சேர வேண்டியதைத் தரச்சொல்லி பிரச்சினையை வெளியில் தெரியாமல் முடித்திருக்கலாம்.

எஸ்பிபி மகனுடன் இணைந்து இந்த இசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் பக்கா பிஸினஸ் பார்ட்டிகள். அதுவும் வெளிநாட்டுக்காரர்கள். காப்புரிமைச் சட்டம் தெரிந்தவர்கள். இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும், அதை சட்டரீதியாக அணுகாமல், எஸ்பிபியை பேச வைத்து வேண்டுமென்றே சென்சேஷனல் ஆக்கியிருக்கிறார்கள். அது பக்கா கிரிமினல் மூளை! இன்னொரு பக்கம், ராஜா மீதிருந்த நீண்ட நாள் எரிச்சல்களையெல்லாம் தீர்த்துக் கொள்ள ஒரு வழியாக அந்த வக்கீல் நோட்டீஸை பிடித்துக் கொண்டார் எஸ்பிபி என்பதுதான் உண்மை. பேஸ்புக்கில் ரொம்ப அப்பாவியாக, 'எனக்கு காப்பிரைட் சட்டமெல்லாம் தெரியாது.. ஆனாலும் இனி ராஜா பாடல்களைப் பாட மாட்டேன்,' என்று புலம்பி, மீடியா கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டார் (ராயல்டி சட்டம் தெரியாமல்தான் பாடகர்களுக்கும் ராயல்டி வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தாரா?).

சினிமாக்காரர்களில் சிலர், செய்தி உலகின் ஒரு பகுதியினர் ஏற்கெனவே ராஜா மீது அவதூறு பரப்புவதையே லட்சியமாகக் கொண்டிருப்பவர்கள். இந்த 'பீப்' பார்ட்டிகளுக்கு இப்போது ஒரே கொண்டாட்டம். எஸ்பிபியின் அந்த அறிவிப்பை வைத்து இஷ்டத்துக்கும் ராஜாவைத் திட்டி வருகின்றனர். இதைப் பார்த்த சில நடுநிலை ரசிகர்களும்கூட, 'ராஜா பணத்தாசையால் இப்படிப் பண்ணுகிறாரோ... இது தப்புதானே' என்று கூற ஆரம்பித்துள்ளனர். எஸ்பிபி நல்ல பாடகர். திறமையான பாடகர்.

இனிமையான பாடகர். ஆனால் படைப்பாளி அல்ல. ஆனால் இளையராஜா படைப்பாளி. அவரது படைப்புக்குக் குரல் தந்தவர்தான் எஸ்பிபி. ஒரு பாடலின் ட்யூன், இசை, அதை எப்படிப் பாட வேண்டும், எப்படியெல்லாம் பாடக்கூடாது (எஸ்பிபிக்கு இது ரொம்ப முக்கியம்... ராஜா மீது அவருக்கு ரொம்ப காலமாக உள்ள எரிச்சல் இது!) என்று கற்றுத் தருவதெல்லாம் இசையமைப்பாளர்தான். பாடகர், பாடலாசிரியர் எல்லாம் இசையமைப்பாளருக்கு தேவைப்படும் இசைக்கருவிகளைப் போன்ற கருவிகளே. ஒரு பாடலுக்கு முழுமையான சொந்தக்காரர் இசையமைப்பாளர்தான். உடனே, தயாரிப்பாளர் தயாரிப்பாளர் என சிலர் கூப்பாடு போடுகிறார்கள்.

அது தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் உள்ள புரிந்துணர்வு. ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் பொங்குவதை இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். காரணம் இவர்கள் என்றுமே அசலை விரும்புபவர்கள் அல்ல.. நகல்களைத்தான் தேடித் தேடி வாங்குவார்கள். இளையராஜாவின் பாடல்களை காசு கொடுத்து வாங்காமல் எம்பி3, இலவச டவுன்லோடில் கேட்பவர்கள் அல்லவா... அந்த மனநிலையின் பிரதிபலிப்புதான் இது.

Read more at:http://tamil.oneindia.com/news/tamilnadu/spb-intentionally-exposes-ilaiyaraaja-s-copyright-notice-277416.html?utm_source=spikeD&utm_medium=TG&utm_campaign=adgebra

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: இளையராஜா- எஸ்பிபி ராயல்டி பிரச்சினை: 'பேராசையா'?

 

 
இளையராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் | கோப்பு படம்
இளையராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் | கோப்பு படம்
 
 

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நெட்டிசன்களும் பல்வேறு விமர்சனங்களையும், கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

வாசுகி பாஸ்கர்

இளையராஜா பாட்டு மழை போல, யாரும் பயன்படுத்தலாம் - கங்கை அமரன். அந்த மழையில சம்பாதிச்சு கட்டின வீட்டை சசிகலா பிடுங்கியதில் தப்பே இல்ல

Shan Karuppusamy

காப்புரிமை சட்டத்துக்கே முதலில் காப்புரிமை வாங்கணும் போல இருக்கு. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க விருப்பத்துக்கு ஒவ்வொரு சட்டம் எழுதறாங்க.

Shri A P Irungovel

திருவாசகத்திற்கு இசையமைக்கும் முன் மாணிக்கவாசகருக்கு ராயல்டி கொடுத்தாராமா?

Mani Maran

இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனை அவர்களுக்கிடையேயானது அல்ல.. அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை.

கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் இசைவாரிசாக வந்தவர்கள் தந்தையைப் போல திறமை வாய்க்காததால் திரைத்துறையில் பெரும் தோல்வியை அடைந்து தற்போது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பணம் ஈட்ட முயன்றதின் விளைவுதான் இதுபோன்ற பிரச்சனைக்கு காரணம்.

ஒருவர் பாக்கெட்டை நிரப்ப இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதனால் என் பாக்கெட்டுக்கு வரும் வருமானம் குறைகிறது என இன்னொருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். அவர்கள் இருவரும் பேசித் தீர்க்கவேண்டிய விஷயம் இது. இதில் நாம் ஏன் மோதிக்கொள்ளவேண்டும்..?

Alice Priya

#இளையராஜாவுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க என்பது உண்மை தான். ஆனா அந்த இசைல எல்லாம் #SPB பாடாம, இளையராஜாவும் வேற மற்ற பாடகர்களும் பாடி இருந்தா இவ்ளோ ரசிகர்கள் இருந்துருப்பாங்களா?

Venba Geethayan

இளையராஜா இசையை மொத்தமாகத் தவிர்த்துவிட்டு இசையே இல்லாமல் கூட SPBயால் அற்புதமாகப் பாட இயலும்...

Shahjahan R

தன் அனுமதி இல்லாம பாடக்கூடாதுன்னு சொல்ல இளையராஜாவுக்கு உரிமை இருக்கு. ஏன்னா, இப்போ இருக்கிற சட்டம் அந்த உரிமையைக் கொடுத்திருக்கு.

என்ன.., இந்த மாதிரி புரொகிராம் நடக்கப்போற நேரத்துல நோட்டீஸ் பாணியில் சொல்லியிருக்க வேண்டாம். ரெண்டு பேரும் போன்லயே பேசி தீர்த்திருக்கலாம். அந்தப்பக்கம் எஸ்பிபியும் இப்படியொரு அறிவிப்பு கொடுக்காம, என்ன இளையராஜா இப்படி நோட்டீஸ் வரைக்கும் போயிட்டீங்க... என்கிட்டே கேட்டிருந்தா நானே என்ன செய்யணுமோ செஞ்சிருப்பேன்ல அப்படீன்னு பேசியிருக்கலாம்.

அண்ணாமலை.‏ @indirajithguru

இளையராஜா ராயல்டி வாங்குன பிறகு பணத்தை கிடாரிஸ்டுக்கு கொஞ்சம், தவிலுக்கு கொஞ்சம், வயலினுக்கு கொஞ்சம்னு பிரிச்சு கொடுப்பாரா?

ஊமை குசும்பன் @agn_f2f

எத்தன பேரு பாடுனாலும் அது இளையராஜா பாட்டுன்னு தான் சொல்லப்போறாங்க.. இதுல எதுக்கு ராயல்டி?!

anand‏ @_anandhakumar

இளையராஜா பத்தி விமர்சனம் பண்ற பாதி பேரு, அடுத்தவங்க ட்வீட்ட காப்பி பண்ணி தன்னோட வால்-ல போஸ்ட் பண்ற பயலுகதேன்.

இராம.மோகன்‏ @Nanbaendaaa

தன் பாடல்கள் மூலம் புகழ் பெறுவதை விட பணம் பெறுவதையே விரும்புகிறாரா இளையராஜா?

Athisha Vino

இளையராஜாவின் இந்த அறிவிப்பு நேர்மையானது. எந்த ஒரு படைப்பாளிக்கும் உரிய நியாயமான உரிமையையே இளையராஜா கோருகிறார்.

இளையராஜா யாரோ ரயிலில் பிச்சை எடுக்கிற ஒருவர் தன்னுடைய பாடலை பாடக்கூடாது என்று கூறவில்லை. தேனி பக்கம் இருக்கிற சிறிய டீக்கடையில் தன்னுடைய பாடலை ஓடவிடுவதை குற்றஞ்சொல்லவில்லை. பெரிய ஊடக நிறுவனங்களை ''என்னை வைத்து சம்பாதிப்பதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு செய்'' என்கிறார்! அவ்வளவுதான். தன்னுடைய பெயரை, இசையைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் காசு சம்பாதிப்பவர்கள் தன்னிடம் அனுமதி பெற்றுவிட்டு வியாபாரம் செய்துகொள்ளட்டும் என்கிறார்.

VIVEGAM‏ @2point0_Rajini

எனது பாடல் வரிகளை பயன்படுத்தக் கூடாது என்றால் இளையராஜா என்ன செய்வார்- கங்கைஅமரன்..

அன்புடன் பாரதி @NBhaarathi 3

காப்புரிமை தவறேயில்லை!!

யாரிடம் கேட்பது என்பதுதான் தவறே!!

#SPB இல்லாமல் #இளையராஜா இல்லை!!

Ravikumar‏ @WriterRavikumar

இளையராஜாவை விமர்சிப்பவர்கள் அமெரிக்காவில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளால் எஸ்பிபிக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைச் சொல்வார்களா?

Vino Jasan

எக்கோ நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்று செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, "எனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை எனது தயாரிப்பாளர்களுக்கும் தருகிறேன்," என்றார். அவரை பணத்தாசை பிடித்தவராய் சித்தரிக்கிறது இந்த கும்பல்.

எஸ்பிபியின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல... நூறு சதவீதம் பணம் வசூலிக்கும் இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'?

http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டிசன்-நோட்ஸ்-இளையராஜா-எஸ்பிபி-ராயல்டி-பிரச்சினை-பேராசையா/article9592523.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

பாட்டுக்கு இசை மட்டுமே இளையராஜா. பாடல் எழுதியவர் ஒருவர், பாடியவர் இன்னோருவர்.

SBB யினது குரலுக்கும், பாடலாசிரியர் தமது எழுத்து உரிமைக்கும் தனித்தனியே கொப்பி ரைட்ஸ் வைத்திருக்கும் நிலையில் ஒட்டு மொத்தமாக இளையராஜா எப்படி முழுவதற்கும் ஆடடையைப் போட முடியும்? நல்லாயிருக்கே கதை.

தப்பாக சட்டம் புரிய பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரது இன்னோவேஷன் (கண்டுபிடிப்புக்கள்) அவருக்கு சம்பளம் கொடுத்த அவரது employer க்கு மட்டுமே உரியது என்பது உலகெங்கும் உள்ள சட்ட விதி.

படத்தினை தயாரித்தவர் பணத்தினைக் கொடுக்கும் போது அந்த உரிமைகள் அனைத்தும் (intelectual rights) அவருக்கே உரிமையாகிறது. 

மைக்கல் ஜாக்ஸ்ன், பிரிட்டினி ஸ்பியர்ஸ் போன்றவர்கள் தாமே பாடலை அரங்கு ஏத்தி, CD யில் வெளியிடுவதால் அவர்களுக்கு ஏகபோக உரிமை உள்ளது. ஆகவே அவர்களது பாடல்களை வேறு யாரும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தினால் அனுமதி பெற வேண்டும்.

ஆகவே இளையராஜா தவறாக சட்ட ஆலேசனை வழங்கப் பட்டு உள்ளார். பாட்டுக்கு பணம் வாங்கியவுடன் அவரது இசைக்கான ரைட்ஸ் intelectual rights கையை விட்டு போயிவிடும். 

இன்னும் தெளிவாக சொல்வதானால், தயாரிப்பாளரின் ஆர்டர் ஒன்றின் மீதே இவர் பாட்டு எழுதி வழங்கி உள்ளார்.

அந்த ஆர்டரின் மீதான பணம் வாங்கியவுடன் அவரது ரைட்ஸ் போய் விடுகிறது. ஆர்டர் இல்லாவிடில் பாட்டு இல்லை.

ஆயினும் வெளிநாடுகள், ரேடியோ ரைட்ஸ் என்று தனியாக ஒப்பந்தம் முன்னரே போட்டிருந்தாலும், பாடலாசிரியர், பாடகர் ரைட்ஸ் இவர் மட்டுமே ஆட்டையைப் போட முடியாது.
 

நாதமுனி.. இது அவ்வளவு குழப்பமான விடயம் இல்லை.

இளையராஜா ஆரம்பகாலங்களில் இசையமைத்த பெரும்பாலான பாடல்களுக்கு சரியான ஒப்பந்தங்கள் போடப்படவில்லை. இவை grey area ஆகிவிட்டது. இந்தக்காலத்தில் எல்லோருமே (அனிருத் முதற்கொண்டு) ஒப்பந்தத்தில் தெளிவாக தெரிவிக்கிறார்கள். அதாவது இந்த இசையை வைத்து யாராவது பணம் பண்ணினால் தமக்கும் அதில் ஒரு பங்கு தர வேண்டும் என்று.

இப்போது இளையராஜாவின் பழைய கதைக்கு வருவோம். இப்படி அரைகுறையாக ஒப்பந்தம் போடாமல் விடயங்கள் நடைபெற்றதால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இளையராஜாவின் வழக்கறிஞர் நீதிமன்றம் சென்றார். பாடல்களுக்கான உரிமை இளையராஜா வசமே இருக்க வேண்டும் என்கிற தீர்ப்பு கிடைக்கிறது. இந்த தீர்ப்பு வந்தது 2015 இல் என நினைக்கிறேன். போன ஆண்டு அந்த வழக்கறிஞர் நிறுவனம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதாவது அந்த தீர்ப்பை காட்டி இனிமேல் தங்களது பாடல்களை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டால் royalty சமாசாரங்களை தங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று.

எஸ்.பி.பியின் நிகழ்வு நடைபெறுவது 2017 இல். இதிலே கோட்டை விட்டது எஸ்பிபி தரப்புதான்.

இப்போது பாடகர்களுக்கு வருவோம். இவ்வாறாக ஒப்பந்தம் சரியாக போடப்படாத பாடல்களுக்கு அவர்களும் உரிமை கோரலாம். அதாவது அந்தப் பாடல்களை மேடைகளில் பாடினால் தங்களுக்கும் அந்த வருமானத்தில் பங்கு தர வேண்டும் என நீதி மன்றத்தை அணுகலாம். ஆனால் அவர்கள் அதை இன்னும் செய்யவில்லை.

முடிவாக, இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கு அவரே உரிமை என போகவில்லை. நீங்கள் அந்தப் பாடல்களை பயன்படுத்தி பணம் ஈட்டினால் அவருக்கும் ஒரு பங்கு தருவது பற்றி ஒரு மரியாதைக்காக ஆவது கலந்தாலோசிக்க வேண்டும் என்பதுதான் சாரம். இதை அவர் இன்று செய்யாவிட்டால் அவர் ஏற்கனவே வாங்கிய தீர்ப்பு காணாமல் போய்விடவும் வாய்ப்பு உள்ளது.

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் -
10 முக்கிய அம்சங்கள்
 
 
 

சென்னை:தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான காப்பி ரைட்ஸ் பிரச்னையை பற்றியது தான். இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
@Image1@

இளையராஜா - எஸ்.பி.பி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும் எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளை துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதுப்பற்றிய 10 முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்...
01. இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் ஏதோ ராயல்டி பிரச்னை என்று பார்க்கப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் இருவருக்கும் கடந்த 6 மாத காலமாகவே ஒரு வித பனிப்போர் நடந்து வருகிறது என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
02. கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த இளையராஜாவின் இசை கச்சேரிக்கு 7 லட்சம் வாங்கி கொண்டிருந்த எஸ்பிபி., 20 லட்சம் தந்தால் தான் வருவேன் என அதிரடியாக தன் சம்பளத்தை உயர்த்தி கறாராக நடந்து கொண்டு அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்து அமெரிக்கா போகாமல் இருந்துவிட்டாராம், அதன் வெளிப்பாடு தான் இந்த பிரச்னை என்கிறார்கள்.


03. இதுஒருபுறம் இருக்க இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனைஅவர்களுக்கிடையேயானது அல்ல, அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை என்று கூறப்படுகிறது. கார்த்திக் ராஜாவை போன்றே, எஸ்.பி.பி.சரணும் தனது தந்தையை வைத்து உலகம் முழுக்க கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளார். அந்த போட்டியின் வெளிப்பாடு தான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
04. காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. அப்படிபார்க்கும் போது சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான்.
05. ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் எப்படி சொல்ல முடியும்.
06. எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும்இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'? என்ற கேள்வி எழுகிறது.

 


07. இந்த நோட்டீஸ், வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என்று இளையராஜா தரப்பு கூறிவிட்டது கவனிக்கத்தக்கது.
08. தனது பாடல்களை பாட பணம் தர வேண்டும் என்று இளையராஜா கேட்பது சாதாரண மக்களை பாதிக்காதா என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. காப்புரிமையை பற்றியெல்லாம் பேசினால் இளையராஜாவின் இசையை கேட்பது குறைந்துவிடும் என்பது அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்.
09. தனக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை தான் மட்டும் அனுபவிக்காமல், அதில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு தருவதாக இளையராஜா கூறியிருக்கிறார்.
10. ராயல்டி கலாச்சாரத்தை ஏதோ இளையராஜா மட்டும் தான் கேட்கிறார் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. உண்மையை சொல்லப்போனால், ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் தங்களுக்கான ராயல்ட்டியை பெற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1734485

 

 

 

இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதலுக்கு காரணம் என்ன? பரபரப்பான தகவல்கள்

இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான மோதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்த பரபரப்பான தகவல்களை கீழே பார்ப்போம்.

 
 
 
 
201703201351108335_What-is-the-reason-be
 
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கூட்டணியாக மறக்க முடியாத பாடல்களை கொடுத்த இளையராஜாவும்,  எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் 40 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர்.

2500-க்கும் அதிகமான பாடல்களை இளைய ராஜா வும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமானுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா தான்  என்று எஸ்.பி.பால சுப்பிரமணியம் பல மேடை களில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய பாடல்களின் காப்புரிமை பிரச்சினைக்காக போராடி  வருகிறார். இது தொடர்பாக கோர்ட்டிலும் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ‘இளையராஜாவின் பாடல்களை  காப்புரிமை பெறாமல் வெளியிடக் கூடாது’ என்று ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

E5AC9A77-FDB0-4CEF-93ED-FB5A73120472_L_s

இதற்கிடையே கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அதுவரை இளையராஜா நடத்தும்  கச்சேரிகளில் பாட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அமெரிக்கா கச்சேரி யில் பாட எஸ்.பி. பால சுப்பிரமணியம் இளைய ராஜாவிடம் ரூ.20 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்  கொடுக்க மறுத்ததால் அந்த கச்சேரியையே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புறக் கணித்து அமெரிக்கா செல்ல வில்லையாம்.  ஆனால் இது பற்றி இளையராஜா இது வரை யாரிடமும் சொல்ல வில்லை.

FA5913EC-99A8-4DF0-B894-FCBD20D93CD9_L_s

இப்போது அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இளையராஜா தான் இசை  யமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதன் மூலம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையேயான 40 ஆண்டு கால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/20135112/1074845/What-is-the-reason-behind-IlayarajaSPB-fight.vpf

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி:
நியுஸ்7தமிழ்

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி:
புதியதலைமுறை

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா காப்பி அடிச்ச பாட்டுக்கு நீ காசு குடுத்தியா!! - கங்கை அமரன் கோபம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இதற்கிடையே கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அதுவரை இளையராஜா நடத்தும்  கச்சேரிகளில் பாட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அமெரிக்கா கச்சேரி யில் பாட எஸ்.பி. பால சுப்பிரமணியம் இளைய ராஜாவிடம் ரூ.20 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்  கொடுக்க மறுத்ததால் அந்த கச்சேரியையே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புறக் கணித்து அமெரிக்கா செல்ல வில்லையாம்.  ஆனால் இது பற்றி இளையராஜா இது வரை யாரிடமும் சொல்ல வில்லை.

ஒரு பாடலுக்கு ஒரு லட்சம் கேட்கலாம். எஸ்.பி.பி என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21.3.2017 at 8:04 PM, Maruthankerny said:

இளையராஜா காப்பி அடிச்ச பாட்டுக்கு நீ காசு குடுத்தியா!! - கங்கை அமரன் கோபம்

 

C7aw7usV0AAVFir.jpg

அடுத்தவன் சுடும் இட்லியைச் சாப்பிட்டுச் செரிப்பவருக்கு எப்படிப் புரியும் இட்லி சுடுபவன் கஷ்டம் ..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இயைராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

download

எனக்கும் இயைராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் பிசியாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே.

எனினும் இளையராஜாவின் பாடல்களை பாட முடியாததால் மனதளவில் வருத்தப்பட்டேன். மேலும் தனக்கு காப்புரிமை பிரச்சனை குறித்த எதுவுமே தெரியாது. அவர் அனுப்பிய நோட்டீஸ் மூலமே இவ்வாறு சட்டம் உள்ளதை அறிந்தேன். இதுபோன்று சட்டம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால், இளையராஜாவிடம் தான் அனுமதி கேட்டிருப்பேன். இளையராஜா இதுபோன்று காப்புரிமை பெற்றுள்ளார் என்று தனக்கு தெரியாது.

எனினும் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. அதுவே தற்போது, இளையராஜாவுடன் தன்னை பேசவிடாமல் தடுக்கிறது. எனினும் தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்றார்.

 

http://www.sanjeevaoli.com/?p=67240

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.