Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு தம்பியின் தேடலும் பாவமன்னிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள அக்கா

இது உங்களுக்கு நீங்கள் இதுவரை முகம் அறியாத உங்கள் தம்பிகளில் ஒருவன் எழுதுவது.

காலங்கள் தம் சுவடுகளை பதிந்துவிட்ட அப்பால் நகர்ந்து செல்கின்றன.

மனிதன் தன் வாழ்வின் எச்சங்களை இந்தப் பூமிப்பந்தில் விட்டே அப்பால் சென்றுவிடுகின்றான்.

அந்த எச்சங்கள் பல்கிப்பெருகி விழுதுகளாகிப் படர்ந்து இந்தப்பாரெல்லாம் பரவிக் கிடக்கின்றன.

விரிந்த மணற்பரப்பில் பதிந்திருக்கும் அழகான ஆழமான சுவடுகளைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். இடையிடையே அள்ளி வீசிய காற்றின் வேகத்தால் சுவடுகள் அழிந்து போயிருந்தன.

சில தேடல்களின் பின்னர் அந்த அழகான சுவடுகள், என்மனதின் எதோ ஒரு மூலையில் உறங்கி கிடந்த அந்த ஆழமான சுவடுகள் அந்த மணற்பரப்பில் மீண்டும் என் கண் முன்னே தோன்றின.

நான் இப்போது தான் உணர்கின்றேன். தந்தையை அல்லது தாயை அவர்கள் வாழ்ந்து கொடிருந்தாலும், என்னால் அவர்களை அணுகமுடியவில்லை என்றால் ஏற்படும் வலியின் அளவிற்கு ஏது அளவுகோல்.

இதை உங்கள் நிலையில் இருந்த பார்த்தால்

நீங்கள் உங்கள் தந்தையை இழந்தீர்களா? இல்லை, அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் அவரை யாரோ உங்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள். தந்தையிருந்தும் உங்களுடன் அவர் இல்லாத வலி ஒரு கொடுமையான வலி. பசியோடு போராடும் குழந்தையின் கண் முன்னே ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் பால் இருந்தால் அந்தக் குழந்தையின் தவிப்பு எப்படி இருக்கும். அந்தத் தவிப்பு உங்களுக்கும் இருந்திருக்கும்.

உங்கள் தாயின் மனவலிமை பல வருடங்கள் தவங்கள் செய்து பேறு அடையும் முனிவர்களின் மனவலிமையை விட மேலானது.கையிலே இரு குழந்தைகள் கண் முன்னே இருந்தும் இல்லாத கணவன் ஆனாலும் அவர் தன மனதில் செய்து கொண்ட சபதம் , அதைவிட மேலாகத் தன சபதத்தை பூரணமாக்கிய சாமர்த்தியம்.

இத்தனையும் உங்கள் தாயின் வெற்றியின் ரகசியம்.

அக்கா நான் உங்களையும் உங்கள் தம்பியையும் என் வாழ்வின் முடிவிற்குள் ஒரு முறையேனும்

சந்திக்க வேண்டும்.உங்கள் இருவரது கால்களிலும் வீழ்ந்து உங்கள் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.உங்கள் இருவரது பிள்ளைகளையும் உச்சிமுகரவேண்டும்.அதற்கான தருணத்தை நானோ நீங்களோ அல்லது இருவரும் சேர்ந்தோ ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

உங்கள் தந்தையின் இதயத்தில் நீங்கள் இருவரும் ஓங்கி ஒரு பெரிய விருட்ஷமாகவே வாழ்ந்தீர்கள். அதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.. அவரின் மிக அண்மையில் இருந்து அதை உணர்ந்துகொண்டோம்.

உங்கள் பல்கலை வாழ்வில் நீங்கள் அடைந்த வெற்றியை அவர் தன் வெற்றியாகக் கொள்ளாவிட்டாலும் அவர் மனம் ஆனந்தமானதை அவர் அருகில் இருந்து உணர்ந்தோம்.

எங்கள் தந்தை இனிமையானவர். எங்களைக் கடிந்து கொள்ளும்போதும் அதில் ஒரு மென்மைஇருக்கும்.

எங்கள் தந்தையே எங்களுக்கு குருவானவர். எங்களுக்கு மட்டுமல்ல, அவரிடம் கற்றவர்கள் இல்லாத நாடே இந்த இந்த உலகில் இல்லை.

குருவாக மட்டுமின்றி ஒரு தோழனாக நண்பனாக வாழ்ந்தவர் எங்கள் தந்தை. ஐந்து வயதில் சீட்டுக்கட்டுடன் எங்கள் முன்னமர்ந்து சீட்டு விளையாட்டும் கற்றுத்தந்தவர்.

நாங்கள் பஞ்ச பாண்டவர்கள் .அக்கம் பக்கம் எங்கும் எங்களின் ஆட்சிதான்.எண்களில் ஒருவரை யாராவது தீண்டினால் அவர்களின் கதிகௌரவர்களின் விதியாகக் கணிக்கப்படும்.

அன்றொரு நாள் ஐயா ஒருவர் அர்ஜுனனைத் தீண்டிவிட்டார்.

கோபமே வராத தர்மருக்கு வந்தது அன்று கோபம். பீமன் கதாயுதத்துடன் தர்மரைப் பின்தொடர அவர்களுக்கு அர்ஜுனன் ஐயா சென்ற வழிகாட்டியானான். நானும் சகாதேவனும் தடுத்தும் முடியவில்லை. அய்யாவின் பட்டறை சின்னாபின்னாமாக்கப்பட்டது அய்யாவின் நிலைமையோ இன்னும் பரிதாபத்துக்குரியதானது.

போர் முடிந்ததும் மாலையில் பாண்டவர்கள் நாங்கள் அண்ணை றைற் நாடகத்தில் அண்ணையின் நகைச்சுவையில் ஆழ்ந்திருந்தோம்.

திடீரென அரங்கில் காயங்களுடனும் கிழிந்து கந்தலான உடையிலும் ஐயாவும் அவர் முன்னே எங்கள் தந்தையும் தோன்றினார்கள் .

ரசிகர்கள் எங்கள் தந்தையும் ஐயாவும் தங்களை மகிழ்விக்கப் போகின்றார்கள் என நினைத்துப் பலத்த கரகோசத்தை ஏற்படுத்தினார்கள் ஒலிவாங்கியைக் கையில் ஏந்திய தந்தை பாண்டவர்கள் எங்கிருந்தாலும் விரைவில் மேடைக்கு வரவும் என்று அறிவித்து விட்டார்.நாங்கள் அங்கிருப்பதை அவர் எப்படியோ அறிந்து விட்டதால் வேறு வழியில்லாமல் நாங்கள் மேடையில் அணிவகுத்து நின்றோம்.

தந்தை மைக்கை மீண்டும் வாங்கி இதோ இந்த அய்யாவின் இந்த நிலைமைக்கு எனது புதல்வர்கள் காரணம். அய்யாவின் வயதையும் அவர் எங்கள் ஊருக்குச் செய்யும் உதவிகளையும் மனதில் கொள்ளவேண்டும். அவர்தான் முதலில் தப்புச் செய்ததாக என்னிடம் கூறிவிட்டார். ஆனாலும் பாண்டவர்கள் இவருடன் போருக்குச் சென்றதை மன்னிக்க முடியாது. ஆகவே பாண்டவர்கள் அய்யாவின் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டால் அவர்களை நான் விட்டுவிடுகின்றேன் இல்லையேல் அவர்களை நான் விடமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். வேறு வழியில்லாமல் நாங்களும் தந்தை முன்னர் அய்யாவின் காலில் வீழ்ந்து ஒவ்வொருவராக மன்னிப்புக் கேட்டோம் . ரசிகர்கள் பலத்த ஒளியில் கரகோசத்தை எழுப்பி தந்தையின் செயலை வழிமொழிந்தார்கள் . இத்தனைக்கும் ஐயா எங்கள் ஊரில் இருந்த ஒரேயொரு கொல்லன் பட்டறையின் முதலாளி.

எங்கள் அப்பாவைப் புகழ்வதாக நினைக்கவேண்டாம்.

நீங்கள் அறிந்திராத அவரின் மறு பக்கத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே எழுதுகின்றேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து என்மனதில் இருந்த ஏக்கங்களை உங்களுக்கு அறியத்தர விரும்புவதாலேயே இவற்றை உங்களுக்கு எழுதுகின்றேன்.

எங்கள் தந்தை செய்தது மிகப்பெரிய தவறு. அதை யாராலும் சரியென்று வாதாட முடியாது.அவருடன் வாழ்ந்த காலங்களில் அவர் ஏன் இந்தத் தவறினைச் செய்தார் என்று யாரும் எனக்கு விளங்கக்கூறவில்லை.

என்னால் முடிந்தவரை என் அறிவிற்கெட்டியரை அவர் செய்த தவறினை என்னால் புரிந்து கொள்ளமுடிந்த அன்றிலிருந்து நான் உங்களைத் தேட ஆரம்பித்தேன்.

எனது திருமண வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு கூற விரும்புகின்றேன். காதல் திருமணம் இனிமையான வாழ்வின் ஆரம்பம்.அப்போது நான் ஒரு இறுதியான முடிவை எடுத்துக் கொண்டேன் .அது ஒரு சபதம் என்று கூடக் கூறலாம்

உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் ஏற்பட்ட நிலைமை என் மனைவிக்கோ குழந்தைகளுக்கோ என்னால் ஏற்படக்கூடாது என்று ஒரு சபதம் செய்துகொண்டேன்.அதன்படி இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.

சில மாதங்களில் எனது மனைவி கர்ப்பமானாள். அது வரை எங்கள் வாழ்வில் நுழையாத மதம் அப்போது வந்துவிட்டது. மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். நன் இந்து மதத்தைச் சேர்ந்தவன். பிறக்கப் போகும் குழந்தையின் மதம் எதுவாக இருக்க வேண்டும் என்பதே இப்போது பிரச்சனையாக இருந்தது.குழந்தையும் பிறந்தது. பிரச்சனைக்கு முடிவில்லை. குழந்தையை கிறிஸ்தவ மதத்தில் இணைப்பதற்கு நான் சம்பாதிக்கவில்லை.

மதம் முக்கியம் அல்ல என்பது எண்ணம். மதம் தான் முக்கியம் என்பது மனைவியின் கருத்து. சரி இருவரும் சண்டையிடாமல் எங்கள் அப்பாவின் கருத்தைக் கேட்டோம்.

எங்கள் வீட்டில் அப்பாவின் பேசசுக்கு எப்போதும் நாம் மறுப்பதில்லை.

மறுக்கக் கூடியதாகவும் அவர் பேசுவதில்லை. அவர் கூறும் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

குழந்தை பெறுவது என்பது பெண்களுக்குக்கிடைத்த ஒரு சிறந்த பேறு.

ஒரு நாள் அல்லது இரு நாட்கள் உறவல்ல அது. பத்து மாதம் அந்தக் கருவைச் சுமந்து காப்பாற்றி இடையில் ஏற்படும் வலிகளையும் பொறுத்துக்க கொண்டு பத்தாவது மாதத்தில் மீண்டும் ஒருமுறை பிறந்துதன் உயிரையும் குழந்தையின் உயிரையும் காப்பவள் தான் தாய்.

அப்படியான தாயின் வழியில் செல்வதுதான் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது .அந்தத் தாயின் வழியிலேயே குழந்தைகளும் செல்லட்டும் என்கிறார் அப்பா.எல்லா அப்பாக்களும் தம் பிள்ளைகளுக்கு இப்படி அறிவுரை செய்வார்களோ தெரியவில்லை.

எனக்கு அப்பாவின் வாக்கு வேத வாக்காக இருந்தது. இப்போது அந்தக் குழந்தைகள் தெய்வத்தின் குழந்தைகளாக என் முன் வலம் வருகின்றார்கள்.

அக்கா நான் எழுதிய இரண்டு விடயங்களிலும் எங்கள் அப்பா மனித நேயம் உள்ளவராகவும் பெண்களை மதிப்பவராகவும் இருக்கும் பொழுது உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் மட்டும் ஏன் அப்படியொரு துரோகத்தை இழைத்தார் என்பது தான் இன்னும் எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனாலும் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்.

இனிமேல் அவற்றைப் பற்றிப் பேசி யாருக்கும் ஏதும் நன்மை கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.

நீங்களும் நானும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாக இல்லாவிடடாலும்

உங்கள் அப்பாவின் ரத்தமே என் உடலிலும் ஓடுகின்றது.

அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் என் வாழ்வைத் சீராக்கியிருக்கின்றன. அந்த வகையில் அவர் உங்களுக்கு இழைத்த துரோகத்தின் பாவ மன்னிப்பாக இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக அவருக்குத்தான் இக்கடிதத்தை முதலில் காட்டியிருப்பேன். அவரும் நிச்சயமாக கடிதத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டித் திருத்தம் செய்திருப்பார்.

ஆனால் அவர் இப்போது எங்களைவிட்டுப் பிரிந்து ஒன்பது வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் உங்களைத் தேடி இந்த மடலை எழுதுகின்றேன்.

நாஷ்வில் நகரில் நீங்கள் நலமாக இருப்பினர்கள் என நினைக்கின்றேன்.

உங்கள் கணவர் உங்கள் பிள்ளைகள் எல்லோரும் நலமாக இருக்க உங்கள் கர்த்தரை வேண்டிக்கொள்கின்றேன்.

கடிதத்தை எழுதி முடித்த சிவாவின் ஆழமான நீண்ட பெருமூச்சு அந்த அறையெங்கும் எதிரொலிப்பது போல் இருந்தது அவனுக்கு.

உனடடியாக அந்தக் கடிதத்தை அவனுடைய அக்காவின் முநூலினூடாக அவருக்கு அனுப்பிவிட்டு அக்காவின் பதில் எதுவாக இருக்கும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றான் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் பாவ மன்னிப்புக்கு மனுப் போடும்போதே அது ஆண்டவனிடம் இருந்து கிடைத்து விடும், அக்காவிடமிருந்தும்  கூட.....! 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஒருவருமே சிந்திக்காத ஒரு முனையில் இருந்து கடிதவடிவில் முழுக்கதையையும் சொல்லி முடித்துவிட்டீர்கள். அப்பா விட்ட தவறு எதனால் என்று கடிதம் எழுதிய தம்பியைப்போல் எனக்கும் மனதிற்குள் கேள்வி குடைகிறது. கதை சொல்ல புதிய பாணியைக் கையாண்டிருக்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கண்கள் வேறு இடத்திற்கு அசையாமல் வாசித்து முடித்தேன் வாத்தியார். தொடர்ந்தும் உங்களுடைய பதிவுகளை வழங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இந்து மதத்தில் உள்ளவர்களை விட மற்றைய மதத்தில் உள்ளவர்கள் மதம் மாறுவது கிடையாது.

ஒரு தடவை வாசித்த போது ஒன்றுமே விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் பாசத்தையும் பாவமன்னிப்பையும் குழைத்து நல்லதொரு வடிவத்தில் கதை சொல்லியுள்ளார். புதிய பாணிணில் எழுதப்பட்டிருந்தாலும் கதை வடிவம் வாசிப்பவர்களை கதாபாத்திரங்களின்  எண்ண ஓட்டத்துடன் இணைந்து செல்லக்கூடியதாக எழுதியுள்ளார். எம்மதமும் சம்மதம் என்று இணைந்து பயணிப்பவர்களின் குடும்பங்களில் குழந்தைகளின் மதம் கேள்விக்குறியாக மாறுவது இன்றைய நிலையாக இருப்பதைக் காணக்கூடியதாய் உள்ளது நல்லதொரு பதிவு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் தம்பி

வாழ்த்துக்கள்

உங்களது கடமையையும்யாழுக்காகசெய்திருப்பது மகிழ்வு தருகிறது..

9 minutes ago, Kavallur Kanmani said:

கதை  பற்றி நான்சொல்வதைவிட ...

  • கருத்துக்கள உறவுகள்

கதையைக் கலை மலிந்த கடிதம் மூலம் சொன்னபாணி பிடித்திருந்தது.

தினக்கூலிப் பிழைப்பாக இருப்பதால் பச்சை எல்லாம் தீர்ந்துவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

மிக நேர்த்தியாக ஒரு கடிதத்தை வரைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

அதுதான் பாவ மன்னிப்புக்கு மனுப் போடும்போதே அது ஆண்டவனிடம் இருந்து கிடைத்து விடும், அக்காவிடமிருந்தும்  கூட.....! 

நன்றி சுவி அண்ணா
அக்காவின் பதிலிற்காகக் காத்திருக்கும் சிவா ஏமாற்றம் அடையாவிட்டால் சரி:100_pray:.

8 hours ago, வல்வை சகாறா said:

வாத்தியார் ஒருவருமே சிந்திக்காத ஒரு முனையில் இருந்து கடிதவடிவில் முழுக்கதையையும் சொல்லி முடித்துவிட்டீர்கள். அப்பா விட்ட தவறு எதனால் என்று கடிதம் எழுதிய தம்பியைப்போல் எனக்கும் மனதிற்குள் கேள்வி குடைகிறது. கதை சொல்ல புதிய பாணியைக் கையாண்டிருக்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கண்கள் வேறு இடத்திற்கு அசையாமல் வாசித்து முடித்தேன் வாத்தியார். தொடர்ந்தும் உங்களுடைய பதிவுகளை வழங்குங்கள்.

நன்றி சகோதரி உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் இன்னும் பல  ஆக்கங்களைத்தர உதவும் .

8 hours ago, ஈழப்பிரியன் said:

வாத்தியார் இந்து மதத்தில் உள்ளவர்களை விட மற்றைய மதத்தில் உள்ளவர்கள் மதம் மாறுவது கிடையாது.

ஒரு தடவை வாசித்த போது ஒன்றுமே விளங்கவில்லை.

ஈழப்பிரியன் இந்தக் கடிதம் மதப் பிறழ்வால் எழுதப்பட்டதல்ல
ஒரு தகப்பன் இரண்டு தாய்கள். அக்காவைத் தேடி அலைந்த தம்பி.

அக்காவைக் கண்டுபிடித்துவிட்டதும்  தன்னுடைய அப்பா  தன்
முதல் மனைவியையும் குழந்தைகளையும் ஏன் பிரிந்தார்

என்று அதன்   காரணத்தைத் தேடும் ஒருவனின் ஆதங்கம்.
வரவிற்கு நன்றி

4 hours ago, Kavallur Kanmani said:

வாத்தியார் பாசத்தையும் பாவமன்னிப்பையும் குழைத்து நல்லதொரு வடிவத்தில் கதை சொல்லியுள்ளார். புதிய பாணிணில் எழுதப்பட்டிருந்தாலும் கதை வடிவம் வாசிப்பவர்களை கதாபாத்திரங்களின்  எண்ண ஓட்டத்துடன் இணைந்து செல்லக்கூடியதாக எழுதியுள்ளார். எம்மதமும் சம்மதம் என்று இணைந்து பயணிப்பவர்களின் குடும்பங்களில் குழந்தைகளின் மதம் கேள்விக்குறியாக மாறுவது இன்றைய நிலையாக இருப்பதைக் காணக்கூடியதாய் உள்ளது நல்லதொரு பதிவு பாராட்டுக்கள்

நன்றி காவலூர் கண்மணி  அக்கா
பாசம் என்பதை விட இரத்த பாசம் என்பது மேலானது
அந்தவகையில் சிவா தன்னுடைய அக்காவின் பாசத்தை வேண்டி நிற்பது

அவனுடைய உரிமை என நினைக்கின்றேன்.

4 hours ago, விசுகு said:

வாத்தியார் தம்பி

வாழ்த்துக்கள்

உங்களது கடமையையும்யாழுக்காகசெய்திருப்பது மகிழ்வு தருகிறது..

நன்றி விசுகு அண்ணா
இது எல்லாம் உங்கள் போன்றவர்களின்  அரவணைப்பினால் யாழிற்காக எழுதப்பட்டது

3 hours ago, கிருபன் said:

கதையைக் கலை மலிந்த கடிதம் மூலம் சொன்னபாணி பிடித்திருந்தது.

தினக்கூலிப் பிழைப்பாக இருப்பதால் பச்சை எல்லாம் தீர்ந்துவிட்டது!

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிக நேர்த்தியாக ஒரு கடிதத்தை வரைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி கிருபன்
நன்றி சுமேரியர்
உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களின் முன்னால் இந்தக் கடிதம் பெரிதாக இல்லாவிட்டாலும் யாழில் சிவாவின் ஆதங்கத்தை எழுதியதையிட்டு  மகிழ்ச்சி.:100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

 உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஒரு பாவமன்னிப்பாக ஒரு பாசத்தை தேடும் தம்பியாக எழுதிய மடல் வழிக்கதை ..மிகவும்   மனத்தைத் தொட்ட்து . நன்றி , வாத்தியாரின் அழகான எழுத்து நடை ..உங்கள் புலமையை எடுத்துக் காட்டுகிறது  மேலும் இப்படி பல  மடல்கள் வரவேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...வாத்தியார்!

ஒரு கடிதம்....கதை சொல்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

நன்றி கிருபன்
நன்றி சுமேரியர்
உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களின் முன்னால் இந்தக் கடிதம் பெரிதாக இல்லாவிட்டாலும் யாழில் சிவாவின் ஆதங்கத்தை எழுதியதையிட்டு  மகிழ்ச்சி.:100_pray:

உங்களைப் போல் தான் நாங்களும். என்ன நீங்கள் இத்தனை நாள் உங்கள் திறமையை மறைத்து வைத்திருந்திருக்கிறீர்கள். யாழ் அகவை அதை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துக்களைத் தேடி கதை, கட்டுரை, கருத்துக்கள் பதிபவர்களிடையே....  வாத்தியாரைத் தேடி தமிழ் தன்னைப் பதிந்துள்ளதை, அவரது பதிவு வெளிப்படுத்தி நிற்கிறது. :unsure: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் கடிதம் மூலம் கதையை பிண்ணிட்டியள்...பச்சை நகி .....

On 30.3.2017 at 5:11 PM, வாத்தியார் said:

அன்புள்ள அக்கா

அட பாவியளா

புத்துக்குள்ள இத்தனை பாம்புகளா

புதுசு புதுசா அசத்துராங்களே 

ஒவ்வொருவரும் கதை சொல்லும் பாணி வேறுபடும்போது உண்மையிலேயே வாசிக்க பிடித்திருக்கு.

அருமையாக எழுதிய வாத்திக்கு நான் பச்சை மட்டும்தான் போடுவன் நன்றி சொல்லமாட்டேன்  / ஆனால் இந்த பாம்பையும் புத்துக்குள்ளிருந்து வெளியில எடுத்த யாழ் நிர்வாகத்துக்குத்தான் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31.3.2017 at 0:14 AM, நிலாமதி said:

 உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஒரு பாவமன்னிப்பாக ஒரு பாசத்தை தேடும் தம்பியாக எழுதிய மடல் வழிக்கதை ..மிகவும்   மனத்தைத் தொட்ட்து . நன்றி , வாத்தியாரின் அழகான எழுத்து நடை ..உங்கள் புலமையை எடுத்துக் காட்டுகிறது  மேலும் இப்படி பல  மடல்கள் வரவேண்டும்  

நன்றி அக்கா

On 31.3.2017 at 0:23 AM, புங்கையூரன் said:

வணக்கம்...வாத்தியார்!

ஒரு கடிதம்....கதை சொல்கிறது!

நன்றி புங்கையூரன்
உங்கள் வாழ்த்துக்கள் எல்லாத்திரிகளிலும் சகல  கருத்தாளர்களினாலும்   எப்போதும் விரும்பப்படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2.4.2017 at 10:35 AM, Paanch said:

தமிழ் எழுத்துக்களைத் தேடி கதை, கட்டுரை, கருத்துக்கள் பதிபவர்களிடையே....  வாத்தியாரைத் தேடி தமிழ் தன்னைப் பதிந்துள்ளதை, அவரது பதிவு வெளிப்படுத்தி நிற்கிறது. :unsure: :rolleyes:

இதுவும் நன்றாக இருக்கின்றது
நன்றி பாஞ்ச் அண்ணா

On 2.4.2017 at 11:29 AM, putthan said:

வாத்தியார் கடிதம் மூலம் கதையை பிண்ணிட்டியள்...பச்சை நகி .....

உங்கள் கிறுக்கல்களுக்கு முன்னால் இதுவெல்லாம் ஒரு வசனம் தான்
நன்றி புத்தர் ஐயா :100_pray:

On 2.4.2017 at 5:09 PM, ஜீவன் சிவா said:

அட பாவியளா

புத்துக்குள்ள இத்தனை பாம்புகளா

புதுசு புதுசா அசத்துராங்களே 

ஒவ்வொருவரும் கதை சொல்லும் பாணி வேறுபடும்போது உண்மையிலேயே வாசிக்க பிடித்திருக்கு.

அருமையாக எழுதிய வாத்திக்கு நான் பச்சை மட்டும்தான் போடுவன் நன்றி சொல்லமாட்டேன்  / ஆனால் இந்த பாம்பையும் புத்துக்குள்ளிருந்து வெளியில எடுத்த யாழ் நிர்வாகத்துக்குத்தான் நன்றிகள்.

அது சரி ஜீவன்
அந்தப் பாம்புப் புத்துக்குள் கை விட்டது  நீங்கள் தானா.....:11_blush:
நன்றி ஜீவன்

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கோணத்தில், எழுதப் பட்ட  கடிதம் வாத்தியார்.
முதல் முறை அதனை வாசித்த போது.. அதனை கிரகிக்க சிரமாக இருந்தது உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4.4.2017 at 5:31 AM, தமிழ் சிறி said:

வித்தியாசமான கோணத்தில், எழுதப் பட்ட  கடிதம் வாத்தியார்.
முதல் முறை அதனை வாசித்த போது.. அதனை கிரகிக்க சிரமாக இருந்தது உண்மை.

இதற்குத்தான் வாத்தியார் சொல்பவர் ஒருமுறைக்கு இரண்டுமுறை வாசியுங்கள் என்று , இப்போது விளங்குகின்றதா?:107_hand_splayed:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.