Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில், மாடு களவெடுத்த இளைஞனுக்கு... பொது மக்கள், கொடுத்த தண்டனை சரியா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே... விசுகு, இணைத்த காணொளியை பார்த்தபோது.....
அதில் மாடு பறி கொடுத்தவர்... இதுவரை மூன்று மாடுகளை பறி கொடுத்துள்ளார். ஒவ்வொன்றும் லட்ச ரூபாய் பெறுமதியானது. அன்று.. அந்த மாட்டை திருடிய கள்வன் மாட்டுப்  பட்டு பொதுமக்களிடம் அடி  வாங்க முதல் அவர்.. "வாள் வெட்டுக் காரரை கூப்பிடுவேன்"  போன்ற   கதைகள்,   அம்மக்களுக்கு மேலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படியிருந்தும்... மாட்டை  பறி கொடுத்தவர், சில அடிகளுடன்.. அவனை  விட்டு விடுங்கள்   என்று கூறிய போதும்... அந்தக் கள்வனின் மனைவி, மனைவியின் தகப்பன் போன்றோர் இன்னும் அவனுக்கு அடி  வாங்கிக் கொடுக்க காரணமாகி விட்டார்கள்.

இதனைப் பார்க்கும் போது... முகநூலில் ஒருவர் எழுதிய  கருத்து தான் நினைவு வருகின்றது. 
நரி... ஊருக்கு வந்ததும் தப்பில்லை.
கோழியை.. பிடிச்சதும்  தப்பில்லை.
ஆனால்,  நான் நரிடா....  என்று ஊளையிட்டது தான் தப்பு. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

முனிவர்,
திருட வந்தவரை கட்டி வைத்து ஆத்திரத்தில்  இரண்டு சாத்து சாத்தி விட்டு போலீசை கூப்பிடுவது எங்கும் நடப்பது. சுய பாதுகாப்பிற்காக இங்கு கூட இது நிகழ்வதுண்டு. ஆனால் கட்டி வைத்து கையை காலை முறிப்பது, சித்திரவதை செய்வது, சாகும் வரைக்கும் அடிச்சுக்க கொல்வது, அடி வாங்கியவரது படத்தை பகிர்ந்து குரூரமாக ரசிப்பது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருடராக இருப்பதால் அவர் மனிதரல்லாதவராக ஆகி விட்டாரா? அவருக்கான மனித உரிமைகள் என்று எதுவும் இல்லையா? எவரும் அவருக்கு தண்டனை கொடுக்கலாமா?

யாழ்ப்பாணத்தில் லஞ்சம் வாங்காத அரச / கிராம  அதிகாரிகள் குறைவு. அவர்களிடம் உதவிக்கு போகின்றவர்கள் தாமாகவே லஞ்சம் கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுக்காமல் விடின் அலைக்கழிப்பார்கள். அவர்கள் மட்டுமன்றி மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் எம்பிக்கள் எல்லாரும் ஊழலில் திளைத்தவர்கள். வடக்கு மாகாண சபையே ஒரு பெரும் ஊழல் சபை என்று பெயர் வாங்கி வைத்துள்ளது (இதன் முதலமைசார் ஒரு முன்னாள் நீதியரசர்!).  எந்த வேலைக்காக அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகின்றனரோ  அதை செய்ய மேலதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். இது ஒரு பெரும் திருட்டு. ஆனால் இப்படியான பெரும் திருடர்களை "ஆள் ஒரு சுழியன்' என்று பெயர் சூட்டி  மதிப்பர். ஆனால் வெறும் மாட்டு திருடனை அடித்து சித்திரவதை செய்வர்.

நிழலி திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது கள்ள மாட்டில் வரும் காசு எதுவித முதலீடும் இல்லாமல் பெற்றுக்கொள்வது அதன் ருசி இவரை திருத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா  நீங்கள் கேட் கலாம் ஏன் இவர் திருந்த மாட்டாரோ என்று அது ஒரு நிகழ் தகவு  திருந்தலாம் அல்லது திருந்தாமல் போகலாம் .

அவர் அந்த இடத்தில் பேசிய வார்த்தைகளும் பேச்சுக்களும் மக்களுக்கு ஆத்திரம் ஊட்டி அவருக்கு இந்த தர்ம அடி விழுந்திருக்கு  உலகில் வல்லரசு என்ற நாடுகள் மக்களை அதாவது அவர்களின் கண்ணில் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட  கைதிகளை எப்படி நடத்துகிறார்கள் அதை அவர்கள் புகைப்படம் எடுத்து ம்கிழவில்லையா அதை நாம் பார்க்கவில்லையா  புகைப்படம் என்பது ஆதாரமாக சிக்க வில்லையாக இருந்திருந்தால் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று மனதில் எண்ணத்தோன்றும் அதுவே ஆதாரமாக வந்தால் இவனுக்கு  இதுவும் வேண்டும்  ஏன் இன்னமும் வேண்டும்  என்று சொல்லுவோம் மனித மனது அப்படியே  நான் இந்த போட்டோவை ரசிக்கவில்லை  குற்றவாளி மக்களால் தண்டிக்கப்பட்டு இருக்குறான்  இவரை  பொலிசாரிடம் ஒப்படைத்து நீதி மன்றத்தில் இவருக்கு போதுமான தண்டனை வழங்கப்படுமா ??  அடுத்த நிமிடமே காசுக்கு  வேலை செய்யும் ஒரு வக்கீலால் இவர் வெளியே  வந்து அடுத்த பிளன் தான் போடுவார் 

நிழலி ஒன்றை சொல்கிறேன்   யாழ்ப்பாணத்திலும் சரி வேற இடங்களிலும் சரி  (இலங்கைக்குள்)  எல்லோரும் காசு வாங்குவதற்குள் கொண்டுவ்வரமுடியாது ஒரு சிலர் அதுவும் தமிழர்கள் அதிகம்  அதை செய்கிறார்கள்  ஆனால் மாட்டுப்பட்டவன் குற்றவாளி அது யாராக இருந்தாலும் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Thumpalayan said:

மயூரன் முதல் முறை போதைப் பொருளை கடத்தியபோது பிடிபடவில்லை. முதலாவது முறை வெற்றிகரமாக கொண்டுவந்து சேர்த்தார்கள், இரண்டாவது முறை பிடபடப்போகிறோம் எனத் தெரிந்து கைவிட்டு விட்டு தப்பி வந்தார்கள். மூன்றாவது முறை விமானம் ஓடுபாதையில்  தயாராக இருந்த போது பிடித்தார்கள். இந்தோனேசிய, சிங்கப்பூர்,மலேசிய விமான நிலையங்களில்  எழுத்துக்களில் போட்டிருக்கும் "Death Penalty for Those Who Carry Drugs" எனப் போட்டிருப்பதை வாசிக்கவே உடம்பு ஒருமுறை நடுங்குமே. பிடிபடாவிட்டால் மயூரன் இப்பவும் தூள் கடத்துவார். போதைப்பொருள் கடத்துவது இந்தோனேசியாவில் மரணத்திற்குரிய குற்றம், அவுசில் ஆயுள் தண்டனை.இப்போது அவுசிகள் யாராவது தூள் கடத்துகிறார்கள் எனது தெரிந்தாலும் அவுசினுள் வருமட்டும் வேற்று நாடுகளுடன் தகவல்களை பகிர்ந்து  கொள்ளுவது இல்லை.

கள்வன் களவெடுத்தது சரி அல்ல, ஆனால் அதற்கு தண்டனை கொடுக்க  அனுமதியில்லை.

எங்களின் மாட்டுகார வேலன் ..
இதுதான் கடைசி மாடு என்று நல்லூரில் 
சத்தியம் செய்துவிட்டா 
மாடு அவிழ்த்தார் ?? 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சிக்கலான விடயம் ........
இதுதான் சரி என்றோ 
இது பிழை என்றோ தீர்ப்பு கூற முடியாது 
இது மொரால் அண்ட் எதிக்ஸ் சம்மந்தமானது. சம்மந்தம் இல்லாவிட்டாலும் 
சம்மந்தப்படுத்திவிட்டு விவாதிக்கலாம்.

"கள்வன் மனிதன் இல்லையா?" 

"மனிதனுக்கு மனித நேயம் இல்லையா ?" அடுத்தவன் உழைப்பை களவெடுக்கிறேனே என்ற எண்ணம் இல்லையா ?

என்ற இரண்டு நிலையிலும் தொங்கி கொண்டு நிற்கலாம்.
நான் படிக்கும்போது இப்படி பல வழக்குகள் பற்றி படித்தேன் ...இங்கு பலரும் 
படித்திருப்பார்கள் ..... இதுதான் சரி என்று உண்மையிலேயே சொல்ல முடியாது. 

கூகிள் நிறுவனத்தின் வேலை இன்டெர்வியூவில் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது. கூகிள் மற்ற நிறுவனங்கள் போல்  கேள்வி கேட்ப்பதில்லை எதேச்சையான கேள்விகள்தான் கேட்ப்பார்கள் காரணம் உங்கள் கிரேட்டிவ் ஆளுமை எப்படி உள்ளது என்பதே அவர்களுக்கு முக்கியம்.
கேள்வி இதுதான் .............

நீங்கள் ஒரு மூன்று மாடி உயரத்தில் நின்றுகொண்டு சூரியன் மறைவதை ரசித்துக்கொண்டு நிற்கிறீர்கள் 
உங்கள் அருகில் இன்னுமொரு மிகவும் உடல் பருத்த பெண்மணி நின்று இயற்கையை ரசித்துக்கொண்டு 
இருக்கிறார் .... நீங்கள் கீழே பார்க்கிறீர்கள் .... 15 வரையிலான பள்ளி சிறார்கள் வீதியை கிடக்கிறார்கள் 
இப்போ ஒரு கார் தனது கட்டுப்பாடடை இழந்து வேகமாக வந்துகொண்டு இருக்கிறது .... நீங்கள் அருகில் இருக்கும் பெண்மணியை  கீழே தள்ளிவிட்டால் ... கார் அவரில் மோதி பள்ளி சிறார்கள் தப்பி விடுவார்கள் 
நீங்கள் என்ன செய்வீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

எங்களின் மாட்டுகார வேலன் ..
இதுதான் கடைசி மாடு என்று நல்லூரில் 
சத்தியம் செய்துவிட்டா 
மாடு அவிழ்த்தார் ?? 


மாட்டுக்கள்ளன் செய்தது சரி எண்டு எங்கேயாவது கூறியிருக்கிறேனா?

Copied from a  Facebook post //விடியக்காலத்தால 5 மணி போல எனக்கு ரெலிபோன் பன்னி அங்க போனன். அந்த கள்ளன பிடிச்சு கையைத்தான் கட்டி வைச்சிருந்தாங்கள். கட்டி வைச்சிருந்தவங்கள் மாடு பிடிபட்ட வீட்டுக்காரனும் பக்கத்து வீட்டுக்காரர்களும் தான்... நான் போன போது அந்த கள்ளர் அவர்களை துாசணத்தால பேசிக் கொண்டு நின்றார். பு..... கை கட்டை அவிட்டு விடு... இல்லாட்டி குறுாப்போட வந்து வெட்டுவம் என்டும் சொல்லிக் கொண்டு நின்டார். அவரோட வந்த மற்ற மரியாதைக்குரிய கள்ளரும் அவற்ற ரெலிபோனுக்கு கோல் எடுத்து கட்டி வைச்சவங்களை வெருட்டிக் கொண்டு நின்டார். நான் போய் விசாரிக்க வெளிக்கிட என்னையும் அந்தக் கள்ளர் படு துாசணத்தால ஏசினார். உனக்கு பு..... சந்தேகநபர்களை போட்டோ எடுக்கப்படாது என்டு தெரியாதோ என்டு. அந்த கள்ளர் நல்லா சட்டம் படிச்சவர் போல இருந்தார்.

பொலிசிட்ட ஒப்படைக்கிறதுக்கு எதுக்கு பு.... பாத்துக் கொண்டு இருக்கிறிங்கள் என்டும் சொன்னார். அதுவரை அவருக்கு அடி விழவில்லை. அவற்ற மனிசி விடிய 6 மணி போல வந்தா. அவருக்கு உடம்பில ஒரு அடி விழுந்தா எல்லாரும் கோட்டுக்கு போக வேண்டி வரும் என்டு வெருட்டினா. அங்கேயே நின்டு தனக்கு தெரிஞ்ச பொலிசுக்கு கோல் எடுத்தா.... கள்ளனைக் கட்டி வைச்சிருந்தவர்கள் எல்லாரும் பின் வாங்கிட்டினம். 

அதுக்குப் பிறகு மனிசி தன்ர புறுசனுக்கு பாதுகாப்பு கிடைச்சிட்டு. இனி அடி விழாது என்ட துணிவிலயும் பொலிசு வாறான் என்ட துணிவிலையும் லோயரிட்ட போயிட்டுது. ஆரோ கொஞ்சப் பேர் எங்கேயோ இருந்து வந்தாங்கள்.... இப்பிடி கன்டுத்தாச்சி மாட்டை களவா கொண்டு போய் வெட்ட திரிஞ்சிரிக்கிறியே... இப்பிடி எத்தினை மாட்ட வெட்டியிருப்பாய், தடுக்க வாறவங்களையும் கொலை செய்வாய் “ என்டு கேக்க அவர் அவங்களையும் துாசணத்தால் பேசினார். அவருக்கு பின்னால வந்து ஒருத்தன் அவற்ற தலையை சறத்தால மூடினான்.... அது்ககுப் பிறகு அவனுக்கு காலுக்கு கீழயும் கையுக்கும் பொல்லுகளால் ’குழறக் குழற தாக்குதல் நடாத்தப்பட்டதுஃ. நான் நினைக்கிறன் அவன் நடக்க வெளிக்கிட கன நாள் ஆகும் என்டு. அதுக்குப் பிறகு மனிசி வந்து அங்க நின்ட எல்லாரையும் படம் எடுத்தா.. அவாட போனையும் பின்னல வந்து ஒருத்தன் பறிக்கு அடிச்சு உடைச்சுட்டான்.... 

பிறகு பொலிசு வந்து அவன்ட முகத்த மூடின சறத்தை எடுத்துப் போட்டு வாகனத்துக்குள்ள துாக்கிப் போட்டுக் கொண்டு போயிட்டாங்கள்... 

மேலே கூறப்பட்ட விடயம் அங்கே நின்ற நபர் தெரிவித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Thumpalayan said:


மாட்டுக்கள்ளன் செய்தது சரி எண்டு எங்கேயாவது கூறியிருக்கிறேனா?

இல்லை நீங்கள் சொல்லவில்லை ...........
இதை நாங்கள் 10 திரி திறந்து வாதிடலாம் 
முடிவு வராது.

சின்ன ஒரு சுட்டிகாடுக்குதான் உங்களின் கருத்தை மேற்கோள் காட்டினேன்.

நான் திரும்பவும் தூள் கடத்துவேன் என்று 
மயூரன் சொன்னாரா ? 
மயூரனை பொறுத்தவரை அப்படி ஒரு முடிவை நாம்தான் எடுக்கிறோம்.

இவர் இதுவரை எத்தனை மாடு கடத்தினார் என்பது யாருக்கும் தெரியாது.

மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே "மயூரனை தூக்கில் இட  வேண்டாம் என்று சொன்னார்கள்" 
தவிர மயூரன் செய்தது சமூகசேவை  என்று யாரும் கோரவில்லை.

நாம் மயூரனை பற்றி எழுதுவது எல்லாம் ......
மாட்டுக்கார வேலனுக்கு பொருந்தும்.
அது பிழை .... இது சரி என்று ஒருபோதும் சொல்லமுடியாது.

எனக்கும் இப்படி அடிப்பதில் இஸ்ட்டம் இல்லை ... எதோ ஒரு விதத்தில் அவனும் அப்பாவியாக இருக்கலாம்.
இவனின் அப்பாவி தனத்தை வைத்தே வேறு ஆட்கள் இதை செய்து இருக்கலாம். 
எனக்கு ஒரு சொந்த அனுபவம் உண்டு .....
1987இல் நிறைய திருகோணமலை மக்கள் அகதிகளாக வந்து வடமராச்சி கரை ஓரங்களில் இருந்தார்கள் 
அவர்களுக்கும் சம்மபத்தியம் என்று வந்த இடத்தில் ஒன்றும் இல்லை ...
நாம் பந்து விளையாடிவிட்டு இருட்டு என்பதால் இருந்து கதைத்துக்கொண்டு இருந்தோம் 
ஒரு இளைஞன் ஒரு சயிக்கிளை கொண்டுவந்து தான் அதை விக்க போவதாக சொன்னார்.
ஒரு அண்ணளவாக புது சயிக்கிள் அப்போ 900-1000 ரூபா பெறுமதி இருக்கும் விலையை கேட்க 
500 ரூபா சொன்னார் ........ ஒருவரிடமும் 500 ரூபா இல்லை ... ஆனால் மிக்க மலிவு விலை. அப்போ சிலர் 
அவருடன் அளாவ தொடங்கினார்கள் ... ஏன் அவர் 500க்கு விக்கிறார் என்பது கேள்வியாக இருந்தது.
அப்போதே எம்மோடு இருந்த ஒருவர் அவருக்கு கன்னத்தில் அடித்துவிடடார் ... எங்கு களவு எடுத்தனீ ?
அவரும் பதடடத்தில் தான் தெரியாமல் திருடிவிடடேன் என்று சொல்லிவிட்டார் ...
எல்லோரும் அவருக்கு அடித்தான் .......... உண்மையில் நான் அடிக்கவில்லை (எனக்கு எப்போதும் ஒரு இரக்க குணம்) ஒரு கடை  ஒன்று முன்னுக்கு இருந்தது அங்கு கூட்டி சென்று .. பெட்ரோல்மாக்ஸ் வெளிச்சத்திற்காக 
அங்கும் எல்ல்லோரும் மாறி மாறி கேள்வியும் அடியும் ..... அவர் தங்க முடியாமல் 
தண்ணி தண்ணி என்று அழ தொடங்கினார் .... அப்போ கடையில் ஒரு வாளியில் தண்ணி இருந்தது 
அதை தூக்கி கொடுத்தார்கள் ... அவர் குடிக்கும்போதும் .. ஒருவர் அடித்தார். இன்னொருவர் சொன்னார் 
தண்ணி குடிக்கும்போது அடிக்க வேண்டாம் என்று .... பாவம் அந்த இளைஞன் .. இப்போ அவன் தண்ணியை கீழே வைக்கவில்லை  தொடந்து குடித்து கொண்டு இருக்கிறான் .. இவர்களோ அவன் தண்ணி குடித்து முடிய அடிக்க  பார்த்து கொண்டு நிற்கிறார்கள் .... அவனை வைத்து இரவு முழுதும் அடித்து காலைதான் விடடார்கள்.
நாம் எங்காவது இப்போது சந்திக்கும் போது இதை பற்றி பேசி சிரிப்பதுண்டு .... அவன் தண்ணி குடித்ததை.
எனக்கு என்னமோ நாங்கள் மிருகங்களாக இருந்த உணர்வுதான் இப்பொது அதை நினைக்கும்போது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிழலி said:

என்னைப் பொறுத்தவரைக்கும்

மற்றது, இங்கு யாரும் திருடரை புண்ணியவானாக காட்டவோ, விடுவிக்கவோ, அல்லது தாம்பாளத்தில் வைச்சு தாங்கவோ சொல்லவில்லை. அவரை சட்டம் பார்த்துக் கொள்ளட்டும் என பொலிசுக்கு பிடிச்சுக் கொடுத்து இருக்க வேண்டும். இலங்கை நீதித்துறையில் எனக்கு நம்பிக்கை இல்லை, எனவே நீதியை நானே கையிலெடுப்பேன் என்று சொல்வது மேலும் மேலும் குற்றவாளிகளை பெருகத்தான் வழி சமைக்கும். இதைச் சொல்ல நான் யேசுவாகவோ புத்தன் காந்தியாகவோ இருக்கத் தேவை இல்லை, ஒரு மனிதனாக இருத்தலே போதும்

இலங்கையில் நீதித்துறை சரியில்லாதபடியால் தான் சில/பல சந்தர்ப்பங்களில் மக்கள் நீதியை தங்கள் கையில் எடுக்க வேண்டி வருகின்றது.கள்ளனை பொலிசில் பிடித்து குடுத்தால் கூட கள்ளனின் குடும்பமோ உறவினர்களோ செல்வாக்கான ஒருவரை பிடித்து சுலபமாக தண்டனையில்லாமல் வெளியே வந்துவிடுவான்.
இலங்கையில் பொலிசுக்கு பெண்களை கூட்டிக்கொடுத்தோ அல்லது சாராயப்போத்தலை கொடுத்தோ கள்ளர் நீதியை கையிலெடுத்த சம்பவங்கள் ஏராளம்......எக்கச்சக்கம்....ஏன் கொலை செய்தவர்கள் கூட சுதந்திரமாக திரிந்தார்கள். அப்படி திரிந்தவர்களுக்குத்தான் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் நீதியை கையிலெடுத்தார்கள்.

ஆசியநாட்டு காவல்துறை கேடுகெட்ட காவல்துறை.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நிலைமை இல்லாத போது மக்கள் தாமாகவே சட்டத்தைக் கையிலெடுப்பது இயற்கை.

அடி வாங்கியவரின் மனைவியின் குமுறலின் படி பார்த்தா இது இத்துடன் முடியவில்லை.தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நிலைமை இல்லாத போது மக்கள் தாமாகவே சட்டத்தைக் கையிலெடுப்பது இயற்கை.

அடி வாங்கியவரின் மனைவியின் குமுறலின் படி பார்த்தா இது இத்துடன் முடியவில்லை.தொடரும்.

வன்முறைகள் தொடர்கதை தானே....13 இராணுவத்தினருக்காக 83 ஆண்டு இனக்கலவரம்....30வருட‌ போராட்டத்திற்காக முள்ளிவாய்க்கால்....ஒரு மாட்டுக்காக இனி என்ன நடக்குதோ...எல்லாம் அவன் செயல்...

  • கருத்துக்கள உறவுகள்

சரி, இதே கள்ளனுக்கு இதே அடியை போலீஸ் அல்லது ஆமி குடுத்திருந்தா இங்கு அடிச்சது சரி எண்டு கருத்து   எழுதின எத்தின பேர் அவர்கள் அடிச்சது சரி என்று சொல்லுவார்கள்?

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்
On 06/04/2017 at 0:20 PM, ஈழப்பிரியன் said:

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நிலைமை இல்லாத போது மக்கள் தாமாகவே சட்டத்தைக் கையிலெடுப்பது இயற்கை.

அடி வாங்கியவரின் மனைவியின் குமுறலின் படி பார்த்தா இது இத்துடன் முடியவில்லை.தொடரும்.

மனைவி  மட்டுமல்ல

திருடியவரும்

வாய்த்தர்க்கத்திலும்

என் மீது கை வைத்தால்  வாள் வெட்டுக்காரரை கூப்பிடுவேன்  என்றும் வெருட்டியதாலேயே

நின்ற இளைஞர்களுக்கு சூடு வந்ததாக அறியமுடிகிறது

பின்புலம் ஏதோ இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

சரி, இதே கள்ளனுக்கு இதே அடியை போலீஸ் அல்லது ஆமி குடுத்திருந்தா இங்கு அடிச்சது சரி எண்டு கருத்து   எழுதின எத்தின பேர் அவர்கள் அடிச்சது சரி என்று சொல்லுவார்கள்?

அப்போதும் பிழை என்றுதான் சொல்லுவோம் ......
பிழையை பிழை என்றுதானே சொல்ல வேண்டும்.

போலீஸ் பிடித்தால் .....
சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்யவேண்டும்.
நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் 
நீதிபதி நேர்மையான தீர்ப்பு வழங்க வேண்டும்.

ஆமி போலீஸ் பிடித்து அடித்தால் 
அது இதைவிட கொடிது 
சட்டம் செத்து விட்ட்து என்றுதான் பொருள். 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2017 at 8:26 AM, செந்தமிழாளன் said:

பொலிசிட்ட ஒப்படைக்கிறதுக்கு எதுக்கு பு.... பாத்துக் கொண்டு இருக்கிறிங்கள் என்டும் சொன்னார். அதுவரை அவருக்கு அடி விழவில்லை. அவற்ற மனிசி விடிய 6 மணி போல வந்தா. அவருக்கு உடம்பில ஒரு அடி விழுந்தா எல்லாரும் கோட்டுக்கு போக வேண்டி வரும் என்டு வெருட்டினா. அங்கேயே நின்டு தனக்கு தெரிஞ்ச பொலிசுக்கு கோல் எடுத்தா.... கள்ளனைக் கட்டி வைச்சிருந்தவர்கள் எல்லாரும் பின் வாங்கிட்டினம். 

சூப்பர் இந்த கருத்தைதான் இங்கும் வைத்தவர்கள் ஒருவேளை சொந்தகாரங்களா இருப்பாங்களோ ?

:cool::cool:

  • கருத்துக்கள உறவுகள்

 

மனிதன் என்பது வெறும் மென்பொருள் மட்டும்தான். அடிப்படையில் இயந்திரம் அனைத்து விலங்கையும் ஒத்தது தான். அடிப்படை இச்சைகள் பயங்கள் அனைத்தும் அனைத்து மிருகங்களிற்கும் தேவை சார்ந்து ஒரே வகையில் தானே அமைகின்றன.

அடிக்கப்பட்டுப் போடப்பட்டிருக்கும் இளைனைப் பார்க்க மனது வலிக்கிறது. அதே நேரம் சொத்திழந்தவர்களின் வாதம் முற்றாகப் புரிகிறது: போலிஸ் அடிச்சால் என்ன அயலவர் அடித்தால் என்ன, தண்டனை பற்றி மட்டும் சிந்திக்கையில் எல்லாம் ஒன்று தான்.

பிரச்சினை இங்கு, எதனால் இளைஞர்கள் களவினை தொழிலாக்குகிறார்கள் என்பது. அது பசு வழர்ப்பவர்கள், திருடுபவர்கள் சமூகத் தலைவர்கள் உட்பட்ட சமூகத்தின் அனைத்து சாராரையும் சோர்த்து நடக்கவேண்டிய உரையாடல். அதற்கு சோதினை மட்டும் திறமைசாலிகளை அடையாளம் காணும் காட்டுமிராண்டித்தனம் மாறவேண்டும். அதற்கு தலைமைத்துவப் பண்புகள் மட்டுமன்றி சற்று தியாகமனப்பான்மை உடையவர்கள் தேவைப்படும். அத்தகைய மனப்பான்மையும் திறமையும் உடையவர்களை அடையாளங்கண்டு வளர்ப்பதற்கு சமூகத்திற்கு அவகாசம் இல்லை என்பது இத்தகைய செய்திகளில் மேலும் உணரப்படுகையில் மீண்டும் வெற்றிடம் வலிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

மாடு திருடியதற்கு இவ்வளவு தண்டனை வழங்கும் தமிழர்கள்.. தங்கள் சொந்தக் காணிகளை.. நிலங்களை... பிள்ளைகளை.. பெண்களை.. திருடிய சிங்கள முப்படைகளை வைத்து ஆராதிப்பதன் நோக்கம் என்னவோ..??! :rolleyes:tw_angry:

திருடியவரை பிடித்து நீதிமன்றில் சமர்ப்பத்திருக்கலாம்.. அல்லது பொறுப்பான சமூக அதிகாரிகளிடம் கையளித்து நன்னடத்தை போதித்திருக்கலாம். மாடு திருடுவது இவ்வளவு பெரிய தண்டனைக்குரிய குற்றமா..??! 

அங்கால பெண்களை சீரழிக்கும்.. எங்கடை ஆக்களையே தண்டிக்க காணம்...?! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, nedukkalapoovan said:

மாடு திருடியதற்கு இவ்வளவு தண்டனை வழங்கும் தமிழர்கள்.. தங்கள் சொந்தக் காணிகளை.. நிலங்களை... பிள்ளைகளை.. பெண்களை.. திருடிய சிங்கள முப்படைகளை வைத்து ஆராதிப்பதன் நோக்கம் என்னவோ..??! :rolleyes:tw_angry:

திருடியவரை பிடித்து நீதிமன்றில் சமர்ப்பத்திருக்கலாம்.. அல்லது பொறுப்பான சமூக அதிகாரிகளிடம் கையளித்து நன்னடத்தை போதித்திருக்கலாம். மாடு திருடுவது இவ்வளவு பெரிய தண்டனைக்குரிய குற்றமா..??! 

அங்கால பெண்களை சீரழிக்கும்.. எங்கடை ஆக்களையே தண்டிக்க காணம்...?! :rolleyes:

இளகிய இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடித்த கதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, vasee said:

 

கோதாரி விழ....உது எந்தநாட்டிலையப்பா நடந்தது..tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கோதாரி விழ....உது எந்தநாட்டிலையப்பா நடந்தது..tw_astonished:

வலது பக்க ஓட்டம் இந்தியா மாதிரி!?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.