Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதிலை சொல்லுங்கள் உறவுகளே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தத் திரியில எனக்கு வாற சந்தேகங்களை கேட்கப் போறேன்...பதில் தெரிந்தால் சொல்லுங்கள் உறவுகளே.
 
என்ட முதற் கேள்வி என்னனென்டால் ஏன் தமிழ்ப் பெடியன்கள் சராசரியான உயரம் குறைவாகவோ அல்லது கட்டையாகவோ இருக்கிறார்கள்?
 
இது தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேனே அன்றி யாரையும் புண்படுத்தவோ,மனம் நோகடிக்கவோ இல்லை
 
  • Replies 50
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

th_hmmm-anm-hmmm-female-smiley-emotico.gஎன்ன எதேனும் விசேசமோ  மாப்பிள்ளை கீப்பிள்ளை பார்க்கிறாங்க போல் இருக்கிரதே tw_blush::unsure::rolleyes:

டெண்டுல்கர் கூட கட்டை குட்டைதான் ரதி  

Edited by தனி ஒருவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒன்டுமில்லை முனிவர்ஜீ,மாப்பிள்ளை இனி மேல் நானாய் பார்த்தால் தான் உண்டு<_<... இந்தக் கேள்வி என்ட மனசில நீண்ட காலமாய் இருக்கு...அன்டைக்கு நானும்,என்ட பிரெண்டும் கதைத்தோம்...ஏன் தமிழ்ப் பெடியங்கள் பெரும்பாலும் கட்டையாக இருக்கிறார்கள் என்டு தெரியவில்லை என்டு அவவும் சொன்னாtw_blush:. அது தான் உங்கு எழுதிக் கேட்டேன். யாழை விட்டால் வேற கதி :cool:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் திராவிடர்கள் என்பதால் கட்டையாகவும் கறுப்பாகவும் விகாரமான தோற்றமுடைய அரக்க இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற இனக் கலப்பில்லாத அந்தமான் தீவில் இருக்கும் பழங்குடியினரைப் பார்த்தான் ஏன் கட்டையாகவும் கறுப்பாகவும் இருக்கின்றார்கள் என்று தெரியும்.

நல்ல உயரமாகவும், நிறமாகவும் இருந்தால் ஆரிய, பாரசீக, போர்த்துக்கீச, ஒல்லாந்து ஜீன்களின் ஒன்று கட்டாயம் இருக்கும் ?

எப்படி வந்திருக்கும் என்று கேட்கக்கூடாது?

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

அப்படி ஒன்டுமில்லை முனிவர்ஜீ,மாப்பிள்ளை இனி மேல் நானாய் பார்த்தால் தான் உண்டு<_<... இந்தக் கேள்வி என்ட மனசில நீண்ட காலமாய் இருக்கு...அன்டைக்கு நானும்,என்ட பிரெண்டும் கதைத்தோம்...ஏன் தமிழ்ப் பெடியங்கள் பெரும்பாலும் கட்டையாக இருக்கிறார்கள் என்டு தெரியவில்லை என்டு அவவும் சொன்னாtw_blush:. அது தான் உங்கு எழுதிக் கேட்டேன். யாழை விட்டால் வேற கதி :cool:

ஹீ... ஹீ..

அக்கா, இன்னும் இந்த தம்பியை பாக்கேல்லை எண்டு தெரியுது....

:grin: 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

தமிழர்கள் திராவிடர்கள் என்பதால் கட்டையாகவும் கறுப்பாகவும் விகாரமான தோற்றமுடைய அரக்க இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற இனக் கலப்பில்லாத அந்தமான் தீவில் இருக்கும் பழங்குடியினரைப் பார்த்தான் ஏன் கட்டையாகவும் கறுப்பாகவும் இருக்கின்றார்கள் என்று தெரியும்.

நல்ல உயரமாகவும், நிறமாகவும் இருந்தால் ஆரிய, பாரசீக, போர்த்துக்கீச, ஒல்லாந்து ஜீன்களின் ஒன்று கட்டாயம் இருக்கும் ?

எப்படி வந்திருக்கும் என்று கேட்கக்கூடாது?

அதே நேரம், வெளிநாடுகளில் வளரும் பிள்ளைகளை சராசரியைவிட உயரமாக வளர்ந்து வருவதையும் காண்கிறோம். ஊட்டம் மிக்க உணவு காரணமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இசைக்கலைஞன் said:

அதே நேரம், வெளிநாடுகளில் வளரும் பிள்ளைகளை சராசரியைவிட உயரமாக வளர்ந்து வருவதையும் காண்கிறோம். ஊட்டம் மிக்க உணவு காரணமாக இருக்கும்.

இருக்கலாம். ஆனால் ஆறடி வளர்ந்த பெண்கள் என்று இரண்டு பேரைத்தான் நான் கண்டிருக்கின்றேன்.?

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை 'ஜீன்கள்' தான் காரணமாக இருக்கும்!

ஜப்பானியர்களும், சீனர்களும் எம்மைப்போலவே கட்டையானவர்கள் தான்!

ஆனால், இசை சொன்னது போல மக்ஸ். கே.எவ். சீ , எல்லாம் சாப்பிடத் துவங்கினப் பிறகு ...அவர்களின் சராசரி உயரம் ..நாற்பது வருடங்களுக்குள் மிகவும் அதிகரித்துள்ளது!

நான் கொஞ்சக்காலம் பட்ஜி, மீன் போன்றவை வளர்த்து வந்தேன்! காட்டில் இயற்கையாக வளரும் பட்ஜிகளை விடவும் கூடுகளிள் வளர்க்கும் பட்ஜிகள் கொஞ்சம் பெரிதாக இருக்கும்! அதே போலத் தான் chiclids  என அழைக்கப் படும் ஆபிரிக்காவின் வாவி மீன்களும்!

Budgerigar%2002.jpg?itok=PXe3EY0Y

budgie-home-aviary-green-yellw-budgeriga

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரதி said:

என்ட முதற் கேள்வி என்னனென்டால் ஏன் தமிழ்ப் பெடியன்கள் சராசரியான உயரம் குறைவாகவோ அல்லது கட்டையாகவோ இருக்கிறார்கள்?

அங்கை கனபேர் கொக்கைத்தடிமாதிரி வளர்ந்து இருக்கினம்.....தங்கச்சியின்ரை கண்ணுக்கு தெரியேல்லையே....1.65 / 1.70ல்லாம் கணக்கான உயரம் தானே :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அரிக்கன் கிடாய் மாதிரி இருக்கிறதிலயும் ஒரு சந்தோசம் இருக்குத்தானே

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சராசரி  உயரம்....  5 அடி  5 அங்குலம் தான். 
மேற்கு நாட் டில்  உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது.... குள்ளமாக தெரிவது வழமை தானே ரதி.     

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மட்டும் சந்தேகங்களும் கேள்விகளும் அடிக்கடி வருகிறதே ஏன் ரதி..? எங்களுக்கு சந்தேகம் வந்தாலும்கேட்பதற்கு பயம் இல்ல கேட்டாலும் ஏதோ ஒரு ஜந்து வந்து போகிறது என்ற மாதிரியான நிலைப்பாடு தான்....அவதானித்தவரையில்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு கேள்வி இங்க....

கேள்வி கேட்டவர் தானும், தனது சிநேகதியும் கதைச்ச விசயத்தினை கேட்பதாக சொன்னார்.

கிருபன் தனக்குத் தெரிந்து இரண்டு பேர் தான் உசரமானவர்கள் என்று சொன்னார்.

நான் கேட்டேன்: அந்த இருவரும் கேள்வி கேட்டவரும், சிநேகிதியுமோ என்று....

உதில என்ன விசயம் இருக்குது என்று கத்தி சுழண்டது என்று தலைக்குள குடையுது ஒரு கேள்வி....

கத்தி சுழட்டினவர் சரியான உசரம் போல கிடக்குது... :grin: 

அட சிரிச்சுட்டுப் போங்கப்பா.... இதுக்கும் கத்தியை தூக்காம..

12 hours ago, கிருபன் said:

இருக்கலாம். ஆனால் ஆறடி வளர்ந்த பெண்கள் என்று இரண்டு பேரைத்தான் நான் கண்டிருக்கின்றேன்.?

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் பூகோள அமைப்பில் அந்தந்த கண்டங்கள் நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு அமைவது. மனிதர் மட்டுமல்ல விலங்குகள் பறவைகளும் அப்படித்தான்.....! 

ஜப்பானியர், சீனர், தாய்லாந்தியர் அண்ணளவாய் ஒரே அளவு உயரம், நிறங்களிலும் முக அமைப்பிலும் சற்று வேறுபாடு. ஐரோப்பியர்களிலும் ஜெர்மானியர் நல்ல ஆகிருதியான உடலமைப்பு, இத்தாலியர் ரோமானியர் நல்ல உயரமாயும் வலித்த நரம்புத் தேகவாகுடனும் இருப்பர்.  பிலிப்பைனியர்களைப் பார்த்தால் வாலிப ஆண்களும் பெண்களும் ஒரே முகவெட்டு ஒரே ஜாடையுடன் வித்தியாசமின்றி அழகாய் இருப்பார்கள். அப்படியே யானைகளிலும் ஒட்டகங்களிலும் வித்தியாசத்தைப் பார்க்கலாம்.....!

கணக்க ஏன் நம்ம யாழ்ப்பாணத்திலேயே அளவெட்டி தெல்லிப்பளை வசாவிளான் மாவிட்டபுரம் ஆண்களைப் பார்த்தால் பொன்னிறத்துடன் நெடுநெடுவென்று உயரமாய் நிண்டுகொண்டே தேங்காய் பறித்து அதை வெறுங்காலால் பனையளவு உயரத்துக்கு  அடிக்கிற ஆகிருதியுடன் இருப்பார்கள்.

என்னைப் பற்றியும் எடுத்து விடுவன், அநியாயத்துக்கு ஆறெழுபேர் என்னை நேரில் சந்தித்திருப்பதால் அடக்கி வாசிக்கிறன்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அங்கை கனபேர் கொக்கைத்தடிமாதிரி வளர்ந்து இருக்கினம்.....தங்கச்சியின்ரை கண்ணுக்கு தெரியேல்லையே....1.65 / 1.70ல்லாம் கணக்கான உயரம் தானே :grin:

இது தம்பிமாரின்ட உயரமா நீட்டமா ஐயா?tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

ஹீ... ஹீ..

அக்கா, இன்னும் இந்த தம்பியை பாக்கேல்லை எண்டு தெரியுது....

:grin: 

பின்ன நான் மட்டும்  6 அடியோ என்னைப்பார்த்தாலும்  அப்படித்தான்  கடுகு  சிறிது காரம் பெரிது நாதா ஊர் பழமொழி உண்டு tw_blush:

17 hours ago, குமாரசாமி said:

அங்கை கனபேர் கொக்கைத்தடிமாதிரி வளர்ந்து இருக்கினம்.....தங்கச்சியின்ரை கண்ணுக்கு தெரியேல்லையே....1.65 / 1.70ல்லாம் கணக்கான உயரம் தானே :grin:

அடபாவி மனுசா - 163க்கு குறைச்சா நானும் உள்ளுக்குள்ள வந்திருப்பனே :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

அடபாவி மனுசா - 163க்கு குறைச்சா நானும் உள்ளுக்குள்ள வந்திருப்பனே :grin:

நயினாதீவு போட்டில இருந்து, நடந்து போகேக்கை, நம்ம முனிவர் ஜீ  எடுத்துக் போட்ட படத்தில இருந்து மட்டுக் கட்டியாச்சு... 155 தான். 160 வாறதே கஷடம். :grin:

கேள்வியை பார்த்தால் பெண்கள் எல்லாம் உயரமானவர்களாகவும் ஆண்கள் குட்டையாக உள்ளது போல் அல்லவா இருக்கிறது. பெண்கள் ஏன் ஆண்களை விட கட்டையாக இருக்கிறார்கள் என்பதற்கு பதில் கிடைத்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன மாதிரி திராவிடர் ஆகிய தமிழர்கள் கறுப்பானவர்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான் ஆனால் உயரம்?... சராசரி தமிழ் ஆண்களோடு ஒப்பிடுகையில் எப்படி தமிழ்ப் பெண்கள் அவர்களை விட உயரமாக உள்ளார்கள்?

12 hours ago, Nathamuni said:

எனக்கும் ஒரு கேள்வி இங்க....

கேள்வி கேட்டவர் தானும், தனது சிநேகதியும் கதைச்ச விசயத்தினை கேட்பதாக சொன்னார்.

கிருபன் தனக்குத் தெரிந்து இரண்டு பேர் தான் உசரமானவர்கள் என்று சொன்னார்.

நான் கேட்டேன்: அந்த இருவரும் கேள்வி கேட்டவரும், சிநேகிதியுமோ என்று....

உதில என்ன விசயம் இருக்குது என்று கத்தி சுழண்டது என்று தலைக்குள குடையுது ஒரு கேள்வி....

கத்தி சுழட்டினவர் சரியான உசரம் போல கிடக்குது... :grin: 

அட சிரிச்சுட்டுப் போங்கப்பா.... இதுக்கும் கத்தியை தூக்காம..

நாதம்ஸ், நான் எத்தனை அடி உயரம் இருப்பேன் என்று நந்தனாருக்குக் தெரியும் கேட்டுப் பாருங்கள்.<_<

15 hours ago, யாயினி said:

உங்களுக்கு மட்டும் சந்தேகங்களும் கேள்விகளும் அடிக்கடி வருகிறதே ஏன் ரதி..? எங்களுக்கு சந்தேகம் வந்தாலும்கேட்பதற்கு பயம் இல்ல கேட்டாலும் ஏதோ ஒரு ஜந்து வந்து போகிறது என்ற மாதிரியான நிலைப்பாடு தான்....அவதானித்தவரையில்...

யாயினி,ஏன் இந்தக் கோபம்?...யார் உங்களை நாறல் மீன் மாதிரி பார்த்தது?...நீங்கள் கேட்பதற்கு தங்களால் இயன்ற வரை பதில் சொல்லிக் கொண்டு தானே இருக்கிறார்கள்...இந்தத் திரி உங்கள் மனதைப் பாதித்து இருந்தால் மன்னிக்கவும்

கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்:cool:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பூமியின் மத்திய கோட்டை அண்டி வாழ்ந்து வருவதால்.. அதிகம் சூரிய வெளிச்சத்துக்கும்.. அழுத்தம் கூடிய காற்று மண்டலத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஆகவே தான் அவர்கள் சராசரியாக கறுப்பாகவும்.. (சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்க.. கறுப்பை கொடுக்கும் தோல் நிறமணி உதவுகிறது).. காற்றழுத்தம்.. கூடியஅடர்த்தியான காற்று மண்டத்தில்.. ஒப்பீட்டளவில்.. கூடிய ஒக்சிசன்.. குறைந்த மட்டத்திலேயே போதிய அளவு கிடைப்பதால்.. சராசரி உயரம் குறைவாகவும் உள்ளனர். இதே.. சூரிய வெளிச்சம் குறைந்த துருவத்தில்.. வெள்ளையாகவும்.. காற்று மண்டல அடர்த்தி.. அழுத்தம்.. குறைந்த இடத்தில் போதிய அளவுக்கு ஒக்சிசனை பெற.. உயரமாகவும் உள்ளனர். 

அதேபோல்.. மூக்கின் அமைப்பும்.. எம்மவருக்கு அதிக வெப்பத்தை உடல் இழக்கும் வகையில்.. பெரிய துவாரங்களோடு.. அகண்டு  அமையும். இதே துருவத்தை அண்டிய ஆக்களில் வெப்ப இழப்பை குறைக்கவும் குளிர்காற்றை சூடாக்கி உடலில் எடுக்கவும்.. மூக்கு ஒடுங்கி நீண்டு இருக்கும்.

இதே இமயத்தை அண்டிய மலைப் பகுதிகளை அண்டி வாழும்.. சீனர்களுக்கு சப்பையாக அகன்று.. குறுகி இருக்கும். காரணம்.. மலைப் பகுதிகளில் ஒக்சிசன் அளவு குறைவு என்பதால்.. கூடிய ஒக்சிசனை உள்வாங்கும் அதேவேளை வெப்ப இழப்பதையும் அது குறைக்க முயல்கிறது. குறைந்த கதிர்ப்பை எதிர்கொள்ள உடல் கட்டையாகவும் இருக்கும். 

இயற்கை என்பது ஒவ்வொரு உயிரினமும் அதன் சூழலுக்கு ஏற்ப வாழ அதில் மாற்றங்களை மரபணுக்களில் ஏற்படுத்தும் விகாரங்களை.. மாறல்களை செய்து வருகிறது.

இன்னும் இந்த மாற்றங்களை தூண்டும் சரியான காரணிகள் எப்படி மரபணுக்களில் செல்வாக்குச் செய்கின்றன என்பது.. சரியாக விளங்கப்படவில்லை. மாறாக டார்வின் இயற்கைத் தேர்வுக் கொள்கை மூலமும்.. டி என் ஏ மாறல்கள் கொண்டும்.. இன்னும் விளங்கம் கொடுத்து வருகினம்.  அந்த மாறல்கள் எப்படி அச்சொட்டாக நிகழத் தூண்டப்படுகின்றன என்பதில்.. இன்னும் விளங்க பல இருக்கிறது. tw_blush:

(இவை ஆய்வு ரீதியான கருத்துக்கள் அல்ல. அவதானிப்பு மற்றும் அது தொடர்பான விளக்கம்  சார்ந்த கருத்துக்கள்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, suvy said:

உதெல்லாம் பூகோள அமைப்பில் அந்தந்த கண்டங்கள் நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு அமைவது. மனிதர் மட்டுமல்ல விலங்குகள் பறவைகளும் அப்படித்தான்.....! 

ஜப்பானியர், சீனர், தாய்லாந்தியர் அண்ணளவாய் ஒரே அளவு உயரம், நிறங்களிலும் முக அமைப்பிலும் சற்று வேறுபாடு. ஐரோப்பியர்களிலும் ஜெர்மானியர் நல்ல ஆகிருதியான உடலமைப்பு, இத்தாலியர் ரோமானியர் நல்ல உயரமாயும் வலித்த நரம்புத் தேகவாகுடனும் இருப்பர்.  பிலிப்பைனியர்களைப் பார்த்தால் வாலிப ஆண்களும் பெண்களும் ஒரே முகவெட்டு ஒரே ஜாடையுடன் வித்தியாசமின்றி அழகாய் இருப்பார்கள். அப்படியே யானைகளிலும் ஒட்டகங்களிலும் வித்தியாசத்தைப் பார்க்கலாம்.....!

கணக்க ஏன் நம்ம யாழ்ப்பாணத்திலேயே அளவெட்டி தெல்லிப்பளை வசாவிளான் மாவிட்டபுரம் ஆண்களைப் பார்த்தால் பொன்னிறத்துடன் நெடுநெடுவென்று உயரமாய் நிண்டுகொண்டே தேங்காய் பறித்து அதை வெறுங்காலால் பனையளவு உயரத்துக்கு  அடிக்கிற ஆகிருதியுடன் இருப்பார்கள்.

என்னைப் பற்றியும் எடுத்து விடுவன், அநியாயத்துக்கு ஆறெழுபேர் என்னை நேரில் சந்தித்திருப்பதால் அடக்கி வாசிக்கிறன்.....!  tw_blush:

வடமராட்சி ஆம்பிளையள் சரியான கட்டை......:cool:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நீங்கள் சொன்ன மாதிரி திராவிடர் ஆகிய தமிழர்கள் கறுப்பானவர்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான் ஆனால் உயரம்?... சராசரி தமிழ் ஆண்களோடு ஒப்பிடுகையில் எப்படி தமிழ்ப் பெண்கள் அவர்களை விட உயரமாக உள்ளார்கள்?

நாதம்ஸ், நான் எத்தனை அடி உயரம் இருப்பேன் என்று நந்தனாருக்குக் தெரியும் கேட்டுப் பாருங்கள்.<_<

யாயினி,ஏன் இந்தக் கோபம்?...யார் உங்களை நாறல் மீன் மாதிரி பார்த்தது?...நீங்கள் கேட்பதற்கு தங்களால் இயன்ற வரை பதில் சொல்லிக் கொண்டு தானே இருக்கிறார்கள்...இந்தத் திரி உங்கள் மனதைப் பாதித்து இருந்தால் மன்னிக்கவும்

கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்:cool:

நோ உங்களை நான் ஒன்றும் சொல்ல இல்லயே..
அதே நேரம் நிர்வாகத்தையும் இன்றல்ல எண்டைக்குமே தப்புச் சொல்ல இல்ல : சொல்ல மாட்டன்..வீணாக உங்க மேலயோ அவர்கள் மேலயோ எதையும் தூக்கிப் போட்டுக் கொள்ள வேண்டாம்..கையில் உள்ள எல்லா விரலும் ஒரே மாதிரியா இருக்கிறது அப்படித் தான் எல்லாம் விட்டுடுங்க..ஏன் இடையில் முறித்துக் கொண்டு ஓடப் பாக்கிறீங்கள் தொடருங்கள்..எப்படி அடிக்கடி சந்தேகம் வருகிறது என்று கேட்டு இருந்தேன்........

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

வடமராட்சி ஆம்பிளையள் சரியான கட்டை......:cool:

நெசமாவா சொல்லுறியள்  சுவி அண்ணை உங்களுக்கா இது ??tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 தனி, அது அவர் வடமாராட்சி வாலிபரை சொல்கிறார்.......! நான் சரியான குட்டை. சும்மா வாயைப் புடுங்கிறது, இப்ப சந்தோசமா. போய் பிரிட்ஜிலிருந்து கூலா ஒரு கிளாஸ் தண்ணி குடியுங்கோ ..!  tw_blush:   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.