Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

விசிலடிச்சான் குஞ்சுகளும் ஐந்தாம் படையும்

thumbnail?appId=YMailNorrin

  • Replies 3k
  • Views 276.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, zuma said:

 

விசிலடிச்சான் குஞ்சுகளும் ஐந்தாம் படையும்

thumbnail?appId=YMailNorrin

உங்கள் முயற்சி பலிக்கவில்லை. இன்னொரு தடவை முயற்சியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

 

விசிலடிச்சான் குஞ்சுகளும் ஐந்தாம் படையும்

thumbnail?appId=YMailNorrin

உங்களிடமிருந்து இன்னும் இன்னும் இன்னும் கூட ஏதிர்பார்க்கின்றம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி.?

 

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பத்தூர் தொகுதி – தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 10 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

event_image_1DXfdubS9.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி அரசியலில் ஒரு நாள் கூட தாங்கமாட்டார் சீமான்

 

 

பனைத்திருவிழா2020 - சிவகங்கை சட்டமன்றத்தொகுதி | வெற்றிக்குமரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 15:33, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

நீங்கள் முன்பு புளட் சார்பாக இருக்கும் ஒருவருடன் சேர்ந்து புலிகளை நக்கல் அடித்தது அநேகருக்கு  தெரியும். அது இரட்டை வேடமில்லையா??

மற்றவர்கள் கூட்டமாக எழுதுவதாக கூறும் நீங்கள் உங்களின் கூட்டம் பற்றி சொல்லவே இல்லை.

 
சீமானின் மறு பக்கம் 
 
15. நா.முத்துக்குமார் எனும் பெரு நண்பன்
அண்ணன் சீமான் அறையில் கறி விருந்து
வாசிக்கத்துவங்கிய நாட்களிலிருந்தே புத்தகம் ஒரு கனவு லட்சியம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவன் முதல் புத்தகம் முதல் காதலி போல. நூறு சதவீத சிவாஜி தருணம் .
1999 செப்டம்பர் 19 ல் அப்போது காதர் நவாஸ் கான் சாலையிலிருந்த மாக்ஸ் முல்லர் பவனில் நடந்த என் பைசக்கிள் தீவ்ஸ் திரைக்கதை மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு என் வாழ்க்கையில் நடந்த வரலாற்றுப்புள்ளி.
மாக்ஸ் முல்லர் பவன் சரித்திரத்தில் அப்படி ஒரு கூட்டம் வந்ததில்லை என அப்போதைய இயக்குனர் நிகழ்ச்சி முடிந்து வெளிப்படையாக கூறினார் .
அந்த இடத்தை பிரசன்னா ராமஸ்வாமி மூலமாக பேசி ஏற்பாடு செய்து தந்ததில் மறைந்த இயக்குனர் அருண்மொழிக்கு முக்கிய பங்கு இருக்கிறது அவருடன் ஆந்திரா பேங்க் பால சுப்ரமணியனும் பல உதவிகள் செய்தார். ் இயக்குனர்கள் ஹரிஹரன், ,அம்ஷன் குமார் ஆகியோரையும் அவ்ர்கள்தான் பேசி நிகழ்வில் கலந்துகொள்ள வைத்தனர்.
நண்பர்கள் ரியாஸ் ஜார்ஜ் ஆகியோருடன் பதிப்பாளர் நிழல் திருநாவுக்கரசுவும் புத்தக உருவாக்கத்திலும் வெளியீட்டு விழாவிலும் என்னோடு பங்களித்தனர்.
ஆசான் பாலு மகேந்திரா வெளியிட தங்கர் பச்சான் பெற்றுக்கொண்டார் .நான் சென்னையில் வந்த காலம் தொட்டு எனக்கு நண்பர்களாக இருந்த பலரையும் அழைத்திருந்தேன் . என் பால்ய கால நண்பரும் எனக்கு இலக்கிய வாசிப்பை அறிமுகப்படுத்தியவருமான உத்திரமேரூர் விமல் வந்திருந்தார்.
ஆசான் அன்று முன்னுரை வாங்க வீட்டுக்கு சென்ற போது பேசிய அதே வார்த்தகளை நிகழ்ச்சியிலும் பேசினார் , சினிமா குறித்த அறிவை வளர்க்கும் புத்தகங்கள் தமிழில் அன்று வெகு சொற்பம் . சினிமா கல்வி ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக்கப்படவேண்டும் என்று அன்றுதான் முதன் முதலாக சொன்னார் . அப்படி பாடமாக்கப்படும் போது அஜயன் பாலா வின் இந்த புத்தகம் அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறி என் எழுத்துபாணியை இயல்பான பேச்சு தமிழில் எழுதப்பட்ட உரையடாலை குறிப்பிட்டு பாராட்டிப் பேசினார் .
அவர் சொன்னது போலவே கடந்த ஆண்டு தமிழக அரசு சினிமாவை 11ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்திய போது சினிமா மொழி குறித்த என் கட்டுரையையே வாங்கி பிரசுரித்தது . அதில் இந்த பைசைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை நூல் பற்றிய குறிப்பும் அச்சாகி லட்சக்கணக்கான் மாணவர்களை சென்றடைந்தது . ஆசான் வாக்கு 20 வருடங்கள் கழித்து பலிதமானது அந்த நிகழ்ச்சிக்கு எனது நண்பரும் எழுத்தாளருமான தமிழ் மகன் அப்போது அன்று தினமணியில் பணி செய்து வந்த காயத்ரியுடன் வந்திருந்தார் . அந்த காயத்ரி தான் என்னைப் பற்றிய முதல் செய்தியை மறுநாள் புத்தக வெளியீட்டு விழாவுடன் தினமணியில் எழுதினார். மட்டுமல்லாமல் தொடர்ந்து தினமணியில் உலக சினிமா குறித்த கட்டுரைத்தொடரை எழுதச்சொன்னார் . அப்போது அஜயன் பாலா என்ற பெயர் அடிக்கடி ஊடகங்களில் வந்தால் பிற்பாடு சினிமா இயக்குனராக அறிமுகமாகும் போது தொந்தரவு செய்யுமோ என தேவையில்லாமல் பயந்து இந்திரஜித் என்ற பெயரில் அந்த தொடரை எழுதினேன். ஆனால் காலமோ என்னை அடுத்த சில வருடங்களில் நாயகன் எனும் தொடரை ஆனந்த விகடனில் எழுத வைத்து இரண்டு வருடம் லட்சக்கணக்கான மக்களிடம் அந்த பெயரை வார வாரம் கொண்டு போய் சேர்த்துவிட்டது .
இப்படியாக என் முதல் புத்தகம் உருவானதும் வெளியீட்டு விழாவும் சினிமா இயக்குனராவதன் தோல்வியிலிருந்து என்னை மீளச்செய்தது .
இது நடந்து சில நாட்களுக்குப்பின் அறைக்கு வந்த முத்துக்குமார் முகத்திலும் கண்களிலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு மின்னியது .. பாலா அண்ணன் சீமான் அவர் இயக்கப்போற வீர நடை படத்துல பாட்டு எழுத சொல்லிருக்காரு . என உற்சாகத்துடன் கையிலிருந்த கேசட்டை காட்டி தேவ ட்யூன் கொடுத்துருக்காரு என்றான் . அவன் போராட்டத்துக்கு ஒரு வழியாக பாதை திறந்தது. உடன் பையோடு கொண்டு வந்த வாக்மேனில் கேசட்டை போட்டு காண்பித்தது மட்டுமல்லாமல் அதுவரை தன் எழுதிய சில வரிகளையும் வாசித்து காண்பித்தான்
நல்லாருக்குடா முத்து என்றுவிட்டு நான் குளிக்கப்போய்விட்டேன் அவன் மீத வரிகளையும் எழுதியிருந்தான். குளித்து விட்டு வந்தவுடன் அவன் மீத வரிகளையும். வாசிக்கட்டுமா எனகேட்க எனக்கு இவ்ளோ சீக்கிரமா என ஆச்சர்யம்
வாசித்துக் காண்பித்த போது சில வரிகள் பளிச்சென்றும் சில வரிகள் கொஞ்சம் பழசாகவும் இருந்தது . ஆனால் அவனிடம் அப்போது சொல்லவில்லை .. நட்சத்திர கால் பதிக்கும் வாத்துக்கூட்டம் புடிச்சிருக்கு என்ற வரி மட்டும் பிடித்திருந்தது . எனக்கு அப்போது வைரமுத்துவின் வானம் எனக்கு போதிமரம் நாலும் எனக்கு அது சேதி தரும் என்ற வரிகள் தான் நினைவு வந்தது முதல் பாடல் என்றால் அப்படி நச்சுனு இருக்க வேண்டும்
ஏண்டா இவ்ளோ ஃபாஸ்டா எழுதற மொத வாய்ப்பு கவனமா டயம் எடுத்து எடுத்து எழுதலாமே என கேட்க .. அவனோ இவ்ளோதான் மெட்டுக்கேத்தா மாதிரி வரிகள் இருக்கான்னு பாப்பாங்க இதுசினிமா பல நாம் லேட்பண்ணா சைக்கிள் கேப்ல இன்னொருத்தன் எழுதி குடுத்துடுவான் ‘]
இப்போது பார்த்தால் அவனுடைய ஸ்பெஷலே இந்த வேகம் தான் கண்ணிமைக்கும் நேரத்தில் வரிகளை முடிவு பண்ணிவிடுவான் . பலரும் எழுதலாம். ஆனால் முடிவெடுப்பதில் குழப்பம் வந்து காலதாமதம் செய்வார்கள் . ஆனால் முத்து அப்படியில்லை . அவன் யாரிடமும் ஆலோசனை கேட்பதில்லை அவனுக்கு அவனே சிறந்த நீதிபதி . பல முக்கியமான விடயங்களில் சரியாக முடிவெடுத்தான் திருமணம் செல்வராகன் கூட்டணியிலிருந்து விலகல் எல்லாம் அவன் அப்போது எடுத்த துரித சரியான முடிவுகள் ..
அந்த பாட்டு இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு பிடித்துப்போய் அது வெளியாகும் முன்னே தொடர்ந்து பல பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுத்தார் . ஒரு நாள் இனி சைக்கிளுக்கு குட்பை பல இடங்களுக்கு அலைய வேண்டி இருக்கு டிவிஎஸ் பிப்டி வாங்கலாம்னு இருக்கேன் எனச்சொல்ல நானும் அவனும் அடையார் கிளம்பினோம் .
அடையாரில் ராம்கே ஏஜென்சீஸ் நான் சென்னையில் முதன்முதலாய் வேலை செய்த இடங்களூள் ஒன்று. அது ஒரு சுவரசியமான அனுபவம் . பிற்பாடு சினிமாவுக்கு முன் நான் செய்த வேலைகள் எனும் தனித்தொடரே எழுதலாம். எல்லாமே செம காமடி சீன்ஸ்
அந்த ராம்கே ஏஜென்சிஸ் மனோகர் எனக்காக சிறப்புதள்ளுபடிகள் கொடுப்பார் ஒரு வழியாக வண்டிக்கு பணம் கட்டிவிட்டு வெளியில் வந்தோம் . அவன் முதல் பாட்டு எழுதிய வெற்றியை அந்த தள்ளுபடி பணத்தில் கொண்டாட முடிவு செய்தோம் .. அப்போது கணபதி தியேட்டர் அருகே புதிதாக ஒரு நான் வெஜ் ஓட்டல் திறந்திருந்தார்கள். அந்த ஓட்டலுக்கு சென்று வயிறு முட்ட சாப்பிட்டோம். நானும் முத்துக்குமாரும் சாப்பாட்டு பிரியர்கள் அல்ல வெறியர்கள் . அவனுக்கோ எப்படியாவது அதிகம் சாப்பிட்டு குண்டாகிவிடமாட்டோமா என கனவு இருவரும் சென்னையில் போகாத அசைவ ஓட்டல்களே இல்லை எனலாம் .
 
 
இந்த இடத்தில் முத்துவுக்கு முதல் பாட்டு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சீமான் பற்றி சொல்லியாக வேண்டும். கோடம்பாக்கத்தில் ஒரு கடல் என்றால் அது அவரது இதயம்தான் . இன்று அவர் அரசியல் சூதாட்டத்தில் சிக்கியதால் பலருக்கும் பல அபிப்ராயம் இருக்கலாம் . ஆனால் சினிமாத்துறையில் அண்ணன் அறிவுமதியும் அவரும் என்னைப்போன்ற தமிழ் ஆர்வமும் கலை ஆர்வமும் மிக்க தமிழ் தம்பிகளை கொண்டாடியவர்கள் யாரும் இருக்க முடியாது .
திரைப்படத்துறையில் மற்றவர்கள் பசியாறும் அழகை கண்டு தன் மனம் ஆறியவர்கள் இருவரைச்சொல்வார்கள் . புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் கேப்டன் விஜயகாந்த் இந்த இருவரையும் அடுத்து அப்படி ஒரு பெயர் அண்ணன் சீமானுக்கு மட்டுமே உண்டு. மேற்சொன்ன இருவரும் நடிகராகி பல லட்சம் சம்பாதித்த பின் அப்படியிருந்தவர்கள் ஆனால் அண்ணன் சீமானோ இயக்குனராக போராடிக்கொண்டிருந்த காலத்திலேயே அவர் அன்னமிட்ட அண்ணனாக பல தம்பிகளை அறையில் வாழவைத்துக்கொண்டிருந்தார்
எத்தனையோ பேரை அறிமுகப்படுத்திய முத்துக்குமார் தான் அண்ணன் சீமானையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தான்.
அப்போது அண்ணன் சீமான் நடிகர் விக்ரமை சந்தித்தபோது என் பெயரை குறிப்பிட்டு விக்ரம் அப்போது சொல்லியிருக்கிறார் போல . அது விக்ரம் என் கதை பிடித்து போய் அவர் பின்னால் இரண்டு வருடம் நான் அலைந்த காலகட்டம் அது தனி கதை . அப்போது அண்ணன் சீமான் தவசி படத்துக்கு வசனம் எழுதப்போவதாக அறிவிப்பு வந்த நேரம்.
அண்ணன் சீமான் முத்துவிடம் தம்பி யாருடா அவன் அசயன் பாலா விக்ரம் கிட்ட கதை சொல்லி அசத்தியிருக்கனாம் ;.. அவனை பாக்கணுமே என சொல்லியிருக்கிறார் . முத்துக்குமார் இதை அன்றே என்னிடம் சொன்னான் .
ஒருநாள் நானும் முத்துவும் டிவிஎஸ் பிஃப்டியில் கோடம்பாக்கம் சாலையில் ட்ரஸ்ட்புரம் கோகுலம் சிக்னலில் காத்திருக்கும் போது பக்கத்தில் இன்னொரு டூவிலர் வந்து நிற்க அதில் அண்ணன் சீமான். முத்துவுக்கு ஆச்சரயம் அண்ணே இவர்தாண்ணே நீங்க கேட்டிங்களே அசயன் பலா என அறிமுகப்படுத்த அண்ணன் அப்படியே ஒரு முறை என்னை பார்த்தார் . முத்து தம்பியை ஒரு தடவை நம்ப அறைக்கு கூட்டிகிட்டு வாடா என சொல்ல சிக்னலும் பச்சைக்கு மாறியது .
அடுத்த சில நாட்களில் ஒருநாள் மதிய உணவு நேரத்தின் போது முத்து இன்னிக்கு வாங்க அண்ணன் அறைக்கு போவோம் என்றான் . சாலிக்கிராமத்திலிருந்த அண்ணனின் அறை தம்பிகளால் நிறைந்ர்திருந்தது சமையலறையில் சிக்கன் மணத்துக்கொண்டிருந்தது . முத்துவும் நானும் வெறும் கையுடன் போகமால் எங்கள் பங்குக்கும் ஏதோ வாங்கிக்கொண்டு போனோம் அண்ணன் அப்போது எங்கோ வெளியில் போயிருந்தார் . அப்போது அந்த சின்ன வீட்டில் பத்து பதினைந்து பேர் பரபரப்பாக காய்கறி வெட்டுவதும் அரிசி கழுவி உலையில் போடுவதுமாக இருந்தனர் .
இந்த சின்ன வீட்டில் இத்தனை பேரா எனக்கு ஆச்சரயம் யார் இவங்க என முத்துவிடம் கேட்க .. எனக்கே தெரியாது மதியம் வந்தா எப்பவும் இப்படிதான் அண்ணன் வீட்டுல ஒரு கூட்டமே காத்திருக்கும் . அறைக்கு அவரத்தேடி வந்துட்டா எல்லாருமே தம்பிங்கதான் . என்றவன் வாங்க இந்த பக்கம் போவோம் எனக்கூறி ஒரு அறைக்குள் நுழைந்தான்
அதுவரை எதையோ எழுதிக்கொண்டிருந்த ஒரு சிவப்பான உருவம் தலை நிமிர்ந்தது . பாலா இவர்தான் செழியன் பி.சி ஸ்ரீராம் அசிஸ்டண்ட் . கேமரா மேன் ஆக ட்ரை பண்ணிகிட்ருக்காரு என்னோட வள்ளுவர் கோட்டம் ஸ்டில்ஸ் நல்லாருக்குன்னு சொன்னீங்க இல்லை எல்லாம் இவர் எடுத்ததுதான் .
உங்க பைசைக்கிள் திவ்ஸ் படிச்சிருக்கேன் என செழியன் கை நீட்டினார்
கேமரா அசிஸ்டண்ட்னு சொல்றீங்க எழுதறதை பாத்தா டைரக்டர் மாதிரி தெரியுது என்றேன்
ஏன் நீங்க மட்டும்தான் திரைக்கதை எழுதுவீங்கள நாங்க எழுதக்கூடாதா என சிரித்துக்கொண்டே கேட்டார்
பிற்பாடு அவர் எழுதி இயக்கிய டூ லெட் படம் உலகத்திரைப்பட விழாக்களில் பல பரிசுகளை பெற்றது வேறு விஷயம்
கொஞ்ச நேரத்தில் அண்ணன் வந்தார் .
தம்பி வாங்கடா சாப்பிடலாம் என அழைப்புவிடுத்தார் ‘ மூவரும் எழுந்து ஹாலுக்கு போனோம் .ஒரே நேரத்தில் சின்ன ஹாலில் அத்தனை பேரும் அமர்ந்திருந்தனர் .
இவ்வளவு கூட்டம் ஒண்னா சாப்பிடறதா எப்படி என ஆச்சர்யத்துடன் தயக்கத்துடன் நின்றேன் . என்னடா தம்பி நிக்குற உட்கார கஷ்டமா இருந்தா லுங்கி கட்டிக்குடா டேய் தம்பிக்கு லுங்கி எடுத்துக்குடு அண்ணன் உடனடியாக கட்டளையிட்டார்.
இல்லண்னா பரவாயில்லை மூவரும் அமர்ந்தோம்
சின்ன அறைதான் ஆனால் அண்ணன் மனம் பெரிது
அன்று எல்லோரும் கூட்டமாக வட்டமாக அமர்ந்து உணவு உண்ட அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. எங்கோ இலக்கியத்தில் படித்த தமிழர்களின் வாழ்க்கை முறை ஞாபகத்தில் வந்து போனது. அது ஒரு கலாச்சாரம் வாழ்க்கை முறை . கம்யூன் வாழ்க்கையில் இது போல படித்திருக்கிறேன் .ஆனால் அன்றுதான் நேரடியாக அனுபவிக்கிறேன் . சட்டை அணியாத உடல்களுடன் அறையின் குறைந்த வெளிச்சத்தில் அன்பும் நெகிழ்ச்சியுமாக சாப்பிட்ட அந்த மதிய உணவால் கண்கள் கொஞ்சம் கூடுதல் காரத்தால் கலங்கியது .
 
அசயன் பாலா
 

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டும் ரணசிங்கம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னதை செய்த சீமான் | சாதித்து காட்டிய சீமானின் தம்பி தங்கைகள் | தடம் | ஹிம்லர் |

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நாம் தமிழர் கட்சியின் திட்டம் என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவிற்குத் தரகு வேலைபார்த்த திமுக

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணம் seeman பாஜக விற்கு பிரச்சாரம் பண்ணியதையும் அவருடைய இரட்டை நிலைப்பாட்டையும் NTK தம்பிகள் முட்டுக்கொடுத்த video விற்கு u2 Brutus ன் பார்வை.

 

 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

சங்கி என்றால் தக்காளி தொக்கா ? 

 

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசு என்பவரின் 12 வயது மகள் கலைவாணி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அக்கோரச்சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளி தண்டனையின்றி தப்பியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தனியாக இருந்த அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலைசெய்த கிருபானந்தன் என்பவன் கைதுசெய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவனை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலைசெய்திருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கேட்போரின் ஈரக்குலையையே நடுநடுங்கச் செய்யும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி விடுதலைபெற்று தப்பிக்க தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையான சனநாயகத் துரோகமாகும். இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நாளை (09-10-2020) 3 இலட்சம் முடிதிருத்தும் நிலையங்களை அடைத்து மாநிலம் முழுவதும் நடத்த இருக்கும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

அண்மைக்காலத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சமூகம் குறித்தான பெருங்கவலையை‌யும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்ற சூழலில், இத்தகையக் கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டோர் சட்டத்திலுள்ள துளைகளைப் பயன்படுத்தித் தப்ப வழிவகை செய்வதும், தண்டனை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்துவதுமான அரசின் முறைகேடான செயல்கள் சமூகத்தில் இதுபோன்ற மனிதப்பேரவலங்கள் மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான தண்டனைச் சட்டங்களைக் கடுமையாக்கி, அவர்கள் மீதான வழக்கை சிறப்புத் தனி நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரித்துத் தண்டனையளிப்பதனால் மட்டுமே இத்தகைய குற்றங்களை அடியோடு சமூகத்திலிருந்து அகற்ற இயலும்.

ஆகவே, சிறுமி கலைவாணியை வன்கொடுமை மற்றும் படுகொலை செய்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் விரைவாக மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும், தொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாகத் தடுத்து நிறுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-demands-justice-for-dindigul-vadamadurai-kurumbapatti-kalaivani-brutal-rape-and-murder/

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் பலத்தை உணர்ந்த ரங்கராஜ் பாண்டே - கடைசியாக திருவாய் மலர்ந்தார் 👍

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சீமானின் பலத்தை உணர்ந்த ரங்கராஜ் பாண்டே - கடைசியாக திருவாய் மலர்ந்தார் 👍

 

பி ஜே பின் நேரடி முகவர் ரங்கராஜ் பாண்டே சொன்னால் சரியாய் தான் இருக்கும், சீமான் B டீம் எண்டு.
சீமானின் சாயம் இவ்வளவு விரைவில் கரையும் என ஒருத்தரும் எதிர்பார்த்திருக்கமாட்ட்டார்கள்.👍

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

பி ஜே பின் நேரடி முகவர் ரங்கராஜ் பாண்டே சொன்னால் சரியாய் தான் இருக்கும், சீமான் B டீம் எண்டு.
சீமானின் சாயம் இவ்வளவு விரைவில் கரையும் என ஒருத்தரும் எதிர்பார்த்திருக்கமாட்ட்டார்கள்.👍

ஐயா நீங்கள் வெளி உலகிற்கு வர வேண்டும் 😎- ரங்கராஜ் பாண்டே சொல்வது 2 நிமிடம், அதுவும் 2 வருட பழைய காணொளின் தொகுப்பு.😁

சும்மா அரசியல் அறிவுக்கு இணைத்தால் எப்படி முடிச்சு போடுகின்றீர்கள்🤣; சாயம் வெளுப்பதற்கு ஒன்றும் சீத்தைகளில்லை - எல்லாம் தலைவரின் வழியை பின்பற்றி நிற்கும் புலி கூட்டங்கள், தமிழர்கள் 

 சாயம் எப்படா வெளுக்குமென்று நித்தா கொள்ளாமல் பார்த்துகொண்டிருக்கின்றீர்களா? 

கம்பை காத்திலதான் சுத்துகின்றீர்கள் இன்னும், காணொளி பார்த்தீர்களா, தலைப்பை வைத்து கம்பை சுத்தக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

ஐயா நீங்கள் வெளி உலகிற்கு வர வேண்டும் 😎- ரங்கராஜ் பாண்டே சொல்வது 2 நிமிடம், அதுவும் 2 வருட பழைய காணொளின் தொகுப்பு.😁

சும்மா அரசியல் அறிவுக்கு இணைத்தால் எப்படி முடிச்சு போடுகின்றீர்கள்🤣; சாயம் வெளுப்பதற்கு ஒன்றும் சீத்தைகளில்லை - எல்லாம் தலைவரின் வழியை பின்பற்றி நிற்கும் புலி கூட்டங்கள், தமிழர்கள் 

 சாயம் எப்படா வெளுக்குமென்று நித்தா கொள்ளாமல் பார்த்துகொண்டிருக்கின்றீர்களா? 

கம்பை காத்திலதான் சுத்துகின்றீர்கள் இன்னும், காணொளி பார்த்தீர்களா, தலைப்பை வைத்து கம்பை சுத்தக்கூடாது

அவரின் பெயரை zuma  என்பதற்கு பதிலாக சும்மா (zumma ) என்று வைத்திருந்தால் பொருத்தமாய் இருந்திருக்குமோ??

  • கருத்துக்கள உறவுகள்

ஹத்ராசை மிஞ்சும் பாலியல் வன்கொடுமை

 

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் செருப்படி கேள்வி? பெண்கள் எல்லாத்தையும் பொருத்துக்கொள்வார்கள் என்று நினைக்காதீங்க...

 

திண்டுக்கல்சிறுமி கலைவாணி வழக்கில் குற்றவாளிக்கு தண்டனைபெற்றுத்தர தமிழக அரசுக்கு|சீமான் வலியுறுத்தல்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீதைகளின் கற்பை ராமர் மோடி ஏன் காக்கவில்லை? தடம் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.