Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளங்களில் மீன்களை அள்ளிச்செல்லும் தென்பகுதி வாசிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, தனி ஒருவன் said:

கிழக்கில் குளங்களும் களப்புகளும் அதிகம் ஆனால் இந்த கக்கா விஷயங்கள் குறைவும் குப்பை போடுவதும் குறையும் ஏனென்றால் அந்த குளம் இருந்த பகுதிகள் அனைத்தும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த படியால பச்சை அடி  பின் பக்கத்தை பதம் பார்க்கும் என்ற படியாலும் இதுவரைக்கும் ஓரளவு தூய்மையாக இருக்கிறது ஆனால் இப்ப உள்ள சந்ததி குப்பை போட்டு நிறைக்க முற்படுது ஆனால் அது தவிர்க்க்ப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு ஒருசில ஏரியாவிலை காலைமை எழும்பி ஆத்தங்கரைக்கு போயிட்டு வாரன் எண்டால் அர்த்தம் தெரிந்தவன் எண்ட முறையிலை சொல்லுறன். அந்த பக்கத்திலை பிடிச்ச மீனின்ரை சுவையே தனி/தனியாம்.

குளத்திலை உந்த கக்கா கழுவறதை தூக்கி புடிக்கிறவைக்கு இன்னுமொரு விசயத்தை சொல்லுறன்.அங்கை ஊரிலை மனிசன்ரை கக்காதான் நல்ல உருளைக்கிழங்குக்கு பசளை கண்டியளோ!
அதை விட இன்னுமொண்டு....
வெளிநாடுகளிலை ஜாம் ஜாம் எண்டு சுழல்கதிரையிலை இருந்து சுழண்டு கொண்டு பொட்டில் வோட்டர் குடிக்கிற ஜாம்பவன்கள் அட்லிஸ் யூரியூப்பிலையாவது பாத்து தெரிஞ்சு கொள்ளுங்கோ.....எவன்...எது கக்கா போட்ட தண்ணி குளோரின் அடிச்சு அந்தமாதிரி வெளீரெண்டு உங்கடை வீட்டு தண்ணி பைப்புக்காலை வருதெண்டு.....

  • Replies 54
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vaasi said:

நமக்கு குளத்து மீன்  பழய நினைவை கிளறாவிட்டாலும், றோசக்கா, சோடா மூடி பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!tw_blush:

அட்றா.. சக்கை. :innocent:
வாசியும்... நம்ம வயதில்... உள்ளவரா ?  :grin:  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

சரியக்கா...தாவன்...., ஆனால் காசு நாளைக்குத் தான் தருவன் எண்டு சொல்லவும்.....என்னடி..ராத்திரியும் சோடா மூடி தான் போல  என்று திறேசக்கா அலுத்துகொண்டார்! 

அதையேன் கேக்கிற அக்கா....இந்த ஆமிக்காற மூதேசியளால..கொஞ்ச நாளாய்ச் சோடா மூடி தான்...என...இழுத்த படியே...மீனை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார்!

புங்கை அண்ணர் ,
வாசிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
 இந்த "சோடா மூடி" குறிப்பு  தான் சுத்தமாக புறியவில்லை.
மேலதிக விளக்கம் தருவீர்களா?

"திறேசக்கா" என்றவுடன் இந்த காணொளிதான் ஞாபகம் வருகிறது.. !

'அம்மணி'யும் இப்படித்தான் பேசுவாகளா..? vil-modeste.gif

11 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா..... நீங்கள் ஊரில் உள்ள குளங்களை, வகைப் படுத்திய விதம் அருமை. 
ஆனால்.... ஓரளவாவது அந்தக் குளங்களின் பெயர்களை சொன்னால் தான்....  
உங்கள் பதிவை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியும். :)

கக்கா போய் கழுவுவதற்கு ஒரு குளம்:  
யாழ்ப்பாண நாக விகாரைக்கு பக்கத்தில் உள்ள  ஆரிய குளம். 
அதில் ஒரு பக்கம், சிலர்.... "கக்கா" இருந்து கொண்டிருக்க.. மற்றப்  பக்கம் ஒரு சிலர் வலைவீசி... மீன்களை பிடித்து, "சன்லைற்" சவர்க்கார   பெட்டியில்  வைத்து விற்பனைக்கு கொண்டு செல்வதை, எனது சிறிய வயதில்... அந்த மீன் பிடிக்கும் அழகை பார்த்து வந்துள்ளேன். அந்த மீனின் பெயர் தெரியவில்லை.  கறுப்பு  நிறத்தில், ஒரு கையின் அளவில் பெரிதாக இருக்கும்...

இதே யாழ்களத்தில் பலரும் கூவுவது "தமிழ்நாட்டில் கக்கூஸ் கட்டிக்கொள்ளப்பு.." 

ஆனால் ஈழத்திலும் அதே கதிதானே பழக்கத்தில் இருக்கிறது..? தமிழ்நாட்டை மட்டும் சுட்டலாமா..? vil-nono.gif

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

"திறேசக்கா" என்றவுடன் இந்த காணொளிதான் ஞாபகம் வருகிறது.. !

'அம்மணி'யும் இப்படித்தான் பேசுவாகளா..? vil-modeste.gif

இதே யாழ்களத்தில் பலரும் கூவுவது "தமிழ்நாட்டில் கக்கூஸ் கட்டிக்கொள்ளப்பு.." 

ஆனால் ஈழத்திலும் அதே கதிதானே பழக்கத்தில் இருக்கிறது..? தமிழ்நாட்டை மட்டும் சுட்டலாமா..? vil-nono.gif

அது, நம்ம கு.சா தாத்தா காலத்து சமாச்சாரம்... 

இப்ப கதையே வேற... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

அது, நம்ம கு.சா தாத்தா காலத்து சமாச்சாரம்... 

இப்ப கதையே வேற... :grin:

அதானே பார்த்தேன்..! ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கிடையாதே..!! :unsure::grin:

16 hours ago, குமாரசாமி said:

குளத்திலை உந்த கக்கா கழுவறதை தூக்கி புடிக்கிறவைக்கு இன்னுமொரு விசயத்தை சொல்லுறன்.அங்கை ஊரிலை மனிசன்ரை கக்காதான் நல்ல உருளைக்கிழங்குக்கு பசளை கண்டியளோ!
அதை விட இன்னுமொண்டு....
வெளிநாடுகளிலை ஜாம் ஜாம் எண்டு சுழல்கதிரையிலை இருந்து சுழண்டு கொண்டு பொட்டில் வோட்டர் குடிக்கிற ஜாம்பவன்கள் அட்லிஸ் யூரியூப்பிலையாவது பாத்து தெரிஞ்சு கொள்ளுங்கோ.....எவன்...எது கக்கா போட்ட தண்ணி குளோரின் அடிச்சு அந்தமாதிரி வெளீரெண்டு உங்கடை வீட்டு தண்ணி பைப்புக்காலை வருதெண்டு.....

வெளிநாடுகளில் பொதுமக்களுக்கு நீர் வினியோகம் செய்ய முன் பல அடுக்கு சுத்திகரிப்பு செய்கின்றனர். அவற்றில் ஒன்று குளோரினும் இடுவது. வெறுமனே தண்ணீரை எடுத்து அதில் உடனடியாக குளோரினை கலந்து சனத்துக்கு வினியோகிக்கவில்லை. ஆனால் கக்கா போகின்ற குளத்தில் தண்ணீரை எடுத்து குடிக்கின்ற போகுது அப்படியே கக்கா தண்ணீரைத்தான் குடிக்கின்றனர். அத்துடன் அங்கு இருக்கும் மீன்களை சாப்பிடும் போதும் இதுவே நிகழ்கின்றது. நல்லா சமைச்சு சாப்பிடும் போது மனித மலத்தில் இருக்கும் கிருமிகள் இறப்பதால் வியாதிகள் வருவதில்லை. இந்த காரணத்தினால் தான் குளத்து மீன் உண்ணக்கூடாத மீனாக கருதுவதில்லை.

வெளினாடுகளில் சுழல் கதிரையில் இருந்து கொண்டு செய்யும் உத்தியோகம் ஒன்றும் கேவலமான உத்தியோகம் இல்லை அண்ணை.ல் அப்படி வேலை செய்கின்றவர்களை ஒன்றும் அறியாத விசுக்கோத்துகள் என்று நினைச்சு விடாதீர்கள் அண்ணை

On 8/24/2017 at 8:43 PM, குமாரசாமி said:

இப்போதெல்லாம் அதிகமாக மரக்கறி,காய்கனிகளுக்குத்தான்  பக்கவிளைவுள்ள தடுப்பு மருந்துகளை உபயோகப்படுத்துகின்றனர்.
ஹோர்மோன் பிரச்சனைகளை சிந்திப்பவர்களாயின் கோழி சம்பந்தப்பட்ட உணவுகளை எட்டியும் பார்கக்கூடாது. பிரச்சனை வேறை லெவல்லை

இங்கு நான் கோழி இறைச்சியை சாதாரண கடைகளில் வாங்குவது இல்லை. Free range - grain fed chicken  எனப்படும் கோழி இறைச்சி விற்கும் கடையில் தான் வாங்குவது, மாட்டு இறைச்சியையும் அவ்வாறே. நான் வசிக்கும் இடம் ஊருக்கு கொஞ்சம் தள்ளி, நிறைய நிறைய விவசாயபண்ணைகள் நிறைஞ்ச இடம்.

On 8/24/2017 at 8:43 PM, குமாரசாமி said:

குடிக்கும் தண்ணீருக்கு ஒரு குளம்....tw_thumbsup:

அண்ணை, எனக்கு வடமராச்சி தான் துண்டறத்தெரியாது. ஆனால் தென்மராட்சி மற்றும் தீவகங்கள் எல்லாம் போய் பார்த்து புழங்கின இடங்கள் அண்ண. நானறிய இரணைமடுவை தவிர்ந்த வேறு குளங்களில் நீர் அருந்துவதை அறியவில்லை. அப்படி ஏதும் குளங்கள் இருப்பின் அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

வெளினாடுகளில் சுழல் கதிரையில் இருந்து கொண்டு செய்யும் உத்தியோகம் ஒன்றும் கேவலமான உத்தியோகம் இல்லை அண்ணை.ல் அப்படி வேலை செய்கின்றவர்களை ஒன்றும் அறியாத விசுக்கோத்துகள் என்று நினைச்சு விடாதீர்கள் அண்ணை

இந்த வரிகளே காணும்.படிச்ச வேலை செய்பவன் கேணை இல்லை என்று நிருபிவிக்க  வேண்டிய நிலையில்தான் இப்ப இருக்கிறான் என்று.இன்னும் மாறும்.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.8.2017 at 7:01 PM, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா..... நீங்கள் ஊரில் உள்ள குளங்களை, வகைப் படுத்திய விதம் அருமை. 
ஆனால்.... ஓரளவாவது அந்தக் குளங்களின் பெயர்களை சொன்னால் தான்....  
உங்கள் பதிவை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியும். :)

கக்கா போய் கழுவுவதற்கு ஒரு குளம்:  
யாழ்ப்பாண நாக விகாரைக்கு பக்கத்தில் உள்ள  ஆரிய குளம். 
அதில் ஒரு பக்கம், சிலர்.... "கக்கா" இருந்து கொண்டிருக்க.. மற்றப்  பக்கம் ஒரு சிலர் வலைவீசி... மீன்களை பிடித்து, "சன்லைற்" சவர்க்கார   பெட்டியில்  வைத்து விற்பனைக்கு கொண்டு செல்வதை, எனது சிறிய வயதில்... அந்த மீன் பிடிக்கும் அழகை பார்த்து வந்துள்ளேன். அந்த மீனின் பெயர் தெரியவில்லை.  கறுப்பு  நிறத்தில், ஒரு கையின் அளவில் பெரிதாக இருக்கும்.

குளிப்பதற்கு ஒரு குளம்:  ஊரில் உள்ள,  கோயில் குளம் எல்லாவற்றிலும் குளிக்கலாம். 

குடிக்கும் தண்ணீருக்கு ஒரு குளம்: இரணைமடு குளத்தை குறிப்பிடுகின்றீ ர்கள் என நினைக்கின்றேன்.

வயல் வாய்க்காலுக்கு ஒரு குளம்:  இரணைமடு குளம்.

குளங்களின்ரை பேரெல்லாம் சொல்லேலாது சிறித்தம்பி.:grin:

ஆனால் ஒவ்வொரு கிராமத்திலையும் கோயில்/தீர்த்தக்குளமெண்டு ஒன்று இருக்கும்.அந்தக்குளத்து தண்ணீரை எடுத்து சமையலுக்கும் பாவிப்பார்கள்...குடிநீராகவும் பாவிப்பார்கள்.:)

புகழ்பெற்ற ஆரியகுளத்தைப்பற்றி நான் இந்ததிரியில் சிந்திக்கவுமில்லை....அதை நினைத்து ஒரு எழுத்துக்கூட எழுதவுமில்லை. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

அது, நம்ம கு.சா தாத்தா காலத்து சமாச்சாரம்... 

இப்ப கதையே வேற... :grin:

Squat+toilet.jpg

இப்படித்தான் நம்மவீட்டு கக்கூஸ் இருக்கும்.
போகும் வழிதான் சற்று கரடுமுரடானது..
அங்கு போனபின்.....
சகலதும் சுகமே.
வாழைப்பழத்தின் சுவையும் தனி...:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிழலி said:

வெளிநாடுகளில் பொதுமக்களுக்கு நீர் வினியோகம் செய்ய முன் பல அடுக்கு சுத்திகரிப்பு செய்கின்றனர். அவற்றில் ஒன்று குளோரினும் இடுவது. வெறுமனே தண்ணீரை எடுத்து அதில் உடனடியாக குளோரினை கலந்து சனத்துக்கு வினியோகிக்கவில்லை. ஆனால் கக்கா போகின்ற குளத்தில் தண்ணீரை எடுத்து குடிக்கின்ற போகுது அப்படியே கக்கா தண்ணீரைத்தான் குடிக்கின்றனர். அத்துடன் அங்கு இருக்கும் மீன்களை சாப்பிடும் போதும் இதுவே நிகழ்கின்றது. நல்லா சமைச்சு சாப்பிடும் போது மனித மலத்தில் இருக்கும் கிருமிகள் இறப்பதால் வியாதிகள் வருவதில்லை. இந்த காரணத்தினால் தான் குளத்து மீன் உண்ணக்கூடாத மீனாக கருதுவதில்லை.

யாழ்மாவட்டத்தில் கக்கா போய் கழுவும் குளத்தின் நீரை பருகும் நீராக பாவித்ததை நான் இதுவரைக்கும் கேள்விப்படவில்லை.மக்கள் குளிக்கும் குளங்களில் மீன்கள் வளர்ப்பதற்கான காரணம் கிருமி மற்றும் அந்த ஊத்தைகளை மீன்கள் உண்ணும்.அதனால் நீர் சுத்தமாகும் என்ற காரணம் மட்டுமே. சிலர் கிணறுகளில் கூட ஓரிரு மீன்களை வாழ விடுகின்றனர்.
கக்கா தண்ணீரை பல அடுக்கு சுத்திகரிப்பு செய்து வெளியில் விடும் புண்ணியவான் எதற்கு போத்தல் தண்ணீரை குடிநீர் என விற்க வேண்டும்?
இன்றைய காலத்தில் மீனிலோ அல்லது இறைச்சியிலோ உள்ள கிருமிகளை சூடுகாட்டுதல் மூலம் அழிக்கலாம். ஆனால் மீனிலும் இறைச்சியிலும் கலக்கப்பட்ட கெமிக்கலை ஏதும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கக்கா தண்ணீரை பல அடுக்கு சுத்திகரிப்பு செய்து வெளியில் விடும் புண்ணியவான் எதற்கு போத்தல் தண்ணீரை குடிநீர் என விற்க வேண்டும்?

அந்த தண்ணியை நல்லது என்று நம்பி இவ்வளவுகாலமும் குடித்துவந்தன் இப்ப சொல்றாங்கள் கல்சியம் அதில் கூடவாம் கல்சியம் பில்ற்றர் வேண்டி பூட்ட வேண்டிகிடக்கு சிலவு 300பவுண்ட்ஸ்.இது லண்டன் நிலைமை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிழலி said:

வெளினாடுகளில் சுழல் கதிரையில் இருந்து கொண்டு செய்யும் உத்தியோகம் ஒன்றும் கேவலமான உத்தியோகம் இல்லை அண்ணை.ல் அப்படி வேலை செய்கின்றவர்களை ஒன்றும் அறியாத விசுக்கோத்துகள் என்று நினைச்சு விடாதீர்கள் அண்ணை

சுழல்கதிரை தொழிலை யார் எங்கே கேவலமாக சொன்னார்கள்? நீங்கள் குறிப்பிடும் இந்த அண்ணல் கூட சுழல்கதிரையில் இருந்துதான் எழுத்துக்கூட்டி அடிச்சுக்கொண்டிருக்கிறன். 
நிர்வாணமாக பிறந்து...அமைதியாக இருந்ததை அந்தரங்கமாக நினைத்து தரம் மிக்க வேலிகள் போட்டு..... வேலைகளில் தரம் பிரித்து வாழும் உலகின் வாழ்கின்றோம்.
பகுத்தறிவை விட பரந்துபட்ட மனம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணச் சின்னக்கடை மீன் சந்தைக்கு வருகை தந்த சொந்தங்களுக்கு வணக்கங்களும், நன்றிகளும்!

ஒரு கால கடத்தில் எமது வாழ்விவோடு பின்னிப்பிணைந்திருந்த இடங்களையும், நிகழ்வுகளை அலசுவதில் ஒரு சுகம் உண்டு! அதே வேளை எம் கண் முன்னாலேயே அவை சிதறுண்டு போவது கண்டு... ஒரு விதமான வலியும் ஏற்படுவது உண்டு!

ஒரு சத்திர சிகிச்சை சாலைக்குள் நுழைகின்ற ஒருவன் தனக்கு ஏற்படப்போகும் வலிகளைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றான்! அவனது நாளைய வாழ்வு...இன்றையை விடவும்..சிறப்பாக அமையும் எனும் நம்பிக்கை அவனுக்கு... அந்த வலுவைக் கொடுக்கின்றது! எனினும்..எமக்கு ஏற்படுத்தப்படும் வலிகள்....கசாப்புக் கடைக்குக் கொண்டு செல்லப்படும்..ஒரு ஆட்டின் வலியைப் போன்றது! எந்த வித நம்பிக்கையும் இல்லாத நிலையில்...நாளைய சந்ததிக்கு..எமது வாழ்வின் சுவடுகள் அழிக்கப் படும் நிலையை விட்டுச் செல்கிறோமே...என்னும் வலி தான் மிச்சமிருக்கின்றது!

'எந்தையும்...தாயும்...குலவி மகிழ்ந்து இருந்ததும் இந்நாடே! என்ற நிலை மாறி....எந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த மண்ணில்....எனது பேரப்பிள்ளைகள் கால் வைக்குமா... எனும் ஏக்கமே வளர்ந்து செல்லும் நிலையில் நாம் வாழ்கின்றோம்!

எனினும் ஒரே ஒரு ஆறுதல் மட்டுமே உள்ளது...!

போராடினோம்...! அந்த போராட்டத்தின் வடிவம் எவ்வாறு இருப்பினும் .....அதைப் பற்றிய விமரிசனங்கள் ஆயிரம் இருப்பினும்...போராடினோம் என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கை எமக்கு நிறையவே உண்டு! அதையாவது எமது வருங்காலத் தலை முறைகளுக்கு எடுத்துரைப்போம்! அவர்களும், எதிரிகளும்....எமது நியாயங்களை ஒரு காலத்தில் புரிந்து கொள்வார்கள்! அந்த நேரத்தில்...எம்மைக் கொன்றவர்களை விடவும்...ஆயிரம் மடங்கு அதிக வலுவுடன் இருப்போம் எனும் நம்பிக்கை எம்மிடம் நிறையவே உண்டு!

சரித்திரம் என்றும் நேரான பாதையில் பயணித்ததில்லை! 

யூதர்களைப் போல.....மீண்டும் எமது மண்ணில் ..எமது வருங்காலச் சந்ததி...நிச்சயம் கால் பாதிக்கும் எனும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் சில கடந்த கால அனுபவங்களை ...நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்!

அது நிற்க.....'ரோசக்கா' வைப் பற்றி எழுதும்... பாரிய சுமையை...எல்லோரும் என் தலையில் கட்டி விட்டார்கள்!

குமாரசாமி அண்ணராவது...ஓடி வந்து விளங்கப்படுத்துவார் என்று பார்த்தால்.....அவர் கருவறையில் இருக்கும் போது...வாழ்க்கை செதுக்கிய சிற்பங்களாகத் தெரிகின்றது எனவும்....கல்லறையை நோக்கிய பயணத்தின் போது.....அவை விம்பங்களாகத் தெரிகின்றது என்றும் எழுதுகின்றார்! கலாநிதிப் பட்டம் பெற்ற பிறகு....அவரது போக்கில் மிகப் பெரிய மாற்றம் தெரிவதால்...அவர் வந்து றோசக்கா பற்றி விளக்குவார் எனப் பொறுத்திருப்பது சரியாகப் படவில்லை!

அந்தக் காலத்து யாழ்ப்பாணத்தில்...மணிக்கூட்டுச் சந்தியிலிருந்து.....யாழ் பிரதான வீதி....ஊடாகக் கொழும்புத் துறை..பாஷையூர் போன்ற ஏரியாவுக்குப் பொறுப்பாளர் இந்த றோசக்கா! நான் சிறுவனாக இருந்த போது..றோசக்காவுடன் ஒரு சின்ன உரசல் ஏற்பட்டது இன்னும் நினைவிருக்கின்றது!

நானும் எனது நண்பனொருவனும் ( கொஞ்சம் உலகம் அடிபட்டவன்) ..இரவும் ஏழு மணி போலச் சையிக்கிளில் 'டபுள்' வந்து கொண்டிருந்தோம்! எழுதப் பட்ட சட்டங்கள் அமுல் படுத்தப் பட்ட காலம் அது!

'தம்பி......'டில்காவுக்குள்ளை' சேனாதி நிக்கிறான்....கவனம்' என்ற குரல் ..பிரதான வீதியிலிருந்த மக்கள் வங்கிக்கு முன்னாலிருந்து கேட்டது! 

அந்தக் குரலுக்குச் சொந்தமானவர் ஒரு அழகிய பெண்மை...ஒரு இருபத்தைந்து வயதுக்குள் தான் நிச்சயம் இருக்கும்! 

உடனே எனது நண்பன் சைக்கிளிலிருந்து என்னை இறக்கிவிட்டு...நடந்து வருமாறு கூற, நானும் இறங்கி நடந்தேன்! அப்போது றோசக்காவின் அருகில் நடந்து செல்லும் அறிய பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது! அவவிடமிருந்து...ஒரு விலை கூடிய 'செண்டின்' வாசனை வந்து கொண்டிருந்தது! அப்போதெல்லாம் 'நன்றி'' சொல்லும் பழக்கம் யாழ்ப்பாணத்தில் இல்லை! ஒரு சின்னத் தலையாட்டலுடன் நடந்து கொண்டிருந்தேன்! ஆனால் அந்தத் தலையாட்டலுக்குள்...வெள்ளைக் காரன் சொல்லும் ''தாங் யூ; வை  விடவும் வலுவான அர்த்தங்கள் பொதிந்திருக்கும்! அப்போது அவ தான் றோசக்கா என்று எனக்குத் தெரியாது!

பின்னர் தான் நண்பன் விளங்கப்படுத்தினான்!

ரோசக்காவின் தொழில் இரவில் நடப்பது! பகலின் பெரிய மனிதர்கள்....இரவில் சின்ன மனிதர்களாகும் இடம் என்பதாலும்....போலிஸ் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவ வேண்டியிருப்பதாலும்...விளக்கு வைத்து நடத்த முடியாத தொழில் அதுவாக இருந்தது!
அப்போதைய ஐந்து ரூபாய்க் குத்தியும்...யானைச் சோடாவின் மூடியைத் தண்டவாளத்தில் வைத்து எடுக்கும் போது வரும்...நசிக்கப்பட்ட சோடா மூடியும்..ஒரே அளவில் இருக்கும்!
சாப்பிடுகிற அரிசிக்குள்ளேயே....ஆள் வைத்துக் கல்லுக் கலக்கிற....தமிழனின் மூளை சும்மா இருக்குமா?
அதனால் தான்....அந்த அப்பாவி..றோசக்காவின் வருமானத்திலும்...அரை வாசி சோடா மூடிகளாகத் தான் இருந்தது!
'ஹமீதியா கபே' முதலாளிக்கு....மொக்கன் என்ற பெயர் வந்தது மாதிரித் தான் இதுவும்!

சரி...சசி, தனி ஒருவன்...இப்போது திருப்தி தானே!

அது சரி....நாதம்...யாழ் களம்...கொஞ்சம் கவுருதையான களம் என்ற படியால்....சின்னக்கடையின் வயது வந்தவர்களுக்கு மட்டுமான பகுதிகளை எழுதவியலாது போனது!

அது சரி....றோசக்காவுக்கு என்ன நடந்தது? சோகம் எங்கிருந்து வந்தது?

கருத்தெழுதிய.....விருப்பிட்ட அனைவருக்கும் நன்றி!

குறிப்பாகக்  கவுரவப் பாத்திரமேற்று நடித்த....வன்னியன், நிழலி, தமிழ் சிறி...ஆகியோருக்கும் சிறப்பான நன்றிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, புங்கையூரன் said:

நான் சிறுவனாக இருந்த போது..றோசக்காவுடன் ஒரு சின்ன உரசல் ஏற்பட்டது இன்னும் நினைவிருக்கின்றது!

நாசமறுப்பு....நீங்களுமா!!!!! tw_astonished:
கறுப்பு சோமசெற் காரிலை ஒருக்கால் ஏத்திக்கொண்டு போனதை நினைக்கேக்கை ஐயோ இப்பவும் கைகாலெல்லாம் வேர்க்குதையா...tw_heart:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாசமறுப்பு....நீங்களுமா!!!!! tw_astonished:
கறுப்பு சோமசெற் காரிலை ஒருக்கால் ஏத்திக்கொண்டு போனதை நினைக்கேக்கை ஐயோ இப்பவும் கைகாலெல்லாம் வேர்க்குதையா...tw_heart:

நீங்க லேற் பிக்கப்பு போல சைக்கிளிலே ஏற்கனே கன பேர் பிக்கப் பண்ணி யிருக்கிறார்கள் போல் அண்ணை நான் புங்கையை சொல்லவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2017 at 10:45 AM, நிழலி said:

வெளி நாடுகளில் நன்னீரில் வளர்க்கப்படும் மீன்களை / இறால்களை வாங்கி சமைப்பதை முற்றாக தவிர்த்து வருகின்றேன். முக்கியமான சமன் மீன் மற்றும் இறால் போன்றவை Farmed  என அதன் லேபலில் ஒட்டி இருந்தால் வாங்குவதே இல்லை. இதன் காரணம் இவை துரிதமாக வளர்ந்து அளவில் பெரிசாக வர வேண்டும் என்பதற்காக செயற்கை ஹோர்மோன்களும், steroids களும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவன. அத்துடன் saturated fat (கூடாத கொழுப்பு) டும் அதிகம்.

பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் இறால்கள் வாங்குகின்றவர்களாயின் அது எங்கிருந்து வருகின்றது என கண்டிப்பாக பார்க்கவும். அது சீனா. வியட்னாம், தாய்லாந்து என்றால் தவிர்க்கவும். இது தொடர்பாக பல இணையத்தளங்கள் உள்ளன.
உ+ம்

https://www.drweil.com/diet-nutrition/food-safety/is-it-safe-to-eat-shrimp/

எங்கள் ஊர்களில் இருக்கும் குளங்களின் மீன்களின் ஆரோக்கியம் தொடர்பாக நான் இதுவரைக்கும் அறியவில்லை. ஆனால் கழிவுகளை கொட்டும் இடமாக நாம் குளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். காலத்துக்கு காலம் தூர் வாருவதும் இல்லை (இதையும் அரசு தான் செய்ய வேண்டும் என்று இல்லை.. தமிழகத்தில் தன்னார்வ அமைப்புகள் கூட செய்கின்றன). உடுப்பு தோய்ப்பதில் இருந்து கக்கா கழுவுவது வரைக்கும் நாம் நன்னீர் நிலைகளை பாவிக்கின்றோம். இப்படியான சூழலில் வளரும் மீன்களை உண்ணுவது எந்தளவுக்கு நல்லது என தெரியவில்லை.

எம் கக்கா கழிவுகளை சிங்கள மக்கள் உண்ணுகின்றார்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்

"கடல் தண்ணி கரிக்குது .... காரணம் இருக்குது" 

கடலில் சேராத அழுக்கு குளத்தில் சேருகிறது என்பது வேடிக்கை 
தவிர இவை சிறு குளங்கள் அல்ல ...
இரணைமடு வவுனிக்குளம் போன்ற பாரிய குளங்களை பற்றிய 
செய்திதான் இங்கு இருக்கிறது.
இங்கு மழையால் காடுகளில் வீழும் நீர் சிறு ஆறுகளின் (பாலியாறு)
உதவியுடன் இந்த குளங்களை வந்து அடைகின்றன ... பெரும்பாலும் 
ஆறுகளை தடுத்து கட்டப்பட்ட அணைகளால் ஆனவைதான் இந்த குளங்கள் 
இந்த குளங்களில் மனிதர்களின் அழுக்குகள் சென்று அடைய அதிகம் சந்தர்ப்பம் குறைவு 
இந்த குளங்களில் இருந்து வெளியேற்றப்படும் வாய்க்கால்கள்தான் 
குளிப்பு உடுப்பு தோய்த்தல் போன்றவற்றுக்கு பயன் படுத்த படுகிறது 
அவை பெரும்பாலும் விவசாயத்துக்கு போகின்றது.

குளங்களில் இருக்கும் ஜப்பான் மீன் கொஞ்சம் வெடுக்கு அதிகம் என்பது 
என்னமோ உண்மைதான் ... ஆனால் கொஞ்சம் அதிகம் மஞ்சள் சேர்த்து சமைத்தால் 
வெடுக்கை குறைக்கலாம். எமக்கு கடல் அருகில் இருப்பதால் இவற்றில் நாட்டம் இருக்கவில்லை.
(எனக்கும் ஜப்பான் மீனுக்கும் ஒரு கதை உண்டு அதை பகிர இன்னமும் துணிச்சல் போதவில்லை 
என்று நினைக்கிறேன்) 
கடல் தூரத்தில் இருக்கும் வன்னி மக்கள் இதை சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
இரணைமடு குளம் பற்றி சரியாக தெரியவில்லை ...
வவுனிக்குளத்தில் ஜப்பான் மீனை விட இன்னொரு நல்ல மீன் இருக்கிறது 
அது கடல் மீன் போல மிகவும் ருசியானது கெழுறு இனத்தை சேர்ந்த ஒரு மீன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

'தம்பி......'டில்காவுக்குள்ளை' சேனாதி நிக்கிறான்....கவனம்' என்ற குரல் ..பிரதான வீதியிலிருந்த மக்கள் வங்கிக்கு முன்னாலிருந்து கேட்டது! 

புங்கை அண்ணே உது எங்கன்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் சேனாதிராசா தானே.....உப்படியான இன்ஸ்பெக்டர்மார் எங்கன்ட பெடியளுக்கு இப்ப தேவைப்படுகிறது

5 hours ago, புங்கையூரன் said:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

"கடல் தண்ணி கரிக்குது .... காரணம் இருக்குது" 

கடலில் சேராத அழுக்கு குளத்தில் சேருகிறது என்பது வேடிக்கை 
தவிர இவை சிறு குளங்கள் அல்ல ...
இரணைமடு வவுனிக்குளம் போன்ற பாரிய குளங்களை பற்றிய 
செய்திதான் இங்கு இருக்கிறது.
இங்கு மழையால் காடுகளில் வீழும் நீர் சிறு ஆறுகளின் (பாலியாறு)
உதவியுடன் இந்த குளங்களை வந்து அடைகின்றன ... பெரும்பாலும் 
ஆறுகளை தடுத்து கட்டப்பட்ட அணைகளால் ஆனவைதான் இந்த குளங்கள் 
இந்த குளங்களில் மனிதர்களின் அழுக்குகள் சென்று அடைய அதிகம் சந்தர்ப்பம் குறைவு 
இந்த குளங்களில் இருந்து வெளியேற்றப்படும் வாய்க்கால்கள்தான் 
குளிப்பு உடுப்பு தோய்த்தல் போன்றவற்றுக்கு பயன் படுத்த படுகிறது 
அவை பெரும்பாலும் விவசாயத்துக்கு போகின்றது.

குளங்களில் இருக்கும் ஜப்பான் மீன் கொஞ்சம் வெடுக்கு அதிகம் என்பது 
என்னமோ உண்மைதான் ... ஆனால் கொஞ்சம் அதிகம் மஞ்சள் சேர்த்து சமைத்தால் 
வெடுக்கை குறைக்கலாம். எமக்கு கடல் அருகில் இருப்பதால் இவற்றில் நாட்டம் இருக்கவில்லை.
(எனக்கும் ஜப்பான் மீனுக்கும் ஒரு கதை உண்டு அதை பகிர இன்னமும் துணிச்சல் போதவில்லை 
என்று நினைக்கிறேன்) 
கடல் தூரத்தில் இருக்கும் வன்னி மக்கள் இதை சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
இரணைமடு குளம் பற்றி சரியாக தெரியவில்லை ...
வவுனிக்குளத்தில் ஜப்பான் மீனை விட இன்னொரு நல்ல மீன் இருக்கிறது 
அது கடல் மீன் போல மிகவும் ருசியானது கெழுறு இனத்தை சேர்ந்த ஒரு மீன். 

அதை பகிருங்கள் மருதர்

இங்கேயும் அதே ஜப்பான் தான் சொல்லுவாங்கள்  மீசைக்காரன் என்றும் சொல்லுவாங்கள்  அதே மஞ்சள் போட்டு நல்லா தேச்சு தேச்சு அலசுவாங்கள் அப்பதான் வெடுக்கு வெடுக்கெண்டு போகுமாம் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

அது சரி....நாதம்...யாழ் களம்...கொஞ்சம் கவுருதையான களம் என்ற படியால்....சின்னக்கடையின் வயது வந்தவர்களுக்கு மட்டுமான பகுதிகளை எழுதவியலாது போனது!

அது சரி....றோசக்காவுக்கு என்ன நடந்தது? சோகம் எங்கிருந்து வந்தது?

றோசக்கா, வதை பண்ணும் கஸ்டமர்களை கெட்டாரில் கெட்ட தூசனை வார்த்தைகளால் திட்ட அவுட் சோசிங் செய்வது சோடாமூடியிடம் தான்.

ரோசக்காவுடன் சின்ன.... முரண்பாடு எனும் போதே... அவுட் சோசிங் சோகம் தெரியுதே.

சோடா மூடி பீல்டில் இறங்கினால்... பிறகு சின்னக்கடை பக்கமே மானரோசமுள்ள யாரும் போக மாட்டினம்.

பரம்பரையே இமுத்து... நாறப்பண்ணிடும் ரோசக்கா....

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எல்லாருக்கும் சொதி கதையும் தெரிஞசிருக்குமே.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

வவுனிக்குளத்தில் ஜப்பான் மீனை விட இன்னொரு நல்ல மீன் இருக்கிறது 
அது கடல் மீன் போல மிகவும் ருசியானது கெழுறு இனத்தை சேர்ந்த ஒரு மீன். 

மருதர், நீங்கள் சொல்லிறது.....விரால் மீன் போல கிடக்குது!

அதன் சுவை...கடல் மீனை விடவும் நல்லாயிருக்கும்!

அனேகமாக..வாய்க்கால்களுக்குள் கிடக்கும் மரங்களின் மீது ....ஹாய் ...என்ற மாதிரிப் படுத்துக் கிடக்கும்!

ஜப்பான் மீன் பிடிக்கிறதுக்கு....யாழ்ப்பாணத்தில ஒரு இடம் இருக்கு!

ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதேயுங்கோ...!

யாழ்ப்பாணக் கோட்டைக் கழி தான் அது.....! 

அள்ளி எடுக்கலாம்...ஆனால் நாலு மீனுக்கு.....அரை றாத்தல் மஞ்சள் தூளாவது தேவைப்படும்!

17 hours ago, putthan said:

புங்கை அண்ணே உது எங்கன்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் சேனாதிராசா தானே.....உப்படியான இன்ஸ்பெக்டர்மார் எங்கன்ட பெடியளுக்கு இப்ப தேவைப்படுகிறது

அவரே தான்....புத்தன்.!

அவரைப்பற்றியும் நிறைய எழுதலாம்!

போலிஸ் ஸ்ரேசனில பெற்றோலை அடிச்சுக் கொண்டு.....கள்ளனைப் பிடிக்க வெளிக்கிட்டு.....அப்படியே கொழும்புத் துறையிலை பெற்றோலை வித்துப்போட்டு...நேர யாழ்ராவுக்கு வந்து......ஒரு பெக் மட்டும் அடிச்சுப் போட்டு..( வேலை நேரம் பாருங்கோ...அது தான் ஒரு பெக் மட்டும்)....அப்படியே டில்காவுக்குள்ளை போய்....ஒரு கொத்தும் வெட்டிப்போட்டுத் திரும்பவும்....போலிஸ் ஸ்ரேசனுக்குப் போய்.....பெற்றோல் அடிச்சுப் போட்டு...எங்களை மாதிரிச் சின்னப் பெடியள் டபுள் போனால்....சைக்கிளின்ர காத்தைத் திறந்து விட்டு...வால்வுகளைப் பொக்கேற்றுக்குள்ள போடப் ...பின்னேரம் நாலு மணியாகும்! பிறகென்ன...திரும்பவும்...யாழ்ரா ........டில்கா ..என்று அரச போக வாழ்க்கை...அது..!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப எல்லாருக்கும் சொதி கதையும் தெரிஞசிருக்குமே.:unsure:

வணக்கம் சுவைப்பிரியன்!

இதென்னப்பா....புதுக்கதையாய் இருக்கு?

எல்லுப்பேலை எண்டாலும்  அவிட்டு விடுங்கோ.....!::mellow:

  • கருத்துக்கள உறவுகள்
On 27.8.2017 at 1:56 AM, புங்கையூரன் said:

ரோசக்காவின் தொழில் இரவில் நடப்பது! பகலின் பெரிய மனிதர்கள்....இரவில் சின்ன மனிதர்களாகும் இடம் என்பதாலும்....போலிஸ் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவ வேண்டியிருப்பதாலும்...விளக்கு வைத்து நடத்த முடியாத தொழில் அதுவாக இருந்தது!
அப்போதைய ஐந்து ரூபாய்க் குத்தியும்...யானைச் சோடாவின் மூடியைத் தண்டவாளத்தில் வைத்து எடுக்கும் போது வரும்...நசிக்கப்பட்ட சோடா மூடியும்..ஒரே அளவில் இருக்கும்!
சாப்பிடுகிற அரிசிக்குள்ளேயே....ஆள் வைத்துக் கல்லுக் கலக்கிற....தமிழனின் மூளை சும்மா இருக்குமா?
அதனால் தான்....அந்த அப்பாவி..றோசக்காவின் வருமானத்திலும்...அரை வாசி சோடா மூடிகளாகத் தான் இருந்தது!
'ஹமீதியா கபே' முதலாளிக்கு....மொக்கன் என்ற பெயர் வந்தது மாதிரித் தான் இதுவும்!

ரோசக்கா  கொஞ்சம் டீசண்டான பேர்வழிகளிகளிடம் தான்,  வியாபார தொடர்புகளை  வைத்துக் கொள்வார்.
ஆனால்... சோடாமூடிக்கு,  கிட்ட  போகவே கெட் ட வாசனை அடிக்கும்,
அதனால். அவரிடம் போகின்றவர்கள், சரியான காஞ்ச மாடுகளாக  தான் இருப்பார்கள்.
சோடாமூடியின் பிஸ்னஸ் ஏரியா... யாழ் புகையிரத நிலையத்துக்கு முன்பு உள்ள மாமரங்கள்.
அவவுக்கு... ஒரு சோத்துப் பார்சலோ, பாணும் சாம்பலும், வெத்திலை, பாக்கு, சுருட்டு போன்றவற்றை கொடுத்தாலே ஆளுக்கு நல்ல புளுகமாக  இருக்கும்.

அவவின் ஏரியா  யாழ். புகையிரத நிலையம் என்றாலும், காலை ஏழு, எட்டு மணிக்கு "யாழ் நகர"  வலம் வருவார்.அந்த நேரம்....   வேம்படி  மகளிர் பாடசாலைக்குக்கு செல்லும் பிள்ளைகளால்... வீதியே நிறைந்து இருக்கும் போது.... மெதுவாக  சைக்கிளில் சோடாமூடியின் அருகில்  சென்று,
"சோடா... மூடீய்ய்..... " என்று சொல்லி விட்டு, டக்கென்று அந்த  இடத்தை விட்டு, ஓடி விட வேண்டும்.
கிட்ட நின்றால்,  அந்த மனிசி பேசுற பேச்சை  கேட்க எமக்கு காதாலை  இரத்தம் வரும்.
பேச ஆரம்பித்த பேச்சு காண நிமிடங்கள் நீடிக்கும் என்பதால், அன்று பாடசாலை போகும் பிள்ளைகள் காதை பொத்திக்  கொண்டு போவதை பார்க்க, அப்ப ஒரு அல்ப சந்தோசம். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அட...பாவி மனுஷா......விடியக்காலமை எட்டு மணிக்கு...வேம்படிப் பக்கம் என்ன வேலை....எண்டு கேக்கிறன்!

நாங்கள் விசரர் மாதிரி....அசம்பிளியில நிண்டு......நமச்சிவாய வாழ்க....நாதன் தான் வாழ்க...சொல்லிக்கொண்டிருக்க..நீங்கள் சோடா மூடியோட...தனகிக் கொண்டு இருந்திருக்கிறீங்கள்!

இருந்தாலும் விவரங்களுக்கு....நன்றி..!

வன்னி மாவட்டத்தில் இரணைமடு குளத்தில் அதிகமாக யப்பான்(திலாப்பியா) இன மீன்களே பிடிக்கபட்டன இந்த வகை மீன்கள் மணம் அதிகம் என்பதால் மக்களால் விரும்பப்படுவது குறைவு அதை விட கடல் மீன்கள் மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது மலிவான விலையில் கிடைக்கும் அதுவும் ஒரு காரணம் மக்களால் குளத்து மீன்கள் அதிகம் நாடாமல் விடப்பட்டதற்கு.வன்னியில் சாதாரண நாளாந்த கூலித்தொழிலாளி கூட பச்சை அரிசி சோறும் கொய் மீன் குழம்பும் சாப்பிடுமளவிற்கு பொருளாதார நிலைமை இருந்தது.

நெல் பூக்கும் காலங்களில் கிடைக்கும் கொய் மீன் தனி சுவை ( கொய் மீன் சிறுகடல் மீன் குளத்து மீன் அல்ல,)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.