Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு – பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.

மிக குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France

http://www.akuranatoday.com/news/?p=174942 .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பிஸ்மில்லாக்காரர்களே இப்போ ரொகிங்கா முஸ்லீம்கள் உண்மையான இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் அதற்கு ஏதாவது உருப்படியாகச் செய்யவும் 

தவிர இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பொக்கிசங்கள் மெக்கா மற்றும் மதீனாவை அண்டியபகுதிகளில் அழிக்கப்பட்டு அங்கு உல்லாச விடுதிகளும் சாப்பிங்மால்களும் கட்டப்படுகின்றன அதையும் உங்கள் ஓரக்கண்ணால் உத்துப்பாக்கவும். உங்களுக்கெல்லாம் ..........

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

போர்காலத்தில் யாழில் நிகழ்ந்த முஸ்லிம்களின் இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பு என்று  முஸ்லிம்கள் அபத்தமாக தமது சுய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு அடையாளப்படுத்தினால் இவர்கள் என்றென்றைக்கும் தமிழினத்துடன் சேர்ந்துவாழ முடியாது. அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் இனத்தின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் இவர்களை பத்திரமாக வெளியேறு ம்படி பணிக்கப்பட்டனரேயன்றி அதை இனச்சுத்திகரிப்பு என்று ஒருபோதும் கருதமுடியாது. இவர்கள் மீள தமது இடங்களுக்கு திரும்புவதற்குக்கூட எதுவித தடையும் இருக்கவில்லை. இறுதிக்கட்ட போரின்பின்னர் நிலைமை வேறுவிதமாக மாற சிங்கள அரசியல்வாதிகளாலும் இனவாத முஸ்லிம்களாலும் திரிபுபடுத்தப்பட்டுலிகளுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

rரிசாத்து அண்ணை சொல்லிப்போட்டார்....அரபு நாடுகல் எமக்கும் கைவிரிக்கும் என்று...அப்ப இவை அசைலத்தை இறுக்கத்தானே வேணும்....இப்ப புலிவாலை இறுக்கிப் பிடித்தால்த்தான்...பிரன்சு திருப்பி அனுப்பாது....இதுக்கு எங்கடை சருகளும் ஒத்துஊதுவினம்....மூனக்களுக்கு பிரான்சு இனி சிம்ம சொப்பனமாக இருக்கும்.....இதைவிட இவைக்கு வேற வழியும்இல்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணையக்கூடாது  எனவும் ரிசாட்டு அறிக்கை விட்டுருக்கிறார்   

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2017 at 8:31 AM, colomban said:

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.

மிக குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=174942 .

கூடுறது கூடுங்கோ....

தயவு செய்து பிரஞ்சு அரசு ரகசிய சேவைகள் அரண்டு போற மாதிரி கதையாதீங்கோ...

யாழ்ப்பாண பெயரை வேற இழுக்கிறியள்... பயமாய்க் கிடக்குது....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 18.10.2017 at 11:18 AM, vanangaamudi said:

போர்காலத்தில் யாழில் நிகழ்ந்த முஸ்லிம்களின் இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பு என்று  முஸ்லிம்கள் அபத்தமாக தமது சுய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு அடையாளப்படுத்தினால் இவர்கள் என்றென்றைக்கும் தமிழினத்துடன் சேர்ந்துவாழ முடியாது. அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் இனத்தின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் இவர்களை பத்திரமாக வெளியேறு ம்படி பணிக்கப்பட்டனரேயன்றி அதை இனச்சுத்திகரிப்பு என்று ஒருபோதும் கருதமுடியாது. இவர்கள் மீள தமது இடங்களுக்கு திரும்புவதற்குக்கூட எதுவித தடையும் இருக்கவில்லை. இறுதிக்கட்ட போரின்பின்னர் நிலைமை வேறுவிதமாக மாற சிங்கள அரசியல்வாதிகளாலும் இனவாத முஸ்லிம்களாலும் திரிபுபடுத்தப்பட்டுலிகளுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இனச்சுத்திகரிப்புக்கும்  பாதுகாப்பான வெளியேற்றத்துக்கும் வேறுபாடு தெரியாது மாறுபாடாகப் பரப்புரை செய்து எதைத்தான் சாதிக்கப்போகிறீர்கள். ஒருவேளை அரபுநாடுகளின் இரக்கத்தைம் பார்வையையும் நாடியோ! ஒரு வினா உங்களிடம். ஏன் நீங்கள் எந்தவொரு அரபுநாட்டிலும் அரசியல் தஞ்சம் கோரவில்லை. வரலாறுகளைப் பின்னோக்கிப்பாருங்கள். அதுதான் முன்னே செல்வதற்கான  நெம்புகோலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை அப்பவே இனச்சுத்திகரிப்புச் செய்து விட்டிருக்கனும். பாதுகாப்பாக வெளியேற்றினது தான் தப்பாப் போச்சு. 

அவங்கள்.. மூதூரிலும்.. கல்முனையிலும்.. அம்பாறையிலும்.. மட்டக்களப்பிலும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து செய்ததைப் போல செய்துவிட்டிருக்கனும்.. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயம் தொடர்பாக அப்போதைய முஸ்லிம் தலைமையுடனும்  வன்னியில் புலிகளுடனும் அதிக சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவன் என்கிற முறையில் ஒன்றை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் தவறு வருந்துகிறோம் என்று அறிக்கை விட்டதை நிராகரித்துவிட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என இங்கு தமிழர்கள் சிலர் கருத்துச் சொல்வது அபத்தமானது. தயவு செய்து அநீதியாக பாதிக்கப்பட்ட வடபகுதி முஸ்லிம்களையும்   போராளிகளின் மன்னிப்பையும் கொச்சைப்படுத்த வேண்டாம். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை.

 1990 ம் ஆண்டு முஸ்லீம்கள் வெளியேறறப்பட்டார்கள். மிகக்குறுகிய காலத்தில் அதாவது 1995 ம் ஆண்டு யாழ்பாணம் இலங்கை அரச படைகளால் கைபற்றப்பட்டது. பெரும்பகுதி முஸ்லீம்கள் அபபோதை குடியமர எந்த தடையும் இருககவில்லை.தாராளமாக குடியமர்திருககலாம். அதற்கான அரச படைப்பலமும் அவர்களிடம் இருந்தது.  அவர்கள் இருந்த பகுதிகளில் தமிழ் மககள் குடியேறவில்லை. அப்படி குறியேற விடுதலைபுலிகள் அனுமதிககவும் இல்லை. இந்த சம்பவம். நடக்க முதலே கிழக்கில்  பல தமிழ்க்கிராமங்கள் முஸ்லீம்களால் அபகரிபப்பட்டு முழுமையாகவே முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் எந்த முஸ்லீம் தலைவரும் அதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவி்க்கவில்லை.அம்பாறை வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் 400 க்கும் அதிகமான தமிழ் மக்கள் முஸ்லீம் ஊர்காவற்படைகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்படட சம்பவத்திற்கு எந்த முஸ்லீமும் வருத்தம் தெரிவிக்கவில்லை. முஸ்லீம்களால் கிழககில் தமிழருக்கு இழைக்கபட்ட அநீதிகள் பழைய கதை என்றால் வடக்கு சம்பவமும் பழைய கதைதான்.அதை கிளறி லாபம் அடைய சில முஸ்லீம் இனவாதிகள் முயல்வது தெரிகிறது. இன்னும் நூறு ஆண்டுகளானாலும் இதை கூறியே இலாமடைய முஸ்லீம்கள் முயற்சி செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, MEERA said:

இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை.

அதைத்தான் நானும் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதோடு சரி! ஆனால் முஸ்லிம்கள் கிழக்கிலே செய்த கொடுமைகளால் இன்றுவரை அகதிகளாகவும் காணிகளை இழந்தோராகவும் உள்ளவர்களோடு கண்டு பேசினால் புரிந்தகொள்ள முடியும். ஆனால் அதன் வலியைப்புரிந்துகொள்ள  முடியாது. கனவான்களாக நட்புவட்டங்களோடு  நகர்ந்தவர்களால் அன்றாடம்காய்சிகளின் அவலத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

பொயற் நீங்கள் வேறு ஏதோ விடயத்தையும் இங்கு சொல்ல வந்துவிட்டு சொல்லாமல் செல்வதாக தெரிகிறது. இன்னும் சற்று கூர்மையாக சிந்தியுங்கள் நினைவுக்குவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை. - MEERA, குமாரசாமி.
.
 
தமிழர் விடுதலைக்காகன உங்கள் பங்கை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் முக்கியம்தான். உங்கள் பணிகளை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் மட்டுமே விடுதலை அரசியல் என்று எண்ணியவர்களால்தான் 2006ல் பாலசிங்கம் ஓரங்கட்டபட்டு பெருந்தோல்வியையும் இனக்கொலையையும் நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. . இடிப்பாரை இல்லதா மன்னன் கெடுப்பர் இல்லாமல் கெடும் என்கிறார் வள்ளுவர். இடித்துரைத்து வழிதவறல்களைச் சுட்டிக்காட்டும் பணியில் ஈடுபடுகிறவர்களை 2006 புறந்தள்ளியதால்தான் நாம் தோற்றோம்.
 
1995ல் நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் எங்களை இடித்துரையுங்கள் சில குறிப்பிட்ட பணிகளை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டதன் தொடற்ச்சிதான் என் விமசனங்கள். கருணா பிரிந்தபோது “பிரபாகரனுக்கு கிழக்கு போராளிகளுக்கு துப்பாக்கி நீட்ட மக்கள் ஆனையில்லை. ஆனால் அவர்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்ல சொல்லலாம்” என சூரியன் எ.எமில் குருபரன்மூலமும் (குளோபல் தமிழ் றேடியோ) வீரகேசரியிலும் அறிக்கைவிட்டுவிட்டு ஊரும் உறவும் தடுக்க வன்னிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடியதாக இருந்தது. வன்னியில் உங்கள் அறிக்கையை கேட்டோம் என்பதுதவிர வன்னியில் வேறு எதுவும் சொல்லவில்லை. கிழக்கில் ஒரு இரத்தக் களரியைத் தடுக்க ஆக வேண்டியதை பேசினோம். இட்மிட்ஸ்ம்கத்ளுடத்னுரைப்பது எஞ்சிய பாலங்களை செம்மைப்படுத்திப் பாதுகாப்பதும் சிங்கள ஜனநாயக சக்திகளுடன் தொடர்புகளை மேம்படுத்துவதும் சர்வதேச உறவுகளை நேர்செய்வது எல்லாம்கூட முக்கியமான விடுதலைப் பணிதான்.
.
என்னை நீங்களும் திட்டுகிறீர்கள் முஸ்லிம்களும் திட்டுகிறார்கள். வடகிழக்கு மாகாணம் தமிழர்களதும் தமிழ்பேசும் முஸ்லிம்களதும் தயக பூமியாக அமைந்துள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனைகளோடு இணைந்து போராடப்போகிறோமா அல்லது தனித்தனியே போராடபொகிறோமா என்கிற வரலாற்றுக் கேழ்வி நம்முன்னும் வடகிழக்கு முஸ்லிம் மக்கள் முன்னும் இலங்கை மற்றும் சர்வதேச சமூகங்களின் முன்பும் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கவேணும். முஸ்லிம்களை அடக்கிவிடலாம் என தமிழ் இனவாதிகளோ வடகிழக்கு தமிழர்களை பிழவுபடுத்திவிடலாமென முஸ்லிம் இனவாதிகளோ காணும் கனவு பலிக்கப்போவதில்லை. நாம் பேசித்தான் இப்பிரச்சினையை தீர்த்தாகவேண்டும்.இதைச் சொன்னால் இரண்டு தரப்பில் இருந்தும் என்னை வசைபாடுகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சவில்லை.
 
வடகிழக்கு மாகாணத்தின் இணைந்த விடுதலை பற்றிய பாரிய பணிபற்றி நாம் விவாதிக்கிறோம். முஸ்லிம்களும் நாமும் இணைந்து சுயநிர்ணய உரிமைக்குப் போராடுவதானால் அதற்க்கு நிபந்தனைகள் உண்டு. அல்லது வடகிழக்கு தமிழர்கள் தனித்தும் முஸ்லிம்கள் தனித்தும் தம்
 
விடுதலையில் உங்க பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் உங்கள் கண்ணுக்கு அப்பாய் இயங்கும் அரசியலில் முகம் பார்க்காமல் ஆள்தெரியாமல் சேறு அடிக்காதீர்கள். ஏனெனில் நாம் எல்லோரும் விடிவுக்காக தேரிழுக்க கூடியிருக்கிறோம். ஓடும் தேரை நிறுத்த திருப்ப முட்டுக்கட்டை போடுகிறவர்களை வசைபாடாதீர்கள். வடகிழக்கு மக்களின் விடுதலைக்காக பலங்களைப் பெருக்கியும் நம் தவறுகளை திருதியும் நாம் உலகை வென்றாகவேணும். மீராவுக்கும் குமாரசாமிக்கும் என் நல்வாழ்த்துக்கள்
.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

90களில் யாழில் இருந்தவர்கள் மட்டும் கருத்திடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, poet said:

2004இல் ஜி8 நாடுகள் விடுதலைப்புலிகளையும் 
சோமாலிய கப்பல் கடுத்துபவர்களையும் 
துடைத்து அழிக்க வேண்டும் எனும் முடிவை எட்டி இருக்கிறார்கள். 

காகம் இருக்க பணம்காய் விழுந்த மாதிரி 
நீங்கள் கதை பேசுவதுபோல் தான் நான் எண்ணுகிறேன்.
சொல்வதை கேட்கவில்லை என்பதை ........ ஏற்றுக்கொள்கிறேன் 
நீங்கள் சொன்ன விடயம் என்ன ?

கவுசல்யான் முதல் கொண்டு முழு அரசியல் போராளிகள் மேலும் 
துப்பாக்கி நீண்டது மட்டுமல்ல .... கண்காணிப்பு குழுமீதே மண்டைதீவில் இருந்து 
செல் வீசினார்கள்.
போட்ட திட்ட்ங்கள் படி மேள தாளங்களுடன்தான் போர் தொடங்கியது 
மாவிலாறு புலிகள் மூட முன்பே இந்திய இராணுவம் வவுனியாவில் நிற்கிறது 

ஏன் நீங்கள் யாரும் 
அந்த நேரத்தில் கோத்தபாயாவுக்கு ஏன் எதுவும் சொல்லவில்லை ? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, poet said:
 
. வன்னியில் உங்கள் அறிக்கையை கேட்டோம் என்பதுதவிர வன்னியில் வேறு எதுவும் சொல்லவில்லை.
.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

திரு பாலா அண்ணா அவர்கள் புலத்திலே நடைபெற்ற கூட்டத்திலே போராட்டம் தொடர்பான கருத்துகளை எழுதுமாறு கேட்டதற்கு, தமது  சொந்தக்குத்து வெட்டுகளைத் தலைமைக்கு எழுதியவர்களே அதிகமெனச் சுட்டிய வியமொன்று நினைவுக்குவருகிறது.  இங்கே கருத்துகளைக் கேட்பதில்லையென்ற கருத்து பொருத்தமின்றிப்போகிறது. ஆனால் சிலவிடயங்கள் கைமீறிப்போனபின்  பிடிக்கமுயல்வதால் பயனுண்டாகுமா? இங்கே போராட்ட காலத்திலாகட்டும் பின்வந்த போரற்ற காலத்திலாகட்டும் தமிழினமே பெருமளவிலான அழிவுகளையும் துன்பங்களையும் சுமக்கிறது. எனவே மரத்திலிருந்து விழுந்தவன்மேல் மாடேறியதுபோல் எமது சகோதரத் தமிழ்பேசும் முஸ்லிம்கள் நடக்காதிருப்பதே பொருத்தமாகும்.  எல்லாப்பிரச்சினைகளுக்கும் வீழ்ச்சியோ எழுச்சியோ இறுதியில் பேச்சுவார்த்தையே உலக இயல்பு. ஆனால் உலகநடைமுறைக்கு விரோதமான இனமொன்றோடு நாம் பேசவேண்டியிருப்பதும் சரியான தலைமையற்ற நிலைமையுமே பெரும் அனர்த்தமாகவுள்ளது. 

தமிழரிட ம்ஆயுதபலம்  இருந்தபோது அடக்கிவாசித்தவர்கள் இன்று சிங்களத்தைமேவியவாறு நிலப்பிடிப்பும் மதமாற்றமுமாக எமது இனத்தையும் நிலத்தையும் சிதைத்தவாறு நீதியைக்கோரும் உரிமை இருக்கிறதா என்பதுகுறித்து மதிப்புக்குரிய கவிஞரையா  அவர்கள் என்ன நினைக்கிறீர்கள். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும்  அமைப்புடனான நெருக்கம் போன்றவற்றில்  பெரியவரான உங்கள் கருத்தை  மதிக்கும் அதேவேளை இதுபோன்ற  இவர்களது நயவஞ்சகச் செயற்பாடுகளைப் பார்த்துக் கைதட்டமுடியாதென்பதையும்  மனம்கொள்ள வேண்டுமல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஒக்டோபர் – இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

கறுப்பு ஒக்டோபர் - இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

கறுப்பு ஒக்டோபர் - இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

அழுகை விபரம்: http://www.akuranatoday.com/news/?p=178691 .

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் போயட்

உங்கள் மீதிருந்த  மதிப்பும்

நம்பிக்கையும்

நான் கேட்க கேள்வி  ஒன்றை  முகநூலில் நீங்கள்  நீக்கியதுடன் போய்விட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2017 at 9:31 AM, colomban said:

குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France
 
தமிழர்கள்  அதிகம்  வாழும்  La Courneuve பகுதியில்   தொடங்குகிறார்கள்

இங்கேயும் கலகங்களையும் நரித்தனங்களையும்  செய்து  ஒற்றுமையாக வாழும் சமூகங்களுக்கிடையில் விசத்தை  விதைக்கப்பார்க்கிறார்கள்

இதை  நிச்சயம் சிறீலங்கா  அரசு  ஊதிப்பெருப்பிக்கும்

குளிர் விட்டுப்போச்சு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தோழர் போயட்

உங்கள் மீதிருந்த  மதிப்பும்

நம்பிக்கையும்

நான் கேட்க கேள்வி  ஒன்றை  முகநூலில் நீங்கள்  நீக்கியதுடன் போய்விட்டது

நீங்கள் அதிஷ்ட சாலி விசுகர்  
ஏனெனில் வ.ஐ.ஜெயபாலனிடம் கேள்வி கேட்டால்
ஆளையே தன் நட்பு வட்டாரத்தில்
இருந்து நீக்கிவிடுவார்.
அவர் சொல்வதை
நாம் கேட்க வேண்டுமே ஒழிய
நாம் அவரை நாம்
கேள்வி ஏதும் கேக்க கூடாது

18 hours ago, nochchi said:

தமிழரிட ம்ஆயுதபலம்  இருந்தபோது அடக்கிவாசித்தவர்கள் இன்று சிங்களத்தைமேவியவாறு நிலப்பிடிப்பும் மதமாற்றமுமாக எமது இனத்தையும் நிலத்தையும் சிதைத்தவாறு நீதியைக்கோரும் உரிமை இருக்கிறதா என்பதுகுறித்து மதிப்புக்குரிய கவிஞரையா  அவர்கள் என்ன நினைக்கிறீர்கள். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும்  அமைப்புடனான நெருக்கம் போன்றவற்றில்  பெரியவரான உங்கள் கருத்தை  மதிக்கும் அதேவேளை இதுபோன்ற  இவர்களது நயவஞ்சகச் செயற்பாடுகளைப் பார்த்துக் கைதட்டமுடியாதென்பதையும்  மனம்கொள்ள வேண்டுமல்லவா?

இவர்கள் தாம்
நடுநிலை வாதிகள் என்ற
வேடத்தை போட்டு விட்டார்கள்
முஸ்லீம் தமிழ் மக்கள் உறவுக்காக
உழைப்பவர்கள் என்ற
அரிதாரம் பூசி விட்டார்கள்

இது தான் இவர்களின்
அரசியல்
அடையாளம்.
இதை மாற்றினால்
தம் இருப்பு போய்விடும்
என்ற பயம்

முஸ்லீம் மக்கள் மீதான
புலிகளின் அடக்குமுறையை
பேசும் இவர்கள்
எப்போதாவது முஸ்லிம்கள்
செய்த படுகொலைகளை
பற்றி வாய் திறந்து உள்ளார்களா

கிழக்கில் பரவும்
இஸ்லாமியவாதம் பற்றி
வாய் திறக்கின்றார்களா?

வஹாபி இஸ்லாமியம்
கிழக்கு முழுதும் படிப்படியாக
பரவி தமிழ் மக்களை
அடிமைப்படுத்த முனைவதை
என்றாவது எதிர்த்து இருக்கின்றார்களா?

றிசாட் போன்ற பச்சை
இனவாதிகளுக்கு எதிராக
கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்களா?

முல்லையில் முஸ்லிம்களால்
கமுகு தோட்டம் எரிக்கப்பட்டது
தொடர்பாக
இவர் என்ன அறிக்கை விட்டார்?

இல்லை
இவரை போன்றவர்கள்
அப்படி செய்ய மாட்டார்கள்
அப்படி எதிர்த்தால்
போட்டுக் கொண்டு இருக்கும்
வேடம் கலைந்து விடும்

இவர்களிடம் கேள்வி கேட்டால்
நான் பெரிய பருப்பு
என்ற மாதிரி பதில்
மட்டும் தான் வரும்

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வைரவன் said:

நீங்கள் அதிஷ்ட சாலி விசுகர்  
ஏனெனில் வ.ஐ.ஜெயபாலனிடம் கேள்வி கேட்டால்
ஆளையே தன் நட்பு வட்டாரத்தில்
இருந்து நீக்கிவிடுவார்.
அவர் சொல்வதை
நாம் கேட்க வேண்டுமே
நாம் அவரை நாம்
கேள்வி கேக்க கூடாது

இங்கே  தம்பிமார்  அவருடன் முரண்பட்டு மல்லுக்கட்டியபோது

அவர்களுடன் முரண்பட்டிருக்கின்றேன்

காரணம்  எதோ  சொல்லவருகின்றார் என்று.

ஆனால் அவர் சொன்னதற்கு ஒரு  விளக்கம்  கேட்டதையே  அவரால் நேர்மையாக பரிசீலிக்கமுடியாத போது

உணர்ந்து கொண்டேன்

தம்பிகள் என்னைவிட நேர்மையாக சிந்தித்திருக்கிறார்கள்  என்று.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் ...
என்ன பாடு பட்டாலும் அக்குறணை செய்தியை பட்டி தொட்டியெல்லாம்
பரவ செய்கிறேன் என்று சபதம் எடுத்து விட்டீர்கள் போல் தெரிகிறது.

"முஸ்லீம் சமூகம்"  என்ன தான் கூட்டம் போட்டு *********************   ***************** 
ஒன்னும் வேலைக்குஆகாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

இங்கே  தம்பிமார்  அவருடன் முரண்பட்டு மல்லுக்கட்டியபோது

அவர்களுடன் முரண்பட்டிருக்கின்றேன்

காரணம்  எதோ  சொல்லவருகின்றார் என்று.

ஆனால் அவர் சொன்னதற்கு ஒரு  விளக்கம்  கேட்டதையே  அவரால் நேர்மையாக பரிசீலிக்கமுடியாத போது

உணர்ந்து கொண்டேன்

தம்பிகள் என்னைவிட நேர்மையாக சிந்தித்திருக்கிறார்கள்  என்று.

விசுகர்! இன்னும் நிறைய வரும் காத்திருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.