Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!

Featured Replies

சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!

r-sampanthan-300-news2-300x245.jpg தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அவமரியாதையாக நடத்தியுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய நிகழ்வு ஒன்றில் நாட்டின் பிரதான தமிழ் தலைவர் வருகை தரும் போது கௌரவமாக வரவேற்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுபாப்பு அதிகாரிகளினால் சம்பந்தன் மீது உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெடி குண்டு சோதனையிடும் ஸ்கேனர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அவர் சோதிக்கப்பட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்கேன் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் உள்ளே சென்ற சம்பந்தன் இரண்டாவது முறையாக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். சம்பந்தனின் வயதினை கூட கருத்திற்கொள்ளாத ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பரிசோதனையை மேற்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் இவ்வாறான சம்பவத்திற்கு முகம் கொடுத்த நாட்டின் மூத்த தமிழ் தலைவர் மனவருத்தமடைந்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.etr.news/

உஷ்… இது ரகசியம் : இந்த தலைவருக்கே சோதனையா

  • கருத்துக்கள உறவுகள்

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

12 hours ago, Paanch said:

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

குறிப்பாக அரசியல் முதிர்ச்சியற்ற அவரை தொடர்ந்து தெரிவு செய்யும் திருமலை மக்களுக்கு பாரிய அவமானம். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Paanch said:

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

எதிர்க்கட்சி தலைவர் எண்டால் அதுக்குரிய தினாவெட்டு,அதிகாரத்தன்மை இருக்கவேணும். அந்த மனிசனிட்டை அதில்லை.....ஆளைப்பாத்தால் கூனிக்குறுகி கள்ளக்கோழி புடிக்கப்போறவனை மாதிரி இருக்கு....எவன் மதிப்பான்...எவன் பயப்பிடுவான்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எதிர்க்கட்சி தலைவர் எண்டால் அதுக்குரிய தினாவெட்டு,அதிகாரத்தன்மை இருக்கவேணும். அந்த மனிசனிட்டை அதில்லை.....ஆளைப்பாத்தால் கூனிக்குறுகி கள்ளக்கோழி புடிக்கப்போறவனை மாதிரி இருக்கு....எவன் மதிப்பான்...எவன் பயப்பிடுவான்?

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

  • கருத்துக்கள உறவுகள்

ச்சிறிலங்கை - அலோ எச்சூச்சுமி, நாங்களும் ஆட்டையில இருக்கோம்... எம்பட கிட்டையும் வெடிகுண்டு ஸ்கேனர்லாம் இருக்குல... அதை காட்டணும்ல...

பாத்துக்கங்கபா நாங்களும் ஏதோ தெரியாத கருமாந்தரத்தலாம் யூஸ் பண்றோம்... எங்களையும் ஆட்டையில சேத்துக்கங்கப்பு... ப்ளீச்... ப்ளீச்... ப்ளீச்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

அப்ப இது மோடிக்கு இருமல் வந்தபோது எடுத்த படமே? :grin:

Bildergebnis für modi in germany

  • கருத்துக்கள உறவுகள்

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, விசுகு said:

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

அது கனாக்காலம் இல்லை. பொற்காலம். அந்த பொற்காலத்தை சீரழித்தவர்கள் கூட மீண்டும் வருமா எனும் ஏங்கும் காலம்.
அன்றைய சுகத்திற்காக துணைபோனவர்கள் இன்று அதன் விளைவை மெதுவாக உணர்கின்றனர் என்பதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா சோதனைகள் முடிந்த பிறகு அந்த அவமானத்தோடு தீபாவளி நிகழ்வில் பங்கு பெறத் தான் விரும்பவில்லையென்று  உடனடியாகத் திரும்பிப்  போயிருக்க  வேண்டும்.  பங்கு பற்றியதால் தமிழரின் மாண்பு  இழிவடைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

இப்படிக் கையைக் கட்டி இருப்பது ஒரு உடல் மொழியாகும்!

இதன் உண்மையான கருந்து...எனக்கும்...உனக்கும் இடையே எந்த விதமான நெருக்கமும் இல்லை என்பதாகும்!

ஆங்கிலத்தில் கூறுவதானால்...

I would like to keep you at distance. 

7 hours ago, குமாரசாமி said:

அப்ப இது மோடிக்கு இருமல் வந்தபோது எடுத்த படமே? :grin:

Bildergebnis für modi in germany

இந்தப் படத்தில் கைகளை வைத்திருக்கும்...உடல் மொழியின் கருத்து....

மோடி....ஆகா.நாம ரொம்ப நெருங்கிட்டோம்!

பெண்... I am not sure about you.....man..!

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, karu said:

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

அடக்க...ஒடுக்கமான பெண் தான் என்று சொல்லிறா ..போல கிடக்கு!

அடிக்கடி...சாறித்தலைப்பால..இழுத்து மூடிற மாதிரித் தான். இதுவும் .!

கனக்க யோசிக்காதையுங்கோ..!<_<

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

அவன் எப்பிடி மிதித்தாலும் அவனுக்குத்தான் சேவகம் செய்வேன் என்று அடம்பிடிக்கிறவையை யார் மதிப்பினம். அந்த ஆள் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. தொடர்ந்து தன் பணியை செய்துபோட்டு வந்திட்டுது. இவையள் தான் தங்கட தலைவருக்கு ஏதோ நடக்கக் கூடாதது நடந்து போச்சென்று குத்தி முறியினம். அவருக்கு உதெல்லாம் புதிசே? அற நனைஞ்சவனுக்கு கூதலென்ன காய்ச்சலென்ன. எல்லாம் ஒன்றுதான்.

20 hours ago, karu said:

சம்பந்தர் ஐயா சோதனைகள் முடிந்த பிறகு அந்த அவமானத்தோடு தீபாவளி நிகழ்வில் பங்கு பெறத் தான் விரும்பவில்லையென்று  உடனடியாகத் திரும்பிப்  போயிருக்க  வேண்டும்.  பங்கு பற்றியதால் தமிழரின் மாண்பு  இழிவடைந்துள்ளது.

முதுகெலும்பில்லாத மனிதர் எப்படி திரும்பிச் செல்வார்?
மான ரோஷத்தை விட கிடைக்கும் இலவச சிற்றுண்டிகளை பெரிதாக மதிக்கும் நபர் சம்பந்தன். இது 50 வருட அரசியல் சாதனை அவருக்கும் அவரின் விசிறிகளுக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, karu said:

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

தனிய ஒரு கோணத்திலை நிண்டு யோசிக்காமல் பலகோணத்திலை யோசிச்சால் இந்தப்பாட்டு குறுக்காலை வந்து போகுது...

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2017 at 11:19 PM, விசுகு said:

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

மறுபடி அதுபோல் உலகம் முழுதும் சுற்றும் பொற்காலம் வரும்...

ஆனால் அந்த காலம் நமது உரிமையை மீட்டெடுப்பதற்க்கு மட்டும் அல்ல...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மியாவ் said:

மறுபடி அதுபோல் உலகம் முழுதும் சுற்றும் பொற்காலம் வரும்...

ஆனால் அந்த காலம் நமது உரிமையை மீட்டெடுப்பதற்க்கு மட்டும் அல்ல...

உங்கள்  வாக்கு  பலிக்கட்டும்  ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய மனிதர் என்றால் வாண்டடாட வந்து  நியுசில் அப்புடி இப்புடி அடிபடனும் இல்லையென்றாள் எல்லாரும் மறந்து போகினம் !! :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.