Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பென்டில் கில்(Pendle Hill)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு

"‍ஹலோ"

"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ"

"சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்

""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்"

"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்"

"சு..இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை .தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ"

"ஒவ்வொரு கடையும் ஒவ்வோன்றுக்கும் திரியாமல் நீர் வீட்டில சமைச்சிருக்கலாம்."

"நான் வேலையால் வந்து சமைக்க நேரமில்லை ,வேலைமுடிந்து முதல் வார நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டியள் "சொன்னவள் தொலைபேசியை துண்டித்தாள்.

கார் பார்க் பண்ணுவதற்காக இரண்டு மூன்று தரம் அந்த கடை தொகுதியை சுற்றிய பின்பு தொலைவில் ஒன்று கிடைத்து.

நல்ல கறி மணம் மூக்கை துளைக்க தொடங்கியது ,கடை தொகுதியை நெருங்கியவுடன்  இரும்பு தட்டுகளை தட்டும் ஒசை காதை செவிடாக்கியது .கடைக்காரர் போட்டிக்கு கொத்து ரொட்டி போடும் சத்தம் அது .ஆத்துக்காரி சொன்ன கடைகளில் இடியப்பம், புட்டு, கத்தரிக்காய் கறி போன்றவற்றை வாங்கி கொண்டு எனக்கு பிடித்த மட்டன் கொத்து வாங்க  கொத்து ரொட்டி கடைக்கு போனேன்.

அங்கும் இடியப்ப கடைக்கு நின்ற அளவு சனம் வரிசையில் நின்றனர். ,மட்டன் கொத்துக்கு ஒடர் கொடுத்து போட்டு  நின்றேன்.

புகையிரத நிலயத்திற்கு அருகாண்மையில் தான் இந்த கடைதொகுதி உள்ளது. கொத்து ரொட்டிக்கு ஒடர் கொடுத்து அது என்ட கைக்கு வரும்பொழுது குறைந்தது நாலு புகையிரமாவது வந்து போயிருக்கும். இந்தியாவிலா அல்லது சிறிலங்காவிலா நிற்கின்றேன் என்று எனக்கே ஒரு சந்தேகம் உண்டாயிற்று.

"வீட்டை போகமுதல் அநேகர் அங்கு உள்ள கடைகளுக்கு வந்து போனார்கள் .

"அண்ணே உங்கன்ட கொத்து ரெடி "என்று கடைச் சிப்பந்தி சொல்ல காசை கொடுத்து போட்டு வீட்டை போக வெளிக்கிட மீண்டும் அலைபேசி சினுங்கியது .நம்பரை பார்த்தேன் அதே சொப்பிங்லிஸ்ட் நம்பர்.

"‍ஹலோ"

"இங்க கடையிலிருந்து வெளிக்கிட்டியளே "

"இல்லை ஏன்"

"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ  டைகர் பிரான்ட் அரிசியும்  வாங்கி கொண்டு வாங்கோ"

" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது"

"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்"

" என்ன"

" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று"

"சரி சரி வேற என்ன கடையில வேணும் ,ஓஓஓ டைகர் பிரான்ட் அரிசி"

மாலு பண்னை தவிர எனையவற்றை கடைகளில் வாங்கி கொண்டு வீடு சென்றேன்.

இருபது வருடத்திற்கு முதல் இடியப்பம் வாங்குவது என்றால் இரண்டு நாட்களுக்கு முதலே ஒடர் கொடுக்க வேணும் அதுவும் சிலர் தங்களது வீடுகளில் வைத்துதான் செய்து கொடுப்பார்கள் கடைகளில் எடுக்கமுடியாது. தமிழ்கடைகளே இல்லை ஏன்றெ சொல்லலாம்.

மாலை ஆறு எழு மணிக்கே கடைத் தொகுதி வெறிச்சோடி போயிருக்கும் இன்று இரவு ஒன்பது மணிக்கும் திருவிழா போன்று மக்கள் நடமாடுவார்கள்.மசலா தோசை கூட ஒன்பது மணிக்கு எடுக்கலாம்.எங்கும் கறுப்பு தோல் மனிதர்கள் இந்தியாவா அவுஸ்ரேலியா என மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும்.

விடியற்காலை எட்டு மணிக்கு கடை தொகுதிக்கு மாலு பன் வாங்க சென்றேன்.சந்தனக்குச்சி வாசம்,அந்த பகுதியையே மணம் பரப்பிக்கொண்டிருந்தது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது .ஊர்கடையில் விடியற்காலை பாண் வாங்க சென்ற ஞாபகம் வந்து போனது.

வந்த புதுதில் ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் பொழுது சாமியறையில்  சந்தனகுச்சியை வைக்க அது பக்கத்து வீட்டுக்கு மணம் பரப்ப அந்த வீட்டுக்கார‌ பெண்மணி அழைப்பு மணியை அடித்து குறைப்பட்டுக்கொள்ள அன்றிலிருந்து சந்தன‌க்குச்சியை கொழுத்துவதை குறைத்து கொண்டேன்.

"‍ஹலோ மச்சான் என்ன  இந்த பக்கம்"

" தலைமயிர் வெட்ட வந்தனான்,வெட்டி போட்டு மதியத்திற்கும் எதாவது எடுத்து  கொண்டு போவம் என்று வந்தனான்"

" என்னடாப்பா நீங்கள் கில் டிஸ்ரிக்காரர் ,இந்த எரியா சரியில்லை என்றிட்டு போனீயள் எப்படியோ எங்கன்ட ஏரியாவுக்கு வரவேண்டித்தான் இருக்கு"

"பின்ன!! எங்கன்ட சனம் இப்ப சலூன் ,இறைச்சிகடை,மீன்கடை,சாப்பாட்டுக்கடை,பலசரக்குகடை என்று எல்லாத்தையும் எடுத்து நடத்தினமல்லோ? அதுதான் இங்க வந்தனான்,மற்றவங்களின்ட விலைகளைளோட பார்க்கும் பொழுது என்கன்ட ஆட்களிட்ட கொஞ்சம் மலிவு"

"  பெற்ரோல் காசு கொடுத்து வந்து வாங்கிறீயள் என்றால் எங்கன்ட சனத்தின்ட கடையில விசயம் இருக்கத்தான் செய்யுது போல.":10_wink::10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வீட்டிலயும்  ஒவ்வொரு கடை சாமான் பில்லையும் மனிசி பறிச்சு பார்க்கிறவவோ .....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

உங்க வீட்டிலயும்  ஒவ்வொரு கடை சாமான் பில்லையும் மனிசி பறிச்சு பார்க்கிறவவோ .....!  tw_blush:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

வித்தியாசமான கடைக்கு..:rolleyes:  யாராவது கிரெடிட்கார்டு பாவிப்பினாமா.:grin:

19 minutes ago, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

வழமையான புத்தனின் கிறுக்கல்... தொடர்ந்து கிறுக்குங்கள்..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

மூண்டு/நாலு பியர் ரின் வாங்கினாலும்......ஒரு பியர் ரின் வாங்கின மாதிரி பில்லிலை காட்டுற ரெக்னிக் உங்கையும் இருக்கோ..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

Supermarket இல் cash back வசதியை பயன்படுத்தினால் bank statement பார்க்கிறதை முறியடிக்கலாம். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் வழமையாக ஒரு supermarket இல் cash back எடுத்து தனது விளையாட்டை செய்து கொண்டிருந்தார், ஒருநாள் மனைவியுடன் supermarket சென்றபோது counter இல் இருந்தவர் வழமை போன்று receipt உடன் £ 30 ஐ சேர்த்து கொடுத்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3.12.2017 at 5:20 AM, putthan said:

"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ  டைகர் பிரான்ட் அரிசியும்  வாங்கி கொண்டு வாங்கோ"

" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது"

"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்"

" என்ன"

" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று"

மனிசி... நினைச்சு, நினைச்சு...  தொலை பேசியில்   சொன்னதெல்லாத்தையும்....  
கடை கடையாய்... ஏறி  வாங்கியும், நல்ல பெயர் எடுக்க முடியாமல்,
கடைசியில்... தமிழ் பற்றை காட்ட வெளிக்கிட்டு... 
பேச்சு வாங்கினது மட்டுமில்லை, தண்ணியடிக்கிறதையும் சந்தடி சாக்கில  சொல்லிப் போட்டா... :grin:

கவலைப் படாதீர்கள் புத்தன். இதெல்லாம்... ஊர் உலகம் முழுக்க நடக்கறது தான்.
புலம் பெயர்நாடுகளில்... கிழமைக்கு கிழமை நடக்கும் கதையை.. அழகாக பதிந்தமைக்கு நன்றி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 03/12/2017 at 11:53 PM, கிருபன் said:

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

integrate பண்ணுவோம் ஆனால் பண்ணமாட்டோம் அதுக்கும் ஒரு talent வேணும்:10_wink:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்  நன்றிகள்

On 04/12/2017 at 10:46 AM, குமாரசாமி said:

மூண்டு/நாலு பியர் ரின் வாங்கினாலும்......ஒரு பியர் ரின் வாங்கின மாதிரி பில்லிலை காட்டுற ரெக்னிக் உங்கையும் இருக்கோ..:cool:

அதை விட‌ பெரிய டெக்னிக் எல்லாம் இருக்கு வருகைக்கு நன்றி:10_wink:

On 04/12/2017 at 11:27 AM, MEERA said:

Supermarket இல் cash back வசதியை பயன்படுத்தினால் bank statement பார்க்கிறதை முறியடிக்கலாம். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் வழமையாக ஒரு supermarket இல் cash back எடுத்து தனது விளையாட்டை செய்து கொண்டிருந்தார், ஒருநாள் மனைவியுடன் supermarket சென்றபோது counter இல் இருந்தவர் வழமை போன்று receipt உடன் £ 30 ஐ சேர்த்து கொடுத்துவிட்டார்.

நன்றிகள் மீரா வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை அள்ளி வழங்கிய சகலருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் துணைவி கொடுத்து வைத்தவர் ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3.12.2017 at 5:20 AM, putthan said:

"‍ஹலோ"

"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ"

"சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்

""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்"

"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்"

"சு..இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை .தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ

சாமான் சக்கட்டையள் வாங்கிறதுக்கு உவையள் ஒரு லிஸ்ற் ஒண்டு எழுதித்தருவினம். கனக்க இருக்காது...ஆனால் அதை வாங்கிறதுக்கு பெரிய நகரத்தையே சுத்தி வரவேணும்.
அது சரி பொண்டிலைத்தானே பென்டில் எண்டு மழுப்பி சுழியன் விளையாட்டு விட்டுருக்கிறீங்க.....:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 04/12/2017 at 3:55 PM, தமிழ் சிறி said:

மனிசி... நினைச்சு, நினைச்சு...  தொலை பேசியில்   சொன்னதெல்லாத்தையும்....  
கடை கடையாய்... ஏறி  வாங்கியும், நல்ல பெயர் எடுக்க முடியாமல்,
கடைசியில்... தமிழ் பற்றை காட்ட வெளிக்கிட்டு... 
பேச்சு வாங்கினது மட்டுமில்லை, தண்ணியடிக்கிறதையும் சந்தடி சாக்கில  சொல்லிப் போட்டா... :grin:

கவலைப் படாதீர்கள் புத்தன். இதெல்லாம்... ஊர் உலகம் முழுக்க நடக்கறது தான்.
புலம் பெயர்நாடுகளில்... கிழமைக்கு கிழமை நடக்கும் கதையை.. அழகாக பதிந்தமைக்கு நன்றி. :)

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தமிழ்சிறி

On 08/12/2017 at 1:41 AM, வல்வை சகாறா said:

புத்தனின் துணைவி கொடுத்து வைத்தவர் ;)

அநேகமான புலம்பெயர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம்.:10_wink:

On 08/12/2017 at 1:01 PM, ஈழப்பிரியன் said:

புத்தனின் கதை ஒரு கொத்து ரொட்டி சாப்பிட்ட மாதிரியே இருக்கிறது.

நீங்கள் போன கடைத் தொகுதியில் எனது ஒன்றுவிட்ட அண்ணரின் மகன் அண்மையில் ஒரு சாப்பாட்டு கடை திறந்துள்ளார்.

எனது அண்ணனின் வீடும் பென்டில் கில் தான்.ஒரு தடவை பொழுதுபட்ட நேரம் கடைக்கு நடந்து போய் வந்தேன்.

ஏன் தனியாக போனனநீ? இரவில் அடிச்சுப் போடுவாங்கள் என்று ஒரு பயம் காட்டி வைத்திருந்தார்.

கடையின் பெயரை சொன்னால் நான் போய் உங்கன்ட பெயரை சொல்லி டிஸ்கவுண்ட்டில் கொத்துரொட்டி வாங்கலாம்...:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் தினமும் சுமாராக இருந்தாலும் அதை பரிமாறும் பாங்கில் அதன் சுவையே மாறிவிடும். புத்தனின் எழுத்துப் பரிமாறல் படிப்பவர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று உணவுகளைச் சுவைக்க வைத்து விட்டது. உங்கள் கிறுக்கல்களைத் தொடருங்கள். சுவைக்கக் காத்திருக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

நடமுறையில் நடப்பதை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி..எந்த வகையிலும் திருத்த முடியாதவர்கள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் கனடாவில் வசிக்கவில்லை 

ஏற்கனவே நான் தெருவில் நடந்தால் கண்களை அங்கும் இங்கும் அலையவிடுவன் 

எதுக்கும் இவைகளை ருசிக்க ஒருதரம் கனடா வரவேண்டும்தான்
மற்றப்படி பென்ரில் கில் ல்லுக்கு அடிக்கடி வந்தால்

என்னுடைய பெண்டில் என்னைக் கில் பண்ணிவிடுவாள்

உங்கள் கொத்தின் வாசனை பொங்கலுக்குப் போட்ட ஏலக்காயையும் தாண்டி இதமாக இருக்கு
ஆனால் கண்டபடி இவைகளை வாங்காதையுங்கோ
இவை இதயத்துக்கு இதமானவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2017 at 6:17 AM, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

நீங்கள் சுழியன் அல்லோ???tw_blush:tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2017 at 12:21 AM, Kavallur Kanmani said:

சமையல் தினமும் சுமாராக இருந்தாலும் அதை பரிமாறும் பாங்கில் அதன் சுவையே மாறிவிடும். புத்தனின் எழுத்துப் பரிமாறல் படிப்பவர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று உணவுகளைச் சுவைக்க வைத்து விட்டது. உங்கள் கிறுக்கல்களைத் தொடருங்கள். சுவைக்கக் காத்திருக்கிறோம்

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...கிறுக்கல் தொடரும்

On 12/12/2017 at 1:14 AM, யாயினி said:

நடமுறையில் நடப்பதை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி..எந்த வகையிலும் திருத்த முடியாதவர்கள்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...

On 15/01/2018 at 7:51 AM, Elugnajiru said:

நல்ல காலம் நான் கனடாவில் வசிக்கவில்லை 

ஏற்கனவே நான் தெருவில் நடந்தால் கண்களை அங்கும் இங்கும் அலையவிடுவன் 

எதுக்கும் இவைகளை ருசிக்க ஒருதரம் கனடா வரவேண்டும்தான்
மற்றப்படி பென்ரில் கில் ல்லுக்கு அடிக்கடி வந்தால்

என்னுடைய பெண்டில் என்னைக் கில் பண்ணிவிடுவாள்

உங்கள் கொத்தின் வாசனை பொங்கலுக்குப் போட்ட ஏலக்காயையும் தாண்டி இதமாக இருக்கு
ஆனால் கண்டபடி இவைகளை வாங்காதையுங்கோ
இவை இதயத்துக்கு இதமானவையில்லை.

இது அவுஸ்ரெலியா கனடா அல்ல நண்பரே ,வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் 

On 15/01/2018 at 4:04 PM, nunavilan said:

நீங்கள் சுழியன் அல்லோ???tw_blush:tw_blush:

அதே...tw_blush:tw_blush:.வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பெண்டில் ஹில் பகுதியில் ரெயில் ஸ்டேசனுக்கருகே நிறையத் தமிழர் கடைகளுள்ளன.  அந்தப்பகுதியில் பல மாதங்கள் தங்கிய அனுபவம் எனக்குமுள்ளது.  லண்டனோடு ஒப்பிடும்போது   உணவுப் பொருட்களுக்கு  விலையதிகம்.
 
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2017 at 11:53 PM, கிருபன் said:

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

சிட்னித் தமிழர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியியாளர்களாக, கணக்காளர்களாக, கணணி வல்லுனர்களாக, அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலும்  திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரைதான்  வேலை.  வேலை முடிந்து வீடு வர 6 ,7 மணியாகிவிடும். பலர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம். சிறந்த உயர்பாடசலைக்கு அனுமதிகள் பெற நடக்கும் பரீட்சைக்கும்(6ம்  வகுப்பு), பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைக்கும் (12ம் வகுப்பு) தனியார் கல்விநிறுவனங்களில் பிள்ளைகளை கொண்டு செல்லவும், வீட்டில் கற்பிக்கவும் பெற்றோர்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள்.  பெரும்பாலும் வீட்டில் கணவரும் மனைவியும் அரசாங்க, தனியார்நிறுவனங்களில் வேலை.  பிட்டு ,இடியப்பம் போன்றவை குறைந்த விலையில் கடைகளில் பெறக்ககூடியதாக இருப்பதினால் மாலைநேரங்களில் , வேலை முடிய சாப்பாட்டுக் கடைகளுக்கு செல்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/01/2018 at 12:39 AM, karu said:

சிட்னியில் பெண்டில் ஹில் பகுதியில் ரெயில் ஸ்டேசனுக்கருகே நிறையத் தமிழர் கடைகளுள்ளன.  அந்தப்பகுதியில் பல மாதங்கள் தங்கிய அனுபவம் எனக்குமுள்ளது.  லண்டனோடு ஒப்பிடும்போது   உணவுப் பொருட்களுக்கு  விலையதிகம்.
 
கரு, 

நான் முதன் முதல் லண்டனில் உழுந்து வடை வாங்கிய காலத்தில்...வடையின் விலை...ஐம்பது பென்ஸ்!

வடையின் அளவு....கழுத்தில் போடக்கூடிய அளவு!

நான் கடைசியாக வடை வாங்கிய போது....வடையின் விலை....ஐம்பது பென்ஸ்!

வடையின் அளவு.....மோதிர விரலில் போடக்கூடிய அளவு!

அவுசில் வடை அளவு பெரிதாக அதிகம் மாறவில்லை!

ஆனால் விலையை...அடிக்கடி கூட்டிக்கொண்டு போகின்றார்கள்!

புத்தன்...உள்வீட்டு ரகசியங்கள் எல்லாம்....அவிட்டு விடுகிரியள் போல கிடக்குது!

கதையோட்டம்....வழமை போல....புத்தன் ஸ்டைல்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

சிட்னித் தமிழர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியியாளர்களாக, கணக்காளர்களாக, கணணி வல்லுனர்களாக, அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலும்  திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரைதான்  வேலை.  வேலை முடிந்து வீடு வர 6 ,7 மணியாகிவிடும். பலர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம். சிறந்த உயர்பாடசலைக்கு அனுமதிகள் பெற நடக்கும் பரீட்சைக்கும்(6ம்  வகுப்பு), பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைக்கும் (12ம் வகுப்பு) தனியார் கல்விநிறுவனங்களில் பிள்ளைகளை கொண்டு செல்லவும், வீட்டில் கற்பிக்கவும் பெற்றோர்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள்.  பெரும்பாலும் வீட்டில் கணவரும் மனைவியும் அரசாங்க, தனியார்நிறுவனங்களில் வேலை.  பிட்டு ,இடியப்பம் போன்றவை குறைந்த விலையில் கடைகளில் பெறக்ககூடியதாக இருப்பதினால் மாலைநேரங்களில் , வேலை முடிய சாப்பாட்டுக் கடைகளுக்கு செல்கிறார்கள். 

பிரித்தானியாவிலும் இதே நிலைதான். ஆனால் சாப்பாட்டுக் கடைகளில் வேலை முடிய கூட்டம் அலை மோதுவதில்லை. ஒரு சில கடைகளில் மிகவும் மலிவாக இருந்தாலும் தரமான சாப்பாடு என்று சொல்வதிற்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.